Monday, April 06, 2015

828. காபிர்களை காணும் இடங்களில் வெட்ட வேண்டுமா? -- ஒரு பின்னூட்டம்








*


 வலையுகம் என்ற வலைத்தளத்தில் காபிர்களை காணும் இடங்களில் வெட்ட வேண்டுமா? என்ற ஒரு பதிவு வந்திருந்தது. வாசித்து ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன். ஏற்கப்படவில்லை. அதனால் இரண்டாம் முறையும் அதே பின்னூட்ட்த்தை அனுப்பினேன். அதுவும் ஏற்கப்படாததால் அவரிடம் சொன்னபடி அதைத் தனிப் பதிவாக என் தளத்தில் இட்டு விடுகிறேன். தொடர்பு வேண்டியவர்கள் முதலில் அப்பதிவைப் படித்து விட்டு வந்தால் நலம்.

அவருக்கு நானனுப்பிய ஒரு குறிப்பு; ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன். அதற்கு இங்கு இடமில்லையோ என்று நினைக்கிறேன். இருந்தும் இரண்டாம் முறையாக மீண்டும் அதே பின்னூட்டம் ..... இப்போதும் வரவில்லையெனில் மூன்றாவது முறையாக அதே பின்னூட்டத்தை உங்கள் பதிவோடு இணைத்து என் தளத்தில் இட்டுக் கொள்கிறேன். சம்மதம் தானே?


***


மூன்றாவது பத்தியை முழுமையாக ஒத்துக் கொள்கிறேன். மத நூல்களில் நல்லது சொல்லாமல் இருக்க முடியாது.. எல்லா மத நூல்களும் நல்லவற்றை மட்டும் தான் போதிக்கும்.... மத நூல்களில் நல்லது சொல்லப்படுவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

ஆனால் வேத நூலில் சண்டை போடுவது பற்றி இத்தனை இருக்கிறதா என்று உங்கள் பதிவைப் படித்து அதிகமாகத் தெரிந்து கொண்டேன். நன்றி. மத நூல்களில் எததெதற்கு அட்டவணை போடுவது? எப்போதெல்லாம் அன்பைக்காட்ட என்று அட்டவணை இட்டால் சரி; ஆனால் எப்போதெப்போதெல்லாம் போரிடலாம் என்பது கொஞ்சம் வேடிக்கையாகவும், நிறைய அச்சமாகவும் இருக்கிறது. வித்தியாசமான வேத நூல்! வேறெந்த மத நூலிலும் இப்படி ஒரு அட்டவணையைப் பார்க்க முடியாதென நினைக்கிறேன். (கீதையை இங்கு உதாரணம் காட்ட மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.)

குரான்: 2:190. 9: 13; 2:191, 22:40; 2:192; 4:75, 22:39-40; 8:61; 2:256, 9:6, 109:6; 2:190, 9:12,13…. எல்லாம் நீங்கள் கொடுத்த பட்டியல் – கடவுளே பட்டியலிட்டு விட்டார் எப்போதெல்லாம் சண்டையிடலாமென்று!

//ஒரு சமுதாயத்துடன் இன்னொரு சமுதாயம் அநியாயமாகப் போருக்கு வந்தால் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதில் என்ன தவறு// .. இது ஒரு மதப் புத்தகமா… இல்லை … அரசியல் புத்தகமா....? மதப் புத்தகத்தில் இப்படியா? சண்டை போடு ... கொல்லு .... ஆச்சரியம் தான். வேறு எந்த மதத்திலும் இல்லாத போராட்டம்... யுத்தம் ... கொலை ... அடிமைத்தனம் ...நல்ல தொடர்ச்சி தான்.

மதத்தைப் பரப்புவதற்குத் தானே இத்தனை சண்டையும் சொல்லப்பட்டுள்ளன? “கடவுளுக்கே” இது பிடிக்காது என்று தான் நினைக்கிறேன்.

//( அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை. // 
... ஆஹா...!  உங்கள் கடவுளை மறுத்தால் ... கொலை தான்!

//போர் என வந்துவிட்டால் எல்லாவிதமான தர்மங்களையும் தூக்கி எறிவது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. // 

பின்னிட்டீங்க ...! நல்ல மத நூல்! தர்மங்களைக் காக்கும் மத நூலில் …இப்படியா ! நம் நாட்டின் மரபுப்படி பெண்கள், குழந்தைகள், கால்நடைகள், முனிவர்கள்(?) -- இவர்களையெல்லாம் போரில் கொல்லக்கூடாது என்ற மரபை வைத்திருந்தார்களே! ஆனால் உங்கள் போரில் இறந்த எதிரியின் மனைவியை உங்கள் நபி அந்த இரவிலேயே பெண்டாண்டது உங்கள் மரபில் உள்ளதே ... அதற்கும் காரணம் கண்டுபிடிப்பீர்கள் .. இல்லையா?

//எந்த அரசாவது தன்னுடன் போருக்கு வரக் கூடியவர்களை எதிர்த்துப் போராடாதிருக்குமா? // ஆக, குரான் ஒரு அரசியல் நூலா அல்லது மத நூலா? மீண்டும் கூறுகிறேன்: மதப் புத்தகத்தில் இப்படியா? சண்டை போடு ... கொல்லு .... ஆச்சரியம் தான்.

மனிதனால் திரிக்கப்பட்டு விட்ட பைபிளில்  last but one நபி என்று நீங்கள் சொல்லும் ஏசு தன் சீடர்களிடம் எதிர்த்துப் போராட வேண்டாம்; கத்தியை எடுப்பவன் கத்தியால் சாவான் என்று அறிவுறுத்தியதாக உள்ளதே! எந்த உயிரையும் கொல்லாதே என்றாரே புத்தர். சமணர்களோ அதற்கும் மேலே .. பெருங்கருணையோடு  இருந்தார்களே...! ’வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்றாரே இராமலிங்க அடிகளார். ’காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்றானே மீசைக்காரன்.

ண்டை போட்டு எல்லோரையும் என் வழிக்குக் கொண்டு வாருங்கள் என்று குரானில் உள்ளது போல் யாரும் சொல்லவில்லையே! அடுத்த பத்தியில் வரும் உங்கள் மேற்கோள் சொல்வது அது தானே?

 //...  அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களில் (எவரையும்) உற்ற நண்பர்களாக ஆக்காதீர்கள்! அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்! ... // 

இப்படிச் சொன்னால் ,என் வழியில் வரச்சொல். ……இல்லையேல் தீர்த்து விடு என்பது தானே பொருள்?  ( உங்கள் தலைப்பிற்கு இதுதானே பதில்!)

நீ வேறு; அவன் வேறு என்று மத நம்பிக்கைகள் வழியே பிரித்துச் சொல்லுதல் சரியா?

  //தனி நபர்களோ, குழுக்களோ ஜிஹாத் என்ற பெயரில் வன்முறையில் இறங்கினால் அது தவறாகும்.//

 இப்போது நடப்பது என்ன? ஐ.எஸ். - சரியான இஸ்லாமிய வழியில் போகவில்லை என்பீர்கள்; தலிபான் - சரியான முஸ்லீம்கள் இல்லை என்பீர்கள்; அல் கொய்தா – சரியில்லை என்று சொன்னாலும் சொல்வீர்கள்; Boko Haram - குழுவினரை என்னவென சொல்வீர்கள் என்பதும் தெரியாது; ஜிகாதி என்ற பெயரில் நடந்து வரும் மதக் கொலைகளுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்பீர்களோ? வஹாபியிசத்தின் கெடுபிடிகள் உங்களுக்கு ஏற்றது தானே!

//அவர்களின் மீளுதல் அவர்களின் இறைவனிடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.//
ஓ! எத்தனை இறைவன்கள் இப்படி இருக்கிறார்கள்?

********


 கண் திறக்க வேண்டும் ... எல்லோராலும் முடியாது என்பது தான் சோகம்.




  *

10 comments:

  1. பயனுள்ள சிந்திக்க வைத்துள்ள பதிவு.
    பதிவுகள் படிப்பதோடு இதுபோன்றவற்றை சுவைப்பதிலும் சுகம்தானே? ரசித்தேன்.
    களப்பணியில் நாட்டாணி சென்ற அனுபவத்தைக் காண அழைக்கிறேன்.வருக. http://ponnibuddha.blogspot.com/2015/04/blog-post.html

    ReplyDelete
  2. எனக்கு தொடக்கம் முதல் ஒரே ஒரு ஆச்சரியம் என்னவென்றால் பல பட்டப்படிப்புகள் படித்தவர்கள், வேலை தொடர்பாக பல ஊர்கள் சென்றவர்கள், பல கலாச்சார வாழ்க்கையை அருகே இருந்து பார்த்தவர்கள் இணையத்தில் புழங்கும் போது அனைத்தையும் மீறி அவரவர் மதம் சார்ந்த கொள்கை மட்டுமே(அல்லது சாதி) வெளியே வந்து விடுகின்றதே? எப்படி?

    ReplyDelete
  3. ஜி,
    என் மதத்தின் கொள்கை, என் சாதியின் வரலாறு என்றெல்லாம் எழுதினால் கூட பரவாயில்லை. ஆனால் “அது” தான் சரி .. பெரியது ... சரியானது என்ற ‘பரப்பல்’ வரும் போது தான் கஷ்டமாகி விடுகிறது.

    ஏற்கெனவே சொன்னது தான்: என் அம்மா நல்லவள் என்றால் தவறேயில்லை; ஆனால் என் அம்மா மட்டும் தான் நல்லவள் எனும் போது தான் பிரச்சனையே எழுகிறது.

    ReplyDelete
  4. ஜம்புலிங்கம் சார்,
    //சிந்திக்க வைத்துள்ள பதிவு//

    இதற்காக மிகுந்த நன்றி

    ReplyDelete
  5. I think, THE TITLE crossed the "freedom of speech" boundary line. The author might run into serious trouble for using "violence" in his title. Of course it depends on which land he is living. :-)

    I am not sure whether we need to take on these guys or learn to ignore them completely, dharumi sir!

    ReplyDelete
  6. பயனுள்ள தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  7. எளிமையே மதத்தின் அணிகலன் அமைதியே போதனை சரியா!
    http://goo.gl/M3jw7N
    அது ஏன் மற்ற பெண்கள் கறுப்பு முக்காடிட்டு மூடியிருக்கிறார்கள், மகனின் மனைவி மட்டும் அப்படி செய்யவில்லை!

    ReplyDelete
  8. வேகநரி.
    நீங்கள் கேட்ட கேள்வியையும், அதற்குரிய படத்தையும் பதிவில் இணைத்துள்ளேன்.
    நன்றி.

    அதோடு என் கேள்வியையும் இணைத்துள்ளேன்:

    ஆமால்ல ... நல்ல கேள்வியா இருக்குதே... அல்லா முன்னால் எல்லோரும் சமம் என்று சொல்வார்களே ... ப்ரூனை மன்னரின் மகனின் மனைவிக்கு மட்டும் ஏன் அந்த “மூடு மந்திரம்” இல்லை?

    ReplyDelete
  9. About 80 mosques accused of spreading venom will close within a week
    துனேசிய பிரதமர் அறிவித்துள்ளார் என்கிறது செய்தி.ஒரு இஸ்லாம் நாட்டு பிரதமர் தமிழ் மார்க்க பந்துகள் போல் இஸ்லாம் அப்படி சொல்லவில்லை, இது அமெரிக்க, இஸ்ரேல் சதி என்று என்று சொல்லி கொண்டிருக்காமல் நடவடிக்கை எடுப்பதை பாராட்ட வேண்டும்.

    ReplyDelete