Friday, January 31, 2014

708. யூதாஸின் நற்செய்தி ...1





*

***



*


THE GOSPEL OF
JUDAS

Edited by
RODOLPHE KASSER
MARVIN MEYER
GREGOR WURST

1600 ஆண்டுகளாக மறைந்து கிடந்த ரகசியம். தொலைந்து போன இந்த புதிய ஏற்பாடு மீண்டும் அறிஞர்களின் கைகளுக்குப் மறைந்து கிடந்த புதையலாக்க் கிடைத்த போதும், அறிஞர்கள் அவைகளைப் படித்துப் புரிந்த போதும் பல அவர்களை ஆச்சரியப்பட வைத்தன. கிறிஸ்துவத்தின் ஆரம்ப காலத்திலிருந்து யார் கண்ணிலும் படாத இந்த நூல், இப்படி ஒரு நூல் இருக்கும் என்பதை யாரும் தெரிந்து கொள்ளாத ஒரு நூல், யூதாஸ் இஸ்காரியோத் என்ற வரலாற்றின் பெரும் நம்பிக்கைத் துரோகி தன் நிலையில் இருந்து எழுதிய இந்த நூல் அறிஞர்களின் கையில் கிடைத்த போது, அந்த நூல் யூதாஸ் ஒரு வில்லன் அல்ல; அவர் ஒரு மகா மனிதன் என்பது தெரிய வந்தது.

இந்த நூலில் ஏசு தன்னைக் காட்டிக் கொடுக்கும் படி யூதாஸைக் கேட்டுக் கொள்கிறார். நமக்குத் தெரிந்த புதிய நற்செய்திகளில் சொன்னது போலின்றி, யூதாஸ் ஏசுவின் சீடர்களிலிலேயே சிறந்த ஒரு மனிதனாகத் தோன்றுகிறார். ஏசுவை முழுமையாகக் கண்டறிந்த ஒரே சீடராக யூதாஸ் இருக்கிறார்.

இந்த நூல் இந்த அரும்பெரும் நற்செய்தியை முதன் முதல் தரும் நூலாகும். இதுவரை திருச்சபையினரால் அதிலும் முக்கியமாக புனிதர் ஐரீனியஸ் (St. Irenaeus) என்பவரால் பொய்த் தகவலாகக் கருதப்பட்டது இந்த நூல். 1970ம் ஆண்டு மத்திய எகிப்திய நாட்டுப் பகுதியில் மறைந்துகிடந்த இந்த நூல் சில விவசாயிகளால் கண்டு பிடிக்கப்பட்டு வெளி வந்தது. அதன் பின் பலரின் கைகள் மாறி மாறி, பல வர்த்தகர்களின் கைகளின் வழியாகவும் வந்த இந்த நூல் பல இடர்ப்பாடுகளையும் கடந்து மிகவும் சிதைந்த நிலையில் கிடைத்தது. இறுதியில் 2001ம் ஆண்டு இந்த நூல் சரியான ஆய்வாளர்களின் கைகளுக்கு வந்து சேர்ந்தது. புதிய ஆராய்ச்சிகளும் தொடர்ந்தன. சிதைந்த பாகங்களிலிருந்து கிடைத்த தகவல்கள் அவர்களால் தொகுக்கப்பட்டுள்ளது.

யூதாஸின் இந்தப் புதிய ஏற்பாடு எழுதப்பட்டிருந்த காப்டிக் (Coptic) மொழியிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதனோடு கிறித்துவ மதத்தின் ஆரம்ப நிலை பற்றியும், ஏசுவின் கொள்கைகளை விளக்கும் ஆதாரமாகவும் இந்நூல் உள்ளது.

நூலின் ஆசிரியர்கள் பற்றி சில குறிப்புகள்:

RODOLPHE KASSER, Ph.D.
காப்டிக் மொழியின் வல்லுனராக உலகத்திலேயே மிகவும் பெயர் பெற்றவர். இப்போது ஜெனிவா பல்கலையில் பணி புரிகிறார். இவர் யூதாஸின் நற்செய்தி, மேலும் மூன்று புது காப்டிக் மொழியில் உள்ள நற்செய்திகள் (Coptic Gnostic texts) மேல் பணியாற்றியவர். (Gnostic) பற்றிய மேலதிக விவரங்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன.)

MARVIN MEYER, Ph.D.
Griset Professor of Bibloe and Christian Studies at Chapman University and Director of the Chapman University Albert Schweitzer Institute.
A foremost scholar on Gnosticism, the Nag Hammadi Library and texts about Jesus outside the New Testament.

GREGOR WURST, Ph.D.
Professor of Ecclesiastical History and Patristics at the University of Augsburg, Germany

BART D. EHRMAN, Ph.D.
James A. Gray Distinguished Professor and Chair of the Department of Religious Studies, University of North Carolina at Chapel Hill.
கிறித்துவத்தின் ஆரம்ப கால வரலாற்றாய்வாளர்.

இந்நூல் உலகப் புகழ் பெற்ற NATIONAL GEOGRAPHIC SOCIETY மூலமாக முழு ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு, 2006ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது என்பதே இந்த நூலின் முழு உண்மைக்கு பெரும் சான்றாக இருக்கும்.


நூலின் பின்னட்டையில் உள்ள குறிப்பு

1600 கண்ணில் படாத, மிகவும் விவாத்த்திற்குரிய இந்த யூதாஸின் நற்செய்தி எகிப்திலுள்ள குகை ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட்து. நேஷனல் ஜியோகிராபிக் சொசைட்டி (National Geographic Society) கண்டெடுக்கப்பட்ட பழம் ஏடுகளின் காலத்தையும், உண்மைத் தனத்தையும் மிகச் சரியாகக் கணிக்க முனைந்த ஏற்பாடுகளைச் செய்த்து. ரேடியோ கார்பன் முறையைப் பின்பற்றி அதன் சரியான கால அளவு கணக்கிடப்பட்டது. மிகச் சிறந்த ஆய்வாளர்களின் மூலம் ஏடுகளின் சரியான மொழி பெயர்ப்பும், அவைகள் தோன்றிய காலமும், ஏடுகளின் சமய, வரலாற்று உண்மைகளும் கண்டுபிடிக்கப் பட்டன.







முன்னுரை

’யூதாஸின் முத்தம்’ என்பது கிறித்துவத்தில் ஒரு முக்கிய, அவமதிப்புக்குரிய சொல்லாக அமைந்து விட்டது.

யூதாஸ் ஏசுவின் சீடர்களுள் மிக முக்கியமானவர்.  ஜான் நற்செய்தியில் சொன்னபடி யூதாஸ் ஏசுவின் பொருளாளராகவும் இருந்திருக்கிறார்.(2)

யூதாஸின் நற்செய்தியில், மற்ற நற்செய்திகளில் போலன்றி, ஏசு மிக்க மகிழ்ச்சியுடையவராக, சிரித்து மகிழ்ந்தவராகக் காட்டப்பட்டுள்ளார்.(4)

மரணத்திற்கு பின் ஏசுவிற்குக் கிடைக்கும் விடுதலையினால் அவர் தன் வீடான மோட்சத்திற்குச் செல்கிறார். இந்த நிறைவான நிகழ்ச்சி யூதாஸின் துரோகத்தின் மூலமே நடந்தேறுகிறது.

கிறித்துவத்தின் ஆரம்ப வரலாற்றுக் காலத்தில் இப்போது நமக்குத் தெரியும் நான்கு நற்செய்திகளோடு மேலும் பல நற்செய்திகள் எழுதப்பட்டன. அவ்வாறு முழுமையாகவோ. அரை குறையாகவோ கிடைக்கப்பட்ட நற்செய்திகளில் சில  – உண்மையான நற்செய்தி(Gospel of Truth) , தாமஸ், பீட்டர், பிலிப், மேரி, எபியோனைட்டுகள் (Ebionites),  நஸரேனியர்கள்(Nazoreans),  ஹீப்ரு, எகிப்திய நற்செய்திகள். இதைப் போலவே யூதாஸின் நற்செய்தியில் ஏசு யார் என்பதும், அவரை எப்படிப் பின்பற்றுவது என்றும் எழுதப்பட்டுள்ளன.

யூதாஸின் நற்செய்தி Gnostic Gospels  என்றழைக்கப்படுகிறது. (Gnostic Gospels  - இரண்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாறுபாடுகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட நற்செய்திகளைத் தவிர இருந்து வந்த ஏனைய நற்செய்திகளை அழிக்க முயற்சியெடுத்தனர். அப்போது பல நூல்கள் பதுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டன. இது போன்ற நூல்கள் Gnostic Gospels  என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.  Gnostic என்றால் அறிவு / knowledge என்று பொருள் தரும்.) இங்கு கூறப்படும் அறிவு கடவுளைப் பற்றிய அறிவு – mystical knowledge, knowledge of God and essential oneness of the self with God – என்ற பொருளில் வழங்கப்பட்டு வந்துள்ளது. (5)

Gnostics  வைத்திருந்த ஆன்மீகம் ஏனைய சாதாரண கிறித்துவர்களிடமிருந்து மிகவும் விலகியிருந்தது. கடவுளுக்கும் நமக்கும் உள்ள தொடர்பில் இடைத் தரகர் ஏதும் தேவையில்லை. கடவுள் நம்முள் ஆன்மாகவும், ஒளியாகவும் உள்ளார் என்பது அவர்களது கருத்து. இது அப்போதிருந்த கிறித்துவத் தலைவர்களுக்குப் பிடிக்காது போயிற்று. இதனால் இந்த இரு கிறித்துவக் குழுகளுக்கு நடுவே போட்டியும், பகையும் வளர்ந்து வந்துள்ளன.

யூதாஸின் நற்செய்தியின் படி எதிரணியினர் கடவுளின் ‘கையாட்களாக’ வேலை செய்கிறார்கள். அவர்கள் இந்த மண்ணுலகை ஆட்சி செய்து அலங்கோல வாழ்க்கை நடத்தவே விரும்புகின்றனர் என்று சொல்கிறது. (6)

Gnostics ஆதாம் ஏவாளின் மூன்றாவது மகனான சேத் என்பவரின் வழித்தோன்றல்கள் என்று தங்களைக் கருதுகிறார்கள். இதனாலேயே Gnostic கருத்துக்கள் ’சேத்தியன் கருத்துக்கள்’ என்று கருதப்பட்டன. காயின், ஏபேல் பிரச்சனைக்குப் பின் வந்த சேத் மனித இனத்தின் புதிய வழித்தோன்றலாகக் கருதப்படுகிறார். இவர்கள் ‘விழித்தெழுந்த மனித குலம்’ என்று கருதப்படுகிறார்கள்.

Gnostics-களுக்கு மனித வாழ்வின் அடிப்படையாக இருப்பது பாவமல்ல; அறியாமையே. இதனை நம்பிக்கையால் அல்ல, அறிவால் தான் வெல்ல வேண்டும்.  யூதாஸின் நற்செய்தியில் ஏசு அறிவால் எப்படி அறியாமையை வெல்லலாம் என்றும், அதன் மூலம் கடவுளை அறியவும், அடையவும் வேண்டும் என்று சொல்லப் படுகிறது.

இவைகளெல்லாம் இப்போதைய நம்பிக்கையாளர்களுக்குப் புதிய சவால்களாகத் தோன்றும்.

ஆனால் கிறித்துவத்திற்குள் எழுந்த இப்போட்டியில் ரோம, அடிப்படைக் கிறித்துவர்களுமே வெற்றி கண்டனர். (7)

Borges என்ற அறிஞரின் கருத்துப் படி ‘அலெக்சாண்டிரியாவிற்கும் ரோமிற்கும் நடந்த போட்டியில் ரோம் வென்றது.  இதனாலேயே யூதாஸின் நற்செய்தியும் தோற்றது’ என்கிறார்.  இந்த ‘போர்கள்’ எல்லாம் இரண்டாம், மூன்றாம், நான்காம் நூற்றாண்டில் நடந்த நிகழ்வுகள்.

யூதாஸின் நற்செய்தியில் சொல்லப்பட்டவை எல்லாம் மிகவும் உன்னதமான, பிரபஞ்சத் தத்துவமாக இருக்கிறது( ... illustrates a theology and cosmology that are still quite sophisticated.).(8)

யூதாஸின் நற்செய்தியில் யூதாஸ் ஏசுவின் நல்ல ஒரு சீடராகக் காண்பிக்கப்படுகிறார். இந்த நற்செய்தி யூதாஸ் ஏசுவைக் காட்டிக் கொடுப்பதோடு முடிகிறது. ஏசுவின் இறப்பு இதில் சொல்லப்படவில்லை.(9)

யூதாஸ் ஏசு சொல்லாத எதையும் செய்யவில்லை. ஏசுவை உன்னிப்பாகக் காது கொடுத்து கேட்கிறார். ஏசுவுக்கு மிகவும் உண்மையான சீடராக இருக்கிறார்.(10)

இந்த நூல் கிறித்துவத்தின் ஆரம்ப காலத்தில் வாசிக்கப்பட்டு, பின் எகிப்து தேசத்தில் முழுமையாக மறைக்கப்பட்டு விட்டது. 1970ல் மத்திய எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஏட்டுச் சுவடிகள் – Codex Tchacos – என்றழைக்கப்படுகின்றன. இது கிரேக்க மொழியில் எழுதப்பட்டு, பின் இரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் காப்டிக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஏனெனில் 180 வருடம் இளம் கிறித்துவத்தில் பெரும் தலைவராக இருந்த ஐரினேய்ஸ் (Irenaeus of Lyon) தனது நூலில் -  Against Heresies  - யூதாஸின் நற்செய்தி பற்றிக் குறிப்பிடுகிறார். (11)

இன்னும் சில பக்கங்களில் எப்படி இந்த நூல் ஆய்வு செய்யப்பட்டு, பதிவிடப்பட்டது என்பது விளக்கப்படுகிறது.


************








******








*






8 comments:

  1. வணக்கம் அய்யா,
    அருமையான பதிவு.
    இயேசு என்பவர் இருப்பதற்காக சான்றுகள் புதிய ஏற்பாடு தவிர்த்து மிக குறைவு என்பது அவர் உண்மையான வர்லாற்று மனிதரா என்னும் கேள்வியை ஏற்படுத்துகிறது.

    புதிய ஏற்பாட்டின் 4 சுவிசேஷங்களைத் தவிர இன்னும் பல சுவிசேசங்கள் உண்டு என்பதை அறிந்தாலே மதம் என்பது ஒரு அரசியல் கட்டமைப்பு என்பது புரிந்து விடும். அந்த 4 ல் கூட எத்தனை வேற்றுமைகள்?.
    http://www.religioustolerance.org/chr_john.htm

    ஏன் 4 வித்தியாசமான சுவிசேசங்களும் ஏற்கப்பட்டது என்றால். 4 கிறித்தவ(?) பிரிவுகள் இணைந்தமையே காரணம் என்லாம்.இந்திய(இந்து?) மதம் எப்படி நம்பிக்கைகளின் க(கூ?)ட்டமைப்போ அது போல்தான் கிறித்தவம் உள்ளிட்ட ஆபிரஹாமியம் என்பது ம‌றுக்க முடியா உண்மை.
    இதி இன்ன பிற சுவிசேசங்களையும் கண்க்கில் எடுத்தால் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!!. பினபற்றுவோர் இல்லா மதம்,பிரிவு அழியும். அரசியல் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் மதம் மட்டுமே வாழும் என்பதே பரிணாம விதி.

    ஆனாலும் அன்று முதல் இன்றுவரை மாறா விடயம் என்றே சொல்லியே மத வியாபாரம் செய்வதும் இயல்பே!!!
    யூதாஸ் சுவிசேசம் ஞானவாத(Gnostic ) கிறித்தவம் என்னும் பிரிவினரால் ஏற்கப்பட்ட புத்த்கம்.
    யூதாஸ் எழுதிய சுவிசேசம் கொஞ்சம் இங்கே கிடைக்கிறது.
    http://www.nationalgeographic.com/lostgospel/_pdf/GospelofJudas.pdf
    யூதாசி சுவிசேசத்தில் உள்ள ஓரினப் புணர்ச்சி அனுமதி பற்றிய விடயம் பற்றி இந்த இணைப்பு சொல்கிறது.

    http://www.willsworld.org/jbowl/judas.pdf

    நன்றி!!

    ReplyDelete
  2. சார்வாகன்,
    உங்களை ‘காமதேனு சார்வாகன்’ என்று அழைக்கலாமோவென நினைத்தேன். ஆனால் காமதேனு கேட்டதை மட்டும் தான் கொடுக்கும். நீங்கள் கேட்காததெல்லாம் கூட தருகிறீர்கள். உங்கள் பார்வையின் ஆழ, அகலங்களைப் பார்த்துப் பிரமித்துப் போய்விட்டேன். டாவின்சி கோட் கதை வாசிக்கும் போது தான் கிறித்துவ நற்செய்திகள் கிறித்துவின் காலத்திற்குப் பின்னால் கான்ஸ்டான்டின் காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவை என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டேன். அதுபோல் யூதாஸிற்கு ஒரு நற்செய்தி உண்டு என்பதும் மிகச் சமீபமாகத் தான் தெரிந்து கொண்டேன். ஆனால் இந்த தகவல்களைத் தரும்போது இவைகளையும் தாண்டி அதிகமான தகவல்களை தந்து விடுகிறீர்கள்.
    இது கிறித்துவ மதம் பற்றிய கருத்துகள் மட்டுமின்றி, இசுலாம், இந்து என்று எந்த மதம் பற்றிச் சொன்னாலும் அதற்கு மேற்பட்ட தகவல்கள் உங்களிடம் இருக்கிறதே. எப்படி?
    எப்படி உங்களுக்கு இது போன்ற ‘உட்செய்திகள்’ கூட தெரிகிறது? அள்ள அள்ளக் குறையாத செய்திகளை எப்படி அறிந்து வைத்திருக்கிறீர்கள்? ஆச்சரியமான மனிதர்.
    இதை வைத்து பல கட்டுரைகளை, சில நூல்களை எழுத முடியுமே. ஏன் எழுத ஆரம்பிக்கவில்லை? ஆரம்பியுங்களேன்.

    ReplyDelete
  3. தருமிய்யா,

    //இந்நூல் உலகப் புகழ் பெற்ற NATIONAL GEOGRAPHIC SOCIETY மூலமாக முழு ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு, 2006ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது என்பதே இந்த நூலின் முழு உண்மைக்கு பெரும் சான்றாக இருக்கும்.//

    உங்க நம்பிக்கை உங்களுக்கு!

    ஏன் 1600 வருடம்னு சொல்லணும்? கிருத்துவின் காலமா அது?

    அசோகர் பத்தி பேசும் போது ,இதனிக்குறிப்பிடலாம்னு நினைச்சேன்,திசை மாறிடும்னு விட்டாச்சு.

    யூதாஸ் எழுதியதுனு எங்கேயும் நேஷனல் ஜியாகிரபி சொல்லவேயில்லை,மேலும் அவர்கள் சொல்லும் காலம் ஏசுவின் காலத்துக்கும் ஒத்துவரவில்லை.அந்த முழு ஆய்வுப்பற்றியும் முன்னரெ படித்துள்ளேன்.

    சன் டிவி சொன்னால் கப்சா வெள்ளைக்காரன் டிவி சொன்னால் உண்மை :-))

    # ஜெருசலம்ல ஒரு கல்லறய காட்டி அதான் ஏசு குடும்பக்கல்லறைனு சொல்லிக்கிட்டு இருக்காங்க, கூடிய சீக்கிரம் "நேட் ஜியோ"உண்மைனு சொல்லிட்டா ஏத்துப்பிங்களா ?

    ReplyDelete
  4. //சன் டிவி சொன்னால் கப்சா வெள்ளைக்காரன் டிவி சொன்னால் உண்மை//
    சன் டிவி சொன்னால் கப்சாவாகவும் இருக்கலாம். ஆனால் வெள்ளைக்காரன் B.B.C. TV டிவி சொன்னால் உண்மையாக இருக்கும் என்று சொல்லவே மாட்டீர்களா?
    authenticity என்று ஒன்று உள்ளதல்லவா? நிச்சயமாக அது NGSக்கு நிறையவே உள்ளது என்பதையும் மறுக்கிறீர்களா?

    //யூதாஸ் எழுதியதுனு எங்கேயும் நேஷனல் ஜியாகிரபி சொல்லவேயில்லை,//
    மேலே நூலின் பின்னட்டையில் உள்ள செய்தியைப் படித்த பிறகு எப்படி இப்படிச் சொல்கிறீர்கள்? நூலின் காப்பிரைட் உரிமையும் அவர்களுக்கு உரியதே.

    //ஜெருசலம்ல ஒரு கல்லறய காட்டி ...//
    அட இதென்னங்க; சிலுவையிலிருந்து வந்த ஒரு ரத்தக்கறையைக் கண்டு பிடித்து அதனை எடுத்து ஆய்வு செய்ததில் அதில் வெறும் 23 க்ரோமோசோம்கள் மட்டும் - அதாவது அன்னை மரியின் க்ரோமோசோம்கள் மட்டும் - இருந்ததாக சொன்ன செய்தி கூட படித்திருக்கிறேன். அது ஏத்துக்கிட்டோமா? நீஙக் கேக்கிறது மாதிரி இருந்தா கண்டெடுக்கப்பட்ட பல ஏடுகள் -சானா குரான் உட்பட - எதையும் ஒத்துக் கொள்ள மாட்டீர்களா?

    ReplyDelete
  5. தருமிய்யா,

    நேட் ஜியோவுக்கு என ஒரு நம்பகத்தன்மை இருக்கு தான் ,ஆனால் அவர்கள் சொன்ன ஒன்றை வைத்து இன்னொன்றை உண்மையாக்க முயல்வதால் அப்படிக்குறிப்பிட்டேன்.

    யூதாசின் நற்செய்தியின் காலம் பற்றி அதனை ஆய்வு செய்த லேப் ரிசல்ட் ,

    //McCrone Associates determined the components used to create the ancient ink were consistent with ingredients in known inks from the third and fourth centuries A.D. One ink included a carbon black constituent, in the form of soot, bound with a gum adhesive. The other ink found in the document was an iron-based ink, which is thought to be a intermediate between the ancient world’s carbon-based inks and the modern iron gall formulations that became popular in early medieval times and are still in limited use today In their examination of the inks and papyrus samples, there was nothing in the findings to suggest that the document was not authentic.

    Following the completion of the conservation and analytical studies by all teams involved, the manuscript was determined to be authentic and delivered to Egypt. The Gospel of Judas is now on display in Cairo’s Coptic Museum.//

    http://www.mccroneassociates.com/case-studies/gospel-of-judas

    கி.பி 3-4 ஆம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த உண்மையான பாப்பிரஸ் என்பதாக தான் சொல்கிறார்கள்,அதுவே நெகட்டிவாக "உண்மையில்லைனு சொல்ல முடியாது " என்ற தொனியில் சொல்லி எனவே உண்மை என்கிறார்கள் அவ்வ்!

    # கிருத்து கொல்லப்பட்ட உடன் ,யூதாஸ் தூக்குப்போட்டு(கீழ குதிச்சு) தற்கொலை செய்துக்கொண்டாச்சு.

    யூதாஸ் எழுதியதாக இருப்பின் ரேடியோகார்பன் டேட்டிங்கில் குறைந்த பட்சம் முதல் நூற்றாண்டை சேர்ந்ததாக தானே காட்ட வேண்டும்.சுமார் 3 நூற்றாண்டுக்கு பின்னர் எழுதப்பட்டது எப்படி யூதாஸ் எழுதினதுனு சொல்ல முடியும்?

    எனவே பிற்காலத்தில் யூதாசின் பக்கச்சார்பாக யாரோ உருவாக்கிய இலக்கியப்படைப்பாகவே இருக்க முடியும். யூதாஸ் எழுதியது என நேட் ஜியோவும் எங்கேயும் சொல்லவில்லை. புத்தகம் எழுதுபவர்கள் தாங்களாகவே யூதாசே எழுதி வச்சதுனு சொல்லுறாங்களோ என்னமோ?

    பைபில் எப்படி கிருத்துவின் காலத்திற்கு பின் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டதோ அப்படியே யூதாசின் நற்செய்தியும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம்.

    ReplyDelete
  6. இந்த நற்செய்தி மட்டுமல்ல பிற நற்செய்திகளும் யாரால் எழுதப்பட்டவை என உறுதியாக தெரியாது. ஆனால் இந்த செய்தியை எழுதியது யூதாஸ் அல்ல என்றே நம்பப்படுகிறது. முதலில் யூதாஸ் என்று ஒருவர் இருந்தாரென வரலாற்று ஆதாரமில்லை. பிற நற்செய்திகளின் படி எடுத்தாலும் யூதாஸ் ஏசு சாவதற்கு முன்பே செத்துவிட்டார்.யூதாஸின் நற்செய்தி பைபிளின் நற்செய்திகள் எழுதப்பட்டதற்கும் கிபி 180க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது. ஏனெனில் கிபி 180ல் கிடைத்த குறிப்பினை வைத்து முன்பே யூதாஸின் நற்செய்தி இருக்கிறது என தெரிந்து வைத்திருந்தார்கள். அது 1970ல்தான் கையில் கிடைத்து. ஆகவே இது கிபி 180க்கு முன்னாடியே எழுதப்பட்டது.ஆனால் உங்கள் பதிவில் இருக்கும் எகிப்தில் கிடைத்த நூல் யூதாஸ் நற்செய்தியில் ஒரிஜினல் அல்ல. இந்த பிரதி, எழுதப்பட்டது கிபி 280ல் என வேதியல் ஆய்வு மூலம் - எழுத உபயோகப்படுத்தப்பட்ட இங்கை அக்கால இங்கோடு ஒப்பிட்டு - கணக்கிடப்பட்டுள்ளது. ஆகவே அந்நூல் 1700 வருட பழமை வாய்ந்தது. இதைத்தான் தோராயமாக 1600க்கு முற்பட்டது என்கிறார்கள்! மேலும் இதை சர்ச் எதிர்த்தாலும் பல புதுயுக கிருத்தவர்கள் இதை வரவேற்கிறார்கள் குறிப்பாக அமெரிக்காவில்.

    மேலும் ஏசுவும் அவரது சீடர்களும் தங்களை யூதர்களாவே கருதியுள்ளார்கள். ரோமானிய படையெடுப்பும் அதற்கு எதிரான கிபி 70ல் யூதகிளர்ச்சியின் தோல்வி காரணமாக, கிருத்தவ நம்பிக்கையாளர்கள் தங்களை புதிய மதமாக காட்டிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். ராஜதந்திரம்! மேலும் பிற இனத்தவர்கள் கிருத்துவ நம்பிக்கையுள்ளவர்களாக மாற தொடங்கியதும் ஒரு காரணம்.இந்த யூத-கிருத்துவ வேறுபாட்டை வலியுறுத்த யூதாஸை யூத வில்லனாக சித்தரித்து கருத்துகள் உருவாக்கப்பட்டனவாம். இது 20 நூற்றாண்டில் நாஜிகள் வரை தொடர்ந்துள்ளது. யூதாஸை யூதன், ஆனால் ஏசு வேறு பழங்குடி இனத்தவர் என புனையும் கதைகள் நாஜிக்களால் பரப்பட்டது. இப்போது யூத எதிர்ப்பு குறைந்த விட்டதால் யூதாஸூக்கும் எதிர்ப்பும் குறைந்துவிட்டது.

    ReplyDelete
  7. //யூதாஸ் எழுதியதாக இருப்பின் ரேடியோகார்பன் டேட்டிங்கில் குறைந்த பட்சம் முதல் நூற்றாண்டை சேர்ந்ததாக தானே காட்ட வேண்டும்.//

    என் மண்டைக்குள்ளும் ஓடும் கேள்வியும் இதே தான்.

    ஏசு என்று ஒருவரது பெயர் ரோம வரலாறுகள் எதிலும் குறிப்பிடப்படவில்லை. அப்படி ஒரு மனிதர் உண்மையில் இருந்தாரா என்ற கேள்வி முதல், யூதாஸ் மட்டுமல்ல மற்ற நற்செய்திகளின் காலமும் அனேகமாக ஏசுவின் காலத்தைத் தாண்டி குறைந்தது 50 ஆண்டுகள் கழித்து எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதுவும் எழுதப்பட்ட பல ஏடுகளின் நகல்களே கிடைக்கப்பட்ட்தாகவும் சொல்லப்படுகிறது. அப்படியானால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாத்யூ, மார்க், லூக், ஜான் என்ற நான்கு நற்செய்திகளும் அந்தப் பெயர்க்காரர்களால் தான் எழுதப்பட்டதா என்றும் ஒரு கேள்வி எழும்புகிறது.

    (இந்தக் கஷ்டமெல்லாம் வேண்டாம் என்று தான் கடவுள் பயங்கர முன் ஜாக்கிரதையாக தன் கடைசி நபியை அனுப்பி வைத்துள்ளார் போலும்!!)

    இதை ஒட்டியும் இன்னொரு கேள்வி: ஏசுவின் காலத்திற்குப் பின் வந்த நபியின் வாழ்க்கை, யுத்தம், கல்யாணம், வஹி வருதல், மரணம் எல்லாம் தேதிவாரியாக எழுதப்பட்டுள்ளதாக்க் கூறும் போது ஏன் கிறித்துவ வரலாற்றில் இது போன்ற “நாட்குறிப்புகள்’ இல்லாமல் போனது?!

    ReplyDelete
  8. //என் மண்டைக்குள்ளும் ஓடும் கேள்வியும் இதே தான்.
    ஏசு என்று ஒருவரது பெயர் ரோம வரலாறுகள் எதிலும் குறிப்பிடப்படவில்லை. அப்படி ஒரு மனிதர் உண்மையில் இருந்தாரா என்ற கேள்வி முதல், //

    கர்த்தரின் அருளால் விரைவில் இது பற்றி சகோ சார்வானின் புத்தகம் வருமாக.... ஆமீன்!

    http://en.wikipedia.org/wiki/Tacitus_on_Christ#cite_note-1

    http://www.canadafreepress.com/index.php/article/45841

    ReplyDelete