*
//நபியின் இறப்பை ஒட்டியே அவரால் உருவான இஸ்லாம் சன்னி – ஷியா என்ற இரு பகுதிகளாக உடைந்தது. இதற்குக் காரணம் நபியின் இடத்தை யார் கைப்பற்றுவது என்பதில் தோன்றிய தகராறே காரணம். 1400 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பிளவு இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சன்னிகள் நபியின் வழிவந்தோரில் தகுதியானவர் பதவியேற்க வேண்டும் என்று விரும்பினர். ஆனால் ஷியா என்ற சிறு பகுதியினர் முகமதுவின் மகளை மணம்புரிந்த அலி பதவிக்கு வரவேண்டுமென விரும்பினர். நபி இறந்த உடனேயே இந்தப் பிளவு ஏற்பட்டு விட்டது. //
இது எனது முந்திய பதிவில் எழுதியது.
ஆனால் இந்த வரலாற்றிற்கு இன்னொரு பக்கமும் இருப்பது அறிந்தேன். அப்பக்கத்தை இங்கே சிறிதே தருகிறேன்.
முகமது வஹி பெற்ற பின் அவரோடு இஸ்லாமை ஏற்றுக் கொண்டு காபாவிற்கு சென்ற இருவர் முகமதுவின் மனைவி கதிஜாவும் அலியும் மட்டும் தான். அலி முகமதுவின் நெருங்கிய உறவினர்; அதோடு முகமதுவின் மருமகனுமாவார். இஸ்லாமை ஏற்றுக் கொண்ட முதல் ஆண் இவரே. அலியை சன்னியினர் தங்களது நாலாவது கலிபாவாகக் கருதுகிறார்கள். ஆனால் ஷியா பிரிவினர் அலியை முகமதிற்கு அடுத்த முதல் இமாமாகவும், முகமதுவின் உரிமையுள்ள வழித்தோன்றலாகவும், முகமதுவின் குடும்பத்து உறவினராகவும் கருதுகிறார்கள்.
அலியின் அதிசயப் பிறப்பு, அவர் முகமதுவின் மகள் பாத்திமாவைத் திருமணம் செய்தது இரண்டும் தெய்வீக நிகழ்வுகள் என்பது இன்னொரு பக்கக் கதை.
முகமது தன் வீட்டிற்கு குழுத் தலைவர்கள் சிலரை அழைக்கிறார். நாற்பது பேர் வருகிறார்கள். அவர்களிடம் முகமது கடவுளின் சேதியை அறிவிக்கிறார். இதனைப் பரப்ப தன்னோடு ஒத்துழைப்பவர்கள் தனக்குப் பின் அவரது வழித்தோன்றலாக இருப்பார்கள் என்று அழைக்கிறார். ஆனால் யாரும் உடனே அவரோடு சேரவில்லை. முகமது இதை மறுபடியும் அறிவிக்கிறார். மூன்று முறை அழைத்தும் யாரும் முன் வரவில்லை. 13 வயதே ஆன அலி மட்டும் எழுந்து முன் வருகிறார். முகமது அப்போது அலியைத் தன் உதவியாளராகவும், தனக்குப் பின் வரும் தலைவராகவும் அறிவிக்கிறார்.
இதன் பின் வரும் மூன்று முக்கிய போர்க்களங்களில் அலி கொடியேந்தி முகமதிற்குத் தோள் கொடுக்கிறார். வரலாற்றுப் பாதையில் பல இடங்களில் முகமது அலியைத் தன் உதவியாளராகவும், தன் வழித்தோன்றலாகவும் அறுதியிட்டுக் கூறுகிறார். அதிலும் காதீர் என்னுமிடத்தில், அதிக எண்ணிக்கையில் நபியின் பேருரையைக் கேட்பதற்காக வந்த மக்களிடையே முகமது அழுத்தம் திருத்தமாக, ‘நான் விரைவில் இறைவனால் அழைக்கப்பட்டு விடுவேன். அவரின் வசனங்களை நான் எவ்வாறு உங்களுக்குக் கொடுத்தேன் என்பதைச் சொல்ல வேண்டும். பின்பு அவர் உங்களிடம் அவைகளை எவ்வாறு ஏற்றுக் கொண்டீர்கள் என்று கேட்பார். நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?’ என்று கேட்டார்.
பதிலாக அங்கிருந்த அனைவரும் ஒரு குரலாக, ‘நாங்கள் நீர் சொல்வதை நம்புகிறோம்; அதனை அவரிடம் சாட்சி பகர்வோம்’ என்றனர். இப்பதிலைக் கேட்டதும் முகமது, ‘உங்களிடம் நான் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கிறேன்; ஒன்று, குரான்; இரண்டு, என் வழித்தோன்றல் (Ahlul Bayt). இரண்டையும் பத்திரமாகக் கையாளுங்கள். அவைகள் என்னிடம் இறுதியில் கவ்சார் நீரூற்றின் அருகே வந்து சேரும் வரை ஒன்றோடொன்று பிரியாமல் இணைந்தே இருக்கும்,’ என்றார். மேலும் அவர் தொடர்ந்து, ‘நான் யாருக்கெல்லாம் தலைவனோ (Maula) அதே போல் அலியும் அவர்களுக்கெல்லாம் ஒரு தலைவன் (Maula)’ என்றார்.
(சன்னியினர் இந்த நிகழ்வில் முகமது இரு விஷயங்களை தன்னோடு உள்ள இஸ்லாமியரோடு பகிரவில்லை; வெறும் குரானைப் பற்றி மட்டும் சொன்னார்; அலியைப் பற்றி ஏதும் சொல்லவில்லை என்று மாற்றிச் சொல்கிறார்கள்.
இரண்டில் எது உண்மை? அவரவர் கட்சிக்கு அவரவர் சொல்வது உண்மை. நடுவிலிருக்கும் நமக்கு …?)
இதைச் சொல்லும் போது முகமது அலியை தன் தோளுக்கு மேல் உயரத்தில் நிறுத்தி,எல்லோரும் அவரைக் காணும்படி செய்தார். அபபோது தன் கடைசி வசனத்தைக் கூறினார்: ‘இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கானவாழ்க்கை நெறியாக பொருத்திக் கொண்டேன். .’ (5:3)
இதன் பின் முகமது அனைத்து இஸ்லாமியரும் அலிக்கு மரியாதை செய்யும்படி செய்தார். அலியை அவர்கள் அனைவருக்கும் Amirul Momeneen (Lord of the faithful) என்று உயர்த்தினார். முகமது எப்போதும் பெரும் பொருப்புகளை அலியிடம் கொடுத்து வந்தார். உதாரணமாக, முகமது தம்புக் (Tambuk) என்னுமிடத்திற்குப் பயணப்பட்ட போது இஸ்லாமிய உம்மா – இஸ்லாமியக் குழு - முழுவதையும் காக்கும் பொருப்பை அலியிடம் விட்டுச் சென்றார். மேலும், முகமது தனக்குப் பின் அலியைத் தவிர வேறு யாருக்கும் உயர்ந்த தகுதி கிடையாது என்று சொல்லியுள்ளார். . (Bihar Al-Anwar v.12 p.361 h31, Ghayatol Maram p.45 h.54, Rowzat Al-Jannat v.6 p.185).
முகமது இறந்து அலியினால் அடக்கம் செய்யப்பட்ட உடனேயே சன்னிகளின் உதவியினால் அபுபக்கர் முதலாம் கலிபாவாக பட்டம் சூட்டிக் கொண்டார். இச்செய்தியை அபு சோபியான் அலியிடம் தெரிவிக்கிறார். அலி புதிதாகத் தோன்றிய இஸ்லாம் மதம் பிளவு படுவதை சிறிதேனும் விரும்பவில்லை. அதனால் எந்த வித மாச்சரியமும் இல்லாமல் குரானைத் தொகுக்கும் பணியில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இப்பெரிய முயற்சியை அடுத்த ஆறு மாதங்களில் வெற்றிகரமாகச் செய்து முடித்தார். முடித்த குரானை இஸ்லாமியர்கள் முன் கொண்டு வந்தார். ஆனால் அவரது இமாலய முயற்சியை ஆதரித்து எடுத்துக் கொள்ள ‘அரசு’ தயாராக இருக்கவில்லை. அலி தயாரித்த குரான் ‘மிகப் பெரியதாகவும், மக்களால் புரிந்துகொள்ள முடியாத நூலாகவும்’ இருக்கிறது என்பது அபு பக்கரின் கருத்து. ஆகவே முகமதுவோடு எப்போதும் சேர்ந்திருந்த அலி தொகுத்த முதல் குரான் அரசியல் வேற்றுமைகளால் அபு பக்கரால் புறந்தள்ளப்பட்டது. அலி தான் தொகுத்த குரானை தன்னோடு வைத்துக் கொண்டார்.
மூன்றாவது கலிபா ஒஸ்மான் இறந்ததும் அலி பலத்த ஆதரவுடன் நாலாவது கலிபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அலிக்கு பதவிக்கு வருவதில் முழு விருப்பமில்லை. இவ்வுலகத்து ஆதாயமெல்லாம் ஒரு ஆட்டின் தும்மல் போன்ற சாதாரணமான ஒன்று என்பது அவர் எண்ணம். பதவியேற்ற பின் அலிக்குப் பல எதிரிகள் முளைத்தார்கள். முக்கிய எதிரி சிரியாவின் கவர்னரான மோயவியா (Moawiya ibne Abi Sofian). மேலும், Talha, Zubair என்ற இருவருக்கும் கவர்னர் பதவிகள் கிடைக்காததால் அவர்கள் இருவரும் அலியை எதிர்த்து புரட்சிக் கொடி எழுப்பினார்கள். மதினாவிலிருந்து கிளம்பி மெக்காவிற்கு வந்து அங்கிருந்த ஆயிஷாவைத் தூண்டிவிட்டு,அலிக்கு எதிராகப் போராட அழைத்தார்கள். பஸ்ராவிற்கு வந்து அலிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார்கள்.
அலி ஆண்ட நான்கு ஆண்டுகளும் பத்து மாதங்களும் ஒரு நல்ல இஸ்லாமிய அரசுக்கு உதாரணமாக விளங்கியது.
அலி, மோயவியா இருவருக்குள்ளும் இருந்த பகைமை வளர்ந்து இருவரும் போரிடும் நிலைக்கு வந்தது. அலியின் படையில் 25 ஆயிரம் பேரும், மோயவியா படையில் 45 ஆயிரம் பேரும் இறந்தனர் என்று கூறப்படுகிறது. பெரும் மனித அழிவைத் தடுக்க அலி மோயவியாவைத் தன்னோடு போரிட தனிப் போருக்கு அழைத்தார். மோயவியா ஒத்துக் கொள்ளவில்லை.
இந்த இருவரின் போரினால் இளம் இஸ்லாமியத்திற்குக் கெடுதல் என்றெண்ணி சிலர் அலி, மோயவியா, அம்ர் ( Amr bin Aas) என்ற மூவரையும் கொல்ல முடிவெடுத்தனர். இத்திட்டத்தின் இறுதியில் அலி மட்டும் கொல்லப்பட்டார். மற்ற இருவரும் தப்பித்து விட்டார்கள்.
41வது ஹிஜ்ரியில் ராமதான் மாதத்தின் 19ம் நாள் அலி தன் காலைத் தொழுகையை நடத்திக் கொண்டிருக்கும் போது Abdur Rahman bin Muljam என்ற எதிரியின் வாளால் வெட்டப்பட்டார். இரு நாட்கள் உயிரோடு போராடிக்கொண்டிருக்கும் போது அவரது மகன் ஹசன் மூலம் தன் இறுதி உயிலை எழுதி வைத்தார். அதுவும் பெரும் இலக்கிய அழகோடு இருந்தது.
அலியின் மறைவுக்குப் பின் இன்றைய ஈராக்கில் உள்ள கர்பாலா என்னுமிடத்தில் நடந்த போர் ( Battle of Karbala) இரு படைகளுக்கு நடுவே நடந்தது. ஒரு பக்கம் ஒரு சிறு படையுடன் அலியின் பெயரனான ஹூசைன் இப்ன் அலி; இன்னொரு பக்கம் உமயாத்தின் கலிபா ஆன யாஸித் ( Yazid I, the Umayyad caliph) என்பவரின் பெரும் படையும் இருந்தது. போரில் ஹூசைன் மட்டுமல்லாது, அவரது ஆறு மாதக் குழந்தையும் கொல்லப்பட்டது; பெண்டிர், குழந்தைகள் பலரும் சிறை பிடிக்கப்பட்டனர். இறந்த இம்மக்கள் ஷியா, சன்னி இருவராலும் புனிதத் தியாகிகளாகக் கருதப்படுகின்றனர்.
இவ்விடத்தில் மீண்டும் ஒரு கேள்வியைத் திரும்பக் கேட்க விளைகிறேன்:
முகமது தன் காதீர் உரையின் இறுதியில் முகமது, ‘உங்களிடம் நான் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கிறேன்; ஒன்று, குரான்; இரண்டு, என் வழித்தோன்றல் (Ahlul Bayt). இரண்டையும் பத்திரமாகக் கையாளுங்கள். அவைகள் என்னிடம் இறுதியில் கவ்சார் நீரூற்றின் அருகே வந்து சேரும் வரை ஒன்றோடொன்று பிரியாமல் இணைந்தே இருக்கும்,’ என்றார்.
ஆனால் சன்னிகள் அவர் இரு விஷயங்களைப் பற்றிச் சொல்லவில்லை.
வெறும் குரானைப் பற்றி மட்டும் சொன்னார்; அலியைப் பற்றி ஏதும் சொல்லவில்லை என்று மாற்றிச் சொல்கிறார்கள்.
இரண்டில் எது உண்மை?
அவரவர் கட்சிக்கு அவரவர் சொல்வது உண்மை.
நடுவிலிருக்கும் நமக்கு …?
*
முகமதுவோடு எப்போதும் சேர்ந்திருந்த அலி தொகுத்த முதல் குரான் அரசியல் வேற்றுமைகளால் அபு பக்கரால் புறந்தள்ளப்பட்டது.
ஏன்?
*
https://www.facebook.com/notes/imam-ali-as-%D8%A7%D9%84%D8%A5%D9%85%D8%A7%D9%85-%D8%B9%D9%84%D9%8A-%D8%B9%D9%84%D9%8A%D9%87-%D8%A7%D9%84%D8%B3%D9%84%D8%A7%D9%85/imam-ali-ibn-abi-talib-as-the-only-divinely-chosen-successor-to-the-holy-prophet/113335118717
http://www.al-islam.org/restatement-history-islam-and-muslims-sayyid-ali-ashgar-razwy/assassination-ali
http://en.wikipedia.org/wiki/Ali#Election_as_Caliph
http://www.al-islam.org/story-of-the-holy-kaaba-and-its-people-shabbar/first-imam-ali-ibn-abu-talib
*
உங்கள் இந்த முழு பதிவிற்கும் மூல காரணமான காதீர் உரை உங்களால் தவறாக பகிரப்பட்டுள்ளது. அங்கு உண்மையில் நபி (ஸல்) அவர்கள் இரண்டை உங்களுக்கு விட்டு சென்றேன் என்று கூறியது உண்மை அதை எந்த சுன்னி முஸ்லிமும் மறுக்கவில்லை..நபி (ஸல்) கூறிய இரண்டு விஷயங்கள் ஒன்று குரான் மற்றொன்று சுன்னா (நபியின் வழிமுறை not வழிதோன்றல் ) எனவே உங்க பதிவின் அடிப்படையே பொய். அப்படி நீங்கள் அஹ்லுல் பைட் (ahlul bait ) என எடுத்து கொண்டாலும் அவருடைய மனைவி ஆயிஷா (ரலி ) யும் அஹ்லுல் பைத் தான் அவரை ஷியாக்கள் ஏற்று கொள்வதில்லை....தங்களை அப்பசிக்கள் என ஷியாக்கள் அழைத்து கொள்ள காரணமான நபியின் சிறிய தந்தை அப்பாஸ் (ரலி ) அவர்களின் மகன் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) ஷியா பிரிவை ஏற்று கொள்ளவில்லை .அவரும் அஹ்லுல் பைத் தான் .....இன்னும் சொல்ல போனால் அலி (ரலி ) அவர்கள்தான் நபியின் வாரிசு என்ற கொள்கையை பரப்பி விட்ட ஷியாக்களின் முன்னோடியான காரிஜியாக்களை அலி (ரலி) தான் கலிபாவாக இருக்கும் போதே உயிரோ து எரித்து கொன்றார்கள் .. அதை இன்னொரு அஹ்லுல் பைத்தான அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஏற்று கொண்டார்கள் ஆனால் எரிக்காமல் கொன்றிருக்க வேண்டும் என்று கூறினார்கள் ...எனவே ஷியாக்கள் தங்கள் கொள்கையான அஹ்லுல் பயத்தையே முழுமையாக ஏற்று கொள்ள வில்லை... .... அஹ்லுல் பைத் ஷியா கொள்கைக்கு எதிராகத்தான் இருந்தது ,,,,,
ReplyDeleteஇன்னொரு அபாண்ட குற்றச்சாட்டு அலி (ரலி)அவர்கள் குரான் எழுதியதாக கூறுவது ..... இதற்கு இஸ்லாமிய வரலாற்றில் இருந்து ஒரு ஆதாரமாவது காட்டுங்கள் ....அதெப்படி இஸ்லாமிய வரலாறு படிக்காமலேயே யாரோ ஒருவர் எழுதிய நூலை ஆதாரமாக வைத்து உங்களால் இஸ்லாத்தை பற்றி எழுத முடிகிறது ......
நடுநிலையான நமக்கு என்று கூறி விட்டு ஏன் ஷியாக்கள் சொல்லும் செய்தியை மட்டும் பதிவிட்டு இருக்கிறீர்கள்...இதே விசயங்களை பற்றி சுன்னி முஸ்லிம்களின் கருத்தை ஏன் பதிவிடவில்லை ....இரண்டையும் படித்து விட்டு நடுநிலையாளர்கள் ஒரு முடிவுக்கு வரட்டும்
ReplyDeleteஇரண்டாவது கலிபா உமர் இறக்கும் போதே 10 பேர் அடங்கிய குழு ஒன்றை ஏற்படுத்தி தங்களுக்குலோருவரை கலிபாவாக தேர்ந்தெடுக்க சொன்னார் ..அந்த குழுவில் அலி உஸ்மான் (ரலி ) இருவருமே இடம் பெற்று இருந்தனர்....மற்ற எட்டு பெரும் இவர்களிடம் உங்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள், நாங்கள் யாரை வேண்டுமானாலும் ஏற்று கொள்வோம் என்று கூறி விட்டனர் ..அப்போது அலி தன்னை விட வயதில் மூத்த உஸ்மானை கலிபாவாக தேர்ந்தெடுத்தார் .....எனவே ஷியாக்கள் எதிர்க்கும் உஸ்மானை தேர்ந்தெடுத்தது அலி (ரலி)அவர்களே...இதில் ஷியாக்கள் அலி(ரலி) கே மாறுபடுகின்றனர் ..........மேலும் உஸ்மான் (ரலி ) கொல்லப்பட்ட போது அலி (ரலி) களிபாவானத்தை ஆயிஷாவோ முஆவியாவொ தல்ஹாவோ சுபைரோ எதிர்க்க வில்லை ...அவர்கள் கேட்டதெல்லாம் உஸ்மானை கொன்றவர்களை உடனடியாக கண்டுபிடித்து கொல்ல வேண்டும் என்பதைத்தான் ஆனால் அலி அவர்கள் முதலில் நாட்டில் உள்ள குழப்பத்தை தீர்ப்போம் என்று கூறினார்கள் ..இதுதான் நடந்தது .................
ReplyDeletehttp://www.islamicity.com/mosque/lastserm.HTM
ReplyDeleteஎப்பொழுதுமே நடுவில் இருக்கும் மக்களுக்குத்தான்
ReplyDelete//உங்க பதிவின் அடிப்படையே பொய். //
ReplyDeleteஇதை நான் இந்த உண்மையை ஏற்று கொள்கிறேன்.
25 ஜூலை அன்று பாரிஸ் மோந்த்ட்ரோய் நகரில் உள்ள பள்ளிவாசலில் பிரெஞ்சு பிரஜை ஒருவர் இஸ்லாத்தை தழுவினார். அல்ஹம்துலில்லா.
தர்மி அவர்களுக்கு இதுவெல்லாம் தெரியுமா?
ibnu UTHSMAN.
ReplyDelete//நடுநிலையான நமக்கு என்று கூறி விட்டு ..//
நான் இப்படியா சொல்லியிருக்கிறேன். கண்ணைத் ’திறந்து’ பாருங்கள்!
Learn that every Muslim is a brother to every Muslim and that the Muslims constitute one brotherhood
//NO NEW FAITH WILL BE BORN.//
அப்படியா ? நிறைய FAITH/ மதங்கள் - ஏன், இஸ்லாமியப் பிரிவினைகள் கூட - பிறந்து விட்டனவே!
// I leave behind me two things, the QURAN and my example, the SUNNAH and if you follow these you will never go astray.//’
ஒரே மதப்பிழவுக்குள் இத்தனை வித்தியாசம் வந்து விட்டது. ஒரு குழு சுன்னா என்கிறது; இன்னொன்று அலி என்கிறது. நம்பிக்கையில்லா நாங்கள் இதில் எதைச் சரி என்பது என்பதுதான் என் கேள்வி!
//Learn that every Muslim is a brother to every Muslim and that the Muslims constitute one brotherhood//
ReplyDeleteபாத்தீங்களா உங்கள் முகமதை! முஸ்லீமுக்கு முஸ்லீம் ஒண்ணுன்னு சொல்லியிக்கிறார். மனிதர்கள் எல்லோரும் சகோதரர்கள் என்றா சொல்லியிருக்கிறார்.
இதனால் தான் ஏசுவோ, முகமதோ அவர்களெல்லாம் வெறும் குழுத் தலைவர்கள் - tribal leaders - என்கிறேன்.
//ஏன் ஷியாக்கள் சொல்லும் செய்தியை மட்டும் பதிவிட்டு இருக்கிறீர்கள்...//
ReplyDeleteஇதற்குத்தான் சொல்வது - கண்ணைத் ’திறந்து’ பாருங்கள் என்று! இதன் முதல் பதிவு stronger team சன்னி சொல்வது. இது ‘பாவப்பட்ட’ ஷியாக்கள் சொல்வது!
ஏன் பாவப்பட்ட என்றுசொல்கிறேன் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். இஸ்லாமியர் நிறைய இருந்த பகுதியில் சிறு வயதில் வாழ்ந்திருக்கிறேன்.
அப்போது பெருமையுடன் நெற்றித் தழும்போடு சுற்றும் இஸ்லாமியரைக் காணவில்லை!
மீசையை சிரைத்து வெறும் தாடி மட்டும் வைத்த இஸ்லாமியரைக் காணவில்லை!
அராபிய / பாக் உடையில் இஸ்லாமியரைக் காணவில்லை!
நல்ல நாட்களில் தவிர மற்ற நாட்களில் தலையில் எப்போதும் குல்லாவுடன் இஸ்லாமியரைக் காணவில்லை!
கலர் அடித்த தாடிக்கார இஸ்லாமியரைக் காணவில்லை!
தாலிபான் உடையில் பெண் இஸ்லாமியரைக் காணவில்லை!
வஹாபி cum சன்னிக்கள் சொல்வது தான் இப்போது தமிழ்நாட்டில் (இஸ்லாமியர்களுக்கு) சட்டமாமே ... அப்படியா? நடப்பைப் பார்த்தால் அப்ப்டித்தான் தோன்றுகிற்து.
ஆகவே உங்களுக்கு நினைவூட்டுகிறேன்: “/Learn that every Muslim is a brother to every Muslim and that the Muslims constitute one brotherhood.”
//அவர்கள் இரண்டை உங்களுக்கு விட்டு சென்றேன் என்று கூறியது உண்மை அதை எந்த சுன்னி முஸ்லிமும் மறுக்கவில்லை//
ReplyDeleteஏன் ஷியாவினர் மறுக்கிறார்கள்?
இதன் மூலம் இன்னொரு கேள்வி வருகிறது. ஒரு சின்ன விசயத்தில் இரண்டில் ஒன்று தவறாக இரு குழுவினரால் சொல்ல்ப்படுகிறது. ஆனால் நீங்கள் குரானின் வார்த்தைகள் “அப்படியே” அல்லாவின் வார்த்தைகள் என்கிறீர்கள். இது எப்படி உண்மையாக இருக்க முடியும்?
This comment has been removed by the author.
ReplyDelete//இஸ்லாமிய வரலாறு படிக்காமலேயே யாரோ ஒருவர் எழுதிய நூலை ஆதாரமாக வைத்து ...//
ReplyDeleteஐயா!
’யாரோ’ எழுதியதில்லை. நான் இதில் கொடுத்துள்ள நான்கு கட்டுரைகளையும் எழுதியவர்கள் இஸ்லாமியர்கள் தான். (ஒரு வேளை அவர்கள் எல்லோரும் ஷியாக்களோ! அப்படியே இருந்தாலும் அவர்களும் இஸ்லாமியர்கள் தானே!) :)
பதிவு 720 அதன் பின்னூட்டங்கள் வாசித்து விட்டீர்களா? உங்கள் ‘குழுவினர்’ அங்குள்ள கேள்விகளுக்குப் பதில் சொல்லி விட்டு அதன்பின் மற்ற பதிவுகளுக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்திருந்தேனே.
ReplyDeleteஇப்போது என் பதிவுகளில் பின்னூட்டமிட முஹம்மத் ஆஷிக் citizen of world~ & சுவனப்பிரியனுக்குப் பதில் சொல்ல உங்கள் குழுவின்ரால் நீங்கள் “அனுப்பப்பட்டிருக்கிறீர்கள்?”
719 & 720 பதிவு & பின்னூட்டங்களை வாசித்துக் கொண்டு, பதில் கொடுத்து விட்டு தொடருங்களேன்!
did ali compile quran? அப்டின்னு கூகுள் ஆண்டவர்ட்ட கேட்ட நிறைய இஸ்லாமியக் கட்டுரைகள் வருதுங்க ....
ReplyDeletehttp://www.balaghah.net/nahj-htm/eng/id/imam-ali/8/05.htm
ReplyDeleteImam Ali (A.S.), the First Compiler of the Holy Qur'an
Inna 'Aliyyan ma'a al-Qur'an wa al-Qur'an ma'a 'Ali, lan-Yatafarraqa hatta yarida 'alayya al-hawz (Indeed, 'Ali is with the Qur'an and the Qur'an is with 'Ali, the two will never separate even when they return to me at the poll [of kawthar in paradise]) - Prophet Muhammad (S.A.W.).(1)
The above hadith found in several authoritative works of almost all denominations of Islam, is not a stray or solitary reference to the relationship between the Holy Qur'an and its prime and perfect compile
ஒண்ணு பண்ணுங்க ... உங்களுக்கும் ஷியாக்களுக்கும் உள்ள வித்தியாசங்களை (அவங்களுக்கு உங்களைவிட குரானில் பத்து பக்கம் அதிகமாமே!) அலசி, ஆராய்ந்து ஒரு முடிவு செய்து விட்டு காபிர்களோடு விவாதிக்க ஆரம்பியுங்களேன். அதான் நல்லது!
ReplyDeleteஇந்த இரு பிரிவினர் ஏன் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்று பலமுறை நினைத்ததுண்டு ,உங்கள் பதிவுகளைப் படித்த பின்தான் அங்கேயும் தலைமையை பிடிக்கும் போராட்டம் அன்றே ஆரம்பித்து விட்டது என்பது புரிகிறது ..!
ReplyDeleteத ம 1
முகமது தன் உரையாடல்களை எழுதி வைக்கத் தடை விதித்தார். ஆனாலும் அவை ஹதீஸாக எழுதப்பட்டு இன்றும் நடைமுறைபடுத்தப் படுகின்றன.
ReplyDeleteIbn Saeed Al-Khudry என்ற முகமதுவின் தோழர், “நான் சொல்வதில் குரான் வசனங்களைத் தவிர வேறெதையும் எழுதி வைக்காதீர்கள்; எழுதியவைகளையும் அழித்து விடுங்கள்” என்று முகமது சொன்னதாக [Ahmed, Vol. 1, Page 171, and Sahih Moslim, Zuhd, Book 42, Number 7147] – ல் குறித்துள்ளார். முகமதுவின் வசனங்களை உடனிருந்து தொகுத்த Zayd Ibn Thabit முகமது இறந்து 30 ஆண்டுகள் கழிந்த பின், Khalifa Mu'aawiyah என்பவரிடம் முகமதுவின் வாழ்க்கைக் குறிப்பொன்றைக் கூறினார். அதனை எழுதி வைக்கும்படி Mu'aawiyah சொன்ன போது Zayd மறுத்து விட்டார். ‘குரானைத் தவிர வேறெந்த ஹதீஸுகளையும் குறித்து வைக்க வேண்டாமென முகமது கூறியுள்ளார்’ என்றார்.
அல்லாவே நேரடியாக வந்து ஹதீஸுகளை எழுத வேண்டாமென்று சொன்ன நிகழ்வு ஒன்றை Ibn Al-Salah எழுதிய மிகவும் பிரபலமான "Ulum Al-Hadith" என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. "Taq-yeed Al-Ilm", என்ற நூலில் அதன் ஆசிரியர் Abu Saeed Al-Khudry கூறுவது: ’முகமதுவின் கூற்றுகளை எழுத உத்தரவு கேட்ட போது, அவர் மறுத்து விட்டார்’.
ஆகவே, ஹதீஸுகள் எழுதப்பட்டிருக்கக் கூடாது என்பது இஸ்லாமியரின் சான்றுகளிலேயே தெரிகிறது. அல்லாவும், முகமதுவும் சொன்ன கட்டளைகளை மீறி ஹதீஸுகள் எழுதப்பட்டுள்ளன.
//நபி (ஸல்) கூறிய இரண்டு விஷயங்கள் ஒன்று குரான் மற்றொன்று சுன்னா (நபியின் வழிமுறை not வழிதோன்றல் ) // .... உங்கள் முகமதுவே தன் வாய்மொழிகளை எழுதி வைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனால் நீங்கள் தான் விட்டுச் செல்லும் இரண்டில் ஒன்று அவரது சுன்னா என்கிறீர்கள். எப்படி இந்தக் குளறுபடி?
சுன்னியாவது ஷியாவாவது எல்லாம் பதவிச் சண்டைதான். அதே கூத்துதான் இன்றும் இஸ்லாமிய இயக்கங்களிடையே!!!
ReplyDeleteas i have other important work i cant come here. we will discuss this topic after 25th Aug...........
ReplyDeletewelcome .......
ReplyDeleteibnu UTHSMAN.
ReplyDeleteso, now this is your turn. welcome
வருவதற்கு முன் என் பதிவுகள் 719 & 720 பார்த்துவிட்டு பதிலோடு வந்தால் நலம்.
//ibnu UTHSMAN. said...
ReplyDeleteas i have other important work i cant come here. we will discuss this topic after 25th Aug...........//
அடடா.... 25th Aug என்று சொன்னவர் எந்த ஆண்டு என்று சொல்லாமல் விட்டு விட்டாரே!!!