*
வந்தார் .. சொன்னார் .. சென்றார்
டிசம்பர் 1945-ம் ஆண்டில் எகிப்தின் ஜபால் அல்-டாரிஃப் (Jabal al-Tarf) என்ற மலைப் பகுதிகளின் அருகில் உள்ள நஜ் ஹமாதி (Naj Hammadi) என்ற ஊருக்குப் பக்கத்திலுள்ள இடத்தில் நிலத்தைத் தோண்டும்போது முகமது அலி என்பவருக்குப் பழைய எழுத்துப் பிரதிகள் சில கிடைத்தன....……. இப்படி ஒரு கட்டுரையை ஆரம்பித்து அதைப் பதிவிட்டிருந்தேன்.
புதை பொருட்களாகக் கிடைத்த இந்தப் பழைய கையெழுத்துப் பிரதிகளை ஆராய்ந்த பின் கிறித்துவத்தின் வரலாறு, நம்பிக்கைகள் போன்று பலவும் கேள்விக்குள்ளாக்கப் பட்டுள்ளன. ஏசு ஒரு கன்னியின் மகனா, அவர் இரட்டைச் சகோதர்ர்களில் ஒருவரா, விபச்சாரியாக புதிய ஏற்பாடுகளில் வரும் மரிய மக்தலேனா உண்மையில் யார்?, கிறிஸ்துவின் மனைவியா .. இப்படிப் பல கேள்விகள். Gospels என்ற நூல்களின் காலம் என்ன? கிறித்துவத்திற்கும் முன்பே இந்த ஏற்பாடுகள் தோன்றியிருந்தனவா? கிறித்துவ நம்பிக்கைகளின் ஆரம்பம் என்ன? .. இப்படியும் பல கேள்விகள். இக்கேள்விகள், புதிய சில செய்திகள் என்று இந்தக் கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்புகளைப் பற்றிய செய்திகளை THE GNOSTIC GOSPELS என்ற தலைப்பில் உள்ள நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அவைகளின் தொகுப்பை BOOK SHELF என்பதின் கீழ் பதிவுகளாகத் தொடர்ந்து தர நினைத்துள்ளேன்.
இந்த முயற்சிக்காக THE GNOSTIC GOSPELS புத்தகத்தை வாசித்து, மேற்சொன்ன செய்திகளைப் படித்து எழுதியதும் புத்தி இன்னொரு திசையில் பயணித்தது. ஒரு தூக்கமில்லாத இரவில் தொடர்ந்த பல எண்ணங்கள் ....
வரலாறுகள் எல்லாமே வெறுமனே எழுதி வைக்கப்பட்ட விஷயங்கள் மட்டுமல்ல. அதே போல் எழுதி வைக்கப்பட்டவை எல்லாமே மிகச் சரியான செய்திகளாகவும் இருக்க்த் தேவையுமில்லை, காலம், சூழல், வசதி, வாய்ப்பு என்று பல காரணிகள் எழுதிவைக்கப்பட்டவைகளில் உண்மையும் பொய்மையும் கலந்தே வைக்கும். அதோடன்றி, காதுவழிச் செய்திகளாக பல காலம் இருந்து வந்தவைகளும், தொகுக்கப்பட்டவைகளும், வரலாற்றின் பின்னால் கிடைக்கும் இது போன்ற சான்றுகளும் வரலாற்றின் மூலங்களாக நமக்குக் கிடைக்கின்றன. Zig-zag puzzle போலவே கிடைத்த செய்திகளை பல சான்றுகள் மூலம் உறுதியாக்கி வரலாற்றினைப் படைக்க வேண்டும். கிறித்துவ வரலாற்றின் அடிப்படையை இந்த நஜ் ஹமாதி பிரதிகள் மாற்றியது உண்மை. இது போல் வேறு வரலாறுகளும் மாற்றப்பட்டிருக்குமா என்று தோன்றியது. அதுவும் சமய வரலாறு பலவனவும் நினைவுக்கு வந்தன. கூன் பாண்டியனுக்கு வந்த நோயும், ஞான சம்பந்தரால் அது தீர்ந்த முறையும், அதனால் எண்ணாயிரம் சமணர் தமிழகத்தில் தலையிழந்த நிகழ்வும் நடந்திருக்குமா? பெளத்த மதம் ஆரம்பித்துப் பரவியதும் மெல்ல அழிந்த்தும் நினைவுக்கு வந்தன. அரசியல் காரணங்களால் புதிய மதங்கள் ஆழமாக வேரூன்றுவதும் இயல்பாகவே நடந்து வந்துள்ளன. புதிய மதம் ஒன்று பரவும்போது பழைய மதங்களின் ஆணிவேர்கள் அசைக்கப்படுவதும், பழைய மதத்தின் வழிபடு இடங்கள் இடிக்கப்படுவதோ, மாற்றப் படுவதோ வரலாற்றின் சில நிச்சயமான உண்மைகள்.
நாடகங்களில் மேடையை இருட்டாக்கி விட்டு, திடீரென ஒளியோடு புதிய காட்சி தொடங்குமே அது போல இந்த தொடர்நத எண்ணங்களில் இருந்து சட்டென்று இன்னொரு எண்ணம் பளிச்சிட்ட்து. காலமெல்லாம் 1400 வருடங்களாக மாறாதது என்று சொல்லப்படும் குரான் ஒரு பக்கமிருக்க, ஹமாதியில் கிடைத்தது போல் பழைய இஸ்லாமியப் பதிவுகள் கிடைத்தால் அவர்களின் நம்பிக்கைகள் என்னாகும் என்று ஒரு யோசனை வந்தது. ஆனால் இதுவரை அப்படியேதும் வரவில்லை. அப்படியே ஏதாவது புதிதாக ‘தலை காட்டியிருந்தால்’ அதை உடனே என்ன செய்ய வேண்டும் என்பது இஸ்லாமியருக்குத் தெரியாதா என்று நினைத்துக் கொண்டேன். அப்போது என்னவோ ஒரு மணியோசை கேட்டது. power cut சமயத்தில் அரைத்தூக்கத்தில் இருந்த என்னைச் சுற்றி நல்ல வெளிச்சம் ஒன்று தோன்றியது. யாரோ ஏதோ சொன்னதுபோல் கேட்டது. சொன்னவரோ மிகுந்த ஒளியில் இருந்த்தால் யாரென்று ஏதும் தெரியவில்லை. ஆழ்ந்து கேட்டேன். நான் இப்போது நினைத்த்து சரி என்று சொல்லியதுபோலிருந்தது. குழப்பத்தில் தூங்கி விட்டேன்.
காலையில் எழுந்ததும் தங்க்ஸிடம் இரவில் நடந்ததைச் சொன்னேன். யார் வந்து என்ன சொன்னார்கள் என்று மிகவும் அழுத்திக் கேட்டார்கள். மணிச்சத்தம், ஒளி வெள்ளம், ஆழ்ந்த குரலில் வந்த வார்த்தைகள், என் நினைப்பு சரியென்று சொன்னது ... என்று எல்லாவற்றையும் சொன்னேன். யாராக இருக்கும் என்று கேட்டார்கள். ஏதாவது வான தூதன் – ஜிப்ரேல் மாதிரி ஒரு தேவ தூதன் – வந்து ஏதோ சொல்லிச் சென்றுள்ளார் என்று நினைக்கிறேன் என்றேன். என்னை இன்னும் பேசச் சொல்லிக் கேட்டார்கள். நிச்சயமாக அப்படி நினைக்கிறீர்களா என்றார்கள். அப்படித்தான் தோன்றுகிறது என்றேன்.
சிறிது நேரம் இப்படியே பேசிக்கொண்டிருந்து விட்டு, பிறகு திடீரெனச் சிரிக்க ஆரம்பித்தார்கள். ’என்ன ஆச்சு?’ என்றேன். ’ஒன்றுமில்லை ... ராத்திரி ரொம்ப நேரம் கழித்து power cut நேரத்தில் நீங்கள் அரைத் தூக்கத்தில் இருக்கும்போது கைப்பேசியில் ஒரு அழைப்பு உங்களுக்கு வந்ததே.. அதுதான் அந்த மணியோசை. பின்பு இருட்டில் ஒரு வெளிச்சம் பிரகாசித்ததே ... அது உங்கள் கைப்பேசியின் ஒளிதான். அதெல்லாம் நினைவில் இல்லையா’ என்றார்கள். அப்படியா என்றேன்.
ஆனால் எனக்கு நிச்சயமாக ஒன்றும் தோன்றவில்லை. குழப்பமாக இருந்த்து. இரவில் நடந்த்து எல்லாம் நிச்சயமாக எனக்குத் தோன்றியது. ஜிப்ரேல் மாதிரி தேவதூதன் வந்து சில நல்லது சொல்லி விட்டுப் போயிருக்கிறார். தங்க்ஸ் ஏதோ கதை சொல்கிறார் என்றுதான் நினைத்தேன். விடிய விடிய நான் சொன்னதையெல்லாம் சீரியசாகக் கேட்ட தங்க்ஸ் கடைசியில் இப்படி சொல்லி விட்டார்களே ... இதில் எது உண்மை? சீரியசாக என்னிடம் ‘கதை’ கேட்டது உண்மையா? கேட்டபின் எல்லாம் கதை என்று சொன்னதை நம்புவதா? பெருங்குழப்பம் தான் காரணமாக இருந்தது.
வழக்கம்போல் காலையில் கணினி முன்னால் அமர்ந்து மயில் பொட்டியைத் திறந்த்தும் தான் தெரிந்தது தங்க்ஸ் சொன்னது உண்மையென்று. ஏனெனில் நண்பர் ஒருவரிடமிருந்து வந்திருந்த ஒரு மயிலில் - http://www.faithfreedom.org/articles/quran-koran/ancient-qur%E2%80%99anic-manuscripts-of-sana%E2%80%99a-and-divine-downfall/ என்ற ஒரு தொடர்பு கொடுக்கப்பட்டிருந்த்து. அதை எடுத்து வாசித்ததும் முந்திய இரவில் நான் எண்ணியது எதுவும் தவறல்ல என்று தெரிந்து கொண்டேன். நண்பரோ, ஜிப்ரேலோ ... வேண்டிய தகவல் ஒன்றைத் தந்துள்ளார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.
ஆச்சரியமான தகவல்கள். மீண்டும் அதை வாசிக்க வேண்டும். உங்களுக்கும் இங்கு விரைவில் தர வேண்டும்.
ஆனாலும் என்ன ... என்ன சொன்னாலும் நம்பிக்கையாளர்கள் இதையெல்லாம் கண்டு கொள்ள மாட்டார்கள். ’மனிதனுக்கு விந்து எங்கிருந்து வருகிறது’ என்ற பதிவுலக விவாதத்திலேயே இது முழுமையாகப் புரிந்து விட்ட்து. 1400 வருடக் கதை ஒரு டோமினோ விளையாட்டு மாதிரி.
ஏதாவது ஒரு கார்டை உருவி விட்டால் எல்லாமே முடிந்து விடும். ஆனால் நம்பிக்கையாளர்கள் எத்தனை கார்ட் போனாலும் அதையெல்லாம் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்பது தான் நடைமுறை சாத்தியம்.
ஒரு இறைத்தூதர் உருவாகிறார்.....ஒரு நாயகன் உருவாகிறான் மெட்டுல பாடனும் :)
ReplyDeleteவாழ்த்துக்கள்
தருமி சார், உங்களுக்கு உண்மையில் காக்கவலிப்பு வந்து விட்டது.-:)
ReplyDeleteகாக்கவலிப்பில் கடவுளை கண்ட கழண்ட கேஸ்--காககககே தருமி - என்ற பட்டம் வரும் முன் விழித்து கொள்ளுங்கள். மேலதிக விவரங்களுக்கு இ.சா வை
நீங்க ஒரு Cardinal Sin யை செய்து விட்டீர்கள். அலி சினாவை மேற்கோள் காட்டுவது தவறு என்று சொல்லும் நிலையில், செய்யும் விமர்சனங்கள் எல்லாம் அலி சினாவை படித்துதான் செய்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில், அந்த தளத்திலிருக்கும் ஒரு அதிமுக்கியமான செய்தியை இன்னும் படிக்கவில்லை என்பதை காட்டிவிட்டீர்கள். LOL
இதே செய்தியை வேறு விதமாக இந்த பதிவின் http://dharumi.blogspot.in/2011/10/532-why-i-am-not-christian.html
மறுமொழியில் கேட்டு, அதற்கு நமது நண்பர் சுவனப்பிரியன் standard பதிலை அளித்துள்ளார்.
அதனால் இந்த சானா குரான் பற்றி என்னத்தான் எழுதினாலும், மேலே சொன்ன பதிவின் மறுமொழி பதில்கள் தான் திரும்ப திரும்பவும் வரும். அந்த பதிவில் நண்பர் சுவனப்பிரியன் பதில்களை ஒரு முறை படித்து பார்த்து விடுவது நலம்.
நீங்கள் மிகவும் குழப்பத்தில் இருக்கிறீர்கள், பூனையார் மார்க்கத்தில் உடனேயே சேர்ந்து தமிழக கிளை தலைமை பூசாரியாகப் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்.
ReplyDeleteபூனையார் மென்மையானவர் மேன்மையானவர்
//சானா குரான் பற்றி என்னத்தான் எழுதினாலும், மேலே சொன்ன பதிவின் மறுமொழி பதில்கள் தான் திரும்ப திரும்பவும் வரும்.//
ReplyDeleteசும்மாவா ...! 1400 வருஷ அனுபவமல்லவா!
// தலைமை பூசாரியாகப் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்.//
ReplyDeleteஅதெல்லாம் சரி ... ஆனால் பூனையார் ஹெளரிகள் விஷயத்தில் மெளனமாக இருக்கிறாரே என்று தான் கவலை! அவர் என்னவெல்லாம் தருவார்னு தெரிஞ்சா உடனே சேர்ந்திரலாம்.
புரட்சிமணி
ReplyDeleteபாட்டுக்கு நன்றி
“நம்பிக்கையாளர்கள் எத்தனை கார்ட் போனாலும் அதையெல்லாம் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்“
ReplyDeleteபெரியார் அப்படி நினைக்கவில்லை அதனால்தான் தன் கருத்தை பிடிவாதமாக தன் இறுதி காலம் வரை சொல்லி வந்தார்.
எனவே தாங்களும் தங்கள் முயற்சியை தொடர வேண்டும். வரலாற்றை மக்கள் முன் (மொழிபெயர்ப்பு)தமிழில் வைக்க வேண்டும்
வணக்கம் அய்யா
ReplyDeleteநாம் எதைப் பற்றி அதிகம் அறிய முயல்கிறோமோ,சிந்திக்கிறோமா அதன் ஒரு பகுதியாக நம்மை அறியாமல் மாறிவிடுகிறோம்.
நாம் ஒரு குறிப்பிட்ட மத பிரச்சாரக் குழுவினருடன் விவாதித்து விவாதித்து அவர்கள் எப்படி சிந்திப்பார்கள், விள்க்கம் தருவார்கள் என்பது அத்துபடி ஆகிவிட்டது.பல சமயங்களில் வித்தியாசமே இல்லாமல் போய்விடுமோ என்னும் அள்விற்கு கணிப்பு மெய்ப்பட்டது.
கனவு என்பதும் ஆழ்மனதின் சிந்தனைதானே.இருந்தாலும் உங்கள் கனவு விறுவிறுபான ,அருமையான கதை.
கனவுகளின் விவரங்கள் எல்லாவற்றையும் எழுதி வையுங்கள் .ஒருவேளை பிற்காலத்தில் பயன்படலாம்.
நன்றி
எதையும் படிக்காமலிருந்தால் அதில் கிடைப்பது பெரும் சுகம். மதவாதிகள் கூறும் சொர்க்கத்தைவிட பெரும் சொற்கத்தை இங்கேயே உணரலாம்.
ReplyDeleteகூடவே...சொல்ல மறந்துவிட்டேன்..
ReplyDeleteநன்றி!
என் பக்கம் எல்லாம் உங்கள் பார்வை இருக்கின்றதே?
அனைத்தும் நம் மருத மீனாட்சியின் அருள்!!!!!!!!
அற்புதமான பல ஆங்கில நூல்களை தமிழ்ப் படுத்தி தந்துள்ளீர்கள். அருமை.
ReplyDeleteஒரு இஸ்ரேலியத் தலைவர் கூறியதாக படித்தது- காப்ரியல் வரும் போதெல்லாம் எபிரேயர்கள் துனபமே. மேரியிடம் வந்ததான போது எழுந்த யூத மேசியா வருகை என்பதில் எழுந்த கலகத்தில்65-70 போரில் ஜெருசலேம் யூத ஆலயம் அழிக்கப் பட்டது. இஸ்ரேலியரில் பாதிபேர் கொல்லப் பட்டனர். பின் 133 போருக்குப் பின் யூதர்கள் இஸ்ரேலினும் வசிப்பதே ரோமினால தடை செய்யப்ப் பட பெரும்பாலோனோர்
பக்கத்து அரேபிய நாடுகளில் வாழ்ந்தனர்.
ஜிப்ரேல் வந்ததாக முஹம்மது சொல்ல யூதர்கள் கொலை அரேபியாவிலுர்ந்தும் வெளியேற்றம். போதும் இனி ஜிப்ரேலே வேண்டாம்
தேவப்ரியா சாலமன்
சார் முஸ்லிம்கள குறை கண்டு பிடிகுறது இருக்கட்டும்.உங்க முழு கட்டுரைக்கும்(இஸ்லாமும் பெண்களும் ...2 / WHY I AM NOT A MUSLIM ... 18),நீங்க கேட்ட அத்தனை கேள்விக்கும் ஒன்னு விடாம பதில் சொல்லியும்(http://tvpmuslim.blogspot.in/2011/11/blog-post_24.html) உங்க கிட்ட இருந்து கடந்த 5 மாதத்தில் மழுப்பலா கூட ஒரு பதிலும் இல்ல இது இமயமலையையே சோத்துக்குள்ள மறைப்பதற்கு சமம்.நீங்க கேட்ட கேள்வி சரி என்றால் நான் சொன்ன பதிலுக்கு நீங்க ஏன் மறு கேள்வி கேட்கவில்லை.உங்கள் ப்ளோகில் உள்ளது போல "கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே".உங்களை போல கேள்வி மட்டுமே கேட்க தெரிந்தவர்கள் எந்த பதிலை சொன்னாலும் ஏற்று கொள்ளாத முரட்டு முட்டாள்கள்,என்பதை தாங்களும் நிருபித்து விட்டீர்கள்.முடிந்தால் என்னுடைய கட்டுரைக்கு பதில் சொல்லுங்கள் இல்லையேல் இஸ்லாத்தை குறை சொல்வதை விட்டும் விலகி கொள்ளுங்கள்.வால்பையனுக்கும் கேள்வி மட்டும் தான் கேட்க தெரியும் போல.சொர்கத்து கருவிழி மங்கையர்கள் பற்றி நீங்கள் இது நாள் வரை கேட்ட வெத்து கேள்விக்கு அந்த மறுப்பில் பதில் உள்ளது.பெண்களை கேவல படுத்தி அடிமை படுத்துவது நீங்களா அல்ல இஸ்லாமா என்று கட்டுரையை முழுமையாக படித்து பதில் தரவும்.
ReplyDeleteவணக்கம் அய்யா நல்லதொரு பதிவு. இது போல் மேலும் பல பதிவுகள் தந்து உண்மைகள் வெளிச்சத்திற்கு வர உதவ வேண்டும்.
ReplyDeleteநன்றி.....
இவ்வளவு ஆராய்ச்சிகளும் , விவாதங்களும் செய்து குழம்பி, கடைசியில் , என்ன நிரூபணம் ஆகப் போகிறது?
ReplyDeleteபசித்தவனுக்கு சோறு கிடைக்க விடாமல்,கொள்ளை அடித்து, சொகுசு காரில் போகிற, மானுடமற்ற , பதர்களுக்கு தான் மதங்கள் பயன்படுகின்றன..