Friday, July 30, 2010

421. பேத்தி வரைந்த படம் ...

*



ஆறரை வயதுப் பேத்தியின் வலைப்பூவில் அவள் வரைந்த ஒரு படத்தைப் பற்றிய இடுகை இது.





அவள் எனக்குப் படம் வரைந்து அனுப்பி நெடு நாட்கள் ஆயிற்று. chat-ல் வரும்போது சீக்கிரம் ஒரு படம் வரைந்து அனுப்பு என்று சொன்னேன், அடுத்த நாளே அவள் அம்மாவிடம் ஒரு படம் வரைந்து அனுப்பச் சொல்லியுள்ளாள்.


என்ன படம் என்று அவள் அம்மா கேட்டபோது அது தன் அறையை வரைந்திருப்பதாகக் கூறியுள்ளாள். அந்த படத்தில் ஒரு குதிரை இருப்பது பார்த்து அந்த குதிரை என்ன என்று கேட்டபோது, அவள் 'அது ஒரு TOOTH FAIRY. பல் தேவதை. விழுந்த என் பல்லைத் தூக்கிச் சென்ற TOOTH FAIRY என்று சொல்லியுள்ளாள்.

நான் அவள் அறையைப் பார்த்ததில்லையாதலால் மகளுக்கு அவள் அறையை நிழற்படம் எடுத்து அனுப்பச் சொன்னேன். படங்களும் வந்தன.



அவள் அறையில் இருந்த உயரமான ஸ்டாண்ட், கலர் வட்டங்கள் போட்ட பெரிய கலர் பெட்டி, இன்னும் சில ... எல்லாம் அவள் வரைந்த படத்தில் இருந்தன. அவைகளுக்கு மேல் ஒரு குதிரை .. a galloping horse .. அதில் சவாரி செய்யும் TOOTH FAIRY ... குதிரையின் சேணம் அவள் கையில் ... குதிரையின் பிடரி ... (வால் மட்டும் மிஸ்ஸிங்!!) W(e)lcome என்று ஒரு வரவேற்பு அட்டையுடன் அவளும் இருந்தாள் ...


எதையும் பார்க்காது ஒரு குதிரையை மனத்துள் நினைத்துக் கொண்டு அதை வரைவது ... ம்ம்..ம்.. என்னால் அப்படி வரைய முடியுமென நான் நினக்கவில்லை. பேத்தி வரைந்ததில் எனக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.

வளரட்டும் ...

(நான் படத்தை adobe-ல் சிறிது darken (through Curves) செய்திருக்கிறேன்.)






15 comments:

  1. //பேத்தி வரைந்ததில் எனக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.

    வளரட்டும் ...
    //

    மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்... பேத்தியிடம் சொல்ல்லுங்கள்

    அன்புடன்
    ஆ.ஞானசேகரன்

    ReplyDelete
  2. தங்களின் பேத்திக்கு என்னுடைய வாழ்த்துக்கள்... மேலும் வளரட்டும் அவளின் ஓவியத்திறன்...

    ReplyDelete
  3. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி, ஞானசேகரன்.

    ReplyDelete
  4. ஜெ.பாலா,
    மிக்க நன்றி.
    நீங்களும் ஒரு தூரிகையாளரோ?

    ReplyDelete
  5. என்னா பெரியவரே சரக்கு தீந்துபோச்சா ஒரே மொக்கயா வருது

    ReplyDelete
  6. புல்லட்டு,
    இந்தப் பதிவு ஒரு மொக்கையா? பாவி .........

    ReplyDelete
  7. //simply amazing, isn't it? //

    That's what i felt ...
    thanks

    ReplyDelete
  8. தங்களின் பேத்திக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. Uncle

    Ithu Aarthy yoda ponnu varainjatha illa Akka ponnodatha. Ethuva irunthalum great imagination. Convey my love to Arthy. I am one of her close friend and I have been to your house in Vilangudi once. Are you still living there only ah?

    Regards
    Chitra

    ReplyDelete
  10. தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. வாழ்த்துக்கள்.

    http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.php

    ReplyDelete