Monday, September 13, 2010

435. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்

?????

இன்றைய இந்துவில் Forbes பத்திரிகையின் சில எதிர்கால நிகழ்வுகளாகச் சொல்லப்படுவதில் முதன்மையானது அம்பானி விரைவில் உலகின் முதல் பணக்காரராக உருவாகிவிடுவார் என்பது. நானும் அப்பத்திரிகையின் பணக்கார லிஸ்டுகளைப் பார்ப்பதுண்டு. அதில் எனக்கு பெரிய ஆச்சரியம் எப்படி நம்மூர்  அரசியல்வாதிகள் பெயர் வருவதேயில்லையே என்பதுதான். அதெல்லாம் கருப்பு - வெள்ளை என்பதைப் பொருத்ததோ என்னவோ? நம்மூர் அரசியல்வாதிகளின் சொத்துக்கள் என்ன வெளியேவா தெரியப் போகிறது. ஆனால் அப்பப்போ மூட்டை மூட்டையாக பணம் கிடைத்தது என்றெல்லாம் பத்திரிகைகளில் செய்தி வருகிறது. என்ன ஆகும்?  அதோடு, எத்தனையோ லட்சம் கோடிகள் நம்மூர் ரூபாய் ஸ்விஸ் வங்கிகளில் கிடக்கிறதாமே. அதையெல்லாம் சேர்த்தால் இந்த லிஸ்டுகள் எல்லாம் மாறிடாது?

?????

அமைச்சரின் பிள்ளைகள் பல கோடிகளில் தொழில் செய்தாலும், சினிமா எடுத்தாலும் இவர்களுக்கு ஏது இவ்வளவு சொத்து என்றோ, இல்லது அவர்களின் அப்பாமார்களின் சொத்தையோ யாரு பார்க்கப்போகிறார்கள் என்று சமீபத்தில் நடந்த ஒரு விவாதத்தில் நிறைய தெரிந்தவர் ஒருவர் கேட்டார். அப்படியா?

?????



ராதிகா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கார்த்திக்கைப் பார்த்து நீ மிகவும் அழகாக இருக்கிறாய் என்று சொல்லிவிட்டு அதற்கு ஒரு வாலையும் ஒட்ட வைத்தார். தமிழ்சினிமாவில் ஆண் நடிகர்களைப் பற்றிப் பேசும்போது 'அழகு' என்ற வார்த்தையையே பொதுவாகப் பயன்படுத்த முடியாதில்லையா என்றார். முழு உண்மையைச் சொல்லி விட்டார்.
ஆனாலும் நமக்கெல்லாருக்குமே 'அழகுணர்ச்சி' ரொம்ப கம்மியோ?

?????

மதுரையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் அங்குள்ள கலை மன்றத்தின் ஓரத்தில் கண்காட்சியாளர்களின் படங்கள்,  விளம்பரங்கள் எல்லாம் flex board-ல் இருந்தன. இவைகளை வைக்க போர்டு ஒன்றுக்கு அந்தப் பத்து நாட்களுக்கு தலா 2000 ரூபாய் வாங்கினார்களாம். ஞாநி சொன்னார்.

நடுவில் ஒரு நாள் அந்த போர்டுகள் காணாமல் போயின. எங்கள் ஊர் அரசியல்வாதி ஒரு காது குத்து விழாவிற்காக வருகிறார் என்று அந்த போர்டுகளை எடுத்து விட்டு அவர் படங்கள் அணி வகுத்தன. கொடுத்த காசுக்கு எங்க படத்தை மாட்டாம எதுக்கு அவைகளை எடுக்கணும் அப்டின்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஆனா பாருங்க .. அந்த ஒரு நாள் முடிஞ்சதும் மறுபடி பழைய போர்டுகள் வந்து விட்டன. என்ன நேர்மை??

?????

flex board என்றதும் இன்னொன்று நினைவுக்கு வருகிறது.  வீட்டு விழாக்களுக்கு
flex board அடிப்பது ஒரு fashion என்றாகி விட்டது. ஆனாலும் எங்கள் மதுரையில் அதுவும் செல்லூரில் இந்த 'வியாதி' அளவுக்கு மீறிக்கொண்டிருப்பதாக அப்பகுதியை நித்தமும் கடக்கும் எனக்குத் தோன்றுகிறது.

வேடிக்கையான மனிதர்கள், செல்போனை காதில் வைத்து ஒரு போஸ் கட்டாயம் இருக்கணும். அதோடு படங்களை எடுக்கும் பயங்கரமான காமிரா பொட்டிக்காரர்கள் படத்தில் இருப்பவர்களை பயங்கர போஸ் கொடுக்கச் சொல்லி விடுகிறார்கள். கடவுளே .. அதில் நாலைந்து படங்களை எடுத்து இங்கு போடலாமா என்று கூட நினைத்தேன். என்ன ஒரு பயங்கரமான போஸ்கள். எல்லோருக்கும் '***' மாதிரி தான் அழகா இருக்கிறது மாதிரி ஒரு நினைப்பு போலும்.

நம்ம வீட்டு பெண்கள் படத்தை பதிவுகளில் போடக்கூட அச்சப்படும் காலத்தில் இந்த மக்கள் தங்கள் பெண்பிள்ளைகளின் படங்களை பெரிய சைஸில் போடுகிறார்கள். அதுவும் நிஜ நகைகளா இல்லை வேற ஏதுமா என்று தெரியாத அளவில் 'பயங்கரமான' நகை நட்டுகளோடு படங்கள். (income tax காரங்களுக்கு இதெல்லாம் தெரிந்தால் பரவாயில்லையான்னு தெரியலை.) காது குத்து என்று ஒரு போஸ்டர். அதில் உள்ள பிள்ளைகளுக்கு ஏற்கெனவே காது குத்தியிருந்தது. அப்போ .. இப்போ யாருக்கு "காது குத்து?"  படத்தை ரோட்டில் இப்படி போடுவதால் எல்லோரும் அவர்களைப் பற்றி என்ன பேசுவார்கள்; எப்படி கேலி செய்வார்கள் என்பது கூட இவர்களுக்கு எப்படி தெரியாமல் போய்விட்டது?

யாராவது இதை மாற்ற முயலலாம். யார் சொன்னா கேப்பாங்க? ஒருவேளை நம் காமெடி நடிகர் விவேக் சொன்னா ஒருவேளை கேட்கலாம். ஆனாலும் அவராலும் முடியாமல் அவர் நம் அப்துல் கலாமிடம் முறையிட்டுக் கொண்டிருந்தார்.

?????

பிறந்த நாள் வரும் ஒரு மாதத்திற்கு முன்புதான் flex board போட வேண்டும்.  வரப்போகும் பிறந்த நாளுக்கு ஐந்து ஆறு மாதங்களுக்கு முன்பே வாழ்த்துகள் போடக்கூடாதுன்னு மதுரைக்காரர்களுக்கு ஒரு தடை போட்டால் என்ன? அல்லது யாராவது சொல்லியாவது கொடுத்தால் என்ன?
:)

?????













26 comments:

  1. சின்னச் சின்ன கேள்விகள்னு, இப்படி பெரிசா போட்டா எப்படி பதில் சொல்றதாம்...

    ReplyDelete
  2. இங்கே கேக்க மட்டும்தான் முடியும் சாமியோவ்..

    //அமைச்சரின் பிள்ளைகள் பல கோடிகளில் தொழில் செய்தாலும், சினிமா எடுத்தாலும் இவர்களுக்கு ஏது இவ்வளவு சொத்து என்றோ, இல்லது அவர்களின் அப்பாமார்களின் சொத்தையோ யாரு பார்க்கப்போகிறார்கள் என்று சமீபத்தில் நடந்த ஒரு விவாதத்தில் நிறைய தெரிந்தவர் ஒருவர் கேட்டார். அப்படியா?//

    :-(((((((((((

    ReplyDelete
  3. //யாரு பார்க்கப்போகிறார்கள் என்று சமீபத்தில் நடந்த ஒரு விவாதத்தில் நிறைய தெரிந்தவர் ஒருவர் கேட்டார். அப்படியா?//
    அப்படியா? வா ..ஓ ... நீங்க மதுரைல இருக்கீங்களா..அப்படித்தான் மறைமுகமா கேட்க முடியுமா ...சரி சார் !

    //நமக்கெல்லாருக்குமே 'அழகுணர்ச்சி' ரொம்ப கம்மியோ?//
    நமக்கில்ல சார் ...பெண்களுக்கு ...அவங்க தான் நம்மை அழகா இருக்கீங்கன்னு சொல்றதில்ல !@#$

    //நம்ம வீட்டு பெண்கள் படத்தை பதிவுகளில் போடக்கூட அச்சப்படும் காலத்தில்.. //
    இந்த விசயத்தில சித்ரா அக்காவை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!(அக்காவ் ஒழுங்கு மரியாதையா எனக்கு ஒரு பின்னூட்டம் போட்ருங்க ...பணகுடியைத் தாண்டி அப்புறம் போகமுடியாது..சொல்லிபுட்டேன்!)

    தருமி சார்! உமா சங்கர் அவர்களை ஆதரித்து மாலதி அவர்களையும் ஆதரித்து ஒரு பதிவு போட்டிருக்கேன்...எட்டிப் பார்த்தா சந்தோசப் படுவேன்!

    ReplyDelete
  4. //தமிழ்சினிமாவில் ஆண் நடிகர்களைப் பற்றிப் பேசும்போது 'அழகு' என்ற வார்த்தையையே பொதுவாகப் பயன்படுத்த முடியாதில்லையா//

    ஆங்கிலத்தில் Beautiful (அழகு - அழகான) என்ற வார்த்தை ஆண்களைக் குறிப்பிடும் போது உபயோகப்படுத்துவது கிடையாது - நடிகராக இருந்தாலும் சாமான்யராக இருந்தாலும். பெண்களுக்கு - Beautiful, ஆண்களுக்கு - Handsome.

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  5. என்னங்க அய்யா .. ம்துரைக்காரரா இருந்துட்டு அப்பாவி தனமா பிளக்ஸ் பற்றி அதுவும் செல்லூர் பிளக்ஸ் பற்றி கேள்வி எழுப்புகிறீர்கள்.. இருந்தாலும் உங்களின் கடமை உணர்ச்சிக்காக மீண்டும் ஒருமுறை உங்கள் மாணவனாகவே கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. sriram ஆசிரியரே!!
    ராதிகா தமிழில் சொன்னாங்க. அவங்க சொன்ன அழகும் நீங்கள் சொல்ற handsome-ம் ஒண்ணுதானே அப்போ?!

    ReplyDelete
  7. நியோ
    உமா சங்கர் அவர்களை ஆதரித்து எழுதிய பதிவு எது?
    கண்டு பிடிக்க முடியவில்லை?

    ReplyDelete
  8. நீங்க திருமா சாரோட போஸ்டர்களை பார்த்திருக்கீங்களா.

    ஒரு படத்துல வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, அப்புறம் பிரபாகரன் டிரஸுல ஒரு போஸ், கையில துப்பாக்கிதான் மிஸ்ஸிங். அடுத்து மீசை முறுக்கிக்கிட்டு, அடுத்து... முடியல,..

    செல்லை வைச்சுக்கிட்டதுக்கே வருத்தம் படரீங்களே@. நாங்க எவ்வளவு பாவம் பண்ணீருக்கோமுன்னு தெரியல.

    ReplyDelete
  9. //அமைச்சரின் பிள்ளைகள் பல கோடிகளில் தொழில் செய்தாலும், சினிமா எடுத்தாலும் இவர்களுக்கு ஏது இவ்வளவு சொத்து என்றோ, இல்லது அவர்களின் அப்பாமார்களின் சொத்தையோ யாரு பார்க்கப்போகிறார்கள்//

    மக்கள் தண்ணிக்கும்
    ரேசனுக்கும்
    தெருகோடியில நிக்கிறாங்கன்னா
    மந்திரியும் & மகனும் கோடியிலதான் புரலுவானுங்கன்னு எல்லோருக்கும் தெரியுமோ.

    ReplyDelete
  10. //sriram ஆசிரியரே!!//

    தருமி ஐயா நீங்க ஆசிரியர், நானில்லை, நானில்லை.

    ராதிகா சொன்னதில் சொற்குத்தம், பொருட்குத்தம் ரெண்டுமே இருக்கு, அதத்தான் சொன்னேன் (தமிழ் நடிகர்கள் பலர் - Handsome Category இல் வருவர்)

    ReplyDelete
  11. we need urgently o-ve blood on dindugal. if u can pls call 09942087127, pls forward this message to your friends on dindugal.

    ReplyDelete
  12. பெரிய பெரிய கேள்விகள்..
    பதில் தான் தெரியவில்லை.

    ReplyDelete
  13. //தருமி ஐயா நீங்க ஆசிரியர், நானில்லை, நானில்லை.//

    அதுவா இப்போது முக்கியம்?

    //ராதிகா சொன்னதில் சொற்குத்தம், பொருட்குத்தம் ரெண்டுமே இருக்கு, //

    எப்டிங்க??

    ReplyDelete
  14. //ஆனா பாருங்க .. அந்த ஒரு நாள் முடிஞ்சதும் மறுபடி பழைய போர்டுகள் வந்து விட்டன. என்ன நேர்மை?//

    //ஆனாலும் எங்கள் மதுரையில் அதுவும் செல்லூரில் இந்த 'வியாதி' அளவுக்கு மீறிக்கொண்டிருப்பதாக அப்பகுதியை நித்தமும் கடக்கும் எனக்குத் தோன்றுகிறது.//

    தலைவர்கள் எவ்வழியோ அவ்வழியே குடிமக்களும். மாற்றம் அங்கிருந்து ஆரம்பித்து ஒரு ரோல் மாடலாக இருந்து கொண்டு ஒரு சட்டத்தையும் இயற்றினால் இது போன்ற போலித் (பகட்டு) தனங்களை பறைசாற்றும் தட்டிகள் மறைந்து விடும்.

    கேலி கூத்து ஆசைகளும், வெட்கமற்ற வெளிக்கிடுதல்களும் :(( ...

    சின்ன சின்னதா பெரும் பெரும் விசயத்தை தூக்கிப் போட்டு இருக்கீங்க.

    ReplyDelete
  15. ஜெகதீஸ்வரன்,

    அது ஏங்க திருமாவை மட்டும் single out பண்றீங்க? எல்லா அரசியல்வாதிகளும் போடும் வேஷம்தான் எல்லோருக்கும் தெரியுமே! நான் சொல்றது உங்களையும் என்னையும் மாதிரியான பப்ளிக்!

    ஆனாலும் திருமா, கிருஷ்ணசாமி, மாறன் இந்த மூன்று பேரும் எனக்கு ஒரு விஷயத்தில் பிடிக்கும். இந்த 'வெள்ளை வேட்டி, சட்டை' என்ற வேஷம் இல்லாமல் இருப்பது எனக்குப் பிடிக்கும்.

    ReplyDelete
  16. ////ராதிகா சொன்னதில் சொற்குத்தம், பொருட்குத்தம் ரெண்டுமே இருக்கு, //

    எப்டிங்க??//

    சொற்குத்தம் - ஆண்களுக்கு “அழகு” என்ற வார்த்தை உபயோகித்தது.

    பொருட்குத்தம் : Handsome Heroes நெறய பேர் தமிழ் சினிமால இருந்திருக்காங்க - கமல், எம்ஜியார், அரவிந்தசாமி இன்னும் பலர்

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  17. //சொற்குத்தம் - ஆண்களுக்கு “அழகு” என்ற வார்த்தை உபயோகித்தது.//

    என்னங்க .. இன்கிலிபீசு வச்சு தமிழைத் தப்பு அப்டின்னு சொல்றீங்க?? அதெல்லாம் உங்க இன்கிலிபீசு முறை. அதை எப்படி தமிழுக்குக் கொண்டு வர்ரீங்க?

    //பொருட்குத்தம் : Handsome Heroes நெறய பேர் தமிழ் சினிமால இருந்திருக்காங்க - //

    நான் என்ன சொல்றேன்னா .. அழகுன்னா என்ன என்பதே இல்லாத நடிகர்கள் இப்போ நிறைய இருக்காங்க அப்டின்னு. *** என்று 3 எழுத்துக்கு போட்டிருக்கேன். கையேடு கூட ரொம்ப ரசிச்சாரே ..

    ReplyDelete
  18. sriram

    தமிழுக்கு ஆங்கில கிராமரா?

    ReplyDelete
  19. அபியப்ஸ்,

    4 யாருன்னு தெரியலைங்க!

    ReplyDelete
  20. சார் 4 * ன்னா அ ழ கி ரி ன்னு எடுத்துக்கலாம். அவருக்கு தானே மதுரைல அதிகமா பிலக்ஸ் போர்டு, அதான் ஒரு * குறையுதேன்னு கேட்டேன். நீங்க 3 * தானே போட்டிருக்கீங்க:-)) அதான் கேட்டேன்

    ReplyDelete
  21. அபியப்ஸ்,

    நான் சொன்னது நடிகர்களைப் பற்றி மட்டும்தானே!

    அரசியல்வாதிகள் மூஞ்சுதான் தெரிஞ்சதுதானே... அதிலேயும் இந்த அரசியல்வாதிகளும் குடும்பத்தோடு கோதாவில -- flex board - இறங்குறதும் ரொம்ப 'நல்லா' இருக்கு.

    ReplyDelete
  22. நீங்கள்கூட அந்த அயோக்கிய அரசியல்வியாதி யார் என்பதைச் சொல்லாமலேயே விட்டுவிட்டீர்களே.. ஏனுங்க ஐயா..?

    ஏதாச்சும் கவர் வாங்கிட்டீங்களா..?

    ReplyDelete
  23. உ.த.,

    நீங்க பட விமர்சனம் எழுதுறது மாதிரி எல்லாத்தையும் அக்கு வேறு ஆணி வேறுன்னு எல்லாரும் எழுதணுமா என்ன?

    சொன்னா புரிஞ்சுக்க வேணாம். :)
    (புரியாததுன்னா சொல்லலாம். மற்ற இடத்துக்கு விளக்கம் எதுக்கு?)

    ReplyDelete