Saturday, May 05, 2012

566. இஸ்லாமிய குரான்? ஏன் இன்னும் இச்செய்தி பரவவில்லை? ... 1



*






இறைவனிடமிருந்து வஹியாக முகமதுவிற்கு வந்திறங்கிய வசனங்களே குரான் - இஸ்லாமியரின் தீவிர நம்பிக்கை இது. குரானில் மாற்றம் ஏதுமில்லை (10:64); கடவுளின் இந்த வார்த்தைகளை யாரும் மாற்ற முடியாது (6:34) --  இவை குரானின் வசனங்கள். ஆனால் 6:558 ஹதீசில் புகாரி, ‘முகமதுவிற்கு சில வசனங்கள் மறந்துவிட்டன’ என்கிறார். ('இது ஒரு weak ஹதீஸ்' என்று நம்பிக்கையாளர்கள் சொல்லிவிடுவார்கள் என்று நினைக்கின்றேன்,) சுனான் இப்ன் மஜாஹ் (3:1944)-ல் முகமதுவின் சில வசனங்களை ஆடு தின்று விட்டன என்கிறார். 10.64-லும், 6.34-லும் சொல்லியது உண்மையென்றால் எப்படி தெய்வீக வார்த்தைகள் ஆட்டினால் தின்னப்பட்டிருக்கும்; அல்லது அவை மாற்றப்படவோ, திருத்தப்படவோ, நீக்கப்படவோ செய்யப்பட்டிருக்கும்? அல்லாவின் வார்த்தைகளே இப்படி முன்னுக்குப் பின் முரணாகவா இருக்கும்?

இவைகள் எல்லாம் நம்பிக்கையற்றவர்களின் வழக்கமான கேள்விகள். ஆனால் இந்தக் கேள்விகளையெல்லாம் தாண்டி ஒரு பெரும் கண்டுபிடிப்பு நடந்துள்ளது.

ஏமன் நாட்டிலுள்ள சானா என்ற பெரிய மசூதி ஒன்றில் முதல் ஹிஜ்ரா காலத்திய பழைய குரான் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்குரான் இப்போது நம்பப்படும் குரானிலிருந்து மாறுபட்டுள்ளது. இந்த பழம் கையெழுத்துப் பிரதி இஸ்லாமியரால்தான் கண்டுபிடிக்கப்பட்டது. கார்பன் ஆராய்ச்சியின் படி – carbon dating analysis - இவைகளின் உண்மைத் தன்மை நிரூபிக்கப்பட்டுள்ளது. இது 1425 ஆண்டுகளில் இஸ்லாமிய வரலாற்றின் தடுமாற்றத்திற்குரிய ஒரு கண்டுபிடிப்பாகும்.


சானாவில் உள்ள பெரிய மசூதி இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பழமையான மசூதியாகும். முகமது தன் வழிவந்த நம்பிக்கையாளர் மூலம் ஆறாம் ஹிஜ்ரா ஆண்டில் கட்டச் சொன்ன மசூதியாகும் இது. அதன் பின் பல இஸ்லாமிய அரசர்களால் பெரியதாக மாற்றப்பட்டன. 1972-ம் ஆண்டில் பெரும் மழை ஒன்றின் காரணமாக மசூதியின் மேற்குப் பக்கத்துச் சுவர் சரிந்த போது நடந்த ஒரு புனரமைப்பு சமயத்தில் தொழிலாளர்கள் தற்செயலாக ஒரு புதை குழி ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். மசூதிகளில் புதைகுழி இருப்பதில்லை. இந்தப் புதைகுழியும் எந்த மனித உடலோ வேறு எதுவுமோ புதைக்கப்பட்ட இடமாக இல்லாமலிருந்தது. ஆனால் வெறும் குப்பைக் காகிதங்கள் போல் மழையிலும் காலத்தாலும் நமத்துப் போயிருந்த அராபிய மொழியில் எழுதப்பட்ட பழைய சுவடிகளும், தாட்களும் குவிந்து கிடந்தன. இவைகளின் மதிப்பை அறியாத தொழிலாளர்கள் இக்காகிதங்களை அள்ளி 20 சாக்குப் பைகளில் திணித்து, அவைகளை மசூதியின் ஒரு மினாரத்தின் அடியில் வைத்துப் பூட்டி விட்டார்கள்.

ஒரு புதைபொருள் விற்பன்னரிடம் இச்செய்தி போனதால் அதன் முக்கியத்துவம் வெளி வந்துள்ளது. Qadhi Ismail al-Akwa – இவர் ஏமானின் பழம்பொருள் விற்பன்னர்களின் தலைவராக – President of Yemeni Antiquities Authority – இருந்தவர். இவர் பார்வைக்கு இந்தக் காகிதங்கள் கிடைத்ததும் அதன் முக்கியத்துவத்தைக் கருதி அவைகளைப் பாதுகாக்கவும், அதனை ஆராயவும் முயன்றார். அவரது முயற்சியினால் 1977-ம் ஆண்டு ஒரு ஜெர்மானிய இஸ்லாமிய அறிஞர் ஒருவரின் துணையை நாடினார். அந்த அறிஞரும் இந்தச் சுவடிகளைக் காக்க தன் நாட்டு அரசின் உதவியை நாடினார்.

ஆய்வில் ஆயிரக்கணக்கான குரானின் வாசகங்கள் அந்தப் பதிவுகளில் இருப்பது தெரிந்த்து. இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் பழுதடைந்த பிரதிகள் அந்தப் புதை குழியில் இருந்து எடுக்கப்பட்டிருப்பது தெரிந்தது. குரானின் வாசகங்களின் குறிப்புகள் காணக் கிடைத்தன. குரானின் வரலாற்றில் பழைய சிதிலமான பிரதிகள் புழக்கத்திலிருந்து எடுபட வேண்டும் என்பதை வழக்காக வைத்திருந்தார்கள். இதனால் புதிப்பிக்கப்பட்ட நல்ல பிரதிகள் மட்டுமே பயனில் இருக்கும். அது போலவே எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து காப்பாற்ற அவைகளைப் பத்திரமான இடங்களில் வைப்பதும் நடந்து வந்துள்ளது. சானாவின் புதைகுழிப் பிரதிகள் அதுபோல் காக்கப்பட்ட பிரதிகளாகவே இருக்க வேண்டும். ஏனெனில் இந்த மசூதி முதலாம் ஹிஜ்ராவிலிருந்து ஒரு குரானைக் கற்பிக்கும் இடமாக இருந்து வந்துள்ளது.

கண்டெடுக்கப்பட்ட இந்த பிரதிகளை ஒழுங்கு படுத்தவும் அவ்வேலைகளை மேல்பார்வை பார்க்கவும் ஜெர்ட் புயின் – Gerd R. Puin – என்ற சார்லேன்ட் பல்கலையின் பேராசிரியர், அராபிய எழுத்தியல் விற்பன்னர், பழைய அராபிய தொல்லியல் மொழி ஆசிரியர் – இந்த பிரதிகள் மேல் தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆராய்ச்சி நட்த்தினார். 1985-ல் இன்னொரு பேராசிரியர் – H.C.Graf V. Bothmer – புயினோடு இணைந்து செயல்பட ஆரம்பித்தார். கார்பன் 14 ஆராய்ச்சியில் இந்தப் பிரதிகள் கி.பி. 645 -690 காலத்தியவை என்பது உறுதியாகியது. அப்படியாயின் இந்த பிரதிகள் எழுதப்பட்ட தோலின் வயதே இது. ஆகவே அதில் எழுதப்பட்ட்து இந்த ஆண்டு காலத்திற்குச் சிறிதே பிந்தியதாக இருக்க வேண்டும். எழுத்துகளின் அமைப்பை வைத்து பார்க்கும் போது அவை கி.பி. 710 -715 என்ற காலத்தியதாக இருக்க வேண்டும். சில பிரதிகள் இஸ்லாமின் முதலிரு நூற்றாண்டு காலத்திற்குரியதாகவும், காலத்தால் முந்திய குரானாகவும் இவை இருக்க வேண்டும். 1984-ம் ஆண்டு ஏமின் அரசும், ஜெர்மானிய அரசும் இணைந்து ‘கையெழுத்துப் பிரதிகளின் இணையகம்’ (House of Manuscripts – Dar al Makhtutat) என்ற ஒன்றினை இந்த பெரிய மசூதிக்கருகில் ஏற்படுத்தினார்கள். மீண்டும் அந்தப் பிரதிகளுக்கு ‘உயிர்’ கொடுக்கும் வேலையின் முனைந்தார்கள். 1983 -1996 ஆண்டுகளில் மொத்தமிருக்கும் 40,000 ஆயிரம் பிரதிகளில் ஏறத்தாழ 15,000 பிரதிகளைப் புதுப்பித்து விட்டார்கள். இதில் பன்னியிரண்டாயிரம் பிரதிகள் ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் தோலில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகளாகும். இதுவரை மூன்று குரானின் பழைய பிரதிகள் உண்டு. அவையில் மிகவும் பழைய பிரதி – ஏழாம் நூற்றாண்டிற்குரியதும் மிகவும் பழைய பிரதியாக நினைக்கப்பட்ட குரான் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் உள்ளது. ஆனால் சானாவின் குரான் இதைவிடவும் காலத்தால் முந்தியது. அது மட்டுமின்றி அவை முகமது வாழ்ந்த இடமான அரேபியாவின் ஹிஜாஸ் என்ற இட்த்திற்கான எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளன. இவைகள் அதனால் மிக முந்திய பதிவு என்பதோடு மட்டுமின்றி முதலில் எழுதப்பட்டவைகளாக இருக்க வேண்டும். ஹிஜாஸி அராபிய எழுத்துகளில் எழுதப்பட்ட முதல் நூல்களாக இருக்க வேண்டும். இவை முதல் குரான் என்பதோடு மட்டுமின்றி இவை ஒன்றின் மேல் மற்றொன்றாக எழுதப்பட்டவை என்றும் கண்டறியப்பட்ட்து. (palimpsests - manuscripts on which the original writing has been effected for re-use).

                                             இப்பட்த்தில் தெரிவதைக் காண்க.
பழைய எழுத்துக்களும் தெரிகின்றன.



புயின் அவரது ந்ண்பர் போத்மெர் இருவருக்கும் எழுத்துக்களின் அழகும் நேர்த்தியும் அவர்களை மிகவும் கவர்ந்தன. அதைவிடவும் அவர்களை ஆச்சரியப்பட வேறொரு உண்மை காத்திருந்த்து. இந்த குரான் பிரதிகள் இப்போதுள்ள குரானோடு ஒப்பிட்டு பார்க்கும் போது அவர்களை ஓருண்மை உலுக்கியது. இந்த இரு பிரதிகளும் மிகவும் பெரிய வேறுபாடுகளோடு இருந்தன. வசனங்களின் எண்ணிக்கையில் வேற்றுமை; வார்த்தைகளில் சின்ன ஆனால் மிக முக்கியமான மாற்றங்கள்; வேறுபட்ட எழுத்துக் கூட்டல்கள்; வித்தியாசமான கலை – ( There are unconventional verse ordering, small but significant textual variations, different orthography (spelling) and different artistic embellishment (decoration) ) குரானின் வசனங்கள் கடவுளிடமிருந்து வந்த நேரிடையான, முழுமையான, எந்தவித மாற்றமுமில்லாத வசனங்கள் என்ற இஸ்லாமியரின் ஆழ்ந்த நம்பிக்கைகளை இந்த மாற்றங்கள் முறியடித்தன. குரான் திரித்து, மாறுபட்டு, திருப்பி மாற்றி எழுதப்பட்டு, மாற்றங்களோடு திருத்தப்பட்டு கிடைக்கப்பட்ட ஒன்று; மனிதக் கரங்களால் மாற்றப்பட்ட வசனங்களோடு அவை உள்ளன.

குரானின் புனிதத் தன்மை, ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமியரின் ஆழமான நம்பிக்கை இந்த ஆச்சரியமான கண்டுபிடிப்பால் ஆட்டங்கண்டு விட்ட்து. கோடிக்கணக்கான இஸ்லாமியரின் குரான் காலத்தைத் தாண்டியது; கடவுளின் வார்த்தைகள் அப்படியே கொடுக்கப்பட்டவை என்ற நம்பிக்கைகள் என்பதெல்லாம் ஒரு ஏமாற்றும் கட்டுக் கதையாகிப் போனது. அது மட்டுமின்றி குரானில் உள்ளவை கடவுளின் வார்த்தைகள்; அவைகளை மனிதன் மாற்ற முடியாது என்ற அறைகூவலும் பொய்யாகிப் போனது. மாற்றங்கள் குரானில் நடந்துள்ளன என்பதற்கான ஆதாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. குரானைப் பற்றி கில்லாவ்மி (Guillaume ) என்பவர் ”குரான் மற்ற நூல்களுக்கு அடியில் வைக்கப்படக்கூடாது; எல்லா நூல்களுக்கும் மேல்தான் வைக்கப்பட வேண்டும்; குரான வாசிக்கப்படும் போது யாரும் குடிக்கவோ புகைக்கவோ கூடாது; குரானை வாசிக்கும்போது முழு அமைதி வேண்டும்; எல்லா வியாதிகளையும் தீர்க்கும் வல்லமை கொண்டது குரான்” என்றெல்லாம் சொன்னது வலிவிழந்தது. இஸ்லாமியர் குரானை ‘எல்லா நூல்களுக்கும் அன்னையாக’க் கருதுவதுண்டு. வேறு எந்த நூலும், வெளிப்பாடுகளைக் கொணரும் எந்த புத்தகமும் அதற்கு இணையானதல்ல; இந்த நம்பிக்கைகள் எல்லாமே தவிடு பொடியாகின. குரான் கடவுளின் வார்த்தைகள் என்ற இஸ்லாமியரின் 14 நூற்றாண்டுப் போராட்டங்களை இந்தக் கண்டுபிடிப்புகள் ஒன்றுமில்லாக்கி விட்டன.

இந்தப் பழைய பிரதிகளில் வரிகள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக (palimpsests) எழுதப்பட்டுள்ளன. பழைய எழுத்துக்களும் அந்தப் பிரதிகளில் காணக்கிடக்கின்றன. அல்ட்ரா வய்லட் போட்டோகிராபி மூலம் பழைய எழுத்துக்களையும் இப்போது காண முடியும்.
PALIMPSESTS

இந்த முறையில் சானா பிரதிகளில் மாறுபாடுகள் இருப்பது மட்டுமின்றி, இந்தப் பிரதிகள் எழுதும் முன்பே வேறு பிரதிகள் மாற்றப்பட்டும் திருத்தப்பட்டும் எழுதப்பட்டுள்ளன என்பதும் புலனாகிறது. அல்லா சொன்னது போல் (56.77-78; 85.21-22) சுவனத்தில் தங்க எழுத்துக்களில் குரானின் முதல் பிரதி இருக்கிறது; வானதூதர்களைத் தவிர வேறு யாரும் அதைத் தொடக்கூட முடியாது என்ற அல்லாவின் வார்த்தைகள் சிறுபிள்ளைக் கதை போலாகின்றது.

தொடர்ந்த ஆய்வின் பின் புயின், குரான் கடவுள் கொடுத்து அப்படியே இங்கு எழுதப்பட்டது இல்லை; ஆனால் குரானும் மற்ற நூல்கள் போலவே அடித்து திருத்தி எழுதப்பட்ட ஒரு நூல் என்பது புலனாகிறது என்கிறார். அவரின் கூற்று: “குரானின் முதல் கடைசி அட்டைகளுக்கு நடுவில் உள்ளவை எல்லாமே கடவுளின் மாற்றப்படாத வார்த்தைகள் என்பது பல இஸ்லாமியரின் ஆழ்ந்த நம்பிக்கை. பைபிளின் வார்த்தைகளுக்கு பிறந்த, வளர்ந்த, வரலாறு உண்டு என்பார்கள்; அவை வானத்திலிருந்து மனிதர்களிடம் குதித்து வந்ததில்லை என்பார்கள். ஆனால் குரானுக்கு அத்தகைய வரலாறு ஏதுமில்லை என்பார்கள். இந்த வாதத்தை முறியடிக்க, குரான் எழுத்துக்களுக்கும் அதேபோன்ற ஒரு வரலாறு உண்டென்று காண்பிக்க சானா குரானின் பிரதித் துண்டுகள் போதும்”.

புயின் மேலும் தொடர்கிறார்: “ குரானின் வார்த்தைகள் மட்டுமல்ல; முகமதுவின் காலத்திற்கு முன்பே எழுதப்பட்ட சமயக் கருத்துக்கள் மீண்டும் தொடர்ந்து எழுதப்பட்டன”.

ஏமன் அதிகாரிகள் புயின், போத்மெர் இருவரும் நடத்திய ஆய்வின் போது இந்த ஆய்வினைப் பற்றி அதிகம் வெளியில் தெரியாதவண்ணம் இருக்கச் சொல்லியுள்ளனர். ஏனெனில் குரானின் வரலாறு ஆயிரம் வருஷங்களாகச் சொல்லி வருவதை மாற்றக் கூடாதே. அதுபோல் ஆய்வாளர்களும் அமைதி காத்தனர். ஏனெனில் அதுவே அவர்கள் தொடர்ந்து தங்கள் ஆய்வை மேற்கொள்ள வழி வகுக்கும். புயினின் ஆய்வில் கிடைத்த மற்றொரு தகவலின் படி இஸ்லாமியம் ஆரம்ப்பிப்பதற்கு முன்பே குரானில் வெளித் தலையீடுகள் உண்டு. அரேபியர் இல்லாத இரு ஜாதியினர் – As-Sahab-ar-Rass (Companions of the Well) and the As- Sahab-al-Aiqa (Companions of the Thorny Bushes) – முகமதுவின் காலத்தினருக்கே தெரியாத இந்த இரு ஜாதியினர் பற்றிய செய்திகள் உண்டு. குரானும் செவ்விய அரேபிய மொழியில் எழுதப்படவில்லை. குரான் என்பதற்கு இன்று இஸ்லாமியர் சொல்லும் ” recitation” என்பது பொருளல்ல. குரான் என்பதே அராமிக் மொழியிலுள்ள “Qariyun” என்ற சொல்லிலிருந்து வந்துள்ளது. : தொழுகை நேரத்தில் வாசிக்கப்படும் தெய்வீகத் தொகுப்புகள் என்றே இதற்குப் பொருள். குரானில் பைபிளின் கதைகளின் சுருக்கங்கள் இருப்பதால் இவை தொழுகையில் வாசிக்கப்படும் தொகுதிகளாகும்.

1997-ல் போத்மெர் இப்பிரதிகளை 35,000 படங்களில் பதிந்து ஜெர்மனிக்குக் கொண்டுவந்துள்ளார். அவர்கள் விரும்பினால் தங்கள் ஆய்வுகளை அவர்கள் இப்போது வெளியிட முடியும். (What stops them ??!!  ஒருவேளை சல்மான் ருஸ்டி கதை நினைவுக்கு வருகிறதோ??) புயின் குரானைப் பற்றிக் கூறியது: “குரானில் கூறப்பட்டவைவை முகமதுவின் காலத்திலேயே முழுவதுமாகப் புரிந்து கொள்ளப் படவில்லை. இஸ்லாம் ஆரம்பிப்பதற்கு நூறு ஆண்டுகளுக்கு முந்திய செய்திகள் அதில் உண்டு. குரான் தன்னைப் பற்றி ‘mubeen’, or clear என்று சொல்லிக் கொள்ளும். ஆனால் ஒவ்வொரு ஐந்தாவது சொற்றொடரும் முழுப்பொருளும் தராது. ஐந்தில் மீதியுள்ள நான்கு பாகமும் முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியாதது. அராபியிலேயே புரிந்து கொள்ள முடியாது போனால் மொழியாக்கம் செய்யப்பட்ட மற்றமொழிகளில் எப்படிப் புரிந்து கொள்வது? குரான் தன்னை ’எளிது’ என்று சொல்லிக் கொண்டாலும் புரிவது கடினமாகவுள்ளது.”

புயினின் ஆய்வைப் பற்றியறிந்த சமயப் பேராசிரியர் ஆண்ட்ரூ ரிப்பின் - Andrew Rippin – குரானைப் பற்றி ஆச்சரியத்தோடு கூறியது: ” சானா குரானின் தாக்கத்தின் வேகம் இன்னும் உணரப்படவில்லை. மாறுபட்ட வசன்ங்களும், வரிசை முறைகளும் மிக முக்கியமானவை மட்டுமல்ல எல்லோராலும் ஒத்துக்கொள்ளபட வேண்டியவை. குரானின் காலத்து வரலாறு ஒரு திறந்த கேள்விக்குறி”.

ரிப்பின் சொன்னவை மிக முக்கியமானவை. இஸ்லாமிய காலிஃபுகளின் காலத்தில் இஸ்லாம் ஓர் அரசியல் முக்கியத்துவத்தோடு இருந்தது. சமய முக்கியத்துவம் இல்லை. அதனால் அவர்களை இணைப்பதற்கு இஸ்லாம் என்பது தேவையாக இருந்தது. குரான் ஒரு ‘status symbol’ போலிருந்தது. அப்படி ஒரு நிலையில்லாவிட்டால் இஸ்லாம் முகமதுவின் காலத்திலேயே மடிந்திருக்கும்.

குரான் மனிதர்களால் உருவாக்கப்பட்ட்து. அதனை மகிமைப்படுத்த அதனோடு ஒரு தெய்வீகம் ஒட்டப்பட்டது – ஒரு சமூகத்தை ஒன்றிணைக்க. இப்போதுள்ள இஸ்லாமியரை விட பழைய காலத்து இஸ்லாமியர்கள் அடிப்படைவாதிகளாக இல்லாமல் இருந்துள்ளார்கள். பல வசனங்கள் அவர்களால் கேள்விக்குட்படுத்தப்பட்டது. சான்றாக, அலியைப் பின்பற்றிய பல Kharijites ஜோசப்பைப் பற்றிய சுராக்கள் மிகவும் மட்டமானவையென்றும் அவை குரானில் இருக்கத் தகுதியற்றவை என்றனர். ரிப்பினைப் போலவே வராக் - Warraq – அந்தக் காலத்து இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் மனத்தளவில் மிகவும் மென்மையாக இருந்தார்கள்.

இன்னொரு சான்று குரானின் தன்மையை நன்கு வெளிக்கொண்டுவரும். பல வசனங்கள் 691-ல் கட்டப்பட்ட ஜெருசலேம் Dome of Rock of Jerusalem மேல் பொறிக்கப்பட்டுள்ளன. அவை இன்றுள்ள வசனங்களிலிருந்து வெகுவாக மாறுபட்டிருக்கின்றன.

 Rodhinson இந்து, கிறித்துவர்களோடு இஸ்லாமியரைப் பொருத்திப் பார்க்கிறார். முந்திய இருவரும் தங்கள் வேத நூல்களை வரலாறு, அறிவியல் இவைகளோடு கோர்த்துப் பார்ப்பதில் ஆவலோடு இருப்பார்கள். அம்மதங்களோடு தொடர்புள்ள பழைய பிரதிகள் கிடைத்தால் அந்த இரு மதத்ததவரும் அவைகளை அறிய மிக ஆர்வத்தோடு இருப்பார்கள். ஆனால் இஸ்லாமியருக்கு அந்த ஆர்வம் சுத்தமாக இராது. அவர்கள் அது போன்ற நிகழ்வுகளை எதிர்ப்பார்கள். இந்த வேற்றுமை மிக எளிதாகத் தெரியும். (அன்னை தெரசா தன் கடவுள் மறுப்புக் கொள்கைகளை எரித்துப் போடச் சொன்ன பிறகும் கூட கிறித்துவர் அதை வெளிப்படையாக அவர்களே அதனை ஒரு நூலாக வெளியிட்டது இதற்கான ஒரு சான்று. கிறித்துவர்கள் வெளிப்படையாக இவ்வாறு இருந்தது எனக்கு இன்னும் ஆச்சரியமே!)   இந்து, கிறித்துவ நம்பிக்கைகள் தொல்பொருள், வரலாற்று சான்றுகளைத் தேடிப்போவதுண்டு. ஆனால் இஸ்லாமில் அது சுத்தமாகக் கிடையாது. மெக்கா, மதீனா போன்ற இடங்களில் எந்த வித தொல்பொருள் தேடல் நடப்பதே கிடையாது. அப்படி ஒன்று எப்போவேனும் நடக்கும் என்பதற்கான சான்றுகள் எதுவும் நிச்சயம் இல்லை.


..................................................................................... ........................தொடரும் 

* *

21 comments:

  1. super post....ஆனால் இது செவிடன் காதில் ஊதியது போல் போகுமோ என அச்சம் உள்ளது...

    ReplyDelete
  2. தருமிய்யா,

    நீங்க எதுக்கு இவ்வளவு தூரம் கஷ்டப்படனும் ,இப்போ இருக்கிற குரானே காலிஃப் ஒமர் ஹட்டாப் ஏற்பாடு செய்தது தான், உம்மயத் வெர்சன்னு பேரு.

    கர்பலா யுத்தத்துக்கு(படு கொலை) அப்புறம் பல குரான்கள் அழிக்கப்பட்டது , அதில் ஆயிஷா பிவியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட முகம்மது பயன்ப்படுத்திய குரானும் அடங்கும்,இதெல்லாம் எப்போவோ வரலாற்று புத்தகத்தில் வந்தாச்சு.

    ReplyDelete
  3. UNKAIKAL,
    நீங்கள் ரொம்ப நல்லவரு. உங்க பின்னூட்டம் தான் முதல் பின்னூட்டம். எப்படி அரிய உண்மைகளைத் தந்துள்ளீர்கள். உங்களுக்குப் பிடித்தமான, மிருகங்களை மனிதர் புணரும் படம் இன்னும் நீளமான இந்து புராணக் கதைகள், அங்கிருக்கும் அவலட்சணமான கதைகள் ...பெரிய லிஸ்ட் தான். அந்தக் கதைகள் ஏன் பரப்பப்படவில்லை என்ற கேள்வியோடு பெரிய மனதுடன் அவைகளைத் தொகுத்துள்ளீர்கள். மிக்க நன்றி.

    அதாவது அந்தப் புராணக்கதைகள் போலவே குரான் அல்லாவிடமிருந்து வந்தவைகள் தான் என்பதும் ”வெறும் கதைதான்” என்பதை எவ்வளவு அழகாக எடுத்துக் காட்டி விட்டீர்கள். மிக்க நன்றி.

    நீங்கள் சொன்னதுபோல் அந்தக் கதைகளும் படங்களும் அருவருப்பாக இருந்ததால் அவைகள் இங்கே ஏற்றவில்லை.

    ReplyDelete
  4. Dear Dharumi Sir,

    Your article is much much older one and is an already answered one too.

    And for more info,
    if you want to know the truth,
    please,
    read.

    ===================//==============
    http://www.answering-christianity.com/karim/mosque_of_sanaa.htm

    Was there something wrong with early Qur'anic fragments/specimens found in the great mosque of Sanaa in Yemen?
    ======================//===========

    Also read what the bbc news says,


    ======================//===========
    May 14, 2009 by TMO

    By Ian MacWilliam, BBC News, in Tashkent
    The Uthman Qur`an is the oldest in the world

    http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/4581684.stm

    ======================//===========

    Better luck next time..!

    ReplyDelete
  5. திரு தருமி!

    http://suvanappiriyan.blogspot.com/2012/05/blog-post_05.html

    குர்ஆன் தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டதற்கும் நீங்கள் குறிப்பிடும் சானா சுருள்களும் எந்த அளவு உண்மையானது என்பதை இந்த பதிவில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  6. annee.....
    Gnanappalatuku kottai irukka illiaya..
    Adaum kandu pidichi sollunganne...

    ReplyDelete
    Replies
    1. நபியை போன்ற அரேபிய இழி பிறவிகளுக்கு இரூக்கும்போது ஞானப்பழத்துக்கு இருக்காதா

      Delete
  7. அருமையான பதிவு,
    குரானின் மீது இதுவரை சார்பற்ற்ற ஆய்வுகள் நடைபெற்ரால் அதனை ஏற்கும் மனநிலை அவர்கள்க்கு கிடையாது.குரான் ஹதிதுகள் இல்லாமல் தனித்தியங்க முடியாது[நன்றி திரு பி.ஜே].ஹதிதுகள் பல பிரிவினர் வெவ்வேஎறு பயன்படுத்துகிறார்கள்.

    இந்த சனா குரான் பற்றிய விவரம் அனைத்தும் எண்ணெய் தீர்ந்த பின் முழுவதும் வெளி வரும் என்பதில் நம்க்கு ஐயமில்லை.

    பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது ஹாஃப் குரான் தவிர வார்ஸ்குரான் வட ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ப்யன்படுத்துகின்றார்.அதற்கு விள்க்கம் அளிக்கும் இந்த இஸ்லாம்ய தளம் இப்படி கூறுகிறது.
    http://www.islamic-awareness.org/Quran/Text/Qiraat/hafs.html#5

    • There is only one Qur'an,
    • The differences in recitation are divinely revealed, not invented by humans
    • The indisputable conclusion that the Qur'an was not tampered with.
    இந்த விவர்ங்களை படித்தால் மார்று உச்சரிப்புடன் குரான் ஓதுவதும் சரியே என்ற விள்க்கம் வரும்.இங்கும் குரானை 200+வருடம் கழித்து தொகுத்த ஹதிதின் மூலமே விளக்குகிறார்கள்.
    Conclusions
    In light of the above discussion, it is clear that Hafs and Warsh Qirâ'ât are not the different 'versions' or 'texts' of the Qur'an as fantasized by missionary Katz. The mutawâtir follows directly to the Companions of the Prophet(P) who took the Qur'an from the Prophet(P) himself. Thus, the suggestion that a mutawâtir reading was a later invention by the Muslims is to be dismissed as complete fiction.
    முகம்துவின் காலத்தில் இருந்தே மாற்று உச்சரிப்புகளுடன் குரான் ஓதும் முறை இருந்தே உள்ளது என தெளிவாக அறிய முடிகிறது.

    நன்றி.

    ReplyDelete
  8. annee...
    gnanapalathuku kottai irukka illaiya....
    Adaum nalla visaringa annee
    varalaru romba mukkiyam.

    ReplyDelete
  9. annee...
    gnanapalathuku kottai irukka illaiya....
    Adaum nalla visaringa annee
    varalaru romba mukkiyam.

    ReplyDelete
  10. உங்க அசைக்க முடியாத கட்டுரை அவர்களிடம் ஏற்படுத்திய தாக்கம் UNKAIKAL இட்ட முதல் பின்னூட்டம். சுபியின் சானா அராபிய சுருள்களும் தருமியின் அறியாமையும்!
    சிந்திக்கவே மாட்டார்கள்.

    ReplyDelete
  11. குரான்மீதான பாதுகாப்பு குறித்து குரான் சொல்லுவது ஒருவேளை 'சானா குரான்' பற்றித் தானோ :)

    ReplyDelete
  12. ahmed தம்பி,

    உங்களுக்குப் பிடிச்ச வேலையையெல்லாம் என்னை ஏன் செய்யச் சொல்றீங்க. you go ahead, தம்பி!!!

    ReplyDelete
  13. //that amongst the findings in Sanaa there are indeed Qur'ans with an arrangement of surahs different from the transmitted Qur'an./

    thanks for the help, UFO

    ReplyDelete
  14. பதிவு அருமை அய்யா குரானைப் பற்றி உண்மையை அரிந்து கொள்ள இன்னும் எழுதுங்கள். கத்துக்க வேண்டிய விடயம் நிறையவே இருக்கிறது.

    ReplyDelete
  15. endha madhamaaga irundhaalum madhaththin verai arivadhu mukkiyam adhu thavaraanadhu alla nandri

    ReplyDelete
  16. அறிவுள்ள மனிதர்களுக்கு இப் பதிவினை நான் தருகிறேன் குர்ஆணை பற்றிய ஆராய்ச்சிகள் இன்றலவேனும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. முடிந்தால் தாங்களும் ஆராய்ந்து அதனின் உம்மைகளை தெரிந்து கொள்ள முறச்சி செய்யுங்கள்.

    அதாவது முஹம்மது நபியவர்களுக்கு வஹியாக அறிவிக்கப்பட்டவை தான் குர்ஆண் அதனை அவர் தன் சொந்த கரங்களாலேயே எழுதியுள்ளார் என்பதும் மெய்யான உண்மை மேலும் குர்ஆண் கடவுளின் வார்த்தைதான் என்பதற்கு தன்னுள்ளேயே நிருபிக்கும் ஆதாரத்துடன் இருக்கிறது.
    முஹம்மது நபியவர்கள வாழ்ந்து கொண்டிருந்த காலத்திலேயே நயவஞ்சஹர்களும் வாழ்ந்து கொண்டுதான் இருந்தார்கள். அதனால்த்தான் அன்று பத்தரு யுத்தம் நடந்தது அதில் கொள்ளப்பட்டது முகம்மதுவின் பேரர்கள் (அசன் &ஹுஷன்) இக் கொலைகள் எதற்காக நடந்தன நிலப்பரப்புகளைச் சொந்தமாக்கிக் கொள்ளவா? சிந்திக்க வேண்டும்
    புதை பொருள் ஆரயிசில் கிடைத்திருக்கும் ஆவணங்கள் அந்த நயவஞ்சஹர்களின் முயற்சியாக ஏன் இருக்கக் கூடாது, ஆகவே கடவுளின் வேதங்களை தாங்கள் அறியாமலே களங்கம் விளைவிப்பது கடவுளையே எதிர்ப்பதற்குச் சமம்.

    ReplyDelete
  17. கதைகளை உண்மை என்று நம்பும் முட்டாள்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது.

    இந்தியாவில் இந்த மூடர்களின் கதைகளைப் போன்று ஊருக்கு ஒன்று இருக்கும்.

    ReplyDelete
  18. //முஹம்மது நபியவர்களுக்கு வஹியாக அறிவிக்கப்பட்டவை தான் குர்ஆண் அதனை அவர் தன் சொந்த கரங்களாலேயே எழுதியுள்ளார் என்பதும் மெய்யான உண்மை //

    அப்டிங்களா, radon!
    புதுக்கதையா இருக்கே இது! இப்டியா மதராசாவில் சொல்லிக் கொடுத்தாங்க?

    ReplyDelete
  19. அருமையான பதிவு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. தெளிவான, ஆணித்தரமான பதிவு. வாழ்த்துக்கள் அய்யா.
    Radon,
    //முஹம்மது நபியவர்களுக்கு வஹியாக அறிவிக்கப்பட்டவை தான் குர்ஆண் அதனை அவர் தன் சொந்த கரங்களாலேயே எழுதியுள்ளார் என்பதும் மெய்யான உண்மை// நீங்கள் உண்மையிலேயே முஸ்லீம்தானா?

    ReplyDelete