Thursday, July 22, 2010

420. Mr. No's NO

*

No என்ற பின்னூட்டக்காரர்  'அறிவியலின் முழு பயன்களையும் கண்முன்னே இருந்தும்,
அதை தினமும் அனுபவித்துக்கொண்டும் இருந்தும், ஆனால் அதன் மூலம் வெளிப்பாடாக வரும் தங்களின் பல புத்தக மற்றும் மத முரண்களை மட்டும் நம்ப மாட்டோம் என்று கூறி' வரும் நம்பிக்கையாளர்களிடம் போய் பேசுவது வீண் என்ற கருத்தைக் கூறி, அதனோடு இன்னொரு பின்னூட்டத்தையும் பரிணாமம் - 2 என்ற இடுகையில் ஆங்கிலத்தில் அளித்தார். அப்பின்னூட்டத்தின் தமிழாக்கம் இங்கே ....

*

அறிவியலும் வேத நூல்களும் ஆளுக்கொரு பக்கம். அறிவியல், அதன் கண்டுபிடிப்புகள், வெளிப்பாடுகள், விளக்கங்கள் எல்லாமே வேத நூல்களின் படிப்பினைகளைத் தவிர மற்ற கோட்பாடுகளோடு எதிர்மறை உறவோடுதான் உள்ளன. வேத நூல்களில் சொல்லப்படும் படிப்பினை இல்லாத மற்றைய விதயங்கள் கவைக்காகாதவை; அவைகளை வளர்ந்து வரும் அறிவியல் உண்மைகள் அவ்வப்போது நிரூபித்து வருகின்றன. வேத நூல்களின் இந்த ‘அறிவியல் தத்துவங்கள்’ மீண்டும் மீண்டும் பொய்யாக்கப்பட்டாலும், பெரும்பாலான நம்பிக்கையாளர்கள் அவைகளை இறுகப் பிடித்து, அறிவியல் நுணுக்கங்களையோ, பகுத்தறிவு வாதங்களையோ அவைகளின் மேல் ஏற்றி தங்கள் வேதங்களை உயர்வாக்க முயல்கிறார்கள். இவர்கள் உண்மையை மறுதலிப்பவர்கள். இவர்கள் அடிப்படைவாதிகளாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இப்படிப்பட்டவர்களாலேயே அடிப்படைவாதம் வளர்க்கப்படுகிறது. அறிவியலையே தங்கள் கைவசம் இழுக்க நினைக்கும் இவர்கள், அறிவியலை மட்டுமல்லாது அறிவியலின் வளர்ச்சியையும் தடுப்பவர்கள். இவர்கள் நல்லவர்களாகவும், நல்ல மனதுடையோராக இருக்கலாம். ஆனால், இவர்களின் வாதங்களை வைத்து தங்கள் மதம் மற்றைய எல்லா மதங்களையும் விட உயர்வானது; தவறில்லாதது என்ற நம்பிக்கையை சில அடிப்படைவாதிகள் வளர்த்துக் கொள்ளலாம்.

மதங்களின் வேத நூல்கள் சொல்லும் கடவுளின் கட்டளைகளை, போதனைகளைப் பற்றியும் இங்கே விவாதம் செய்யலாம். ஆனாலும், அவைகள் எல்லாமே நம்பிக்கையுடையவர்களை மட்டுமே மட்டுப்படுத்துதலால் அவைகளை யாரும் குறை சொல்லாமல் அப்படியே விட்டு விடலாம். Richard Dawkins, Steven Pinker, Daniel Dennet போன்ற அறிஞர்கள் ஏன் இப்படி அவைகளை விட்டு விட வேண்டும்; ஏன் அவைகளையும் தீர்க்க விவாதிக்கக்கூடாது என்கிறார்கள். ஆனால் Stephen J Gould போன்றவர்கள் இக்கட்டளைகள் அறிவியலோடு மோதாத போது அவைகளை விட்டு விடலாம். இதனை அவர் NOMA or Non-Overlapping Magestria என்று அழைக்கிறார். பெரும்பான்மை மக்களுக்கு மதம் மிகத் தேவையான ஒன்று; அந்த மக்கள் தங்கள் மதத்தை அறிவியலோடு மோதாமல் தங்களின் தனிப்பட்ட நம்பிக்கையாக மட்டும் வைத்துக் கொள்ளட்டும் என்கிறார் Stephen J Gould. இதனால் அறிவியலாளர்கள் மதங்களோடு ‘சண்டை’ போட வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை என்கிறார். ஆனால் இக்கருத்தை டாக்கின்ஸூம் மற்ற சில அறிவியலாளர்களும் ஒத்துக் கொள்வதில்லை. காரணமெனில், ஏற்கெனவே சொன்னது போல் மதங்கள் அறிவியலோடு மோதாமல் தனித்து இருந்தாலும், கால ஓட்டத்தில் சிலர் தங்கள் மதங்கள் அறிவியலை வென்று விட்ட கற்பனைகளில் புதிய அடிப்படைவாதிகளாக தெரிந்தோ தெரியாமலோ உருவாகும் வாய்ப்பு உண்டு.

மதங்கள் எப்போதெல்லாம் அறிவியலோடு போட்டி போடுகிறதோ, அப்போதெல்லாம் அவைகள் பல்வேறு கேள்விகளுக்கு உட்படுத்தப்படும். அதனால் நம்பிக்கையாளர்கள் தங்கள் மதங்களை, மதங்களின் வேத நூல்களை அறிவியலோடு மோத விடாதிருப்பது நலம். பரிணாமமும் ஒரு அறிவியல் என்பதையும் மறக்கக் கூடாதல்லவா?

*

27 comments:

  1. மொழி பெயர்ப்புத் திறன் எப்படி பின்னூட்டம் வரைக்கும் வந்துருச்சு பாருங்க!!!!!

    ReplyDelete
  2. தமிழ்படுத்தி தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  3. நோ...நோ...நோ...

    ///மதங்கள் எப்போதெல்லாம் அறிவியலோடு போட்டி போடுகிறதோ, அப்போதெல்லாம் அவைகள் பல்வேறு கேள்விகளுக்கு உட்படுத்தப்படும்.///--உட்படுத்தப்படவேண்டும்.

    //அதனால் நம்பிக்கையாளர்கள் தங்கள் மதங்களை, மதங்களின் வேத நூல்களை அறிவியலோடு மோத விடாதிருப்பது நலம்.//--இல்லை. மோதவிடுவதுதான் இருபாலருக்கும் நலம். அப்போதுதான் யார் பக்கம் உண்மை இருக்கிறது என்று தெளிவாக தெரியும்.

    //பரிணாமமும் ஒரு அறிவியல் என்பதையும் மறக்கக் கூடாதல்லவா?//--அப்படி மோதவிட்டால்தான், இப்படி ஒரு தவறான முன்முடிவிலிருந்து 'அறிவியலாளர்கள்' என்று தம்மை சொல்லிக்கொள்ளும் "பரிணாம நம்பிக்கைவாதிகள்" வெளிவரலாம்.

    பொதுவாக எந்த விஷயத்திலும் 'விவாதம் கூடாது' என்பதே அறிவியலுக்கு-பகுத்தறிவுக்கு முரணானது.

    மடியில் கனமில்லாவிட்டால் வழியில் பயமெதற்கு?---இது...அந்த மேற்படி இரண்டு (மத&பரிணாம) நம்பிக்கையாளர்களுக்கும்தான்.

    ReplyDelete
  4. தலைப்பு தான் எனக்கு பிடிச்சிருக்கு மிஸ்டர் நோ ஒரு இந்துத்துவ 420 :)

    ReplyDelete
  5. //பொதுவாக எந்த விஷயத்திலும் 'விவாதம் கூடாது' என்பதே அறிவியலுக்கு-பகுத்தறிவுக்கு முரணானது. //

    என் பதிவில் வேற மாதிரி சொன்ன மாதிரி இருந்துச்சு!

    ReplyDelete
  6. அறிவியலும் ஆன்மிகமும் ஒரே கருத்தைத் தான் வலியுறுத்தும் என்பது என் நம்பிக்கை. உண்மையான மதவாதி ஒரு அறிவியல் விரும்பியாவான். பரிமாணங்களை ஒவ்வொரு கோவிலிலும் வடிக்கப்பட்டுள்ள சிற்பங்களில் இருந்து அக்காலத்தில் வாழ்ந்துள்ள விலங்குகளை வரும் காலச் சந்ததிகள் அறிய வேண்டும் என்பதற்காகவும் , அவனே அதை அறிந்து அறிவியல் பூர்வமாய் உயிரியல் வளர்ச்சியை உணர வேண்டும் என்று படைத்திருக்கிறான். இன்றும் மீனாட்சியம்மன் கோவிலுக்கு செல்லும் போது யாராவது ஒரு சிறுவன் தன் தந்தை அல்லது தாயிடம் யாழி மிருகத்தை பற்றி கேட்பதை பார்த்திருக்கிறேன்...அது அக்கால மிருகம் எனவும் அதை டையனசாருடன் ஒப்பிட்டு இது எக்காலம் என்பதை கேட்கும் போது ,பரிமாணத்தை ஆன்மிக வாதி ஆண்டவன் சந்நதியில் படைத்ததன் பொருள் புரிகிறது...என் பார்வையில் உண்மையான ஆன்மிகம் அறிவியலை நோக்கியுள்ளதால் , பரிமாணத்தை மறைமுகமாக அறியச் செய்வதால் பரிமாணத்தை வலியுறுத்துவதாகவே கருதுகிறேன்.

    ReplyDelete
  7. No பதில் தர வருவாரென நினைக்கிறேன்

    ReplyDelete
  8. அன்பான நண்பர் திரு மதுரை சரவணன்,

    // அறிவியலும் ஆன்மிகமும் ஒரே கருத்தைத் தான் வலியுறுத்தும் என்பது என் நம்பிக்கை//
    எதை வைத்து நீங்கள் இதை சொல்லுகிறீர்கள்?

    ஆன்மிகம் என்பது, மனிதனின் காரணத்தை ஒரு இன்றியமயாமையின் இருப்பால், அதன் விருப்பத்தால் ஆனது எனும் முதல் கருத்தை கொண்டு நடத்தப்படும்
    வழிமுறை. அது மேலும் வளர்ந்து அந்த இன்றி அமையாமையின் விருப்பங்கள் என மலர்ந்து, அது பெரிதாகி அது நமக்கு கொடுத்துள்ள வழிமுறைகள் என்றும் தொடுத்து, அதன் படிதான் செயல் பட செயல்படுத்தவேண்டும், அதுவே வாழ்க்கையின் ஒரே அர்த்தம் என்று வந்து நிற்கிறது!

    ஆக படைப்பு சக்தியையும், அது சொல்லப்பட்டதாக சொல்லப்படும் வழிமுறைகளையும் செயல்படுத்துவதே ஆன்மிகம் என்று இன்றிய தேதிக்கு எல்லோராலும்
    கருதப்படுகிறது.

    எனக்கு தெரிந்த வரையில் அறிவியல் இப்படி செயல்படாது.அதன் வழிமுறையும், குறிக்கோளும், ஆக்கங்களும் ஆன்மிகம் என்பதின் நேர் எதிராகும்.

    ஆன்மிகம் என்பது Faith position.
    அறிவியல் என்பது Proof position

    Faith and Proof never get along and that's why its called faith!

    //உண்மையான மதவாதி ஒரு அறிவியல் விரும்பியாவான். //

    அப்படி இருப்பதில் தவறே இல்லை. என்ன, அவனின் தூய புத்தகத்தில் இதெல்லாம் இருக்கிறது என்று கூறாத வரையில். ஏனென்றால், science does not go by affiliations and faith. It works for anybody that undergoes the rigours of experiments and iterations. ஆனால் அப்படி இல்லாமல், என் மதத்தில் எல்லாம் இருக்கிறது, என்று சொல்ல ஆசை படுவதனால்தான் இந்த பதிவே தேவைப்படுகிறது. இந்த மாதிரி outrageous declarations ஆன்மீகத்தில்தான் கொடுக்க முடியும். அறிவியலில் இருந்தால் உங்களை எந்த கலூரியிலும் ஏற்றுகொள்ள மாட்டார்கள்!

    //பரிமாணங்களை ஒவ்வொரு கோவிலிலும் வடிக்கப்பட்டுள்ள சிற்பங்களில் இருந்து அக்காலத்தில் வாழ்ந்துள்ள விலங்குகளை வரும் காலச் சந்ததிகள் அறிய வேண்டும் என்பதற்காகவும் , அவனே அதை அறிந்து அறிவியல் பூர்வமாய் உயிரியல் வளர்ச்சியை உணர வேண்டும் என்று படைத்திருக்கிறான்//

    நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. பரிணாமம் புரிந்ததால்தான் கோவிலில் சிலை உள்ளது என்றால், பரிணாமத்தை பற்றி உள்ள இந்து மத ஆக்கங்கள் எங்கே?? ஆதி மனிதன் கூட குகைகளில் பல ஓவியங்களை வரைந்து விட்டு போனான். ஆனால் அதற்க்கும் பரிநாமத்திர்க்கும் என்ன சம்மந்தம்?

    // இன்றும் மீனாட்சியம்மன் கோவிலுக்கு செல்லும் போது யாராவது ஒரு சிறுவன் தன் தந்தை அல்லது தாயிடம் யாழி மிருகத்தை பற்றி கேட்பதை பார்த்திருக்கிறேன்...அது அக்கால மிருகம் எனவும் அதை டையனசாருடன் ஒப்பிட்டு இது எக்காலம் என்பதை கேட்கும் போது ,பரிமாணத்தை ஆன்மிக வாதி ஆண்டவன் சந்நதியில் படைத்ததன் பொருள் புரிகிறது...என் பார்வையில் உண்மையான ஆன்மிகம் அறிவியலை நோக்கியுள்ளதால் , பரிமாணத்தை மறைமுகமாக அறியச் செய்வதால் பரிமாணத்தை வலியுறுத்துவதாகவே கருதுகிறேன்.//

    One can spew out any outrageous claim in the name of religion and get away with it. அதுதான் இப்பொழுது நீங்கள் சொல்லுவது. நான் திரு தருமியின் போன பதிவில் இட்ட சில பின்னூட்டங்களை படிக்கவும்!

    ReplyDelete
  9. //உட்படுத்தப்படவேண்டும்//
    //இல்லை. மோதவிடுவதுதான் இருபாலருக்கும் நலம். அப்போதுதான் யார் பக்கம் உண்மை இருக்கிறது என்று தெளிவாக தெரியும்.//

    Magic Carpet மற்றும் புஷ்பக விமானம், மற்றும் சொர்கத்திற்கு பறக்கும் குதிரை போன்றவை இருக்கிறது என்று சொல்லப்படிருக்கிறது, அதில்தான் நாம் செல்லவேண்டும் என்று ஆராய்ச்சி செய்யும் ஒருவர் சொல்லுவது சரியா அல்லது Boeing இல் வேலை செய்யும் engineer சொல்வது சரியா என்று கண்டுபிடிக்க இருவரையும் மோத விடவேண்டும். அப்பொழுதுதான் எல்லாம் தெளிவாகும். (ஆனால் பாருங்கள் நாங்க Boeing இல் தான் போவோம்)

    //பொதுவாக எந்த விஷயத்திலும் 'விவாதம் கூடாது' என்பதே அறிவியலுக்கு-பகுத்தறிவுக்கு முரணானது.//

    ஆமாம். புஷ்பக விமானம், பறக்கும் குதிரை, குகையில் தேவதை, தண்ணீரில் நடப்பது போன்றவற்றிற்கு விவாதம் தேவை இல்லை! அவைகளை கண்ணை மூடினால்தான் நம்ப வேண்டும். விவாதமே கூடாது!

    //மடியில் கனமில்லாவிட்டால் வழியில் பயமெதற்கு?---இது...அந்த மேற்படி இரண்டு (மத&பரிணாம) நம்பிக்கையாளர்களுக்கும்தான்.//
    With the brute power of religion behind their back, a fundamentallist will try and invade all known spaces that may and also may not threaten his dominance. The power of religious thought gives them the righteousness to talk just about anything and anybody with no sane logic and rationality.

    They "believe" and hence they are "entitled" to talk and do whatever they want. - Thats religion for dummies.

    ReplyDelete
  10. நண்பர் திரு கோவி கண்ணன் வேறு வந்து சில பொன்னான வார்த்தைகளை சொல்லி விட்டு போயிருக்கார். அவர் சொன்னால் சரியாகதான் இருக்கும் என்று பலருக்கு தெரியும். ஏனென்றால் அவர்தான் professor in "almost all subjects under the Sun and milkyway" அன்றோ.

    அதை விடுங்கள், How to make the most obvious muddle head look like a man of intelligence?
    பதில் : Call in Mr Kovi Kannan.

    (இரு கோடுகள் சூத்திரம்)

    ReplyDelete
  11. முழுசும் படிச்சேன், ஒரு எழவும் புரிய மாட்டேங்குது. கொஞ்சம் புரியுற மாதிரி தமிழைப் பயன் படுத்தக் கூடாதா?

    ReplyDelete
  12. இது எந்த ஊர் தமிழ். ஒன்னும் புரியமாட்டேங்குது.

    ReplyDelete
  13. மதம் இயற்கையோடு ஒன்றி இருக்கிறது. இயற்கை அனைத்து அறிவியல் துறைகளுக்கும் ஆதாரமாக இருக்கிறது. ஆதியில் மனிதன் தான் கண்டதை குகைகளில் வரைந்தான். தான் கண்டதை, பார்த்தை பாடலகளிலும் ,தனக்கு துணையாக இருந்ததை தன் நம்பிக்கையாக்கி அதை வணங்கினான். பாடல்கள் மனிதனை இணைத்தன. இயற்கையில் தான் கண்டதை சிற்பமாக வடித்தான் . இயற்கையில் தான் கண்டவற்றை கதைகளாக கூறத்தொடங்கினான், தன் பயத்தை போக்க தன் சந்ததியினருக்கு நம்பிக்கைகளை தெரிவிக்க மதத்தின் பெயரில் கோவில்கள் உருவாக்கப்பட்டன.

    மதங்கள் நம்பிக்கையின் அஸ்திவாரத்தால் உருவாக்கப்பட்டன. ஆனால் , அறிவியலின் அஸ்திவாரமாக இருக்கும் உண்மைகளை கொண்டு சுவர்காளாக்கி மிகப்பெரியக் கட்டடாங்களாக்கப் பட்டுள்ளன என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

    மதங்கள் கூறும் உண்மைகள் தல விருச்சமாக இருக்கும் மரங்கள், கோவில் சிற்பங்களில் காணும் விலங்குகள், பறவைகள், மரங்கள், மனிதர்கள் , ஆயுதங்கள் என கூறிக்கொண்டேச் செல்லலாம்.

    புத்தர், மாகாவீரர், ஏசு, நபிகள் என அனைவரும் சொல்லும் கருத்துகள் அன்பின் உருவாக இருந்தாலும் அவர்கள் வாழ்வைக்கூறும் கதைகளில் இடம் பெற்றுள்ள இயற்கைக்கு உட்பட்ட விசயங்கள் மறைமுகமாக மனிதனை பரிமாணத்தின் உந்துதலுக்கு இட்டுச் செல்பவைகள் தான்.

    மதங்கள் மனிதனை நன்கு தெரிந்து வைத்ததன் விளைவு , உண்மைகளை அறிவியலைப் போன்று நேரடியாக சொல்லவில்லை . அதை நம்பிக்கையின் பேரில் மறைமுகமாகவே திணித்தன. மதங்களின் அஸ்திவாரத்தை அசைக்ககூடியதாக உண்மைகள் இருக்கு போது மனிதன் மத குருமார்களின் சுயநலத்திற்காக அவற்றை ஏற்க மறுத்தான் . உலகம் உருண்டை என்பதை ஏற்க மறுத்தான். பின் அதை ஏற்றான்.
    அறிவியலின் அடிப்படையாக, மதம் உண்மைகளின் பிரதிபலிப்பாகவே உள்ளன. அதனால் தான் மதங்கள் பல வித வடிவில் பரிணமித்து வெவ்வேறு பெயர்களில் வாழ்ந்த்து வருகின்றன.

    மதங்களின் அடிப்படை அறிவியல் மனிதனின் உளவியல் அறிவை வெளிப்படுத்துவதால், மனிதனின் கோபம், வெறுப்பு , பேராசை, குழப்பம் ,பதவி வெறி, பணவெறி , போன்றவற்றை நீக்கி, எது உண்மை, எது பொய் என்பதை தீர்மானித்து , தனி மனித வாழ்வின் மகிழ்ச்சி மூலம் , சமூக நலனை அதாவது அமைதியான மகிழ்ச்சியான சமூகத்தை உருவாக்குகிறது.

    அறிவியல் என்ற விஞ்ஞான அறிவு, மனிதனின் வாழ்வுக்கு மகிழ்ச்சி , மற்றும் பயனளிப்பதாக இருந்து , ஒரு வரியில் உற்பத்தி அதிகரித்து உதவுகிறது எனலாம். விஞ்ஞான அறிவு சில வேளைகளில் அழிவுக்கும் வழிவகுப்பதால், மனிதன் என்றும் மதம் சார்ந்தவனாகவே இருக்கிறான். அதற்காக மதம் பரிமாணம் போன்ற உண்மைகளுக்கு முரணானவை என கூறிவிட முடியாது .

    ReplyDelete
  14. மதம் இயற்கையோடு ஒன்றி இருக்கிறது. இயற்கை அனைத்து அறிவியல் துறைகளுக்கும் ஆதாரமாக இருக்கிறது. ஆதியில் மனிதன் தான் கண்டதை குகைகளில் வரைந்தான். தான் கண்டதை, பார்த்தை பாடலகளிலும் ,தனக்கு துணையாக இருந்ததை தன் நம்பிக்கையாக்கி அதை வணங்கினான். பாடல்கள் மனிதனை இணைத்தன. இயற்கையில் தான் கண்டதை சிற்பமாக வடித்தான் . இயற்கையில் தான் கண்டவற்றை கதைகளாக கூறத்தொடங்கினான், தன் பயத்தை போக்க தன் சந்ததியினருக்கு நம்பிக்கைகளை தெரிவிக்க மதத்தின் பெயரில் கோவில்கள் உருவாக்கப்பட்டன.

    மதங்கள் நம்பிக்கையின் அஸ்திவாரத்தால் உருவாக்கப்பட்டன. ஆனால் , அறிவியலின் அஸ்திவாரமாக இருக்கும் உண்மைகளை கொண்டு சுவர்காளாக்கி மிகப்பெரியக் கட்டடாங்களாக்கப் பட்டுள்ளன என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

    மதங்கள் கூறும் உண்மைகள் தல விருச்சமாக இருக்கும் மரங்கள், கோவில் சிற்பங்களில் காணும் விலங்குகள், பறவைகள், மரங்கள், மனிதர்கள் , ஆயுதங்கள் என கூறிக்கொண்டேச் செல்லலாம்.

    புத்தர், மாகாவீரர், ஏசு, நபிகள் என அனைவரும் சொல்லும் கருத்துகள் அன்பின் உருவாக இருந்தாலும் அவர்கள் வாழ்வைக்கூறும் கதைகளில் இடம் பெற்றுள்ள இயற்கைக்கு உட்பட்ட விசயங்கள் மறைமுகமாக மனிதனை பரிமாணத்தின் உந்துதலுக்கு இட்டுச் செல்பவைகள் தான்.

    மதங்கள் மனிதனை நன்கு தெரிந்து வைத்ததன் விளைவு , உண்மைகளை அறிவியலைப் போன்று நேரடியாக சொல்லவில்லை . அதை நம்பிக்கையின் பேரில் மறைமுகமாகவே திணித்தன. மதங்களின் அஸ்திவாரத்தை அசைக்ககூடியதாக உண்மைகள் இருக்கு போது மனிதன் மத குருமார்களின் சுயநலத்திற்காக அவற்றை ஏற்க மறுத்தான் . உலகம் உருண்டை என்பதை ஏற்க மறுத்தான். பின் அதை ஏற்றான்.
    அறிவியலின் அடிப்படையாக, மதம் உண்மைகளின் பிரதிபலிப்பாகவே உள்ளன. அதனால் தான் மதங்கள் பல வித வடிவில் பரிணமித்து வெவ்வேறு பெயர்களில் வாழ்ந்த்து வருகின்றன.

    மதங்களின் அடிப்படை அறிவியல் மனிதனின் உளவியல் அறிவை வெளிப்படுத்துவதால், மனிதனின் கோபம், வெறுப்பு , பேராசை, குழப்பம் ,பதவி வெறி, பணவெறி , போன்றவற்றை நீக்கி, எது உண்மை, எது பொய் என்பதை தீர்மானித்து , தனி மனித வாழ்வின் மகிழ்ச்சி மூலம் , சமூக நலனை அதாவது அமைதியான மகிழ்ச்சியான சமூகத்தை உருவாக்குகிறது.

    அறிவியல் என்ற விஞ்ஞான அறிவு, மனிதனின் வாழ்வுக்கு மகிழ்ச்சி , மற்றும் பயனளிப்பதாக இருந்து , ஒரு வரியில் உற்பத்தி அதிகரித்து உதவுகிறது எனலாம். விஞ்ஞான அறிவு சில வேளைகளில் அழிவுக்கும் வழிவகுப்பதால், மனிதன் என்றும் மதம் சார்ந்தவனாகவே இருக்கிறான். அதற்காக மதம் பரிமாணம் போன்ற உண்மைகளுக்கு முரணானவை என கூறிவிட முடியாது .

    ReplyDelete
  15. மதம் இயற்கையோடு ஒன்றி இருக்கிறது. இயற்கை அனைத்து அறிவியல் துறைகளுக்கும் ஆதாரமாக இருக்கிறது. ஆதியில் மனிதன் தான் கண்டதை குகைகளில் வரைந்தான். தான் கண்டதை, பார்த்தை பாடலகளிலும் ,தனக்கு துணையாக இருந்ததை தன் நம்பிக்கையாக்கி அதை வணங்கினான். பாடல்கள் மனிதனை இணைத்தன. இயற்கையில் தான் கண்டதை சிற்பமாக வடித்தான் . இயற்கையில் தான் கண்டவற்றை கதைகளாக கூறத்தொடங்கினான், தன் பயத்தை போக்க தன் சந்ததியினருக்கு நம்பிக்கைகளை தெரிவிக்க மதத்தின் பெயரில் கோவில்கள் உருவாக்கப்பட்டன.

    மதங்கள் நம்பிக்கையின் அஸ்திவாரத்தால் உருவாக்கப்பட்டன. ஆனால் , அறிவியலின் அஸ்திவாரமாக இருக்கும் உண்மைகளை கொண்டு சுவர்காளாக்கி மிகப்பெரியக் கட்டடாங்களாக்கப் பட்டுள்ளன என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

    மதங்கள் கூறும் உண்மைகள் தல விருச்சமாக இருக்கும் மரங்கள், கோவில் சிற்பங்களில் காணும் விலங்குகள், பறவைகள், மரங்கள், மனிதர்கள் , ஆயுதங்கள் என கூறிக்கொண்டேச் செல்லலாம்.

    புத்தர், மாகாவீரர், ஏசு, நபிகள் என அனைவரும் சொல்லும் கருத்துகள் அன்பின் உருவாக இருந்தாலும் அவர்கள் வாழ்வைக்கூறும் கதைகளில் இடம் பெற்றுள்ள இயற்கைக்கு உட்பட்ட விசயங்கள் மறைமுகமாக மனிதனை பரிமாணத்தின் உந்துதலுக்கு இட்டுச் செல்பவைகள் தான்.

    ReplyDelete
  16. புத்தர், மாகாவீரர், ஏசு, நபிகள் என அனைவரும் சொல்லும் கருத்துகள் அன்பின் உருவாக இருந்தாலும் அவர்கள் வாழ்வைக்கூறும் கதைகளில் இடம் பெற்றுள்ள இயற்கைக்கு உட்பட்ட விசயங்கள் மறைமுகமாக மனிதனை பரிமாணத்தின் உந்துதலுக்கு இட்டுச் செல்பவைகள் தான்.

    மதங்கள் மனிதனை நன்கு தெரிந்து வைத்ததன் விளைவு , உண்மைகளை அறிவியலைப் போன்று நேரடியாக சொல்லவில்லை . அதை நம்பிக்கையின் பேரில் மறைமுகமாகவே திணித்தன. மதங்களின் அஸ்திவாரத்தை அசைக்ககூடியதாக உண்மைகள் இருக்கு போது மனிதன் மத குருமார்களின் சுயநலத்திற்காக அவற்றை ஏற்க மறுத்தான் . உலகம் உருண்டை என்பதை ஏற்க மறுத்தான். பின் அதை ஏற்றான்.
    அறிவியலின் அடிப்படையாக, மதம் உண்மைகளின் பிரதிபலிப்பாகவே உள்ளன. அதனால் தான் மதங்கள் பல வித வடிவில் பரிணமித்து வெவ்வேறு பெயர்களில் வாழ்ந்த்து வருகின்றன.

    மதங்களின் அடிப்படை அறிவியல் மனிதனின் உளவியல் அறிவை வெளிப்படுத்துவதால், மனிதனின் கோபம், வெறுப்பு , பேராசை, குழப்பம் ,பதவி வெறி, பணவெறி , போன்றவற்றை நீக்கி, எது உண்மை, எது பொய் என்பதை தீர்மானித்து , தனி மனித வாழ்வின் மகிழ்ச்சி மூலம் , சமூக நலனை அதாவது அமைதியான மகிழ்ச்சியான சமூகத்தை உருவாக்குகிறது.

    அறிவியல் என்ற விஞ்ஞான அறிவு, மனிதனின் வாழ்வுக்கு மகிழ்ச்சி , மற்றும் பயனளிப்பதாக இருந்து , ஒரு வரியில் உற்பத்தி அதிகரித்து உதவுகிறது எனலாம். விஞ்ஞான அறிவு சில வேளைகளில் அழிவுக்கும் வழிவகுப்பதால், மனிதன் என்றும் மதம் சார்ந்தவனாகவே இருக்கிறான். அதற்காக மதம் பரிமாணம் போன்ற உண்மைகளுக்கு முரணானவை என கூறிவிட முடியாது .

    ReplyDelete
  17. புத்தர், மாகாவீரர், ஏசு, நபிகள் என அனைவரும் சொல்லும் கருத்துகள் அன்பின் உருவாக இருந்தாலும் அவர்கள் வாழ்வைக்கூறும் கதைகளில் இடம் பெற்றுள்ள இயற்கைக்கு உட்பட்ட விசயங்கள் மறைமுகமாக மனிதனை பரிமாணத்தின் உந்துதலுக்கு இட்டுச் செல்பவைகள் தான்.

    மதங்கள் மனிதனை நன்கு தெரிந்து வைத்ததன் விளைவு , உண்மைகளை அறிவியலைப் போன்று நேரடியாக சொல்லவில்லை . அதை நம்பிக்கையின் பேரில் மறைமுகமாகவே திணித்தன. மதங்களின் அஸ்திவாரத்தை அசைக்ககூடியதாக உண்மைகள் இருக்கு போது மனிதன் மத குருமார்களின் சுயநலத்திற்காக அவற்றை ஏற்க மறுத்தான் . உலகம் உருண்டை என்பதை ஏற்க மறுத்தான். பின் அதை ஏற்றான்.
    அறிவியலின் அடிப்படையாக, மதம் உண்மைகளின் பிரதிபலிப்பாகவே உள்ளன. அதனால் தான் மதங்கள் பல வித வடிவில் பரிணமித்து வெவ்வேறு பெயர்களில் வாழ்ந்த்து வருகின்றன.

    ReplyDelete
  18. மதங்கள் மனிதனை நன்கு தெரிந்து வைத்ததன் விளைவு , உண்மைகளை அறிவியலைப் போன்று நேரடியாக சொல்லவில்லை . அதை நம்பிக்கையின் பேரில் மறைமுகமாகவே திணித்தன. மதங்களின் அஸ்திவாரத்தை அசைக்ககூடியதாக உண்மைகள் இருக்கு போது மனிதன் மத குருமார்களின் சுயநலத்திற்காக அவற்றை ஏற்க மறுத்தான் . உலகம் உருண்டை என்பதை ஏற்க மறுத்தான். பின் அதை ஏற்றான்.
    அறிவியலின் அடிப்படையாக, மதம் உண்மைகளின் பிரதிபலிப்பாகவே உள்ளன. அதனால் தான் மதங்கள் பல வித வடிவில் பரிணமித்து வெவ்வேறு பெயர்களில் வாழ்ந்த்து வருகின்றன.

    மதங்களின் அடிப்படை அறிவியல் மனிதனின் உளவியல் அறிவை வெளிப்படுத்துவதால், மனிதனின் கோபம், வெறுப்பு , பேராசை, குழப்பம் ,பதவி வெறி, பணவெறி , போன்றவற்றை நீக்கி, எது உண்மை, எது பொய் என்பதை தீர்மானித்து , தனி மனித வாழ்வின் மகிழ்ச்சி மூலம் , சமூக நலனை அதாவது அமைதியான மகிழ்ச்சியான சமூகத்தை உருவாக்குகிறது.

    அறிவியல் என்ற விஞ்ஞான அறிவு, மனிதனின் வாழ்வுக்கு மகிழ்ச்சி , மற்றும் பயனளிப்பதாக இருந்து , ஒரு வரியில் உற்பத்தி அதிகரித்து உதவுகிறது எனலாம். விஞ்ஞான அறிவு சில வேளைகளில் அழிவுக்கும் வழிவகுப்பதால், மனிதன் என்றும் மதம் சார்ந்தவனாகவே இருக்கிறான். அதற்காக மதம் பரிமாணம் போன்ற உண்மைகளுக்கு முரணானவை என கூறிவிட முடியாது .

    ReplyDelete
  19. தருமி சார்,
    420. Mr. No's NO பதிவின் எண் வெறும் coincidence தானா என்று தெரியவில்லை.
    ஆனால் கோவி கண்ணன் சொன்னது போல NO என்பவர் நாத்திக வேடமிட்டுக் கொண்டு திரியும் ஒரு இந்துத்துவவாதி.
    உங்களை வைத்து விளையாட்டு காட்டுகிறார் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  20. ராபின்,

    அது வெறும் தற்செயலே.
    உங்கள் கரிசனத்திற்கு நன்றி. அவர் எந்த மதத்துக்காரராக வேண்டுமானாலும் இருக்கட்டும். கொள்கைகள் ஒத்து வந்ததால் பேசுகிறார். தவறென்ன?

    நாம் ரெண்டு பேரும் 'ஒரே மதத்தைச் சார்ந்தவர்கள்' என்பதாலேயே நம் இருவர் கருத்தும் ஒன்றா? நாம் 'விளையாட' முடியாது!

    ReplyDelete
  21. ராபின்
    ஒருவேளை நாளைக்கு நான் இந்து மதத்தைப் பற்றிப் பேசினால் அவர் சண்டைக்கு வரலாம். நீங்கள் துணைக்கு வாருங்கள்; நாம் சேர்ந்து விளையாடுவோம்!!

    ReplyDelete
  22. நன்றி திரு தருமி,

    நீங்கள் இந்துமதத்தை விமர்சித்தால் அதை படித்து ரசிக்கும் ஆளாகதான் நான் இறுப்பேன் என்று "உண்மையான நாத்தீகர்களுக்கு" தெரியும்!
    வலைதளத்தில் உண்மையான நாத்தீகர்கள் வெகுசிலர். அதில் நீங்கள் முதல் இடத்தில் இருக்கிறீர்கள். அதை நான் பலமுறை பல தளங்களில் (என் தளம் உட்பட) எழுதி இருக்கிறேன்! அதை நான் எழுதியபோது அடுத்த பின்னூட்டங்களில் பலர் அதை அமோதித்தார்கள்! அப்படி இருக்கையில், நீங்கள் இந்து மதத்தை விமர்சித்தால் கோபம் வரவே வராது!

    ஏனென்றால், செத்தவுடன் எழுந்ததை, தண்ணீரில் நடப்பதை, இறைவனின் "மகனை" (?) நம்புவது முற்போக்கு, வேறு மதங்கள் மட்டும் பிற்போக்கு என்று நீங்கள் கூறவில்லை! அதை கூறுவது, அண்ணன் திரு ராபின் போன்ற "போலி" முற்போக்குகள் பல! இந்து மதத்தை மட்டும் (இவர் இஸ்லாமையும் சான்சு கிடைத்தல் போட்டு தாக்கிறார் என்பது ஒரு விடயம்) போலி மதம், அதே சமயம் வெறும் fairy tale ஆன தங்கள் மதம் மட்டுமே ஒரிஜினல் மதம் என்று சொல்லும் இந்த "போலி" , சட்டையினில் மறைத்து வைத்திருப்பதோ, சிலுவை மட்டுமே!!

    The rabid fundamentallist tries to be an atheist when he codemns all the "fairy tales" except his. But his is not atheism. Its called fundamentallism! And most of them who reads blogs knows what kind of "முற்போக்கு" our friend Mr. Robin his. He is nothing but a died in the wool Christian fanatic, who loves to criticize all other fairy tales except his Christian one.

    இதுல வேற காமெடி கண்ணன் அவர்களை quote வேறு செய்கிறார்!

    அதவாது, ஒரு Theologian என்பவர் யார் என்பதற்கு ஒரு விளக்கம் இருக்கிறது!
    A theologian is a half blind man searching for a black cat in a dark room which does not actually exist, put comes out with one every time!

    கோவி கண்ணனும் கிட்டத்தட்ட இதே தான் என்பதால்(அதாவது கண்டபடி ஒரு முக்கால் பக்கத்திற்கு தினமும் எழுதி, ஆதலால் இதுதான் அது என்று முடிப்பார்) , இவருக்கும் அவருக்கும் நன்றாக ஒத்து போகிறது!
    The Last resort for any மதவாதி is a half baked rancour raiser! திரு கோவி கண்ணன் fits the bill and Mr Robin needs a few more as his fanaticism grows by the day.

    திரு ராபின் அவர்களின் பின்னூடங்களை கிறிஸ்துநேசன் என்ற ஒரு மதவாதியின் தளத்தில் பார்த்தால் இவர் மற்ற மதங்களை எப்படி வெறுக்கிறார், என்பதை புரிந்து கொள்ளலாம் - இந்த மாதிரி ஆட்கள் மற்றவர்களை பார்த்து சொல்லுகிறார்கள், நீ "மதவாதி" என்று!

    வாந்தி வருகிறது!!

    ReplyDelete
  23. No, ராபின், கோவீஸ்

    ......... TRUCE .......

    இங்க நம்ம வேலையைப் பார்ப்போமா ??

    ReplyDelete
  24. நாத்திகம் என்பது மதங்களை தாக்கி பேசுவது அன்று.மதங்களில் காணப்படும் மூட நம்பிக்கைகளில் இருந்து மக்களை விடுவிக்க சிந்தனையை தூண்டுவதாகும். அதேப்போல் இந்து மதத்தில் தான் மூடநம்பிக்கைகள் அதிகம் இருக்கிறது என்று ஒரு குறிப்பிட்ட மதத்தை எதிர்பதும் அல்ல. பகுத்தறிவு சார்ந்த ஒன்று, இருப்பினும் பிறர் நம்பிக்கையை தகர்த்த்துவதும் அன்று. அய்யா சொன்னது போல் கோபிக்காமல் நம் வேலையை நாம் பார்ப்போம் ...ஆம் இதுவும் ஒரு பரிணாம வளர்ச்சி தான்...

    ReplyDelete
  25. //கொள்கைகள் ஒத்து வந்ததால் பேசுகிறார். தவறென்ன?//

    உங்கள் புரிதல் தவறு.
    இதை ஏற்கனவே மேற்படியாருடன் நடந்த ஒரு விவாதத்தில் தெரிந்து கொண்டேன்.

    இதற்கு மேலும் இதைப் பற்றி பேசி உங்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை.
    தொடர்ந்து விளையாடுங்கள் :)
    நான் இன்னொரு சமயத்தில் சேர்ந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  26. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  27. //கோவி கண்ணனும் கிட்டத்தட்ட இதே தான் என்பதால்(அதாவது கண்டபடி ஒரு முக்கால் பக்கத்திற்கு தினமும் எழுதி, ஆதலால் இதுதான் அது என்று முடிப்பார்) ,//

    தோடா.......!

    நான் என்ன எழுதுறேன்ன்னு நல்லா தெரிகிறதே, பேசாம அதை நீங்களே எழுதி என் மின் அஞ்சலுக்கு அனுப்பி வைத்துடுங்க, நான் வெளி இட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete