*
தாக்குதல் பற்றி சுவாமி அக்னிவேஷின் வார்த்தைகள்:
டோர்னாபைல் முகாமில் இளம் காலை நேரத்தில் வந்து சேர்ந்தபோது 100-150 எண்ணிக்கையில் ஒரு காட்டுக் கும்பல் எங்களை நோக்கி வந்தது. அவர்களை வழிநடத்தியது ஆதிவாசிகள் அல்லாத வேறு ஒரு முரட்டுக் கும்பல். நன்கு ஆகிருதி உள்ள தடியன்கள். சுத்தமான இந்தி மொழியில் கெட்டக் கெட்ட வார்த்தைகளைக் கத்திக்கொண்டு வந்தனர். காரில் இருந்த எங்கள் மூவரையும் கீழே இழுத்துத் தள்ளினர். ஓட்டுனர் மிகவும் அச்சுறுத்தப்பட்டார். கார் சக்கரங்களிலிருந்து காற்று முழுவதுமாகத் திறந்துவிடப்பட்டது. வெளியில் சொல்லமுடியாத அளவு துன்புறுத்தப்பட்டோம், கேவலப்படுத்தப்பட்டோம். தாறுமாறாக எங்களை அடித்துத் தள்ளி துன்புறுத்தினர். ஏறத்தாழ இக்கீழ்ச் செயல்கள் நாற்பது நிமிடங்களோ அதற்கு மேலோ தொடர்ந்து நடந்தன.
******
ஒரு பக்கம் சரணடைதலும் கைதும்நடந்துகொண்டிருந்தன. ஆனால், இன்னொரு பக்கம் பல என்கவுண்டர்களும் நடந்தேறின. இது 2015-16இல் உச்சமாக நடந்தேறியது. 2016ஆம் ஆண்டுமட்டும் முதல் மூன்று மாதங்களிலேயே காவல் துறை மிகவும் பெருமிதத்துடன் 55 நக்சலைட்டுகளைக் கொன்றொழித்ததாகஅறிவித்தது.
******
‘நம்பிக்கையற்ற முறையில்தான் இந்த அமைப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. காவல் துறைக்கு மக்கள் மேல் நம்பிக்கையில்லை; மக்களுக்கோ காவல் துறை மேல் நம்பிக்கையில்லை. அமைப்பு முழுவதுமே நம்பிக்கையின்மை என்ற அச்சில்தான் சுழன்று கொண்டிருக்கிறது.’
...சத்தீஸ்கரின் எஸ்பி,2015
*******
ஈவிரக்கமற்ற காவலதிகாரி ஒருவர் சொல்கிறார். ”மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தாக்குதல்கள்மூலம் அவர்களைக் கொண்டுவர வேண்டும் என்று என் மேலதிகாரிகள் விரும்பினால், நானும் நிறைய கொண்டுவருவேன்,பல சடலங்களை. சரியான திட்டத்தின்மூலம் நான் அவர்களை வேரறுப்பேன்”.
தி இந்து, 15.10.2015
*******
காலப்போக்கில் சல்வா ஜுதுமை முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. 2011இல் உச்ச நீதிமன்றம் சல்வா ஜுதும்மீது தடை விதித்தது.
*******
இன்னும் பத்தாண்டுகள் ஆகலாம். அலலது அதுவும் போதாமல் இருபதாண்டுகளும் கடந்து போகலாம். ஆனால், இறுதியில் பேச்சு வார்த்தைகளே கட்டாயத் தேவையாக இருக்கும்.
...ஒரு கான்ஸ்டபிள், 2015
...ஒரு கான்ஸ்டபிள், 2015
*******
சுகாதாரத்திற்கு இங்கு இடமே இல்லை
நாட்டிலேயே மிகவும் குறைந்த அளவு மருத்துவ உதவிகள் கிடைப்பது சத்தீஸ்கர் மாநிலத்தில்தான். 403 ஆரம்ப சுகாதார மையங்களுக்கு 170 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். மொத்தம் 84 சமூக சுகாதார மையங்கள் வனப் பகுதிகளில் உள்ளன. அவற்றில் நான்கே நான்கு அறுவை சிகிச்சை மருத்துவர்களும், ஒன்பதே ஒன்பது மருத்துவர்களும் மட்டுமே உள்ளனர்.18 பல சுகாதார நிலையங்கள் இருப்பது வெறும் காகிதங்களில் மட்டும்தான்.
********
மிகப் பெரும் பணக்காரர்கள் மட்டுமே பாராளுமன்றத்தில் உறுப்பினராக முடியும் என்பது எல்லோருக்கும் தெளிவு. ஏனெனில், தேர்தல் களம் அத்தனை விலை உயர்ந்தது! தேர்தலின் ஒவ்வொரு அசைவுக்கும் பணமே முக்கியம். காசு கொடுத்து வசதியான கேள்விகளை ஊடகம் கேட்கும்படிச் செய்யவேண்டும். சாராயம் பெருக்கெடுத்து ஓடவேண்டும். பணமும் மறைமுக அன்பளிப்புகளும் கொடுத்து தேர்தலுக்கு முந்தைய இரவுவரை அணை காத்து வரவேண்டும். பணமே கடவுள்.அது தூணிலும் இருக்கவேண்டும், துரும்பிலும் இருக்கவேண்டும். சத்தீஸ்கரில் பணத்துக்கு இன்னொரு உருவம் உண்டு.தேர்தலுக்கு ‘நன்கொடை’ தரும் புண்ணியாத்மாக்களுக்கு சுரங்கம் தோண்டும் ஒப்பந்தம் தரப்படும்.
*******
வரலாற்றின் சில பக்கங்களைப் புரட்டினால் 1984இல் ராஜிவ் காந்தி, 2002இல் நரேந்திர மோடி, 2010இல் மகேந்திர ராஜபக்ஷே போன்ற பல அரசியல் தலைவர்கள் பெரும் கலகங்களோ, போர்க் குற்றங்களோ, இன அழிப்புகளோ நடப்பதற்கான காரணகர்த்தாவாக இருந்தாலும், அந்தச் சோக நிகழ்வுகளுக்குப் பின் தேர்தலில் வெற்றிபெற்றுத் தங்கள் பதவிக்குத் திரும்பிவந்துள்ளனர்.
*
காரணகர்த்தாக்களே பதவிக்கு வருகின்றார்கள் என்றால் மக்களின் மறதியைக் கூறுவதா, அவர்களுக்கு இவர்கள் பரவாயில்லை என்று நினைப்பதாலா என்பது புரியவில்லை.
ReplyDeleteஎனக்கும் இது ஒரு புரிபடாத புதிர். நமது மறதி நம்மைக் குழி தோண்டிப் புதைக்கிறதென்று நினைக்கின்றேன்.
ReplyDelete