***
ஏழு பதிவுகள்:
***
JUDAS
Edited by
RODOLPHE
KASSER
MARVIN MEYER
GREGOR WURST
*
முன்னுரை
*
’யூதாஸின் முத்தம்’ என்பது கிறித்துவத்தில் ஒரு முக்கிய, அவமதிப்புக்குரிய சொல்லாக அமைந்து விட்டது. (2)
யூதாஸ் ஏசுவின் சீடர்களுள் மிக முக்கியமானவர். ஜான் நற்செய்தியில் சொன்னபடி யூதாஸ் ஏசுவின் பொருளாளராகவும் இருந்திருக்கிறார்.(2)
யூதாஸின் நற்செய்தியில், மற்ற நற்செய்திகளில் போலன்றி, ஏசு மிக்க மகிழ்ச்சியுடையவராக, சிரித்து மகிழ்ந்தவராகக் காட்டப்பட்டுள்ளார்.(4)
மரணத்திற்கு பின் ஏசுவிற்குக் கிடைக்கும் விடுதலையினால் அவர் தன் வீடான மோட்சத்திற்குச் செல்கிறார். இந்த நிறைவான நிகழ்ச்சி யூதாஸின் துரோகத்தின் மூலமே நடந்தேறுகிறது.
கிறித்துவத்தின் ஆரம்ப வரலாற்றுக் காலத்தில் இப்போது நமக்குத் தெரியும் நான்கு நற்செய்திகளோடு மேலும் பல நற்செய்திகள் எழுதப்பட்டன. அவ்வாறு முழுமையாகவோ. அரை குறையாகவோ கிடைக்கப்பட்ட நற்செய்திகளில் சில – உண்மையான நற்செய்தி(Gospel of Truth) , தாமஸ், பீட்டர், பிலிப், மேரி, எபியோனைட்டுகள் (Ebionites), நஸரேனியர்கள்(Nazoreans), ஹீப்ரு, எகிப்திய நற்செய்திகள்.
இதைப் போலவே யூதாஸின் நற்செய்தியில் ஏசு யார் என்பதும், அவரை எப்படிப் பின்பற்றுவது என்றும் எழுதப்பட்டுள்ளன. யூதாஸின் நற்செய்தி Gnostic Gospels என்றழைக்கப்படுகிறது.
(Gnostic Gospels - இரண்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாறுபாடுகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட நற்செய்திகளைத் தவிர இருந்து வந்த ஏனைய நற்செய்திகளை அழிக்க முயற்சியெடுத்தனர். அப்போது பல நூல்கள் பதுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டன. இது போன்ற நூல்கள் Gnostic Gospels என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. Gnostic என்றால் அறிவு / knowledge என்று பொருள் தரும்.)
இங்கு கூறப்படும் அறிவு கடவுளைப் பற்றிய அறிவு – mystical knowledge, knowledge of God and essential oneness of the self with God – என்ற பொருளில் வழங்கப்பட்டு வந்துள்ளது. (5)
Gnostics வைத்திருந்த ஆன்மீகம் ஏனைய சாதாரண கிறித்துவர்களிடமிருந்து மிகவும் விலகியிருந்தது. கடவுளுக்கும் நமக்கும் உள்ள தொடர்பில் இடைத் தரகர் ஏதும் தேவையில்லை. கடவுள் நம்முள் ஆன்மாகவும், ஒளியாகவும் உள்ளார் என்பது அவர்களது கருத்து.
இது அப்போதிருந்த கிறித்துவத் தலைவர்களுக்குப் பிடிக்காது போயிற்று. இதனால் இந்த இரு கிறித்துவக் குழுகளுக்கு நடுவே போட்டியும், பகையும் வளர்ந்து வந்துள்ளன.
யூதாஸின் நற்செய்தியின் படி எதிரணியினர் கடவுளின் ‘கையாட்களாக’ வேலை செய்கிறார்கள். அவர்கள் இந்த மண்ணுலகை ஆட்சி செய்து அலங்கோல வாழ்க்கை நடத்தவே விரும்புகின்றனர் என்று சொல்கிறது. (6)
Gnostics ஆதாம் ஏவாளின் மூன்றாவது மகனான சேத் என்பவரின் வழித்தோன்றல்கள் என்று தங்களைக் கருதுகிறார்கள். இதனாலேயே Gnostic கருத்துக்கள் ’சேத்தியன் கருத்துக்கள்’ என்று கருதப்பட்டன.
காயின், ஏபேல் பிரச்சனைக்குப் பின் வந்த சேத் மனித இனத்தின் புதிய வழித்தோன்றலாகக் கருதப்படுகிறார். இவர்கள் ‘விழித்தெழுந்த மனித குலம்’ என்று கருதப்படுகிறார்கள்.
Gnostics-களுக்கு மனித வாழ்வின் அடிப்படையாக இருப்பது பாவமல்ல; அறியாமையே. இதனை நம்பிக்கையால் அல்ல, அறிவால் தான் வெல்ல வேண்டும்.
யூதாஸின் நற்செய்தியில் ஏசு அறிவால் எப்படி அறியாமையை வெல்லலாம் என்றும், அதன் மூலம் கடவுளை அறியவும், அடையவும் வேண்டும் என்று சொல்லப் படுகிறது.
இவைகளெல்லாம் இப்போதைய நம்பிக்கையாளர்களுக்குப் புதிய சவால்களாகத் தோன்றும். ஆனால் கிறித்துவத்திற்குள் எழுந்த இப்போட்டியில் ரோம, அடிப்படைக் கிறித்துவர்களுமே வெற்றி கண்டனர். (7)
Borges என்ற அறிஞரின் கருத்துப் படி ‘அலெக்சாண்டிரியாவிற்கும் ரோமிற்கும் நடந்த போட்டியில் ரோம் வென்றது. இதனாலேயே யூதாஸின் நற்செய்தியும் தோற்றது’ என்கிறார். இந்த ‘போர்கள்’ எல்லாம் இரண்டாம், மூன்றாம், நான்காம் நூற்றாண்டில் நடந்த நிகழ்வுகள்.
யூதாஸின் நற்செய்தியில் சொல்லப்பட்டவை எல்லாம் மிகவும் உன்னதமான, பிரபஞ்சத் தத்துவமாக இருக்கிறது( ... illustrates a theology and cosmology that are still quite sophisticated.).(8)
யூதாஸின் நற்செய்தியில் யூதாஸ் ஏசுவின் நல்ல ஒரு சீடராகக் காண்பிக்கப்படுகிறார். இந்த நற்செய்தி யூதாஸ் ஏசுவைக் காட்டிக் கொடுப்பதோடு முடிகிறது. ஏசுவின் இறப்பு இதில் சொல்லப்படவில்லை.(9)
யூதாஸ் ஏசு சொல்லாத எதையும் செய்யவில்லை. ஏசுவை உன்னிப்பாகக் காது கொடுத்து கேட்கிறார். ஏசுவுக்கு மிகவும் உண்மையான சீடராக இருக்கிறார்.(10)
இந்த நூல் கிறித்துவத்தின் ஆரம்ப காலத்தில் வாசிக்கப்பட்டு, பின் எகிப்து தேசத்தில் முழுமையாக மறைக்கப்பட்டு விட்டது. 1970ல் மத்திய எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஏட்டுச் சுவடிகள் – Codex Tchacos – என்றழைக்கப்படுகின்றன. இது கிரேக்க மொழியில் எழுதப்பட்டு, பின் இரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் காப்டிக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஏனெனில் 180 வருடம் இளம் கிறித்துவத்தில் பெரும் தலைவராக இருந்த ஐரினேய்ஸ் (Irenaeus of Lyon) தனது நூலில் - Against Heresies - யூதாஸின் நற்செய்தி பற்றிக் குறிப்பிடுகிறார். (11)
இன்னும் சில பக்கங்களில் எப்படி இந்த நூல் ஆய்வு செய்யப்பட்டு, பதிவிடப்பட்டது என்பது விளக்கப்படுகிறது.
*
No comments:
Post a Comment