இந்து மதக் கடவுள்கள் கையில் பயங்கர ஆயுதங்களை வைத்திருப்பது
பற்றி மற்ற மதக்காரர்கள் கேலி செய்வதோ, கேள்வி கேட்பதோ வழக்கமான ஒரு விஷயம் தான். இந்துக்
கடவுள்கள் கைகளில் வித விதமான ஆயுதங்கள் வைத்துப் பயமுறுத்துகிறார்களே என்றால், ஆபிரஹாமியக்
கடவுள் அவர்களின் வேதப் புத்தகங்களில் மிகவும் பயங்கரமான வார்த்தைகளோடும், கட்டுப்பாடுகளுடனும்
அச்சத்தைக் கரைத்து நெஞ்சில் ஊற்றும் பயங்கரத்தைச் செய்கிறது.
”நான் உன் கடவுள் … என்னை வணங்கு” -- என்று சொன்னால்
பரவாயில்லை. ஆனால் ஆபிரஹாமிய கடவுள் (இனி, ஆபி.கடவுள் என்றழைக்கிறேன்.) மனித குலம்
அத்தனையையும் “முழுக் குத்தகை” எடுத்தது போல், வேறு தெய்வங்களை நீ நினைத்தாலே உன்னை
உருக்கொலைத்து விடுவேன் என்கிறது. அதற்காக ஆபி.கடவுள் கொடுக்கும் தண்டனைகள் அந்தக்
கடவுளை ஈவு இரக்கமில்லாத ஒன்றாகத்தான் காட்டுகிறது. முழுவதுமாக மனித குலத்தைத் தன்னிடம்
அடக்கிக் கொண்டு வேறு கடவுளைக் கும்பிட்டால் ஒழித்து விடுவேன் என்கிறது.
இணைச்சட்டம் 8:19 உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து, வேற்றுத் தெய்வங்களைப்
பின்பற்றி, அவைகளைப் பணிந்து வணங்கினால், நீங்கள் அழிந்து போவீர்கள் என்று இன்றே உங்களுக்கு
எச்சரிக்கை விடுக்கிறேன்.
இணைச்சட்டம்
5:7-9 என்னைத் தவிர வேறு கடவுள் உனக்கு இருத்தல்
ஆகாது. … எந்த உருவத்திலேனும் உனக்கென நீ சிலையைச் செய்யாதே. நானே உன் கடவுளாகிய ஆண்டவர்;
வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன்;
இணைச்சட்டம்
4 : 24 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அழிக்கும்
நெருப்புப் போன்றவர்; அவர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன்.
அதையும் தாண்டி தன்னை நம்புபவர்களுக்கு இன்னும் வேறு
பொறுப்புகளையும் ஆபி. கடவுள் நம்பிக்கையாளர்கள் மேல் ஏற்றி விடுகிறது. என்னை நம்பினால் மட்டும் பற்றாது; அதைவிட வேறு தெய்வங்களைக்
கும்பிடுபவர்களை இரக்கமின்றி கொன்று விடு; அந்தக் கடவுளின் சிலைகளை கூட விட்டு வைக்காது
அழித்து ஒழித்து விடு என்று முரட்டுத்தனமான சட்டம் போடுகிறது.
லேவியர் 24: 16 ஆண்டவரின் திருப்பெயரை இகழ்பவர் கொலை
செய்யப்படுவார்; சபையார் கல்லாலெறிவர். அன்னியரோ, நாட்டினரோ, யார் எனினும் திருப்பெயரை
இகழ்கிறவர் கொல்லப்படுவார்.
விடுதலைப் பயணம் 24 : 23 நீ அவர்களுடைய தேவர்களைப்பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும்,
அவர்கள் செய்கைகளின்படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம் பண்ணி, அவர்களுடைய சிலைகளை
உடைத்துப்போடுவாயாக.
எண்ணிக்கை 33:52 அத்தேசத்துக் குடிகளையெல்லாம்
உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, அவர்களுடைய எல்லாச் சிலைகளையும் வார்ப்பிக்கப்பட்ட
அவர்களுடைய எல்லா விக்கிரகங்களையும் அழித்து, அவர்கள் மேடைகளையெல்லாம் நிர்மூலமாக்கி,
53 தேசத்திலுள்ளவர்களைத் துரத்திவிட்டு,
அதிலே குடியிருக்கக்கடவீர்கள்;
|
|
|
இணைச்சட்டம்
7:5 …அவர்களின்
பலிபீடங்களை இடித்து, அவர்களின் சிலைத் தூண்களை உடைத்து, அவர்களின் அசேராக் கம்பங்களை
வெட்டி, அவர்களின் கைவினையான சிலைகளைத் தீயில் எரித்துவிடு. |
என்னைப் படைத்தாய்… என்னை வணங்குவது தான் சரி … இப்படி
ஒரு கடவுள் சொல்வதாக வைத்துக் கொள்வோம். ஆனால் அந்தக் கடவுளைத் தெரியாதவர்களோ, அறியாதவர்களோ
அவர்களைப் படைத்ததாக எண்ணும் வேறு ஒரு சாமியைக் கும்பிட்டு வரலாம். அதை அப்படியே எடுத்துக்
கொள்ள இந்த ஆபிரஹாமிய கடவுளுக்குப் பொறுக்கவில்லையே…. அப்படி கும்பிடுபவர்களை அழித்து
விடு … அவர்கள் கும்பிடும் கடவுள் சிலைகளை அடித்து நொறுக்கு உடைத்துப் போடு என்றால்
… என்ன கடவுளோ இது! சுத்த பயங்கரம் என்பதும், அயோக்கியத்தனமான கட்டளையாகவும் தான் இது
தெரிகிறது.
இப்படிப்பட்ட ஓர் ஈவு இரக்கமற்ற கடவுளைக் கும்பிடும் மனிதனிடம் அன்பையோ, ஒற்றுமையையோ,
அயலானோடு அணுக்கமாக அன்பாக இணைந்து செல்வதையோ எப்படி எதிர்பார்க்க முடியும்? இதனால் தான் நான் மத நல்லிணக்கம் என்பது முடியாத ஒன்று என்று சொல்லிக் கொண்டு வருகிறேன்.
ஆரம்பகாலத்தில் கிறித்துவர்கள் இருந்தது போல் இப்போது
இல்லை என்பது மகிழ்ச்சியே. ஆனாலும் ஆரம்ப காலத்தில் அவர்கள் நடத்திய சிலுவை யுத்தம்,
Spanish inquisition போன்ற பயங்கரங்கள் வரலாற்றுப் பக்கங்களில் ஆழமாகவே எழுதப்பட்டுள்ளன.
வரலாறு அவைகளை அழித்து விடாது. உலகம் உருண்டை என்று சொன்னாலே தண்டனை. அன்றிருந்தது போல் கிறித்துவ மதமே
ஒரே உண்மையான மதம் என்ற மமதை இன்னும் அம்மக்களிடம் இருந்தாலும் அதில் முன்பிருந்த வன்மம்
குறைந்து விட்டது.
எனது இளம் வயதில் நாங்கள் செய்த ஜெபங்களில் கிறித்துவர்களை மெய்
ஞானிகள் என்றும், மாற்று மதத்தினரை அஞ்ஞானிகள் என்று அழைத்த வழக்கம் இப்போது என் வாழ்நாளிலேயே
மறைந்து மாறி விட்டது. கடும் சட்டங்கள் பல நீர்த்துப் போய் விட்டன. எல்லோருக்கும் தெரிந்த ஒன்றை ஒரு சான்றாகத் தருகிறேன். என் சிறு வயதில் ‘குடும்பக் கட்டுப்பாடு’ என்ற சொல்லே ஒரு கெட்ட வார்த்தையாக கிறித்துவர்களால் நினைக்கப்பட்டது. இப்போது மதம் அதை அத்தனைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கவில்லை.
கத்தோலிக்கர் மத்தியில் ‘பாவமன்னிப்பு’ என்ற ஒரு சடங்கிற்கு என் சிறுவயதில் இருந்த முக்கியத்துவம் இப்போதில்லை. இந்த மாற்றங்கள் என் வாழ்நாளிலேயே நடந்தவைகள் தான். இப்படி சில ‘தீவிர விஷயங்கள் நீர்த்துப் போவதைப் பார்க்கும் போது எல்லோருக்குமே மகிழ்ச்சி. ஆனாலும் இது போன்ற சில விஷயங்கள் மாறினாலும் “எங்கள் மதமே ஒரே சரியான மதம்” என்ற உன்மத்தமான நினைப்பு கிறித்துவர்களின் மனதில் இன்னும் பொங்கி வழிந்து கொண்டேயிருப்பதில் எனக்கு வருத்தமே! அது மாறவே மாறாது ... ஏனெனில் அதைத்தானே அவர்கள் “புத்தகம்” சொல்கிறது!
ஆனால் கிறித்துவத்தில் நடந்த இந்த மாற்றங்கள் அதன் பங்காளி மதமான இஸ்லாமில் இன்னும் ஆரம்பிக்கக் கூட இல்லை என்பது ஒரு வேதனையான விஷயம். பழைய ஏற்பாட்டை பற்றி ஒவ்வொரு கிறித்துவரும் ஒவ்வொரு விதக் கருத்து சொல்வார்கள். அதனை முழுவதாக ஏற்றுக் கொள்ள பலர் தயங்குவார்கள். அதில் உள்ள வன்மமும், சில மட்டமான ரசனை உள்ள புராணக் கதைகளும் தான் இப்படிக் கை கழுவுவதற்கான காரணம். ஆனால் அதை தங்கள் வேத நூலாகவே இன்னும் வைத்திருக்க வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு இருக்கிறது. I think it is an unavoidable nuisance for the Christians.
பழைய ஏற்பாட்டின் வரலாறோ, அதனை எழுதியவர் யார், எப்போது அது எழுதப்பட்டது என்பது போன்ற கேள்விகளுக்கு இதுவரை பதிலேதும் கிடைக்கவில்லை. இப்போது கிறித்துவினால் கொடுக்கப்பட்ட புதிய ஏற்பாடு மட்டுமே நமக்கு அருளப்பட்ட முக்கியமான நூல் என்பார்கள்; ஆனால் பழைய ஏற்பாட்டையும் முழுவதுமாகப் புறக்கணிக்க முடியாத சிரமமும் உண்டு. பாவம் கிறித்துவ மக்கள்.
ஆனால் இஸ்லாமியருக்கு பழைய ஏற்பாட்டின் பல நிகழ்வுகள் அவர்களது குரானில் இடம் பெற்றிருக்கின்றன. அவர்களுக்கு புதிய, பழைய ஏற்பாடுகள் என்ற வித்தியாசம் ஏதுமில்லை. எல்லாமே குரானில் உள்ளவை. ஆகவே அனைத்தும் அவர்களுக்கு நம்பியாக வேண்டிய விஷயங்கள். அனைத்தையும் நம்பி, அதன் வழியே நடக்கிறோம் என்று சொல்லும் ISIS குழுவினரை அதனால் தான் மிதவாத இஸ்லாமியர்கள் கூட கண்டிக்க முடிவதில்லை. ISIS தரும் ஒரே பதில் – நாங்கள் குரானில் சொல்லப்பட்டதை “அப்படியே” நடத்திக் காண்பிக்கின்றோம் என்பது மட்டுமே.
பின் ஏன் புத்தரின் உருவங்களை அவர்கள் உடைக்காமல் விடுவார்கள். ஆபி. கடவுளின் கட்டளைகள் அல்லவா அவை??!!
***
ஒத்த கருத்துடையோர் “ஆமென்” போட்டு விடலாமே!
***