***
ஏழு பதிவுகள்:
***
THE GOSPEL OF
JUDAS
Edited by
RODOLPHE
KASSER
MARVIN MEYER
GREGOR WURST*
நூலில் உள்ள தனிக்கட்டுரைகள் ....
*
பழைய ஏடுகள் கிடைத்த வரலாறு
RODOLPHE KASSER
2001-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி என் ஆய்வுக்காக என்னிடம் வந்து சேர்ந்த ‘பொருளை’ப் பார்த்து வியப்பால் அதிர்ந்தேன்.
பல இடைஞ்சல்களுக்கும் தடைகளுக்கும் நடுவே கடந்து வந்த, 1600 ஆண்டுகளுக்கு முந்திய பழைய ஏடுகள் அவை. (47)
இந்த ஏடுகள் 1978-ம் ஆண்டு மத்திய எகிப்தில் நைல் நதியின் கிழக்குக் கரையில் உள்ள Jabel Qarara என்ற இடத்தில், Maghagha என்ற பகுதிக்குப் பக்கத்தில் உள்ள Ambar என்ற கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டன.(50)
Hanna என்ற தொல்பொருள் வியாபாரியின் கைகளுக்குப் போய், அவர் விலை பேசும் முன் பல பொருட்களுடன் இந்த ஏடுகளும் திருடப்பட்டு விட்டன. திருட்டுப் போன பொருட்கள் ஐரோப்பிய நாடுகளில் தலை காட்ட ஆரம்பிக்கவே, Hanna தன்னைப் போன்ற இன்னொரு தொல்பொருள் வியாபாரியின் உதவியுடன், 1982-ம் ஆண்டு அதனை மீட்கிறார். (51)
Robinson என்ற ஆய்வாளர் தன் மாணவர் மூலமாக இந்த ஏடுகளை 50 ஆயிரம் டாலருக்கு வாங்க முயல்கிறார். Hanna வின் விலயோ உச்சத்தில் இருந்தது.(53)
இன்னொரு ஜெர்மானிய தொல்பொருள் வியாபாரியான Frieda என்பவரிடம் 1982-ம் ஆண்டு இந்த ஏடுகளின் ஒரு பக்கத்தின் புகைப்படம் மட்டும் கிடைக்கிறது. (55)
22 வருடங்கள் உருண்டோடி விட்ட பின், மிகவும் பாழாகி விட்ட நிலையில் 2005-ல் Frieda-விடமிருந்து Bruce என்ற அமெரிக்கரிடம் விலைக்கு விற்கப்படுகிறது. இதன் பின்னும் ஏடுகள் பாதுகாப்பு ஏதுமின்றி மேலும் பாழ்படுகின்றன.
2001, பிப்ரவரி 19-ம் தேதி Maecenas Foundation of Ancient Art என்ற நிறுவனத்திடம் விற்கப்படுகிறது. (61)
இந்த ஏடுகள் தாங்கள் அடைபட்டிருந்த இருண்ட பகுதிக்குள்ளிருந்து வெளியே வந்து, காப்டிக் ஆய்வாளர்களுக்குக் கிடைக்க மேசினா – Maecena – என்பவரின் கடும் உழைப்புக்குக் கடன் பட்டவர்களாகிறார்கள்.
முதல் ஆய்வில் நான் இந்த ஏடுகள் காப்டிக் மொழியின் ஒரு கிளை மொழி என்றறிந்தேன். (Sahidic supralocal dialect of the Coptic language) (64)
ஏடுகள் மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. அதை சீரமைப்பது நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட விஷயமாக இருந்தது.(65)
கால தாமதம் இல்லாமல் முதன் முதல் எடுக்க வேண்டிய வேலை என்னவென்றால் ஒவ்வொரு ஏட்டையும் ஒரு கண்ணாடித் தட்டுக்கு அடியில் சேர்க்க வேண்டும். உடைந்த துண்டுகளையும் கஷ்டப்பட்டு இதைச் செய்ய வேண்டும். … அதன் பின் ஒவ்வொரு ஏட்டையும் புகைப்படம் எடுத்து, மொழியாக்க முயல வேண்டும். (66)
சிரமப்பட்டு செய்த உழைப்பின் பலன் மெல்ல கிடைக்க ஆரம்பித்தது. (67)
கிடைத்த ஏடுகள் எல்லாமே மிகவும் உடைந்து நொருங்கியிருந்தன. அவைகள் எல்லாமே நீள வாக்கில் மேலிருந்து இரு பகுதிகள் தள்ளி, மடித்து வைக்கப்பட்டு இருந்தன. இதனால் ஒவ்வொரு பக்கமும் இரு பாகங்களாகக் கிடைத்தன. மேலே உள்ள பகுதிகளில் பக்க எண்களும், சிறிய எழுத்துப் பகுதிகளும் இருந்தன. இரண்டாம் பகுதியில் எழுத்துப் பகுதிகள் அதிகம். ஆனால் ஏற்பட்டிருந்த கேடுகளால் எந்தப் பக்கத்தின் கீழ்ப்பகுதி எது என்பதை தீர்மானிப்பது மிகவும் கடினமான ஒன்றானது. (68)
ஏடுகளுக்கு நடந்திருந்த மிக மோசமான நிலைக்குக் காரணம் என்னவாக இருக்க முடியும்? நிச்சயமாக எந்தக் காரணம் கொண்டும் ஆய்வு செய்த நிபுணர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். தொல்பொருள் விற்பன்னர்களும் இதைச் செய்திருக்க முடியாது.(69)
ஏடுகள் இருந்த ஒரு தொகுப்பில் உள்ள முப்பது ஏடுகளின் இறுதியில் இருந்து ’யூதாஸின் நற்செய்தி’ என்ற பெயர் கிடைத்தது. (70)
2004-ம் ஆண்டு ஜூலை முதல் தேதியன்று பாரிஸ் நகரில் கூடிய English Congress of the International Association for Coptic Studies-ல் Maecenas Foundation கொடுத்த உத்தரவின் படி, ஐரினியஸ் தனது நூலான Against Heresies என்ற நூலில் குறிப்பிட்ட இந்த நூலைப் பற்றிய தகவலை நான் இங்கு வெளியிட்டேன். 180-ல் மறைக்கப்பட்ட இந்த ஏடுகள் 2006-ம் வருடத்தின் இறுதியில் வெளியுலகிற்கு வந்தன. புகைப்படங்களுடன் கூடிய நல்லதொரு நூலாக இந்து 2006 வருட இறுதிக்குள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. இன்னும் வாசிக்கப்பட முடியாத ஏட்டுப் பகுதிகள் இன்னும் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. இன்னும் வரும் தலைமுறையில் மேலும் அதிகமா அவைகளிலிருந்து செய்திகளைப் பெற ஆய்வாளர்கள் முயலலாம்.
என் அறிவிப்புக்குப் பிறகு அக்கூட்டத்தின் பார்வையாளர்களிடமிருந்து பல எதிர்வினைகள் வரும் என்று எதிர்பார்த்திருந்தேன். (73)
ஜேம்ஸ் ராபின்சன் மட்டும் இன்னும் கடந்த இருபது வருடங்களாக அமெரிக்காவில் சுற்றி வரும் ஏடுகளின் சில புகைப்படங்கள் பற்றிக் கூறினார்.
இதுபோல் சுற்றி வந்த சில புகைப்படங்களையும், அவைகளின் மொழி பெயர்ப்பையும் சார்ல்ஸ் ஹெட்ரிக் – Charles Hedrick – என்பவரிடமிருந்து கிடைத்தது. (74)
இந்த நூலில் உள்ள மொழி பெயர்ப்பு முழுமையானதில்லை. ஆயினும் பல நூற்றாண்டுகளாக மறைந்திருந்த விலை மதிப்பில்லாத இந்த நூல் கண்டுபிடிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டுள்ளது. (75)
******
No comments:
Post a Comment