Thursday, September 09, 2010

434. சிங்கப்பூர் -- ஒரு அதிசயமான வரலாறு

*

Lee Kuan Yew

*


கால் நூற்றாண்டுக்குள் ஒரு நாட்டை - அது எவ்வளவு சிறிதாக, மூலப்பொருளேதும் இல்லாது இருந்தும் கூட - வளமாக்க முடியும் என்பதற்கு சிங்கை ஒரு நல்ல உதாரணம்.
அதன் பெருமை முற்றிலுமாக Lee Kuan Yew - லீ குவான் ய்யூ - என்ற ஒரு தனி மனிதருக்குச் செல்வதும் மிகவும் ஆச்சரியமான உண்மை.. 1965-லிருந்து 1990-க்குள்  அடையாளமில்லாத ஒரு நாட்டை வளர்ந்த, முதல் உலக நாடாக மாற்றும் திறமைக்காக வரலாறு அவருக்கு என்றும் பெருமை சேர்க்கும். மிக நீண்ட காலத்திற்கு ஒரு நாட்டின் பிரதம அமைச்சராக இருந்த பெருமை மட்டுமல்ல, அந்த காலத்தில் ஒரு நாட்டை ஒன்றுமில்லா நிலையிலிருந்து மிக மேன்மட்டத்திற்கு உயர்த்திய பெருமையும் அவருக்குண்டு.


சிங்கையின் வரலாறும் லீ அவர்களது அரசியல் வரலாறும் ஒன்றாக இணைந்து இரண்டுமே உச்சத்தை நோக்கி வளர்ந்துள்ளன. நாட்டின் வளர்ச்சிக்காக அவர் மேற்கொண்ட சில விஷயங்கள் அவரைப் போன்ற நல்ல எதேச்சதிகாரிகளுக்கும் வரும் போலும். ஆனால் அந்த good willed dictators அவைகளை தங்கள் சொந்த பலன்களுக்காக இல்லாமல் நாட்டுக்காக செய்வது கொஞ்சம் கடினம். நமக்குத்தான் தெரியுமே -- power corrupts; absolute power corrupts absolutley! என்று!

அதனால்தானோ என்னவோ என்னை மாதிரி ஒரு தூங்குமூஞ்சிக்கும் ஒரு
'கனவு' வந்தது. ஏறத்தாழ 15-20 ஆண்டுகளுக்கு முன் - லீயைப் பற்றித் தெரியாத ஒரு காலத்தில் - நான் கண்ட 'கனவை' ஒரு கட்டுரையாக எழுதி வைத்தேன். அது ஏறத்தாழ லீயின் நடவடிக்கைகளோடு ஒத்துப் போவது மிக்க ஆச்சரியமாக எனக்குத் தோன்றியது.


(லீ நடத்தியவை  நீலத்திலும், நான் எழுதியது சிகப்பிலும் .... )


(அரசியல்வாதிகள் என்றாலே ஊழலும் சொத்து சேர்ப்பும் இருக்காதா என்ன. லீ Corrupt Practices Investigation Bureau (CPIB) ஒன்றை ஏற்படுத்தி அப்படி ஏமாற்றிப் பிழைத்தவர்களை தண்டித்தார்; அவர்களின் சொத்தும் அவர்களைச் சார்ந்தோரின் சொத்துக்களும் கண்காணிக்கப் பட்டன)

(எல்லா மக்களும் தங்கள் சொத்துக் கணக்கைஅரசிடம் ஒப்படைக்க வேண்டும்.மூன்று மாதத்தில் எல்லோருக்கும் ஒரு ID எண் வழங்கப்படும்.உங்கள் கார்டின் வண்ணம் கூட உங்களின் சமூக நிலையைக் கூறிவிடும்; அரசியல்வாதிகளின் வழக்கமான 'பினாமி' இல்லாது ஒழியும்.

அரசின் கட்டளைகளை மீறும் அரசியல்வாதிகள், அவர்களது ஒட்டிய உறவினரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.)


(இரு குழந்தைகள் போதும்; அதற்கு மேல் மக்கள் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். மூன்று நான்கு குழந்தைகள் உள்ளோருக்கு அரசியல் சலுகைகள் குறைக்கப்படும்.)

(இரண்டாவது குழந்தைப்பேறுக்கு தனி விடுமுறை கிடையாது. இரண்டாவது குழந்தைக்கு மேல் குழந்தை பெறுவோரின் சம்பளத்தில் ஓராண்டிற்குரிய ஊக்கப் பணம் குறைக்கப்படும்.  இரு குழந்தைகளுக்கு மேல் பிள்ளை பெற்றோர் பெரிய சமுதாயப் பொறுப்புள்ள பதவிகளைப் பெற முடியாது.)



(சிங்கப்பூரில் பலரும் லீயின் ஆட்சியில் அவர் அரசியல் எதிரிகள் மீதும். ஊடகங்கள் மேலும் மேற்கொண்ட பல அதிகார ஆணவத்திற்காக லீயைக் குற்றம் சாட்டியது உண்டு.)

(சமய, சாதிய, அரசியல் கூட்டங்களும், ஊர்வலங்களும் மொத்தமாகத் தடை செய்யப்படும்.)



(லீ மதப்பரப்புதலைத் தடை செய்தார்.கிறித்துவ மதப் பரப்புதலை எதிர்த்தார்.)

(சாதிய, சமயத் தலைவர்கள் ஏதும் பேசாதிருக்கக் கட்டளையிடப்பட்டார்கள்.)

இப்படி ஒரு கட்டுரையை அந்த நாளில் எழுதிவிட்டு, இறுதியில் // இது கற்பனை; நடக்க முடியாதது என்று தெரியும். ஆனாலும், இப்படியெல்லாம் நடந்தால்... அப்படியேயில்லாவிட்டாலும் இதில் சில காரியங்களாவது நிறைவேறினால்... ! ஆழமான ஆதங்கங்கள்.// என்று எழுதியிருந்தேன். 


ஒருவேளை நியாயமாக ஒரு நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் லீ போன்றுதான் செயல்பட வேண்டும். அதனால்தான் என் கற்பனை லீயின் செயல்பாட்டோடு ஒன்றிப் போனது என்று நினைக்கிறேன். அதுவும் என் கற்பனைகள் வெறும் வீண் கற்பனைகளல்ல  லீ மாதிரி -- ஒரு நல்ல good willed, strong dictator - கிடைத்தால் அவைகள் நிஜமாகின்றன -- சிங்கப்பூரைப் போல!


அடுத்த கட்டுரைகளில் சிங்கையில் இன்னும் என்னை ஆச்சரியப்பட வைத்தவைகளைப் பற்றி எழுத  நினைத்திருக்கிறேன்.


*


4 comments:

  1. நல்ல ஒப்பீடு.. .ஒருவேளை அதுமாதிரியான ஒரு சூழலில்வாழ்வதால் அதன் தாக்கமாக கூட உங்களின் வெளீப்பாடு அமைந்திருக்கலாம். பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சட்டத்தின் முன் 'அனைவரும்' சமம் என்ற கனவை காணக்கூடாதா?

    அப்ப (சிகப்பு எழுத்து சமயம்) அந்தக் கனவைக் காணாததால், மீண்டும் ஒருமுறை உறங்கி இந்தக் கனவைக் காணும்படி வேண்டிக்கொள்கிறேன்.

    இது வந்தாலே நாடு உருப்பட்டுரும்.

    அப்புறம் மதத்துக்கு ஒரு சட்டமுன்னு இல்லாம மக்களுக்கு ஒரு சட்டம் கொண்டு வரணும்.

    தப்பைச் செஞ்சுட்டு, என் மதப்படி இது தவறு இல்லைன்னு யாரும் வாதாட முடியாது பாருங்க.

    சீக்கிரம் போய் தூங்குங்க:-)

    ReplyDelete
  3. சிங்கப்பூரின் ஆச்சரியங்களுக்காக காத்திருக்கேன்.
    லீ யின் புத்தகங்களை படிப்பதை காட்டிலும் அவருடைய பேச்சுக்களை யூடூபில் பார்த்தால் பேச்சாலேயே பலரை கட்டிப்போட்ட வியூகம் புரியும்.
    இவர் வழியில் வந்த கோ சோக் தோங் பேச்சும் அருமையாக இருக்கும்.சமீபத்தில் நிரந்தரவாசிகளை கட்டாயமாக சிங்கை சிட்டீசன் வாங்க வேண்டும் என்ற திரியை கொளுத்திப்போட்டுள்ளார்.

    ReplyDelete