*
மாவோயிஸ்டுகளின் தினசரி வாழ்க்கை கடுமையானது. அதிலும் பெண்களுக்கு மிகவும் கடுமை. நீண்ட நெடும் நேரம் நடக்க வேண்டும். மாதவிடாய் காலமாகவும் அது இருக்கலாம். ஆனால் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு எல்லோருடனும் ஒத்துப்போக வேண்டும். மலேரியா காய்ச்சல் தாக்கும். ஒரே ஆடையைத் தொடர்ந்து பல நாட்களுக்கு அணிய வேண்டியிருக்கும். எப்போது பிடிபட்டாலும் மானத்துக்கு பாதுகாப்பு இல்லை.
******
.
அரசு உதவிகள் எந்த முறையில் வந்தாலும் ஊழலும் உடன் வந்துவிடுகிறது. மக்களுக்குள் இப்போது நிலவும் சமத்துவ நிலையும் மாறிவிடுகிறது. எனவே அரசின் உதவிகள் இல்லாமலேயே மக்கள் தங்கள் ஒட்டுமொத்த உழைப்பால் உயர்வது சிறப்பாக இருக்கும் என்பது மாவோயிஸ்டுளின் நம்பிக்கை.
******
2013இல் ஒரு குளிர்கால இரவு. கங்கர் காட்டின் உள்ளே ஒரு கிராமம். ஆண்களும் பெண்களும் கூடி அமர்ந்து, மாவோயிஸ்டுகளின் வருகையால் நமக்கு அதிகம் கிடைத்திருப்பது நன்மையா தீமையா என்று விவாதித்துக்கொண்டிருந்தார்கள். இப்பகுதியில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகமல்ல. அவர்கள் உள்நுழைந்து ஆறேழு ஆண்டுகள் மட்டும் ஆகியிருந்தன. கிராமக் கூட்டுறவுகள் அமைக்கப்பட்டு சிறப்பாக நடந்து வந்தன என்பது முதல் நல்ல விளைவு. கூலி உயர்வு அடுத்தது. இரண்டாவதாக, கிராமத்து மக்களிடையே சச்சரவுகள் மிகவும் குறைந்துவிட்டன. அப்படியே ஏதும் முளைத்தாலும் காசு, பணம் செலவின்றி அவை தீர்த்து வைக்கப்பட்டன. மூன்றாவது, வனத் துறை அவர்களைக் கஷ்டப்படுத்துவதில்லை.
அடுத்து, கெட்ட விளைவுகளின் பட்டியல். சாலை அமைப்பதில் பிரச்னை. மாவோயிஸ்டுகள் கிராமங்களுக்குள் சாலை அமைப்பதைத் தடுப்பதில்லை. ஆனால், கிராமங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்படுவதையும் முக்கிய சாலைகளோடு இணைப்பதையும் விரும்புவதுமில்லை; அனுமதிப்பதுமில்லை. இது போக்குவரத்தில் பெரும் தடங்கல். உடல் நலமற்றவர்களைக்கூட தூரத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்ல முடியாது. மாவோயிஸ்டுகள் இருப்பதால் அடிக்கடி காவல் துறையின் தொல்லை தரும் தேடல்களையும் இளைஞர்கள் கைது செய்யப்படுவதையும் சந்திக்கவேண்டும். தங்கள் பேச்சைக் கேட்காத மக்களை மாவோயிஸ்டுகள் அடித்துத் துன்புறுத்துவது அடுத்த பிரச்னை.
******
பிஸ்டாவின் அறிக்கை ஆச்சரியகரமாக வெகு வெளிப்படையாக இருந்தது.
‘ஒவ்வொரு நக்சலைட்டும் சீருடையில் ஆயுதங்களோடு, குழுக்களின் துணைகளோடு இருப்பார். ஆனால், நடைமுறையில் அவர் ஒரு இயக்குனர் போலவே தன் பணிகளைத் தொடர்கிறார். உண்மையான பலருடைய சக்தியும் சங்கத்து உறுப்பினர்களிடம்தான் பொதிந்துள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் சங்க உறுப்பினர்கள் வலுவோடு இருந்தனர். ஆகவே, நக்சல்பாரிகளை ஒடுக்க அவர்களை அழித்தால் மட்டும் போதாது. அவர்களால் ஒவ்வொரு கிராமத்திலும் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு நொறுக்கப்பட வேண்டும். இதில் இன்னொரு பார்வைக்கும் இடமுண்டு. ஒவ்வொரு சங்க உறுப்பினரும் மிகச் சாதாரண ஒரு கிராமவாசிபோல இருக்கிறார். மற்ற கிராமத்தினர் போல் அவரும் தினமும் வேலைக்குப் போய், சம்பாதித்து தன் குடும்பத்தை நடத்தும் சாதாரண மனிதர்தான். அவரிடம் சீருடை இல்லை. கையில் துப்பாக்கிகள் ஏதுமில்லை. நக்சலைட்டுகள் போலல்லாமல், எந்தவொரு கிராமத்துக்காரர் போலவே அவரும் உள்ளார். (பகுதி 4, பத்தி 13).
*********
யாரை வேண்டுமானாலும் வேட்டையாடலாம்
முதலில் ஜுதும், சங்க உறுப்பினர்கள்மீதுதான் கண் வைத்தது. அதுவும் அவர்களுக்குக் கட்டுப்பட்டு முகாம்களுக்கு வர மறுக்கும் அந்த மக்கள்மீதுதான் குறி வைத்தனர். ஆனால், எரித்தல், அளித்தல் என்று அவர்கள் எடுத்து வைத்த புதிய வழக்கங்கள் ஆரம்பித்தபின், கொல்வது என்பதே தானாகக் கனிந்துவிட்டது. நினைத்தவர்களை நினைத்த நேரத்தில் முடித்து விடுவது அவர்களுக்கு எளிதானது. சரியான நேரத்துக்குள் தப்பியோட முடியாத வயதானவர்களும் நோயாளிகளும் அவர்களிடம் மாட்டிக் கொண்டனர். பொதுவாக இந்த மக்கள் கொல்லப்பட்டனர் அல்லது எரிக்கப்பட்டனர். ‘எங்கும் கிடக்கும் வறுக்கப்பட்ட மீன்கள் மாதிரி கொல்லப்பட்ட உடம்புகள் கிடந்தன’ என்று ஒரு கிராமத்து மனிதர் சொன்னார்.
*******
*
No comments:
Post a Comment