Saturday, August 20, 2011

525. ஸ்விஸ் -- கணக்கு வழக்கு .... சரியா ... தப்பா????



*
எனக்கொரு மயில் வந்தது.. அதில் கண்டவைகளை இங்கே பதிவிடுகிறேன்.
உண்மையா பொய்யா ... ஏன் இன்னும் பலரின் பெயர்களைக் காணோம் என்பதெல்லாம் தெரியாது. விளக்கத்திற்காக சிலரின் பெயர்களை மட்டும் கீழே தந்துள்ளேன்.
 அ
I checked in Wikileaks site. Seems Someone has done it for fun. - இப்படி சொல்கிறார் teabench. அதனால் ... எல்லாவற்றையும் இப்போதைக்கு எடுத்து விடுகிறேன்.











 பெயர்கள்                                        amount 
                                                  in Indian Rupee (in Crores)

ஸ்டாலின்               .....               10500
ஏ.ராஜா                     .......               7800
S.S.பழனி மாணிக்கம்               4800
கலாநிதி மாறன்   ....               15000
கருணாநிதி            .....              34500
P. சிதம்பரம்           .....                32000


Neera Radiya                .....              289990
Rajeev Gandhi               ......            198000
kalmadi                       ....                    5900
H.D. Kumaraswamy        ....             14500
Lalu                             .......              29800
                           .......              29800

*
All,
FYEO

Ravi


Anna way is becoming a Runaway success.....!!
f all the scam and black money is accumulated, we can negotiate to bail out US and own a few states for ourselves!
I am gaining confidence that the next generation will be less corrupt

 
 
 
cid:image001.jpg@01CC45F9.FE0ED560
Summary of All scams of India : Rs. 910603234300000/-

FunFunky.com
  See how Lokpal Bill can curb the politicians, Circulate it to create awareness
     Existing System
System Proposed by civil society
No politician or senior officer ever goes to jail despite huge evidence because Anti Corruption Branch (ACB) and CBI directly come under the government. Before starting investigation or prosecution in any case, they have to take permission from the same bosses, against whom the case has to be investigated.
Lokpal at centre and Lokayukta at state level will be independent bodies. ACB and CBI will be merged into these bodies. They will have power to initiate investigations and prosecution against any officer or politician without needing anyone’s permission. Investigation should be completed within 1 year and trial to get over in next 1 year. Within two years, the corrupt should go to jail.
No corrupt officer is dismissed from the job because Central Vigilance Commission, which is supposed to dismiss corrupt officers, is only an advisory body. Whenever it advises government to dismiss any senior corrupt officer, its advice is never implemented.
Lokpal and Lokayukta will have complete powers to order dismissal of a corrupt officer. CVC and all departmental vigilance will be merged into Lokpal and state vigilance will be merged into Lokayukta.
No action is taken against corrupt judges because permission is required from the Chief Justice of India to even register an FIR against corrupt judges.
Lokpal & Lokayukta shall have powers to investigate and prosecute any judge without needing anyone’s permission.
Nowhere to go - People expose corruption but no action is taken on their complaints.
Lokpal & Lokayukta will have to enquire into and hear every complaint.
There is so much corruption within CBI and vigilance departments. Their functioning is so secret that it encourages corruption within these agencies.  
All investigations in Lokpal & Lokayukta shall be transparent. After completion of investigation, all case records shall be open to public.  Complaint against any staff of Lokpal & Lokayukta shall be enquired and punishment announced within two months.
Weak and corrupt people are appointed as heads of anti-corruption agencies.
Politicians will have absolutely no say in selections of Chairperson and members of Lokpal & Lokayukta. Selections will take place through a transparent and public participatory process.
Citizens face harassment in government offices. Sometimes they are forced to pay bribes. One can only complaint to senior officers. No action is taken on complaints because senior officers also get their cut.
Lokpal & Lokayukta will get public grievances resolved in time bound manner, impose a penalty of Rs 250 per day of delay to be deducted from the salary of guilty officer and award that amount as compensation to the aggrieved citizen.
Nothing in law to recover ill gotten wealth. A corrupt person can come out of jail and enjoy that money.
Loss caused to the government due to corruption will be recovered from all accused.
Small punishment for corruption- Punishment for corruption is minimum 6 months and maximum 7 years.
Enhanced punishment - The punishment would be minimum 5 years and maximum of life imprisonment.
Dear All,   Please go through the details carefully & try to be part of this mission against corruption

Thursday, August 18, 2011

524. அன்னா ஹசாரே ... மதுரையில் சின்ன முயற்சி



*

எங்களூரில் "நம் நாடு’ என்றொரு புதிய அமைப்பொன்று சமீப காலங்களில் ஊழலுக்கு எதிரான சில போராட்டங்களை மேற்கொண்டு, அவைகளில் வெற்றியும் பெற்றுள்ளனர். இவ்வமைப்பு அன்னா ஹசாரேயின் போராட்டத்திற்கு தங்களின் ஆதரவை வெளிப்படுத்த முனைந்துள்ளனர். இதற்காக இன்றிலிருந்து (18.08.’11) ஐந்து நாட்களுக்கு மதுரை அண்ணா பேருந்து நிலையத்திற்கருகில் உள்ள ஐயன் திருவள்ளுவர் சிலைக்கு முன்பு மாலை 6 - 7 வரை மெழுகுவர்த்தியுடன் லோக்பால் தொடர்பான முழக்கங்கள் எழுப்பி, தங்கள் முனைப்பைக் காட்டி வர திட்டமிட்டுள்ளனர்.

இன்று மாலை நான் சென்ற போது வெறும் 50 பேர் மட்டுமே இருந்தனர். ஆனால் கூட்டம் முடியும் போது 200 பேர் இருந்திருப்போம். இதில் ஏறத்தாழ 70லிருந்து 100 பேர் வரை வட இந்திய நண்பர்கள் இருந்தார்கள் - சில பெண்களையும் சேர்த்து. இவர்களில் இளைஞர்களே அதிகம்.

25 ஆண்டுகளுக்கு முன் இரு சர்தார்ஜிகளோடு ஓரிரு நாட்கள் சேர்ந்திருக்கும் காலத்தில் அவர்கள் சொன்னது இன்று நினைவுக்கு வந்தது. உண்மையான சுதந்திரப் போராட்டத்தின் வன்மையான பொழுதுகள் வட இந்தியாவிலேயே அதிகமாக இருந்தன. அதோடு வரலாற்றிலும் நெடுக அயல் நாட்டுப் படையெடுப்புகளும் வட இந்தியாவிலேயே அதிகம். அதோடு அந்த இரு சர்தார்ஜிகள் அப்போது நடந்து முடிந்திருந்த இந்தியா - பாக். யுத்தம் ஒன்றில் - கார்கில் யுத்தத்திற்கு முந்திய போர் - அவர்கள் கிராமங்களுக்கு சற்றே வெளியே பாக். விமானம் ஒன்று நம் குண்டுகளால் சேதமடைந்து வயல் வெளிகளில் விழுந்தது. சிறிது முன்பே விழுந்திருந்தால் எங்கள் கிராமத்தில் பாதி இறையாகிப் போயிருக்கும் என்றார்கள். அந்த விமானத்தின் சில பகுதிகளை எங்கள் வீட்டுப் பூசை அறையில் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறோம் என்றார்கள். இப்படி போராட்டங்களோடு வாழ்ந்ததாலேயே எங்களிடம் போர்க்குணம் அதிகம். இந்தியப் படை வீரர்களில் நாங்களே அதிகம் என்றார்கள்.

நம் தமிழ்நாட்டின் நிலை என்னவென்று எனக்குத் தெரியும். இத்தனை பெரிய ஊரில் வெறும் 200 பேர் மட்டும்தானா என்றொரு கேள்வியும் வந்தது. அதுவும் வந்ததில் ஏறத்தாழ பாதிக்கும் மேல் வட இந்தியர். எழுந்த கோஷங்களில் பாதி அவர்களது மொழியில். தாய்நாட்டுக் கொடி பிடித்து தமிழிலும், இந்தியிலும் கோஷம் எழுப்பியது எனக்கு மிகவும் புதியது. வெறும் மெழுகுவர்த்தி ஏற்றி கோஷம் போட்டது நம் பதிவர்களில் சிலருக்குப் பிடிக்காத ஒன்றாக, தேவையற்ற ஒன்றாக இருக்கலாம். ஆனால் எனக்கு மிக்க மகிழ்ச்சி. பாரதி சொன்ன வரிகள் நினைவுக்கு வந்தன:

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு.

ஒரு சின்ன ஆரம்பம். அக்கினிக் குஞ்சு பலுகிப் பெருக ஆவல்.

மதுரைக்கார பதிவர்களை இக்கூட்டங்களுக்கு அழைக்கின்றேன். 
இன்னும் மீதியிருக்கும் நான்கு நாட்களில் நாமும் இணைவோமா?

*
-----------------------------------------
http://timesofindia.indiatimes.com/city/madurai/Candlelight-demonstration-against-govts-Lokpal-bill/articleshow/9679768.cms


MADURAI: Slogans for a corruption-free India resonated in the streets of Madurai as a group of men and women gathered to stage a candlelight protest against the Centre and its proposed Lokpal Bill.

Men and women from various walks of life joined the protestors across the country in demanding Jan Lok Pal, at Anna Bus Stand in the city. The protestors, young and old, who gathered under the aegis of "India Against Corruption," lit candles and raised slogans for making the country corruption free. In fact, many of the passersby also joined the agitators in raising slogans against corruption and demanded that the Lokpal bill be strengthened.

They also showered praises on anti-corruption crusader Anna Hazare and demanded the government to accede to the demands of the fasting activist. Students from Madurai Medical College, American College, Madurai Kamaraj University and MIET college also joined the protestors.

The protestors have planned to stage a similar candle light protest at Gandhi Museum on Sunday. "We expect more people to participate in the protest on Sunday. In fact, wherever we go, people are eager to participate and express their solidarity with Anna Hazare," said Anupam Khandelwal, a native of Indore in Madhya Pradesh pursing final year MBBS in Madurai Medical College.

He said that they are planning to mobilise more students and spread the protest across the region. The protestors have also planned to take out a rally in the city next week.



Saturday, August 13, 2011

523. மோட்சம் பார்க்கலாம் ... வாங்க .. வாங்க ..

*

நரேன் பதிவு ஒன்றில் தான் கீழே வரும் அதிசயப் படங்களைப் பார்த்தேன்.  அவரது அப்பதிவில்  வாசிக்க வேண்டியது  நிறைய இருக்கிறது. வாசித்துக் கொள்ளுங்கள். படங்கள் மட்டும் உங்களுக்குக் காண்பிக்க  இங்கே மறுபதிவு செய்கிறேன். காண வேண்டிய காட்சியை எல்லோரும் பார்க்க வேண்டாமா?

***

நான் போட்டிருந்த காணொளிகள் காணாமல் போய் விட்டன. ஆனால் youtubeக்கு சென்று dinakaran on visiting  heaven என்று கேட்டால் அள்ளித் தருகின்றன நிறைய காணொளிகளை. அங்கே சென்று அவைகளை அள்ளிப் பருகலாம்!

https://youtu.be/m-WUBu4iDiY


https://youtu.be/m-WUBu4iDiY


சில directorial mistakes in Dinak's MOVIE !

*** இலக்கணப் பிழைகளை விட்டு விடுவோம்.

*** ரெண்டு apostles பார்த்ததாகச் சொல்கிறார். ஒருவர் பீட்டர்; இரண்டாவது பால். ஆக பால் ஒரு apostle என்கிறார். இது சரியா?

*** பரிசுத்த ஆவியைப் பற்றிய விளக்கம் ஏதுமில்லாமல் வெறும் sound effect மட்டும் கொடுத்திருக்கிறாரே :( அவரை இப்படி உதாசீனம் செய்கிறாரே தினக்!

*** முதல் MOVIE ஒரு நாளிலும் அதற்கு அடுத்த நாள் இரண்டாவது MOVIE  எடுத்திருப்பதாகச்  சொல்கிறார்கள். ஆனால் முந்தின நாள் போட்ட அதே சட்டை, கோட், டை என்று ‘அழுக்காக’ ஏன் உட்காரணும்? Asst. Director அடுத்த costume கொடுக்காமல் விட்டாரே ... A bad continuity. So sad.

***



கிறித்துவ வரலாற்றில் எத்தனையோ புனிதர்கள் - Saints - உண்மையிலேயே மிகவும் நல்ல மனிதர்கள், அவர்களும் கூட இப்படி மோட்சம் போய் வந்தேன்; நரகம் போய் வந்தேன் என்று இதுவரை ‘கதை விடுவதில்லையே’ ...  இவருக்கு மட்டும் எப்படி இம்புட்டு தைரியம்??!!

தினக் இன்றும் மோட்சம் போய் வந்ததாக மக்கள் நம்புகிறார்கள்.
முகமது அன்று சுவனம் போய் வந்ததாக மக்கள் நம்புகிறார்கள்.

நல்ல நம்பிக்கைகள் ......... வேறென்ன சொல்ல நம்புபவர்களை!
நான் சொல்லவில்லை. Doris Egan என்பவர் சொல்கிறார்: “You talk to God, you're religious. God talks to you, you're psychotic.”
***





great BGM.

நல்ல make-up!! Kudos to the make up man.

ஆயிரக்கணக்கில் மோட்சம் பார்க்க போயிருக்காங்க ... you tube சொல்லுது. ஆனால் நரகத்தைப் பார்க்க வெறும் எட்டாயிரம் சில்லறை! sad ... அங்கேயும் போய்ட்டு ‘திரும்பி’ வாங்க ...

வேற வேற டிபார்ட்மென்ட் நரகத்தில் பார்க்கலாமே ...

***
தினக், ஜாஹீர் நாயக் போன்றோரை ஒரு விஷயத்திற்கு மிகவும் பாராட்ட வேண்டும். என்ன நினைவாற்றல் ... கண்ணை மூடித்திறந்தால் நாலு மேற்கோள்கள் .. அத்தியாயம், வசனம் எல்லாம் எண்களோடு .. பிரம்மாதம்.

தினக்  I love everybody என்கிறார். ஆனால் காருண்யாவில் அடிமிஷன் கேட்பவர்களிடம் அப்படி எதையும் காண்பித்ததில்லை என்பார்களே!

தினக் பயங்கர மூடில் இருக்கிறார்; நிறைய “ஜோக்குகள்” ....

***


522. FORBIDDEN FRUITS ARE SWEETER !

*

சமச்சீர் நூல்களின் சில பகுதிகளை ஆசிரியர்கள் ‘அழிக்கும்’ முயற்சியில் அரசாங்க ஆணையால் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். Forbidden fruits are sweeter என்பார்கள். மறைத்தவைகளைப் பார்க்க மாணவர்களுகு நிச்சயம் ஆசை வரும். கறுப்பெழுத்தில் மறைந்த எழுத்துக்களை விளக்கின் ஒளிக்கு எதிர் வைத்துப் பார்த்தால் அந்த மறைந்த எழுத்துக்களைப் படிக்க முடியுமா? ஸ்டிக்கர் ஒட்டி மறைத்த படங்களை அந்த ஸ்டிக்கரைக் கிழித்தால் பார்க்கலாமா? இப்படிப் பல கேள்விகள் கட்டாயம் மாணவர்களுக்கு வரும். அதோடு ஆசிரியர்கள் ‘அழிக்கும்’ முயற்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்ததும் பழைய நினைவு ஒன்று வந்தது.

1963; தமிழ் வளர்த்த மதுரை தியாகராஜர் கல்லூரியில் இரண்டாமாண்டு இளவியல். தமிழ் வகுப்பு. பெரிய புராணத்தில் பாணினியின் அழகு பற்றிய பாடல் ஒன்று வரும். பாணினியை ‘பாதாதி கேசம்’ வரை வர்ணித்திருப்பார் ஆசிரியர். நடுவில் ஒரு வரி விடப்பட்டு, அதற்குப் பதில் அந்த வரியில் சில புள்ளிகள் மட்டுமே இருக்கும்.

எங்கள் தமிழ்ப்பேராசிரியர் பேரா. சங்கர நாராயணன். செய்யுள் வரிகளை நடத்துவதில் விற்பன்னர். பிடித்த சில ஆசிரியர்களில் அவரும் ஒருவர். கனமான குரல்; சிதம்பரம் ஜெயராமனின் குரலை இன்னும் கொஞ்சம் மெல்லியதாக்கினால் வருமே .. அப்படி ஒரு நல்ல குரல். செய்யுள்களை மிக அழகாகப் பாடி, இசைக்குறிப்பும் கொடுப்பார் - என்ன ராகம் .. தாளம் என்று. அதன்பின் அதே ராகத்தில் உள்ள சினிமாப் பாடலொன்றின் சில வரிகள். பின் செய்யுளை தளை நீக்கி தெளிவாக அவர் சொல்லும்போதே பாதிப் பாடல் புரிந்து விடும்.  நூலில் விட்டுப்போன வரியைப் பார்த்து, ‘நீங்கள் கெட்டுப் போய் விடுவீர்கள் என்ற அச்சத்தில் அந்த வரிகளை விட்டு விட்டார்கள் போலும். இதனாலெல்லாம் நீங்கள் கெட்டு விடுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லை; ஆகவே அந்த வரிகளை எழுதிக் கொள்ளுங்கள்’ என்று அவர் அந்த வரிகளைத் தந்தார்.

”ஈர்க்கிடை புகா ஏறிள வனமுலை”

எல்லா வரிகளும் மறந்து விட்டன; ஆனால் இந்த வரி மட்டும் ‘இன்னும்’ மறக்கவில்லை.

Forbidden fruits are sweeter!


*

Tuesday, August 09, 2011

521. புதுச் சிற்றிதழ் ஒன்றின் ஆரம்பம்.




*
வலசை என்றால் இடப்பெயர்ச்சி / migration என்று பொருளாம்.

இத்தலைப்பில் சிற்றிதழ் ஒன்றை  நம் பதிவ நண்பர்கள் நேசமித்திரன், கா.பா. இருவரும் இணைந்து கொண்டு வருகிறார்கள் என்ற தகவல் வந்தது. சில படங்களும் வந்துள்ளன.

மிக்க மகிழ்ச்சி. முதல் வாசகர்கள் இருவருக்கும் என் வாழ்த்துகள்.

விரைவில் வரவிருக்கும் இச்சிற்றிதழ் தன் தனி முத்திரையுடன் சிறக்க வெளிவந்து, தொடர் வெற்றிகளை ஈர்க்க வேண்டுமென விழைகிறேன்.

நண்பர்களின் இலக்கிய ஆர்வத்திற்கு என் வாழ்த்து.

***
சந்தா செலுத்த வேண்டியதில்லை.ஆஹா ...! (அதற்காக எங்களிடமிருந்து ‘அடித்தா’  பிடுங்க முடியும்!!??)

***

Monday, August 08, 2011

520. THE HINDU


*
ஆகஸ்ட் 7, 2011 இந்துவின் முதல் பக்கத்தில் ஒரு (விளம்பர) செய்தி. தமிழ்நாட்டு சட்டசபைக்காகக் கட்டப்பட்டு ‘கிடப்பில் போடப்பட்டிருக்கும்’ கட்டிடத்தைப் பயனுள்ளதாக்குவது எப்படி என்று இந்து ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது. வாசகர்களிடமிருந்து வரும் நல்ல முதல் மூன்று தேர்வுகளை அரசுக்குத் தேர்ந்தெடுத்து அனுப்புவதாக இந்து அறிவித்துள்ளது.

கட்டிய கட்டிடத்தை கட்டிய காரணத்திற்காகப் பயன்படுத்துவதே சிறந்தது. அந்தக் கட்டிடத்தின் ‘டிசைன்’ ஒன்றும் நன்றாக இல்லை. ஆனால் பாலையில் சிந்திய பாலுக்காக அழுவதில் அர்த்தமில்லை; காசு கன்னா பின்னா என்று செலவு செய்திருக்கிறார்கள்; அவர்கள் மீது வழக்குப் போட்டு தண்டிக்கலாம்; அதில் தப்பேயில்லை.

ஆனால் கட்டியவர்கள் மேலுள்ள கோபத்தைக் கட்டிடத்தில் காட்டுவது மகா சிறுபிள்ளைத் தனம். அதுவும் இப்போதைய முதலமைச்சர் தன் பழைய ஆட்சியில் கட்ட நினைத்த இடத்தில் கட்ட முடியாதுபோக, அடுத்த அரசு வேறு இடத்தில் முழுசாகக் கட்டியதில் வரும் சோகம் இது.  முதலமைச்சரின் இந்தத் தனிப்பட்ட சோகத்திற்கு நாமெங்கே போவது?

அதுவும் இந்து 3 கடிதங்களைத் தேர்வு செய்து அரசுக்கு அனுப்பப் போகிறதாம். ஏதோ, அரசு உடனே அந்த மூன்றில் சொல்லியதை உடனே செயலாக்கி விடப் போவது போல் ஏன் இந்துவுக்கு இப்படி ஒரு நம்பிக்கை!

இப்படி ஒரு கற்பனை: இப்போதைய அரசு & இந்துவின் ஆசையுடன் இந்தக் கட்டிடத்தில் ஒரு மால் / கடை, கண்ணிகள் / நூலகம் ... இப்படி ஏதோவொன்று வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அடுத்த ஐந்தாண்டுகளில் மறுபடி தி.மு.க. வந்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படி நடந்தால் அவைகளை தி.மு.க.வும் & இந்துவும் சேர்ந்து கொண்டு மறுபடியும் ‘விளையாட்டை அழிச்சி .. கிழிச்சி’ .. மாற்றுவார்களா?

இதையெல்லாம் மனதில் வைத்து இந்துவிற்கு நானெழுதிய கடிதம் கீழே:

Sir,
Your search for ‘A building in search of an idea’ in your daily on 7.8.2011 is a bad idea!

When our politicians go against some normal and common etiquette, public and media should try to make them see things in the proper perspective. Already we are all pained that our politicians of the two major parties – D.M.K., & A.I.A.D.M.K – never even extend or exchange some basic courtesies to each other. While politicians of opposite camps in other States have the modicum of decency of wishing each other on birth days, or even making courtesy visits to each other, in Tamil Nadu just the opposite is prevalent for some decades. They don’t even attend important funerals of their erstwhile friends, if they are now in the opposite camps.

In this situation The Hindu is taking an unusual exercise of getting public opinion as to what to do with the newly built or half-built legislative assembly. The present government can and should take steps to find out whether there is improper expenditure or any corruption involved in the construction and should bring the erring people into the books. But it is an immense waste if the building which was planned for the legislative assembly should be thrown open for other purposes. 480 crores of rupees spent on that building should not be thrown into the dust bin.

Public and media should stress that the new government should behave with maturity. The complex is not a toy to be thrown away into the cellars by an adamant and an inexorable baby who does not get an instant liking for the toy! It is not a game played by two opponents with simple placards. It is real money, our money!

Assuming the next government is by D.M.K. will The Hindu go again for remaking the building into a legislative assembly?

Media should make the politicians see good reasoning. They should never go along with the whimsies and fancies of the erring politicians. Media should be in the forefront to stop this folly and stupid game of the present ministry.

****

10-ம் தேதி இந்துவில் 1200 கடிதங்கள் வந்ததாக செய்தி; அதோடு இந்த ஒரு பத்தியும் வந்தது:
Of course, there are critics and sceptics who wonder why alternative uses should be considered when it could very well be utilised for its original purpose as the Secretariat.