*
ஏழாம் நாள் அட்வென்ட்டிஸ்ட் சபை பிறந்த கதை
advent = Arrival that has been awaited
கிறித்துவின்
இரண்டாம் வருகை கிறித்துவர்களால் எதிரிபார்க்கப்படும் ஒரு நம்பிக்கை சார்ந்த
நிகழ்வு. இப்பிரிவினர் ‘ஏசு இதோ வருகிறார்’ என்ற நம்பிக்கையோடும்,
எதிர்பார்ப்போடும் இருப்பவர்கள்.
அமெரிக்காவில்
1798-1820 ஆண்டுகளில் பல சமய மாற்றங்கள் நடந்தன. பல சிறுபான்மை சமய குழுக்கள்
பிறந்தன. இவைகளில் பல குழுக்களின் கருத்துக்கள் பின்னாளில் ஏழாம் நாள்
அட்வென்ட்டினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
விவிலியத்தில்
’தீர்க்கதரிசனம்’ என்ற பகுதியில் உள்ள தானியேல் என்ற பகுதியில் சொல்லப்பட்ட சில
தீர்க்க தரிசனங்கள் இம்மதக் குழுவின் பிறப்பிற்குக் காரணமாக உள்ளது. அப்புத்தகத்தில்
8:14ல் உள்ள கூற்றுப்படி சிலர் உலகம் இன்னும் 2300 நாட்களுக்குப் பின் முடியும் என்ற
நம்பிக்கையோடு இருந்தனர். வில்லியம் மில்லர் என்பவர் உலகத்தின் இந்த முடிவு மார்ச்
1843 – மார்ச் 1844 என்ற காலகட்டத்தில் நடக்கும் என்று கணக்கிட்டார். இவரைப் பின்பற்றியோர் ’மில்லரைற்’ என்றழைக்கப்பட்டனர். இவரது கூற்றை நம்பி பலரும் மெத்தாடிஸ்ட் சபை,
பிரிஸ்பைடீரியன் சபை, லூத்ரன் சபை, வெஸ்லியன் சபை, பாப்டிஸ்ட் சபை (Lutheran, Wesleyan/Arminian, and Anabaptist,
Baptist, Methodist, Presbyterian) போன்ற கிறித்துவப் பிரிவினைச் சபைகளிலிருந்து இவரின் வழி
வந்தார்கள்.
மில்லரின் குழுவில் சிலர்
1844-ல் அக்டோபர் 22ம் தேதி உலகத்தின் இறுதி நாளென்று நம்பியிருந்தனர். அன்றிரவு முழுவதும் விழித்திருந்து
காத்திருந்தனர். உலகம் முடிவுக்கு வரவில்லை. அவர்கள் ஏமாந்த அந்த இரவு ’Great Disappointment’ என்றழைக்கப்படுகிறது.
ஏமாந்த இந்த இரவிற்குப் பிறகு மில்லரின் குழுவினர் கிறித்து மீண்டும் வருவார் என்ற
நம்பிக்கையை இழந்து நின்றனர். சிலர் தவறாக இந்த நாள் கணக்கிடப்பட்டது என்று
நினைத்தனர். வேறு சிலர் நாள் சரியாகவே கணக்கிடப்பட்டது; ஆனால் எதிர்பார்த்த
நிகழ்வு மட்டும் தவறு என்று நினைத்தனர்.
இந்த இரண்டாம் குழுவினர் இணைந்து ஏழாம் நாள் அட்வென்ட்டிஸ்ட் என்ற
குழுவினர்களானார்கள். இவர்களில் சிலர் - Hiram Edson, O.R.L.
Crosier and Franklin B. Hahn – என்பவர்கள் அவர்களது குழுவினர்
ஏற்கெனவே எதிர்பார்த்த 2300ம் நாள் என்பது மோட்சத்தில் இருக்கும் ஓரிடத்தை
தூய்மைப் படுத்தும் நாள் என்றனர்.
Rachel
Oakes Preston என்பவர் Sabbath – ஓய்வு நாள் – என்பதை மில்லரைற் குழுவினருக்கு
அறிமுகப்படுத்தினார். 1860ம் ஆண்டு இறுதியாக இக்குழுவினர் தங்களை ஏழாம் நாள்
அட்வென்டிஸ்ட் என்று அழைத்துக் கொண்டனர். இவர்களுள் James White, and Joseph Bates என்ற இருவரும்
முக்கியமானவர்கள். James
White-ன் மனைவி Ellen
G. White (1827–1915) எப்பதவியிலும்
இல்லாவிட்டாலும் தன் முழு ஆளுமையை இக்குழுவின் மேல் கொண்டிருந்தார்.
1870
ஆண்டிலிருந்து வெகு வேகமாக இக்குழு வளர ஆரம்பித்தது. 1880ல் 16,000 என்றிருந்த
எண்ணிக்கை வேகமாக வளர்ந்து 1901ல் 75,000 ஆயிற்று’ இரு கல்லூரிகள், ஒரு மருத்துவக்
கல்லூரி, பல பள்ளிக்கூடங்கள், 27 மருத்துவ சாலைகள் என்றும் வளர்ந்தன. 1945ல்
அமெரிக்காவிலும், கனடாவிலும் மட்டும் 2,26,000; வெளி நாடுகளில் 3,80,000
என்றானது. 1960ல் உலகம் முழுவதிலும் 12,45,125, 2000ல் 1,16,87,229 என்று
வளர்ந்துள்ளது> 2008ல் 1,59,921,408 என்ற எண்ணிக்கையிலும், $ 457,89,067,340
என்பது ஓராண்டின் பட்ஜெட்; அவர்களது கல்விச்சாலைகளில் பயிலுவோரின் எண்ணிக்கை:
15,38,607.
Seventh-Day Adventist சபை பைபிளை முழுமையாக
சொல்லுக்கு சொல் நம்புகிறது. தங்கள் ரட்சிப்பு அவர்களதுஏசுவின் மேலுள்ள
நம்பிக்கையை மட்டுமே பொறுத்திருக்கிறது. இவர்களுடைய அடிப்படை நம்பிக்கைக்
கோட்பாடுகளின் எண்ணிக்கை 28. விவிலிய வார்த்தைகளுக்குப் புதுப் பொருள் கொடுப்பதோ,
புதிய அர்த்தங்கள் கண்டுபிடிப்பதோ முற்றிலும் இவர்களுக்கு எதிரானது.
எலன் ஒய்ட்டின் பங்களிப்பு:
இவருக்கு தீர்க்க தரிசனம் கொடுக்கக்கூடிய திறமை
கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது இக்குழுவினரின் நம்பிக்கை. தனது 12வது வயதில் இவர்
தன் குடும்பத்தோடு மில்லிரைற் குழுவினில் இணைந்தார். தன் பாவங்களுக்காக மிகவும்
மனம் நொந்தார். (அந்தக் ‘குழந்தை’ தன் பன்னிரண்டாவது வயதில் இப்படி நொந்து
கொள்ளும் அளவிற்கு என்ன பாவம் புரிந்து விட்டாரோ?) இரவும் பகலும் அழுது பல மாதங்கள்
பிரார்த்தித்தாராம். 1842ல் ஞானஸ்நானம் பெற்றார். 1845ல் தன் எதிர்காலக் கணவரைச் சந்தித்தார்.
இவர் எலன் கடவுளைக் காணுவதாகச் சொன்னதை முழுவதுமாக நம்பினார். 1846ல் இவர்கள்
மணந்து கொண்டார்கள்.
எலன் ஒயிட் தனது வாழ்நாளில் மிக அதிகமான நூல்கள் எழுதினார். 5000
கட்டுரைகள், 40 நூல்கள், 2000 முறை தான் ‘கடவுளைப் பார்த்த’ அனுபவங்கள் பற்றி
எழுதியுள்ளார். Steps to Christ என்ற அவரது நூல் இதுவரை 140 மொழிகளில்
பதிப்பிக்கப்பட்டுள்ளது.
எலன் 1844 முதல் 1863 வரை 100 முதல் 200 வரை பல இடங்களில்,
பொது இடங்களில், கூட்டம் நடக்கும் இடங்களில் கடவுளைத் தரிசித்தாகக் கூறியுள்ளார்.
அவரது வீட்டில் நடக்கும் தரிசனங்கள் எல்லாம் இரவில் நடந்ததாகக் கூறியுள்ளார். (
எங்கெங்கு வசதியோ அங்கங்கு தரிசனங்களை அல்லது கடவுளை வரச் சொல்லி விடுவார் போலும்!)
அட்வென்டிஸ்ட்களின் 28முக்கிய நம்பிக்கைகளில் ஒன்று எலன்
ஒய்ட் கடவுளின் உண்மையான தூதர் என்பது. இந்த அளவு அவர் மேலும், இவரது தரிசனங்கள் மீதும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதையும் விட அட்வென்டிஸ்டாக ஆவதற்கு முன், ஞானஸ்நானம் பெறும் முன்
அவர்கள் எல்லன் ஒய்ட் கடவுளின் திருத்தூதர் என்பதை நம்பி, உறுதி மொழி எடுக்க
வேண்டும். (இஸ்லாமியத்தில் சேர நபியைக் கடைசி நபி என்ற நம்பிக்கை வேண்டும் என்பது
போலுள்ளது இது.)
வெள்ளி மாலை ஆரம்பித்து, அடுத்த நாள் சனிக்கிழமை மாலைவரை கடவுளின் நாளாக - Lord's Day
- ஓய்வு நாளாகக் கருதப்படுகிறது.இது மிக முக்கிய நாளாகவும், இதனைக் கடைப்பிடிப்பது பெரும் கட்டாயமாகவும்
கருதப்படுகிறது. ஒய்ட் தனது தரிசனம் ஒன்றில் மோட்சத்துக்கு அழைத்துப் போகப்படுகிறார்.
ஏசுவின் கையால் எழுதப்பட்டிருக்கும் பத்து கட்டளைகளை ஏசு இவருக்குக் காண்பிக்கிறார்.பத்து
கட்டளைகளில் நான்கு ஒரு மேசையிலும், அடுத்த 6 வேறொரு மேசையிலும் உள்ளன. நான்கு கட்டளைகளில் மிகப் பிரகாசமாக
ஓய்வு நாள் பற்றிய குறிப்பு உள்ளது.
ஒய்ட் தன் குழுவினருக்குக் கற்றுத் தந்ததும், அட்வென்டிஸ்ட்களின் நம்பிக்கையும் தமதிருத்துவத்தின் மேல் இல்லை; ஒய்ட் Semi-Arianism என்ற தத்துவத்தின் மீதே நம்பிக்கை வைத்திருந்தார். Gnostic Gospel, Gospel of Judas என்ற பகுதிகளில் Arianism பற்றிய விளக்கங்கள் காணலாம்.
ஒய்ட் தன் குழுவினருக்குக் கற்றுத் தந்ததும், அட்வென்டிஸ்ட்களின் நம்பிக்கையும் தமதிருத்துவத்தின் மேல் இல்லை; ஒய்ட் Semi-Arianism என்ற தத்துவத்தின் மீதே நம்பிக்கை வைத்திருந்தார். Gnostic Gospel, Gospel of Judas என்ற பகுதிகளில் Arianism பற்றிய விளக்கங்கள் காணலாம்.
தரிசனங்களின் வரலாறு:
தனது ஒன்பது வயதில் உடன் பயிலுபவர் எறிந்த ஒரு கல் எலனின் மூக்கை உடைத்து, அதன் விளைவாக மூன்று வாரங்களுக்கு கோமா நிலைக்குப் போய் விட்டார். நரம்பியல் நிபுணர்கள் இதனால் எலனிற்கு வலிப்பு, பிரம்மை போன்றவை நிகழக்கூடும் என்றனர். இவைகளை அவர்
கடவுளின் தரிசனம் என்று நம்பிக்கொண்டார். எலனின் மறைவிற்குப் பின் அவரை 1981-ல் ஆராய்ந்த மருத்துவர் Delbert H. Hodder இவருக்கு symptoms
of temporal lobe epilepsy இருந்தது
என்றும், Molleurus
Couperus என்ற தோலியல் நிபுணர்
1984-ல் இதனை உறுதிப்படுத்தினார்.
ஒய்ட் கண்ட பல தரிசனங்களின் பட்டியல் கீழே. நீங்களே இவைகளில் உண்மை இருக்கிறதா என்று முடிவு செய்து கொள்ளுங்கள் ....
பலமுறை கிறித்து வந்து விடுவார் என்று இவர் சொன்ன தீர்க்க தரிசனங்கள் எதுவும் நடைபெறவேயில்லை.
அடிமைகளைப்
பயன்படுத்துவது மீண்டும் வரும்.
கத்தோலிக்க
போப் உலகத்தைத் தன் ஆளுமைக்குள் கொண்டு வந்து விடுவார்.
இரண்டு உலக
யுத்தங்களைக் காட்சிகளில் கண்டார்.
1864ம்
ஆண்டு அவர் கண்ட தரிசனத்தில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பிறந்த ஒரு தனி
மனிதக் குழு ஒன்றைக் கண்டதாகக் கூறியுள்ளார். எப்படி இது போல் ஒரு மனித-விலங்குக் குழு உண்டாயிருக்க
முடியும்? ஒய்ட் சொன்ன ‘தீர்க்க தரிசனங்களில்’ மிகவும் வேடிக்கையான, தவறான தீர்க்க
தரிசனம் இதுவே!
சுய
மைதுனத்தால் கண்கள் குருடாகி, மனநோய்க்குள்ளாகி, பின் மரணம் நடக்கும் என்பதுவும்
ஒய்ட்டின் ஒரு கண்டுபிடிப்பு!
டார்வினுக்கு
முந்திய Lamark என்ற பரிணாமக் கொள்கையாளர் சொன்ன ஒரு தோல்வியுற்ற
கொள்கையான use and disuse theoryயை இவரும் முன் மொழிந்தார்.
1846-ம் ஆண்டு எலனுக்கு ஒரு ‘காட்சி’ கிடைத்தது. அப்போது Mrs. Truesdail என்பவர் உடனிருந்திருக்கிறார். அவர் இக்காட்சியைனை விளக்குகிறார். “ஒயிட் உடல் நலமில்லாமல் இருந்த ஒரு நாள் .. கடவுளின் பிரசன்னம் அவரிடம் இறங்கியது. அப்போது ஒயிட்டுக்கு இந்த உலகின் தொடர்பு ஏதுமில்லை. ஒயிட் பிரபஞ்சத்தை தன் காட்சியில் காணுவது இதுவே முதன் முறை. ஜூபிடரின் நிலவுகளை எண்ணுகிறார்; அதன் பின் சனிக் கிரகத்தின் நிலவுகளை எண்ணுகிறார். இவைகளைப் பற்றிய அழகிய வர்ணனைகளைக் கொடுத்தார். அதன்பின் அங்கு வாழ்பவர்களைப் பற்றிக் கூறுகிறார். அவர்கள் மனிதர்கள் போலின்றி, மிகவும் உயரமாகவும் கம்பீரத்துடன் இருந்ததாகவும், பாவங்கள் அவர்களைத் தொட்டதில்லையென்றும்’ கூறினார்.
இவைகளெல்லாம் உண்மைகளாக இருக்க முடியுமா?
1846ம் ஆண்டில் இதற்கான விளக்கங்கள் ஏதுமில்லாமல் இருக்கலாம். ஆனால் இன்று உண்மை தெரியும். இந்த இரு கிரகங்களும் மனித வாழ்க்கைக்குக் கொஞ்சமும் ஒத்து வராதவை.
1.
இந்த இரு கிரகங்களும் நம் உலகத்தைப் போல் கடினப் பரப்பு இல்லாதவை.
அங்கு ஹைட்ரஜன் திரவ வடிவில் பல மைல் ஆழத்திற்கு இருக்கிறது.
2.
இங்கு அழுத்தம் பல மடங்கு உலகத்தை விட அதிகம்.
3.
பல ஆய்வுகள் நடத்தியும் இங்கு எந்த உயிரினம் இருப்பதற்கான அறிகுறிகளே
கிடையாது.
இன்னொரு காட்சி விளக்கம் ஒன்றையும் காணலாம்:
ஒயிட்டிற்கு ஓரியன் என்ற நட்சத்திரக் கூட்டத்தைப் பற்றிய ஒரு காட்சி
கிடைத்துள்ளது. இந்த நட்சத்திரக் கூட்டத்தின் நடுவில் 7 நட்சத்திரங்கள் உண்டு.
அதில் மூன்று நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி உள்ளன. 1845-ல் ஒரு அட்வென் டிஸ்டான Joseph
Bates என்பவர் இந்த அமைப்பினை விளக்கியுள்ளார். அவர் இந்த
நெருங்கி நிற்கும் இந்த மூன்று நட்சத்திரங்களின் நடுவே விவிலியத்தில் சொல்லியுள்ள
ஒரு வாசல் – STARGATE - இருக்கிறது என்றார்.
இவரோடு
தொடர்பு ஏற்பட்ட பின் ஒயிட் சூரியக் குடும்பத்தைப் பற்றிய வேடிக்கையான தன்
காட்சிகளைப் பற்றிக் கூறியுள்ளார்.
‘இந்த நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள STARGATE மோட்சத்தோடு தொடர்புடைய கதவு
என்றார். பின் 1848-ம் ஆண்டு மேலும் ஒன்றைச் சொல்லி STARGATE
பற்றிய மேலதிக விவரங்கள் கொடுத்துள்ளார். “இருளடர்ந்த கருமையான மேகங்கள் எழுந்து
ஒன்றோடு ஒன்று மோதின; வளி மண்டலம்
சுருண்டு வழி விட்டது. அப்போது ஓரியனின் ஊடே உள்ள இடைவெளி நன்கு தெரிந்தது.
அப்போது கடவுளின் ஒலி கேட்டது. மோட்சம் இந்த இடைவெளி வழியே இறங்கி வந்தது.
இக்காட்சியின் பின்னணி:
பழைய எகிப்திய புறச் சமயங்களில் ஓரியானைப் பற்றிய கதைகள் பலவுண்டு. ஓரியானில்
ஒரு ‘கதவு’ ஒன்று உண்டு; அதன் வழியே பெரும் ஒளி வரும் என்பதெல்லாம் அதிலுள்ளவை.
ஓரியானில் ஒரு கதவு உள்ளது என்றெல்லாம் விவிலியத்தில் எங்கும்
சொல்லப்படவில்லை. பழைய மதங்களில் ஓரியானைப் பற்றிய பல கதைகள் உண்டு. ஆனால் (pagan) பகனிச – புறச்சமயங்களை – மதத்தை
எதிர்க்கும் ஒயிட் ஏன் இந்தப் பழைய மதக் கதைகளை இப்போது வெளிக் கொணர்கிறார்?
ஏனிந்த காட்சி அவருக்கு வந்தது?
கடவுள் பழைய எகிப்தியருக்குக் காண்பித்த உண்மையை
மறுபடி இவருக்கும் காண்பித்தாரா?
உண்மையிலேயே ஓரியனில் STARGATE இருக்கிறதா?
அல்லது பேட்ஸ் என்ற பெரிய அட்வென்டிஸ்ட்
சொன்னதை உண்மையாக்க இப்படி சொன்னாரா?
அல்லது எல்லாமே மாயப் பிரம்மைகள்
தானா?
இது போல் பல தரிசனங்கள். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விளக்கங்கள். இப்படிப்பட்ட ‘தரிசனங்கள்’ மூலமாகவே இத்திருச்சபைக் குழு செழித்தோங்கி வளர்ந்து வருகிறது.
இவைகளில் உண்மை எவ்வளவு?
கண்மூடித்தனமான நம்பிக்கை எவ்வளவு?
எல்லாவற்றையும் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!
இவைகளில் உண்மை எவ்வளவு?
கண்மூடித்தனமான நம்பிக்கை எவ்வளவு?
எல்லாவற்றையும் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!
http://wiki.answers.com/Q/Who_started_the_Seventh-day_Adventist_Church
http://www.ellenwhiteexposed.com/orion.htm
http://www.bible.ca/7-White-halo.htm
http://www.whiteestate.org/issues/visions.html#2
*
இஸ்ரேலின் யூத மதத்தில் ஒரு பிரிவினர் எபிரேய பைபிளில் அதீதமாக கற்பனை செய்து உலகம் அழியப் போகிறது, அதற்கு முன் கடைசி தலைமுறையில் மேசியா வருவார் என நம்பினர்.
ReplyDeleteமேசியா என்பதை கிறிஸ்து எனவும் இறுதி தூதர் எனவும் மொழி பெயர்க்கின்றன. இஸ்லாமியர் மேசியா முகம்மது நபி என்கின்றனர்.
கிறிஸ்து யார்- இயேசுவா? முகம்மது நபியா?
http://pagadhu.blogspot.in/2012/06/blog-post_24.html
பல பல கிறிஸ்துக்கள் -http://en.wikipedia.org/wiki/List_of_messiah_claimants