The Analyst எழுதிய இப் பதிவு
*
பொது வழித்தோன்றலைப் (common descent) பறைசாற்றும் பரிமாண எச்சங்கள் - Vestigial Organs
*
A vestige is defined, independently of evolutionary theory, as a reduced and rudimentary structure compared to the same complex structure in other organisms. Vestigial characters, if functional, perform relatively simple, minor, or inessential functions using structures that were clearly designed for other complex purposes. Though many vestigial organs have no function, complete non-functionality is not a requirement for vestigiality ( Source http://www.talkreason.org/articles/section2.cfm).
எந்த அங்கங்கள் ஒரு குறிப்பிட்ட இன விலங்குகளில் முழுமையாக வளர்ச்சிபெற்று அதன் முதன்மைத்தொழிலைச் (அவை எதற்காக முதலில் உருவானதோ) செய்து அவ்விலங்குகளின் உயிர்வாழ்விற்கும் வாழ்க்கைத்தரத்திற்கும் முக்கியமாக இருந்து பின் படிப்படியாக அந்த விலங்குகளின் வழித்தோன்றல்களாக வந்த சில தொகுதி விலங்குகளில் அவற்றின் முதன்மைத் தொழிலை செய்யும் சக்தியை முற்று முழுதாகவோ அல்லது அச்சக்தியின் பெரிய பங்கையோ இழந்து, இவ்விலங்குகளின் வாழ்க்கைத்தரத்திற்கோ உயிர்வாழ்விற்கோ அத்தியாவசியமற்று மிகச்சிறிதாகவும் வெவ்வேறு அளவுகளிலும் உருவாகி அல்லது முற்றிலும் உருவாகாமல் போய்விடும் அங்கங்களே vestigial organs. இவ்வங்கங்கள் சில சிறிய துணைச் செயல்களைச் செய்யலாம்/செய்யாமல் விடலாம். ஆனால் அவை இருப்பது அந்த விலங்குகளின் survival க்கோ வாழ்க்கைத் தரத்தைக் கூட்டவோ இல்லை. துணைத்தொழில்கள் செய்தாலும் கார்பன் கூட்டாளி கூறுவது போல் அவை நிச்சயமாக அத்தொழிலுக்காக அந்த விலங்குகளில் உருவாக்கப்பட்டதிற்கு எந்தவிதமான சான்றுகளும் இல்லை. பரிணாமத்தால் மட்டுமே இவற்றை விளக்க முடியும்.
சில வெளிப்படையான உதாரணங்கள்:
• பறக்க முடியாத பறவைகளின் சிறகுகள்
• சில ஆழ்கடலில் வாழும் பார்க்கும் சக்தியற்ற மீன்களின் கண்கள்
• காலில்லா மலைப்பாம்புகளின் (இவற்றின் மூதாதையர் நான்கு கால்களுடைய reptiles) தோலிற்குக் கீழுருவாகும் கால்களைத் தாங்கத்தேவையான மிகச்சிறிய இடுப்பெலும்பு (pelvis)
• asexual reproduction ஆல் மட்டும் இனப்பெருக்கம் செய்யும் தாவரங்களில் உருவாகும் பூக்களும் மகரந்தங்களும்
• கருப்பையில் உருவாகும் போது ஆறு மாதமளவில் மனிதக் குழந்தைக்கு உடம்பு முழுவதும் உருவாகும் முடி. பிறப்பதற்கு முன் இம்முடியெல்லாம் கொட்டிவிடும். மனிதக்குழந்தை கருப்பையில் இருக்கும் போது இதற்கு அவசியமே இல்லை. தண்ணீருக்குள் வளரும் குழந்தைக்கு வெப்பநிலையை கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை. இதே போல் chimpanzees -லும் இதே நேரத்தில் முடி முளைக்கும், ஆனால் அவைக்கு அது கொட்டுவதில்லை, வாழ்நாள் முழுவதும் இருக்கும். பரிணாமம் நடந்தால் இதுவே நாம் எதிர்பார்ப்போம். எமக்கு இந்த முடி வளர்தல் தேவையற்றது, முடி இருப்பதைப் பரிணாமம் மட்டுமே விளக்க முடியும்.
• அங்கங்கள் மட்டுமல்ல பல மரபணுக்களும் பரிணாமத்தின் எச்சமாக இருக்கின்றன. உதாரணம்: Vitamin C ஜ தயாரிப்பதற்குப் பொறுப்பான மரபணு. எம்மில் உண்டு, ஆனால் வேலை செய்யாது. அதனால் எம் உடம்பால் vitamin C தயாரிக்க முடியாது. சாப்பாட்டின் மூலம் மட்டுமே எம்மால் vitamin C ஜப் பெறலாம். வேலைசெய்யாத மரபணு ஏன் எம்மில் இருக்கவேண்டிய அவசியமென்ன? மற்றைய பல முலையூட்டிகளில் vitamin C யின் வேலைசெய்யக்கூடிய மரபணு உண்டு. எமது மூதாதையரிலும் வேலைசெய்திருக்கிறது. படிப்படியாக எம் vitamin C மரபணுவில் ஏற்பட்ட mutations ன்மூலம் vitmain C உருவாக்கும் சக்தியை இழந்து விட்டது. கடவுள் எம்மை இப்படியே படைத்திருந்தால் ஏன் எமக்கு இந்த மாதிரி உடைந்த மரபணுக்களைத் தருவான்?
இவ்வாறு பலவற்றைச் சொல்லலாம்.
Read more about them here
http://oolon.awardspace.com/SMOGGM.htm#appendix
http://discovermagazine.com/2004/jun/useless-body-parts/article_view?b_start:int=1&-C
http://richarddawkins.net/articles/2625-five-things-humans-no-longer-need?page=1 http://www.talkreason.org/articles/section2.cfm
Vestigial organs என்றால் என்ன என்பது எல்லோருக்கும் விளங்கியிருக்குமென நம்புகின்றேன். இப்போது கார்பன் கூட்டாளியின் பதிவை சற்று விரிவாக அலசுவோம்.
//"தற்போதைய அறிவியலின் படி appendix-ற்கு நோய் எதிர்ப்பு சக்தி, நோய்களை உருவாக்கும் கிருமிகளை எதிர்த்து போரிடுதல், சக்தியை நிலை படுத்துதல் etc… போன்ற வேறு சில வேலைகளும் உள்ளனவாம். இவைகள் எல்லாம் தருமி ஐயாவிற்கு தெரியாமல் பழைய கதைகளை கூறி கொண்டிருக்கிறார். அதற்கான சுட்டியும் கொடுக்க பட்டுள்ளது."//
//"மற்ற உயிரினங்களுக்கு கண்களில் தூசி படியாமல் கண் பாதுகாப்பிற்காகவே தரப்பட்ட அமைப்பே இந்த nictitating membrane (plica semilunaris), மனிதனுக்கும் இவைகள் முக்கியமான வேலையை செய்கின்றன. அதாவது கழிவு, தூசி போன்றவைகளிருந்து நமது கண்களை பாதுகாக்கிறது." //
மற்ற உயிரினங்களுக்கு கண்களில் தூசி படியாமல் கண் பாதுகாப்பிற்காகவே தரப்பட்ட அமைப்பே இந்த nictitating membrane (plica semilunaris), மனிதனுக்கும் இவைகள் முக்கியமான வேலையை செய்கின்றன. அதாவது கழிவு, தூசி போன்றவைகளிருந்து நமது கண்களை பாதுகாக்கிறது."
அநேகமான பறவைகளிலும் மீன்களிலும் reptiles இலும் இந்த மூன்றாவது "கண் இமை" உண்டு. எதிர்பாராதவிதமாக ஏதாவது வேகமாக இவற்றின் முன் வந்தாலோ அல்லது இவ்விலங்குகள் மிகவேகமாக பயணிக்கும் போது கண்களை முழுதும் திரையிட்டு (its transparent) பாதுகாப்பதே அவ்விலங்குகளில் இதன் வேலை. குஞ்சுகளுக்கு சாப்பாடு கொடுக்கும் போது தவறுதலாக குஞ்சுகளின் கொத்தல்களிலிருந்து தாய்ப் பறவையின் கண்களைப் பாதுகாக்கவும் உதவும். எம்மில் மிகச் சிறியதாக பரிணாமத்தின் எச்சமாகவே கண்ணீர்ச் சுரப்பியின் பக்கத்தில் உள்ளது. எம்மில் நிச்சயமாக இவ்வேலையைச் செய்யவில்லை.
//"மனிதனுக்கு வால் கிடையாது. ஆனால் coccyx எலும்புகள் உள்ளன, இது முக்கியமான சதைகளை இணைக்க கூடியதாக உள்ளது, உட்காரும் போது ஒரு உதவியாகவும் கீழ் விழுந்தாலோ அதிகமாக வலி ஏற்படாதவாறு மனிதனுக்கு தரப்பட்டுள்ளது. இதுவும் மனிதனுக்கு மிகவும் பயன் பட கூடிய ஒரு உறுப்பே."//
எமது மூதாதையரில் காணப்பட்ட வாலின் எச்சமே எம்மில் இருக்கும் coccyx.
நமது முன்னோர்கள் நான்கு கால்களை நடப்பதை விட்டு நிமிர்ந்து ஒரு கால்களில் நடக்கத்தொடங்கியதும் எமக்கு வால் தேவையற்றதாகிவிட்டது. Coccyx பல சிறிய தனித்தனி எலும்புகளைக் கொண்டுள்ளது. மனிதரில் 3-5 சிறிய எலும்புகளோடு மாறுபடும் அளவுகளில் இருக்கிறது. இவை விருத்தியடையும் போது ஒன்றாக இணையும். சதைகளை இணைக்க இவ்வாறு பல சிறிய எலும்புகள் ஒன்றாக இணையத்தேவையில்லை.மற்றைய விலங்குகளில் வாலின் விருத்திக்குப் பொறுப்பான மரபணுக்களே எம்மில் இந்த coccyx உருவாக்கத்திற்கும் காரணம். மனிதக்கருவைக் கிட்டத்தட்ட 28 நாட்களில் பார்த்தீர்களானால் அதில் வெளிப்படையாக வால் இருப்பது தெரியும். இந்த வால் பின்னர் குறைக்கப்படும். (கடவுள் படைப்பில் ..) ஏன் தேவையற்ற ஒன்றை உருவாக்கிப் பின் குறைக்க வேண்டும்? அதில் கூட வினோதம் என்னவென்றால், சில வாலுடன் பிறக்கும் குழந்தைகளில் பிரச்சனை அந்த வாலைக் கருவில் குறைப்பதற்குப் பொறுப்பான மரபணுக்கள் ஒழுங்காக வேலைசெய்யாததாலே ஒழிய, வாலை உருவாக்கும் மரபணுக்கள் திடீரென்று தோன்றியதால் அல்ல. coccyx இன் கட்டமைப்பு சதைகளை இணைக்கும் தொழிலுக்குத் தேவையற்றது. அதோடு வாலுள்ள விலங்குகளில் இருப்பது போல எமக்கும் அதில் ஒரு தசை இருக்கிறது -தேவையே இல்லாமல், ஏனெனில் எமது coccyx இல் எல்லா எலும்புகளும் இணைந்திருப்பதால் அதைத் தசையால் அசைக்க முடியாது, ஆனால் ஒழுங்கான வாலில் அத்தசையின் தொழில் வாலை அசைப்பதே. தற்போது வாலில்லாத மிருங்களின் மூதாதையர் வாலுடன் இருந்தார்களேயானால் தற்போதய முருகங்களில் coccyx போன்ற வாலின் எச்சங்கள் இருக்கும் என பரிணாமத்தால் மட்டுமே கணிக்கலாம். நன்றாக விருத்தியடைந்த விலங்குகளில் சமநிலைக்கு (வாலின் முதன்மைத் தொழில்) உதவுவது போல் எம்மில் செய்யவில்லை. வால் Coccyx உம் எந்த அத்தியாவசிய தேவைகளையும் எம்மில் செய்யவில்லை. அத்தோடு சில மனிதர்கள் இவ்வங்கத்தில் நீண்ட கால நோவால் இருக்கவே அவதிப்படுவர். Coccyx இலுள்ள சதைகளை வெட்டி coccyx ஜ நீக்கினால் மனிதனின் survival க்கோ quality of life க்கோ எந்தக்குறையும் வருவதில்லை.
//"ஆனால் இந்த பல்லின் தேவை என்ன என்பதை தற்போது ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர். இதில் தான் மனிதன் வளர்வதற்கு தேவையான stem cell உள்ளதாம். அப்படி மனிதனின் எல்லா விதமான நோய்க்கும் மருந்தாக பயன்படும் முக்கியமான பற்களை பரிணாம வாதிகள் தேவை இல்லா உறுப்பு என்பதாக தங்களின் போலி பிரச்சாரத்திற்கு பயன் படுத்துகின்றனர். இவைகள் விரைவில் காணாமல் போகும் என்றும் தருமி ஐயா அவர்கள் கதை விட்டிருக்கிறார்."//
WOW! SERIOUSLY? நீங்கள் உண்மையாக விளக்கமற்றுத்தான் எழுதுகிறீர்களா என எனக்குத்தெரியாது.ஆனால் உயிரியல் படித்த நீங்கள் இவ்வளவு விளக்கமில்லாதவராக இருப்பீர்களென நம்ப முடியாமல் உள்ளது. ஒன்றைப்பற்றி எழுதும் போது அதைப்பற்றி அறிந்து விளங்காமல் பெரும்பாலும் விளக்கமற்ற மக்களுக்கு சொல்வது மிகவும் பொறுப்பற்ற தனமெனக் கருதுகின்றேன்.
//"இதில் தான் மனிதன் வளர்வதற்கு தேவையான stem cell உள்ளதாம். "//
உங்களின் இந்த வசனம் இரண்டு விதமாக வாசிப்பவரைத் தவறான புரிதலுக்கு இட்டுச்செல்கிறது. முதலாவது, adult stem cells wisdom teeth ல் மட்டும் தான் உண்டு என அர்த்தப்படுத்துவது. Adult stem cells எத்தனையோ அங்கங்களில் கண்டுபிடித்துள்ளனர். மூளை, சூலகம், இருதயம், தோல், இரத்தம், எனது favourite tissue ஆன endometrium (lining of the uterus), placenta என கிட்டத்தட எல்லா அங்கங்களிலும் ஒரு சிறிய எண்ணிக்கையில் adutl stem cells உண்டு. A very good source of stem cells is umblical cord blood. இப்போது பல நாடுகளில் பிள்ளை பிறந்தவுடன் இந்த umblical cord blood ஜ பிற்காலத் தேவைக்காக நிரந்தரமாக சேமித்து வைக்க வசதிகள் உண்டு. Wisdom teeth ல் stem cells இருந்தால் அநேகமாக மற்றைய எல்லாப் பற்களிலும் கூட அவை இருக்க வாய்ப்புகள் அதிகம் (adult stem cells ஜப் பற்றி மேலும் அறிய இங்கு செல்லவும்).
இரண்டாவது, Adult stem cells க்கு embryonic stem cells க்கு இருக்குமளவு சக்தி இல்லை. அவைக்கு உடலில் இருக்கும் எல்லாவகையான cells ஆகவும் மாற இயலாது. அதனால் மனிதன் வளர்வதற்குத் தேவையான stem cell உள்ளது என்பது மிகவும் தவறான கருத்து.
அதோடு இன்னொரு விடயம் ((stating the obvious, I think), இந்த stem cells ஜ அறிவியலாளர்கள் சிறிது காலத்திற்கு முன்பே கண்டுபிடித்தனர். இவை தானாக உடலில் தேவையான இடத்திற்குப் பயணித்து நோய்களை எல்லாம் குணமாக்காது. நாமே ஒரு tissue இலிருந்து ஆய்வுகூடத்தில் இவற்றைத் தனிப்படுத்திப் பின் culture செய்து பின் தேவையான tissue விற்கு inject பண்ண வேண்டும். இது கூட இன்னும் பல இடங்களில் பரிசோதனை நிலையிலேயே உள்ளது. Am I missing something here? கடவுள் stem cell க்காக wisdom teeth ஜ உருவாக்கி, அதை ஆயிரமாண்டுகளுக்குப் பின், அவற்றை அநேகமாக இறை நம்பிக்கையற்ற மனிதர்களால் கண்டுபிடிக்கச் செய்து அவர்களையே அதன் சக்திகளையும் அறியச் செய்து நோய்களுக்கு treatments உருவாக்கச் செய்தாரா? I don't get it! Do you ...?
எனக்கு இன்னொரு விளங்காத விடயம். எத்தனையோ ஆயிரம் ஆராய்ச்சிகள், அவதானிப்புகளின் மூலம் 150 ஆண்டுகளுக்கு மேலாக எத்தனையோ ஆயிரம் தடவைகள் திரும்பத் திரும்ப பல அறிவியலாளர்களால் உறுதிப்படுத்தப் பட்டவைகளை உங்களின் மதத்தோடு ஒத்துவராது என்கிற ஒரே காரணத்திற்காக ஒதுக்கிவிட்டு எப்படி ஒரே ஒரு ஆய்வாயினும் அது நீங்கள் நினைப்பதோடு ஒத்துப்போகின் கொஞ்சமும் யோசிக்காமல் உங்களின் தேவைக்கு எடுத்துக் கொள்கிறீகள்?
Going back to wisdom teeth being vestiges, எமது மூதாதையரை விட எமது தாடையின் அளவு மிகச்சிறியது. அநேகமான தாடைகளில் அறிவுப்பற்கள் வளர இடமேயில்லை. பல நாடுகளில் கிட்டத்தட்ட 1/3 சனத்தொகைக்கு இப்பற்கள் வெளியில் வருவதேயில்லை. இதனாலேயே இவைகள் விரைவில் காணாமல் போகலாமென தருமி சொன்னது பிழையான கணிப்பல்ல. அதோடு இவற்றில் அடிக்கடி infection வருவதாலும் எத்தனையோ பேர் இவற்றை அகற்றிவிடுவர். பல்லின் முதன்மைத்தொழில் என்ன என நான் சொல்லத்தேவையில்லை. தொழில் நமது உணவை நன்கு சப்பி அரைத்து சாப்பாட்டுக்கு இலகுவாக்குவது. எமது தாவர உண்ணி மூதாதையர்களுக்கு பச்சைத் தாவரப் பகுதிகளை நன்றாக அரைக்க இப்பற்கள் பயன்பட்டன. இப்போது நாம் சாப்பிடும் உணவு எமது மூதாதையர்களுடன் ஒப்பிடும் போது மிகவும் மென்மையானது. அதனால் எமக்கு இப்பற்கள் தேவையில்லை.
//"appendix, wisdom teeth போன்ற உறுப்புகள் கூட முன்பு தேவை இல்லாதவைகலாகவே பரிணாமவாதிகளால் காண்பிக்க பட்டது, அதன் பயன் பாடு தற்போதைய கண்டுபிடிப்புகள் மூலமே அவை மனிதனுக்கு இறைவன் கொடுத்த அத்தியாவசிய உறுப்புகள் என்று வெளிக்கொணர பட்டது."//
இந்தக் கட்டுரையின் மூலம் இவ்வுறுப்புகள் எமக்கு அத்தியாவசியமானவையல்ல என விளங்கியிருக்குமென நம்புகின்றேன். அத்தோடு இன்னொரு விடயம் நீங்கள் புரிந்து கொள்ளத்தவறிவிட்டீர்கள் என நினைக்கின்றேன். பரிணாமக் கொள்கைக்கு எத்தனையோ மில்லியன் சாட்சிகள் உண்டு. எதிராக எந்த உண்மையான சாட்சிகளும் இதுவரைக்கும் கண்டறியப்படவில்லை. கடவுளே இருந்தாலும் நாங்கள் பரிணாமத்தின் வழியாவே வந்திருப்போம் எனக் கூறுமளவிற்கு சாட்சிகள் உண்டு. சாட்சிகள் ஒன்றும் இரகசியமாகப் பூட்டி வைக்கப்படவில்லை. எல்லோரும் வாசித்து அறியலாம். திடீரென்று உண்மையான சாட்சிகள் ஏதேனும் கண்டுபிடித்து அதை verify பண்ணி மற்றவர்களும் நிரூபிக்க முடிந்தால் உங்களுக்கு நிச்சயம் nobel prize கிடைக்கும். ஆனால் அப்படி பிழையென நிரூபித்தால் கூட கடவுள் கொள்கை உண்மையாகிவிடாது.
God hypothesis should stand on its own. Just because solution A is wrong, it does not automatically mean solution B is right. You still have to prove it.
//God hypothesis should stand on its own. Just because solution A is wrong, it does not automatically mean solution B is right. You still have to prove it.//
ReplyDeleteThe Analyst ஏதாவது தமிழ்ப்படத்துல நடிக்கப் போறாரா? பஞ்ச் டயலாக்லாம் பேசுறாரு. :-)
அருமையான கட்டுரை.
//முதன்மைத் தொழிலை செய்யும் சக்தியை முற்று முழுதாகவோ அல்லது அச்சக்தியின் பெரிய பங்கையோ இழந்து, இவ்விலங்குகளின் வாழ்க்கைத்தரத்திற்கோ உயிர்வாழ்விற்கோ அத்தியாவசியமற்று மிகச்சிறிதாகவும் வெவ்வேறு அளவுகளிலும் உருவாகி அல்லது முற்றிலும் உருவாகாமல் போய்விடும் அங்கங்களே வெஸ்டிஜிஅல் ஆர்கனஸ்.//
ReplyDeleteஅருமையான மொழி ப்யர்ப்பு.இந்த உறுப்புகளுக்கு நல்ல தமிழ் பெயர் வைத்தால் நன்றாக இருக்கும்.தமிழாய்வாளர்கள் உதவலாம்.
//எனது favourite tissue ஆன endometrium..//
ReplyDelete?? உங்கள் ஆராய்ச்சி எதுவும் இதைப் பற்றியா?
விவாத களம் நன்றாக உள்ளது :) மேலும் தொடரட்டும் :)
ReplyDelete"உங்கள் ஆராய்ச்சி எதுவும் இதைப் பற்றியா?"
ReplyDeleteஓம். It's a cool little tissue. கருப்பையை line பண்ணியிருக்கும். கருத்தரித்து 6, 7 நாட்களின் பின் Blastocyst நிலையில் இருக்கும் கருவின் அடுத்த 40 கிழமைகளுக்கான வீடு. கருவிற்காக எதிர்பார்த்து ஒவ்வொரு மாதமும் மிக மிக மெல்லியதாக இருந்து கருவை வரவேற்க எவ்வளவோ மாற்றங்கள் செய்து வளர்ந்து பின் கரு இல்லாத பட்சத்தில் உதிர்ந்து பின் திரும்பவும் அதே எதிர்பார்ப்புடன் வளரும் (called the menstrual cycle). This is the tissue that is wholly reponsible for making reproductive age women outcasts for few days a month in many gods' eyes. :)
Anyway couple of things I am interested in figuring out:
எப்படி endometrium ஒரு அந்நியப் பொருள் (இயற்கையான கருத்தரிப்பில் அரைவாசி அந்நியம்/ surrogate mother ல் முற்றுமுழுதாக அந்நியம்)தன்னுள் நுழைந்து தன்னை modify பண்ண அனுமதிக்கிறது? இதுவே ஒரு இன்னொருவரின் அங்கத்தை உங்களில் பொருத்தும் போது எவ்வளவோ matching செய்தாலும் நீங்கள் வாழ்நாள் முழுதும் உங்கள் immune system ஜ அடக்கும் சத்திவாய்ந்த மருந்துகள் எடுக்க வேண்டும். endometrium ஒரு கருவை அனுமதிக்கிறது, ஆனால் வேறு கிருமிகளை அனுமதிக்கக் கூடாது (It does have mechanisms to resist some infection). It's quite clever. எப்படி அதற்கு வேறுபடுத்தத் தெரிகிறது?
அதோடு endometriosis (endometrial tissue growth outside the uterus) எனும் மிகப் பொதுவான நோயைப் எமக்கு நிறையத் தெரியாது. ஏன்/எப்படி endometrial tissue கருப்பைக்கு வெளியில் போகுது? எப்படிக் கட்டுப்படுத்தலாம்? better treatment options? blah, blah, blah.
Sorry. Went a bit overboard.
http://www.engadget.com/2010/12/02/nasa-discovers-arsenic-born-organisms-search-for-life-broadens/
ReplyDeleteமேற்கண்ட சுட்டியைப் பற்றி உங்கள் கருத்தென்ன ?
புகழ்
புகழ்,
ReplyDelete//NASA's proven that life can be made with components different than our current assumptions, both locally and beyond the stars. // sci-fi ஆசிரியர்களுக்கு field ரொம்ப பெருசா போச்சு ...
இந்தப் பதிவுகளைப் பார்க்கலையா?
http://kaiyedu.blogspot.com/2010/12/blog-post.html
http://thekkikattan.blogspot.com/2010/12/gfaj-1.html
தருமி அய்யா,
ReplyDelete//கடவுள் stem cell..க்காக wisdom teeth... அய் உருவாக்கி,அதை ஆயிரமாண்டுகளுக்குப்பின்,அவற்றை அநேகமாக இறைநம்ப்பிக்கையற்ற மனிதர்களால் கண்டுபிடிக்கச்செய்து,அவர்களையே அதன் சக்திகளையும் அறியச்செய்து நோய்களுக்கு treatment.. உருவாக்கச் செய்தாரா?//
சரியான நெத்தியடி தந்தீர்கள் அய்யா. இதற்கு எடுத்துக்காட்டாக நடைமுறையிலேயே ஒன்றைச் சொல்லலாம். ஒட்டிப்பிறக்கின்ற இரட்டைக் குழந்தைகள்,குருடு,செவிடு போன்ற பிழையான கடவுள் படைப்பான(?)மாற்றுத் திறனாலிகள். ஒட்டிய நிலையிலேயே குழந்தை முதல் முதுமை வரையில் எந்த மனிதர்களும் கடவுளின் கண்காணிப்பில் வாழ்ந்ததாக வரலாறு இல்லை. பிழை என தெரிந்தே பிறக்க வைத்ததின் நோக்கம்தான் என்ன? அல்லது பிழைதிருத்தம் செய்து மறுவாழ்வு தர இறைத்தூதருக்கு ஏதும் முன்னறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதா? இல்லை நாளைய மருத்துவ மனிதர்களால் பிழைதிருத்தம் செய்யப்படும் என்றாவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதா? அனைத்தும் அறிந்தவனுக்கு இவைகள் அறியாமல் போனது ஏனோ?
//சரியான நெத்தியடி தந்தீர்கள் அய்யா.//
ReplyDeleteநன்றி. ஆயினும் தந்தது The Analyst; நானல்ல/
வழியில்லாமல் தூசி தட்டி எடுக்க படும் பழைய பரிணாம கதைகளும் அதற்காக நடுநிலையான பதில்களும்.
ReplyDeletehttp://carbonfriend.blogspot.com/2010/12/blog-post.html
http://carbonfriend.blogspot.com/2010/12/stem-cells.html
//பரிணாமக் கொள்கைக்கு எத்தனையோ மில்லியன் சாட்சிகள் உண்டு. எதிராக எந்த உண்மையான சாட்சிகளும் இதுவரைக்கும் கண்டறியப்படவில்லை. கடவுளே இருந்தாலும் நாங்கள் பரிணாமத்தின் வழியாவே வந்திருப்போம் எனக் கூறுமளவிற்கு சாட்சிகள் உண்டு. //
ReplyDeleteஒரே ஒன்று, வேறு எதுவும் வேண்டாம், ஒரே ஒரு நிருபிக்கப் பட்ட சாட்சி தர முடியுமா?
பயனுள்ள தகவல்கள்!
ReplyDeleteRelated post
ReplyDeletehere
கார்பன் கூட்டாளியின் சில கேள்விகளுக்கு கு பதில் அளித்து உள்ளேன் , படித்து பாருங்களேன்
ReplyDeletehttp://walkingdoctorcom.blogspot.com/2012/01/blog-post.html