Friday, June 12, 2015

842. நாங்களும் எங்கள் ’கனம்’ மாண்புகளும்






*
தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்


*



 ஒரு காலத்தில பொருளாதாரம் படிக்கணும்னு ஆசை ... முடியாம போச்சு. இப்போ அது பற்றி ஒண்ணும் தெரியாது. பட்ஜெட் வரும்போது அதைப் படிக்கிறது கூட கிடையாது - என்னத்த புரியப் போகுதுன்னு. அப்பல்லாம் ஒரு ஆச்சரியம் வரும் - ஒரு டீக்கடை நடத்துற ஆளு எப்படி நிதியமைச்சராக ஆகி, பட்ஜெட்டை வெளியிட்டு, அதைப் பத்தியும் பேசுறாரேன்னு ஆச்சரியப்பட்டு போயிருக்கிறேன்.  இதப் பத்திக் கேட்டா நண்பர்கள் எல்லோரும் ‘அதான் அதிகாரிகள் இருக்காங்கல்லா ... அவுக பாத்துக்குவாவல்லா’ அப்டின்னு சொல்லுவாங்க. இருந்தாலும் கொஞ்சமாவது சட்டியில இருக்கணுமேன்னு யோசிப்பேன்.

இது இப்படி போய்க்கிட்டு இருக்கிறப்போ .... நேத்து ஆ.வி.யில் அமைச்சர்கள் பற்றி ஒரு கட்டுரை இப்போ தொடர்ச்சியா வருதே ... அதப் பார்த்தேன்.  இந்தக் கட்டுரைகள் - பயங்கரமா இருக்கே... ஒவ்வொரு அமைச்சரின் ஜாதகம் எழுதியிருக்காங்க. போன வாரம் எங்க ஊரு அமைச்சர் பத்தி எழுதியிருந்தாங்க. எல்லாமே ஓப்பனா தான் எழுதியிருக்காங்க. மம்மி    ஜெயலலிதா இதையெல்லாம் வாசிப்பாங்களா ... மாட்டாங்களா ...?

எப்படி ஆளும் கட்சிக்கு எதிர்த்து இந்த மாதிரி ஓப்பனா எழுதுறாங்களேன்னு ஒரு ஆச்சரியம். இப்படி எழுதுறது பார்த்து ஒருத்தரும் ஒண்ணும் பண்ணலையேன்னும் ஒரு ஆச்சரியம்.

சரி ... அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இந்த வாரம் வந்த தகவல்கள்:

முக்கூர் என். சுப்ரமணியன்  -  தகவல் தொழில்நுட்பவியல் துறை.

ஐந்தாம் வகுப்பு பெயில்.
சின்ன வயதில் அப்பாவுக்கு உதவியாக வாத்து மேய்ச்சார்.
சைக்கிளில் கூடை வைத்து காய்கறி வியாபாரம்.
காய்கறி காண்ட்ராக்டர்
ஒன்றிய துணைச் செயலர்
செய்யாறு யூனியன் சேர்மன்
மாவட்டச் செயலாளர்

இப்போ.....

ஐ.டி. (தகவல் தொழில் நுட்பம்) துறை அமைச்சர்!!

என்ன வளர்ச்சி ... மனுஷனா பொறந்தா இந்த மாதிரி தான் வளரணும்!

அமைச்சர்களுக்கு ஒண்ணும் தெரிய தேவையில்லை. எல்லாமே அதிகாரிகள் பார்த்துக்கலாம்னா எதுக்கு அமைச்சர்கள் அப்டின்னு ஒரு கேள்வி வந்தது. ஒரு வேளை அமைச்சர்கள் எல்லோரும் வெறும் collection counters தானா?

டச் ஸ்கீரின் பயன்படுத்த இப்போது தான் தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சருக்கு அவரது மகன் சொல்லிக் கொடுத்தார் என்றால் இவருக்கு அதிகாரிகள் சொல்வது என்ன புரியும்?

நம் அரசாங்கமும், அமைச்சர்களும் இப்படித்தான் நடக்கிறதா? ஆச்சரியம் ஒரு பக்கம் என்றாலும் இது அக்கிரமாக இல்லையா? இது தான் மக்களாட்சியா? கேவலமாக இருக்கிறது. இப்படி ஒரு ஹை-டெக் துறைக்கு இப்படி ஒருத்தரை அமைச்சராகப் போடுவது ஆளும் கட்சிக்கும் கேவலமில்லையா?

**********


ஆர்.கே. புரத்தில் இருந்திருந்தால் ட்ராபிக் ராமசாமிக்கு வதக்குன்னு ஒரு ஓட்டு குத்தியிருப்பேன். ம்ம்...ம்....

இது மாதிரி மந்திரிகள் வேணும்னா யாருக்கு அல்லது எதுக்கு வேணும்னாலும் குத்துங்கப்பா ... குத்துங்க ....








 *

19 comments:

  1. hrd minister Smriti Irani b.com kuda mudikkalaiyaam engo padithathu. avunga ellam vanthu naattai kavichukkurathu nammalooda thalai ezuthu sir.

    ReplyDelete
  2. எம்ஜிஆர் ஆட்சியின்போது தினசரி அவர் வீட்டிற்கு மீன் சப்ளை செய்துவந்தவருக்கு சீட் தந்து அவர் எம்எல்ஏவாகவும் ஆனார் என்று செய்தி படித்திருக்கிறேன்.

    ReplyDelete
  3. மகேஷ்,
    ஸ்மிருதி இரானி என்ன படிச்சாங்களோ... ஆனா ஒரு தடவை வாட்சப்பில் ஒரு காணொளி பார்த்தேன். தெளிவா, செறிவா நல்லா பேசினாங்க. யாருன்னு தெரியாமலேயே ரசித்தேன் அவர்களது பேச்சை.

    அட நீங்க சொன்னதை வாசிக்கும் போது பத்தாம் கிளாஸ் பரிட்சையில் பிட் அடிச்ச கல்வி மந்திரி நினைவுக்கு வந்துட்டு போனார். புதுச்சேரி கேசு....

    ReplyDelete
  4. விசுவாசம், துதி பாடல் , சட்டசபை சலசலப்பு, தேவைப்பட்டால் கைகலப்பு, சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்குதல், குண்டராய் கொடி பிடித்தல் , அடுத்தவனை போட்டுக் கொடுத்தல், கொள்ளையில் பங்கு கொடுத்தல் போன்ற தகுதிகள் உங்களுக்கும் எனக்கும் இருந்தால் நாமும் பத்து வருடத்தில் அமைச்சர் ஆகலாம். வீணாய்ப் போன படிப்பைப் படித்துத் தொலைத்து விட்டோமே ! கழுதைக்கு குட்டிச் சுவர் போல நமக்கு இப்படி எழுதத்தானே தெரியும். அடுத்த வருடமும் ஓட்டுப் போட்டு இவர்களை ஜெயிக்க வைப்போமா!?

    ReplyDelete
  5. நதிமூலம், ரிஷிமூலம் போல இவர்களின் மூலங்களைப் பார்ப்பதைத் தவிர்க்கலாம் என நினைக்கிறேன். ஏனென்றால் நினைத்தே பார்க்கமுடியாத அளவு அந்த மூலங்கள் இருக்கும்.

    ReplyDelete
  6. Amudhavan ,
    //மீன் சப்ளை செய்துவந்தவருக்கு சீட் தந்து அவர் எம்எல்ஏவாகவும் ஆனார் //

    நல்ல வேளை அதோடு நிறுத்திக் கொண்டாரே ... மீன் வளத்துறை அமைச்சராக்கியிருக்கலாம்...!

    ReplyDelete
  7. //அடுத்த வருடமும் ஓட்டுப் போட்டு இவர்களை ஜெயிக்க வைப்போமா!?//

    வேற வழி. நாமில்லையேல் யார் இருக்கிறார்கள் உங்களுக்கு என்றல்லவா கேட்கிறார்கள் நம் அரசியல் வியாதிகள்.

    ReplyDelete
  8. Dr B Jambulingam
    //.... பார்க்கமுடியாத அளவு அந்த மூலங்கள் ..//

    சுத்தமா நாறுது ...போங்க.

    ReplyDelete
  9. உழைப்பால் உயர்ந்த உத்தமர்கள்!!! சட்டம் படிச்சுட்டு அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம் நீதி நேர்மையாகவே நடக்கறதா நினைப்போ? படிப்பு வேற அறிவு வேறே

    ReplyDelete
  10. சார், கொலவெறியில இருப்பிங்க போல !

    ReplyDelete
  11. படித்த்தினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு.

    ReplyDelete
  12. படுகேவலமாக இருக்கிறது! துதிபாடிகள் எல்லோருக்கும் அமைச்சர் பதவி என்பது தமிழக அரசின் முடிவு போல! என்ன செய்வது மாற்றி யோசிக்க கூட நம்மிடம் தரமான அரசியல்வாதிகள் இல்லையே!

    ReplyDelete
  13. டீச்சர்,
    //படிப்//பு வேற அறிவு வேறே//

    நானென்ன காமராஜரையும், கலைஞரையும் படிப்பறிவில்லாத ஆட்கள் என்றா சொன்னேன்!

    எப்படி ... காய்கறி வித்தே உயர்ந்திரலாம்னு சொல்றீகளா?

    ReplyDelete
  14. வரவனையான்

    உங்க ஆவி தொடர் கட்டுரைகளை வாசிச்சா அப்படித்தான் ஆகுதுங்க ....

    ReplyDelete
  15. ‘தளிர்’ சுரேஷ் ,
    //துதிபாடிகள் எல்லோருக்கும் ...//

    இப்படி கால்ல விழ வைக்கிறது அந்த முதலமைச்சருக்கே அசிங்கமா தெரியாதான்னு தோணுது.

    ReplyDelete
  16. இந்த கேவல அசிங்கங்களை தவிர யாருக்கும் ஓட்டுப் போடலாம்.

    ReplyDelete
  17. வேகநரி,
    ஆனா 60 விழுக்காடு விழுந்து கும்புடறவுங்களுக்குத் தானாமே !?

    ReplyDelete
  18. எல்லா கட்சிலயும் இதான் நிலமை. தி.மு.கவுக்கு ஓட்டுப்போட்டா மட்டும் படிச்சவங்களா வரப்போறாங்க. அதே படிக்காத மொள்ளமாரிப் பயலுகதான்.இன்னிக்கு அரசியல்ல இதான் தகுதி. காமராஜர்லாம் விதிவிலக்கு. (அவரோட கலைஞரை ஒப்பிட்டது!!!!) படிக்காத மேதையெல்லாம் இப்போ ப்ரொடக்‌ஷன்லயே இல்ல.

    ReplyDelete
  19. எனக்கு ஒரு எண்ணம் ஸ்ரீ … நான் யாரை வேணும்னாலும் என்னவாகவும் ஆக்குவேன். யார்ரா கேப்பீங்கன்னு அந்தப் பெண் கேட்பது போல்தான் இதெல்லாம் தெரிகிறது. I sincerely feel that this is the heap of insult thrown on us by our ex CM!

    ReplyDelete