Thursday, September 27, 2012

594. என்னிடம் மட்டும் ஏன் கடவுள் வருவதேயில்லை ??!!!






*




’ஏங்க .. உங்களுக்கு வேற ஆளே கிடைக்கலையா? எப்படி இந்த ஆளை உங்களுக்கு வாரிசா தேர்ந்தெடுத்தீங்க? ’

‘அடுத்த ஆளா யாரைப் போடலாம்னு ஒரு லிஸ்ட் தயார் பண்ணி வச்சிருந்தேன். திடீர்னு நேத்து ராத்திரி கனவுல சிவ பெருமான் வந்துட்டாரு. என் லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தாரு... அப்படியே பார்த்தவரு டக்குன்னு நித்தியானந்தா பெயரை ‘டிக்’ செஞ்சிட்டாரு .. அவரே சொல்லிட்டா ... பிறகு நான் எதற்கு கஷ்டப்படணும். அதான் நித்தியைக் கூட்டியாந்து பட்டாபிஷேகம் பண்ணியாச்சி’.
SELECTED & ATTESTED BY LORD SHIVA !!

இப்படி மதுரை ஆதீனம் சொன்னதாக தினசரியில் படித்ததும் எனக்கு ‘சிலீர்’னு ஆகிப் போச்சு. எப்படி சில நல்ல மனுஷங்களுக்கு மட்டும் கடவுள் இப்படி நேரடியா வந்து ‘டிக்’ எல்லாம் போடுறார்னு பொறாமைப் பட்டுட்டேன். நமக்கெல்லாம் இப்படி ஒண்ணும் நடக்காம லைப் ரொம்ப டல் அடிக்குதேன்னு ரொம்ப கவலப் பட்டுட்டேன்.

கிறித்துவ நண்பர் ஒருவரிடம் இதைப் பத்தி கவலைப் பட்டு பேசினேன்.

’இன்னைக்கி மாலையில் வீட்டுக்கு வாங்க .. ஒண்ணு காமிக்கிறேன் .. அப்படியே நீங்க அசந்திருவீங்க’அப்டின்னார்.

சரின்னு நானும் அவர் சொன்ன டைமுக்கு வீட்டுக்குப் போனேன். ரெடியா இருந்தார். கணினியில் ஒரு படம் ஓட விட்டார். Medjugorje அப்டின்னு ஒரு சின்ன கிராமம். Bosnia-வில் இருக்கு. நம்ம டென்னிஸ் ஜோக்கோவிச் அந்த ஏரியாதான் போலும். அங்க ஒரு ஆறு சின்ன பிள்ளைகளுக்கு மேரி மாதா 1981-ல் இருந்து தொடர்ந்து ‘காட்சி’ கொடுக்குறாங்களாம். காட்சி ஆரம்பிச்சப்போ முதல் வாரம் முழுசும் காட்சி. இப்போவெல்லாம் எல்லா மாதத்திலும் இரண்டாம் தேதி டாண்ணு மாதா அந்த ஆறுல ரெண்டு பேத்துக்கோ, மூணு பேத்துக்கோ காட்சி கொடுக்குறாங்க. அதுவும் இந்த ஆளுக எங்க இருந்தாலும் அங்கே மாதாவும் போயிர்ராங்க. அமெரிக்கா அங்க இங்கன்னு இந்த ஆளுகளும் போறாங்க. அங்கே மாதாவும் டகார்னு காட்சி கொடுக்கப் போயிர்ராங்க.  காட்சி குடுக்குறப்போ நிறைய ஆட்கள் கூட்டம் கூடிர்ராங்க. அவங்க யாருக்கும் மாதா கண்ணில பட மாட்டாங்க. அதில் அந்த Medjugorje ஆளுகளுக்கு மட்டும் மாதா கண்ணில படுறாங்களாம். அப்போவெல்லாம் மாதா அந்த ஆளுக கிட்ட ’மெசேஜ்’ குடுக்குறாங்க. நம்ம காதில, கண்ணுல ஒண்ணும் படாது. ஆனா அவங்களுக்கு மட்டும் தெரியுது. காட்சி முடிஞ்சதும் மாதா சொன்ன மெசேஜ்களை பக்கத்தில இருக்கிற ஆளுக கிட்ட இவங்க சொல்றாங்க. அதில் உள்ள இலக்கணப் பிழைகளை சரி செஞ்சிட்டு, (sic!!) அந்த மெசேஜை எல்லோரும் கேக்குறது மாதிரி வாசிக்கிறாங்க. (மெசேஜ்ல இலக்கணப் பிழையா? மாதா சொல்றதுல பிழையா? இல்ல .. காட்சி பார்க்கிற அந்த அம்மா சொல்றதுல்ல இலக்கணப் பிழையான்னு தெரியலை! அதோட எந்த மொழியில் மெசேஜ் வருதுன்னும் தெரியலை. கீழே உள்ள படத்தைப் பாருங்க. பொறுமை இல்லாட்டா கூட காட்சியை ஓட விட்டு, ஓரிரு நிமிடங்களாவது பாருங்கள்.






அந்த அம்மாவுக்கு மாதா தெரியிறது உங்களுக்குத் தெரியுதா? காட்சி கிடைக்கிற அந்த அம்மாவுக்கு வலது பக்கத்தில் நிற்கிற அந்த Father ஏதாவது தெரியுதான்னு மேல மேல பார்த்துக் கொண்டு நிற்கிறார். கொஞ்ச நேரத்தில் அவருக்கும் போரடிச்சிப் போனது போலும். ஐந்தே முக்கால் நிமிடம் மாதா பேசுகிறார். அந்த செய்தியை வாசிக்க சரியாக ஒரு நிமிடம் மட்டும் ஆகிறது. மாதா பேசும் போது இந்த அம்மா இங்கே தலையாட்றாங்க; பரவாயில்லை. ஆனால் மாதா ஏதோ ஜோக் அடிச்சது மாதிரி சில இடத்தில் சிரிகிறாங்க. ஆனால் செய்தியை வாசிக்கும் போது அதில் ஜோக் ஏதும் இல்லையே என்று பார்த்தேன்.

இப்படி சில அதிசயக் காட்சிகள்
அங்கு தோன்றியதாகச் 
சொல்கிறார்கள்.

வானில் சிலுவைக் குறிகள் 



எனக்குப் பல ஆச்சரியம்.  ஏன் தொடர்ந்து 1981-ல இருந்து இன்னும் தொடர்ந்து மெசேஜ் கொடுத்துக்கிட்டே இருக்காங்க?  31 வருஷம் ஆகிப் போச்சு.எதுக்காக இப்படி நீளமா, 31 வருஷமா மெசேஜ் கொடுத்துக்கிட்டே இருக்காங்க. (சட்டுன்னு மண்டைக்குள்ள ஒரு ஐடியா வந்துச்சு ... ஒரு வேளை முகமதுவுக்கு 23 வருஷமா தொடர்ந்து ஜிப்ரேல் வந்து ‘சேதி’ சொல்லியிருக்கார். அதை ‘பீட்’ பண்றதுக்காக  மாதா இன்னும் இழுத்து 31 வருசம் தாண்டியிருப்பாங்களோன்னு தோணிச்சி!)

மெசேஜ் கொடுக்குறது  எதுவரை அப்டின்னு கேட்டேன். ஆறு பேத்துக்கு மெசேஜ் ஆரம்பிச்சாங்களா. அதில் ஒவ்வொருத்தருக்கும் ஆளாளுக்கு பத்து .. பத்து ரகசிய மெசேஜ் கொடுத்திருவாங்களாம். அது முடிஞ்சதும் மெசேஜ்  முடிஞ்சிரும் அப்டின்னார் நண்பர். அதில இன்னும் ரெண்டு பேத்துக்கு மட்டும் தான் ரகசியம் பாக்கியிருக்குன்னார். என்ன மெசேஜ் .. எதும் அதிசயமான விஷயம் சொல்றாங்களா அப்டின்னு கேட்டேன். போற போக்குல CERN .. NEUTRINO ... இப்படி பெரிய அறிவியல் விஷயங்கள் சொன்னா கேட்டுக்கலாமேன்னு நினச்சேன். ஆனா .. எப்படி ஏசுவிடம் பிரியமா இருக்கணும்னு சொல்றாங்க .. அடுத்தவங்களுக்காக எப்போதும் ஜெபம் பண்ணணும் .. உங்களுக்காக கடவுளிடம் ஒண்ணும் கேக்க கூடாதுன்னு நண்பர் சொன்னார். சரி .. இது ‘அந்த’ விஷயங்களுக்கு மட்டும் அப்டின்னு நினச்சிக்கிட்டேன்.நண்பரின் நம்பிக்கையைப் பார்த்தால் அனேகமா சீக்கிரம்   Bosnia-க்குப் புறப்பட்டுருவார்னு நம்புறேன்.

இதில் இன்னொரு சந்தேகம் என்னன்னா, மாதா middle east asian  ஆளு. ஆனா அவங்களைப் பார்க்கிறவங்க எல்லாரும் சொன்னதை வச்சி செய்ற சிலை, படங்கள் எல்லாத்திலேயும் அவங்க அப்படியே அமெரிக்க / ஐரோப்பிய ஆளு மாதிரி,  அதாவது ‘வெள்ளைக்கார பொண்ணு’ மாதிரிதான் இருக்காங்க. இது எப்டின்னு தெரியலை!

( 1981-லிருந்து இந்தப் ‘புதுமை’ நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். இதே போல் போர்ச்சுகல் நாட்டில் பாத்திமா என்ற இடத்தில் 1917-ல் 3 சின்னக் குழந்தைகளுக்கு மாதா காட்சி அளித்தாராம். அதனால் அவருக்கு பாத்திமா மாதா என்று பெயருமுண்டு. சரியாக 13 தேதியில்  மாதம் ஒவ்வொன்றாக ஆறு மாதங்களுக்கு இந்தக் காட்சி நடந்ததாம். அப்போது இந்தக்
குழந்தைகளுக்கு மாதா 3 ரகசியங்களைக் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். அதில் முதல் ரகசியம் நரகம் பற்றியது. இந்த நரகம் நம் பூமிக்கு அடியில் இருப்பதாம். இதனாலேயே இந்த ‘ரகசியத்தின்’ உண்மை புரிகிறது. என்னுடன் வேலை பார்த்த ஒரு “நல்ல” கிறித்துவர் பூமிக்கு அடியில் நீண்ட துளை போட்ட  போது அங்கிருந்து ஆட்களின் அழுகை ஒலி கேட்டதாகக் கூறினார்! இரண்டாவது ரகசியம் உலக யுத்தங்கள் பற்றியதாம். மூன்றாவது ரகசியத்தைப் பற்றிப் பல கதைகளும், விவாதங்களும், முரண்பாடுகளும்  உண்டு.  இதையெல்லாம் தெரிந்த பின்னும் இப்போது மாதா  ரகசியங்கள் கொடுக்கிறார்கள் என்பதை எப்படி நம்புவது என்பது எனக்குப் புரியவில்லை.)


சரி .. மதுரை ஆதீனம் சும்மா சிவன் வந்து ’டிக்’ பண்ணினதைச் சொல்லிட்டார். இவங்க  வீடியோவெல்லாம் நிறைய எடுத்து வச்சிருக்காங்க. இருந்தும் நம்மட்ட இன்னும் ஒரு கடவுளும் வரலையேன்னு ஒரு வருத்தத்தோடு இருந்தேன். அப்போ முக்கியமா மீதியிருந்த இன்னொரு கடவுளும் வந்ததாக ஒரு நிகழ்ச்சி நடந்தது.

நான் இங்க பதிவிட ஆரம்பித்த பிறகு ஏன் கிறித்துவத்தை விட்டு வெளியே வந்தேன்னு எழுத ஆரம்பிச்ச பிறகு கொஞ்சம் மற்ற மதங்களைப் படிக்க ஆரம்பித்தேனா .. அப்போதான் குரான் ஒன்று வேண்டியதிருந்தது. என்னிடம் படித்த இஸ்லாமிய மாணவர் ஒருவரிடம் ஒரு புத்தகம் கேட்டேன். தானே வாங்கித் தருவதாகவும், ஆனால் ஒவ்வொரு முறையும் நான் குரானைத் ‘தொடும்போது’ நான் செய்ய வேண்டிய கடமைகள் பற்றியெல்லாம் கூறினார். அதெல்லாம் நமக்கு லாயக்கு படாது. எங்கே புத்தகம் கிடைக்கும்னு சொன்னா வாங்கிக்கிறேன் என்றேன். எப்படியோ  அவரிடமிருந்தே ஒரு புத்தகம் கிடைத்தது. அதில் எனக்கு இறையருள் கிடைக்க வேண்டும் என்றெல்லாம் எழுதி அன்பளிப்பாகக் கொடுத்தார். நானும் பயன்படுத்த ஆரம்பித்தேன். அங்கங்கே அடிக் கோடுகள் போட்டு பயன்படுத்தினேன். அதன்பின் அதில் அராபியும் தமிழும் இருந்ததாலும்,  தலைகீழாகப் புத்தகத்தைப் பயன்படுத்த வேண்டியதிருந்தாலும் வேறொரு புது குரான், தமிழ் மட்டும் உள்ளது, IFT வெளியீடு ஒன்று வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருந்தேன்.

சில நாட்களுக்கு முன், ரம்ஜான் மாதத்தில்  அந்த நண்பரிடமிருந்து ஒரு தொலைபேசி. என்னவென்றேன். நான் கொடுத்த குரானைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றார். இதென்ன, அன்பளிப்பாகக் கொடுத்து விட்டு இப்போது திருப்பிக் கேட்கிறாரேன்னு யோசித்தேன். இருந்தும் தருவதாகச் சொல்லிவிட்டு, சில நாளில் இன்னொரு நண்பர் மூலம் திருப்பிக் கொடுத்தனுப்பினேன். அதோடு, இது அன்பளிப்பாக வந்ததால் என் புத்தகமாக நினைத்து, நிறைய குறிப்புகளும், அடிக்கோடிட்டும் வைத்துள்ளேன் என்று சொல்லிக் கொடுக்கச் சொன்னேன். எடுத்துச் சென்ற நண்பரும் புத்தகம் கொடுத்தவருக்கு வாத்தியார் தான். இவர் புத்தகம் கொடுத்த போது நான் சொன்னதை அவரும் சொல்லியிருக்கிறார். வந்த பதில் நன்றாக இருந்தது.

ரம்ஜான் மாதத்தில் அல்லா அவரிடம் வந்து அந்தப் புத்தகத்தை என்னிடமிருந்து வாங்கி விடு என்று அடிக்கடி சொல்லியிருக்கிறாராம்! அதனால் தான் புத்தகத்தைத் திருப்பிக் கேட்டாராம்.

அதிக நாட்களாக என் கண்ணில் படாத அந்த நண்பர் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்த நாலைந்து நாட்களில் அதிர்ஷ்ட வசமாக (??) எதிர்த்தாற்போல் வந்தார்.

என்னிடம் வந்து, ’சார், அல்லா அடிக்கடி வந்து கேட்டதால் தான் அப்படி வாங்கினேன்’ என்றார்.

நான், ‘இதையெல்லாம் நம்பிக்கையுள்ளவர்களிடம் சொல்லுங்கள். நானெல்லாம் இதை நம்புவேனா?’ என்றேன்.

’இல்லை சார், ரம்ஜான் மாதம் நோம்பு காலத்தில் முழுவதும் அடிக்கடி அல்லா வந்து என்னிடம் புத்தகத்தை வாங்க திருப்பி திருப்பிச் சொன்னார்’ என்றார்.

’அட போங்கப்பா ...gift  கொடுத்த புத்தகத்தைத் திருப்பி வாங்குன்னு சொன்ன உங்க கடவுள நினச்சா சிரிப்பு சிரிப்பா வருது;  நீங்களும் .. உங்கள் கடவுளும் ..!. bye' அப்டின்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்.


இப்போதும் எனக்கு ஆச்சரியம். அது சிவபெருமானோ, மாதாவோ, அல்லாவோ இப்படி அடிக்கடி சிலருக்குப் ‘பிரசன்னம்’ ஆகிறார்களே என்று வருத்தமாகப் போச்சு. ஏன் எனக்கு மட்டும் அந்த ‘அதிர்ஷ்டம்’ வரவே மாட்டேங்குதுன்னு ஒரே கவலை.

ஆமா .. இந்த மாதிரிக் கவலைகள் என்னை மாதிரி உங்களுக்கும் இருக்குதா ...?

-------------------------------------

திருவிளையாடல்

கீழேயுள்ள காணொளி ரொம்ப நல்லா இருக்கு. தலைப்பு: JESUS PRANKS.

இப்பதிவுக்குத் தொடர்பில்லாத ஒரு காணொளி. மதச்சர்ர்புள்ளது தான். ஆனால் ....

இதைப் பார்த்து யாரும் யாரையும் அடிக்கவில்லை;

போராட்டமில்லை;

அட .. ஒரு கண்டனம் கூட இல்லை.

எங்க கடவுளை நான் காப்பாற்றியே ஆக வேண்டும் என்று யாரும் ஒரு கடப்பாரையைக் கூட தூக்கவில்லை.

எங்க கடவுளைக் காப்பாற்றினால் ஒரு லட்சம் டாலர் தர்ரேன்னு எந்த அமைச்சனும் சொல்லவில்லை.


ஆனாலும் ... நல்ல கற்பனைகள் ..  பாருங்க.
*












*

67 comments:

  1. நல்ல பதிவு சகோ. கடவுள் ஏன் நேரில் வருவதில்லை பெரும்பாலும் கனவிலேயே வருகின்றார் ... ! அதுவும் வந்து அதை செய் இதை செய் என சொல்கின்றார். சக்தி உள்ள கடவுள் என்றால் எனது செல்பேசிக்கு கூப்பிடலாம், எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பலாம், பேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் போடலாமே !!!

    என கனைவில் கொஞ்ச நாளாக அனுஸ்கா வந்து கட்டிக் கோ கட்டி கோ சொன்னாங்க, இப்போலாம் காஜல் அகர்வால் தான் வராங்க .. என்ன செய்யலாம் சொல்லுங்க !!!

    ReplyDelete
  2. இ.செ,

    கோவிச்சுக்காதீங்க ...
    //நல்ல பதிவு சகோ. ..//

    இந்த “சகோ” எனக்குப் பிடிக்கிறதில்லை. அப்படி கூப்பிட வேணாமே ..சரியா ... கோவிச்சுக்காதீங்க ...

    ReplyDelete
  3. இ.செ.
    என்னமோ உங்களுக்கு ‘அவங்கல்லாம்’ வர்ராங்க .. ம்.. எல்லாம் ஒரு ‘கொடுப்பினை’ தான்!

    ReplyDelete
  4. //ரம்ஜான் மாதத்தில் அல்லா அவரிடம் வந்து அந்தப் புத்தகத்தை என்னிடமிருந்து வாங்கி விடு என்று அடிக்கடி சொல்லியிருக்கிறாராம்! அதனால் தான் புத்தகத்தைத் திருப்பிக் கேட்டாராம்.//

    அல்லா மதகுரு முகமதுவிடமும் நேரடியாகப் பேசவில்லை, ஜிப்ரல் மூலமாகத்தான் பேசினார் என்று இஸ்லாமியர்கள் சொல்கின்றனர், இவருக்கு மட்டும் அல்லாவே பேசினாரா ? வஹாபி நண்பர்களுக்குத் தெரிந்தால் அவர் உண்மையான இஸ்லாமியராக இருக்க முடியாது என்று சான்றிதழ் வழங்கிவிடுவர்

    ReplyDelete
  5. செல்வன்,
    //சக்தி உள்ள கடவுள் என்றால் எனது செல்பேசிக்கு கூப்பிடலாம், எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பலாம், பேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் போடலாமே !!!//

    ரொம்பதான் ஆசை. கடவுளுக்கு அந்தளவுக்கு அறிவு இல்லை. இருந்தால் படிக்காத முட்டாள்களை இறைதூதராக தேர்ந்தெடுத்திருப்பாரா?

    தருமி ஐயா,

    இந்த தொடுப்பைப் பாருங்கள். 0% காமெடி, 100% ஆக்‌ஷன்.

    http://www.youtube.com/watch?v=wHVFQv8nzoA

    ReplyDelete
  6. //இந்த “சகோ” எனக்குப் பிடிக்கிறதில்லை. அப்படி கூப்பிட வேணாமே ..சரியா ... கோவிச்சுக்காதீங்க ...//

    :)) எனக்கும்.

    ReplyDelete
  7. நான் இந்த விளையாட்டிற்கு வரலே...

    நன்றி ஐயா...

    ReplyDelete
  8. கடவுள் மனிதனை படைத்தார், மனிதன் கடவுளை படைத்தான்.
    எனக்கு கானோளிகளின் தரம் மிகவும் பிடுத்துவிட்டது.

    ReplyDelete
  9. //அல்லா மதகுரு முகமதுவிடமும் நேரடியாகப் பேசவில்லை, ஜிப்ரல் மூலமாகத்தான் பேசினார் என்று இஸ்லாமியர்கள் சொல்கின்றனர், இவருக்கு மட்டும் அல்லாவே பேசினாரா ? வஹாபி நண்பர்களுக்குத் தெரிந்தால் அவர் உண்மையான இஸ்லாமியராக இருக்க முடியாது என்று சான்றிதழ் வழங்கிவிடுவர் //

    கோவி கண்ணனுக்கு தெரிகிறது. ஒரு சூஃபி முஸ்லிமுக்கு தெரியவில்லை. குர்ஆன் ஒலி வடிவமாகத்தான் அருளப்பட்டது. புத்தகமாக தரப்படவில்லை. அடுத்து இந்த குர்ஆன் உலக மக்களுக்காக என்று இறைவன் கூறுகிறான். அதில் தருமியும் அடங்குகிறார். எனவே தாராளமாக குர்ஆனை யரும் தொடலாம். படிக்கலாம்.

    ஒரு வசனத்தை தவறாக விளங்கியதால் அந்த நபர் குழம்பியிருக்கிறார். அடுத்து இறைவன் பேசினான் என்பதெல்லாம் அவரது பிரமை. அல்லது பொய் சொல்லுகிறார். மனிதர்களில் இறைத் தூதர்களிடம் மட்டுமே இறைவன் பேசுவான்.

    ReplyDelete
  10. கடவுள் என்னைப்பார்க்க வந்திருந்தப்போ, "ஏன் தருமி அவர்களைப் பார்ப்பதில்லை" என்று கேட்டேன். அவர் சொன்னார். அவநம்பிக்கைக்காரர்களை நான் பார்ப்பதில்லை என்றார்.

    ReplyDelete
  11. ஐயய்யோ இந்த சகோவை நானாக விரும்பி போடவில்லை தானாகவே வருகின்றது ... இதெல்லாம் ஜின்களின் ஏவலாகத் தான் இருக்கும் .. ஐயோ எங்கே போய் வேப்பில்லை அடிப்பேன் !!!

    ReplyDelete
  12. ஐயய்யோ இந்த சகோவை நானாக விரும்பி போடவில்லை தானாகவே வருகின்றது ... இதெல்லாம் ஜின்களின் ஏவலாகத் தான் இருக்கும் .. ஐயோ எங்கே போய் வேப்பில்லை அடிப்பேன் !!!

    ReplyDelete
  13. நீங்க நம்புவீங்களோ இல்லையோ எல்லா கடவுளும் நேற்று இரவில் என் கனவில் வந்து தருமி சார் வலைத்தளம் சென்று படித்து வருமாறு சொன்னார்கள். அதனால்தான் வந்தேன்.....ஹீ.ஹீ.ஹு

    ஒருவேளை அவர்கள் உங்கள் கனவில்வந்தால் நான் வந்து போனதாக சொல்லவும்...நன்றி

    ReplyDelete
  14. //வஹாபி நண்பர்களுக்குத் தெரிந்தால் //

    கோவி,
    சுபி உள்ளும் புறமும் அலசி அப்படியே சொல்லிட்டீங்க. அவ்ரும் வந்து உங்க பேச்சை ditto பண்ணிட்டு போய்ட்டார்.

    ’நண்பர்கள்’ அப்டின்னா இப்படித்தான் இருக்கணும்! ம் .. ம்ம் ..

    ReplyDelete
  15. கு.பி.
    உங்க முகவரி கொடுங்க. உங்க வீட்டு முன்னால ‘அமைதியான’ போராட்டம் ஒண்ணு நடத்த வேண்டியதிருக்கு!!

    ReplyDelete
  16. திண்டுக்கல் தனபாலன்,

    அதான் விளையாட்டுக்கே வரலையே. பிறகு எதற்கு நன்றி??!!

    ReplyDelete
  17. //குர்ஆன் ஒலி வடிவமாகத்தான் அருளப்பட்டது//

    சுபி,
    குரான் கொஞ்சம் காலத்தால் முந்தியதாகப் போனதால் தான் இப்படி ஒலி வடிவமா போச்சு, கொஞ்சம் லேட் பண்ணியிருந்தா fax, email, you tube, movie, 3D movie ... இப்படியெல்லாம வந்திருக்கக் கூடும்.

    ஏன்னா, மொதல்ல போன் மட்டும் வந்திச்சி... அதுக்குப் பிறகு தான் மற்றவைகள் வந்துச்சு. இன்னும் கொஞ்ச காலம் கழித்து அல்லா இந்த attempt எடுத்திருக்கலாம். இல்ல ..?

    ReplyDelete
  18. பழனி.கந்தசாமி ,

    தப்பா சொல்லிட்டீங்க, சார்! பைபிளில் என்ன சொல்லியிருக்கு தெரியுமா? நோய் உள்ளவனிடம் தான் டாக்டர் போவார்னு சொல்லியிருக்கு!

    மாட்டிக்கிட்டீங்களா ..?

    ReplyDelete
  19. இக்பால் செல்வன்

    //எங்கே போய் வேப்பில்லை அடிப்பேன் !!! //

    தப்பு .. தப்பு .. பேரீச்ச இ(ஓ)லை வச்சி அடிக்கணும்!

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. Manickam sattanathan, Thekkikattan|தெகா,

    நன்றி

    ReplyDelete
  22. Avargal Unmaigal,

    எல்லா கடவுளும் ஒண்ணு சேர்ந்து வந்திருந்தாங்களா? எப்படியோ உங்க கனவிலயாவது ஒண்ணா பார்த்தீங்களே .. நல்லது.

    ReplyDelete
  23. கடவுளே! சும்மா இந்த தருமியும், கோவி கண்ணனும் அரைத்த மாவையே டெய்லி அரைத்துக் கொண்டு இருக்கிறார்கள், பழையப்படி நல்ல உருப்படியான பதிவா போட சொல்லி அவுங்க
    கனவுல போய் நல்ல புத்தி சொல்லக்கூடாதா?
    (நோ ஸ்மைலி) கோவிக்கு ஒரு cc

    ReplyDelete


  24. அது அந்தக் காலம் ஐயா. இப்போது நோய் உள்ளவன்தான் டாக்டரிடம் போக வேண்டும்.

    எழுத்தாளர் ஆர்.கே. நாராயணன் காதல் மணம் முடித்தவர். மனைவி இளம் வயதிலேயே இறந்து விட்டார். அதன் பிறகு, பல முறை இரவு நேரங்களில் தன்னுடன் வந்து பேசியதாக தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார். ஆவி வந்து பேசுவதில் எனக்கு நம்பிக்கையில்லைதான். ஆனால், ஆர்.கே. நாராயணன் போன்றவர் இந்த மாதிரியான அந்தரங்கமான ஒரு விஷயத்தைக் கற்பனையாக எழுத அவசியமில்லை எனும் போது ஒரு வேளை அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாமோ என்றுதான் படுகிறது. நமது அறிவிற்கும் மேற்பட்ட அசாதாரண விஷயங்கள் இருப்பதற்கு 100க்கு 100 வாய்ப்புக்கள் இருக்கும் போது, கடவுள் இல்லை என்று 100க்கு 100 சர்வநிச்சயமாக சொல்வது அறிவியலுக்கு உகந்த சிந்தனை அல்ல.

    ReplyDelete
  25. ஒரே நேரத்திலே இத்தனை கடவுளை நினைச்சா பாவம் கடவுளர்களுக்கு தலைச்சுற்றல் வராதா?

    சிவனை நினைக்கிறப்போ பெருமாளை நினைக்காதீங்கோ

    அல்லாவை நினைக்கிறப்போ ஷியா, சன்னி, அஹமதியா, போரா இப்படியெல்லாம் நினைக்காதீங்க

    யேசுவை நினைக்கிறப்போ, கத்தோலிக்கா, ப்ராட்ஸ்டண்டா அதில எந்த பிரிவு சொல்லி பாருங்க

    இத்தனை கடவுள் மேலே நம்பிக்கை வச்சா பழனி கந்தசாமி சொன்ன மாதிரி எந்த கடவுள் நம்பிக்கையோட உங்களுக்கு தரிசனம் தருவார். அவங்களுக்கும் நீங்க கட்சி மாறிடிவீங்க பயம்.

    ஒன்னு செயலாம் பழனி கந்தசாமியை சாட்சியா வைத்துக் கொண்டு ஒரே (கந்தசாமி கனவுல வந்த கடவுள்) கடவுளை மனசில நினைச்சிகிட்டு (தியானம் மாதிரி) உட்காரலாம். ஒருவேளை நம்மகிட்ட வரவில்லையென்றாலும் பக்கத்துல இருக்கிற பழனி கிட்ட உடனே கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  26. "இதைப் பார்த்து யாரும் யாரையும் அடிக்கவில்லை;போராட்டமில்லை;
    அட .. ஒரு கண்டனம் கூட இல்லை."

    SUPER PUNCH :))))))

    ReplyDelete
  27. வணக்கம் அய்யா,
    பல் நண்பர்கள் பதிவின் சாரத்தை பிரிந்து மேய்ந்து விட்ட படியால் மார்க்கமெதை சகோ சுவனப்பிரியனின் [பல பொருள் உள்ள]பின்னூட்டத்திற்கு [வழக்கம் போல்] விள்க்கம் அளிகிறேன்.

    1/// குர்ஆன் ஒலி வடிவமாகத்தான் அருளப்பட்டது. புத்தகமாக தரப்படவில்லை.//
    அதாவாது எழுத்துரீதியாக் மூலப்பிரதிகளில் குரானுக்கு சான்று இல்லை. இபோதைய குரான் 1924_28 ஆம் ஆண்டு குறிப்பிட்ட வழகத்தில் இருந்த ஒலி வடிவத்தை எழுத்தில் அச்சிட்டது.ஆகவே அதில் ஆதாரம் கேட்காதீர்கள்.
    http://answering-islam.org/PQ/ch8-index.html
    http://www.newenglishreview.org/custpage.cfm/frm/16608சிந்திக்க மாட்ட்டீர்களா??

    ****
    2./அடுத்து இந்த குர்ஆன் உலக மக்களுக்காக என்று இறைவன் கூறுகிறான். //
    நாம் மார்க்கத்தில் சொன்ன கருத்தை சரியாக பிரச்சாரகர்கள் சொல்கிறார்களா என முதலில் சரி பார்த்தே,பிறகு அதை பிற ஆதாரங்கள் ஒப்பிட்டு சரி பார்ப்போம்.

    மார்க்கத்தை சரியாக புரியாமல் சகோ சொன்ன கருத்து, இஸ்லாம் அனைத்து உயிர் உள்ள ,இலாத பொருள்கள்க்கும்.ஆகவே குரான் மனிதர்,ஜின்,விலங்குகள்,உயிரற்ற பொருள்களுக்கும் பொதுவானது
    http://www.islamcan.com/jinn-stories/questions-and-answers-on-jinns.shtml
    46:30. (ஜின்கள்) கூறினார்கள்: “எங்களுடைய சமூகத்தார்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம், அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கின்றது, அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மை படுத்துகிறது. அது உண்மையின் பக்கமும், நேரான மார்க்கத்தின் பாலும் (யாவருக்கும்) “வழி” காட்டுகின்றது.
    51:56. இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.

    13:15. வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம், விரும்பியோ விரும்பாமலோ அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்(து சிரம் பணி)கின்றன; அவற்றின் நிழல்களும் காலையிலும் மாலையிலும் (அவ்வாறே! ஸஜ்தா செய்கின்றன).

    //ஒரு வசனத்தை தவறாக விளங்கியதால் அந்த நபர் குழம்பியிருக்கிறார். அடுத்து இறைவன் பேசினான் என்பதெல்லாம் அவரது பிரமை. அல்லது பொய் சொல்லுகிறார். மனிதர்களில் இறைத் தூதர்களிடம் மட்டுமே இறைவன் பேசுவான்.. //

    முக்மது,குரானில் சொன்னவர்கள் தவிர யார் சொன்னாலும் மூமின்கள் இந்த பதிலே சொல்ல வேண்டும். ஏன் அப்படி என்றால் குரானில் எழுதப்பட்டுள்ளது எனக் கூறுவார்கள். எப்படி குரானில் உள்ளதை நம்புவது என்றால் ,இது இறைவனால் இறைத் தூதர்களுக்கு வழங்கப்பட்டது என்பார்கள்.
    நீங்கள் குழம்பி இறைத்தூதர்தன் யார் என்றால் இறைவன் யாரிடம் பேசினானோ அவரே என்பார்கள். ஹி ஹி ஹி...
    ****
    அல்லாஹ் மிர்யம்(மேரி) உடன் வஹி அறிவித்து இருந்தாலும் பெண் என்பதால் அவர்கள் இறை தூதர் அல்ல!!!.

    முகமதுவே இறுதி தூதர் என்பது வஹாபி பிரிவினரின் கருத்து மட்டுமே. இதர பிரிவினர் ஏதோ ஒருவழியில் இமாம்கள்,மகான்கள் மூலம் இறை வழிநடத்தல்கள்,தொடர்வதாக நம்புகின்றனர்.

    குரானுக்கு இதுவரை இல்லாத புதிய பொருள்,விள்க்கம் மதவாதிகள் கொள்வதை புது வஹி(இறை அறிவிப்பு) எனலாம் என்றால் இன்றும் வஹி வருகிறது!!!

    எ.கா அடிமை முறை,தற்காலிகத் திருமணம் முட்டா, இபோது தவறு, தேவையில்லை என மதவாதிகள் கூறுவது

    நன்றி

    ReplyDelete
  28. இன்னும் கொஞ்சம் சேர்த்துள்ளேன்....

    ( 1981-லிருந்து இந்தப் ‘புதுமை’ நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். இதே போல் போர்ச்சுகல் நாட்டில் பாத்திமா என்ற இடத்தில் 1917-ல் 3 சின்னக் குழந்தைகளுக்கு மாதா காட்சி அளித்தாராம். அதனால் அவருக்கு பாத்திமா மாதா என்று பெயருமுண்டு. சரியாக 13 தேதியில் மாதம் ஒவ்வொன்றாக ஆறு மாதங்களுக்கு இந்தக் காட்சி நடந்ததாம். அப்போது இந்தக்
    குழந்தைகளுக்கு மாதா 3 ரகசியங்களைக் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். அதில் முதல் ரகசியம் நரகம் பற்றியது. இந்த நரகம் நம் பூமிக்கு அடியில் இருப்பதாம். இதனாலேயே இந்த ‘ரகசியத்தின்’ உண்மை புரிகிறது. என்னுடன் வேலை பார்த்த ஒரு “நல்ல” கிறித்துவர் பூமிக்கு அடியில் நீண்ட துளை போட்ட போது அங்கிருந்து ஆட்களின் அழுகை ஒலி கேட்டதாகக் கூறினார்! இரண்டாவது ரகசியம் உலக யுத்தங்கள் பற்றியதாம். மூன்றாவது ரகசியத்தைப் பற்றிப் பல கதைகளும், விவாதங்களும், முரண்பாடுகளும் உண்டு. இதையெல்லாம் தெரிந்த பின்னும் இப்போது மாதா ரகசியங்கள் கொடுக்கிறார்கள் என்பதை எப்படி நம்புவது என்பது எனக்குப் புரியவில்லை.)

    ReplyDelete
  29. நம்ம ஊருல 40 வருஷமா பங்காரு அடிகளார் குறி சொல்லிக் கொண்டிருக்கிறார். அம்மாவா மாறி போயிட்டார்.

    அது மாதிரி மேரி மாதா ஏதோ கேட்டு சொல்லறாங்க

    மத்தவங்க மாதா தேடிட்டு தேமேன்னு நிக்கிறாங்க

    ReplyDelete

  30. வணக்கம் அய்யா,
    //இதே போல் போர்ச்சுகல் நாட்டில் பாத்திமா என்ற இடத்தில் 1917-ல் 3 சின்னக் குழந்தைகளுக்கு மாதா காட்சி அளித்தாராம். அதனால் அவருக்கு பாத்திமா மாதா என்று பெயருமுண்டு. //
    இது ஒரு பெரிய கதை நமக்கு விள்க்கம் சொல்லியே நேரம் போகுது. பாத்திமா என்பது முகமது(சல்) அவர்களின் மகள். அலியின்(ரலி) அவர்களின் மனைவி.
    இஸ்லாமின் மிக முக்கிய பெண்மணிகளுள் ஒருவர்.

    போர்ச்சுகலில் ஃபாத்திமா அந்த மலைக்கு பெயர் இட்டனர் அதைக் கைப்பற்றிய உம்மையாது வம்சத்தினர்.ஆகவே அந்த மலையை கைப்பற்ற அதே பேரில் மாற்றுக் கதை பரப்ப் பட்டது.அங்கே மாதா முஸ்லிம் பெண்மணி போல் தெரிகிறார்.
    http://www.ewtn.com/library/mary/olislam.htm
    It is a fact that Moslems from various nations, especially from the Middle East, make so many pilgrimages to Our Lady of Fatima's Shrine in Portugal that Portuguese officials have expressed concern. The combination of an Islamic name and Islamic devotion to the Blessed Virgin Mary is a great attraction to Moslems.
    http://www.sol.com.au/kor/22_02.htm
    அதுவும் இல்லாமல் கம்யுனிசத்திற்கு எதிரான ஒரு இயக்கம் ஆகவும்,கத்தோலிக்கத்தின் மறுமலர்ச்சி ஆகவும் ஆனது.
    http://en.wikipedia.org/wiki/Our_Lady_of_F%C3%A1tima
    வேளாங்கண்ணியில் மாத இந்திய தாய் போல் தெரிகிறார்.
    http://en.wikipedia.org/wiki/Shrines_to_the_Virgin_Mary
    இன்னும் பல இஅடங்களில் அந்த கலாச்சாரங்களுக்கு ஏற்ப காட்சி தருகிறார்.அனைவரையும் மத இஅன் வேறுபாடின்றி ஈர்க்கிறார்.

    ஆகவே "மத மாற்றத்தில் கிறித்தவத்திற்கு ஈடு இணை இல்லை" ஆயிரம் பேர் பதிவு இட்டாலும்,(ஆபாச) விவாதம் செய்தாலும்ஓட்டு போட்டு முத்னமை பதிவு ஆக்கினாலும் , சுட்டிகளை வெட்டி ஒட்டினாலும் கிறித்தவம் போல் வித்தியாசமாக வித்தை காட்டாதவரை எந்த மார்க்கமும்(?) மத மாற்றப் போட்டியில் வெல்ல முடியாது!!

    நன்றி!!!

    ReplyDelete
  31. //நோய் உள்ளவன்தான் டாக்டரிடம் போக வேண்டும். //

    சரி ஏவிஎஸ்,

    இப்படி ஒண்ணு வச்சுக்குவோம்: ‘தவறிய’ ஆட்டைத் தேடித்தான் மேய்ப்பன் போவான்.

    ஆர்.கே. நாராயணன், காதல் மணம், ஆங்கிலக் கதாசிரியர் ... அதுனால அவரது கற்பனை/பிரம்மை நிஜமாக இருக்கலாம்னு ஏன் நினைக்கிறீங்க!? அதுவும் உங்களுக்கே அதில் நம்பிக்கையில்லை .. இருந்தும் ஏன் இப்படி? ஆங்கில ஆசிரியர் என்பதாலா?

    //கடவுள் இல்லை என்று 100க்கு 100 சர்வநிச்சயமாக சொல்வது அறிவியலுக்கு உகந்த சிந்தனை அல்ல. //

    அறிவியலுக்கு உகந்ததே.

    ReplyDelete
  32. Ramachandranusha,

    எம்புட்டு பக்தி ரசனையோடு கடவுள் எங்கிட்ட வரலையேன்னு ஒரு பக்தித் தவிப்பில் இதை எழுதியிருக்கிறேன் என்பதைப் புரிஞ்சுக்க மாட்டேன்னுட்டீங்களே ..ஒரு வருத்த மாவா இருக்கு!

    ReplyDelete
  33. Natraj/

    //SUPER PUNCH :)))))) //

    a punch on a SAND BAG!

    ReplyDelete
  34. அ. வேல்முருகன்,

    //ஒரே நேரத்திலே இத்தனை கடவுளை நினைச்சா...//

    நமக்குன்னு ஒண்ணு இல்லையேன்னு கவலை ... :(

    ReplyDelete
  35. சார்வ்ஸ்,

    // இபோதைய குரான் 1924_28 ஆம் ஆண்டு குறிப்பிட்ட வழகத்தில் இருந்த ஒலி வடிவத்தை எழுத்தில் அச்சிட்டது.//

    அப்டின்னா எழுத்து வடிவத்தில் சான்று இல்லையா?
    1300 வருஷம் கழித்து எழுதப்பட்டது தான் இப்போ இருக்கா? 1300 வருஷம் .. அடேயப்பா ..

    //இறைவனால் இறைத் தூதர்களுக்கு வழங்கப்பட்டது என்பார்கள்.
    நீங்கள் குழம்பி இறைத்தூதர் யார் என்றால் இறைவன் யாரிடம் பேசினானோ அவரே என்பார்கள்.//

    இந்த ‘நேர்மை’ எனக்கு ரொம்ப பிடிக்குது!

    ReplyDelete
  36. மரியம்முக்கு இதே ஜிப்ரேல் தானே வந்து ‘வஹி’ / ஏசு பிறப்பு பற்றிச் சொன்னார். அப்போ மரியமும் ஒரு இறைத் தூதர் தானே???

    ReplyDelete
  37. மண்டக்கார சார்வ்ஸுக்கு,

    வரலாற்றுக் குறிப்புகளுக்கும், கொடுத்த தொடுப்புகளுக்காகவும் மிக்க நன்றி

    ReplyDelete
  38. ஐயா,
    வணக்கம், கடவுள் வருவது இருக்கட்டும். வந்தால் தாங்குவீரா?

    காப்பிரியேல் வந்து மேரியின் மீது நிழலாடி கர்ப்பம் ஆக்க, பெத்லஹேமில் குழந்தைகளை கொலை செய்தார்களாம்.

    ஏசு வந்து யூதர்களின் ராஜா- கிறிஸ்து வருவார் எனக் கிழப்ப 65- 70 ரோமன் போரில் 60 லட்சம் இஸ்ரேலியர் கொல்லப் பட்டனர். இஸ்ரேலை விட்டு விரட்டப்பட்டனர்.

    ஜிபரேல் வந்து வசனம் சொல்ல, யூதர்கள் அரேபியாவைவிட்டும் விரட்டப்பட்டனர். முதன் முதலாக இந்தியா வந்தனர்.
    http://pagadhu.blogspot.in/2012/09/1.html
    இயேசு சொன்னாதாக உள்ளவை கூட கதாசிரியர்களே புனைந்தவையே!

    ReplyDelete
  39. வணக்கம் அய்யா,

    காணொளி அப்படியே நம்ம வடிவேலு காமெடி மாதிரியே இருக்கே!!ஆனா பக்கத்தில் இருந்தவர்களை நினைத்தால் கவலைக்கிடமாக இருந்தது.

    இனியவன்...

    ReplyDelete
  40. வணக்கம் அய்யா,

    காணொளி அப்படியே நம்ம வடிவேலு காமெடி மாதிரியே இருக்கே!!ஆனா பக்கத்தில் இருந்தவர்களை நினைத்தால் கவலைக்கிடமாக இருந்தது.

    இனியவன்...

    ReplyDelete
  41. வணக்கம் அய்யா,

    // குர்ஆன் ஒலி வடிவமாகத்தான் அருளப்பட்டது.// அந்த ஒலிக்கும் சக்தி இல்லாமல் ஒருவருக்கு மட்டுமே கேட்கும்படியாக இருந்தது. சாதாரண ஒரு ரேடியோ பெட்டிக்கு இருக்கும் ஒலி ஆற்றல் கூட வல்ல இறைவன் (?)ஒலிக்கு இல்லை எனும் போது வருத்தமாகத்தான் இருக்கிறது என்ன செய்யா?

    ReplyDelete
  42. என்ன இப்படி சொல்லிட்டீங்க.. நாங்க இருக்க இடத்தில தினமும் மேல தாளத்தோட வர்றார்.. கொஞ்சம் தள்ளாடிகிட்டே வர்றார்.. தள்ளுகிறவர்கள் தள்ளாட்றதால.. இன்னும் விநாயகர் ஊர்வலங்கள் முடியல.. முடி..யல.

    அந்தக் காணொளி அருமை.. நாம எவ்ளோ வளர வேண்டியிருக்கு..

    ReplyDelete
  43. ஐயா,
    நல்ல பதிவு, நல்ல பின்னூட்டங்கள்.
    அது ஏன் இறைவன் இந்தியாவிற்கு மட்டும் நேரா வரார் மத்த நாடுகளுக்கு தூதர்களை மட்டுமே அனுப்புகிறார் :)
    தவறான புரிதல் என்பதை தவிர ஒன்றும் சொல்வதற்கில்லை.
    நன்றி

    ReplyDelete
  44. தவறிய ஆடும் மேய்ப்பனைத் தேடிக் கொண்டுதான் இருக்கும். இந்த இரண்டு பக்க தேடலின் விளைவாகவே ஆடு கண்டுபிடிக்கப்படும்.

    நாராயணன் ஆங்கிலத்தில் எழுதுகிறார் என்பதற்காக அல்ல அவரை நம்பத் தோன்றுகிறது. அவரது எழுத்துக்களின் மூலம் அவர் ஒரு எளிமையான, சிக்கலில்லாத நபராகத் தோன்றுகிறார். அவர் உண்மையல்லாத ஒன்றை தனது சுயசரிதையில் சொல்ல மாட்டார் என்று தோன்றுகிறது. அப்படிச் சொல்வதால் அவருக்கு எந்த விதமான லாபமும் இல்லை என்று படுகிறது. இப்படி ஒருவர் தமிழில் எழுதினாலும் அவரையும் நம்பத்தான் தோன்றும். உதாரணமாக இந்தக் காணொளியைப் பாருங்கள். http://www.youtube.com/watch?v=0z5fqBbRCH8. (5:03 முதலாக). இதில் பாலமுரளிகிருஷ்ணா சொல்வதைக் கேட்கும் போது அவர் பொய் சொல்லவில்லை என்றுதான் தோன்றுகிறது.

    பிரபல விஞ்ஞானக் கதை எழுத்தாளர் ஐசக் அசிமோவ் கடவுள் நம்பிக்கையில்லாதவர். அவரது சுய சரிதையில் ஓரிடத்தில் இப்படி வருகிறது. அவர் மருத்துவமனையில் படுத்திருக்கிறார் யாரோ அவரைத் தட்டி எழுப்புவது போன்ற உணர்வு. திடுக்கிட்டு எழுந்து கொள்கிறார். யாரும் இல்லை. கதவு உட்புறம் தாளிடப்பட்டிருக்கிறது. ஒரு வேளை தன் மனைவிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு அது உள்ளுணர்வில் பிரதிபலிக்கிறதோ என்று தோன்றுகிறது. மனைவியை தொலைபேசியில் அழைக்கிறார். பிரச்சினை ஒன்றுமில்லை. சிந்திக்கிறார். அவர் ஒரு கைகயை வளைத்து தன் மறு தோள்புறம் அணைத்துக் கொண்டு படுப்பவராம். தூக்கத்தில் தன் கையே விலகி தன் முதுகைத் தட்டியிருக்கும்; அது அநேகமாக அப்படித்தான் என்று சொல்லி தன்னை சமாதானப்படுத்திக் கொள்கிறார். கூடவே, ஒன்று சொல்கிறார்: "இதுவே, நான் என் மனைவியை அழைத்த நேரத்தில் அவருக்கு தற்செயலாக ஏதாவது நேர்ந்திருந்தது என்றால் என்ன ஆகியிருக்கும்? நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறதென்று நம்பிக்கை வந்திருக்கும் இல்லையா?"

    இதில் பாருங்கள் அசிமோவிற்கு கடவுள் இல்லை என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே அவர் தன் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் தனது நம்பிக்கையின் அடிப்படையிலேயே பரிசீலித்துக் கொள்கிறார். வாழ்நாள் முழுவதும் ஒரு குறிப்பிட்ட முறையில் தூங்கும் ஒருவர், ஒரு நாள் நடந்த வித்தியாசமான நிகழ்வு தான் தூங்கும் விதத்தால் நடந்தது; அசாதாரணமானது அன்று என்று முடிவு கட்டிக் கொள்கிறார். இதையேதான் கடவுள் நம்பிக்கை உள்ளவனும் செய்கிறான். தனது நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்க்கையின் நிகழ்வுகளைப் பரிசீலித்து இது தற்செயலாய் நிகழ்ந்திருக்கும் வாய்ப்பு குறைவு; கடவுளால்தான் நடந்திருக்கும் என்ற முடிவிற்கு வருகிறான். எனவே, இரண்டுமே ஒன்றுதான். நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த closed minded conclusions. அதைத்தான் நான் அறிவியல் இல்லை என்கிறேன். நீங்களோ எந்த விவாதமோ, விளக்கமோ இல்லாமல் கடவுள் இல்லை என்கிற நம்பிக்கை அறிவியல்தான் என்கிறீர்கள்.

    ReplyDelete
  45. //நீங்களோ எந்த விவாதமோ, விளக்கமோ இல்லாமல்...//

    என் பதிவு ஒன்றில் ”ஊருக்குப் போன ஓரிரு மாதங்களில் அம்மா இறந்து போனார்கள். ’’ -- என்று ஆரம்பிக்கும் நான்காவது பத்தியில் ”என் வாழ்வில் நடந்த இரண்டு supernatural incidents-ல்..” இதைப் பற்றி எழுதியுள்ளேன். இன்னொரு நிகழ்வு இப்பதிவில் உள்ளது.

    என்னை நீங்கள் நம்பலாம்! ஏனெனில் இரண்டிலுமே நடந்தது உண்மை. அசிமோவ் சொன்னது போல் இரண்டாவது நிகழ்வுக்குக் காரணம் சொல்லி விட்டேன். முதல் நிகழ்விற்கு இந்த நிமிடம் வரை எனக்கு காரணம் தெரியவில்லை. ஆனால், காரணம் சொல்ல முடியாததால் மட்டுமே அங்கே நான் கடவுளை உட்காரவைக்கத் தயாரில்லை.

    ஐன்ஸ்டீன் சொல்வது போல் கடவுள் உண்டு என்பவ்ர்கள் அவர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். காரணம் கண்டுபிடிக்க முடியாத ஒன்றிற்காக அங்கு கடவுள் உண்டு என்று கூறுவது அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஒன்று. அதைத்தான் நான் கூறினேன்.

    பாலமுரளி கிருஷ்ணாவிற்கு நடந்தததை ஒரு இந்து நம்புவார். ஆனால் மற்ற மதத்தினர் நம்ப மாட்டார்கள். இதற்கு இன்னொரு சான்று காண இங்கே வாருங்கள். இரண்டு நிகழ்வுகள். ஒன்றை ஒருவர் நம்புகிறார்; இன்னொன்றை நம்ப மாட்டார்.

    ReplyDelete
  46. //கடவுள் இல்லை என்று 100க்கு 100 சர்வநிச்சயமாக சொல்வது அறிவியலுக்கு உகந்த சிந்தனை அல்ல//

    கொஞ்சம் மாற்றி விடுகிறேன்.கடவுள் உண்டு, இல்லை என்று சொல்வது அறிவியலின் வேலை இல்லை.

    கடவுள் நம்பிக்கை, பக்தி பரவசம், apparitions போன்றவைகள் வருவதற்கான ஆதாரங்கள் அறிவியலில் கொடுக்கப்படுகின்றன. வாசிக்க ...

    முந்திய பின்னூட்டத்தில் ஐன்ஸ்டீன் சொன்னதை இங்கு மீண்டும் குறிப்பிடுகிறேன்.

    ReplyDelete
  47. //நோய் உள்ளவனிடம் தான் டாக்டர் போவார்////!‘தவறிய’ ஆட்டைத் தேடித்தான் மேய்ப்பன் போவான்.//

    இரண்டுமே பைபிளின் வாசகங்கள்.

    சைத்தான் வேதம் ஓதுகிறது!!!

    ReplyDelete
  48. வணக்கம் அய்யா,

    //கடவுள் நம்பிக்கை, பக்தி பரவசம், apparitions போன்றவைகள் வருவதற்கான ஆதாரங்கள் அறிவியலில் கொடுக்கப்படுகின்றன. வாசிக்க ...//

    திருட்டுப் பதிவை வாசித்தேன்..தேன்..தேன் தான்...அருமையாக இருந்தது.லேட்டாக வாசித்தாலும் லேட்டஸ்டாகத்தான் இப்பவும் இருக்கிறது.

    இனியவன்...

    ReplyDelete
  49. பதிவில் தர்க்கரீதியாக ஒரு தவறு இருக்கிறது. சிவபெருமானே நித்தியானந்தா, நித்தியானந்தாவே சிவபெருமான் என்றிருக்கும்போது, பாவம் சிவன் ஏன் மெனக்கெட்டு கனவில் தோன்றனும், நித்யானந்தாவே போன்போட்டு பேசியிருக்கலாமே.

    இல்லை கடவுள் தருமியாக்..மன்னிக்கவும்...கருமியாக இருப்பார் போல. ஏன் சில்ப்பேருக்குத்தான் காட்சி தருவார்.

    பாஸ்னியா, சிக்காகோ என்று ஏன் செல்ல வேண்டும். தமிழ்நாட்டில் கடவுளிடம் பேச குத்தகைக்கு எடுத்திருக்கும் மதிப்பிற்குரிய டி.ஜி.எஸ் குடும்பத்தாரை பார்த்தாலே புர்ந்துவிடும்.

    குரான் ஒலியாக வந்தது என்றால் எழுத்து வடிவம் பெற்றால் கடவுளின் ஒலிக்கு இணைவைப்பதாக ஆகிவிடாதா. அல்லா கனவில் வந்தார் பேசினார் என்றால், அல்லா கனவில் உருவம் பெற்று விடுவார் அது இணை வைப்பதாக ஆகிவிடுமே. இல்லை கடவுளை கனவுகாணக்கூடாது, இறைதூதரை கனவில் காண வேண்டும் என்றால், இறைதூதருக்கும் ஒரு வடிவம் பெற்று கனவில் மனிதன் வணங்கிவிட்டால்?????

    சு.பி.யாரிடம் ஒரு மறுமொழி போட்டு ஐயங்களை தீர்க்க வேண்டும்.)))

    ReplyDelete
  50. //கடவுள் என்னைப்பார்க்க வந்திருந்தப்போ, "ஏன் தருமி அவர்களைப் பார்ப்பதில்லை" என்று கேட்டேன். அவர் சொன்னார். அவநம்பிக்கைக்காரர்களை நான் பார்ப்பதில்லை என்றார்//

    எந்த கடவுள் வந்திருந்தார் என்று சொல்லுங்களேன்!

    ReplyDelete
  51. இரு பதிவுகளையுமே படித்தேன். மிக நெகிழ்ச்சியான பதிவுகள். அழகாக எழுதியிருக்கிறீர்கள். என்னை நம்பு என்று நீங்கள் கேட்கத் தேவையில்லை. உங்களைப் பரிபூரணமாக நம்புவதால்தான் உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறேன்.

    நீங்களே சொன்னது போல், இரண்டாவது நிகழ்வுக்கான காரணத்தை அசிமாவ் போல ஊகிக்கிறீர்களே ஒழிய சர்வ நிச்சயமாக நிரூபிக்கவில்லை. அசிமாவின் விளக்கத்தில் என்ன பிரச்சினை என்று சுட்டிக் காட்டியிருந்தேனோ அது உங்கள் விளக்கத்திற்கும் பொருந்தும்.

    "காரணம் சொல்ல முடியாததால் மட்டுமே அங்கே நான் கடவுளை உட்காரவைக்கத் தயாரில்லை" என்கிறீர்கள். நான் முழுமையாக ஒத்துக் கொள்கிறேன். நான் கூட அப்படித்தான் செய்வேன். அது அறிவியல் இல்லை என்பதும் எனக்கு உகந்த கருத்தே. அதே நேரத்தில் கடவுள் இல்லை என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று என்ற வாதத்தை ஏற்றுக் கொள்கிறீர்களே (பதிவு 314), அது முரணாகத் தெரியவில்லையா?

    "பாலமுரளி கிருஷ்ணாவிற்கு நடந்தததை ஒரு இந்து நம்புவார். ஆனால் மற்ற மதத்தினர் நம்ப மாட்டார்கள்." என்கிறீர்கள். அதை கிறிஸ்தவனாகிய நான் நம்பினதால்தான் உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தேன். மதங்களுக்கு அப்பால், தத்துவங்களுக்கு அப்பால், இன்றைய அறிவியலுக்கு அப்பால், இருக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகமுள்ள அமானுட சக்தி ஒன்றுள்ளது என நம்புகிறேன். அதை அறிந்து கொள்ள வேண்டுமானால் என் அறிவையும், மத நம்பிக்கைகளையும் நான் தாண்டிச் செல்ல வேண்டியுள்ளது.

    ReplyDelete
  52. // பரிபூரணமாக நம்புவதால்தான் உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறேன். //

    அப்படியானால் இன்னொன்றைய்ம் நம்புங்களேன். //இன்றைய அறிவியலுக்கு அப்பால், இருக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகமுள்ள அமானுட சக்தி ஒன்றுள்ளது என நம்புகிறேன்// -- இந்த நினைவுகள் எனக்கும் வந்தது. எப்போது தெரியுமா? கடவுள் என்ற சித்தாந்தம் மனிதனால் உருவாக்கப்பட்டது என்பது புரிந்து, மதங்களை மறுக்கும் முதல் நிலையில், கடவுள் என்று ஏதுமில்லை என்று சொல்லும் முன் (அப்படி சொல்ல பயம் வந்தது.)இந்த நிலைக்கு வந்தேன். நீங்களும் அந்த நிலைக்கு வந்து விட்டீர்கள் என நினைக்கிறேன். ஆனால் எனக்கு இந்த நிலையிலிருந்து முழு மறுப்பிற்கு சில வருடங்கள் ஆனது.

    good luck to you .

    ReplyDelete
  53. //அசிமாவ் போல ஊகிக்கிறீர்களே ஒழிய சர்வ நிச்சயமாக நிரூபிக்கவில்லை.//

    இந்த விஷயங்கள் நிரூபிக்க முடியாதவை என்றே நினைக்கிறேன்.அசிமாவ் கொடுத்ததும் ஒரு ஊகம் தானே!

    314 பதிவில் கடவுள் என்ற நினைவுகள், miracles பற்றிய அறிவியல் காரணங்கள் கொடுக்கப்ப்ட்டுள்ளன. அறிவியல் மூலம் நிரூபித்தவைகள் தானே அவை.

    ReplyDelete
  54. இப்பதிவையும் பாருங்கள் ...

    BERTRAND RUSSELL: வானுலக டீ கப் !

    நம்பிக்கையுள்ளவர்கள் பலரும் கடவுள் இருப்பை மறுப்பவர்களே கடவுள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டுமென்று சொல்கிறார்கள். இது தவறு.

    நம் பூமிக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் நடுவில் நீள் வட்டப் பாதையில் சின்ன சீனா டீ கப் ஒன்று சுற்றி வருகிறது; அதை எந்த பெரிய தொலைநோக்கியாலும் காண முடியாத அளவு அது மிகச்சின்னதாக உள்ளது என்று நான் சொன்னால், அதை யாரால் தவறென்று நிரூபிக்க முடியும்?

    அதைத் தவறென்று யாரும் நிரூபிக்க முடியாததால் நான் சொன்னதே சரி என்று நான் சொல்லிக்கொண்டிருந்தால் நான் பைத்தியக்காரத்தனமாக உளறிக்கொண்டிருப்பதாகத்தான் நினைக்க இடமுண்டு.

    ஆனால், இதுபோன்ற வானுலக டீ கப் ஒன்று வானில் சுற்றிவருவது உண்மைதான்; நம் பழைய, புதிய, இறுதி 'ஏற்பாடுகளில்', புனித வேத நூல்களில் அப்படித்தான் சொல்லப்பட்டுள்ளது என்று பள்ளிப் பருவத்திலேயே வீடு, பள்ளி, கோவில்களில் இது நமது புத்தியில் தொடர்ந்து ஏற்றப்பட்டிருந்தால் அந்த 'உண்மையை'க் கேள்வி கேட்பதே கேலிக்குரிய, மிகத்தவறான விஷயமாகிவிடும் அல்லவா. (75)

    ஆகவே, கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்கவேண்டிய கடமை நம்பிக்கையாளர்களுக்குத்தான் உள்ளது. கடவுள் மறுப்பாளர்களின் வேலையல்ல அது.
    ---------

    விஞ்ஞானத்தில் பதில் தரமுடியாத கேள்விகள் பலவும் உண்டு. ஆனால் மதங்கள் அவைகளுக்குப் பதில் தந்துவிடும் என்பது என்னவிதமான நம்பிக்கை.

    ReplyDelete
  55. ஏ.வி.எஸ்.,

    //அதை கிறிஸ்தவனாகிய நான் நம்பினதால்தான் ..//

    இது கொஞ்சம் உதைக்கிறதே. ஒரு கிறிஸ்துவன் (பத்துக் கற்பனையில் முதல் கற்பனையை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.) எப்படி ஒரு இந்துக் கடவுள் தன் இருப்பை இப்படி ஒரு பக்தனுக்குக் காட்டியிருக்க முடியும் என்பதை நீங்கள் நம்ப முடியும்னு தெரியலை!!!

    டாக்கின்ஸ் நூலில் எப்படி சில miracles அந்தந்த நம்பிக்கையாளர்களுக்கு அவர்கள் நம்பிக்கைகளை ஒட்டிய கடவுளர்களே வருகை தருகிறார்கள் என்றும் கூறியிருபபார். உங்களுக்கு எப்படி பால்முரளி கிருஷ்ணாவின் அனுபவத்தை உண்மையென்கிறீர்கள்?

    ReplyDelete
  56. @ இக்பால்
    //எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பலாம், பேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் போடலாமே//
    கடவுளுக்கு இது எல்லாம் தெரியாது என்று நினைக்கிறேன். அப்படி எல்லாம் தெரிந்து இருந்தால், உலகத்தை படைக்கும் பொது இப்போது உள்ள டெக்னாலஜி எல்லாம் அப்போதே படைத்தது இருப்பாரே! அவர் படைத்தது வெறும் கல்லும் மண்ணும் ஆனா உலகத்தை தானே! அவருக்கு தெரிந்தது அவ்வளவுதான்.

    ReplyDelete
  57. //அப்படியானால் இன்னொன்றைய்ம் நம்புங்களேன்.//

    அய்யா, உங்களைப் பாராட்ட வேண்டும். நாத்திகர்களின் நம்பிக்கையின் உறுதியும், அவர்கள் மற்றவர்களைத் தங்கள் நம்பிக்கையின்பால் திருப்ப எடுக்கும் முனைப்பும், தீவிர மதவாதிகளின் உறுதிக்கும், முனைப்பிற்கும் சற்றும் குறைந்ததல்ல என்று நினைத்திருந்தேன். நீங்கள் நிருபித்து விட்டீர்கள்.

    நீங்கள் கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை உடையவராக இருந்து, படிப்படியாக அந்த நம்பிக்கையில் சந்தேகம் கொண்டு, கடவுள் இல்லை என்ற நம்பிக்கை கொண்டவராக மாறியது போல, நான் கடவுள் இருக்கிறாரா என்ற சந்தேகத்தில் நீண்ட காலத்தைச் செலவழித்து விட்டு, இன்று கடவுள் இருக்கிறார் என்பதற்கான சாத்தியக்கூறுகளே அவர் இல்லை என்பதற்கான சாத்தியக்கூறுகளை விட அதிகம் என்ற நிலைக்கு வந்திருக்கிறேன்.

    //எப்படி பால்முரளி கிருஷ்ணாவின் அனுபவத்தை உண்மையென்கிறீர்கள்?// டாக்கின்ஸ் முதலான கடவுள் இல்லை என்ற நம்பிக்கை கொண்டவர்களின் பெரிய பிரச்சினை என்னவென்றால், அவர்கள் சிந்தனைகளுக்கு மாற்று சிந்தனை இல்லை என்று அவர்கள் மனதை மூடி வைத்து விட்டார்கள். அவர்கள் முன்வைத்த சித்தாந்தங்களுக்கு வெளியே எதுவும் நடக்க முடியாது; அதற்கான வாய்ப்பே இல்லை. உங்களது சந்தேகமும் அதே வகையே. கடவுள் இல்லை என்கிற நம்பிக்கை, மதவாதிகளின் நம்பிக்கையைப் போலவே அறிவியல் சிந்தனைகளுக்குப் புறம்பாக இருக்கிறது என்று நான் கருதுவது இதனாலும் கூட.

    ReplyDelete
  58. நாத்திகர்களின் நம்பிக்கை, மதவாதிகளின் உறுதி - இந்த இரண்டையும் ஒப்பிட்டுள்ளீர்கள். இதில் இரண்டாமவரின் உறுதி நம்பிக்கையின்பாற் பட்டது. ’புத்தக’அறிவு. தங்கள் வேதப் புத்தகத்தில் உள்ளதை ஆழமாக நம்புவதால் வரும் உறுதி. ஓவ்வொரு வார்த்தையும் கடவுளின்/அல்லாவின்/ பரிசுத்த ஆவியின் வார்த்தை என்ற உறுதி.

    ஆனால் நாதிகர்களின் நம்பிக்கை பொதுவாக அடுத்தவர் “ஊட்டி’ வருவதல்ல. என்னைப் பொறுத்த வரை நான் நாத்திகனாக ஆனதற்கு முழுப்பொறுப்பு நானே. யார் சொல்லியும் நான் கடவுளைக் ‘கைவிடவில்லை’. கைவிட்டதும் மெல்ல நடந்த மாற்றங்களால். அது ஒரு அறிவுத் தேடலில் கிடைத்தது.

    இப்படி அறிவுத் தேடலில் எடுக்கும் நம்பிக்கை புத்தக அறிவால் எடுக்கும் உறுதியை விட கூடுதலாகவே இருக்க வேண்டுமல்லவா? அதுதானே நியாயம். கிளிப்பிள்ளையை விட நம் வீட்டு மழலை பேசும் பிள்ளை மேலல்லவா?

    யார் உறுதி/நம்பிக்கை என்பது பெரிது என்ற பட்டிமனறத்தை விட்டு விட்டு, நீங்கள் சொல்லும் // இன்று கடவுள் இருக்கிறார் என்பதற்கான சாத்தியக்கூறுகளே அவர் இல்லை என்பதற்கான சாத்தியக்கூறுகளை விட அதிகம் என்ற நிலைக்கு வந்திருக்கிறேன்.// என்று நீங்கள் சொல்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கூறுங்கள். அதைப் பற்றி விவாதிப்போம். அதுவே சரியான முறையாகவும் இருக்கும்.

    //அவர்கள் சிந்தனைகளுக்கு மாற்று சிந்தனை இல்லை என்று அவர்கள் மனதை மூடி வைத்து விட்டார்கள். // ஒரு சின்ன கேள்வி. ஒரு நாத்திகன், உங்களைப் போன்ற ஒரு ஆத்திகன் - இருவரில் யாருடைய சித்தனை திறந்த சிந்தனையாக இருக்குமென்று நினைக்கிறீர்கள். நீங்கள் இரண்டில் எதைச் சொன்னாலும் நான் கேள்வியின்றி ஒத்துக் கொள்கிறேன். சொல்லுங்கள்.

    //கடவுள் இல்லை என்கிற நம்பிக்கை...அறிவியல் சிந்தனைகளுக்குப் புறம்பாக இருக்கிறது // என்கிறீர்கள். எப்படியென்று கூறலாமா?

    ReplyDelete
  59. நீங்கள் என்னிடம் கேட்டுள்ள மூன்று வினாக்களுக்குமான விடைகளை கீழ்க்கண்ட விளக்கத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்:

    ஒரு கேள்வியை, அல்லது சந்தேகத்தை ஆய்வு மூலமாக அணுகுவதே அறிவியல். முதலில் கேள்வி ஒரு அனுமான (ஹைப்பாதிஸிஸ்) வடிவத்தில் அமைக்கப்படுகிறது. பிறகு அக் கேள்வியை சரியான முறையில் பதிலளிக்க என்ன விதமான ஆய்வு நடத்த வேண்டும்; அதற்கு என்ன உபகரணங்கள் வேண்டும்; எவற்றை அளக்க வேண்டும்; அப்படி அளப்பது சரியா என்று எப்படி நிர்ணயிக்க வேண்டும்; கிடைக்கும் தகவல்களை எப்படி மதிப்பிட வேண்டும் என்று வரிசையாக பல முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அதன் பிறகு, இதற்கு முன்னர் இது தொடர்பான கேள்விகளை ஆய்ந்தவர்கள் கண்டறிந்தனவற்றிற்கும், தற்போதைய ஆய்வின் மூலம் கிடைத்திருக்கும் தகவல்களுக்கும் தொடர்பு இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். இறுதியாக, நாம் முதலில் முன் வைத்த அனுமானம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமா, அல்லது நிராகரிக்கப்பட வேண்டுமா என்ற முடிவு எட்டப்பட வேண்டும். அறிவியல் தத்துவப்படி இந்த முடிவு சர்வ நிச்சயமான முடிவு அல்ல. குறிப்பிட்ட முடிவை எட்டுவதற்கு இத்தனை சதவீத சாத்தியக்கூறு இருக்கிறது என்று சொல்வதுதான். எனவே, அறிவியல் என்பது அனுமானங்களை, நிரூபணங்கள் மூலமாக அணுகி, சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் நிராகரிப்பதோ, ஏற்றுக் கொள்ளுவதோதான். எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் நிரந்தரமாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. மீண்டும், மீண்டும் கேள்விகளுக்கும், ஆய்வுகளுக்கும் உட்படுத்தப்பட்டு, புடமிடப்படுவதே அறிவியல்.

    "ஒரு நாத்திகன், உங்களைப் போன்ற ஒரு ஆத்திகன் - இருவரில் யாருடைய சித்தனை திறந்த சிந்தனையாக இருக்குமென்று நினைக்கிறீர்கள்" என்ற உங்களுடைய சின்ன கேள்விக்கு விடை: யார் தன்னுடைய நம்பிக்கை பொய்யாக இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்பதை ஏற்றுக் கொண்டு மாற்று நம்பிக்கைகளையும் பரிசீலித்து, ஆய்வுக்குட்படுத்துகிறானோ, அவனே திறந்த சிந்தனையாளன். யார் நான் திட்டவட்டமாக அறிந்து கொண்டேன் என்று எண்ணி மாற்று நம்பிக்கைகளை முற்றிலும் புறக்கணிக்கிறானோ அவனே குறுகிய சிந்தனையாளன். ஆத்திகன் திறந்த சிந்தனையாளன், நாத்திகன் குறுகிட சிந்தனையாளன், அல்லது வைஸ் வெர்சா என்று வரையறுப்பது தவறான அணுகுமுறை.

    மீண்டும் சாத்தியக்கூறுகளுக்கு வருவோம். "இன்று கடவுள் இருக்கிறார் என்பதற்கான சாத்தியக்கூறுகளே அவர் இல்லை என்பதற்கான சாத்தியக்கூறுகளை விட அதிகம் என்ற நிலைக்கு வந்திருக்கிறேன்" என்று சொன்னேனில்லையா. முதலாவது, நாம் வாழும் அகிலம் தொடங்கி, நமது உயிர் வாழ்வு வரைக்கும் தாமாகவே தோன்றின என்ற சாத்தியக்கூறு குறைவாகவே தோன்றுகிறது. அகிலத்தின் தொடக்கமாக இருக்கட்டும், உயிர்வாழ்வின் தொடக்கமாக இருக்கட்டும், அவற்றிற்கான ஆதார விதிகளை அறிவியல் இது வரை ஆணித்தரமாக நிறுவியதில்லை. அனுமானங்கள் மட்டுமே முன்வைக்கப்படுகின்றனவே. எனவே, இவை தாமாகவே உருவாகின என்று நிலவப்படும் வரையில், ஒரு படைப்புச் சக்தி இருப்பதற்கான வாய்ப்புக்களே அதிகம் என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இது ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கம் நம் சக மனிதர்கள் ஏற்படுத்தும் அமானுட சக்தி பற்றிய சாட்சியங்கள். ஆர்.கே. நாராயணனின், பாலமுரளி கிருஷ்ணாவின், ஏ.ஆர். ரகுமானின் அனுபவங்கள். அவர்கள் அளவில் உண்மையைச் சொல்கிறார்களா, இல்லையா என்று சந்தேகிக்கத் தேவையில்லாத சாட்சியங்கள். இவற்றை உங்கள் தரப்பில், அசிமாவ் தரப்பில் சொல்லும் விளக்கங்களோடு ஒப்பிட வேண்டியுள்ளது. நீங்கள் அசாதாரண அனுபவங்களைப் பெறும் போது, அதற்கு உங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் ஏதோ ஒரு விளக்கத்தைக் கொடுத்து விட்டு சமாதானம் அடைந்து விடுகிறீர்கள். அது உண்மையிலேயே அசாதாரணமான ஒரு சம்பவமாக இருக்கலாமே என்று மீண்டும், மீண்டும் ஆராய்வதில்லை. எனவேதான், இரண்டு தரப்பு சாட்சியங்களையும் ஆராயும் போது, கடவுள் இருக்கிறார் என்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகமாகத் தெரிகிறது.

    "//கடவுள் இல்லை என்கிற நம்பிக்கை...அறிவியல் சிந்தனைகளுக்குப் புறம்பாக இருக்கிறது // என்கிறீர்கள். எப்படியென்று கூறலாமா?" இந்தக் கேள்விக்கான பதிலை முன்னரே அளித்திருக்கிறேன். ஒருவர் இருக்கிறார் என்பதை நிரூபிப்பதை விட ஒருவர் இல்லை என்று நிரூபிப்பது கடினம். உங்களைத் தேடி, உங்களைப் பார்த்து விட்டால்,"இதோ தருமி இருக்கிறார்" என்று சொல்லி விடலாம். உங்களைப் பார்க்க முடியா விட்டால், "நான் தருமி என்பவரைத் தேடிப் போனேன். நான் பார்த்த இடங்களில் இல்லை. வேறெங்கோ இருக்கிறாரோ இல்லையோ, தெரியாது" என்றுதான் சொல்ல முடியும். "தருமி" என்று ஒருவர் இல்லவே இல்லை என்று சொல்ல முடியாது. இதே தத்துவத்தையே அறிவியலும் பின்பற்றுகிறது.

    ReplyDelete
  60. // "நான் தருமி என்பவரைத் தேடிப் போனேன். நான் பார்த்த இடங்களில் இல்லை. வேறெங்கோ இருக்கிறாரோ இல்லையோ, தெரியாது" என்றுதான் சொல்ல முடியும். "தருமி" என்று ஒருவர் இல்லவே இல்லை என்று சொல்ல முடியாது. இதே தத்துவத்தையே அறிவியலும் பின்பற்றுகிறது.//

    அப்ப கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும். கடவுள் உண்டு என்பது உறுதிப்படுத்திய பின் கூறுங்கள் ஏனெனில் உண்டு என்பது உறுதிபடுத்தப்பட்டது,தெரியாது என்பது நம்பிக்கை சார்ந்தது. எனவே நம்பிக்கையே கடவுள். நம்பிக்கை என்பது அறிவியலுக்கு உடன்பாடில்லாதது. கடவுள் உண்டா இல்லையா என்பதை அறாய்வது அறிவியலின் வேலை இல்லை. அறிவியலுக்கு கடவுளின் அவசியம் இல்லை

    ReplyDelete
  61. //அப்ப கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும். கடவுள் உண்டு "என்பது உறுதிப்படுத்திய பின் கூறுங்கள் ஏனெனில் உண்டு என்பது உறுதிபடுத்தப்பட்டது,தெரியாது என்பது நம்பிக்கை சார்ந்தது. எனவே நம்பிக்கையே கடவுள். நம்பிக்கை என்பது அறிவியலுக்கு உடன்பாடில்லாதது. கடவுள் உண்டா இல்லையா என்பதை அறாய்வது அறிவியலின் வேலை இல்லை. அறிவியலுக்கு கடவுளின் அவசியம் இல்லை//

    உங்களின் புரிதல் மிக, மிகச் சரி. அந்த தத்துவத்தின் தொடர்ச்சியாக "கடவுள் இல்லை" என்றும் சொல்ல முடியாது. அறிவியலின் அடிப்படையில் நிச்சயமாகச் சொல்ல முடியாது. இதுதான் நான் சொல்ல வந்தது.

    ReplyDelete

  62. // ஆய்வு மூலமாக அணுகுவதே அறிவியல்//
    Thanks for the methodology – the whole paragraph.

    // ஆத்திகன் திறந்த சிந்தனையாளன், நாத்திகன் குறுகிட சிந்தனையாளன், அல்லது வைஸ் வெர்சா என்று வரையறுப்பது தவறான அணுகுமுறை. //

    இங்கே நீங்கள் சொன்ன methodology-யைப் பயன்படுத்திப் பாருங்களேன். சிலவற்றை நான் திரும்ப சொல்ல வேண்டியதுள்ளது. பிறக்கும்போது நாமெல்லோரும் ஆத்திகர்களே. கற்றுக் கொடுத்தவற்றை வார்த்தை பிறழாமல் இப்போதும், எப்போதும் நம்பிக்கொண்டிருந்தால் அவர் இன்னும் ஆத்திகரே. ஆனால் நாத்திகர்களாக மாறுபவர்கள் அப்படியில்லை. கிடைத்தவற்றில் எழுந்த கேள்விகளுக்குப் பதில் தேடியவர்கள். (பதிலுக்காக அலைந்தவர்கள் என்பதே அவர்கள் ஆத்திகர்களை விட ஒரு படி மேல்.) கிறித்துவத்தில் பிறந்த நம்மிருவரில் எனக்கு வந்த ஐயங்கள் உங்களுக்கு வராமலா இருந்திருக்கும். தமதிரித்துவம், ஏசுவின் பிறப்பு, அநித்திய நரகம், பாப்பானவரின் தவறா வரம் ... இது போன்ற பலவற்றில் எனக்கு எழுந்த ஐயங்கள் உங்களுக்கும் வந்திருக்கும். பிறந்த்திலிருந்து வளர்ந்து வந்த பக்தி மார்க்கம் உங்களைத் தடுக்கும். அவ்வளவே ..! நாத்திகம் ஒரு தொடர் தேடல். அது அறிவியல் போல் வளர்கிறதேயொழிய அப்படியே ஆத்திகனின் நம்பிக்கை போல் முற்றுப் புள்ளியோடு முடிந்து நிற்பதில்லை. இப்படிப்பட்ட இருவரில் யார் சிந்தனையாளன் / திறந்த சிந்தனையாளன் என்று நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.

    ReplyDelete
  63. // .. அவற்றிற்கான ஆதார விதிகளை அறிவியல் இது வரை ஆணித்தரமாக நிறுவியதில்லை.// இதைச் சொல்லும் போதே பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அனுமான்ங்கள் இன்று பல உண்மையாகி விட்டன் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா? நீங்கள் சொன்ன hypothesis .. ஆய்வுகள் என்று வளர்ந்து கொண்டுவருவது உண்மையில்லையா?
    // இவை தாமாகவே உருவாகின என்று நிலவப்படும் வரையில், ஒரு படைப்புச் சக்தி இருப்பதற்கான வாய்ப்புக்களே அதிகம் என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.//
    இது கொஞ்சம் வேடிக்கையாக உள்ளது. அறிவியலின் எல்லை விரிந்தால் நாத்திகத்தை நம்புவேன் என்கிறீர்கள். என் காலத்தில் அது நடக்கப் போவதில்லை. ஆனால் உங்கள் காலத்தில் இன்னும் பல அறிவியல் உண்மைகள் வெளிவரும். அப்போதாவது மாறலாமா என யோசித்துக் கொள்ளுங்கள்!

    ReplyDelete
  64. // அமானுட சக்தி பற்றிய சாட்சியங்கள்// இதற்கு எதற்கு பால முரளி கிருஷ்ணா, ஆர்.கே. நாராயணன் போன்றவர்களிடம் போக வேண்டும் என்று தான் என் கதை கூறினேன். (ஏ.ஆர். ரஹ்மான் இந்த ‘குரூப்பில்’ வரவில்லை, அவருக்கு வயிற்று வலி சரியாகப் போனதாம். காட்சிகள், தரிசன்ங்கள் ஏதுமில்லை.) எல்லா அமானுட விஷயங்களுக்கும் விளக்கம் இல்லைதான். விளக்கம் கொடுக்க முடியவில்லை என்பதாலேயே அது ’கடவுளின் விஷயமாக்’ இருக்க வேண்டியதில்லை. அதிலும் இன்னொரு சந்தேகம். நீங்கள் ஒரு கிறித்துவர் என்கிறீர்கள். ஆனால் பாலமுரளி கிருஷ்ணாவிற்கு இந்துக் கடவுள் அடையாளம் காட்டியதை நம்புகிறீர்கள். நீங்கள் ‘அந்தக் கட்வுளை’யும் நம்புகிறீர்களா .. என்ன? ஒரே கடவுளா? இல்லை .. அவரவர் நம்பிக்கைகளுக்கு ஏற்ற மாதிரி பல கடவுள்களா?

    // ஏதோ ஒரு விளக்கத்தைக் கொடுத்து விட்டு சமாதானம் அடைந்து விடுகிறீர்கள். அது உண்மையிலேயே அசாதாரணமான ஒரு சம்பவமாக இருக்கலாமே என்று மீண்டும், மீண்டும் ஆராய்வதில்லை.// இதென்ன்ங்க .. அநியாயமா இருக்கு. எனக்குக் கிடைக்கும் விளக்கத்தையும் தாண்டி நான் இன்னும் என்ன தேட வேண்டும் என்கிறீர்கள்? விளக்கம் கிடைத்த பின் எதற்காக மீண்டும் மீண்டும் ஆராய வேண்டும்? அப்படி ஆராய்ந்தால் //கடவுள் இருக்கிறார் என்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகமாகத் தெரிகிறது.// என்கிறீர்கள்! விளக்கம் கிடைத்த பின்னும் ஆராயணும் .. அதில் கடவுளுக்கான சாத்தியங்கள் தெரியும். Some logic … but I don’t get it!

    ReplyDelete
  65. // அந்த தத்துவத்தின் தொடர்ச்சியாக "கடவுள் இல்லை" என்றும் சொல்ல முடியாது.//
    அப்படியானால் உங்களால் கடவுள் உண்டு என்றும் சொல்ல முடியாதல்லவா?

    ReplyDelete