*
முதல் பதிவு
இரண்டாம் பதிவு
மூன்றாம் பதிவு
நான்காம் பதிவு
ஐந்தாம் பதிவு
ஆறாம் பதிவு
ஏழாம் பதிவு
எட்டாம் பதிவு
ஒன்பதாம் பதிவு
பத்தாம் பதிவு
பதினொன்றாம் பதிவு
பன்னிரெண்டாம் பதிவு
*
பொலன்னறுவை என்னுமிடம் வரலாற்று சிறப்புத் தன்மை வாய்ந்த, பழைய மன்னர்களின் வாழ்வின், கடந்தகாலத்தின் எச்சங்களாக இன்றும் நிற்கும் பல இடிந்த கட்டிடங்களும், சிலைகளும் நிறம்பிய இடம். மிகப் பரவலாக விரவிக் கிடக்கும் இந்த இடங்களை மிகவும் அழகாக சீர் படுத்தி வைத்துள்ளனர்.
பராக்கிரம பாகு I |
காவல்கல் அல்லது கொரவக்கல் |
EACH PICTURE RAISES SO MANY PHILOSOPHICAL QUESTIONS ! |
ஆடி அடங்கும் வாழ்க்கையடா ...! |
THUPARAMAYA IMAGE HOUSE |
இது போன்ற ஆக்கம் ‘கெடிகே’ என்று சொல்லப்படுகிறது.
RUINS ... STILL SO MAJESTIC AND LOVELY !! |
*
சந்திர வட்டக்கல் |
சிவன் கோவில் |
நாம் சோழப் பெருமன்னன் ராஜராஜனின் மனைவியான மாதேவி இசார முதியர் என்ற தேவியின் நினைவாக இவரின் புதல்வன் ராஜேந்திர அரசனால் நிர்மாணிக்கப்பட்ட கோவில் இது.
காலத்தின் கோலம் ... |
VATADAGEYA
தூபி ஒன்றை மையமாகக் கொண்டவட்டமாகக் கட்டப்பட்ட இது ‘வட்டதாகய’ என்று சொல்லப்படுகிறது. மகா பராக்கிரம பாகுவினால் கட்டப்பட்ட இது பிற்காலத்தில் நிஸ்ஸங்கமல்ல அரசனால் மறுசீலிக்கப்பட்டது.
|
மழையினூடே .... |
மழையினூடே .... |
அன்று கோமகனின் நான்கடுக்கு மாளிகை .... |
மகா வம்சத்தில் இதில் ஆயிரம் அறைகளைக் கொண்டது என்று சொல்லப்படுகிறது. இது நான்கு மாடிகள் கொண்டது. இதில் மூன்றின் சிதைவுகளை இப்போதும் அவதானிக்கலாம். மேல்மாடி மரத்தால் ஆக்கப்பட்டிருக்கலாம். மாளிகை தீயினால் அழிந்ததற்கான சான்றுகள் இன்னும் காணப்படுகின்றன.
எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன் ...? |
கிரி விகாரை |
பாராக்கிரம பாகுவின் மனைவி சுஹதா தேவிய பெயரால் நிர்மாணிக்கப்பட்டதாக கருதப்படும் இது அந்த மனைவியால் நிர்மாணிக்கப்பட்ட தூபியாகவும் இருக்கலாம் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. இங்குள்ள பழைய தூபிகளை விட இது நன்கு பாதுகாக்கப்பட்டுள்ள ஒரு தூபியாகும்.
அதெல்லாம் .. அந்தக் காலம் ...! |
கிரி விகாரையின் சுற்றுச் சுவர் |
எல்லாம் ரொம்ப ‘பழசு’ ..! |
மிகப் பரந்து விரிந்த இடத்தில் இந்த வரலாற்றுச் சின்னங்கள் அமைந்துள்ளன. இவ்வளவு பெரிய இடமாக இருந்த போதும் மிகவும் சுத்தமாகப் பேணப்பட்டு வருகின்றன். நம்மூர் மாதிரி பார்வையாளர்கள் சாப்பிட்டு தூற எறிந்த எச்சில் இலைகளோ, காற்றில் அங்குமிங்கும் அசைந்து ஆடும் பிளாஸ்டிக் கப்புகளோ, வண்ண வண்ணமாய் பறந்து அலையும் பிளாஸ்டிக் பைகளோ அங்கு எங்கும் காணவில்லை!
நாமும் அங்கு போய் வரலாற்றுச் சின்னங்களை எப்படிப் பாதுகாப்பது என்பதைப் படித்து வந்தால் மிக்க நலம்.
*
1993ம் ஆண்டு புகழ் பெற்ற தஞ்சைக் கோவில் உட்பட பல கோவில்களின் விதான ஓவியங்களை "வெள்ளையடித்து" அழகு படுத்தியதை மறக்க முடியுமா?
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDelete66A எதிர்ப்பு தெரிவிச்சுட்டு இலங்கை பயணம் போயீட்டீங்களா?
பெரும்பாலும் படங்கள் கதை சொல்லும்.இங்கே படங்கள் மௌனராகம் வாசிப்பது போலவே இருக்கிறது.படங்களோடு உங்கள் எண்ணங்களை விரிவாக வெளிப்படுத்தியிருக்கலாம்.
எப்பங்கய்யா இலங்கை போனீங்க? சொல்லவே இல்லை...
ReplyDeleteபடங்கள் நன்றாக இருக்கிறது.
தெக்ஸ்
ReplyDeleteமுதல் பதிவின் நாள்: 23.11.12 !!!!
நம்ம பக்கம் வந்து போய் இருங்க ...
//இங்கே படங்கள் மௌனராகம் வாசிப்பது போலவே இருக்கிறது/
ReplyDeleteஊமைப் படங்கள் என்கிறீர்கள் ...
//காவல் தெய்வமோ ...?//
ReplyDeleteசரிதான் அய்யா ...அது காவல்கல் அல்லது கொரவக்கல் என அழைக்கப்படும் ..பௌத்த விகாரைகளில் இன்றியமையாத செதுக்கல் அம்சமாக இது காணபடுகிறது./
//ஒவ்வொரு வாசல் படியிலும் உள்ள அடையாளக் கல்//
அதன் பெயர் சந்திர வட்டக்கல் ,சிங்களத்தில் வட்டதாகே ...முதல் வரி பலாஇலை வடிவமும் ,அதன் பின் யானை ,குதிரை போன்ற மிருக வடிவங்களும் காணப்படும்.இதனை விகாரைகளின் வாயிலில் காணலாம் ..
பராக்கிரமபாகு இலங்கையின் பயிர் பாசனத்திற்காக அளப்பரிய சேவை ஆற்றிய மன்னன் ஆவான் ,அவன் அமைத்த பராக்கிரமபாகு சமுத்திரம் தலைமுறைகள் தாண்டி இன்றும் பயன் தருகிறது...
பொலொன்னருவயில் நான் சந்தித்த பெரிய பிரச்சனை வெயில் தான் ..நாக்கு வரண்டு மயக்கம் போட்டு விழுந்துட்டேன் ..தயவு செய்து அங்கு செல்பவர்கள் போதுமான அளவு தண்ணீர் கொண்டு செல்லுங்கள் ...(முக்கியமாக ஏப்ரல் ,மே மாதம்)
பொலொன்னருவயில் புத்தரின் நின்ற நிலை,சயன நிலை,சமாதி நிலை கற்சிலைகள் ஒருங்கே காணபடுவது ஒரு சிறப்பு..
புத்த சமயம் தோன்றிய நாட்டை விட ஏனைய நாடுகளில் புத்த சமயம் சிறப்புற்று விளங்கியது/விளங்குகிறது .அதற்கு இந்த இடமும் ஒரு உதாரணம் ...
சோழர்கள் தங்களின் இராச்சியத்தை இலங்கை தாண்டி கம்போடியா,சீயம்,இன்னும் சில நாடுகளிலும் விரிவு படுத்தினர் ...கைப்பற்றிய நாடுகளின் கலாசாரத்தை அழிக்காமல் அதனை பாதுகாத்த பண்பு வரலாற்றில் தமிழரிடம் மட்டும் தான் காணபட்டதோ????????
ராஜநடராஜன்
ReplyDelete//உங்கள் எண்ணங்களை விரிவாக வெளிப்படுத்தியிருக்கலாம்.//
கண்டதும் கேட்டதும் பகுதிகளில் மட்டும் என் எண்ணங்களும் உண்டு.
//பொலொன்னருவயில் புத்தரின் நின்ற நிலை,சயன நிலை,சமாதி நிலை ...//
ReplyDeleteஅடுத்த பதிவு அது தான்.
அதன் பெயர் சந்திர வட்டக்கல் ,சிங்களத்தில் வட்டதாகே ..//
ReplyDeleteஒரு சிறு திருத்தம் ...அதன் சிங்களப்பெயர் சந்தகட பஹன..
நாங்கள் இலங்கையில் போகாத இடங்கள்.
ReplyDeleteபடங்களும் செய்திகளும் அருமை.
எனது தகவலையும் பதிவில் சேர்த்தமைக்கு நன்றிகள்
ReplyDeleteஅருமையான பதிவு. சொந்த நாட்டில் இருந்தாலும் இதுவரை செல்லாத இடம் பொலன்னறுவை.
ReplyDeleteபொலன்னறுவை சோழர் காலத்தில் ஈழ மண்டலத்தின் தலைநகராக விளங்கியது. சோழர்களால் ஜனநாதமங்கள புரம் மற்றும் புலஸ்திய நகரம் என அழைக்கப்பட்டது.
அந்த நான்கடுக்கு மாளிகையை கட்டுவித்த பராக்கிரமபாகு சிங்களவரின் பொற்கால மன்னராவார். எமக்கு இராசேந்திர சோழர் போல். இவர் சிறிது காலம் இராமேஸ்வரத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இவர் இராமேஸ்வரம் கோவிலில் திருப்பணிகள் கூட செய்துள்ளதாக விக்கிப்பீடியா கூறுகிறது.