Monday, November 27, 2017

956. BIBLE STUDY - பழைய ஏற்பாடு ... ... 4







*


ஆபிரஹாம்/இப்ராஹீம்: 

யூதம், கிறித்துவம், இஸ்லாம் என்ற மூன்று 'ஒரே கடவுள்' மதங்களுக்கும் இவரே ஆரம்பம். பிதா மகன்.

அப்படிப்பட்டவர் எப்படி மனிதர்களுக்கு ஒரு முன்னோடியாக இருக்க வேண்டும். ஆனால் அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா?

பஞ்சம் பிழைக்க தன் மனைவி சாராவுடன் எகிப்துக்குச் செல்கிறார். அங்கே உள்ளவர்களின் கண்கள் தன் மனைவி மேல் பட்டுவிடுமே என்றெண்ணி அவளைத் தன் சகோதரி என்று சொல்லிக் கூட்டிப் போகிறார். அங்கே ராஜாவின் கண்ணில் பட, அவர் சாராவைத் தன் அந்தப்புரத்தில் சேர்த்துக் கொள்கிறார். ஆபிரஹாமும் எக்கச்சக்கமான பணக்காரராக ஆகிவிடுகிறார்.

இதைப் பார்த்த கடவுளுக்குக் கோபம் வந்துவிடுகிறது -ஆனால் மன்னன் மேல் மட்டும்தான்; ஆபிரஹாமின் மேல் அல்ல! அந்தக் கோபத்தில் மன்னனின் குடும்பத்தின் மீது ப்ளேக் நோயைப் பரப்பி விடுகிறார் கடவுள். 
மன்னனுக்கும் சாரா யார் என்பது தெரிந்து விடுகிறது. ஆபிரஹாமையும் சாராவையும் எகிப்தை விட்டே விரட்டி விடுகிறார். (தொடக்க நூல் 12: 18-19) 


ஆப்ரஹாம் இதோடு விடுவாரா என்ன? அடுத்த நாட்டுக்கு செல்கிறார். அங்கும் கெரார் மன்னனாகிய அபிமேலக்கு என்பவரிடம் ஆபிரஹாம் தன் பழைய கதையை மீண்டும் எடுத்து   விடுகிறார். மன்னன் அவளைச் சேர்த்துக் கொள்கிறான்.

கடவுள் மறுபடியும் வருகிறார். ஆபிரஹாமை ஒன்றும் சொல்லாமல் நேரே மன்னனிடம் வருகிறார்.  அவள் ஆபிரஹாமிற்கு வாக்குப் பட்டவள் என்கிறார். அவளை இதுவரை தொடாதிருந்த மன்னன் அவளை அனுப்பி வைக்கின்றான். கடவுள் அவனின் கனவில் வந்து, “உடனே அந்தப் பெண்ணை அவளின் கணவனிடம் அனுப்பி விடு; ஏனெனில் அவனொரு இறை வாக்கினன். (தூதுவர்). அவன் உனக்காக மன்றாடினால் நீ பிழைப்பாய். அவனை நீ அனுப்பாவிடில் நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் செத்து மடிவீர்கள் என்பது உறுதி என்றார்.  (தொடக்க நூல்: 20: 2-5)  மேலும், “ஆபிரகாமின் மனைவி சாராவை முன்னிட்டு ஆண்டவர் அபிமெலக்கு வீட்டிலிருந்த பெண்களை மலடியாக்கியிருந்தார். (தொடக்க நூல் 20:18)

இங்கும் தவறு செய்த இறைவாக்கினன் மீது கடவுளுக்குக் கோபம் வரவில்லை. ஆனால் அறியாமையில் இருந்த மன்னன் மீதும் அவ்வீட்டுப் பெண்கள் மீதும் தான் கடவுளுக்குக் கோபம்!

(கடவுள் யாரை இப்போது தண்டிக்க வேண்டும்? தனது இறைவாக்கினனான / தூதுவரான ஆபிரஹாமை அவர் அறிவுறுத்த வேண்டும். தண்டிக்கவும் வேண்டும்.  ஆனால் அவர் “விஷயம் தெரியாத”  மன்னன் மீதும், அவன் குடும்பத்தின் மீதும் கோபம் கொள்கிறார்.  அதுவும் தவறு செய்த இறைவாக்கினன் வேண்டினால் தான்  நீ பிழைப்பாய் என்கிறார். :( 

என்ன நீதி இது? இந்தக் கடவுள் தான் நம்  இறப்பிற்குப்பின் நமது பாவ புண்ணியங்களைப் பார்த்து நமக்கான நீதி கொடுப்பார் என்று மதம் சொல்கிறது. இப்படிப்பட்ட கடவுளிடமிருந்து நமக்கு என்ன நீதியோ??!!)

(இந்தக் கதையை எல்லாம் படித்துவிட்டு எப்படித்தான் தங்கள் பிள்ளைகளுக்கு மக்கள் ஆபிரஹாம்/இப்றாஹீம், சாரா போன்ற பெயர்களை வைக்கிறார்களோ?!)





 * *

11 comments:

  1. எல்லாம் கேள்விப்படாத கதைகளாய் இருக்கின்றன வே

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. பலருக்கும் நம் மதங்களில் என்னவெல்லாம் இருக்கின்றன என்று தெரிந்தா கடவுள் நம்பிக்கைகளோடு இருக்கிறார்கள்? இதைத்தான் Ignorance is bliss சொல்லி விடுகிறார்களோ? தெரிந்தால் தானே குழப்பம் வரும். கண்ணை மூடி பால் குடிப்பதே மேல்!!!

    ReplyDelete
  4. மக்களை தங்களின் கீழ் கொண்டுவருவதற்காக மதங்கள் கதைகளை எழுதும் போதும் கூட நீதி பாவ புண்ணியங்கள் கணக்கில் எடுக்காமல் தான் எழுதிதள்ளியுள்ளார்கள்.
    //தெரிந்தால் தானே குழப்பம் வரும். கண்ணை மூடி பால் குடிப்பதே மேல்!!!//
    அருமையா சொன்னீர்கள் அதே தான்.
    இந்த கதைகளை அவர்கள் நம்பவில்லை. ஆனால் இந்த கதைகளை கண்ணை மூடி கொண்டு நம்புவது மாதிரி நடித்தால் மட்டுமே, அன்பின் மறு பெயரான கடவுள் தங்கள் மீது இரக்கம் செய்வார். உனது குடும்பத்தையே தூக்கிடுவேன் என்று தமிழ்பட வில்லன்கள் மாதிரி மிரட்டாமல் பாதுகாப்பாக வாழ அனுமதிப்பார்,இறந்த பின்பும் சொர்க்கத்திற்கு செல்லலாம் என்று பல மக்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
    --------------------------
    நரகாசுரன் மத கற்பனை கதையை நம்பிக்கை கொண்டு,மாவீரன் நரகாசுரன் ஒரு வீர தமிழன் என்று பெருமைபடும் அளவுக்கு ஒரு முன்னேற்றம் இங்கே உள்ளது.

    ReplyDelete
  5. Idhu oru karbanai kadhai.Islamil yenda adaramum illai

    ReplyDelete
  6. mohamed ibrahim, மேற்கோள்களோடு எழுதியுள்ளேன். கற்பனைகளைப் பிரித்தெடுத்து சொல்லுங்களேன்.

    ReplyDelete
  7. அருமை பேராசிரியர் அய்யாவுக்கு வணக்கம்,

    ஆப்ரஹாம் தன் மனைவியை சகோதரி என்று சொன்னார் ஆனால் அது பொய் அல்ல மெய்தான், அதை அதே வேதபகுதியில் காணலாம். அது மட்டுமல்ல அவர் ஏன் அவ்வாறு கூறினார் என்ற தன் தரப்பு நியாயத்தை முன் வைக்கிறார். கடவுள் என்றும் நீதியுள்ளவரே. அவர் நீதியுள்ள நியாயாதிபதி.

    10 பின்னும் அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: என்னத்தைக் கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய் என்றான்.
    ஆதியாகமம் 20:10

    11 அதற்கு ஆபிரகாம்: இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும், என் மனைவியினிமித்தம் என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன்.
    ஆதியாகமம் 20:11

    12 அவள் என் சகோதரி என்பது மெய்தான். அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல. அவள் எனக்கு மனைவியானாள்.
    ஆதியாகமம் 20:12

    இந்த வசனங்களை பேருமையாய், நிதானமாக சிந்தித்து பார்க்க அன்புடன் பணிவுடன் கேட்கிறேன்.

    நன்றி..!

    ReplyDelete
  8. சரி… சகோதரி மனைவியாகிறாள். ஆனால் ஏன் சகோதரி என்று சொன்னார்?
    “என் மனைவியினிமித்தம் என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன். ஆதியாகமம் 20:11 // ஆக தன் உயிருக்குப் பயந்து மனைவி என்று அரசனிடம் சொல்லிவிட்டார், அவனும் அவள் சாதாரண மணமாகாத பெண்ணென்று நினைத்து அவளைக் கவர்ந்து கொள்கிறான். இப்போது கடவுளுக்கு யார் மீது கோபம் வரவேண்டும்?
    பாவம் .. மன்னன் என்ன செய்வான்? பொய் சொல்லித் தப்பிக்கப்பார்த்த ஆபிரஹாம் மேல் அல்லவா கோபப் பட வேண்டும். ஆனால் நீங்கள் சொல்லும், “ நீதியுள்ள நியாயாதிபதி” அரசன் மேல் கோபம் கொண்டு கூண்டோடு சபிக்கிறார்.
    இதில் நீதி எங்கே?
    சிந்திக்காமலா இந்தக் கேள்விகளை எழுப்புகிறேன். சிந்திப்பதால் மட்டுமே இந்தக் கேள்விகள். விசுவாசிகள் கடவுளின் வார்த்தை என்று கண்ணை மூடிக்கொண்டு நம்புவது போல் கேள்வி இல்லாமல் நானும் நம்ப வேண்டுமா என்ன?
    எனது கேள்விகளுக்கு நேரான பதில் தந்தால் விவாதிக்க முடியும். சாம்பிராணி போடுவது போல் வேறென்னனவோ பேசினால் எங்கும் போக முடியாதில்லையா?

    ReplyDelete
  9. இங்கு என் கருத்தெ அவர் போய் சொல்லவில்லை என்பதே ஆகும். சாராள் தன் மனைவி என்பதை மறைக்கிறார் ஆப்ரஹாம். அப்பொழுது அரசன் ஏன் பொய் சொன்னாய் என்று ஆப்ரஹாமிடம் கோட்கிறர். அப்போது ஆப்ரஹாம் தான் போய் சொல்லவ

    ReplyDelete
  10. தான் போய் சொல்லவில்லை தான் சொன்னது உன்மை என்று சுட்டிக்காட்டவே ஆபிரகாம்

    12 அவள் என் சகோதரி என்பது மெய்தான். அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல. அவள் எனக்கு மனைவியானாள்.
    ஆதியாகமம் 20:12

    என்று கூறியுள்ளார். நீங்கள் வாதம் பன்ன முயற்சி செய்யாமல் நியாயத்தை உணர முயற்சியுங்கள்.

    ReplyDelete
  11. ஓ! அப்படியானால் ஆபிரஹாம் தன் சகோதரி என்று சொல்லித் தன் உயிரைக்காத்துக் கொண்டு, அரசன் அபகரிப்பைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்தது (கடவுள் தான் பாவம் ... சாராவைப் பற்றி கடவுள் தான் கவலைப்பட்டிருக்கிறார்!) மிகச் சரியான மனித தர்மம் என்கிறாய். இல்லையா?

    //நியாயத்தை உணர முயற்சியுங்கள்// என் கேள்வி தவறு செய்தது உயிருக்குப் பயந்த ஆபிரஹாம்; மன்னன் அல்ல. ஆனால் கடவுளுக்கு ஏன் அரசன் மீது அத்தனை கோபம்? என் இத்தனை சாபம்?

    ReplyDelete