*
1966-70களில் தஞ்சைக்கு அருகிலுள்ள புஷ்பம் கல்லூரியில் தான் என் ஆசிரியப் பணி ஆரம்பித்தது. தங்கியிருந்தது தஞ்சையில். அப்போதெல்லாம் கல்லூரிக்கு போய் வர புகைவண்டி மட்டும் தான் இருந்தது, தஞ்சையிலிருந்து ஏறத்தாழ 13 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த குடிகாடு என்ற ரயில் நிலையத்தில் இறங்கி அரை கிமீ நடந்து கல்லூரிக்குப் போவோம். கடைசி மூன்று வண்டிகளில் ஆசிரியர்கள் இருப்போம். மற்றதில் எல்லாம் மாணவர்கள். அது ஒரு விளையாட்டுக் காலம். ரயிலை நிறுத்துவதில் மாணவர்கள் கில்லாடிகள். ஏன் எதற்கு என்ற கேள்வியெல்லாம் கிடையாது. ரயில் நின்றதும் நல்ல ஆசிரியர்கள் எல்லோரும் ‘ஆஹா .. எனது வகுப்பு நடத்த முடியாமல் போச்சே’ என்றெல்லாம் வருத்தப்படுவார்கள்.
அது என்னவோ போய்ச் சேர்ந்ததுமே பலரது மத்தியில் ஒரு black list-ல் உள்ள ஒரு ஆளாக ஆகிவிட்டேன். மாணவர்கள் மத்தியில் மதுரைக்காரன் என்ற பெயரால் அப்படி ஆனதாகக் கேள்விப்பட்டேன். அதோடு படித்தது தியாகராஜர் கல்லூரி. அப்போது தான் -1965ல் - நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்பில் முன்னால் நின்ற கல்லூரி என்ற முறையில் இன்னும் கொஞ்சம் ‘கெட்டப்’ கூடிப்போனது. போடுற சட்டைத் துணிமணி, வில்லன் போடும் ஷீ ஒரு சத்தம் போடுமே அதே மாதிரி நம்ம ஷுவும் சத்தம் போட்டால் நான் என்ன செய்ய முடியும். கல்லூரியே அப்போது ஒரு ‘ப’ வடிவத்தில் இருந்தது. வகுப்பு நடக்கும் போது நடந்து போகும் போது ஒரு சத்தம் போட்டால் நானென்ன செய்ய முடியும்.
மாணவர்கள், அதுவும் எண்ணிக்கையில் நிறைய உள்ள பொருளாதார மாணவர்கள் என்னை ஒரு வில்லனாகப் பார்த்ததாக என் மாணவர்கள் சொன்னதுண்டு.
மாணவர்கள் இப்படியென்றால் ஆசிரியர்கள் கதை வேறு மாதிரி. ரயிலில் நான், இயல்பியல் ஆசிரியர் ரங்கநாதன் என்ற பெயர் கொண்ட ரங்கமணி, தமிழ்த் துறை கண்ணையன் என்ற எங்கள் மூவர் குழுவிற்கு ரொம்பவே ‘நல்ல’ பெயர். கண்ணையன் பாவம் .. நல்ல பயல் தான். ஆனால் எங்களோடு சேர்ந்து அவனும் நாரோடு சேர்ந்த பூவாகி, அவனுக்கும் நார் வாசனையைப் பூசி விட்டார்கள். பெரிய சீனியர்கள் இருக்கும் ரயில் பெட்டிகளில் நாங்கள் பொதுவாக ஏறுவதில்லை; நாங்கள் ஏறினால் பலரும் அடுத்த பெட்டிக்குப் போய்விடுவார்கள். அப்படி ஒரு ‘நல்ல பெயர்’. அதற்காகவே பெட்டியில் கடைசியாக ஏறுவோம். வருவது போவதெல்லாம் ரயிலில் உட்கார்வது இல்லை. பயணமெல்லாம் நடை பாதையில் தான்.
தமிழ்த் துறையில் கோவிந்த ராஜன் என்று ஒரு பேராசிரியர். எங்களை விட பத்தாண்டாவது மூத்தவராக இருப்பார். நல்ல பக்திமான். நெற்றி நிறைய நீரு. அதோடு ரயிலில் ஏறியதும் பக்கதில் இருப்போருக்கெல்லாம் பையில் இருக்கும் பொட்டலத்தில் இருந்து திருநீர் தருவார். பாபா பக்தர். கம்பனின் பக்தன். எங்கள் பக்கம் பொதுவாகத் திரும்ப மாட்டார். எல்லோரும் அவரை குரு என்று தான் அழைப்பார்கள். அவரைப் பற்றி கண்ணையன் என்னிடம் சொல்லியிருந்தான். அவருக்கு கம்பன் மேலிருந்த எண்ணத்திற்கு நேரெதிராக ஜெயகாந்தன் மீது அவருக்கு வெறுப்பு. அவர் குடிக்கிறார்; கஞ்சா புகைக்கிறார் என்பது அவரது வெறுப்பிற்கான காரணம்.
நானோ அப்போது ஜெயகாந்தனின் தீவிர வாசகன்.அவர் மேல் அப்படி ஒரு மரியாதை. அந்த சமயத்தில் தினமணி கதிரில் வெளிவந்த ‘ரிஷிமூலம்’ முதலிரு பகுதிகளை வாசித்து புத்தகத்தைச் சேமித்து வைக்காமல் போட்டு விட்டேன். நான்கு வாரங்களாக வந்து முடிந்ததும் பழைய இரு இதழ்களுக்காக பழைய புத்தகக் கடைகளுக்குப் படையெடுத்தது இன்னும் நினைவில் இருக்கிறது. காலத்திற்கு முந்திய கதை என்று நினைத்தேன். ரிஷிமூலத்தை அப்போது எத்தனை முறை வாசித்திருப்பேன் என்று தெரியவில்லை. அதிலும் ஆரம்பத்தில் ராஜாராமன் திண்ணையில் படுத்திருக்கும் கோலத்தை விவரித்திருப்பார். ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு .... எல்லாம் இன்னும் நினைவில் இருக்கிறது.
ஒரு நாள் ரயிலில் வழக்கமான இடத்தில் இருந்து வந்து கொண்டிருந்தோம். எங்களுக்குப் பின்னால் குரு நின்று கொண்டிருந்தார். நான் ரங்கமணி, கண்ணையனிடம் ‘கம்பன் பெரும் குடிகாரர் தெரியுமாடா? என்றேன். அதோடு எழுதும் போது ஒரு பக்கம் மதுவும் இன்னொரு பக்கம் மங்கையும் இருக்க வேண்டுமாம் என்றேன். எதிர்பார்த்தது மாதிரியே குருவுக்குக் கோபம் வந்தது. வாதங்கள் ஆரம்பித்தன. கம்பனுக்குப் பக்கத்தில் என்ன இருந்தது இன்று நமக்குத் தெரியாது; கம்பனின் படைப்பு மட்டும் தான் நம் முன் நிற்கிறது. நாளைக்கும் இதே போல் தான் ஜெயகாந்தனின் படைப்பு மட்டும் நிற்கும்.படைப்பைப் பாருங்கள் என்றேன். வாசிக்காமலேயே ஏனிப்படி ஒரு கருத்து உங்களுக்கு; வாசித்துப் பாருங்கள் என்றேன். என்ன ஆச்சோ தெரியவில்லை. வாசிக்க ஆரம்பித்தார்; பிடித்தும் போயிற்று. குருவும் எனக்குத் திருநீர் தர, நானும் வாங்கி பூசிக்கொள்ளும் அளவிற்கு நல்ல நண்பராகி விட்டோம்.
*************
அமெரிக்கன் கல்லூரியில் ஜெயகாந்தன்
*************
எழுபதுகளின் கடைசியில் கலைஞருக்கு டாக்டர் பட்டம் அண்ணாமலை பல்கலையில் கொடுக்கப்பட்டு அதனால் ஒரு போராட்டமும் நடந்து முடிந்திருந்த சமயம்.
ஜெயகாந்தன் எங்கள் கல்லூரிக்கு அழைக்கப்பட்டிருந்தார். வரவேற்பு வளைவு ஒன்றில் ‘சிறுகதை மன்னனே வருக’ என்று எழுதப்பட்டிருந்தது. அதைப் பற்றிப் பேசினார். இந்தப் பட்டங்கள் மேலெல்லாம் எனக்கு எந்த வித ஈர்ப்பும் இல்லை. அதுவும் நான் என்னை சிறுகதைச் சக்கரவர்த்தி என்று நினைத்துக் கொண்டிருக்கலாம்; நீங்களோ என்னை மன்னனாக்கி விட்டீர்கள் என்று சொல்லி விட்டு .. போதும் .. போதும் .. பட்டம் கொடுத்து நடக்கும் தகராறு தெரியாதா உங்களுக்கு! என்று சொல்லிச் சென்றார்.
*************
அனேகமாக 1980களில் ...
அரங்கு நிறைந்த ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். பின்னாலிலிருந்து ஒரு பெரும் விசில் வந்தது. அப்பக்கம் கையை உயர்த்தி ‘சைத்தானே’ என்றார். ஒரே அமைதி. அதுவே அவருக்குப் பிடிக்கவில்லை போலும். ‘நீ விசில் அடிக்கவில்லை; ஒரு சைத்தான் அடிக்க வைத்தது; விரட்டி அடி’ என்றார். மீதிக்கூட்டமும் அழகாக நடந்தது.
*************
கூட்டத்தில் பேசும் போது நான் பொய் பேசுவதில்லை என்றார். கூட்டத்திலிருந்து ஒரு குரல் ‘இதுவே ஒரு பொய்’ என்று ஒலித்தது. கூட்டம் அமைதியாகி அவரது பதிலுக்காகக் காத்திருந்தது. 'I accept; but I don’t agree' என்றார். ஆங்கிலப் புலமை கொண்ட எங்கள் கல்லூரி முதல்வர் தங்கராஜ் அவர்களுக்கு இந்தச் சொற்றொடர் மிகவும் பிடித்துப் போனது. கூட்டம் முடிந்ததும் அதனைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.
*************
தொன்னூறுகளில் ஒரு முறை ஆசிரியர்கள் கூட்டத்தில் மட்டும் பேசினார். அப்போது அவர் எழுதுவதை ஏறத்தாழ நிறுத்தியிருந்தார். அதற்கு முன்பே அவர் சங்கர .. சங்கர .. எழுதும் போது அவரது புதுப்படைப்புகளை வாசிப்பதை நிறுத்தி விட்டிருந்தேன்.
கூட்டத்தின் ஆரம்பத்தில் எல்லோரும் நின்று கொண்டே தேநீர் குடித்துக் கொண்டிருந்தோம். அப்போது அவரது மீசையும் பெரியதாக இருந்தது. ஆனால் வெள்ளையாக இல்லை என்று நினைக்கிறேன். அது கருமையாக இருப்பதை விட வெள்ளையாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்.
அவருக்கு அடுத்துப் பக்கத்தில் சென்றேன். மெல்ல - கொஞ்சம் பயந்து கொண்டே - ஒரு கேள்வி கேட்டேன்.
‘ஏனிப்போது எழுதுவதில்லை?’ என்றேன்.
பக்கத்தில் நின்ற என்னை திரும்பிப் பார்த்தார். பார்த்தார் என்று சொல்வதை விட முறைத்தார்.
சிங்கம் சீறியது: ”அது கொள்வாரைப் பொறுத்தது”, என்றார்.
அவருக்குப் பக்கத்தில் நின்றதாலோ என்னவோ ... எனக்கும் ‘தமிழ் உடனே கை கொடுத்தது’!
‘கொள்வார் என்பதனால்தான் கொடுப்பாரைக் கேட்டேன்’ என்றேன்.
சீற்றம் குறையாமல் சிங்கம் ஓரிரு வினாடிகள் இருந்தது.
என் அதிர்ஷ்டம்.. ஒலி பெருக்கியில் கல்லூரித் தலைவர் கூட்டம் ஆரம்பிக்கப் போகிறது’ என்று கூறினார். பிழைத்துக் கொண்டேன்!
*************
ஆனால் இன்னொரு ஆச்சரியம். கூட்டம் ஆரம்பித்து முடிந்த பின் கேள்வி நேரம். நான் கேட்ட அதே கேள்வியை இன்னொரு பேராசிரியர் கூட்டத்தில் ஒருவராக எழுந்து நின்று கேட்டார்.
இந்த முறை சிங்கம் சீறாமல் பதில் சொன்னார்.
*************
பெயரும் புகழும் பெற்ற ஒரு படைப்பாளி குறித்த நினைவுகள்ரசிக்கும்படி இருந்தது. ஏன் இந்த நினைவுகளை படைப்பாளி இறந்தபின் பகிர்ந்து கொள்ள வேண்டும் ?
ReplyDeleteஒருவேளை இப்போது தான் யான் பெற்ற பெரும் பேறு என்ன என்பது புரிகிறதோ?
ReplyDeleteமுதலில் ‘ஜெயகாந்தனும் நானும்’ என்று தலைப்பு வைத்தேன். என்னவோ இருவரையும் ஒரே தட்டில் வைத்தது போல் தெரிந்தது; தவறாகவும் தோன்றியது. அதனால் தலைப்பை மாற்றினேன்.
''I accept, but I don't agree"'
ReplyDeleteWhatever does it mean? Did he accept the boy's statement that he (the writer) had lied. If so, what remains there to not agree?
If anyone says he never tell lies, i.e. like the mythological Harichandra always a staunch truth sayer, is he lying or not? The question is rhetorical; because he is lying.
You must be unlucky to get a Principal an English teacher, to boot, appreciating the writer's one liner on the stage. Call a spade, a spade.
All writers are infatuated with self-glorification, more so, if they are lionised by a lot of people. It goes into their heads and they start experiencing hallucinations of megalomania, which come out often in open through such idiotic declarations of self-aggrandisement. We can have a hearty laugh over their maveric behaviour, as in this episode involving Oscar Wilde:
Wilde was already a star writer in English language. Such writers are invited by many US universities as guests. Wilde went to US. At the airport customs, he was asked:
Do you have anything to declare?
He said: I have nothing to declare except my genius !
Dharmui!
On reading this, we can have a hearty laugh. Similarly, have a hearty laugh. Beyond that, don't go and hero worship like your Madurai boys who anoint the cut outs of their heroes with pots of milk :-)
-- Bala Sundara Vinayagam
ஜெயகாந்தன் அவர்களை நேரில் சந்தித்த பேசிய அனுபவங்கள் அறிந்து மகிழ்ந்தேன் ஐயா
ReplyDeleteதாங்கள் தஞ்சையில் பணியாற்றியது அறிந்து மகிழ்ந்தேன் ஐயா
நன்றி
தம +1
தங்கள் அனுபவம், நான் இதுவரை வாசித்தவைகளில் மிகச் சுவையானவை!
ReplyDeleteகொள்வார்- கொடுப்பார் ரசிக்கக்கூடியவை.
ஆனால் இவர் சங்கர சங்கரவைக் - கொள்வார், ஏற்றுக் கொள்ளவில்லை.
ஈழத்தில் பெரும் வாசகர் கூட்டம் இவருக்கு இருந்தது. நண்பர்கள் மத்தியில் இவர் படைப்புக்கள் பேசுபொருளாக இருந்த காலம் நானும் வாசகனாக இவருக்கு இருந்தேன்.
பலர் இவர் சங்கர சங்கர வை ஏற்றுக்கொள்ளவில்லை.
அதன் பிற்பாடு இவர் எழுத்தைக் குறைத்துவிட்டார். கொள்வார் தவறில்லை என்பது என் கருத்து.
சங்கராச்சாரிகளுடன் இவருக்கு ஏற்பட்ட ஈடுபாடு, பலர் ரசிக்கவில்லை.
ஆனால் வயது போகும் போது , நாத்திகன் - ஆத்திகனாவானோ? தெரியவில்லை.
சிங்கத்துக்கு- சர்ச்சை என்றால் சக்கரைப் பொங்கல் போல் .
இவர் 5ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவராம். இவர் ஆங்கிலப் புலமையைப் பலரும் மெச்சுகிறார்கள்.
தயவு செய்து இதில் குறிப்பிட்ட('I accept; but I don’t agree') வரியை எனக்காக இலகு தமிழ்ப்படுத்தவும்.வேறுபாடை என்னால் புரியமுடியவில்லை.. நன்றி!
My comments have been censored :-(
ReplyDelete//வயது போகும் போது , நாத்திகன் - ஆத்திகனாவானோ? தெரியவில்லை.//
ReplyDeleteஎனக்கும் வயசாகிக்கொண்டே போகிறதே! இனிமேல் அப்படி ஆவேனோ??!!
//'I accept; but I don’t agree'//
ReplyDelete'I accept your statement; but I don’t agree'
'I accept your statement; but I don’t agree its content ....
//All writers are infatuated with self-glorification,//
ReplyDeleteyes, u r a great writer, Bala Sundara Vinayagam!!!
//If anyone says he never tell lies, i.e. like the mythological Harichandra always a staunch truth sayer, is he lying or not? The question is rhetorical; because he is lying.//
wonder struck with your fantastic logic, Bala Sundara Vinayagam!!!
//which come out often in open through such idiotic declarations of self-aggrandisement. //
sorry Bala Sundara Vinayagam. not every one will be as humble as you are.
//My comments have been censored :-( //
ReplyDeleteha...ha... they are such worthy comments. will i ever miss such an intellectual treasure? never sir!
***'I accept your statement; but I don’t agree'***
ReplyDeleteWhat he really means is,
It is TRUE, but I dont like to agree with all truths/facts if it hurts me! He just shows that he is an "egoistic pig" (pardon my "language" please)
//he is an "egoistic pig" (pardon my "language" please) //
ReplyDeleteit is okay varun. no prob. it just shows what u r !!
யோகன் பாரிஸ்(Johan-Paris)
ReplyDelete//இவர் ஆங்கிலப் புலமையைப் பலரும் மெச்சுகிறார்கள்.//
அன்று வாசித்த போது ‘பாரிஸுக்குப் போ’வில் அவரது ஆங்கிலம் என்னை அசத்தியது.
ஜெயகாந்தனைப் பற்றிய நிகழ்வுகளை நன்கு நினைவுகூர்ந்தமைக்கு பாராட்டுகள். இவரது எழுத்தைப் படித்தோம், இவரைப் பார்த்தோம், இவருடன் பேசினோம் என்று கூறும்போதே எவ்வளவு மன நிறைவாக இருக்கிறது பாருங்கள். அங்குதான் ஜெயகாந்தன் முன் நிற்கிறார். என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு எழுத்துச்சிங்கம், பேச்சுச்சிங்கம்.
ReplyDeleteNalla pathivoo
ReplyDelete'I accept; but I don’t agree'//
ReplyDelete'I accept your statement; but I don’t agree'
'I accept your statement; but I don’t agree its content ...
Prof!
A statement cannot have a separate entity away from its contents. If one accepts a statement, one accepts its contents. Suppose the statement contains lies, as in police interrogations, the accused make a statement full of lies in order to escape, the listener can say: I don’t accept your statements but have to record and submit them before the Judge court. Police records; Judge Listens. Police doesn’t accept the statements because accepting means accepting the lies. But the Judge can either accept or reject based only on the material placed before him by both parties.
If the writer has accepted the boy’s statement, he has accepted its contents. Otherwise, he could have said to the boy: No, dear. You are wrong in that by saying I never tell lies, I am a liar. Note please: I never tell lies. I am not a liar ever.
By saying //'I accept; but I don’t agree'//, the writer accepts the boy’s statement that he is a liar.
We don't learn English from Tamil novelists. As a teacher of English language and literature, (now retired, though) will you advise your students to read Tamil novelists to learn English? I’m not surprised at the writer’s flamboyant English; nor at your admiration of his English skill. Rather, I am surprised at the reaction of the principal who was teaching English in his college. He could have explained to you that the writer was defending his mistake.
//wonder struck with your fantastic logic, Bala Sundara Vinayagam!!! //
If a person says he never tells lies, he is a liar. It is not rocket science to conclude like that. Because life teaches us that none can live w/o telling lies as and when occasion demands from us. This being the case, you want us to accept Jayakantan’s bombast that he never told lies. No logic but simple common sense is called for here. Jeyakantan wanted to pose as larger than life hero to Tamils. Good to know from you that one boy from the audience didn't fall for his bait. :-)
//We don't learn English from Tamil novelists//
ReplyDeletesorry sir, i learn anything good from anybody.
//As a teacher of English language and literature...//
// principal who was teaching English //
your wrong assumptions. who told you all these?
// No logic but simple common sense is called for here. //
i too feel the same thing. some more cs i expected from my readers.
.
ReplyDeleteநான் சிங்கம் என்றேன் பலரும் சொல்வது போல். அதனாலேயே ஜெயகாந்தனின் சிகையை சிங்கத்தின் முகமும் பிடரியுமாக மருது வரைந்த சித்திரத்தை இங்கு பதிவேற்றினேன்.
நல்ல கற்பனை வளம் அல்லவா....?
//வயது போகும் போது , நாத்திகன் - ஆத்திகனாவானோ? தெரியவில்லை.//
ReplyDeleteஎனக்கும் வயசாகிக்கொண்டே போகிறதே! இனிமேல் அப்படி ஆவேனோ??!! ////
இளம் வயசிலே நல்ல காய்ச்சலால் வந்ததிற்கே நாத்திகனாயிருந்து ஆத்திகனா மாறினவர்கள் இருக்கிறார்கள். ஆத்திகனாயிருந்து நான் கேட்டதை தரவில்லை என்ற கடவுளுடனான ஊடலால் சில மாதங்கள் நாத்திகனா மாறி, பின்பு மறுபடியும் ஆன்மீகவாதியாக மாறியவர்களும் நிறைய இருக்கிறார்கள்.
நீ இப்போது அந்த சர்வவல்லமை பொருந்தியவனை போற்றவில்லை ,ஆனால் உனது வயதான காலத்தில் இதற்காக மிக வருந்தி உணர்வாய் என்று மதவாதிகாளால் இளைஞர்களை நோக்கி செய்யபடும் வழக்கமான மிரட்டலாகும்.
You'r not replying to me properly. Your responses are a sort of being too clever by half.
ReplyDeleteI can't be found fault with for expecting a better understanding of English language from a Prof of English like you. That was why I had pointed out the misplaced admiration your Principal had for this guy Jeyakantan’s tilting at the windmills of English one-liners to impress. If you admire his novels, no one can interfere with that: for, it is subjective. But if your admiration is for abuse of English language, it should be pointed out. Being a Prof of English, you should be concerned whenever, wherever and by whomsoever, it is done.
I have already cited your blog post to some of my professor-friends (all of them holding eminent positions in Indian and Foreign Universities). When occasion arises, I shall write about their comments.
Au revoir
--- Bala Sundara Vinayagam
// எனக்கும் வயசாகிக்கொண்டே போகிறதே! இனிமேல் அப்படி ஆவேனோ??!!//
ReplyDeleteYes, all of us have to confront our ‘selves’’ and face inconvenient questions – the same questions many philosophers have raised and attempted answers (some have become their unique philosophies under a various nomenclatures) Unexamined life is not worth living. So, we have to examine our conclusions so far held dear to us. I don’t mean to say you will end up in belief, or create a new philosophical system. It may result in conclusions that have been honed and issued forth out of you inevitable examination. Like a man who says he never told lies, is taken to be a sure and brazen liar who wanted to fool all of us, so also, the man who says he won’t question the purpose of his existence in his closing years and the issue of mortality, is a vegetable. Here is one who examines – and you must have read and taught his views to your young students, haven’t you?
An age at least to every part,
And the last age should show your heart.
For, lady, you deserve this state,
Nor would I love at lower rate.
But at my back I always hear
Time’s wingèd chariot hurrying near;
And yonder all before us lie
Deserts of vast eternity.
Thy beauty shall no more be found;
Nor, in thy marble vault, shall sound
My echoing song; then worms shall try
That long-preserved virginity,
And your quaint honour turn to dust,
And into ashes all my lust;
The grave’s a fine and private place,
//sorry sir, i learn anything good from anybody.//
ReplyDeleteOn the spot. Well said.
We learn good from anybody. But why bad English, that too, by a Prof like you, is my wonder :-)
BS Vinayagam Sir: You certainly know what JK meant by "I dont lie". Even I tell that. Civilized human beings understand what I meant. Only an illiterate will take "literal meaning". You act like an illiteratte now! You are making a big deal out of nothing. We all know, JK only means, he never wants to be labeled as a "liar" and that He believes lies have short half-life. His conscience does not allow him to lie.
ReplyDeleteகீறுபட்ட ரெக்கார்ட் மாதிரி நீங்க இதையே பெரிதுபடுத்தி சொன்னதையே சொன்னால், it only makes you look ridiculous! You are losing badly if you keep continuing your argument like this. Please stop this.
Dharumi Sir: Pardon me one more time for poking my nose into this! :) Yes, this is who I am, Sir! :)
//...one more time for poking my nose into this!//
ReplyDeletevery meaningful and straight-to-the-bull's eye poking ... very much appreciate ... thanks
Hello Varun!
ReplyDeleteI don't write to win or lose. It is not a boxing arena. It is not about whether the writer is a liar or not. It is about the way the writer used his English words in the gathering; and the surprise that he was hailed for that. The writer doesn't have a 'feel' for the language. The one-liners or the conversations between his fictional characters in his novels, which Dharumi hails in Parseekkuppo - are a literary device novelists have to adopt in order to make their novels realistic. They pick up English for this specific purpose as they pick up slum lingo for creating slum characters. Because they pick up, it doesn’t follow they must be hailed as masters of English with great skill with language. I have a writer friend who is a novelist in Tamil. I help him with English sentences to put into the mouths of his characters when he creates snobs or upper class people. He doesn't know English as his education is up to 5th standard, just like Jayakantan. Like JK, my friend picked up Tamil. He has won prizes for his novels; and one of his novels is prescribed text in Indian Universities for Tamil Paper II (for e.g. Delhi University). He knows his characters have to speak true to the upbringing; or as snobs; otherwise, his novels will be effete. So, we need to understand that if a writer uses English sentences to give authentic touches, we should take it as a professional effort well done. There are, however, many novelists in Tamil who are also masters of English: e.g Ashoka Mithran. Praise where it is due. That is my caution. If Dharumi had said: JK has done well in inserting English words or sentences in correct contexts in Parseeku Po, it wouldn’t have raised eye brows. One doesn’t learn English from Parseeku Po – is absurd. That was why I asked: Can we advise our students to read Tamil novels to learn English?
Please understand that I am not talking about him as a person. I have written in Thinnai exhorting all to read novels w/o linking the creations with the creator’s personal lives. This is an English Prof blog - that you may mind first. He was a Prof of American College for decades. I expect a lot from him in defending good English and buttonholing the pretenders. On the contrary, here he is seen applauding a fellow who picked up a few sentences in English for professional necessity. That was why I quoted Donne - which he knows well; but you may not. I won’t quote any poet in your blog or about niceties of English language. Your blog is for not such matters. So, it is perfectly in order to make a mountain out of mole hill in this blog. We do it, in English studies: discussing word patterns and shocking distortions. All these will appear silly to laypersons like you. It's not your territory.
Taking him personally also, I stand by what I wrote: If anyone says he never told lies, HE IS A PUKKA LIAR. No matter whether he never wanted to be labeled as a liar (Whoever will want?) our concern here is that – on that day and on that place, he told a brazen lie and got caught red-handed by the boy. That’s all. Instead of praising the boy who called a spade a spade, the writer is praised for the clever use of English. It is not clever use; it is abuse. Young people don’t prevaricate as in the fable: Emperor has no clothes on. A small child pointed out the truth whereas the whole citizenry praised loudly how beautiful the dress of the Emperor was. It happens in our lives often and one example is here
Mr.When it is high time,
ReplyDeleteit's high time you / we stopped these arguments since your continued arguments stick to one false comprehension. You don’t even open your eyes properly. Can’t you understand what I mean in the following :
//As a teacher of English language and literature...//
// principal who was teaching English //
your wrong assumptions. who told you all these?
I am quoting you and call it wrong. U are still harping on that I and our Principal as English profees!
-------------
//You'r not replying to me properly.//
You never got me right.
---------------------------
Thanks for referring my blog to your learned and eminent intellectual luminaries or simply, profs for -----valuation/ scoring??
----------------------------------
//வயது போகும் போது , நாத்திகன் - ஆத்திகனாவானோ? தெரியவில்லை.//
I answered வேகநரி and he knows me since he has been visiting my blog for long. He knows my attitude towards religion. You descend on us and start sermonising with long paragraphs and still longer poems of Donne!
No end to this, gentleman!
தான் பொய் சொல்வதில்லை என்று சொல்லியிருக்கிறார். அவரா இப்படி ஒரு ரெகமென்டேஷன் கடிதம் எழுதி, அதையும் அவருக்கே அனுப்பியிருப்பார். இருக்காது.
ReplyDeleteஅதில் உள்ள வாக்கியங்களில் ஒரே ஒரு வாக்கியம் மட்டும் சிங்கத்தின் பாணியில் எனக்குத் தோன்றுகிறது.
I have opened my eyes. It is what you have written: ஆங்கிலப் புலமை கொண்ட எங்கள் கல்லூரி முதல்வர் தங்கராஜ் அவர்களுக்கு இந்தச் சொற்றொடர் மிகவும் பிடித்துப் போனது. கூட்டம் முடிந்ததும் அதனைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.
ReplyDeleteThat means your Principal wasn't teaching English; may not be a Prof of English. But he had enough scholarship to fish out the artistry in English sentences, as you said. That is, being more than a Prof of English :-) So, your Principal, according to you, found the defective sentence as perfect and a great English skill and shared with you his joy. You are exposing him, not me.
Be that as it may, you are a prof of English in American College. Or, a prof of some other subject? Which is correct? If latter, all that I wrote is misplaced. Because if you were a Prof of English, you would have found the sentence faulty and mocked at your Principal and the writer for his audacity.
Nothing of the sort. So, I am confirmed you are not a Prof of English. Am I correct in my presumption? I am only worried if you were a Prof of English and applauded the defective speech. But the sentence is so simple that a Prof of English is not needed to call it defective. Hero-worship should not be stretched to defend the indefensible. That's all. Matter ends there.
About atheism. Anyone can descend on any blog as it is kept open. You presume only persons known you should; others keep off. If so, you should restrict your blog reading only to your select friends. If you are so apprehensive of unknown people reading and commenting, it is high time you threw an iron curtain around your blog. It appears you have a select coterie: such selections indicates fear of facing different views on the same subject.
Your atheism is not discussed here at all. Only your doubt that one day you will become a believer! I have explained that such doubts are commonly seen in confessed atheists as they descend into the evening of life. and they will be assaulted by Intimations of Mortality!
Why are you getting so annoyed with me? Have I used bad words? You can happily debate me with Professor . I like the confessed atheists. They are interesting tribe to deal with. Welcome me to your atheist blog posts? Can I enter there with your permission?
***Hello Varun!
ReplyDeleteI don't write to win or lose. It is not a boxing arena.***
You think only boxing arena involves "battling" and "winning" and "losing"? How about a tennis court or a soccer arena? I can go on argue like this. That's exactly what you are doing here. But unlike you I DO UNDERSTAND what you REALLY MEANT when you said what you said above. I wish you could do the same when interpreting the phrase "I dont lie" by JK. Why it is too hard for you to do the same?
Let me stop here! Thanks for the understanding.
***Why are you getting so annoyed with me? Have I used bad words? ***
ReplyDeleteI am not sure whether you are annoying. You dont need to use bad words to annoy anybody. You can also phrase a "beautiful annoying sentence" to annoy someone.
***You can happily debate me with Professor . I like the confessed atheists. They are interesting tribe to deal with. Welcome me to your atheist blog posts? Can I enter there with your permission? ***
I am NOT sure the above quoted sentences fall in such category. But the "creators" of such sentences are ignorant about this, unfortunately! It is very hard to make them understand. It is a FACT!
//I have opened my eyes.//
ReplyDeleteஅப்பாடா .... after such a long and tiring fight...!
some are blind always ... never realising a sharp retort and harping on their own way of understanding....
wonder can't anybody say that he is not a liar! what a puritan soul i have to defend a plain and simple statement like this.
// All these will appear silly to laypersons like you. It's not your territory.// mr.When it is high time, you are really so humble and polite! a lovely language ....
Hellow Varun!
ReplyDeleteYou could have stopped accepting this: IF ANY ONE SAYS HE NEVER LIES, HE IS A PUKKA LIAR.
Do you accept that or not?
Respected Prof,!
ReplyDeleteYou are dodging inconvenient points of mine!
My point is: If anyone says he never tells lies, he is a pukka liar. JK made the statement in your college which you heard according to your blog post.
You have to face that point. Still, you haven't. False prestige?
I disagree with your point in your
//wonder can't anybody say that he is not a liar! what a puritan soul i have to defend a plain and simple statement like this. //
Read it again. You ask: Can't anybody say that he is not a liar?
My answer is: He can't say he is not a liar only only when confronted in particular context, not as a permanent personal quality. For e.g. I can say I am not a liar only when asked whether I have done or spoken a particular act.
So, your way of putting it should have been: Can't anybody say he is not a liar when asked to own up to an act? i.e. a specific occasion is referred to here.
Therefore, we must guard against ambiguities in English. Because such ambiguities may mislead or land us in embarrassments. If we are haughty or cowardly like that writer, we defend our English as that writer did it in your presence.
I should offer unsolicited advice only to people or persons like Varun. But how can I to you, a Prof of English in American College for decades? If you weren't a retired prof of English from that august college, kindly tell me in time so that I needn't continue to labor under that illusion.
Have a good night sleep ! Let Truth set us both of us free :-)
- Bala Sundara Vinayagam
My name is not Mr When it is High time, it is as signed off under my messages.
ReplyDeleteThink once to denounce; but twice to praise//
This is what my unknown English professors taught me in our VOC College of Tuticorin- a college which cannot stand in comparison to the flamboyant American College of Madurai. Our professors helped us to think out of the box. .
I follow this principle, not twice but many times to praise.
With this, my comments are closed here.
//Think once to denounce; but twice to praise//
ReplyDeletelet me keep praising you, Mr When it is High time!
// If anyone says he never tells lies, he is a pukka liar. //
Dear mr puritan it may be so for an agmark puritan like you. In normal parlance, it is just a statement that he is always for talking truth and not a double-tounged guy. But for a PURITAN like you he has to be just another Hrishchandra! I was talking about normal human beings like me and JK.
//kindly tell me in time so that I needn't continue to labor under that illusion.//
Better be with your illusions.
Your professors were really great. They have made you what you are – out of the box!
//With this, my comments are closed here. //
அப்பாடா …. மிக்க நன்றி
It is my time when it is high time:) J.K quote sounds to be better than your lo(n)g vocubulary. Tamil nivelist like J.K and Sujatha did contribute to Tamil reading english enthusists.
ReplyDeleteDharumi Sir pointed out nicely learning is a process wherever and whoever says.
***When it is high time said...
ReplyDeleteHellow Varun!
You could have stopped accepting this: IF ANY ONE SAYS HE NEVER LIES, HE IS A PUKKA LIAR.
Do you accept that or not?***
NOPE, I dont accept that. You dont seem to know what "a pukka liar" means. It is just your ignorance. I am not mad at you for being ignorant, I just feel sorry for you! That's all. Do take care!
இரண்டு எழுத்தாளர்களின் படைப்புகளையே நான் அதிகம் வாசித்திருக்கிறேன் . ஒருவர் சுஜாதா மற்றொருவர் ஜே.கே அவர்கள்.
ReplyDeleteபலவித அனுபவங்களை பகிர்ந்துள்ளீர்கள். ருசிகரமானவை! 80 களில் அமெரிக்கன் கல்லூரிக்கு அவர் வருகை தந்திருக்கிறார் . அவருடைய சிந்தனை செறிவு மிக்க பேச்சினை கேட்டிருக்கிறேன் . ஒரு வாரமாய் நடந்த விழாவில் மாலை நேரம் அவருடைய படைப்புகளில் வந்த திரைப்படங்களையும் பார்த்து ரசித்திருக்கிறேன் . யாருக்காக அழுதான் என்ற படம் பார்த்து நாகேஷின் நடிப்பில் கண் கலங்கியிருக்கிறேன் . எல்லா நினைவுகளும் இனிமையானவை.
வயது கூடும்போது ஆத்திகனாவது மரண பயத்தினால்தானே சார். சிந்தித்து, விவாதித்து, தர்க்க ரீதியாக நாத்திகம் என்ற இடத்தை வந்தடைந்தவர்கள் மட்டுமே இதில் விதிவிலக்காக இருக்க முடியும். பெரியார் தாசன் போன்றவர்களை என்னவென்று சொல்வது? அப்படியான நாத்திகம், ஆத்திகம் போல ஊட்டப்பட்ட, கடத்தப்பட்ட ஒன்றாக மட்டுமே இருக்க முடியும். அத்தனை காலமாக அவர் நாத்திகம் பேசியது அதை உணர்ந்து, புரிந்து கொண்டு அவர் அந்த இடத்திற்கு வந்ததனால் அல்ல என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இப்போதும் அப்படியான ‘சுயசிந்தனையற்ற’ நாத்திகர்களே பெரும்பான்மை. ஆத்திகர்களுக்கும் இவர்களுக்கும் எந்தவொரு வேறுபாடும் இல்லை.
ReplyDelete