*
*
*
*
THE
GNOSTIC GOSPELS
மற்ற பதிவுகள்:
..................... முதல் பதிவு
..................... இரண்டாம் பதிவு
..................... மூன்றாம் பதிவு
................... நான்காம் பதிவு
.................... ஐந்தாம் பதிவு
.................... ஆறாம் பதிவு
.................... இறுதிப் பதிவு
..................... முதல் பதிவு
..................... இரண்டாம் பதிவு
..................... மூன்றாம் பதிவு
................... நான்காம் பதிவு
.................... ஐந்தாம் பதிவு
.................... ஆறாம் பதிவு
.................... இறுதிப் பதிவு
முடிவுரை
வெற்றி பெற்றவர்கள் எழுதும் வரலாறு எப்போதும் அவர்கள் விருப்பம் போலவே எழுதப்பட்டு இருக்கும். இதனாலேயே வளர்ந்து வந்த பழமைக் கிறித்துவர்கள் தங்களை Orthodox என்றும், மற்றவர்களை heretical என்றும் பிரித்து, தாங்கள் கிளைத்து வளர்ந்ததற்கு ‘பரிசுத்த ஆவி’யே காரணம் என்றும் ஒரு வரலாற்றைப் படைத்து விட்டார்கள்.
ஆனால் நாக் ஹமாதியின் பழம் எழுத்துக்கள் இதனை ஒரு கேள்விக் குறியாக்கி விட்டுள்ளன. ஆரம்பத்தில் பல்வேறு அமைப்புகளோடு இயங்கி வந்த கிறித்துவம் அப்படியே விடப்பட்டிருந்தால், கால அமைப்பில் மடிந்து போன பல மதங்கள் போலவே அழிந்து போயிருக்கலாம். அந்த அழிவிலிருந்து தப்பித்தது கிறித்துவத்தின் அமைப்பு முறையாலும், இறையியல் கட்டுக்கோப்பினால் மட்டுமே முடிந்தது. (142)
பழமைக் கிறித்துவம், gnostic கிறித்துவம் போலல்லாமல், பிற மனிதர்களோடான உறவிற்கு முக்கியத்துவம் அளித்தது. (146)
Irenaeus கடவுள் இரட்சணியத்தின் வழியை மிகவும் புத்திசாலித்தனத்தாலோ, ஆன்மீகத்தினாலோ அடையும்படி நிச்சயமாக வைக்க மாட்டார். எளிமையானதாகவும், எல்லோராலும் அடையும் விதமாகவும் தான் வைத்திருப்பார் என்றார். (147)
மேலும் Irenaeus, கிறித்துவர்கள் தங்கள் மதத்தைச் சீராக வழுவ வேண்டுமென்றும், தலைமையின் கீழ் முழு நம்பிக்கை வைக்க வேண்டுமென்றும், தலைமை அனுமதிக்கும் வேத நூல்களை, சமயச் சடங்குகளை, தலைமையின் ஆளுமையை மட்டும் மதிக்கும்படியும் வலியுறுத்தினார்.
ஏசு, லூக்: 14:26-ல் “என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர், சகோதரிகள் ஆகியோரையும், ஏன் தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது” என்று கூறியுள்ளார். (எங்கள் உயிரினும் மேலான நபி என்று இஸ்லாமியரும் சொல்வது இதன் அடிப்படையில் தானோ? அவர்களுக்கு முகமது; இவர்களுக்கு ஏசு! மத ஒற்றுமை !!!) தன் வழியில் வருவோர் தங்கள் சுற்றம் முழுமையையும் நிராகரிக்க வேண்டுமென்றும், தன்னைப் போலவே குடும்பம், திருமணம், உறவு என்று ஏதுமில்லாமல் தன் உயிர் பற்றிய கவலையும் கொள்ளாமல் உண்மையைத் தேடி அவர் சென்றது போலவே தன் சீடர்களும் இருக்க அவர் எதிர்பார்த்தார். (148)
கிறித்துவத்தை வெறுத்த நீட்ஷே -Nietzsche , ‘ஒரே ஒருவர் மட்டுமே உண்மையான கிறித்துவன்; அவர் சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டார்’ என்று எழுதினார். (149)
gnostic கிறித்துவம் பூமிக்குள் ஓடும் ஒரு அமைதியான நதி போல் காலம் பூராவும் ஓடி வந்துள்ளது அவ்வப்போது அது நிலத்திற்கு மேலும் பீறிட்டு வருவதுண்டு; மத்திய காலக்கட்டத்திலும் (Middle Ages), அதன் பின் மறுமலர்ச்சிக் காலத்திலும் (Reformation) அப்படி வெளிக்கிளம்பிய கிறித்துவம் பல மாற்றங்களையும் கண்டது. அதிலும் மறுமலச்சிக் காலத்தில் Baptist, Pentecostal, Methodist, Episcopal, Congregational, Presbyterian, Quaker போன்ற பிரிவுகள் பல பழமைக் கிறித்துவத்திற்குள் தோன்றின. இவ்வமைப்புகள் எல்லாமே புது ஏற்பாட்டையும், பழைய சமய வழிமுறைகளையும் தக்க வைத்துக் கொண்டன. கிறித்துவ தேவ திரவியங்களை அவர்கள் தங்கள் வசதிக்கேற்றபடி மாற்றிக் கொண்டனர். ஆனால் அவைகளை எப்போதும் கைவிடவில்லை.
Valentinus, Heracleon, Blake, Rembrandt, Dostoevsky, Tolstoy and Nietzche போன்றவர்கள் அனைவரும் இயங்கி வந்த பழமைக் கிறித்துவத்தின் விளிம்பில் மட்டுமே தங்களை நிறுத்திக் கொண்டார்கள். அவர்கள் அனைவருக்கும் கிறித்து, அவரது பிறப்பு, வளர்ப்பு, அவரது அறிவுரைகள், இறப்பு, மீண்டும் உயிரோடு எழும்புதல் - எல்லாமே பிடித்துள்ளன. ஆனால் பழமைக் கிறித்துவத்தில் இருந்த அமைப்பின் ஆளுமைக்கு எதிராகவே அவர்கள் இருந்தனர். இன்றும் இதே நிலை பல கிறித்துவர்கள் மத்தியில் இருந்து வருகிறது. கிறித்துவத்தின் ஆரம்பத்தில் கேட்கப்பட்ட பல பழைய கேள்விகள் இன்னும் அதே போல் எழுப்பப்பட்டு வருகிற்ன்றன.
பல கேள்விகள் :-
*ஏசுவின் மறு உயிர்ப்பை எப்படிப் புரிந்து கொள்வது?
*பெண்களுக்கான இடம் கிறித்துவத்தில் எது? குருவானவர்களாக, கிறித்துவத்தின் ஆளுமையில் அவர்கள் இடம் எது?
*கிறிஸ்து என்பவர் யார்?
*கிறிஸ்துவிற்கும் அவரை நம்புவோருக்கும் உள்ள உறவு என்ன?
*கிறித்துவத்திற்கும் ஏனைய உலக மதங்களுக்குமான தொடர்புகள் என்ன?
(150)
நாக் ஹமாதியில் கண்டெடுக்கப்பட்ட சுவடிகள் ஆயிரம் வருடங்களுக்கு முன் கண்டெடுக்கப்பட்டிருந்தால் அன்றே அவைகள் முற்றாக எரித்து, அழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இருபதாம் நூற்றாண்டு வரை பாதுகாப்போடிருந்து வெளிவந்த இந்த நூல்கள் இப்போது ஒரு புதிய வழியைக் காண்பிக்கின்றன. கிறித்துவத்தின் மீது ஒரு புதிய பர்ர்வையைக் கொடுக்கின்றன. அவைகளை வெறும் மதப்புரட்டு, பைத்தியக்காரத்தனம் என்பது போன்ற தலைப்புகள் கொடுக்காமல், அவைகளைக் கிறித்துவத்தின் ஆரம்பகாலத்து வரலாறாகப் பார்க்கிறோம். இன்றைய பழமைக் கிறித்துவத்திற்குப் போட்டியாக வரலாற்றில் அன்று இருந்த ஓர் உண்மையை இன்று காண்கிறோம். (151)

வணக்கம் அய்யா,
ReplyDeleteஅருமையாக ஆரம்பித்து அழகாக முடிந்த தொடர்.கிறித்தவத்தின் மீதான என் பார்வையை இன்னும் கூர்மைப் படுத்தியது எனக் கூறலாம்.
ஒரு குறிப்பிட்ட மதம் அதன் அடியார் ஒவ்வொருவராலும் ஒரே மாதிரியாக எபோதும் பின்பற்றப்படும் என்பது அறிவின் படி ஏற்கும் படியாக இருக்காது. மனிதர்கள் வித்தியாசமானவர்கள் என்பதல் சிந்த்னைகள்,விளக்கங்கள் கிளைத்து தழைப்பதை தடுக்க இயலாது.
ஒரு மதத்தின் தோற்றம் என்பதெ இன்னொரு அழிந்த மதத்தின் பரிணாம வளர்ச்சியே ஆனால் இது மறைக்கப்படும். அவ்வகையில் கிறித்தவத்தின் அரசியலால் பல இதர முக்கிய பிரிவுகள் அழிகப்பட்டன .ஏன் எனில் தத்துவ தேடல் கொண்ட இயல்பான மதங்கள் ஆட்சி அரசியல் அதிகாரத்தை ஆதரிக்காது.சிந்தித்தால் கேள்வி கேட்பான்!!
" நான் ஆண்டவன் அனுப்பிய புருஷன் ஹா ஹா ஹா" என நீல வண்ண நரி போல் ஆள் முடியாது.[ஃபளாச்க் பேக மூன்றாம் பிறை திரைப்பாடல்]
இதை செய்,செய்யாதே எனப் போதிக்கும் மதங்கள் ஆள்பவர்களால் விரும்பி ஆதரிகப்படுவதில் வியப்பில்லை.
//நாக் ஹமாதியில் கண்டெடுக்கப்பட்ட சுவடிகள் ஆயிரம் வருடங்களுக்கு முன் கண்டெடுக்கப்பட்டிருந்தால் அன்றே அவைகள் முற்றாக எரித்து, அழிக்கப்பட்டிருக்கலாம். //
இதேதான் உண்மை. வரலாறை அழிப்பதும் திரிப்பதே மதவாதிகளின் செயல்.
இன்னும் சில வரலாற்று சுவடுகள் சிக்கியது அதிகார மதங்களின் பிடியில் இருந்து மனிதம் விடுபட தடைகள் விலகுவதாகவே தோன்றுகிறது.
இந்த நாக் ஹாமிடியில் மானி&இத்ர மதங்களின் புத்தகங்களும் கிடைத்ததாக சில தகவல் உண்டு.மேலதிக தக்வல்கள்க்கு ....
[http://www.gnosis.org/naghamm/nhlalpha.html]
[http://gnosis.org/library.html]
மதங்களின் தோற்றமாக செய்யப்படும் பிரச்சாரங்களுக்கு மூலப்பிரதிகள், மொழியியல், அகழ்வாய்வு சார்ந்து ஆதாரம் இல்லை என்பது வெட்ட வெளிச்சம் ஆகி வருகிறது.
இன்னும் 20+ வருடங்களின் மதங்களின் மீதான பெரும்பானமையினரின் பார்வையே மாறிவிடும் என்பதே என் கணிப்பு.ஆன்மீக தேடல்,தத்துவ விளக்கம்[ஹி ஹி ஏறக்குறைய நாத்திகம்] கொண்ட மதங்கள் மட்டுமே நிலைக்கும் .மற்றவை அழியும்!!!
நன்றி அய்யா!!!
சார்வ்ஸ் (ஆ! இது பிடிக்குதே!)
ReplyDeleteஉங்கள் பின்னூட்டம் எப்போதுமே மிகுந்த ஆச்சரியத்தை எனக்கு ஏற்படுத்தும். உங்கள் gnosis மேல்
எனக்கு அப்படி ஒரு ஆச்சரியம். எப்படி இம்புட்டு தெரிஞ்சி வச்சிருக்கீங்கன்னு ... நல்லது .. மேலும் மேலும் வளர்க.
இப்பின்னூட்டத்தில் பிடித்த சில வரிகள்:
//கிறித்தவத்தின் அரசியலால் பல இதர முக்கிய பிரிவுகள் அழிகப்பட்டன // (மதங்களே அரசியலோடு தானே வளர்கின்றன?!)
//சிந்தித்தால் கேள்வி கேட்பான்!!//
சிந்திப்பீர்களான்னு கேட்டுக்கிட்டே இருப்பாங்க; ஆனா சிந்திக்க மாட்டாங்கன்னுல்லா நினச்சேன்!
//இதை செய்,செய்யாதே எனப் போதிக்கும் மதங்கள் ஆள்பவர்களால் விரும்பி ஆதரிகப்படுவதில் வியப்பில்லை.//
ரொம்ப வசதியில்லையா! அதான்!
//இன்னும் 20+ வருடங்களின் மதங்களின் மீதான பெரும்பானமையினரின் பார்வையே மாறிவிடும் என்பதே என் கணிப்பு.ஆன்மீக தேடல்,தத்துவ விளக்கம்[ஹி ஹி ஏறக்குறைய நாத்திகம்] கொண்ட மதங்கள் மட்டுமே நிலைக்கும் .மற்றவை அழியும்!!!//
ReplyDeleteஇடையிலே ஜோக்கெல்லாம் அடிக்கப்படாது. ஆமா....
ஓ....நீங்க மதத்தைதானே சொன்னீங்க... மார்க்கத்தை இல்லையே! அப்ப ஓகே.... :-)
தருமி அய்யா!உங்கள் புரபைல் போட்டோவெல்லாம் அம்சமாத்தானே இருந்தது!ஏன் மாற்றம் செய்தீர்கள்?சீரியல் பார்க்கும் நேரம் தவிர இந்த மாதிரி சித்து வேலைகளுக்கும் நேரம் கிடைக்கிறதென நினைக்கிறேன்:)
ReplyDelete//(மதங்களே அரசியலோடு தானே வளர்கின்றன?!)//
மதம் வேண்டுமானால் அரசியலோடு வளரலாம்.ஆனால் மத தீவிரவாதம் வளர கிரியா ஊக்கியாக அரசியலோடு பொருளாதாரமும் ஒரு முக்கிய காரணம்.உதாரணம் சமீபத்து கலவர நாடுகளாய் லிபியா,எகிப்து,இந்தியா,பாகிஸ்தான்,ஏமன்,ஆப்கானிஸ்தான் இன்ன பிற நாடுகள்.
சார்வ்ஸ்,
ReplyDelete//இன்னும் 20+ வருடங்களின் மதங்களின் மீதான பெரும்பானமையினரின் பார்வையே மாறிவிடும் என்பதே என் கணிப்பு.//
I am not that optimistic! அதாவது நானும் சுபியும் ஒரு கட்சி. ஆனால் சுபி பெயரை மட்டும் மாத்தி அவங்க ’மார்க்கத்தைக்’ காப்பாத்றதை பார்த்தா சிரிப்பு வருது. மார்க்கம் அப்டின்னுட்டா அது மதம் இல்லாம போய்ருதே. நல்ல மாஜிக். ஆமா சுபி, மார்க்கம்னா என்ன?
ராஜ நடராஜன் ,
ReplyDeleteரெண்டு சீரியலை பார்க்க உட மாட்டீங்களா? அநியாயமால்ல இருக்கு!
படத்தை மாத்திருவோம்!
பொருளாதாரம் அரசியலில் அடக்கம் தானே!
வணக்கம் அய்யா,
ReplyDeleteநாம் ஆருடம் கூறுவது இல்லை.
மார்க்க மேதை சகோ சு.பி யின் கேள்விகள்,கருத்துகள் விமர்சனங்களுக்கு மறுப்பு சொல்லாமலும் இருந்தது இல்லை.
பாருங்கள் மதம் என்பதை மார்க்கம் என மார்க்க மேதை சகோ சு.பி ஏற்கும் போதே மாற்றம் வந்துவிடுகிறது.
இன்னும் கூட நான் கூறியது பதிவுலகில் வந்த மாறுதல்கள் பற்றியே.
மார்க்க மேதை சகோ சு.பியே குரானை இழிவு செய்தால் தண்டனை கூடாது என்பது, முகமது பற்றிய காணொலியை நீக்க மறுத்தாலும் யு டுயுபை புறக்கணிக்காமை போன்ற்வை இஸ்லாமின் பரிணாம வளர்ச்சியை காட்டுகின்றதா இல்லையா.
90ல் சல்மான் ருஷ்டியின் புத்த்கத்திற்கு வந்த எதிர்ப்பு
இப்போது சாம் பசைலின் திரைப்படத்திற்கு வந்த எதிர்ப்பு ஒப்பிட்டு பாருங்கள்.
இன்னும் 20+ ஆண்டுகளில் எண்ணெய் தீர்வதால் மத்தியக் கிழக்கிற்கும் மதத்தை விட பொருளாதாரமே முக்கியம் ஆகும்.
வெளிநாட்டவர் பலர் அங்கு அப்போது பணியாற்ற முடியாது. ஆகவே அங்கிருந்து உலகமெல்லாம் ஓங்கி ஒலிக்கும் மத பிரச்சார ஒலி(ளி)பரப்பு கூட்டுஸ்தாபனம் இல்லாமல் போகும்
இபோது நான் சொல்வது புரிந்து விடும்.
மார்க்க மேதை சகோ சுவனன்& கோ இருக்கும் வரை என் கணிப்புகள் எளிதில் நிரூபிக்கப்படும்.
நன்றி
//ஆமா சுபி, மார்க்கம்னா என்ன?//
ReplyDeleteகுர்ஆன் இடும் கட்டளைகள் மார்க்கம்.
வணக்கம் அய்யா,
ReplyDeleteகிருத்துவத்தைப் பற்றிய சில சந்தேகங்களை களைய உங்கள் பதிவு எனக்கு பயன்பட்டது. முக்கியமாக அந்த கேள்விகளே சிந்திக்க வைத்தது!!!
//சிந்திப்பீர்களான்னு கேட்டுக்கிட்டே இருப்பாங்க; ஆனா சிந்திக்க மாட்டாங்கன்னுல்லா நினச்சேன்!//
சிந்திப்பார்கள் இஸ்லாம்+முஸ்லிம்+அல்லா+நபி(ஸல்)+மறுமை வாழ்வு மட்டும்=சிந்திக்கக் கூடாது எனவே இதைத் தாண்டி சிந்திக்க(மறுப்பார்கள்) மாட்டார்கள்.
இனியவன்...
//குர்ஆன் இடும் கட்டளைகள் மார்க்கம். //
ReplyDeletethis is equal to அல்லா (என்னும் கடவுள்) இடும் மதம்!
அம்புட்டுதான... ஏதோ ஒரு ‘சாமி’ இடும் கட்டளைகள் உள்ளதுதான் மதம். இதிலெப்படி மதம் வேறு; மார்க்கம் வேறு என்பது!!
ரெண்டு ‘இதுவும்’ ஒண்ணுதான்!
//மார்க்க மேதை சகோ சு.பியே குரானை இழிவு செய்தால் தண்டனை கூடாது என்பது, ..//
ReplyDeleteஅப்படியெல்லாமா சுபி கூறிட்டார்?
அவரா சொன்னார் ..
நம்ப முடியவில்லை ..
நம்ப முடியவில்லை .. சார்வ்ஸ்!
//குர்ஆன் இடும் கட்டளைகள் மார்க்கம்.//
ReplyDeleteயூதர்களையும் கிறித்தவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்ளாதே.
முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள்
இதுதானே குர்ஆன் இடும் கட்டளைகள்?