*
அட .. இந்த சென்னைவாசி மகராசங்களை ஒதுக்கி வச்சுட்டு பார்த்தா த.நா.வில் இருக்குற பாவி மக்க எல்லோருமே கோவில் முன்னால் உக்காந்து கொண்டு, இந்த தலைப்பைப் பாடிக்கொண்டிருக்கும் பாவப்பட்ட பிச்சைக்காரங்க மாதிரிதான் எனக்கு மனசுல தெரியுது.
காலையில் ரெண்டு மணி நேரம். அதிலேயும் கொஞ்சம் கரண்ட் திருடிர்ராங்க. சரியா ரெண்டு மணி நேரம் அப்டின்னு சொல்லுவாங்க... ஆனால் அதில ஒரு பத்து இருபது நிமிஷம் லேட் பண்ணிதான் கரண்டு கொடுப்பாங்க . அதன் பின் நாலு மணி நேரம் இருண்ட காலம். பிறகு அடுத்த ரெண்டு மணி நேரம். அதுக்குப் பிறகு மாலை நேரம் வந்திருச்சின்னா ..கோவிலுக்கு வந்துட்ட போற மகராசங்க அந்தப் பிச்சைக்காரங்களுக்கு ஏதேனும் மனசு வந்துச்சுன்னா சில்லறை போட்டுட்டு போவாங்களே .. அது மாதிரி அப்பப்போ கொஞ்சூண்டு கரண்ட் வரும் .. வராம போகும். ஒரு ரூபாய் போடுற ஆள்ட்ட ரெண்டு ரூபாய் கொடுத்தாதான் எடுத்துக்குவேன்னு எந்தப் பிச்சைக்காரனும் சொல்ல முடியுமா? ஏதோ .. பெரிய மனசு பண்ணி ஐயா .. அம்மா .. போடுதுன்னு எடுத்துக்குவாங்கல்லா .. அது மாதிரி தான் நாங்களும். சத்தமா கூட நாங்க எங்க எதிர்பார்ப்பை யார்ட்டயும் சொல்றதில்லை. நம்ம மம்மி என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றாங்க ..? நமக்கு என்ன கொடுப்பினையோ அது தானே நமக்குக் கிடைக்கும் .. இல்லீங்களா? நம்ம சட்டி பெருசுன்னா அதுக்காக பிச்சை போடுறவங்க பெருசாவா போடப்போறாங்க ... ஆண்டவன், நம்ம சின்னூண்டு நெத்தியில எப்படி எழுதி வச்சிட்டான் .. என்ன பண்றது சொல்லுங்க !
நம்மள மாதிரி ஒரு பதிவர் என்ன பண்ணுவார்னு சொல்றேனே .. சில நாள் காலையில் 6 - 8 கரண்ட் வரும். அப்போ காலையில் பொட்டி பக்கமே வர முடியாது. காலையில் எழுந்திருக்க, விளையாடிட்டு வர ... அதுக்குத் தான் 8 மணி ஆகிடுமே. எப்போடா 12 மணி ஆகும்னு காத்துக்கிட்டு இருக்கணும் வெளியே எங்கேயும் போனாலும் 12 மணிக்கு வீட்டு வரணும்னு ஒரு நினைப்பு ஓடிக்கிட்டே இருக்கும். 12 - 2 மணிக்கு கரண்டு வருதுன்னு வச்சுக்குவோம். பொட்டியைத் திறந்து மயில் பாத்து, லேசா தமிழ்மணம் பக்கம் போனோம்னு வச்சுக்கங்க. அன்னா இன்னான்னு ஒரு மணி அல்லது ஒன்றரை மணி ஆய்டும். அப்போதான் தங்க்ஸ் வெரட்டி வெரட்டி சோறு தின்னுட்டு போன்னு வெரட்டுவாங்க. இதுலேயே கதை முடிஞ்சிரும்.
அடுத்து 6 மணிக்கு மறுபடி திட்டிவாசல் திறக்கும்னு உக்காந்திருக்கணும். இந்த 6 - 7 மணிக்கு க்ரண்ட் எதிர்பார்க்கிறது .. அது வர்ரது ... போறது இருக்கே ... அடப் பாவி மனுஷங்களான்னு T.N.E.B.யை மனசார திட்டணும் போல இருக்கும். ஏன்னா இந்த டைமிங்கில் பொட்டி முன்னாடி உக்காந்திங்கன்னு வச்சுக்குவோம். வாழ்க்கையே விரக்தியாயிடும். ஏன்னா இதுவரை பல தடவை அது மாதிரி நடந்திருக்கு. என்னன்னா ... 6 மணிக்கு கரண்ட் வந்திருச்சேன்னு சந்தோசமா பொட்டி முன்னால் உக்காருவீங்க. மயில் பொட்டியை திறப்பீங்க .. அம்புட்டுதான் ... கரண்ட் போயிரும். வழக்கம் போல கரண்ட் போனதும் தங்க்ஸ் கூட விளக்கு ஏதுமில்லாமல் கொசுக்கடிக்கி ஆளாகி முன்னறையில் உக்காந்திருப்போம். பத்து நிமிஷம் கழிச்சி படார்னு கரண்ட் வந்திரும். ஆசை ஆசையாய் மறுபடி பொட்டி முன்னால் உக்காந்து திறப்பீங்க .. படார்னு எல்லாம் போயிரும். மீண்டும் முன்னறை .. கொசு .. அடுத்து கொஞ்ச நேரத்தில் மறுபடி சோதனை வரும். இப்படியே முன்னறைக்கும் பொட்டிக்கும் நடுவில் ரிலே ரேஸ் இருக்கும். வாழ்க்கையின் உச்ச கட்ட எரிச்சல் அப்போதான் வரும். ஆனாலும் என்ன பண்ண் முடியும். ’மனசுக்குள்ள பிச்சை பாத்திரம் ஏந்தினோம் .. அய்யனே .. அய்யனே’ன்னு பாடிக்கிட்டு கொசுவோடு போட்டி போட்டுக்கொண்டு இருக்கணும்.
ஒரு நாள் என்னமோ போறாத காலம்! பொட்டி முன்னால் கரண்ட் இல்லாதப்போ கூட கொஞ்ச நேரம் உக்காந்துட்டேன். inverter-க்கு சரியான பசி போலும். கரண்ட் வந்ததும் அது நிறைய சாப்பிட்டிருச்சி. ராத்திரி ஒண்ணரை மணிக்கு கரண்ட் போச்சு ... inverter தூங்கப் போயிருச்சி. நமக்குத் தூக்கம் போச்சு. அந்த நேரத்தில் முன் அறைக்கு போய் காத்து வருதான்னு பார்த்தா ஒண்ணும் இல்லை. நாங்க வீடல வழக்கமா சொல்றது மாதிரி சொல்லணும்னா ‘கடவுள் switch போட மறந்துட்டார்’. காத்தும் வரலை; தூக்கமும் வரலை. அதுனால இப்போவெல்லாம் கரண்ட் சாமி வரலைன்னா உடனே பொட்டியை விட்டு படார்னு எழுதிருச்சிர்ரது தான். வேற வழி.
இதுக்கெல்லாமா நாம மம்மியை குறை சொல்ல முடியும். ஆனாலும் இன்னும் மனசுக்குள்ள ஒரு சின்ன ஆசை. எங்களுக்கு 14 மணி நேரம் கரண்ட் இல்லை; இந்த மதராஸி மக்களுக்கு இதில இன்னும் கொஞசம் பங்கு கொடுக்கக் கூடாதான்னு. சூடு அங்க வச்சாதான் அரசுக்கும் சூடு வச்சது மாதிரி இருக்கும்னு அடியேனுக்குத் தோணுது. எல்லாம் ஒரு நப்பாசை தான்!
பிச்சைப் பாத்திரம் ஏந்தினோம் .. அய்யனே ... என் அய்யனே ...
பாத்துப் போடுங்க’ய்யா ... !
*
நல்ல ஒரு தகவல் & உபயோகமான தகவல்.
ReplyDeleteமிக்க நன்றி.
Latest Tamil News
வணக்கம் அய்யா
ReplyDeleteஅருமை,
//. ஆனாலும் இன்னும் மனசுக்குள்ள ஒரு சின்ன ஆசை. எங்களுக்கு 14 மணி நேரம் கரண்ட் இல்லை; இந்த மதராஸி மக்களுக்கு இதில இன்னும் கொஞசம் பங்கு கொடுக்கக் கூடாதான்னு. சூடு அங்க வச்சாதான் அரசுக்கும் சூடு வச்சது மாதிரி இருக்கும்னு அடியேனுக்குத் தோணுது. எல்லாம் ஒரு நப்பாசை தான்!//
ஹி ஹி பெறுக யாம் பெற்ற து(இ??)ன்பம் இவ்வையகம்
வாழ்க வளமுடன்.
நன்றி!!!
இல்ல சார்வ்ஸ் .. சூடு வைக்கிறதுக்காகத்தான் சொன்னேன். அப்படி ஏதாவது ஒண்ணுனால ஏதாவது நடந்திராதான்னு ஒரு நப்பாசை!
ReplyDeleteஅய்யா இப்படி மாத்தி மாத்தி யோசிக்காம…உருப்படியா மின்சாரத்திற்கு மாற்று எரிசக்தியாம் சூரிய சக்தியை மின்சக்தியா மாற்றுவதற்கு நம் இளைய தலைமுறையை தூண்டி விடுமாதிரியான பதில் போட்டிருக்கலாம். நாம் தலைவர்களை மாத்துவதை தவிர்த்து நம் தலைவிதியை மாற்றிக்கொள்ள மாற்று யோசனை செய்வோம்…எளிய புதிய வழிகளை தேடி பிடிக்க உங்களை போன்ற மூத்த பேராசிரியர்கள் மாணவர்களை தூண்டும் விதமாக எழுதினால் நன்றாக இருக்கும்.. தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும். இதுக்கு தான் நான் ஆள் காணாமல் சென்று விட்டேன்!
ReplyDeleteஎப்படி சார் சமாளிக்கிரிங்க ??? நீங்க எல்லாரும் ரொம்ப ரொம்ப கிரேட் ....
ReplyDeleteவிஜய்
FROM COLOMBO
எங்களுக்கு ரெண்டு மணிதான் போகிறது. உண்மைதான். அதிலேயெ இன்வெர்ட்டர் படுத்துவிடுகிறது. பாட்டரிக்கு மேல் பாட்டரி போட்டச்சு.
ReplyDeleteஇன்னும் அதில் செலவழிக்க மனமில்லை. வெளியே போய் வரலாம். அதற்கும் செலவழிக்கணும்.
திருச்சி,சேலம், என்று எல்லா ஊர்களையும் நினைக்கும்போது மிக வருத்தமாக இருக்கிறது.இன்னும் இரண்டு மணி நேரம் எங்களிடமிருந்து எடுத்துக் கொடுக்க நான் ரெடிப்பா.
ரிலே ரேஸ்.. :)
ReplyDeleteகரெண்ட் போனப்பறமும் கம்ப்யூட்டர் முன்னாடின்னு சொன்னப்ப.. இன்வெர்ட்டர்ல கனெக்ஷன் கொடுக்காத எங்க வீட்டு கம்ப்யூட்டர் நினைப்புல.. கரெண்ட் போனப்பறம் ஏன்னு ஒரு நிமிசம் யோசிச்சிட்டேன்..:)
ஆமா அன்னைக்கு உங்கள ஒன்னும் சொல்லலயா.. :)
//இன்வெர்ட்டர்ல கனெக்ஷன் கொடுக்காத எங்க வீட்டு கம்ப்யூட்டர் நினைப்புல...//
ReplyDeleteகொடுத்து வச்ச மகாராணிங்க நீங்க !!!
இன்வெர்ட்டர் பின்புறம் ஹை சார்ஜ் என்கிற ஆப்ஷனுடன் ஸ்விட்ச் இருக்கிறதா என்று பாருங்கள். அதிக பவர் கட் இருக்கும் இடங்களில் இந்தப் பொஸிசனுக்கு ச்விட்சை மாற்றி வைத்தால்தான் பேட்டரி விரைவில் சார்ஜ் ஆகும். சென்னைக்கு வெளியே இருப்பவர்கள் நிரந்தரமாக ஹைசார்ஜ் பொஸிசனை செலக்ட் செய்துவிடுவதே நல்லது.
ReplyDeleteஹையோ, அப்படியே நேரிலே எங்க வீட்டிலே வந்து பார்த்துட்டு எழுதி இருக்கீங்களே! என்ன? கொஞ்சமே கொஞ்சம் மாறுதல், தங்க்ஸ்னு எழுதி இருக்கிற இடத்திலே ரங்க்ஸுனு போட்டுக்கணும், அம்புடுதேன்!
ReplyDeleteயாம் பெற்ற இன்பம் பெறுக மற்ற மாவட்டங்களும்! குறிப்பாய்ச் சென்னை மாஆஆஆஆஆஆவட்டம்! :P:P:P:P:P
Shankar G
ReplyDelete// ஹைசார்ஜ் பொஸிசனை செலக்ட் செய்துவிடுவதே நல்லது.//
நாங்க அதையும் தா..தா..தா..தாண்டிப் போய்ட்டோம்... !
தருமி அய்யா,
ReplyDeleteஅவனில்லை தரமாட்டான் நம்பாதே'ன்னு இருங்க..நீங்க தருமியா இருக்கலாம்;ஆனால் நவீன் சொக்கன்ஸ் யாரும் இல்லை.
மதுரை சிட்டில இப்படி சலிச்சுக்கிறீங்க..துவரங்குறிச்சி,திருப்பத்தூர் பக்கமெல்லாம் 14 மணி நேரம் கரண்ட் இருக்கறதில்லை.
இரவுல எத்தன நேரம் புடுங்கறாங்கன்னு பாக்க இதுவரை யாரும் முளிச்சிருந்து கணக்குப் பண்ணலை; பண்ணச் சொன்னா நம்மள கொலை பண்ணாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை !!
ஒரு மாதிரி முடியாட்சி மாதிரி போகுது நிலைமை.மன்னன் இருக்கும் இடம் மட்டும் சொகுசா இருக்கணும் போல இருக்கு..
ReplyDeleteஇது அம்மாவாலன்னு மட்டும் சொல்ல ஏதுமில்லை;இப்ப தாத்தா இருந்தா மட்டும் ஒண்ணும் பருப்பு வெந்திடாது..இது தொடர்ந்த செயலற்ற நிலையின் விளைவு.
ஜோதிஜி ஒரு பத்து பாகத்துல பதிவு எழுதியிருக்காரு பாருங்க..(நிறைய இடத்துல சுத்தினாலும் படிக்கலாம்!)
ஜோதிஜி பதிவு வாசித்தேன். .. வாசிக்க வைத்தேன் - அந்த துறைக்கார ஒருத்தரை.
ReplyDelete