Saturday, January 15, 2011

469. மகிழ்ச்சிக்குரிய மாற்றம். - பொங்கலோ பொங்கல் !

*
Image and video hosting by TinyPic


Samathuva Pongal: a toast to communal unity




Sweet Pongal dish made by students turns out to be a huge draw at Kilakarai college


AMITY: Students making Samathuva Pongal at Syed Hameedha Arts and Science College in Kilakarai on Thursday.

It was a different occasion for students of diverse faiths studying in Syed Hameedha Arts and Science College, Kilakarai, who gathered in traditional dresses of Tamils to celebrate a Samathuva (secular) Pongal.

The students, management representatives, professors and others clad in traditional dhotis and saris thronged the venue to celebrate the festival with pomp and gaiety at the college premises on Thursday.

While a section of women students engaged themselves in drawing rangoli as per the tradition, others made sweet Pongal in a pot which was decorated with items such as sugarcanes and others.

When it was distributed to a large number of students, they roared hailing the specialty of Pongal, which is being celebrated from time immemorial by Tamils.

Uniting force

“Pongal is not a festival of a particular religion. We feel it is a festival of Tamils and it is a uniting force. It symbolises our tradition and culture,” said S.M. Yousuf, Executive Director, Mohamed Sathak Institutions, Kilakarai.

The festival had closely associated with Tamil language and the secular identity of the festival should be safeguarded , he added.

Habeeb, Director, and Abul Hasan Sathali, Principal of the college, said since it was a festival of Tamils all students, professors and others associated with the college were asked to come to the festival wearing traditional dresses. It had conducted a number of competitions for bringing out talents among the students in view of the festival.

The college would continue to celebrate Pongal every year.

பின் குறிப்பு:

பொங்கலில் என்ன மாற்றம், என்ன மகிழ்ச்சி என்று ஒருவேளை யாரும் நினைத்தால் அவர்களுக்காக பொங்கல் விழாவைப் பற்றிய சில பழைய விவாதங்களை நினைவு படுத்துகிறேன். நடந்துள்ள இந்த மாற்றம் நல்ல பின் விழைளைவுகளைக் கொடுக்கும் என்றே நம்புகிறேன்.

தொடர்புடைய பழைய பதிவுகள்:

http://cdjm.blogspot.com/2007/01/blog-post.html

http://athusari.blogspot.com/2007/01/blog-post_14.html

http://dharumi.blogspot.com/2007/01/197.html


*

39 comments:

  1. http://thatstamil.oneindia.in/news/2011/01/12/12-pongal-be-celebrated-kanyakumari-church-aid0091.html

    ReplyDelete
  2. இதெல்லாம் வழக்கமான நிகழ்ச்சிகள் தானே, ஜோ!

    ReplyDelete
  3. //நல்ல பின் விழைவுகளைக் //

    விளைவுகளை?

    ReplyDelete
  4. நல்ல முன்னேற்றம் அய்யா வாழ்த்துக்கள். இது போல் ஒவ்வொரு ஊரிலும் எதிர் காலத்தில் கொண்டாடி மகிழ மறுபடி வாழ்த்துகிறேன். இதைப் பார்த்து விட்டு மத(வெறி)வியாபாரிகள் போராட்டத்திற்கு நாள் குறிக்காமல் இருந்தால் மிக்க மகிழ்ச்சியே!

    ReplyDelete
  5. நல்ல விஷயம்தான் .பண்டிகைகள் அனைத்த்துமே மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு என்று எடுத்துக் கொண்டால் மகிழ்ச்சி. அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. நன்றி ஸ்ரீ. திரு(ந்)த்தி விட்டேன்!

    ReplyDelete
  7. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!

    மத சடங்காக இல்லாமல் ஒரு இனத்துக்காக நடத்தப்படும் விழாவுக்கு இஸ்லாத்தில் தடையேதும் இல்லை.

    ReplyDelete
  8. //ஒரு இனத்துக்காக நடத்தப்படும் விழாவுக்கு இஸ்லாத்தில் தடையேதும் இல்லை.//

    இதைச் சொல்ல சுவனப்பிரியன் உங்களுக்கு 2011 ஆண்டும், உங்கள் கல்லூரி மக்களே ஒரு படி முன்னால் வைத்ததும் காரணமாயிருக்கிறது.பழைய பதிவுகளில் நாங்கள் சொன்ன இதே காரணங்கள் இஸ்லாமியப் பதிவர்களின் காதுகளில் முன்பு விழவில்லை என்பதற்கான சான்றுகள் நம் பழைய விவாதங்களில் குவிந்து கிடக்கின்றன.

    எப்படியோ ஒரு வழி (உங்களையும் மீறி, தாண்டி) பிறந்துள்ளது!!

    ReplyDelete
  9. //தொலைக்காட்சியில் பர்கா -- ...ஏன் உங்கள் மதங்களில் கேள்வியே கேட்கக் கூடாதா? கேட்டாலே அது blasphemyதானா? அதுவும் இந்த நாட்டிலேயே இப்படின்னா இஸ்லாமிய நாட்டில் எவன் எதில் கேள்வி கேட்பான்? //

    ஒன்றாம் எண்ணில் கேட்ட இந்த கேள்வியை ஏனிப்படி கண்டு கொள்ளாமல் இருக்கிறீர்கள்? பதில் தர முடியவில்லையா? மனமில்லையா?//

    மனமில்லாமலெல்லாம் இல்லை. ஏற்கெனவே பேசப்பட்ட விஷயம் என்பதால்தான் அதை விட்டு விட்டேன். புர்கா என்பது முகம் கைகளைத் தவிர மற்ற இடங்களை அந்நிய ஆடவர்களின் பார்வையில் படாதவாறு அணிந்து கொள்வது. இதனால் அந்த பெண்கள் பாதுகாப்படைகிறார்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள் படும் துயரத்தை எனது முந்தய பதிவிலே விபரமாக கொடுத்துள்ளேன். இஸ்லாமிய பெண்கள் எங்களின் முன்னேற்றத்திற்க்கு புர்கா தடையாக இருக்கிறது என்று எங்குமே கொடி பிடிக்கவில்லை. சவூதியில் பெண்கள் அலுவலகததுக்கும் கல்லூரிக்கும் மருத்துவ மனைகளுக்கும் சென்று அங்கு பணி புரிந்தும் வருகிறார்கள். புர்கா அவர்களுக்கு எந்த இடைஞ்சலையும் ஏற்படுத்தவில்லை. நாம் ஆண்கள் முழுக்கை சட்டை, பேண்ட் போட்டுக் கொள்கிறோம். அதே போல் பெண்கள் தலையில் மாத்திரம் வெளியில் செல்லும்போது ஒரு துணியை கட்டிக் கொள்ள இஸ்லாம் பணிக்கிறது. ஜாக்கெட்டுக்கும் கீழ் ஒரு இடைவெளி எதற்கு? தொப்புளைக் காட்டுவதால் பெண்களுக்கு என்ன முன்னேற்றம் வந்து விடப் போகிறது? நமது கலைஞர் தொப்புளைக் காட்டித்தான் முதலமைச்சர் ஆனாரா?

    சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்ற இரு இளம் பிரிட்டிஷ் பெண்களிடம் 'தற்போது புர்கா அணிவது சிரமமாக இல்லையா?' என்று கேட்கப்பட்டது. 'இல்லை! முன்பை விடப் பாதுகாப்பாக இருக்கிறோம். இன்று எங்களை யாரும் சீண்டுவதில்லை. இடிப்பதில்லை. மரியாதையாகப் பார்க்கிறார்கள். நாங்கள் இதை மிகவும் விரும்புகிறோம்' என்றனர். பிரான்சிலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் புர்காவுக்கு தடை விதித்த போது பொங்கி எழுந்தது அதிகம் இஸ்லாமிய இளம் பெண்கள்தான்.

    பெண்களுக்கு பாதுகாப்பாக உள்ள புர்காவை விமர்சித்ததால் அதன் பெருமைகளை விளக்க முஸ்லிம்கள் முயற்ச்சித்திருக்கலாம். அது உங்களுக்கு வித்தியாசமாக தெரிந்திருக்கிறது.

    ReplyDelete
  10. //முன்பை விடப் பாதுகாப்பாக இருக்கிறோம். இன்று எங்களை யாரும் சீண்டுவதில்லை. இடிப்பதில்லை. //

    கமலாதாஸ் கூட இதையே சொன்னார். அதன் விளக்கங்களும் விவாதங்களும் நினைவில் உள்ளது.

    இதற்குரிய பின்னூட்டம் இங்கே இருக்கிறது.

    ReplyDelete
  11. “Pongal is not a festival of a particular religion. We feel it is a festival of Tamils and it is a uniting force. It symbolises our tradition and culture,”

    Amen to that!

    ReplyDelete
  12. அன்பான நண்பர் திரு தருமி,

    சில கருத்துக்கள்!

    இந்திய மத-சமத்துவம் என்பது, இந்து பண்டிக்கைகளின் இந்துத்தமையை அறுத்தெடுத்து, அது இந்து சாரா பண்டிகையே என நிலைநாட்டி ஆதலால் அதை மற்ற மதத்தவர் கொண்டாடலாம் என்று மட்டுமே கட்டமைக்கப்படுகிறது. அதாவது, இதில் மத சமத்துவமோ அல்லது மெஜாரிட்டியின் மத நமிக்கைகளை மதித்து அந்த பாரம்பரியத்தை மைனாரிடிக்கள் மதிக்கும் செயலோ கடுகளவும் இல்லை என்று நிலைநாட்டி விட்டு, பாருங்கள் சமத்துவம் காண்கிறோம் என்று சொல்லுவது நகைப்பிற்குரியதே!


    Of course, மற்ற மதக்காரர்கள் இந்து மத பண்டிகைகளை கொண்டாடவேண்டும் என்று யாரும் கூறவில்லை. அப்படி கூறினால் அது தவறும் கூட. மேலும் அதற்க்கு அவசியமும் இல்லை. அதே சமயம், இந்த பொங்கல் கொண்டாட்டங்களை (பொங்கல்-இந்து மதம் தொடர்பிற்கு பின்னர் வருவோம்) வைத்துக்கொண்டு, அதோ பார் மற்ற மதத்தவர்கள் என்னமாக மத நல்லிணகத்தை பேணுகிறார்கள் என்று சொல்லுவது சற்றும் உண்மையில்லை!

    மாற்று மதக்காரர்கள் கொண்டாடும் பொங்கல், அதாவது இந்து மத சார்பு இல்லாத ஒரு பண்டிகையாக சிலர் ஆக்க நினைக்கும் பொங்கல், இந்து அடித்தளம்சார்ந்தது அல்ல இந்த நாடு மற்றும் சமூகம் என்று மாற்று மதத்தார் சொல்ல நினைக்கும் ஒரு வழிமுறையாக மட்டுமே நினைக்க தோன்றுகிறது. அதுவும் அதை அவர்கள் செய்யவில்லை. அப்படி ஒரு வடிவத்தை கொடுத்து பாரம்பரிய இந்து மத தொடர்புகளை சமூக கொண்டாட்டங்களிலிருந்து அகற்ற பார்க்கும் ஒரு சிறு கூட்டம் செய்தது இது.

    சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், மாற்று மதத்தாரின் பொங்கல் கொண்டாட்டத்தின் உள்ளர்த்தம், இந்த நாட்டு பாரம்பரியம் என்பதில் இந்துமதத்திற்கு இடமில்லை என்பதே!

    இதை இப்படி யாரும் சொல்லி விட்டு செய்வதில்லை. ஏனென்றால் எல்லோரும் மத வெறி பிடித்தவர்கள் இல்லை. ஆனால் பொங்கல் கொண்டாட்டத்தை அந்த சமூகத்தில் முதலில் அனுமதித்த மத முன்னோடிகள் (ஆங்கிலத்தில் religious bodies that hold the helm of affairs என்று சொல்லலாம் ) அந்த ஒரு காரனத்திர்க்காகத்தான் அதை அனுமதித்தார்கள்! இல்லையென்றால் இஸ்லாமியரும் கிருத்துவரும் நிச்சயமாக பொங்கலை கொண்டாடமாட்டார்கள்! இந்து மதத்தை எக்காரணம் கொண்டும் அங்கீகரிக்கவோ, கௌரவிக்கவோ அவர்களின் வழிமுறை அனுமதிக்காது! (There are numerous exceptions for this, but one does not talk about exceptions when making the point, its always the norms that count)!

    You like it or not; Non-Abrahamic religions and its adherents can never expect any recognition, understanding nor clebration of their culture and beliefs from the Abrahamic societies, for their core thesis is not to award such to anyone other than their own gods and prophets. If in case one such event happens, its nothing more than an activity to create an image of non-foreignness of their faith among the natives and to exhibit the delinking of the native's faith with their celebrations for future conversations. Pongal happens to be one such de-linking tool!!

    ReplyDelete
  13. தருமி!

    //இதைப் போல தொலைக்காட்சியில் பர்தா பற்றிக் கேட்டிருந்தேனே அதையும் இங்குதான் பதில் சொல்வீர்களா?//

    நீங்கள் குறிப்பிடும் நிகழ்ச்சிக்கு போராட்டம் அறிவித்த அந்த அமைப்பே முன்பு இதற்கு விளக்கம் அளித்து விட்டது. விஜய் டிவியின் தொகுப்பாளர் படப்பிடிப்பின்போது ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டார். புர்காவுக்கு ஆதரவாக பேச வந்த இஸ்லாமிய பெண்கள் எவரையும் அவர் கருத்தை சொல்ல அனுமதிக்கவில்லை.புர்காவுக்கு எதிராக பேசிய ஒரு பெண்ணை மட்டும் அதிக நேரம் பேச விட்டு தொகுப்பாளர் என்ன சொல்ல வந்தாரோ அதை நிலை நாட்ட முயற்ச்சித்தார். விவாதம் என்றால் இரு தரப்புக்கும் சம நேரம் ஒதுக்க வேண்டும்.அது மீறப்பட்டதால்தான் போராட்டத்தை அறிவித்தது அந்த அமைப்பு. தவறு நடந்திருப்பதை புரிந்து கொண்ட விஜய் டிவி நிர்வாகமும் பதிவு செய்த நிகழ்ச்சியை ஒளிபரப்புவதில்லை என்று முடிவு செய்தது. இதில் தவறு யார் பக்கம் என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

    அடுத்து உங்கள் பதிவில் பின்னூட்டம் அதிகமாகி விட்டதால் கணிணி சில நேரங்களில் ஏற்க மறுக்கிறது. எனவேதான் என் பதிவில் இட்டேன். அந்த சுவரைப் பற்றிய கேள்விக்கு கும்மிக்கு அளித்த பதிலிலேயே விளக்கம் இருக்கிறது.

    ReplyDelete
  14. தருமி!

    //இதைச் சொல்ல சுவனப்பிரியன் உங்களுக்கு 2011 ஆண்டும், உங்கள் கல்லூரி மக்களே ஒரு படி முன்னால் வைத்ததும் காரணமாயிருக்கிறது.பழைய பதிவுகளில் நாங்கள் சொன்ன இதே காரணங்கள் இஸ்லாமியப் பதிவர்களின் காதுகளில் முன்பு விழவில்லை என்பதற்கான சான்றுகள் நம் பழைய விவாதங்களில் குவிந்து கிடக்கின்றன.

    எப்படியோ ஒரு வழி (உங்களையும் மீறி, தாண்டி) பிறந்துள்ளது!!//

    பொங்கல் பண்டிகையைக் கூட முஸ்லிம்கள் முன்பு ஒதுக்கியதற்கு காரணம் இருக்கிறது. இந்தியாவை எடுத்துக் கொண்டால் கிறித்தவம்,பவுத்தம், சமணம், இஸ்லாம்,சீக்கியம் என்று இன்னும் பல மதங்கள் இருந்தாலும் இஸ்லாத்தைத் தவிர மற்ற மதங்கள் அனைத்தையும் ஆரியம் விழுங்கி விட்டது. எங்கள் ஊரின் அருகாமையில் தாழ்த்தப் பட்டவர்கள் ஒரு கும்பலாக கிறித்தவத்தை தழுவினார்கள். ஆனால் இன்றும் அவர்களின் பெயரில்தான் மாற்றம் இருக்கிறதே தவிர அதே தீண்டாமையை கிறித்தவத்திலும் அனுபவிக்கிறார்கள். பவுத்தத்தையும் சீக்கியத்தையும் பற்றி சொல்லவே வேண்டாம். இந்து மதத்தின் மறு வடிவமாகவே திகழ்கிறது. இதை எல்லாம் பார்த்த எங்களின் முன்னோர்கள் இந்து மதத்தின் சாயல் சிறிது கூட இஸ்லாத்தில் நுழையாமல் பார்த்துக் கொண்டனர். இன்று வரை இஸ்லாம் ஆரியத்தை நெருங்க விடவில்லை. எனவே தான் இந்துத்துவ வாதிகள் அவர்களின் முதல் எதிரியாக முஸ்லிம்களைப் பார்ப்பது. முஸ்லிம்கள் இந்திய கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டால் எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த பகையும் இல்லை என்று முன்பு இவர்கள் பகிரங்கமாகவே அறிவிப்பு செய்தனர்.

    ஆனால் இணையம் தொலைக்காட்சி போன்ற சாதனங்களால் இஸ்லாம் என்றால் என்ன என்பதை பலரும் இன்று விளங்கி விட்டோம். இனி இந்துத்துவத்தை இஸ்லாத்தில் கலக்க முடியாது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் மத சடங்குகள் இல்லாத நம் இனத்துக்காக நடத்தப்படும் பொங்கலை கொண்டாடுவதில் தவறில்லை என்பது என் கருத்து.

    ReplyDelete
  15. //இணையம் தொலைக்காட்சி போன்ற சாதனங்களால் இஸ்லாம் என்றால் என்ன என்பதை பலரும் இன்று விளங்கி விட்டோம்.//

    நிச்சயமாக ... ஆமாம் !!

    ReplyDelete
  16. //மத சடங்குகள் இல்லாத நம் இனத்துக்காக நடத்தப்படும் பொங்கலை கொண்டாடுவதில் தவறில்லை என்பது என் கருத்து.//

    நீங்கள் சொன்ன இவையெல்லாம் 2010 -11-க்குள் நடந்துவிட்டது அல்லவா?! அதைத்தான் சொன்னேன்.

    ReplyDelete
  17. //விவாதம் என்றால் இரு தரப்புக்கும் சம நேரம் ஒதுக்க வேண்டும்.அது மீறப்பட்டதால்தான் போராட்டத்தை அறிவித்தது அந்த அமைப்பு. //

    எது “அந்த” அமைப்போ? ஒரு நிகழ்ச்சி நடைபெறும் முன்பே அப்படி ஒரு “போராடடம்” - இதைத்தான் நான் சொன்னேன் - இங்கேயே இந்த ஆட்டம் என்றால், இஸ்லாம் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களில் அந்த “ஆட்டம்” எப்படியெல்லாம் இருக்கும் - இப்போது பாகிஸ்தானில் நடப்பது போல்.

    ReplyDelete
  18. .

    சுவனப்பிரியன்,
    //மத சடங்குகள் இல்லாத நம் இனத்துக்காக நடத்தப்படும் பொங்கலை கொண்டாடுவதில் தவறில்லை என்பது என் கருத்து.//

    இந்த கருத்தை நீங்கள் சொன்னது மிக்க மகிழ்ச்சி.

    இஸ்லாமியர் பொங்கல் கொண்டாடலாம் - சுவனப்பிரியன்

    என்று ஒரு பதிவு போடப்போகிறேன்.

    ஏன் என்றால், "பொங்கல் மதப்பண்டிகை அல்ல உழவர் திருநாள் மற்றும் நன்றிப்பண்டிகை முக்கியமாக தமிழர்களுக்கு என்று இருக்கும் சாதி/மதம் சாராத பண்டிகை" என்று நான் சொன்னபோது, இணையத்தில் இருக்கும் பல இஸ்லாமியர்கள் எதிர்த்தார்கள். கொண்டாடவே கூடாது/முடியாது என்று சொன்னார்கள்.

    உங்களின் கருத்து அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கலாம்.

    நன்றி!
    .

    ReplyDelete
  19. //ஆனால் இணையம் தொலைக்காட்சி போன்ற சாதனங்களால் இஸ்லாம் என்றால் என்ன என்பதை பலரும் இன்று விளங்கி விட்டோம். இனி இந்துத்துவத்தை இஸ்லாத்தில் கலக்க முடியாது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் மத சடங்குகள் இல்லாத நம் இனத்துக்காக நடத்தப்படும் பொங்கலை கொண்டாடுவதில் தவறில்லை என்பது என் கருத்து.//

    My points cannot be vindicated more firmly than what has been spouted above by one more hate messenger!

    The only platform the extreme religious and the extereme liberal of the western world now come together is when there is a question of the religion of peace's place in their society!

    If one has the habit of reading all the liberal and conservative views that is comming from USA and Europe about this subject, the writing on the wall is clear.

    People of all colors are scared seeing the extent of religious indoctrination and supermacism exhibited by these true followers of the only true god.

    While Indians, in the name of secularism have more or less been muzzeled and beaten to remain silent about such bigotry and supermacism, the Western liberal societies need not be constrained by such reasons. They have got centuries of freethought and liberalism behind them and can differenciate clearly between what is secularism and religious sadism!

    In short, they care a hoot about the holiness of any faith, let alone the only true faith! Hence a reason for conflict.

    As one can see the words spelled out by this gentleman are dispersed liberally with hate, bigotry, narcism and unfounded superiority complex.

    It doesnt take an intelligent man to see thro where these fellows are moving towards.

    Hence my prayer would be -

    God, who ever you are, please exist atleast for the sake of bigots like this, for when he come to know that you really dont exist, all the others might have ceased to exist!!!!

    ReplyDelete
  20. பொங்கள் இந்துச் சகோதர்களின் மதச் சடங்காக இருந்தால் அதை அப்படியே நிறைவேற்றும் போது, அது என்ன சமத்துவப் பொங்கள் என்று ஏனைய மார்க்கத்தாரையும் இழுத்துப் போடுரீங்க? ஒரே கொலப்பமாக இருக்கு பலருக்கு?!

    ReplyDelete
  21. //….While Indians, in the name of secularism have more or less been muzzeled and beaten to remain silent about such bigotry and supermacism, the Western liberal societies need not be constrained by such reasons. They have got centuries of freethought and liberalism behind them and can differenciate clearly between what is secularism and religious sadism! …..//

    இந்து மத நம்பிக்கையாளர் எனது நண்பராக இருக்கிறார். அவரை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்க்காக 'நானும் உங்களோடு கோவிலுக்கு வந்து சிலைகளை வணங்குகிறேன்' என்று நான் சொன்னால் அவருக்காக நடிக்கிறேன் என்று அர்த்தம். அவர் நம்பிக்கை அவருக்கு. என் நம்பிக்கை எனக்கு. இதனால் நட்புக்கு எந்த பாதிப்பும் வந்து விடப் போவதில்லை. ஒரு உள்ளத்தில் இரணடு மாறுபட்ட நம்பிக்கை இருக்க முடியாது அல்லவா!

    ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் உதாரணத்துக்கு இழுக்கிறீர்கள். அங்கு இன்னும் நிறவெறி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நமது நாட்டு சேரி குடியிருப்புகளைப் போல அமெரிக்காவிலும் கருப்பர்களின் குடியிருப்புகளைக் காணலாம். பல இடங்களில் வேலை வாய்ப்புகளிலும் அவர்கள் ஓரம் கட்டப் படுகிறார்கள்.

    பத்து நாட்களுக்கு முன்பு கூட சென்னை தேவி தியேட்டரில் திரைப்படம் பார்க்க வந்த குறவர் இன மக்களுக்கு முதல் வகுப்பு டிக்கெட் தர மறுத்திருக்கிறார் டிக்கெட் கொடுப்பவர். அவர்கள் பிரச்னை பண்ணவே பிறகு நிர்வாகம் தலையிட்டு டிக்கெட் கொடுக்க சொல்லியிருக்கிறது. முதல் வகுப்புக்கான முழு கட்டணத்தையும் தர இருந்த அவர்களை தடுத்தது எது? வேதத்தில் கூறப்பட்ட வர்ணாசிரம கோட்பாடு அல்லவா? இதில் நீங்கள் யாரை குறை காண்பீர்கள். குறவர்களையா? டிக்கட் கொடுப்பவரையா? வேதங்களையா? அங்குள்ள சாதி தாங்க முடியாமல்தான் சில தலைமுறைகளுக்கு முன்புஇஸ்லாத்தை சுவீகரித்துக் கொண்டது தமிழகம். அதே கொள்கைகள் எந்த வழியிலும் இஸ்லாத்திலும் நுழைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை. இதற்கு நீங்கள் என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  22. கல்வெட்டு!

    //இஸ்லாமியர் பொங்கல் கொண்டாடலாம் - சுவனப்பிரியன்

    என்று ஒரு பதிவு போடப்போகிறேன். //

    அரபு நாடுகளில் அரபுகளுக்காகவே சில பிரத்யேக பழக்கங்களும் கொண்டாட்டங்களும் உள்ளது. சில குறிப்பிட்ட நாட்களில் அரபுகள் தங்களின் உறவினர்களோடும் நண்பர்களோடும் பாரம்பரிய நடன்ங்களை அரங்கேற்றுவார்கள். கைகளில் கத்தியை வைத்துக் கொண்டு அவர்களின் நடனத்தைப் பார்க்க வித்தியாசமாக இருக்கும். இது அரபுகளுக்காக உள்ள பிரத்யேக வழக்கம். இதை எந்த இஸ்லாமியரும் அரபு அல்லாதவர்கள் பின் பற்றுவதில்லை, கொண்டாடுவதும் இல்லை. இதே போல் பொங்கல் தினத்தன்று சிறந்த உணவுகளை சமைத்து விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள் போன்றவற்றை அனைத்து மதத்தவரும் கொண்டாடலாம். ஒரு மதத்தவர் மற்ற மதத்தவரை குடும்பத்தோடு விருந்துண்ண வீட்டுக்கு அழைக்கலாம். இதனால் ஒருவர் மற்றவரை புரிந்து கொண்டு மதங்களுக்கிடையேயான மனக் கசப்புகள் நீங்க வழியுள்ளது.

    ReplyDelete
  23. //இதனால் ஒருவர் மற்றவரை புரிந்து கொண்டு மதங்களுக்கிடையேயான மனக் கசப்புகள் நீங்க வழியுள்ளது.//

    மிக்க நல்லது. இதையே 'நெடுங்காலமாகச்' சொல்லி வந்துள்ளோம்; தொடருங்கள்.

    ReplyDelete
  24. இறைவனுக்கு இணைவைத்தல் இசுலாத்தில்(ஹராம்)கூடாது. தனக்கு இணையாக எதையும் வழிபடுதல் என்பது அல்லாவுக்கு மிகவும் கோபம் தரும் பாவமான செயலாகும். அதனால் தான் மாற்று தெய்வங்களுக்கு வைத்து படைக்கப்பட்ட உணவு வகைகளை உண்ணக்கூடாது என முசுலிம்களில் சிலர் கருதி வருகின்றனர். சமத்துவம் காண்போர் உண்பது குறிப்பிடத்தக்கது,பாராட்டுதற்குறியது. ந‌ம‌க்குள்ள‌ ச‌ந்தேக‌ம் என்ன‌வென்றால், ஒன்றுக்கு இணையாக‌ என‌க் க‌ருதுவ‌தே இர‌ண்டும் ச‌மமான‌து என்று பொருள். அதாவ‌து ஒரு க‌ல்லுக்கு இணையான‌வ‌ர் அல்லா எனில் இர‌ண்டிற்கும் ச‌க்தி உண்டு என்பதாக அல்லா அஞ்சுகிறாரா? இணைவைத்த‌ல் எனும் போது அல்லாவும் ம‌ற்ற‌ க‌ட‌வுள்க‌ளும் உண்டு என‌ பொருள் ஆகாதா? அல்லாவுக்கு இணையாக‌ வேறு ஒரு க‌ட‌வுள் இருந்து அதை வ‌ழிப‌டும் பொழுதுதான் அல்லா கோப‌ப்ப‌ட‌ வேண்டும்! இல்லாத‌ ஒன்றை வ‌ண‌ங்கிவ‌ழிப‌டும் பொழுது நியாய‌மாக‌ (அல்லாவைத்த‌விர‌ வேறு க‌ட‌வுள்க‌ள் இல்லை என்ப‌து உண்மை எனில்)அது அல்லாவைத்தானே சேர‌முடியும்? பிற‌கு ஏன் அல்லா அச்ச‌ப்ப‌ட‌ வேண்டும்? த‌ம்மை விஞ்சிவிட‌வும் ஒருவ‌ன் உண்டு என‌ யாருக்காக‌ அல்லா அஞ்சுகிறார்?

    ReplyDelete
  25. யாசிர்!

    //அல்லாவுக்கு இணையாக‌ வேறு ஒரு க‌ட‌வுள் இருந்து அதை வ‌ழிப‌டும் பொழுதுதான் அல்லா கோப‌ப்ப‌ட‌ வேண்டும்! இல்லாத‌ ஒன்றை வ‌ண‌ங்கிவ‌ழிப‌டும் பொழுது நியாய‌மாக‌ (அல்லாவைத்த‌விர‌ வேறு க‌ட‌வுள்க‌ள் இல்லை என்ப‌து உண்மை எனில்)அது அல்லாவைத்தானே சேர‌முடியும்? பிற‌கு ஏன் அல்லா அச்ச‌ப்ப‌ட‌ வேண்டும்? த‌ம்மை விஞ்சிவிட‌வும் ஒருவ‌ன் உண்டு என‌ யாருக்காக‌ அல்லா அஞ்சுகிறார்?//

    'உலக வாழ்வில் உங்களுக்கிடையே உள்ள நேசத்தின் காரணமாகவே இறைவனையன்றி நீங்கள் சிலைகளை ஏற்படுத்தி இருக்கிறீர்கள்.'- குர்ஆன் 29:25

    எவ்வளவு அழகாக நமது நாட்டை படம் பிடித்து காட்டுகிறது குர்ஆன். தெருவுக்கு ஒரு கடவுளும், சாதிக்கு ஒரு கடவுளும் நம் நாட்டில் எப்படி வந்தது. நமக்கு மதிப்பு மிக்க ஒருவர் இற்ந்து விட்டால் அவருக்கு மாலை போட்டு சிலைகளையும் நிறுவுகிறோம். இரண்டு தலைமுறைக்கு பிறகு அவர் கடவுளாக்கப்படுகிறார்.

    'மர்யமின் மகன் ஈசாவே(ஏசுவே)!இறைவனையன்றி என்னையும் என் தாயாரையும் கடவுளாக்கிக் கொள்ளுங்கள்! என நீர்தான் மக்களுக்குக் கூறினீரா? என்று இறைவன் மறுமையில் கேட்கும் போது 'நீ தூயவன். எனக்கு தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய்.' -குர்ஆன் 5:116

    ஏசுவும் அந்த நாளில் கை விரித்து விடுவார். இந்த உலகைப் படைத்து அதில் மனித வர்க்கத்தையும் படைத்து இந்த பூமியை நாம் வாழ்வதற்கு ஏற்றவாறு படைத்ததன் நோக்கமே நாம் அந்த இறைவனை வணங்க வேண்டும் என்பதற்க்காகவே! இவ்வளவு வசதியை நமக்காக இறைவன் ஏற்ப்படுத்தி இருக்க அதை விடுத்து சிலைகளை வணங்கினால் படைத்த இறைவனுக்கு கோபம் வருமா? வராதா? நாம் மறுமையில் நஷ்டம் அடைந்து விடக் கூடாது என்பதற்க்காகத்தான் இத்தனை வேதங்களும், இத்தனை நபிகளும். ஏக இறைவனை வணங்காது போனால் நஷ்டம் இறைவனுக்கல்ல. நமக்குத்தான்.

    அது சரி..அது என்ன யாசிர் என்ற பெயரில் ஒளிந்து கொண்டு எழுதுகிறீர்கள். :-( முஸ்லிம்களிலும் நாத்திகர்கள் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்க்காகவா!

    ReplyDelete
  26. //இத்தனை வேதங்களும், இத்தனை நபிகளும். ஏக இறைவனை வணங்காது போனால் நஷ்டம் இறைவனுக்கல்ல.//

    மிக்க சரி...ஆனால் அடுத்து சொல்கிறீர்களே ..

    //அதை விடுத்து சிலைகளை வணங்கினால் படைத்த இறைவனுக்கு கோபம் வருமா? வராதா?//

    ஏன் வரணும்? இதுதான் ஒரு லாஜிக்கிலும் (என்னைப் போன்ற ஆட்களுக்கு) ஒத்து வருவதில்லை. இது மானிட நீதியை விட மோசமாகத் தோன்றுகிறது. கடவுள் படைக்கிறார். அதற்குப் பிறகு என்னை மட்டும் வணங்கு என்கிறார். (சரியான சுயநலம்!) அப்படியில்லாவிட்டால் கோபம்!! அவரை அறியாதவர் எத்தனை கோடி? இந்த காபிர்களுக்கு நரகம்... என்ன கதையோ. முன்பே சொன்னது போல் 'கண்விழித்துப் பார்த்தால்' மட்டுமே உண்மைகள் தெரியும். லாஜிக் ஏதுமில்லா கற்பனைகள்; கடவுளையும் ஒரு மனித உருவில் கண்டுகொள்வதும் வேடிக்கைதான்!

    ReplyDelete
  27. //சிலைகளை வணங்கினால் படைத்த இறைவனுக்கு கோபம் வருமா?வராதா?//

    ஆம்! ஏன் வரனும்? ஏன் வணங்க வேண்டும்? படைத்ததால் வணங்கித்தான் ஆக வேண்டும் என்றால் அவரவர்களின் பெற்றோர்களைத்தான் வணங்க வேண்டும். அவர்களே கூட நம்மை வணங்க நிர்பந்திக்காத போது,படைத்ததாகச் சொல்லிக் கொள்ளும் கற்பனைகளை ஏன் வணங்க வேண்டும்? வணங்கியே ஆக வேண்டும் என அடம்பிடித்தால் முதல் மனிதனை (நேரடியாக) நான் தான் படைத்தேன் என கப்சா விட்ட கற்பனை கடவுளை,அந்த ஆதாம்+ஏவாள் என்கிற கற்பனைதான் வணங்கவேண்டுமே தவிர நாங்கள் வணங்கவேண்டிய அவசியமில்லை.

    //அது என்ன யாசிர் என்ற//

    எல்லோரும் இதில் கவணமாக இருக்கிறார்கள். பெயரில் என்ன இருக்கிறது நண்பரே! ஸ்டாலின் என பெயர் உள்ளவர்கள் எல்லாம் கம்யூனிசவாதிகளா?இராமசாமி என்ற பெயரில் நாத்திகர்கள் இல்லையா? முஸ்லிம்களில் நாத்திகர்கள் இல்லை என்பது உங்கள் நம்பிக்கையா? உலக மொழிகளில் அரபுமொழியும் ஒன்று, உலக முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் பெயர்களை அரபி எழுத்துக்களிலா பதிவு செய்துள்ளார்கள்? ஆங்கில எழுத்தை உபயோகப்படுத்தும் முஸ்லிம்கள் ஆங்கிலேயர்களாகிவிடுவார்களா? வீட்டு விலங்கினங்களுக்குக் கூட மனிதனுக்கு வைக்கும் பெயர்களை வைப்பது உண்டு அதற்காக நாம் மாற்றி சிந்திப்பதில்லை,எனவே கொண்டிருக்கும் கொள்கைக்கு பெயர் ஒரு பொருட்டல்ல நண்பரே!

    ReplyDelete
  28. //என்னை மட்டும் வணங்கு என்கிறார். (சரியான சுயநலம்!) அப்படியில்லாவிட்டால் கோபம்!!//

    51:56. இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.

    மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும்,உயிரற்றவைகளும் வணங்குகின்றனர்.

    22:18. வானங்களிலுள்ளவர்களும், பூமியிலுள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும், மனிதர்களில் பெரும்பாலானவர்களும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்(து வணங்கு)கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? இன்னும் அநேகர் மீது வேதனை விதிக்கப்பட்டு விட்டது; அன்றியும், எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகின்றானோ அவனை கண்ணியப்படுத்துபவன் எவனுமில்லை; நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான்.

    ‍‍‍‍‍‍‍_________

    சூரியன்,சந்திரன்,பிராணிகள் வணங்குவதை நான் பார்த்தது இல்லை.நீங்கள் யாராவது பார்த்தது உண்டா?

    ReplyDelete
  29. //சிலைகளை வணங்கினால் படைத்த இறைவனுக்கு கோபம் வருமா?வராதா?//

    ஆம்! ஏன் வரவேண்டும்?மற்றும் ஏன் வணங்க வேண்டும்? நம்மை படைத்ததால் வணங்க வேண்டும் எனில் அவரவர்களின் பெற்றோர்களைத்தான் வணங்க வேண்டும். அவர்களே கூட நம்மை வணங்கச் சொல்லாத போது, படைத்ததாகச் சொல்லப்படும் கற்பனைகளை எதற்காக வணங்க வேண்டும்? வணங்குவது அவரவர்களின் கடமை எனில்,முதல் மனிதனை நான் தான் நேரடியாக படைத்ததாகக் கூறும் ஒரு கற்பனையை ஆதாம்+ஏவாள் என்கிற கற்பனைகள் தான் வணங்க வேண்டுமே தவிர மற்றவர்கள் வணங்க வேண்டிய அவசியமில்லை அன்பரே!

    ReplyDelete
  30. //நாம் அந்த இறைவனை வணங்க வேண்டும் என்பதற்க்காகவே! இவ்வளவு வசதியை நமக்காக இறைவன் ஏற்ப்படுத்தி இருக்க அதை விடுத்து சிலைகளை வணங்கினால் படைத்த இறைவனுக்கு கோபம் வருமா? வராதா? //

    சுவனப்பிரியன்

    நீங்கள் நான் சொல்வதைப் புரிந்து கொள்ள மாட்டீர்கள் / புரிந்து கொள்ள மறுப்பீர்கள் என்று தெளிவாகத் தெரிந்தும் ஓரிரு வார்த்தைகள் ...

    கடவுள் என்பது உண்மையானால், “அது” எல்லாவற்றையும் கடந்திருக்க வேண்டும். தான் ஒன்றைப் படைத்து, ”அது” தன்னை, தன்னை மட்டுமே வணங்க வேண்டும் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். என்ன இப்படி ஒரு “தேவை” அந்தக் கடவுளுக்கு?
    தன்னை வணங்க படைத்தவைகள் இன்னொரு “கடவுளை” வணங்கினால் கெட்ட மனுஷனுக்கு வரும் கோபம் அதற்கும்! கடவுள் என்பது இவ்வளவு கீழ்த்தரமான வஸ்துவாகவா இருக்கும்?

    இரக்கமான கடவுள் என்கிறீர்கள். நீங்கள் சொல்லும் கடவுளின் “ஆதங்கத்திலும், கோபத்திலும், நரகத்திலும் சுவனத்திலும் எங்கேங்க இருக்கு நீங்க சொல்ற இரக்கம்.

    இதையெல்லாம் யோசிக்கும்போது முன்பே சொன்ன “லாஜிக்” ஏதுமில்லை என்பது மிகச்சாதாரணமாகத் தெரிகிறதே!

    //இவ்வளவு வசதியை நமக்காக இறைவன் ஏற்ப்படுத்தி..// உங்க இறைவன் “வசதிகள்” மட்டும்தானா கொடுத்தார். ஒரு வேளை கஷ்டங்கள் எல்லாம் ஷைத்தான் கொடுத்ததுன்னு சொல்லிடுவீங்களோ?

    ReplyDelete
  31. யாசிர்!

    //சிலைகளை வணங்கினால் படைத்த இறைவனுக்கு கோபம் வருமா?வராதா?//-Suvanappiriyan

    //ஆம்! ஏன் வரவேண்டும்?மற்றும் ஏன் வணங்க வேண்டும்? நம்மை படைத்ததால் வணங்க வேண்டும் எனில் அவரவர்களின் பெற்றோர்களைத்தான் வணங்க வேண்டும்.//

    தற்போது வணங்கப்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து சிலைகளும் இந்து மதத்தில் கூறப்படாதவைகள். அதேதான் கிறித்தவ மதத்திலும். அதர்வண வேதம்,சாம, யஜீர் வேதங்களின் மொழி பெயர்ப்புகளை படித்துப் பாருங்கள். உண்மை விளங்கும்.

    அடுத்து பெற்றோருக்கு மரியாதை செய்யலாம் நன்றி செலுத்தலாம். வணக்கம் இறைவனுக்குத்தான் இருக்க வேண்டும்.

    'இறைவனாகிய எனக்கும் உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு'- குர்ஆன் 31:14

    ReplyDelete
  32. சார்வாகன்!
    //சூரியன்,சந்திரன்,பிராணிகள் வணங்குவதை நான் பார்த்தது இல்லை.நீங்கள் யாராவது பார்த்தது உண்டா?//

    மனிதர்களாகிய நாம் கூட உயிரற்ற பொருட்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்கிறோம். உதாரணத்திற்க்கு விண்ணில் ஏவும் ராக்கெட்டுகளை நாம் எடுத்துக் கொள்வோம். அது எந்த கோளில் இறங்க வேண்டும், என்ன என்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்பதை நாம் பூமியில் இருந்தே கட்டளைகளை ஏவுகிறோம். அவைகளும் நம் கட்டளைகளை திறம்பட செயல்படுத்துகிறது. இது எப்படி சாத்தியமாகிறது? அந்த இயந்திரத்துக்கு புரியும் வகையில் மின் அணு மொழியில் நாம் பேசுவதால் அவை நமது கட்டளைகளை செயல்படுத்துகின்றன. அது போல் ஒவ்வொரு படைப்புக்கும்அதன் மொழியில் நீங்கள் பேசினால் கண்டிப்பாக உங்களுக்கும் விளங்கும். அந்த மொழி உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அனைத்தையும் படைத்த இறைவனுக்கு தெரியுமல்லவா?

    'மனிதர்களாகிய நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்' -குர்ஆன் 17:85

    ReplyDelete
  33. தருமி!

    //, ”அது” தன்னை, தன்னை மட்டுமே வணங்க வேண்டும் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். என்ன இப்படி ஒரு “தேவை” அந்தக் கடவுளுக்கு?//

    'நீங்களும், பூமியில் உள்ள அனைவரும் ஏக இறைவனை மறுத்தால் இறைவன் தேவையற்றவன்: புகழுக்குரியவன்' என்று மோஸே கூறினார்.' -குர்ஆன் 14:8

    இறைவனுக்கு நாம் பணிய மறுத்தால் அதனால் அந்த இறைவனுக்கு எந்த இழப்பும் இல்லை. ஏனெனில் அவன் தேவையற்றவன்.

    //தன்னை வணங்க படைத்தவைகள் இன்னொரு “கடவுளை” வணங்கினால் கெட்ட மனுஷனுக்கு வரும் கோபம் அதற்கும்!//

    'எதையும் படைக்காதவற்றையா அவர்கள் இறைவனுக்கு இணை கற்ப்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர்' -குர்ஆன் 7:191

    ஒரு சிலை மனிதர்களாலேயே படைக்கப்பட்டு அந்த சிலையையே கடவுளாக வணங்குவதை ஏற்க உங்கள் அறிவு ஒத்துக் கொள்கிறதா? இந்து மதத்தில் உள்ள எந்த சிலைகளும் தங்களை வணங்கும்படி சொல்லவில்லை. இந்து மத வேதங்களிலும் சிலைகளை வணங்கச் சொல்லி எங்கும் சொல்லப்படவில்லை. இந்து மத வேதங்களில் இருந்து இதற்கு ஆதாரமும் என்னால் தர முடியும். கிறித்தவத்திலும் தன்னை வணங்கும்படி ஏசு எங்குமே சொல்லவில்லை.

    எனவே அவைகள் கடவுள்கள் அல்ல. மனிதர்களால் உண்டாக்கப்பட்ட கற்பனைப் பாத்திரங்கள். அதை இந்த வசனங்களின் மூலம் இறைவன் மனிதர்களுக்கு உணர்த்துகிறான்.

    //“ஆதங்கத்திலும், கோபத்திலும், நரகத்திலும் சுவனத்திலும் எங்கேங்க இருக்கு நீங்க சொல்ற இரக்கம்.//

    'உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக தீமையைச் செய்து விட்டு, அதன் பின்னர் மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டால் அவன் மன்னிப்பவன்: நிகரற்ற அன்புடையோன்'-குர்ஆன் 6:54

    எனவே தவறு செய்த மனிதர்கள் திருந்தி மன்னிப்புக் கேட்டால் இறைவன் அவர்களை மன்னித்து தனது அன்பை அவர்கள் மேல் செலுத்துகிறான். மனிதர்கள் நேர்வழி பெற வேண்டும் அனைவரும் சொர்க்கத்தை அடைய வேண்டும் என்பதுதான் இறைவனின் விருப்பமும். அதற்க்குத்தான் இத்தனை வேதங்களும்: இத்தனை தூதர்களும். இத்தனை விவாதங்களும்:

    ReplyDelete
  34. //இறைவனுக்கு நாம் பணிய மறுத்தால் அதனால் அந்த இறைவனுக்கு எந்த இழப்பும் இல்லை. ஏனெனில் அவன் தேவையற்றவன்.//

    பிறகு ஏனய்யா கடவுளுக்கு இப்படி ஒரு வன்மையான கோபம்? நரகம், ஊழியில்லா காலத்திற்கு அதில் தண்டனை, அதுவும் வித விதமாய்!

    சிலை வணக்கத்திற்கும் எனக்கும் என் கேள்விக்கும் என்ன தொடர்பு? அதை இங்கே நீங்கள் என்னிடம் எதற்குப் பேச வேண்டும்?

    //மனிதர்கள் நேர்வழி பெற வேண்டும் அனைவரும் சொர்க்கத்தை அடைய வேண்டும் என்பதுதான் இறைவனின் விருப்பமும். //

    ரொம்ப சிம்பிள்! அல்லா இதை ஈசியா செஞ்சிருக்கலாம். எல்லாமே அவர்தானே. மனுசப் பய தப்பே பண்ணாம வச்சிருக்கலாம்! அதை உட்டுட்டாரு; அதைவிட ஷைத்தான் ஒண்ணைப் படைச்சி நம்மள ரொம்ப படுத்துறாரு.

    சுவனப்பிரியன்.
    நான் உங்களிடம் கேள்வி கேட்கிறேன். பதில் இருந்தால் கொடுங்கள். குரானிலிருந்து மேற்கோள் யாருக்கு கொடுக்கணும் - அதில் நம்பிக்கையுள்ளவருக்கு மட்டும். எனக்கு இந்த மேற்கோள்களால் என்ன பயன் சொல்லுங்கள்? ஈமான் உள்ளவர்களிடம் மேற்கோளோடு போங்கள். எனக்கு சுவனப்பிரியனின் பதில் போதும்! குரானை நம்பாதவனிடம் போய் ... (கழுதை, கரும்பு ருசி...இதெல்லாம் வேண்டுமானால் மனசுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள்! கொல்லன் ஆலையில் ஈக்கு என்ன வேலை அப்டின்னு நான் சொல்லிக்கிறேன்!)

    ReplyDelete
  35. //மனிதர்களாகிய நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்' -குர்ஆன் 17:85//

    பயங்கர புத்திசாலித்தனம்!

    ReplyDelete
  36. பிற கடவுள்கள் தன்னை வணங்க சொல்லவில்லை.

    குரானின் கடவுள் தன்னை வணங்க சொல்கிறார்.அதனால் வணங்க வேண்டும்.

    ஆகவே இந்த விதியின்படி குரானில் சொல்லாத விஷயம் வேறு புத்தகத்தில் சொல்லி இருந்தாலும் பின் பற்ற வேண்டும்.
    ________________

    விலங்குகளும் உயிரற்ரவைகளும் குரானின் கடவுளை வணங்குகின்றது என்பதை பார்க்க முடியுமா?என்ற கேள்விக்கு இவ்வசனத்தின் ஒரு பகுதியை பதிலாக அளித்தீர்கள்.

    //17:85. (நபியே!) “உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “ரூஹு” என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது; இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக.//

    முகமதுவிடம் அக்கால மெக்கா மனிதர்கள் ஆத்மா பற்றி கேட்ட போது கூறிய பதில்தான் ஆத்மா பற்றிய ஞானம் உங்களுக்கு குறைவாக அளிக்கப் பட்டது என்பது.

    விலங்குகள் குரானின் கடவுளை வணங்குவதை பார்க்க ம்டியாது என்றால் சொல்ல வேண்டியது இல்லை.அதாவது குரானில் அத்தாட்சி என்று கூறப்படுவது ஒன்றையுமே இப்போது பார்க்க,உணர முடியாது.

    குரானில் ஆத்மா பற்றிய விவரங்கள் குறைவாக இருப்பதால் ஆத்ம ஞானத்தை பிற (மத)புத்தகங்களில் தேடி இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்.

    ________

    ஆபிரஹாமிய மதங்கள் உடலும் அழிவில்லாதது மறுமை நாளில் உடலும் உயிர்பிக்கப் படுகிறது என்ற கருத்தை கொண்டிருக்கின்ற்ன.
    __________

    ReplyDelete
  37. //உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை”//

    கல்வி, ஆத்ம ஞானம் - எல்லாவற்றையும் அளந்து அளந்து அல்லா ரொம்ப குறையாகவே கொடுத்துள்ளாரே .... ஏன்?

    ReplyDelete
  38. //ஒரு சிலை மனிதர்களாலேயே படைக்கப்பட்டு அந்த சிலையையே கடவுளாக வணங்குவதை ஏற்க உங்கள் அறிவு ஒத்துக் கொள்கிறதா?//

    குரான் என்ற புத்தகம் மட்டுமே அல்லா கடவுள் என்று கூறுகிறது.குரான் இறை வெளிப்பாடா இல்லையா என்பது முகமதுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்.

    சிலை செய்பவ்ருக்கு கூட இறை வெளிப்பாடு இருந்ததா இல்லையா என்பதும் அவருக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்.புத்தகம் இறைவனின் தன்மைகளை கூறினால்,சிலை இறைவனை முப்பரிமாணத்தில் விளக்குகிறது.

    புத்தகம் சிலை இரண்டுக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை.

    ReplyDelete