Saturday, December 17, 2011

543. நானும், photography-யும் ... 4





*
தொடர் பதிவுகள்: 
......... 1,
......... 2,
......... 3,
......... 4

*
முதலில் கலந்து கொண்ட போட்டியில் முதல் பரிசு. அதன் பிறகு இரு ஆறுதல் பரிசுகள். அதோடு சரி. தோல்விச் சுவை வந்த பின், அதற்குப் பிறகு அதிகமாக அனுப்பவும் இல்லை. Madurai Photographic Association  ஒன்று ஆரம்பித்து இரு ஆண்டுகள்  இரு போட்டிகள் நடத்தினோம். பதிவுலகத்தில் நுழைந்ததும் புகைப்படங்களுக்காக ஒரு வலைப்பதிவு ஆரம்பித்தேன். முதலில் வேகமாக படங்களை அதில் சேர்த்துக் கொண்டிருந்தேன். AUTOBIO(PHOTO)GRAPHY என்று சொந்தக் கதை சோகக் கதை ஒன்றையும் எழுதியிருந்தேன். பின் அதிலும் தேக்கம். நல்ல படங்களைக் காணும்போது நாமும் இதுபோல் எடுக்க வேண்டும் என்றெல்லாம் தோன்றும். ஆனாலும் நடைமுறையில் அந்த அளவு படங்கள் எடுக்க முடியாதது சோகம் தான்.ஒரு handycam - பெரிய மகளிடமிருந்து - இருந்தது. ஒரு short film எடுக்க ஆசை. ஆசையோடு நின்று விட்டது.

அதே போல் வேறு சில பொறாமைகள்:

முதலில் பதிவுலகில் பார்த்து வியந்த படங்கள் ஆனந்த். இரண்டு ஆச்சரியங்கள். முதலில் அவர் எடுக்கும் subjects -




அவை எதுவாகவும் இருக்கலாம். தக்காளிப் பழமாக இருக்கலாம். ஒன்றும் கிடைக்கவில்லையெனில் வைத்திருக்கும் லென்ஸ்களில் ஒன்றை எடுத்து, இன்னொரு லென்ஸால் அதைப் படமெடுப்பார். அவரைப் பார்த்து சில படங்களை எடுத்து 'ஏமாந்திருக்கிறேன்'.



இந்தக் கட்டிடத்திற்குக் கிடைத்த lighting மிக அழகு. எடுத்த angle  பிரமாதம். திரண்டிருக்கும் மேகங்களும் பல வண்ணக் கலவைகளில் நிற்கின்றன. PP வேலை நிறைந்த படம் என்று நினைக்கிறேன். ஒரு surrealistic படமாக எனக்குத் தெரிகிறது.











எல்லாம் இவர் சொன்ன சொல் கேட்கும் என்பது போல் மேகங்கள் அழகாக அடுக்கடுக்காக நிற்கின்றன. கோவிலும் சரியாக துல்லிதமாக  இருக்கின்றன. சரியான exposure போலும்.

முயற்சித்துப்  பார்க்கணும்.


கருவாயன்: (எதற்கு இந்த பெயரோ? நேரில் பார்த்தால் கேட்கணும்!.) இவரது படத்தில் ஒரு mysticism இருப்பதாக எனக்கு ஒரு நினைப்பு. கிழவியும் புகையும் .. அவரது பல candid shots களில் இது ஒன்று. இவரது படைப்பில் பல இது போன்ற candid shots இருக்குமென நினைக்கிறேன். மழையில் விவசாயி போன்ற படங்கள் நினைவுக்கு வருகின்றன.


காற்று, மேகம், ஒளி, செடிகள் எல்லாமும் இவருக்கு இப்படி ஒத்துழைக்கின்றனவே!
நானும் இதே வண்ணத்துப் பூச்சியை விரட்டிப் பார்த்திருக்கிறேன். பசை போட்டு ஒட்டி வைத்தது போல் செடியில் இவருக்காக உட்கார்ந்தது போல் எனக்கு ஏன் உட்கார மாட்டேன் என்கின்றன இந்த வண்ணத்துப் பூச்சிகள்?!


இரு பெண்கள். வழக்கமாகக் காணும் காட்சிதான். பூவைத்து செல்லும் இவர்களைப் பார்த்ததும் காமிராவைத் தேடும் விரல்கள் இளவஞ்சிக்கு.

மொழியை தங்கள் இஷ்டத்திற்கு வளைத்து தங்களுக்கு சேவகம் செய்ய வைக்கும், நான் மிக விரும்பும்,  இரு பதிவர்களில் இவர் ஒருவர். வார்த்தைகளில் ஜாலம் காட்டும் இவரது படங்களுக்கும் அதே ஜால வித்தை தெரியும். மிக சாதாரணமானவைகளை வித்தியாசமாகப் பார்க்கும் பார்வை இவருக்கு - அது காலி பீர் டப்பாவாக இருந்தாலும் சரி .. கூத்து கட்டி ஆடும் மக்களாக இருந்தாலும் சரி... இவர் காமிராவிற்குள் அழகாக  அடக்கமாகி விடுகிறார்கள்.


தெரு விளக்கும் ஜாலம் காண்பிக்கிறது. படம், PPயில்  கொடுத்திருக்கும் வண்ணம், நின்றிருக்கும் நண்பர் குழாத்தின் moodயை நன்கு பிரதிபலிக்கிறது.




ஆனாலும் இப்படி ஒரு சுரங்கப் பாதை .. அதில் தூரத்தில் நடக்கும் ஒருவர் .. கையில் காமிரா .. சரியான ஒரு தருணத்தில் ஒரு geometric படம் .. வாரே வாவ்!



தருணங்கள் இவர்களைத் தேடி வருகின்றனவா .. இல்லை .. இவர்கள்  அதைத் தேடிப்போகிறார்களா ... தெரியவில்லை. magic moments !


முத்துச்சரம் ராமலஷ்மி ராஜன்:



இவர் படங்களில் எனக்குப் பிடித்தது - படங்களின் நேர்த்தி. அப்படியே picture card quality முழுவதுமாக நிறைந்திருக்கும். எடுக்கும் இடத்தை அப்படியே அச்சுக் குண்டாக கண்முன் இவரது படங்கள் கொண்டு வருகின்றன.

கட்டிடத்தில் எத்தனை மாடி? எண்ணிப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் என்பது போன்ற precision உள்ள படங்கள்.


சரி .. கட்டிடம் அங்கேயே நிற்கும்.
அதை precise ஆக எடுக்க அடுத்த தடவை முயற்சிக்க வேண்டும்.

ஆனால் ஆங்காங்கே பறந்து திரியும் பறவைகளைப் படமெடுக்க நிறைய பொறுமை

வேண்டும். ஆனாலும் எப்படி இந்த படங்களை
எடுக்கிறார்கள் என்பது எனக்கு ஒரு ஆச்சரியம்தான்!  அதில் framingயையும் சரியாகக் கொண்டு வருவது வெறும் PP யால் மட்டுமே முடியாது.




சரி .. சரி .. படம் எடுக்கத் தெரிஞ்சவங்க படம் எடுக்குறாங்க. நம்ம படம் எடுக்க வந்தா வண்ணத்துப் பூச்சிகளெல்லாம் செடியில், மலரில் உட்காராமல் இந்த மாதிரி ரோட்டில் உட்கார்ந்து பாடாய் படுத்துது. என்ன பண்றது, சொல்லுங்க!

..

நாம பார்க்காத தோல்விகளா?

தோல்விகளின் தொடர் பட்டியலில் புகைப்படக் கலையையும் சேர்த்து விட வேண்டியது தான். ஆனால் அதைக் கைவிட வேண்டியது இல்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். ஆச்சு .. அதுக்காச்சு .. எனக்காச்சு ... பாத்துக்குவோம்!

தோல்விகளின் தொகுப்பிலும், களைப்படையாத விக்கிரமாதித்தன் வேதாளத்தைத் தோளில் போட்டுகொண்டு போவது போல், காமிராவைத் தோளில் போட்டுக்கிட்டு தொடரணும் ......


*


















*




*

20 comments:

  1. ஆனந்த்,
    கருவாயன்,
    இளவஞ்சி,
    ராமலஷ்மி,

    ...........உங்கள் படங்களை இங்கு பயன்படுத்தியுள்ளேன். நன்றி.

    உங்களில் இருவரிடம் அனுமதி பெறவில்லை. மறுப்பெனின் கூறவும்.

    ReplyDelete
  2. நானும் இப்பொழுது ஒரு டிஜிட்டல் கேமராவை வைத்து படமெடுத்துக் கொண்டு அலைகிறேன். நல்ல படமா அமைந்தால் சிரிச்சுக்குவேன். இல்லைன்னா ஆவணப்படுத்துகிறோம்ன்னு நினைச்சுக்கிறேன். இணைப்பில் உள்ள படங்கள் எல்லாம் அருமை. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  3. உங்கள் அனுபவத்துக்கு என்னைப் பாராட்டியிருப்பது பெருந்தன்மை.

    /களைப்படையாத விக்கிரமாதித்தன் /

    சற்றும் மனம் தளராமல் அப்படிதான் கேமராவைத் தூக்கிக் கொண்டு திரிகிறேன்:)!

    ஆனந்தின் தக்காளி போல நானும் முயன்று சுமாராகவே எடுத்தேன். கோவிலில் பிரசாதமாகக் கிடைத்த அரைமுறித் தேங்காயை வீட்டு சாப்பாட்டு மேசையில் வைத்து ஒரு படம் எடுத்திருந்தார். மறக்காது.

    ReplyDelete
  4. தருமிசார்,

    நன்றின்னேன்!

    அரம்பிச்சுட்டு அப்பறம் பாதில அடுத்ததுக்கு தாவறதுல நான் உங்களை மிஞ்சினவன்! எல்லாம் ச்சும்மா கத்துக்கறதுதானேங்கற சல்ஜாப்புல கருத்தா செய்யனுங்கறது காணமப்பூடுது :) இருந்தாலும் உங்க அளவுக்கெல்லாம் நான் தொழில் சுத்தமா கத்துக்க முயற்சி செய்யறதில்லீங்க...

    நானெல்லாம் படம் எடுத்துட்டு அப்பறம் அழகுபடுத்தறவன். ஆனா நீங்க ஒளியின் அடிப்படைய புரிஞ்சுக்கிட்டு படம் புடிக்கறவங்க. அந்த விதத்துல உங்க கருப்பு வெள்ளை படங்களை அடிச்சுக்கவே முடியாது சார்!

    சுட்டிகளுக்கு நன்றி.

    ReplyDelete
  5. புகைப்படத்தை எப்படி ரசிப்பது என்பதை உங்களிடமிருந்து கற்றுகொள்கிறேன்
    நன்றி

    ReplyDelete
  6. அழகான தொகுப்பு ..
    ஜல்லிக்கல் நடுவில் வண்ணத்துப்பூச்சியும் நல்லாவே இருக்கு...

    ReplyDelete
  7. மிக அருமை..கண்ணுக்கு குளுமை..நன்றி சார்..:)

    ReplyDelete
  8. இந்த தொடர் பதிவை படித்தப் பின் புகைப்படங்களை ஒரு வித்தியாசமான கோணத்திலும் பார்வையிலும் பார்க்கவும் ரசிக்கவும் தூண்டுகிறது.
    உங்கள் புகைப்பட அனுபவம் interesting.
    நீங்கள் எடுத்த புகைப்படங்களை அனைத்தையும் தளத்தில் ஒரு exhibition மாதிரி வையுங்கள். கண்டு களிக்கிறோம்.

    ReplyDelete
  9. நரேன்,
    //நீங்கள் எடுத்த புகைப்படங்களை அனைத்தையும் தளத்தில் ஒரு exhibition மாதிரி ...//

    அந்த சோகக் கதை இது தானே ...!

    ReplyDelete
  10. தருமி sir
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
    அன்புடன் josadhit

    ReplyDelete
  11. short flim edukkum ungkal aasaiyai viraivil niraiverri viduvom.. ready ya irungka sir... anupavam thotarattum..!

    ReplyDelete
  12. வடக்கு வாசலில் உங்கள் மதுரையைப் பற்றிய கட்டுரையை படித்தேன். என் வயதில் ஒரு முப்பது குறைந்து தஞ்சையில் சுற்றியது போன்ற எண்ணத்தில் திளைத்தேன். தூள் கிளப்பிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.

    சிட்னியிலுருந்து
    அன்பன் பாலச்சந்தர்

    ReplyDelete
  13. அந்தப் பதிவு அடுத்த வாரம் தான் போடணும்; ஆனால் அதுக்கு இப்பவே பின்னூட்டம் ..

    மிக்க நன்றி. 66-70 தஞ்சை வாசம். உங்கள் பின்னூட்டத்தின் மூலம் 'அங்கே' போய்விட்டு வந்தேன்..

    ReplyDelete
  14. படங்கள் அருமையா இருக்கு தருமி அய்யா,,,,..மற்றும் ஒவ்வொரு படங்களையும் தாங்கள் விபரித்த விதமும் சிறப்பா இருக்கு
    தொழில்சார் எண்மான புகைப்பட கருவி (professional digital camera ) வாங்குற அளவு கைல டப்பு இல்ல ...இருக்குற 3 .2 மெகா PIXEL
    செல்லிட தொலைபேசி தான் ஒரே படம் புடிக்க ஒரே நண்பன்....கண்டி, யாழ்பாணம்னு ஒரு சுத்து சுத்தி இலங்கையின் இயற்கை அழகுன்னு பதிவிட ஆசையா தான் இருக்கு...அலுவலக வேலை மண்டை காய்வதால் இப்போதைக்கு சாத்தியமே இல்லை ...ஹீ ஹீ ஹீ ...
    நன்றி அய்யா ....

    ReplyDelete
  15. இங்கு உள்ள அனேக படங்கள் HDR High dynamic range (HDR)தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ள படங்கள் என்று தோன்றுகிறது.

    அதாவது பல wide range bracketing செய்து பல படங்கள் எடுக்கப்பட்டு, பின்னர் அப்படங்களை மென் பொருள் கொண்டு அவைகளை sandwich செய்யவேண்டும்.( என்ன தமிழ்டா இது சாமி )

    http://www.cambridgeincolour.com/tutorials/high-dynamic-range.htm

    அப்ப உத்தரவு வாங்கிக்கிறேன் சாமீ...
    அன்புடன் காஞ்சி பிலிம்ஸ்

    ReplyDelete
  16. இங்கு உள்ள அனேக படங்கள் HDR High dynamic range (HDR)தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ள படங்கள் என்று தோன்றுகிறது.

    அதாவது பல wide range bracketing செய்து பல படங்கள் எடுக்கப்பட்டு, பின்னர் அப்படங்களை மென் பொருள் கொண்டு அவைகளை sandwich செய்யவேண்டும்.( என்ன தமிழ்டா இது சாமி )

    http://www.cambridgeincolour.com/tutorials/high-dynamic-range.htm

    அப்ப உத்தரவு வாங்கிக்கிறேன் சாமீ...
    அன்புடன் காஞ்சி பிலிம்ஸ்

    ReplyDelete
  17. எந்த காஞ்சி பிலிம்ஸ். நாலைந்து வருஷத்துக்கு முந்தி படங்களை அழகாக மார்பிங் அது இதுன்னு செஞ்சு பதிவுகளைக் கலக்கிய அதே காஞ்சி பிலிம்ஸ் தானா?

    ReplyDelete