*
பதிவர்கள் பலர் எடுத்த நிழற்படங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நெடுநாளாகப் பார்க்காமல் விட்டுப்போன பொக்கிஷம் Naufal என்பவரின் படப் பதிவுகள். புகைப்படங்களை வகை வகையாக எடுப்பதில் வல்லுனர். படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. நிறைய experimental shots எடுப்பதில் அவருக்கிருக்கும் ஆவல் அவர் படங்களின் கோர்வைகளைப் பார்க்கும்போதே தெரிகிறது - panning, intentional shake, intended out of focus, long exposure shots... பல படங்கள் இது எப்படி எடுக்கப்பட்டது என்ற கேள்விக் குறியுடன் எனக்குத் தோன்றின. இவரது தொகுப்பிலிருந்து எந்தெந்த படங்களை எடுத்துப் போடலாமென்பதே ஒரு கடினமான தேர்வு எழுதுவதுபோல் சிரமமாக இருந்தது.
NAUFAL மூன்றாவது கண் எங்கேயோ இருக்குது!! |
JUST A DROP, THAT IS ALL! |
LIGHT & SHADE |
A HIGH KEY PHOTO |
DRAMATIC (தனுஷ்கோடி) |
A GRIPPING SHOT |
LOVELY CAPTURE |
அந்தக் காலத்தில் நிழற்படங்களைப் பற்றியெல்லாம் நான் வகுப்பெடுத்திருக்கிறேனாக்கும்!!! ஆச்சரியப்படாதீர்கள். நானெல்லாம் 'அந்தக் காலத்து எக்ஸ்பெர்ட்!!! அப்போது இதுபோன்று தனிப்பட்டவர்களை - profile or something like that - எடுக்கும்போது, படத்தைப் பார்ப்பவர்கள் 'இந்தப் படத்தில் இருப்பது யார்? என்று கேட்டால் அந்தப் படம் நல்ல படமில்லை; ஆனால் படத்தைப் பார்த்ததும் இந்தப் படத்தை எடுத்தவர் யார்? என்று கேட்டால் மட்டுமே அந்தப் படம் சிறந்த படம்' என்று நான் define செய்தது உண்டு.
ஆமாம் ... இந்தக் குழந்தையின் படத்தை எடுத்தது யார்??!! :-)
EVERYDAY SCENE BUT AN ARTIST'S LOOK! |
20 வினாடிகள் அசையாமல் நின்று தன்னையே படமெடுத்துள்ளார். நீர் திரவ நிலையிலிருந்து கடின நிலைக்குப் போனது போல் 'கட்டித் தங்கமான' படம் இது.
எம்புட்டு படிச்சாலும் சிலதுகளுக்கு மண்டையில எதுவும் ஏற மாட்டேங்குது. இந்த மாதிரி ஆளுக படத்தைப் பார்த்தா ஒண்ணு பெட்டியைத் தூக்கிப் போடணும்னு சில சமயம் தோணுது; இன்னொரு நாள் நமக்காச்சு .. நம் பொட்டிக்காச்சுன்னு தோணுது.
எப்படியோ வண்டி ஓடுது ....
Another great credit to Naufal: பொதுவாக 'பொட்டி தூக்குபவர்கள்' தங்கள் தொழில் 'ரகசியங்களை' அக்கறையாகப் பாதுகாப்பார்கள். ஆனால் இவர் தன் பட்ங்களோடு விளக்கங்களையும் சேர்த்தே தருகிறார். All exposure details are there for most of the pix. A special thanks to him for this.
*
அற்புதமான படங்களைப் பற்றி அதி அற்புதமாக ஒரு பகிர்வு.
ReplyDeletenaufal உண்மையிலேயே அற்புதமான புகைப்படக்காரர். ஒவ்வொரு படமும் அருமை. தனுஷ்கோடி படம் ரொம்ப அழகாக இருந்தது. நான் இன்னும் தனுஷ்கோடி போனதில்லை. போகவேண்டும் போலிருக்கிறது. நல்ல பகிர்வு. நன்றி.
ReplyDeleteமச்சான் உங்களது அனைத்து படைப்புகளூம் மிகவும் அருமை மேலும் வளர வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅருமையான போட்டோகிராபர். நல்ல படங்கள். சிறந்த பதிவு. நன்றி
ReplyDeleteபடங்களும் அதை ரசித்த விதமும் அருமை. என் பதிவை நானே படித்தது போன்ற உணர்வு. என்ன மாதிரியே ரசிக்கிறீங்கன்னு சொல்ல வரேன் :-)
ReplyDeleteதருமி ஐய்யா, மிகைப்படுத்தாம உண்மைய சொல்லனும் என்றால் இங்கிருக்கும் நண்பர்களிடம் இவர் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் அதிகம். இவர் படங்களை பார்த்து பலர் கேமிரா வாங்கியிருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன்!
ReplyDeleteஎனக்கு முதல் படமும்,மூனாவது படமும் மிகவும் பிடித்து இருந்தது
ReplyDeleteதெளிவான படங்கல் அருமையாக உள்ளது.
ராமலஷ்மி,
ReplyDeleteஎல்லாத்துக்கும் நீங்க தான் காரணம். உங்க படம் பார்த்த பிறகுதான் மற்ற எல்லாரின் படங்களையும் பார்த்து வெறுக்க .. இல்லையில்லை .. மயங்க ஆரம்பித்தேன்.
சித்திரவீதிக்காரன்,
ReplyDeleteநானும் இவர் படத்தைப் பார்த்ததும் பேசாமல் தனுஷ்கோடிப் பக்கம் போய் 'உக்காந்திரலாமான்னு' நினச்சேன்!
சுல்தான்,
ReplyDeleteloooooooong time .. no see ...
குசும்பன்,
ReplyDeleteஎன்னைப் போல் ஒரு வான்கோழி ஆகாமல், மயிலாக மாற வாழ்த்து.
ஜெஸிலா,
ReplyDeleteஅரிஃப்,
நன்றி
பதிவுக்கு நன்றி தருமி ஐயா. குசும்பன் போன்றோர்கள் கேமரா வாங்க மட்டுமல்ல, என்னைப்போன்ற கத்துக்குட்டிகள் கேமராவை தூக்கிப்போடவும் நௌஃபல்தன் காரணம்.
ReplyDeleteஆபிதீன்
ஆபிதீன் //என்னைப்போன்ற கத்துக்குட்டிகள் கேமராவை தூக்கிப்போடவும்...//same blood. இருந்தாலும் கஷ்டப்பட்டு இன்னும் தூக்கிப் போடாமல் பெட்டியோடு 'சண்டை' போட்டுக் கொண்டிருக்கிறேன்.
ReplyDelete