*
ஏறத்தாழ நாற்பது
ஆண்டுகளுக்கு முன்பு … புத்தகங்கள் வாசிப்பது மிக முக்கியமாக இருந்த போது வாசித்த ஒரு
கதை. ஹிட்லருக்கு ஒரு டூப்ளிகேட் தயாரிக்க பல சிறு பையன்களைத் தேர்ந்தெடுத்து ஹிட்லருக்கு
சிறு வ்யத்இல் இருந்த சூழலைக் கொடுத்து ……. ஹிட்லரின் ரத்தத்தை எடுத்து அதை ஜுராசிக்
பார்க் கதை போல் அதை வைத்து இன்னொரு ஹிட்லரைக் கொண்டு வரலாமாவென யோசித்து …. இப்படி
சில கதைகள் வாசித்த நினைவு.
அதெல்லாம் கதை
தானே என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது நேற்று ஆங்கில வலைப்பூ ஒன்றில், Ram Puniyan என்ற சமூக ஆர்வலர் எழுதிய பதிவு ஒன்றை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்த போது அதிர்ந்து போனேன்.
அவர் எழுதிய கட்டுரையில் எனக்கு அதிர்ச்சியாக இருந்த பகுதிகளை மட்டும் தமிழில் மொழிபெயர்த்து அளித்துள்ளேன்.
மனதை தைரியமாக்கிக்
கொண்டு வாசியுங்கள்.
RSS Controlled Garbh Vigyan Sanskar in pursuit for “Master
Race”
ஆர்.எஸ்.எஸ். தத்துவங்கள் பல ஜெர்மனியின் பாசிச முறையினால் முன்னெடுக்கப்பட்டவை. … ஆர்ய உயர்வு அதில் மிக முக்கியமானது. .. நாசிகள் “Lebensborn”
(“Spring of Life”) என்றொரு திட்டத்தை முயற்சித்தனர். நார்வேயில் 12,000 குழந்தைகளைத் தத்தெடுத்து, Himmler தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ”தூய ரத்தமுடைய’ பெண்களின் மூலம் ”சிவந்த, உயரமான” குழந்தைகளை உருவாக்கும் திட்டம் அது. ஆய்வாளர்கள் எதிர்பார்த்தது போன்று குழந்தைகள் உருவாகவில்லை. திட்டம் தோல்வியடைந்தது.
“நாம் கருப்பு தோல் கொண்டவர்களோடு வாழ்ந்து
கொண்டு இருக்கிறோம்” என்று தருண் விஜய் போன்றவர்களைச் சொல்ல வைத்த பெரும் தத்துவம்
இது.
உயர்ந்த “இனம்”
உண்டாக வேண்டும் என்ற கருத்தோடு ஆர்.எஸ்.எஸ். கொள்கையாளர் சொன்ன ‘அழகான’ கருத்து
இது:
நம் முன்னோர்கள் செய்த பல முயற்சிகளைக்
காண்போம். நல்ல மனிதர்களை உருவாக்க நம்பூதிரி ப்ராமணர்கள் வடக்கிலிருந்து தெற்கில்
கேரளாவில் குடியமர்த்தப்பட்டனர். ஒரு விதி
செய்தார்கள் – ஒவ்வொரு பெண்ணின் முதல் குழந்தையும் நம்பூதிரி ஒருவர் மூலம் பிறக்க வேண்டும்.
அதன் பின் அவர்கள் தங்கள் கணவன்மார்களோடு குழ்ந்தைகள் பெற்றுக் கொள்ளலாம். (RSS
journal Organiser, 2nd January 1962)
ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆரோக்கிய பாரத் (சுகாதார அமைப்பு) என்ற அமைப்பின் கீழ் உள்ள கருப்பை அறிவியல் துறை
(Garbh Vigyan Sanskar - Uterus Science
Culture) தங்கள் “ஆய்வுகள்” மூலம் ‘உத்தம சந்ததி’ (Uttam santati - Best Progeny) பெருவதற்கு
நம் பண்டைய ஆயுர்வேத அறிவியல் மூலம் பல
முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இத்திட்டத்தின்படி நடப்போர் நிச்சயமாக சிகப்பான, உயரமான
(பெற்றோர்கள் எப்படியிருந்தாலும்!! sic!) குழந்தைகளைப் பெற முடியும் என்று தீர்மானமாகச்
சொல்கின்றனர்.
இத்திட்டத்தை
ஆரம்பித்தவர் இது முதலில் குஜராத்தில் ஆரம்பிக்கப்பட்டது என்றும், 450 குழந்தைகள்
இது போல் பிறப்பிக்கப்பட்டன என்றும், 2020க்குள் இன்னும் பல மாநிலங்களுக்கு
இத்திட்டத்தைப் பரப்பப் போவதாகவும் சொல்லியுள்ளார்.
GET
READY … SET … GO ………….
|
|
*
இம்மாதிரி எழுதுவதெல்லாம் உண்மையா ஐயா
ReplyDelete