Saturday, December 07, 2013

700. மொழியாக்கத்தில் அடுத்த நூல் -- அசோகர்





*

முதன் முதலாக ஒரு நவீனத்தை மொழி மாற்றம் செய்து பதிப்பித்தது ஒரு பெரும் புது அனுபவமாக இருந்தது. அந்த ‘ஒரே நூலுக்கு இரு பரிசுகள்’ பெற்றது என்னை வானத்துக்குத் தூக்கிச் சென்றது என்று சொன்னால் அது முழு உண்மை. கொஞ்சம் நாள் வானத்தில் மிதந்து கொண்டிருந்தேன். ஏற்கெனவே நானாக ஒரு நூலை  எடுத்து பெரும்பாகத்தை மொழி பெயர்த்துக் கொண்டிருக்கும் போது அந்நவீனம் பதிப்பாக வெளி வந்து விட்டது. ஆர்வத்தோடு ஆரம்பித்த முதல் முயற்சி இப்படியானதே என்ற சோகத்தை அமினா தான் குணப்படுத்தியது. 

அமினா ‘வெற்றி’ பெற்றதும். ‘ஆஹா ... இனி மொழி பெயர்ப்பு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கும்’ என்று வானத்தைப் பார்த்து நின்றேன். வானம் பொய்த்து வரண்டு போய் இருந்தது. சோகத்தில் நின்றேன். அப்போது அடுத்த வாய்ப்பு வந்தது.

இம்முறை வந்தது ஒரு நவீனமல்ல. வரலாற்று நூல். படிக்கிற காலத்தில் வரலாறு கொஞ்சம் அல்ல; நிறையவே உதைத்தது. வரலாற்று நிகழ்வுகளை ஆண்டுகளோடு நினைவு வைத்திருப்பது எனக்கு எளிதாகவா இருக்கும்! முதல் முறையாக இந்த நூலை வாசிக்கும் போது Robert Ludlum என்ற ஆங்கில ஆசிரியர் நினைவுக்கு வந்தார். நம்மூர் ‘கஜினி’யின் மூலமான The Bourne Identity என்ற நூலின் ஆசிரியர். இவரது கதைகளை முன்பொரு காலத்தில் நிறைய வாசித்திருக்கிறேன். இவரது கதைகளின் முதல் எழுபது, எண்பது பக்கங்களுக்கு கதை ஒன்றுமே புரியாது. பல ’நூல்கள்’ அங்கங்கே ஆரம்பிக்கும். ஏறத்தாழ எண்பது பக்கங்களுக்கு மேல் ‘நூல்கள்’ எல்லாம் ஒன்று சேர்ந்து, திரிந்து ஒரு கதையாக உருவெடுக்கும். இதே கதை தான் இங்கே. 20 x 20 மேட்ச் நடக்கும் தில்லியின் கிரிக்கெட் கிரவுண்டில் நூல்  ஆரம்பித்து. முகமது கோரிக்குப் போய், அவரைத் தாண்டி அலெக்சாண்டருக்குப் போய் ... வரலாற்றை அழகாக rewind  போய், அதன் பின் வேகமாக் forward செய்து இன்றைய நிலைக்கு வருகிறார். புத்த மதமும், அதை வேரூன்றச் செய்த பெருமன்னன் அசோகரும் ஆச்சரியமாகக் கண்முன் விரிகிறார்கள். வாசிக்கவும், வாசித்த பின் மொழியாக்கம் செய்யவும் மிகவும் நன்றாக இருந்தது. ஆனாலும் ஒரு நவீனத்தை மொழி பெயர்ப்பது போல், இந்த நூல் எளிதாக இல்லை. சிரமம் அதிகம் தான். அதனால் மொழி பெயர்க்க எடுத்த நேரமும் அதிகம்.

ஒரு வழியாக மொழி பெயர்ப்பு முடியும் தருவாயில் அந்த நூலின் ஆசிரியரே இங்கிலாந்திலிருந்து, இந்தியாவிற்கு, அதுவும் மதுரைக்கு வருகிறார் என்ற தகவல் கிடைத்தது. சந்திக்க வாய்ப்பும் கிடைத்தது. என்னை விட நாலு வயது சீனியர்! உடல் நலக் குறைபாடுகள் என்றான பின்பும், மருத்துவத்திற்குப் பிறகு நாடு கடந்து நாடு வந்து, அடுத்த  நூலுக்கு தயாராகும் அவரைப் பார்க்கும்

CHARLES  ALLEN

போது எனக்குக்  கொஞ்சம் வெட்கமாகவே இருந்தது. ஒன்றரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அவரைப் பற்றி ஏற்கெனவே இணையத்தில் பார்த்து விட்டுச் சென்றிருந்தேன். ஆங்கிலோ-இந்தியர். ஆனாலும் இப்போது இங்கிலாந்து சென்று விட்டார். பல நூல்களின் ஆசிரியர். கடைசியாக - சென்ற ஆண்டு, 2012-ல் - எழுதிய நூலைத்தான் நான் மொழி பெயர்த்துள்ளேன். நூல்: ASHOKA; THE SEARCH FOR INDIA'S LOST EMPEROR.. நானூறு பக்கங்களைத் தாண்டிய நூல். மிக அதிகமான

ஆதாரங்களை வைத்து தன் நூலைப் படைத்துள்ளார். மிக மிக அழகான படங்கள். எப்படி அந்தக் காலத்தில் எடுத்த படங்கள் இவ்வளவு அழகு என்று தோன்றும் கலைப் பொக்கிஷங்கள்.

நூலின் போக்கில், நன்கு சிலரை இடித்துரைக்கிறார். கலைப் பொக்கிஷங்களையும், கோவில்களையும் இடித்து எரிக்கும் அந்நியப் படையெடுப்பாளர்கள்; பழைய அந்நிய கலைப்பொருட்களின் அருமை தெரியாமல் அவைகளை இடித்துப் போட்ட ஆங்கிலேய  அதிகாரிகள்; நம் கலைப்பொருட்களின் பெருமை புரியாத மக்கள்; ஆனாலும் எல்லோரையும் விட,  இவற்றின் அருமை தெரியாத நமது Archaeological Survey of India - ASI - என்று யாரையும் அவர் விடவில்லை. நூலை வாசிக்கும் போது வாசகனுக்கே வயித்தெரிச்சல் தரும் இவர்களைப் பற்றி ஆங்காங்கே சொல்லிச் சென்றுள்ளார்.

 உலகத்தையே ஆட்டிப் படைத்து, இன்றைய பல உலகப் பிரச்ச்னைகளுக்குக் காரணமாக உள்ளார்களே என்று எனக்கு எப்போதும் ஆங்கிலேயர்கள் மீது கோபம் உண்டு. என்னைப் போல் பலரை ஆசிரியர் சந்திருத்திருப்பார் போலும். அப்படி கோபம் உள்ளவர்களும் கூட கட்டாயம் பெருமைப் படுத்த வேண்டிய பல ஆங்கிலேய அதிகாரிகள், உயிரையும், உடல் நலத்தையும் பொருட்டாகக் கருதாது வரலாற்றுத் தடங்களைத் தேடிக் கண்டுபிடித்த பலரைப் பற்றிக் கூறும்போது அவர் கூறியது போல் அவர்களெல்லோரும் மிகவும் பெருமைக்குரியவர்கள் என்று நெஞ்சாரத் தோன்றியது. நாம் நன்றி செலுத்த வேண்டிய பெரும் மனிதர்கள் அவர்கள். நம் வரலாற்றை நாம் அறிய அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும், தியாகமும் அளவில் அவ்வளவு பெரிது; உயர்ந்தது. ”உயிரை மதிக்காத பெரும் முயற்சிகள்” என்று வழக்கமாக எழுதுவோமே ... அப்படிப்பட்ட முயற்சிகளை உண்மையிலேயே மேற்கொண்ட பல நல்ல ஆங்கிலேயே வரலாற்று ஆய்வாளர்களை இந்த நூலின் நெடுகிலும் கண்டேன்.இந்தியாவிற்கும், இலங்கைக்கும் உள்ள தொடர்புகள் வரலாற்றின் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதை எடுத்துத் தந்துள்ளார். இலங்கையில் படைக்கப்பட்ட வரலாற்று ஏடுகள் நம் நாட்டு வரலாறு பற்றிக் கூறுவதும் நம்மை ஆச்சரியப் படுத்துகின்றன.

‘எதிர் வெளியீடு’ இந்நூலைத் தேர்ந்தெடுத்தமைக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் ஆசிரியர்  தன் நூலைப் பற்றிச் சொல்லும் போது, இங்கிலாந்தில் விற்றதை விட, இந்த நூல் வட இந்தியாவில் பல மடங்கு அதிக நூல்கள் விற்றதாகக் கூறினார். உண்மை தானே. நமது நாட்டு வரலாற்றை, இதுவரை தெரியாத, நாம் அறியாத வரலாற்றுப் பகுதியை, அதுவும் இஸ்லாமியர் படையெடுப்பிற்கு முன்புள்ள மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுகளை, சான்றுகளோடு இந்நூலில் தருகிறார்.

நூலை வாசித்து முடிக்கும் போது, நம்மையறியாமலேயே நமது நாட்டின் மீது, நம் நாட்டு பழங்காலத்து வரலாற்றின் மீது, நூலின் நாயகன் அசோகன் மீது நமக்கு பெருமையும் மகிழ்ச்சியும் பெருகுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சொன்ன அசோகரின் வார்த்தைகளின் நிஜம் நம்மை இன்றும் சுடும்; திருத்தும். அவனது பரந்த சிந்தனைகள் எவருக்கும் நிச்சயம் ஆச்சரியமளிக்கும்.நூலின் ஆசிரியர் சொல்வது போல், வரலாற்றில் இது போன்ற ஒரு “பெரும் சிந்தனையும், மக்களை வழி நடத்துவதும்” எந்த மன்னனிடமிருந்தும் உலகத்தில் வந்ததேயில்லை என்பது நமது பெருமைக்குரிய விஷயம். நாட்டின் வழியெங்கும் கிணறுகள் வெட்டினான் என்று சிறு வயதில் ப்டித்திருப்போம். கிணற்றுக்குப் பக்கத்தில் மரங்களை நட்டு மக்கள் அவ்விடங்களைத் தங்குமிடங்களாக - motels !!  - மாற்று எண்ணம் அப்பெருமன்னனுக்கு வந்ததே என்பதே ஆச்சரியம்!

இதையும் விட மனிதர்களுக்கு நலமளிக்க மருந்துச் செடிகளை தன் சாம்ராஜ்யம் முழுமையும் பயிரிட்டிருக்கிறான். எனக்கு வியப்பளித்த மற்றொன்று - சில பிராணிகளைக் கொல்லக்கூடாது என்று தடை விதித்துள்ளான். - red list of threatened species !! மதங்களைப் பற்றி அவன் சொல்லும் கருத்துகள் மனித ஜன்மம் இந்த உலகில் இருக்கும் வரை நம்மோடு இருக்க வேண்டிய உயர் கருத்துகளாகும்.

அசோகர் பெரும் மன்னன் மட்டுமல்ல; அவன் பெரும் மனிதன்.

இந்நூலை மொழி பெயர்த்தமைக்காக எனக்குப் பெரும் மகிழ்ச்சி.வரலாற்றின் நாமறியாத ஒரு புதிய பகுதியை, நம் மொழியில், அதனை  உங்களோடு பகிர்ந்து கொள்ளும் மகிழ்ச்சி இது.



*


43 comments:

  1. வியக்க வைக்கும் சாதனை தான் ஐயா! நான் இந்த நூலை இன்னும் வாசிக்கவில்லை, நிச்சயம் ஆங்கிலத்திலும் தங்களின் மொழியாக்கத் தமிழிலும் வாசிக்க போகின்றேன். தங்களைப் போன்றோரின் ஒப்பற்ற உழைப்பும் அறிவும் அனுபவமும் எண்ணற்ற அறிவுச் செல்வங்களை திசைகள் தோறும் கொணர்ந்து எம்மைப் போன்ற தமிழ் வாசகர்களுக்கு விருந்தளிக்கும் அளப்பரிய பணிக்கு என்றென்றும் கடமைப்பட்டவர்கள் ஆகின்றோம்., நும் பணி சிறக்க செழிக்க வாழ்த்துக்கள் ஐயா.

    --- விவரணம் இணையதளம்.

    ReplyDelete
  2. தருமிய்யா,

    அசோகர் பற்றிய மொழிப்பெயர்ப்பு நூலை வெளியிடுவதற்கு வாழ்த்துக்கள்!

    இந்த நூலை இணையத்தில் பிடிஎஃப் ஆக முன்னர் படித்த நினைவு இருக்கிறது, இதனை வரலாற்று நூல் என்று வகைப்படுத்த முடியாது என நினைக்கிறேன், ராயல் ஆசியாடிக் சொசைட்டி ஆஃப் பெங்கால் ,மற்றும் அதன் பின்னர் ,பிரிட்டீஷ் ,இந்திய காலத்தில் ஆர்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா செய்த வேலைகளை தானே பட்டியலிட்டு , காட்டுது.

    அசோகர் என்பவரே வரலாற்றில் இல்லை, ஆனால் தேவனாம்பியாச ப்ரியதர்சனை தான் அசோகா என , திரிச்சு காட்டியது , ஜேம்ஸ் பிரின்செப் & வில்லியம் ஜோன்ஸ் எனவும் , தான் வெள்ளைக்காரங்க வேலையை சொல்கிறார்கள், அதற்கு சாதகமான நூல் இது ,என இந்த நூல் வந்த போது விமர்சனம் கூட வந்தது, எனவே பெரிதாக வரலாற்று நூல் என வரவேற்பு பெறாமல் போயிடுச்சுனு கேள்வி.

    உண்மையில் அசோகர் யாரு, பிரியதர்சன் யாருனு இப்பவும் தெளிவேயில்லை அவ்வ்!

    ReplyDelete
  3. கல்வெட்டுச் செய்திகள் எப்படியென்று கூறவில்லையே....

    //உண்மையில் அசோகர் யாரு, பிரியதர்சன் யாருனு இப்பவும் தெளிவேயில்லை அவ்வ்! //
    அப்படியா?

    ReplyDelete
  4. தருமிய்யா,

    //கல்வெட்டுச் செய்திகள் எப்படியென்று கூறவில்லையே....
    //

    புக்க மொழிப்பெயர்ப்பு செய்த நீங்கதான் சொல்லணும் அவ்வ்!

    ஆமாம் எந்த கல்வெட்டிலாவது "அசோகா"னு பேரு இருக்காமா?

    மவுரியர்கள் வரலாற்றை எடுத்துப்பார்த்தால் ,அவங்க இந்தியர்களானே சந்தேகம் வரும், அலெக்ஸாண்டர் படையில ஒரு தளபதி சந்திரகுப்தர், என போகும், இதெல்லாம் கிரேக்க,ரொமானிய வரலாற்று ஆசிரியர்களின் நூலில் இருக்கு.

    நீங்க சொல்ற புக்கு அந்தக்காலத்தில வெள்ளைக்காரங்க எழுதி வச்ச வரலாற்றை சரினு சொல்ல எழுதப்பட்ட துணை வரலாற்று நூல், எனவே தான் பெருமளவு வரவேற்பு பெறாமல் போச்சுனு ஒரு விமர்சனமும் இருக்கு.

    //அப்படியா?//

    இந்தியாவில இருக்க எதாவது ஒரு கல்வெட்டில அசோகானு பேரு இருக்குனு காட்டுங்க :-))

    ReplyDelete
  5. அசோகர் பற்றிய மொழிப்பெயர்ப்பு நூலை வெளியிடுவதற்கு வாழ்த்துக்கள்!
    அரிய முயற்சி
    த.ம.1

    ReplyDelete
  6. விட்டா கட்டாயம் I.D. card வேணும்னு கேப்பீங்க போலும். காம அசோகர், கண்ட(அ)சோகன், தர்மசோகன் என்றழைக்கப்பட்ட மன்னன் பியாதாசி என்றொரு பட்டப் பெயரையும் வைத்துக் கொண்டான் .....
    தன் பெயர், தன் உருவம் இவைகளை தன் கல்வெட்டில் அவன் பதிக்கவில்லை என்பது சரி. கொடுக்கும் சான்றுகளை எல்லாம் ஒரேயடியாகத் தூக்கிப் போட்டால் எப்படி?

    நீங்க அவர் கையெழுத்துப் போட்ட கடிதாசி கேட்டால் எப்படி கிடைக்கும்?!

    ReplyDelete
  7. வவ்ஸ்
    இதோடு பிராமணர்களுக்கு மரியாதைஅளியுங்கள் என்ற அசோகரின் கல்வெட்டுகள் இன்னும் ‘உயிரோடு’ உள்ளன. ஆனால் பிராமணர்களால் புத்த மதமும், புத்த மதக் கோவிலும் இவைகளோடு அசோகரின் வரலாறும் அழிக்கப்பட்டன என்பதற்கும் சான்றுகள் நிறையவே உள்ளன.

    I am convinced.

    நீங்கள் பழைய பிராமணீயம் செய்ததைத் தொடர்கிறீர்களோ?

    ReplyDelete
  8. தருமிய்யா,

    மொழிப்ப்பெயர்த்து நூல் எல்லாம் வெளியிடுறிங்க ,கண்டிப்பா இந்த ஒரு புத்தகம்னு இல்லாமல் ,மேலும் ரெபரரென்ஸ் எல்லாம் பார்த்திருப்பீங்க எனப்புரிகிறது, நாம இந்த புக்குனு இல்லாமல் மேலும் படிச்சி பார்த்ததால தான் உண்மை என்னனு தேடிக்கிட்டு இருக்கேன்,அந்த நேரத்தில உங்க பதிவு வரவும் , என் கருத்தை சொல்லி வச்சேன், மற்றபடி நான் சொல்வது உங்க நூலின் மீதான விமர்சனமாக பார்க்க தேவையில்லை,அதுவும் படிக்காமலே எப்படி சொல்லமுடியும், அவ்வ்!

    நான் சொல்வதெல்லாம் ஆங்கில மூலத்தை பற்றி மட்டுமே!

    எவ்ளோ முன் ஜாமீன் போட வேண்டியிருக்கு அவ்வ்!

    //நீங்கள் பழைய பிராமணீயம் செய்ததைத் தொடர்கிறீர்களோ?//

    நம்பினால் நம்புங்கள், இதனை நான் கேட்கலாமானு நினைச்சேன், அப்புறம் கோச்சுக்கிட்டா என்னப்பண்ணுறதுனு நினைச்சு சொல்லலை அவ்வ்!

    "இந்திய வரலாறு என்பது வெள்ளையர் காலத்தில் வெள்ளையர்களால்,பிராமணர்கள் உதவியுடன் திருத்தி எழுதப்பட்ட ஒன்று"

    இந்த கூற்றினை இந்தியாவில் இருக்க எந்த வரலாற்று ஆய்வாளர்களை கேட்டாலும் மறுக்கவே மாட்டாங்க, உங்களூக்கு தெரிஞ்சு யாராவது இருந்தால் கேட்டுப்பார்க்கவும்.

    # //ஆனால் பிராமணர்களால் புத்த மதமும், புத்த மதக் கோவிலும் இவைகளோடு அசோகரின் வரலாறும் அழிக்கப்பட்டன என்பதற்கும் சான்றுகள் நிறையவே உள்ளன. //

    இதுல ஒரு சின்ன திருத்தம்,

    "ஆனால் பிராமணர்களால் புத்த மதமும், புத்த மதக் கோவிலும் இவைகளோடு "தேவனாம்பியாதசி (எ) பிரியதர்ஷனின் " வரலாறும் அழிக்கப்பட்டன என்பதற்கும் சான்றுகள் நிறையவே உள்ளன. "

    என சொல்லனும்!!!

    அசோகர் என்ற "folklore history" உள்ள கொண்டு வரக்காரணம் பிராமணர்கள்னு , பல வரலாற்றூ ஆய்வாளர்கள் சொல்லி இருக்காங்க.

    வில்லியம் ஜோன்ஸ் ,ஜேம்ஸ் பிரின்செப், ராதாகாந்தா சர்மா என்ற வங்காள புரோகிதர் எல்லாமா சேர்ந்து , ஆசியாடிக் சொசைட்டி ஆப் பெங்காலில் , சமர்பிச்ச ஆய்வு அறிக்கை தான் , அசோகர்னு ஒரு வரலாற்று பிம்பத்தையே இந்திய வரலாற்றில் அறிமுகம் செய்துள்ளது. அதுக்கு முன்னர் அசோகர் என்ற பேரே இந்திய வரலாற்றில் எங்கும் குறிப்பிடப்பட்டதேயில்லை!!!

    சங்க இலக்கியத்திலேயே மவுரியர்கள் பற்றி "மோரியர்கள்" என குறிப்பிடப்பட்டு இருக்கு, தமிழ் நாட்டு மீது படை எடுத்து வந்ததாக பாடப்பெற்று இருக்கு.அந்த மோரியர்கள் யார்னு விவாதமும் ஓடுது :-))

    சங்க இலக்கிய பாடல்களிலேயே மோரியர்கள்,நந்த வம்சம்,எல்லாம் வருது, மைசூரில் சந்திரகுப்தர் பற்றிலாம் கல்வெட்டு இருக்கு, ஆனால் அசோகர் பத்தி மட்டுமில்லை.

    பிராஜெக்ட் மதுரை திட்டத்தில எஸ்.வையாபுரிப்பிள்ளை எழுதின நூல் ஒன்னு இருக்கு படிச்சு பார்த்தீங்களா?

    ஆனால் அசோகர் பத்திலாம் இல்லை, ஆனால் பியாதசி பத்தி இருக்கு, பியாதசி கல்வெட்டுல தமிழ் மன்னர்கள் பற்றி இருக்கு.

    # //காம அசோகர், கண்ட(அ)சோகன், தர்மசோகன் என்றழைக்கப்பட்ட மன்னன் பியாதாசி என்றொரு பட்டப் பெயரையும் வைத்துக் கொண்டான் .....//

    இதுலாம் இலங்கையில சொல்லப்பட்ட வரலாறு, இவை அசோகர் காலம் என சொல்லப்படும் காலத்திற்கு வெகு பின்னால் உருவானவை, அதை சொல்லாம , ஏன் விட்டிங்க அவ்வ்!

    பியாதசியின் சமகால ,இந்திய, கிரேக்க, மத்திய ஆசிய பகுதி கல்வெட்டுகளிலோ அல்லது கிரேக்க வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகளிலோ அசோகர் என்ற பெயரே கிடையாது, அதே போல சாணக்கியன் என்ற கவுடிலியர் பற்றியும் கிடையாது. இதான் வரலாற்றின் நிலை.

    கொஞ்சம் கொஞ்சமா தேடி படிச்சிட்டு இருக்கேன் முடிச்சதும் பதிவு போடலாம்னு இருந்தேன், நீங்க ஆரம்பிக்கவும் அப்படியே உள்ள வந்துட்டேன் :-))

    ReplyDelete
  9. // முடிச்சதும் பதிவு போடலாம்னு இருந்தேன்//

    நல்லது. நாலும் தெரிஞ்சிக்கலாமே!

    //"இந்திய வரலாறு என்பது வெள்ளையர் காலத்தில் வெள்ளையர்களால்,பிராமணர்கள் உதவியுடன் திருத்தி எழுதப்பட்ட ஒன்று"//
    ஆச்சரியம் என்னன்னா, இதே வசனத்தை ஆசிரியரும் சில இடங்களில் பயன் படுத்தியுள்ளார்!

    ReplyDelete
  10. //மைசூரில் சந்திரகுப்தர் பற்றிலாம் கல்வெட்டு இருக்கு,//

    பஞ்சக் காலத்தில் ச.குப்தர் தென்னாடு வந்திருக்கிறார்.

    //நான் சொல்வதெல்லாம் ஆங்கில மூலத்தை பற்றி மட்டுமே!//

    நாம் செய்தது மொழியாக்கம் மட்டும் தானே!

    நீங்கள் சொன்ன சில குறிப்புகளையும், விமர்சனங்களையும் தேடிப்பார்த்து சிலவற்றைப் படித்தேன். படிக்க, உங்கள் கருத்துக்கு சான்றான தொடுப்புகள் இருந்தால் கொடுங்கள்; படித்துப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  11. தருமிய்யா,

    அந்த டயலாக்கை இந்தியவரலாற்றினை பற்றி எழுதும் எல்லா வரலாற்று ஆசிரியர்களும் சொல்லிவச்சிருக்காங்க, அதை தான் நானும் சொன்னேன் ஹி...ஹி!

    # சந்திரகுப்தர் , மைசூரில் தான் கடைசிகாலத்தில் வாழ்ந்து மறைந்தார்னு சொல்லுறாங்க, அவர் உண்ணா நோன்பு இருந்து உயிர் நீத்த குகை என ஓன்றை கூட காட்டுறாங்க,விக்கில படம் இருக்கு!

    # இன்டெர்நெட் ஆர்கைவ்ல இருந்து இலவச பிடி எஃப் ஆக சில நூல்களை தரவிறக்கி படிச்சது வச்சு சொன்னது, அப்புறம் சிலக்கட்டுரைகள் , எல்லாதையும் பட்டியலாக தருகிறேன், டவுன் லோட் செய்து படிச்சிக்கலாம். ஆனால் ரொம்ப பொறுமையை சோதிக்கும் அவ்வ்!

    அலெக்சாண்டர் காலத்தில , புத்தமதம் பரவலாக இல்லைனும் தெரிய வருது, அவர் சிந்து நதி வரைக்கும் வந்தும் புத்த மதம் பற்றி ,அவரோட வாழ்க்கை வரலாற்றை எழுதின புளுடார்க் முதல் யாரும் சொல்லவேயில்லை, ஆனால் சமண மதம் பற்றி இருக்கு, சமணத்துறவி ஒருவரின் சீடராக ஆனதாகவும்,திரும்பி போறப்ப சமண மதத்துக்கு மாறிட்டாராம்,அலக்ஸாண்டர் வரலாறு வச்சு பார்த்தா புத்த மதத்தின் தொன்மையே கேள்விக்குள்ளாகிடுது!

    # அது சரி , செஸ் பத்தி ரெண்டு பதிவு போட்டேன் ,எல்லாம் உங்க "செஸ் பழகினோம்" பதிவின் விளைவு தான் அதையே இன்னும் பார்க்காம இருக்கிங்க, இந்த வரலாற எல்லாம் சொன்னா மட்டும் படிப்பீங்களா அவ்வ்!

    சதுரங்கத்தின் வரலாறும், விளையாடும் முறையும் முடிஞ்சளவுக்கு இந்த ரெண்டுப்பதிவில சொல்லி இருக்கேன் , முடிஞ்சா படிச்சு பாருங்க.

    http://vovalpaarvai.blogspot.in/2013/12/1.html

    http://vovalpaarvai.blogspot.in/2013/12/2.html

    ReplyDelete
  12. ஆஹா அருமையான செய்தி. தமிழாக்கம் எல்லோருக்கும் எளிதில் வருவதில்லை. அதிலும் புத்தகமாய் வெளிவரும் அளவுக்கு வருவதென்றால் சாதனைதான். இத்தகைய சாதனைகளை மென்மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. வரலாற்றை மீளுருவாக்கம் செய்யும் போது அதன் அனைத்துக் கோணங்களையும் ஆய்ந்து நம்பத்தகுந்த தரவுகளை உட்படுத்தி நம்பத்தகுதியில்லாதவைகளை விலக்குவதே முறையான நவீன வரலாற்றாசிரியர்களின் போக்காகும். வெறும் கல்வெட்டுத் தரவுகள் மட்டும் ஒரு வரலாற்றை நிர்ணயித்துவிடாது அவ் வரலாற்றின் காலக் கட்டத்தில் கிடைத்த கிடைத்திருக்கவல்ல சான்றுகளின் அடிப்படையில் வரலாற்றை மீளுருவாக்கம் செய்ய வேண்டும். அசோகர் என்ற பெயர் கல்வெட்டுக்களில் இருக்க வாய்ப்பில்லை காரணம் கல்வெட்டுகளிலோ மெய்கீர்த்திகளிலோ செப்பேடுகளிலோ ஒரு மாமன்னனின் பட்ட பெயரே இடம் பெறும், உதா. ராஜ ராஜ சோழன். இதர நூல்கள் சமகால குறிப்புக்களில் மட்டுமே மாமன்னரின் மெய் பெயர் எடுத்தாளப்படும். அசோகரின் இரண்டு பெயர்களும் அவரது உண்மையான பெயரல்ல, ஒன்று கலிங்க யுத்தத்தின் பின் பவுத்ததை தழுவிக் கொண்டு சோகத்தை துடைத்தவர் என்பதால் அசோகர் எனவும், மக்களின் நலன் காக்க பவுத்த தருமத்தை பரப்பி மக்களின் அன்பைப் பெற்றதால் பிரியதர்சின், கடவுளர்களின் அன்புக்கு பாத்திரமானவன் என தேவனாம்பிரிய தீசன் எனவும் அழைக்கப்பட்டான். அசோகன் என்ற பெயர் கிமு 2-யில் எழுதப்பட்ட பவுத்த நூலான அசோகவதனத்தில் எடுத்தாளப்பட்டுள்ளது. அசோகனின் மகத்துவத்தை மழுங்கடித்ததில் பார்ப்பனியர்களின் மற்றும் இஸ்லாமிய படை எடுப்பாளர்களின் பங்கு மிக அதிகம். அசோகரின் இருப்பைக் கேள்விக்கு உள்ளாக்குவோரின் உள் நோக்கங்களும் இவ் விரு கொட்டாரத்தில் இருந்து வருவோராயே கருதப்படலாம். நன்றிகள்.

    --- விவரணம். ---

    ReplyDelete
  14. வரலாறு முக்கிய அமைச்சரே. வாழ்த்துகள். எழுதிய போது நீங்கள் சந்தித்த சவால்கள் குறித்து ஒரு பதிவு எழுதுங்க. பொதுவாக பொழிபெயர்ப்பு அத்தனை சாமானியம் அல்ல. கடைபிடிக்க வேண்டிய விசயங்களைப் பற்றியும் சொல்லும் போது பலருக்கும் பலன் உள்ளதாக இருக்குமே?

    ReplyDelete
  15. தாங்கள் தமிழாக்கம் செய்த FRANCIS ALLEN எழுதிய ” ASHOKA; THE SEARCH FOR INDIA'S LOST EMPEROR.. ” என்ற ஆங்கில நூல் புத்தகமாக வெளிவரும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்!

    நூல் வெளியீட்டு விழாவை முற்பகல் வேளையில் நடத்தினால், வெளியூர் அன்பர்கள் வந்து போக வசதியாக இருக்கும். அழைப்பிதழை உங்கள் வலைப் பக்கத்தில் வெளியிடவும்.

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் தருமி சார்!

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் தருமி ஐயா. அசோகர் பற்றிய தங்களின் மொழிபெயர்ப்பு நூலையும், மூல ஆங்கில நூலையும் நேரம் கிட்டும் போது படிக்க ஆசை.

    நண்பர் வவ்வாலின் கருத்துகள் ஆச்சர்யம் ஊட்டும் வகையில் உள்ளது. தேவநம் பிரிய தான் அசோகர் என்பது வரலாற்றில் நிறுவ பெற்ற ஒன்று. அதில் ஏதோ குழப்பம் உள்ளது போல் கருத்து சொல்வது தேவையற்ற வேலை. கர்நாடகத்தில் மஸ்கி என்ற இடத்தில் உள்ள அசோகரின் கல்வெட்டில் அவரே தேவனாம் பிரியா, ப்ரியதர்ஷின் போன்ற பெயர்களுடன் அசோகர் என்ற பெயரையும் பொறித்துள்ளார். இதை கொண்டு தான் 30 கும் மேற்பட்ட கல்வெட்டுகளில் சொல்ல பட்ட தேவனாம் பிரியவும் அசோகரும் ஒன்று என்று நிறுவப்பட்டது.

    மஸ்கி கல்வெட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பை இங்கே காணலாம்.

    http://karnatakatravel.blogspot.com/2013/01/samrat-ashokas-edict-at-maski.html

    விக்கிபீடியாவில் தேடியும் மேலதிக விவரங்களை பெற முடியும்.

    வவ்வால், அசோகர் ஒரு பிம்பம் என்று சொல்வதெல்லாம் தவறு. கிபி இரண்டாம் நூறாண்டில் எழுதப்பட்டு, மூன்றாம் நூற்றாண்டில் பா ஹீன்-னால் சீன மொழிக்கு மொழி பெயர்க்க பட்ட அசோகவதனத்தை ஏதோ சென்ற நூற்றாண்டுகளில் தான் எழுதினார்கள் என்று சொல்ல வருகிறாரா?

    இதை போலவே மௌரியர் வெளிநாட்டவர் என்ற தவறான வாதம் வேறு. என்னவோ போங்க. அலுப்பு தான் தட்டுகிறது.

    ReplyDelete
  18. தருமிய்யா

    Charles Allen என்று தானே நீங்க போட்டிருக்கு ,அப்போ ஃபிரான்சிஸ் ஆலன் யாரு?

    அவர், கொஞ்சம் இளமையா இருக்கும் போது சொட்டைத்தலையா இருக்கு வயசான பிறகு முடி வளர்ந்த ரகசியம் என்ன அவ்வ்!

    ReplyDelete
  19. மகிழ்ச்சியான செய்தி. மனமார்ந்த வாழ்த்துகள்!

    ReplyDelete
  20. CHARLES ALLEN writes....


    Dear Sam

    Just a quick reply to your query about Ashoka’s name being absent from his edicts.

    Aśoka was his given name and Devanama Piyadassi (with variations) was the regnal name he assumed on being consecrated as king. This was a puzzle to James Prinsep when he first deciphered the inscription because there was no such name listed in the genealogical tables of the Puranas, leading him to think that this Devanama Pipyadassi must be a Lankan king. The mystery was soon afterwards resolved when George Turnour in Colombo found a reference in the Dipavamsa chronicle which explained that Devanama Piyadassi was also known as Asoko (in Pali). In fact, we now know that on two of the Minor Rock Edicts found in Central and South India the king does give his name as Asoko. More recently in the stupa uncovered at Kanakanhalli in Andhra Pradesh by the ASI in 1990 the words ‘rayo Asoko’ (raja Ashoka) have been found carved on a bas-relief carrying a portrait of Ashoka dating from the later Satavahana era (probably 3rd century CE).

    Hope this helps.

    Yrs ever Charles

    ReplyDelete
  21. http://www.walmart.com/ip/Ziploc-Slider-All-Purpose-Gallon-Storage-Bags-32ct/17208784 ---- தப்பைத் திருப்பிட்டோம்ல...........

    ReplyDelete
  22. wow! very interesting sam... looking forward to read your work. thanks! :)

    ReplyDelete
  23. கணேசன்,

    //மஸ்கி கல்வெட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பை இங்கே காணலாம்.
    //

    பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும், மஸ்கி கல்வெட்டு பற்றி தெரியாமல் தான் பேசிக்கிட்டு இருக்கோமா?

    எங்கே ,கல்வெட்டில் இருப்பதில் வரிக்கு வரி எழுதியதில் "அசோகானு" போட்டிருப்பதாக காட்டுங்க :-))

    நீங்க போட்டிருக்க "அந்த பிலாக்கிலும்" வரிக்கு வரியா ஆங்கில எழுத்துருவில் எழுதியதை படிச்சு எடுத்து போட்டிருக்கு?)

    உண்மையில் அதை மீண்டும் விளக்கி எழுதி இருப்பதில் தான் "அசோகா"னு பேரு இருக்கும் :-))

    ஹி...ஹி நீங்க ஒரு பிலாக் காட்டினாப்போல நானும் காட்டுறேன் பாருங்க....

    http://journeys-temple.blogspot.in/2013/06/ashokan-minor-rock-edict-of-brahmagiri.html

    பேப்பர்ல ,பேனாவால அசோகா"னு எழுதி வச்சிருக்கிற ,இடத்தில ஆக்சுவலா "அனயாபதி" =ஆணையிடுகிறேன்" என்று தான் எழுதி இருக்கும், அசோகா"னு எழுதிட்டு .... புள்ளி வச்சு "அனயாபதி" என்பதை ஏன் தள்ளி புள்ளி வச்ச இடத்துல எழுதனும். வேர்ட் பை வேர்ட் நேரா எழுத வேண்டியது தானே?

    ஆர்ய புத்திரானு வர வரியையும் தூக்கிட்டு ஏன் எழுதிக்காட்டனும்?

    சிலர் அசோகரை மிக மேலாக தூக்கிட்டு அலைய காரணமே அதான் :-))

    எல்லா இடத்திலும் ஆர்ய புத்திரா, ஆர்ய இளவரசன் இப்படித்தான் போட்டிருக்கும்.

    உங்களைப்போல எல்லாம் தெரிஞ்சாப்போல அலுத்துகிற ஆளுங்களை எல்லாம் எப்பவோ பார்த்தாச்சு , இந்த ரீலை வேற எங்காவது ஓட்டுங்க அலுப்பாக இருக்கு அவ்வ்!
    ------------------------

    தருமிய்யா,

    ஒரு பின்னூட்டம் போட்டால் ,பிடிச்சு வச்சுக்கிட்டு , தாமதமாக வெளியிடுவதால் என்ன பெரிதா மாற்றம் வரப்போகுது?

    சார்லஸ் ஆலன் என்பதை சுட்டிக்காட்டி சொன்னதை கூட தாமதப்படுத்தி வெளியிடுறிங்க? ஆனால் ஃபிரான்சிஸ் ஆலன்னு நீங்க போட்டதை " தமிழ் இளங்கோ" காபி & பேஸ்ட் போட்டிருக்காரே ,அதை என்ன செய்வதாக உத்தேசம் அவ்வ்!

    ReplyDelete
  24. சார்லஸ் ஆலன் என்பதை சுட்டிக்காட்டி சொன்னதை கூட தாமதப்படுத்தி வெளியிடுறிங்க?--

    தலைவர் வவ்ஸ்,
    தமிழில் எத முடிந்த பின் அதைப் போடலாமென நினைத்துத் தாமதித்தேன். கோவிச்சுக்கிறீங்களே!!!

    ReplyDelete
  25. புத்தகம் தமிழில் வந்ததும் படித்து பதிவிடுங்கள். நானும் உங்கள் அனுமதியோடு என் பதிவிலும் இடுகிறேன்.

    ReplyDelete
  26. // வவ்வால் said... சார்லஸ் ஆலன் என்பதை சுட்டிக்காட்டி சொன்னதை கூட தாமதப்படுத்தி வெளியிடுறிங்க? ஆனால் ஃபிரான்சிஸ் ஆலன்னு நீங்க போட்டதை " தமிழ் இளங்கோ" காபி & பேஸ்ட் போட்டிருக்காரே ,அதை என்ன செய்வதாக உத்தேசம் அவ்வ்!
    Wednesday, December 11, 2013 1:49:00 AM //

    தருமி அய்யா அவர்கள் தனது மொழிபெயர்ப்பு நூலைப் பற்றிய தகவலைச் சொன்னதும் , அவர் சொன்னபடியே மூல நூல் ஆசிரியர் பெயரை டைப் செய்து இருந்தேன். இதில் சர்ச்சை இருந்தால் எனது இரண்டு கருத்துரைகளையும் நீக்கி விடவும்.


    ReplyDelete
  27. // மஸ்கி கல்வெட்டு பற்றி தெரியாமல் தான் பேசிக்கிட்டு இருக்கோமா?

    ஆமாம். தெரியாமல் தான் பேசிகிட்டு இருக்கீங்க.

    http://journals.cambridge.org/action/displayAbstract?fromPage=online&aid=5732856

    முதல் வரியிலேயே தேவனம்பியச அசோகச ன்னு தான் இருக்கு.

    http://oudl.osmania.ac.in/handle/OUDL/9767

    மேலுள்ள சுட்டி, கல்வெட்டின் வார்த்தைகளை அப்படியே கொடுக்கிறது. முதல் வரியை பார்த்தால் புரியும்.

    நான் சுட்டியுள்ளவை epigraphist மற்றும் வரலாற்று அறிஞர் தம் ஆய்வு கட்டுரை. சும்மா நீங்களாகவே அசோகா என்றால் ஆணை இடுகிறேன் என்று புது விளக்கம் எல்லாம் கொடுக்காதீங்க. முடிந்தால் மஸ்கி பற்றி யாராவது ஒரு epigraphist-இன் மாற்று விளக்கத்தை காட்டவும்.

    //ஆர்ய புத்திரானு வர வரியையும் தூக்கிட்டு ஏன் எழுதிக்காட்டனும்? சிலர் அசோகரை மிக மேலாக தூக்கிட்டு அலைய காரணமே அதான்//

    மேலும் மேலும் தவறான தகவல்கள். பிரமகிரி கல்வெட்டில் ஆர்யபுத்திர என்று சொல்லி-இருப்பது அசோகரை அல்ல. அசோகரின் நாடு, நிர்வகிக்கும் பொருட்டு பல பகுதியாய் பிரிக்கப்பட்டு, பிரதிநிதிகளை கொண்டு ஆளப்பட்டது. இந்த பிரதிநிதிகளை அசோகரின் கல்வெட்டுகள் குமர அல்லது ஆர்யபுத்ர என்று விளிக்கின்றன. கோசம்பி, டோசளி பகுதி பிரதிநிதிகள் குமர வென்றும், பிரமகிரியை உள்ளடக்கிய சுவர்ணகிரி பகுதி நிர்வாகி ஆர்யபுத்ர என்றும் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. நீலகண்ட சாஸ்த்ரியின் "A history of south india" பார்க்கவும். Allied publishers civil services examination indian history நூலையும் (பக்கம் a 253) பார்க்கவும்.

    ReplyDelete
  28. தருமிய்யா,

    தலைவரா அவ்வ்,அதுவும் நீங்கலாம் அப்படி சொன்னா என்னாவது!!!

    கோச்சுக்கலை, வழக்கமா கருத்து வெளியானால் ,நாம சொன்னத தப்பா எடுத்துக்கலைனு நினைச்சுப்பேன்.

    வெளியிடலைனா தப்பா எடுத்துக்கிட்டாங்க, அல்லது சொன்னது தப்பா நினைக்கும் படி இருக்குனு நினைச்சேன்.

    தாமதமாக வெளியாகும் போது ,ஏன் இப்படினு கேள்வி வருது , அதனால் தான் கேட்டேன். எப்பவுமே நம்ம மனசுல நினைக்கிறதை சொல்லிவிடுவது ,வழக்கம். ஏன் ,எதற்கு,எப்படினு நினைச்சு குழம்பிக்கிறதுக்கு ,இப்படியா?னு கேட்டுடலாமேனு தான் :))
    -------------

    கண்டிப்பாக படிச்சுட்டு , எனக்கு தோன்றியதை சொல்கிறேன், ஆனால் அதுக்கு அப்புறம் சண்டைக்குலாம் வரக்கூடாது அவ்வ்!
    ----------------------

    ReplyDelete

  29. கணேசன்,

    நல்லாத்தான் சமாளிக்கிறிங்க, ஆரம்பத்தில "ஒரு பிலாக்"ல இருக்கிறத உதாரணம் காட்டினது நீங்க தான் இப்போ என்னமோ எபிகிராபிக் காட்டினேன்னு சொல்றிங்க.

    இப்ப காட்டினதுலவும் "வார்த்தைக்கு வார்த்தை மேட்ச் "ஆகுதா", அலெக்சாண்டர் கன்னிங்காம் தான் முதலில் மொழிபெயர்த்தார் ,அவரோட வெர்ஷனில் "அசோகா"னு இல்லையே ஏன்?

    மறுபடியும் தேடிப்படிச்சு பார்க்கிறேன், "அலெக்சாண்டர் கன்னிங்காம்" மொழிபெயர்ப்பில அசோகானு இருக்கானு தருமிய்யாவே சொல்லட்டும் .

    அலெக்சாண்டர் கன்னிங்காம் காலத்துக்கு பிறகு பலரும் ,அசோகான்னு இருக்குனு எழுதிக்காட்டுறாங்க.

    அந்தவரியில "தேவனாம்பியாச" வுக்கு அடுத்து ஒரு முழு சொல் தான் இருக்கு , அதை அசோகான்னு" கணக்கு வச்சா, சொல்கிறேன்,ஆணையிடுகிறேன்னு சொல்லும் சொல் இல்லை.

    ஹெச்.கிருஷ்ணா சாஸ்திரி ,மொழிப்பெயர்க்கும் போது தான் அசோகான்னு சேர்ந்து போட்டிருக்கார்.

    அசோகா என்ற பெயர் பல மன்னர்களுக்கும் இருந்தப்பெயர் , அசோகர் காலத்துக்கு முன்னரே இரண்டாவது புத்த சங்கத்தினை , காஷ்மீரில் கூட்டிய சிசுநாகாவின் புதல்வன் பெயர் காலசோகன் என்கிற காக்கவர்மன் என இருக்கு.காக்கவர்மன் தாத்தா பெயர் Nagadashoka என இருக்கு.

    இதை எல்லாம் ஒன்றாக்கி "இலங்கையில் உள்ள புத்தநூல்களில் அசோகருக்கே கொடுத்துட்டாங்க.

    அஷ்கவா என்ற அரசாட்சி காந்தகார் பகுதியில் இருந்தது,அதில் இருந்து தான் அசோகா என்ற பெயர் உருவாகி இருக்குனு பல ஆய்வு நூல்களும் இருக்கு, அதை தேடி எடுக்கிறேன்.

    ReplyDelete
  30. //இப்போ என்னமோ எபிகிராபிக் காட்டினேன்னு சொல்றிங்க//
    ஆமாம். கொடுத்த சுட்டிகளை பார்த்தீங்கதானே? ஒரு சுட்டி ஹெச் கிருஷ்ண சாஸ்திரி என்னும் epigraphist 1915-ல் மஸ்கி கல்வெட்டை பற்றி சமர்ப்பித்த அறிக்கை. மற்றொரு சுட்டி, பெஞ்சமின் ரைஸ் என்னும் epigraphist (archaelogist உம் கூட) மஸ்கி கல்வெட்டை பற்றி 1916 ல் சமர்ப்பித்த அறிக்கை.இரண்டு அறிக்கையும் தெளிவாகவே தேவனாம்பிய அசோகச என்று சொல்லுது. நான் முதலில் கொடுத்த ப்ளாக்-உம் கிருஷ்ண சாஸ்திரியின் மஸ்கி கல்வெட்டு பிரதி மற்றும் மொழிபெயர்ப்பை தான் சுட்டி இருந்தது. எழுதியவர் நேர்மையானவர். அதை தெளிவாகவே சொல்லி இருக்கார்.

    //அலெக்சாண்டர் கன்னிங்காம் தான் முதலில் மொழிபெயர்த்தார் ,அவரோட வெர்ஷனில் "அசோகா"னு இல்லையே ஏன்?//
    எப்படி இருக்கும்?. அலெக்சாண்டர் கன்னிங்காம் ஒய்வு பெற்றதோ 1860இல். இறந்தது 1893இல். மஸ்கி கல்வெட்டு கண்டுபிடிக்க பட்டதோ 1915இல். அப்புறம் அவர் எப்படி மஸ்கி கல்வெட்டை மொழிபெயர்த்திருக்க முடியும்?

    //,ஆணையிடுகிறேன்னு சொல்லும் சொல் இல்லை.ஹெச்.கிருஷ்ணா சாஸ்திரி ,மொழிப்பெயர்க்கும் போது தான் அசோகான்னு சேர்ந்து போட்டிருக்கார்.//
    ஹெச் கிருஷ்ண சாஸ்திரி ஒரு epigraphist. பிராமி எழுத்துருவை படிக்க தெரிந்தவர். கல்வெட்டு உள்ள வட மொழி தெரிந்தவர். அவர் அறிக்கை "peer reviewed journal" இல் வந்த ஒன்று. கல்வெட்டை அடுத்து ஆய்வு செய்த ரைஸ் உம் epigraphist, பிராமி எழுத்துரு மற்றும் வட மொழி அறிந்தவர். அவரும் அசோகான்னு தான் அறிக்கையில் எழுதியிருக்கார். அவருடைய அறிக்கையும் Peer reviewed தான்.D.C Sirkar அப்படியே.

    இந்த மொழி பெயர்ப்புகள் தப்புன்னு வாதம் பண்றதா இருந்தா ஒன்று நீங்க பிராமி தெரிந்த epigraphist ஆ இருந்து, peer reviewed journal ஒன்றில் உங்கள் விளக்கத்தை வைக்கணும்.இல்லாவிட்டால் வேறு ஒரு epigraphist இந்த அறிக்கைகளுடன் முரண்பட்டு சமர்ப்பித்த அறிக்கைய காட்டனும். அசோகா என்றால் ஆணைஇடுவது போன்ற கற்பனை விளக்கம், மற்றும் அசோகா என்ற பெயரின் மூலத்தை பற்றிய விளக்கமெல்லாம் எல்லாம் வெறும் நேர விரயம் தான்.

    ReplyDelete
  31. வவ்வால்,

    //ஆரம்பத்தில "ஒரு பிலாக்"ல இருக்கிறத உதாரணம் காட்டினது நீங்க தான்இப்போ என்னமோ எபிகிராபிக் காட்டினேன்னு சொல்றிங்க//

    ஆமாம். epigraphist ஆதாரம் தான் கொடுத்திருந்தேன். ப்ளாக் காட்டியதில் என்ன பிரச்சினை? ப்ளாக் எழுதியவர் ஒன்றும் கல்வெட்டு பற்றி கற்பனை மொழி பெயர்ப்பு கொடுக்கவில்லை.அவர் கிருஷ்ண சாஸ்திரியின் மஸ்கி கல்வெட்டு பிரதி மற்றும் மொழிபெயர்ப்பை தான் கொடுத்திருந்தார். அதை நேர்மையுடன் தெளிவாகவே அவர் சொல்லியும் இருக்கார். நீங்கள் தான் கற்பனையான மொழி பெயர்ப்பை சொல்லி நழுவ பார்த்தீர்கள். அதனால் தான் அடுத்தபடியாக நேரடியாக கிருஷ்ண சாஸ்திரியின் அறிக்கையை காட்டினேன். அந்த சுட்டிகளை பார்த்தீங்கதானே?

    ஒரு சுட்டி ஹெச் கிருஷ்ண சாஸ்திரி (epigraphist) 1915-ல் மஸ்கி கல்வெட்டை பற்றி சமர்ப்பித்த அறிக்கை (அந்த pdf இல் ஹைதாரியின் முன்னுரை அடுத்து கிருஷ்ண சாஸ்திரியின் அறிக்கை வருது). மற்றொரு சுட்டி, royal asiatic society journal க்கு ரைஸ் என்னும் epigraphist (archaelogist உம் கூட) மஸ்கி கல்வெட்டை பற்றி 1916 ல் சமர்ப்பித்த அறிக்கை.இரண்டு அறிக்கையும் தெளிவாகவே தேவனாம்பிய அசோகச என்று மொழி பெயர்த்து சொல்லுது. இன்னும் ஒரு படி மேல போய் இரண்டு அறிக்கையும் மஸ்கி கல்வெட்டு, தேவநம்பிய தான் அசோகாவா என்ற சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்து விட்டது ன்னும் சொல்லுது.

    //அலெக்சாண்டர் கன்னிங்காம் தான் முதலில் மொழிபெயர்த்தார் ,அவரோட வெர்ஷனில் "அசோகா"னு இல்லையே ஏன்//

    எப்படி இருக்கும்?. அலெக்சாண்டர் கன்னிங்காம் ஒய்வு பெற்றதோ 1860இல். இறந்தது 1893இல். மஸ்கி கல்வெட்டு கண்டுபிடிக்க பட்டதோ 1915இல். அப்புறம் அவர் எப்படி மஸ்கி கல்வெட்டை மொழிபெயர்த்திருக்க முடியும்? மஸ்கி கல்வெட்டில் தான் முதன் முதலில் அசோகனு பெயர் இருக்கு. 1893 முன்னாடி எழுதிய நூல்களில் எப்படி இந்த இந்த தகவலை எதிர்பார்க்க முடியும்?. விட்டா, இந்தியாவுக்கு இன்னும் பிரிட்டிஷ்காரரிடம் இருந்து சுதந்திரம் கிடைக்கலை, கிடைச்சிருந்தா ஏன் என் கிட்ட இருக்கிற 1920 சுதேச மித்ரனில் அதை பத்தி போடலைன்னு விவாதம் பண்ணுவீங்கள் போல.

    //,ஆணையிடுகிறேன்னு சொல்லும் சொல் இல்லை.ஹெச்.கிருஷ்ணா சாஸ்திரி ,மொழிப்பெயர்க்கும் போது தான் அசோகான்னு சேர்ந்து போட்டிருக்கார்.//

    ஹெச் கிருஷ்ண சாஸ்திரி ஒரு epigraphist. பிராமி படிக்க தெரிந்தவர். கல்வெட்டு உள்ள வட மொழி தெரிந்தவர். அவர் அறிக்கை "peer reviewed journal" இல் வந்த ஒன்று. கல்வெட்டை அடுத்து ஆய்வு செய்த ரைஸ் உம் epigraphist, பிராமி மற்றும் வட மொழி அறிந்தவர். அவரும் அசோகான்னு தான் அறிக்கையில் எழுதியிருக்கார். அவருடைய அறிக்கையும் Peer reviewed தான்.D.C Sirkar அப்படியே.

    இந்த மொழி பெயர்ப்புகள் தப்புன்னு வாதம் பண்றதா இருந்தா
    1. நீங்க பிராமி தெரிந்த epigraphist ஆ இருந்து, வட மொழியும் அறிஞ்சிருக்கணும்.(இந்த பின்புலம் இல்லாவிட்டால் நீங்கள் பிரமகிரி கல்வெட்டின் ஆங்கில குறிப்பை அவசர கதியில பார்த்து விட்டு அசோகர் தான் ஆர்ய புத்ரன்னு தப்பா சொன்ன மாதிரி தான் ஆகும்).
    அல்லது
    2.வேறு ஒரு epigraphist இந்த அறிக்கைகளுடன் முரண்பட்டு சமர்ப்பித்த அறிக்கைய காட்டனும்.

    இரண்டே வழி தான். அதை விட்டுட்டு அசோகா என்றால் ஆணைஇடுவது என்ற கற்பனை விளக்கம், மற்றும் அசோகா என்ற பெயரின் மூலவிளக்கமெல்லாம் எல்லாம் வெறும் நேர விரயம் தான்.

    ReplyDelete
  32. due to a tech. mistake Ganesan's last but one was not uploaded in the first time. sorry about it. now you have both the comments.

    ganesan,, vavval,
    since i am out of madurai, and not using my 'own' computer, such trouble of posting your comments has cropped up. sorry about the delay in posting your comments.

    ReplyDelete
  33. கணேசன்,

    //1860இல். இறந்தது 1893இல். மஸ்கி கல்வெட்டு கண்டுபிடிக்க பட்டதோ 1915இல். அப்புறம் அவர் எப்படி மஸ்கி கல்வெட்டை மொழிபெயர்த்திருக்க முடியும்?//

    இங்கே ஜேம்ஸ் ப்ரின்செப்,வில்லியம் ஜோன்ஸ் கண்டுப்பிடிப்பை வச்சு பேசிக்கொண்டிருந்ததால், மஸ்கி கல்வெட்டின் காலத்தை மறந்துட்டேன், நீங்களே எடுத்துக்கொடுத்ததற்கு நன்றி!

    சரியாதான் சொல்லுறிங்க,அப்போ நீங்களே சொல்லுங்க . ஜேம்ஸ் பிரின்செப் கிபி 1838 இலேயே எப்படி "அசோகா தான் பியாதசினு" சொன்னார்?

    பிரின்செப் காலத்திலே அசோகானு சொல்ல ஆதாரம் இருந்ததா?

    1915 இல் கண்டுப்பிடிக்கப்பட்ட மஸ்கி கல்வெட்டின் "காலம் கார்பன் டேட்டிங்" முறையில் உறுதியே செய்யப்படலைனு போட்டிருக்கு. மைனர் எடிக்ட்ஸ் எல்லாம் அவ்ளோ ஆதாரமான கல்வெட்டா சொல்ல முடியாது என பலரும் ஒரு வார்த்தை சொல்லி வைத்துள்ளதை கணக்கில் எடுக்கலையா?

    # //இரண்டே வழி தான். அதை விட்டுட்டு அசோகா என்றால் ஆணைஇடுவது//

    முதலில் எதுக்கு கிடந்து துடிக்கிறிங்க, நான் எங்கே "அசோகா" என்றால் ஆணையிடுகிறேன்னு " பொருள் "என சொன்னேன், அங்கு இருக்கும் சொல் ஆணையிடுகிறேன் என்ற "அனையபயதி" என்ற சொல் என்று தான் சொன்னேன்.

    ஆர்க்கியலாஜிகல் சர்வே ஆஃப் இந்தியாவின் " Corpus Inscriptionum Indicarum, vol. i இல் அசோகானு போட்டில்லை. தெளிவற்ற ஒரு சொல்லைத்தான் "ரி கண்ட்ஸ்ரக்‌ஷன் " செய்து போட்டுள்ளதாக B.M. Barua, Dr J.W. McCrindle போன்றொரின் கட்டுரையில் இருக்கு. absract தான் படிக்க கிடைக்குது, முழு புக் கிடைச்சா சுட்டி தருகிறேன்.

    தேவானம்பியாசா அசோகா என்ற இரு சொல்லை மட்டும் வைத்துக்கொண்டால் சொல்கிறேன் ஆணையிடுகிறேன் என்பது போன்ற சொல்லே இல்லாமல் எப்படி அப்படி சொன்னதாக எழுதி வைத்தார்கள். சொல் எண்ணிக்கை எங்கே மேட்ச் ஆகுது?

    # பியாதசி என்ற மன்னர் வாழ்ந்த வரலாறு தெளிவா இருக்கு, அவர்தான் அசோகா என சொல்ல ஏன் ஒரே ஒரு கல்வெட்டில் அதுவும் சந்தேகத்துக்கிடமாக இருக்கு?

    புளுடார்க், ஸ்டார்போ போன்ற கிரேக்க ,ரோமானிய வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகளில் ,சந்திரகுப்தர், பிம்பிசாரர் எல்லாம் இருக்கும் போது அசோகர் பெயர் இல்லாமல் போனது ஏன்?

    சந்திர குப்தர் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்கள் கூட கிடைச்சிருக்கு ஆனால் அசோகர் காலத்து நாணயங்கள் கிடைக்கலை, அவர் காலத்தில் பணத்தேவையே இல்லையா?

    அசோகர் கல்வெட்டுனு சொல்லப்படுவதில் எல்லாம் "தம்மா"(தர்மா) என சொல்லி இருக்கும்,ஆனால் புத்தரின் கொள்கைனோ, புத்தர் பெயரோ இல்லை, இலங்கைக்கு புத்தம் பரப்ப அனுப்பினார்னு சொல்லப்படுது ,ஆனால் அங்கே இருப்பது "தேரவாத புத்த மதம்", அசோகர் சொல்லும் தம்மா , தம்மபதம் என்பது சிறு பிரிவாக சீனாவில் தான் இருக்கு சீனாவில் மற்ற இடங்களில் "கனிஷ்கர் காலத்திய "மஹாயான புத்த மதம்" தான்.

    இப்படி கண்ணுக்கு தெரிய பல முரண்ப்பாடுகள் இருக்கு என்னமோ எபிகிராப்ல காட்டியாச்சுனு "திரிக்கப்பட்ட மொழிப்பெயர்ப்பை' சொல்லிக்கிட்டு.

    ReplyDelete
  34. வவ்வால்,

    மஸ்கி கல்வெட்டு மொழிபெயர்க்கபட்ட விதம் தவறு என்று சொல்வதற்கு epigraphist எழுதிய ஆதாரம் கேட்டிருந்தேன். நீங்கள் கொடுக்கிற பாடில்லை. ஆதாரம் ஏதும் இன்றி மீண்டும் பற்பல தவறுகளுடன் உங்கள் சொந்த கருத்துகளையே தந்துள்ளீர்கள். இது முழுக்க நேர விரயமின்றி, வேறில்லை என்று எனக்கு புரிகிறது. கடைசி முயற்சியாக உங்கள் பின்னூட்டத்துக்கு பதில் அளிக்கிறேன். ஆதாரம் இல்லா பதில்களே மீண்டும் வந்தால் இத்துடன் முடித்து கொண்டு விலகி விடுகிறேன்.

    //ஜேம்ஸ் பிரின்செப் கிபி 1838 இலேயே எப்படி "அசோகா தான் பியாதசினு" சொன்னார்? பிரின்செப் காலத்திலே அசோகானு சொல்ல ஆதாரம் இருந்ததா?//

    Literary ஆதாரம் (மகாவம்ச, தீபவம்ச) கொண்டு சொல்லியுள்ளார். இவற்றில் பியதசி அசோக என்று பதம் பல முறை உள்ளது. சயின்ஸ் இல் இது தானே முறை. முதலில் வரும் ஆதாரத்தை கொண்டு ஒரு கருத்தும், எதிர் மறையான ஆதாரம் அடுத்து கிட்டினால், முன்பு கூறிய கருத்தை கைவிடுவதும், அல்லது வலு சேர்க்கும் ஆதாரங்கள் அடுத்து கிட்டினால் கருத்து வலு பெறுவதும் தானே விஞ்ஞான வழி, அது தானே இங்கு நடந்துள்ளது. Literary ஆதாரங்களை பின்னாளில் கிடைத்த கல்வெட்டு ஆதாரங்கள் உறுதி தானே படுத்தி உள்ளது.

    பிரின்செப்பே அவரின் கருத்தை பற்றி தெளிவாக தானே எழுதி வச்சிருக்கார்.
    http://archive.org/stream/journalofasiatic62asia#page/790/mode/1up.
    முதலில் தவறுதலாக பியதசி இலங்கை மன்னன் என்று கூறி வந்ததாகவும், பின்னர் ஜார்ஜ் டர்னூர் தம்மை தொடர்பு கொண்டு அசோகர் பியதசி என்று மகாவம்ச, திபவம்ச வரிகளை காட்டியவுடன், அவர் சந்திரகுப்தரின் பேரன் அசோகன் என்று முடிவுக்கு வந்ததாகவும் தெளிவாக தானே சொல்கிறார். முக்கியமாக தன்னுடைய தவறான முதல் கருத்தை மாற்றிகொண்ட நேர்மையை கவனியுங்கள்.

    . //1915 இல் கண்டுப்பிடிக்கப்பட்ட மஸ்கி கல்வெட்டின் "காலம் கார்பன் டேட்டிங்" முறையில் உறுதியே செய்யப்படலைனு போட்டிருக்கு. //

    இது தவறான கருத்து. மஸ்கி கல்வெட்டை கார்பன் டேட்டிங் எப்படி செய்ய முடியும்? கார்பன் டேட்டிங் என்பது எலும்புகள், அரிசி, துணி போன்ற பொருள்களின் மேல் செய்வது. நெடிய half life உள்ள isotope கொண்டு பாறையின் மேல் செய்யலாம். அப்போது கூட பாறை உருவான காலத்தை சொல்லுமே தவிர, பாறை மேல் மனித கிறுக்கலின் காலத்தை எப்படி சொல்லும்? ஒருவேளை கல்வெட்டு உள்ள பாறை, அகழ்வாராய்ச்சியில் கிட்டிய பொருள் என்றால், மண் அடியில் அது கிடைத்த தளத்தில் உடன் கிடைத்த தானியம், எலும்பு போன்ற பொருள்களை டேட்டிங் செய்து கல்வெட்டின் காலமும் அதுவே என்று வல்லுநர் சொல்லுவர். மஸ்கி கல்வெட்டோ இவ்வாறு மண்ணுக்கு அடியில் இருந்து கண்டு எடுக்கபட்ட கல்லில் இல்லை. ஒரு குன்றில் உள்ள பாறையில் உள்ளது.அப்புறம் எப்படி கார்பன் டேட்டிங்? இவற்றிக்கு paleograpraphy கொண்டு தான் வயதை epigraphists கணக்கிடுகின்றனர். கிருஷ்ண சாஸ்திரி, அறிக்கையில் paleographic குறிப்புகளை கொடுத்துள்ளாரே.

    //அவர்தான் அசோகா என சொல்ல ஏன் ஒரே ஒரு கல்வெட்டில்//

    மீண்டும் தவறு. ஒரு கல்வெட்டு இல்லை. மஸ்கி யை சேர்த்து மூன்று இருக்கு. தருமி அவர்களின் Charles Allen ன் பதில் கொண்ட பின்னூட்டத்தை பார்த்தீங்களா? . Charles சொன்ன 1990 ல் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில்
    http://en.wikipedia.org/wiki/Kanaganahalli
    அசோகர் பெயர் மட்டும் இன்றி அவர் உருவ படமும் இருக்கு. குஜராத்தில் கண்டெடுக்கபட்ட ருத்ரதாமன் கல்வெட்டில்,
    http://www.sdstate.edu/projectsouthasia/upload/JunagadhRockInscription-of-Rudradaman.pdf
    அசோக மௌர்யா என்று எழுதி இருக்கு. கிபி 150இல் ருத்ரதாமன் பொய்யாய் ஏன் எழுதி வைக்கணும்?

    //மைனர் எடிக்ட்ஸ் எல்லாம் அவ்ளோ ஆதாரமான கல்வெட்டா சொல்ல முடியாது என பலரும் ஒரு வார்த்தை சொல்லி வைத்துள்ளதை கணக்கில் எடுக்கலையா?//

    epigraphist யார் இப்படி சொல்லி இருக்காங்க? ஆதாரம் வேண்டும். Minor நு வார்த்தையை பார்த்த உடனே அது குறைந்ததுன்னு நீங்களே அர்த்தம் பண்ணிகறதா? இவை மேஜர் எடிக்ட்ஸ் விட காலத்தால் முந்தியவை, சொல்லப்பட்டு சங்கதி குறைவு. அவ்வளவே.

    ReplyDelete
  35. //அங்கு இருக்கும் சொல் ஆணையிடுகிறேன் என்ற "அனையபயதி" என்ற சொல் என்று தான் சொன்னேன்//

    கிருஷ்ண சாஸ்திரி, ரைஸ் மற்றும் சிர்கர் போன்ற qualified epigraphists அதை அசோகா என்று படிக்கும் போது மாற்றி சொல்வதற்கு உங்களுடைய Qualification என்ன? நீங்கள் பிராமி அறிந்த எபிக்ரபிஸ்ட் -ஆ?

    //தெளிவற்ற ஒரு சொல்லைத்தான் "ரி கண்ட்ஸ்ரக்‌ஷன் " செய்து போட்டுள்ளதாக B.M. Barua, Dr J.W. McCrindle போன்றொரின் கட்டுரையில் இருக்கு. absract தான் படிக்க கிடைக்குது, முழு புக் கிடைச்சா சுட்டி தருகிறேன்//

    முதலில் அதை செய்ங்க.

    //சொல்லே இல்லாமல் எப்படி அப்படி சொன்னதாக எழுதி வைத்தார்கள்//

    ஹெச் கிருஷ்ணா சாஸ்திரியின் கட்டுரையை படிச்சிங்க தானே. ஆணை இடுகிறேன் என்று சொல்லை நேர்மையாக அடைப்பு குறி உள்ளே தானே போட்டிருக்கார்? அதில் என்ன தவறு? மீண்டும் சொல்கிறேன், வேறு epigraphist இந்த மொழி பெயர்ப்பை பற்றி தவறு என்று சொல்லி உள்ளனரா? ஆதாரம் கொடுங்கள் பார்ப்போம்.

    // சொல் எண்ணிக்கை எங்கே மேட்ச் ஆகுது?//

    "கணேசன் பந்தை உதைத்தான்" என்பதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் "Ganesan kicked the ball" என்று தானே வரும். சொல் எண்ணிக்கை மேட்ச் ஆகுதா?

    // அதுவும் சந்தேகத்துக்கிடமாக இருக்கு?//

    ஆதாரம் இல்லாமல் இதை திரும்ப திரும்ப சொன்னா உண்மை ஆயிடுமா என்ன? ஆதாரம் ப்ளீஸ்.

    // ஆனால் அசோகர் காலத்து நாணயங்கள் கிடைக்கலை//

    கோசம்பி (http://en.wikipedia.org/wiki/Damodar_Dharmananda_Kosambi) என்னும் numismatist, indian numismatics என்ற நூலில் (http://books.google.com/books?id=favxZII9WtwC&printsec=frontcover&dq=inauthor:%22Damodar+Dharmanand+Kosambi%22&hl=en&sa=X&ei=bMSvUo20M8r3oATkgYLwDQ&ved=0CDUQ6AEwAQ#v=onepage&q&f=false) மௌரிய காசுகளை , அசோகரின் காசுகள், சந்திரகுப்தர் இன் காசுகள் என்று வகை படுத்தி உள்ளாரே. எப்படி? கடுசியஸ் குறி அசோகரின் முத்திரை என்றும் சொல்கிறாரே.
    இதெல்லாம் தவறா? தவறென்று வேறு numismatist ஆதாரம் காட்ட முடியுமா?

    //புத்தரின் கொள்கைனோ, புத்தர் பெயரோ இல்லை//

    தவறு. உ பி யில் அஹ்ருஅற கல்வெட்டில் "புத்தச" என்ற வாக்கியம் வருகிறது.


    //அசோகர் சொல்லும் தம்மா , தம்மபதம் என்பது சிறு பிரிவாக சீனாவில் தான் இருக்கு//

    தம்மா என்றால் பாலி மொழியில் அறம் . தம்மபதம் என்றால் புத்தர் சொல்லிய அறவழி என்ற பொருள். அவ்வளவே. இதை போய் ஏன் அசோகருக்கு பின் தோன்றிய பௌதத்தின் கிளைகளான மஹாயான, தேரவாதம் போன்றவற்றுடன் போட்டு குழப்புகிறீர்கள் என்று புரியவில்லை. புத்தர் தன் வாயால் சொல்லிய அறவழி போதனைகளை தொகுத்து பௌதத்தில் "தம்மபத" நூல்கள் உண்டு. இன்னும் சொல்லப்போனால் எல்லா தம்மபத நூல்களிலும் பழைமையான தம்மபத நூல் தேரவாத பாலி தொகுப்புகளில் தான் இருக்கு. இது நீங்கள் இலங்கைக்கு ஆள் அனுப்பலைன்னு சொல்லவர கருத்துக்கு எதிராக அல்லவா இருக்கு.

    ReplyDelete

  36. //புத்தரின் கொள்கைனோ, புத்தர் பெயரோ இல்லை//
    தவறு. உ பி யில் அஹ்ருஅற கல்வெட்டில் "புத்தச" என்ற வாக்கியம் வருகிறது. இந்த வகையில் மிக முக்கியமான கல்வெட்டு பாப்ரா கல்வெட்டு. அதில் புத்த, தம்ம, சங்க ஆகிய மூன்று சொற்களுமே வருகிறது.

    http://www.jstor.org/discover/10.2307/25189380?uid=3739560&uid=2&uid=4&uid=3739256&sid=21103138345777

    இந்த கல்வெட்டை பற்றி பிரின்செப் மிக மகிழ்ச்சியாக (அவரின் கருத்தை மெய்ப்பிப்பதால்) குறிப்பிட்டு இருப்பார்.

    ReplyDelete
  37. அளவு பெரிதாக இருந்ததால் பிளாக்கர் பின்னூட்டத்தை ஏற்க மறுத்தது. இதற்காக வேண்டி பின்னூட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டியதாக போய் விட்டது. இதை செய்ய போய் ஒரு குறிப்பு விடுப்பட்டு விட்டது. அது

    //புத்தரின் கொள்கைனோ, புத்தர் பெயரோ இல்லை//
    தவறு. உ பி யில் அஹ்ருஅற கல்வெட்டில் "புத்தச" என்ற வாக்கியம் வருகிறது. இந்த வகையில் மிக முக்கியமான கல்வெட்டு பாப்ரா கல்வெட்டு. அதில் புத்த, தம்ம, சங்க ஆகிய மூன்று சொற்களுமே வருகிறது.

    http://www.jstor.org/discover/10.2307/25189380?uid=3739560&uid=2&uid=4&uid=3739256&sid=21103138345777

    இந்த கல்வெட்டை பற்றி பிரின்செப் மிக மகிழ்ச்சியாக (அவரின் கருத்தை மெய்ப்பிப்பதால்) குறிப்பிட்டு இருப்பார்.

    ReplyDelete
  38. கணேசன் ,,

    ஆர்வக்கோளாறில் பேசும் உங்களிடம் பேசுவது எனக்கும் நேர விரயமோனு தான் தோனுது. அவ்வ்!

    பிரின்செப் சொன்னது ஆதாரமற்றதுனு தான் நான் ஆரம்பத்தில் பேசியது, மஸ்கி கல்வெட்டு கதை ,ஆரம்பத்தில் பிரின்செப் சொல்லியாச்சுனு அதை உண்மையாக்கனும் என வலிந்து மொழிப்பெயர்க்கப்பட்டது.

    ஆர்க்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியாவின் தொகுப்பில் "அசோகா" என்ற சொல்லின் மீதான சந்தேகம் இருப்பதை சொல்லி இருக்குது, ஆர்க்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியாவின் கூற்றே அப்படி இருக்கும் போது ஆதாரம் காட்டினேன்னு சொன்னதையே சொல்கிறீர்கள்.

    அசோகர் காலத்திற்கு பின்னர் கல்வெட்டு எழுதி இருக்கே அப்போ பொய்யா சொல்லி இருப்பாங்க என "அசம்ப்ஷன்" எல்லாம் தேவையற்றது.

    இணையத்தில் கிடைக்காத நூல்களாக உள்ளதால் பேரை மட்டும் சொன்னேன், அப்போ இணையத்தில் இல்லைனா உண்மையில்லையா அவ்வ்!

    அசோகர் எல்லாம் டாக்சிலா / மேற்கு பஞ்சாப் பகுதியை சேர்ந்தவர்னு ஆய்வுக்கட்டுரையே இருக்கு, இணையத்தில் கிடைச்சா எடுத்து போடுறேன், இன்றைய பலுச்சிஸ்தான் பகுதியில இருக்க ஒரு இடத்தின் பெயர் "பாடலிமோத்ரா" அதனை தான் பாடலி புத்ரா, பாட்னா, பீகார்ன்னு மாத்தி சொல்லியதாக போகும். இப்படி நிறைய முரண்பாடுகள் உள்ள ஒன்றை எடுத்தேன் கவிழ்த்தேன்னு அரைகுறையாக எப்படித்தான் பேசுறிங்களோ?

    # கார்பன் டேட்டிங் வச்சு கல்வெட்டு காலம் நிர்ணயிக்க முடியாதுனு யாரு சொன்னாங்க?

    "கல்வெட்டு எழுத்துக்கள்" எழுதிய வரிகளில் ஆர்கானிக் மெட்டீரியல் சேர்ந்திருக்கும், அதே சமயம் பாறையினுள் இருக்காது. மேலும் பாறையின் மேற்பரப்பில் உள்ள ஆர்கானிக் படிமத்துக்கும், கல்வெட்டின் வரிகளில் உள்ள ஆர்கானிக் படிமத்துக்கும் வித்தியாசம் இருக்கும்.

    இதனை கார்பன் டேட்டிங் முறையில் ஆக்சிலரேட்டட் மாஸ் ஸ்பெக்ட்ரோகிராபி என்ற வகையில் கண்டறிவார்கள்.

    பின்னர் பாறையின் வயதை , Potassium-Argon டேட்டிங் முறையில் கண்டுப்பிடிச்சு , ரெண்டுக்கும் உள்ள வித்தியாசத்தினை வைத்து "பாறையில் உள்ள" எழுத்தின் வயதை கண்டுப்பிடிக்கலாம்.

    இதான் விலை மலிவான ஸ்டேண்டர்ட் புரோசிஜர்.

    இன்னும் மேக்னடிக் பிராபர்டி, அயான் டென்சிட்டினு பல முறையில வயசு கண்டுபிடிக்கலாம். போலார் ஐஸ்க்கே எந்த எந்த ஐஸ் கிளேசியர் எந்த ஆண்டு உருவாச்சுனு கண்டுப்பிடிக்கிறாங்க, பாறையில் எழுதினதுக்கு டேட்டிங் கண்டுப்பிடிக்க முடியாதுனு சொல்லிக்கிட்டு வறிங்க அவ்வ்!

    ReplyDelete
  39. கணேசன்,

    //கிருஷ்ண சாஸ்திரி, ரைஸ் மற்றும் சிர்கர் போன்ற qualified epigraphists அதை அசோகா என்று படிக்கும் போது மாற்றி சொல்வதற்கு உங்களுடைய Qualification என்ன? நீங்கள் பிராமி அறிந்த எபிக்ரபிஸ்ட் -ஆ? //

    முதலிலேயே சொல்லிவிட்டேன், ஆர்க்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியாவின் " Corpus Inscriptionum Indicarum, vol. i " இல் என்ன சொல்லி இருக்கு என்பதை,அந்நூல் இணையத்தில் இல்லை என்பதால் அதனை உதாரணம் காட்டக்கூடாதா என்ன?

    மேலும் அசோகா என்ற சொல் ஒன்றும் தெள்ளத்தெளிவாக எல்லாம் எழுதியில்லைனு ன் " சிர்கார் ,பாண்டார்கர் போன்றோரின் நூல்களிலேயே குறிப்பிட்டு இருப்பதையும் பார்க்கவில்லையா?

    பெனிபிட் ஆஃப் டவுட் அடிப்படையில் தான் அம்மொழிப்பெயர்ப்பே.

    ராய் சவுத்ரி, வி.ஏ.ஸ்மித், பண்டார்கர், சிர்கார் மற்றும் இலங்கையில் உள்ள புத்த தர்மா அசோசியேஷன் வெளியீடுகள் ஆகியன வெளியிட்ட ,எழுதிய அசோகா எடிக்ட்ஸ் மற்றும் அசோகா பற்றிய நூல்களைப்படித்து விட்டு தான் எனது சந்தேகங்களை முன் வைக்கிறேன்.

    சிலர் முன் முடிவுடன் எழுதியவற்றை வைத்துக்கொண்டு "ஆணித்தரமான" உண்மை என பேசும் உங்களுக்கு "வரலாற்றின் இருண்டப்பக்கங்கள் ,அதன் பொய்களை" ஆராய மனம் இருக்காது என்பது தெளிவாகிறது.

    # //"கணேசன் பந்தை உதைத்தான்" என்பதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் "Ganesan kicked the ball" என்று தானே வரும். சொல் எண்ணிக்கை மேட்ச் ஆகுதா?//

    கல்வெட்டினை டிசைபர் செய்வதற்கும் "மொழிப்பெயர்ப்பு" செய்வதற்குமான வித்தியாசம்ம் கூட புரியலையே அவ்வ்வ்

    சொல்லுக்கு சொல் முதலில் எடுத்து எழுத வேண்டும், அதன் பின்னரே அதனை மொழிப்பெயர்த்து ,பின்னர் புரிந்துக்கொள்ளும் வகையில் விளக்கத்தினை எழுதி வைக்கணும்.

    அடைப்புக்குறிக்குள்ள போட்டு என்ன வேண்டுமானாலும் எழுதிட்டு போகலாம் அதை நம்ப வேண்டும் என்ற அவசியமே இல்லை.

    ஆர்க்கியாலசிகல் சர்வேயின் ஆவணப்படி "a k m a" என நாலு எழுத்து தான் படிக்க கூடிய வகையில் இருக்கு, அது "askama"ஆக கூட இருக்கலாம் , என Dr J.W. McCrindle சொல்லி இருக்கிறார், அவர்களின் பேரை எல்லாம் முன்னரே சொல்லிட்டேன் என்னமோ நானே சொல்வதாக சொல்லிக்கிட்டு இருக்கிங்க.

    "askama" என்பது மேற்கு பஞ்சாப்பில் இருந்த ஒரு டைனாஸ்டி அவர்களின் வழி வந்தவர் அசோகர் ஆக இருக்கலாம் என "பஞ்சாப் பல்கலையில்" ஒரு ஆய்வுக்கட்டுரையும் சமர்பிக்கப்பட்டதாக பஞ்சாபி நெட் என்ற இணைய தளத்தில் போட்டிருக்கு, அந்த கட்டுரை இணையத்தில் கிடைக்குதா என தேடிக்கொண்டிருப்பதால் தான் குறிப்பிடவில்லை.

    தொடரும்....

    ReplyDelete
  40. தொடர்ச்சி...

    # கோசம்பி பேரை நினைவுப்படுத்தியதற்கு நன்றி, யாரோ ஒருத்தர் அசோகா இந்தியரே இல்லை, யவனர்னு எழுதினாரேனு நினைச்சு தேடிக்கிட்டு இருந்தேன்.

    கோசம்பி தான் அது, அவர் எழுதின புக்கு" cultural history of ancient india" முழுசா படிச்சிங்கலா :-)) "மகதா" என்றால் வணிகர்கள், யவனர்கள்/ஆர்யர்கள் மூலம் கலப்பினமாக உருவானவர்களாக இருக்கலாம்னு " தொடர்ப்பு படுத்துறார்.மேலும் காஷ்மீரின் சிசுநாக வழி வந்தவர்கள்னு சொல்லியும் வச்சிருக்கார்(ராஜ தரங்கிணி -கல்ஹணர் போல) எப்படிங்க உங்களுக்கு தேவையான இடத்தில் இருந்து உருவிக்கிட்டு "ஆதாரம்னு "சொல்லிப்பீங்களா'

    பண்டார்கர் "அசோகரின் கல்வெட்டுக்கள் "ஆர்யவர்தா" எனப்படும் ஆரிய ஊடுருவலின் பாதையில் தான் இருக்கு எனவே ஆர்யர்கள் இந்தியாவில் பரவியதை காட்டுதுனு எழுதி இருக்கார்,

    lectures on ancient history of india by B.R. Bhandarkar year of publication A.D 1919.

    இந்தியாவில நிறைய பேரு "தேவனாம்பியாதசி" என்ற பெயரை முடிந்த அளவுக்கு பின் தள்ளிட்டு அசோகா என்ற பெயரை முன்னெடுத்து செல்ல காரணம் என்ன என்பதை தான் நான் அலசிக்கொண்டிருக்கிறேன். அதனை ஒட்டியே கருத்துக்களை முன் வைத்துள்ளேன்.

    அதற்கு ஏற்ப சோ கால்டு வரலாற்று ஆய்வாளர்களின் நூல்களியே ஓட்டைகள் இருக்கு அதனை சுட்டிக்காட்டியே நான் சொல்கிறேன், அவர்களை விட பெரிய ஆளானு கேட்பதெல்லாம் உங்களுக்கு தேவை இல்லாத ஒன்று, சந்தேகத்துக்கிடமிருக்கு எனில் அது ஏன் என்பதை தான் கேட்கிறேன்.

    சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் இருக்கு என முன்னர் சொன்னதையே சொன்னால் , அது உங்கள் விருப்பம். அதே போல சந்தேகம் இருக்கு என சொல்வது என் விருப்பம்.

    நீங்க அடிப்படையே புரிந்துக்கொள்ளாமல் மேம்போக்காக பேசுவதாகவே படுகிறது,

    அசோகர் கால வெட்டுக்களின் "லிபி - எழுத்து வடிவம் - வரிவடிவம்" பிரம்மியே அல்ல, அது பிராகிருதம் வகை இன்னொன்று கரோஷ்தி லிபி.

    மொழி "பாலி" அதற்கு எழுத்து வடிவம் இல்லை என்பதால் மேற் சொன்ன எழுத்து வடிவில் எழுதியுள்ளார்கள்.

    நீங்க பிரம்மினே சொல்லிக்கிட்டு இருக்கீங்க. கல்வெட்டுக்கு ஆயுள் காலம் கண்டுப்பிடிக்க முடியாதுனு சொல்றிங்க என்னமோ நீங்க ஒருத்தர் தான் வரலாற்றுக்கே ஆபாத்பாந்தவன் போல :-))

    பின்னர் விரிவாக பதிவாக போடலாம்னு இருந்தது , இன்னும் நிறைய இருக்கு பின்னர் பதிவு போடுகிறேன்.
    --------------------

    பின்னூட்டங்களை வேறு முன் பின்னாக வெளியிடுவதால் குழப்பமாகிறது. தருமிய்யா வேற ஊரில இல்லை அதான் இப்படினு சொல்கிறார், எல்லாம் சரியானால் பின்னர் வருகிறேன்.

    ReplyDelete
  41. மொழிபெயர்ப்பு தவறு என்று ஒரு ஆதாரமும் கொடுக்கவில்லை. அள்ளி தெளித்தார் போல சில பெயர்களை ஆங்காங்கே தூவி பல சொந்த கதைகள் தான் மீண்டும் வந்துள்ளது.

    உங்களுடைய

    //ஆரம்பத்தில் பிரின்செப் சொல்லியாச்சுனு அதை உண்மையாக்கனும் என வலிந்து மொழிப்பெயர்க்கப்பட்டது//
    //"கல்வெட்டு எழுத்துக்கள்" எழுதிய வரிகளில் ஆர்கானிக் மெட்டீரியல் சேர்ந்திருக்கும்,//
    //அசோகர் கால வெட்டுக்களின் "லிபி - எழுத்து வடிவம் - வரிவடிவம்" பிரம்மியே அல்ல//

    போன்ற கருத்துகளை நல்ல நகைச்சுவையாய் கருதி, புன்னகையுடன் விலகி கொள்கிறேன்.

    ReplyDelete
  42. வாசிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்

    ReplyDelete
  43. கணேசன்,

    நீங்க கோசம்பி பேரை எடுத்துப்போட்டதுமே நான் கூட உங்களை நினைச்சு இப்படித்தான் சிரிச்சுக்கிட்டேன் :))

    நமக்கு பாயிண்ட் எடுத்துக்கொடுத்து வேலைய சுலுவாக்கிட்டாரேனு :-))

    கல்வெட்டுக்கு "காலம் கண்டுப்பிடிக்க முடியாது" என சொல்லும் போதே எனக்கு புரிஞ்சிடுச்சு ,ஆனாலும் ஆர்வமாக பேசுறீங்களேனு தான் நானும் தொடர்ந்தேன்.

    மகாவம்சம்,தீப வம்சம் ,அசோகவரதனா போன்ற "லெஜண்ட்ஸ்" எல்லாம் ஆதாரம்னு நம்புறவங்ககிட்டே இதை விட அதிகம் எதிர்ப்பார்க்கவும் முடியாது!

    மெனக்கெட்டு "பிரம்மி"னு மட்டும் சொல்லும் போதே தெரியுது, சரிவிடுங்க , வரலாற்றை யாரும் மறைச்சிடவா முடியும்.

    # புத்தமதம் "சைவ மதமே" அல்ல அசோகர்)[பியாதசி" தான் முழுக்க சைவமா மாத்தினார் , எனவே தான் "இந்திய"வரலாற்று ஆசிரியர்களுக்கு அசோகர் மேல "தனிப்பிரியம்" என்ற உண்மைகளை எல்லாம் பின்னர் விரிவாக நம்மப்பதிவில் சொல்கிறேன் , படிச்சு பாருங்க.நல்ல நகைச்சுவையாகவும் இருக்கக்கூடும் அவ்வ்!

    நன்றி!

    ReplyDelete