Thursday, May 02, 2019

1044. ஒரு ”நடிகனின்” (!!) கதை .... 4





*


8.8.  https://dharumi.blogspot.com/2019/06/1058-6.html

*

இன்னொரு விஷயம் சொல்ல மறந்து விட்டேனே.  one-act-wonder ஒருவரைப் பற்றி சொல்லணும். ஆனால் அதற்கு முன் one-take-wonder என்பது பற்றி சொல்லி விடுகிறேன்.

நானும் வெங்கியும் எல்லா சீன்களிலும் ஒன்றாக வருவோம். படப்பிடிப்புக்கு முன்பு வழக்கமாக பல டேக்குகள் எடுப்பார்கள் என்று நாங்கள் இருவருமே நினைத்திருந்தோம். ஆனால் எங்கள் ஷாட் எல்லாமே இரண்டு அல்லது மூன்று தடவையோடு முடிந்தன. அந்த எக்ஸ்ட்ரா ஷாட்கள் கூட எங்கள் தவறு என்று சொல்வதை விட இன்னொரு ரீ-டேக் என்று தான் சொல்ல வேண்டும். எனக்கும் வெங்கிக்கும் பெருமை வழிந்தோடியது என்று வைத்துக் கொள்ளுங்களேன். எங்களுக்குள் பேசிக்கொண்டோம். ( நீங்களும் இதை வெளியே யாருக்கும் சொல்ல வேண்டாம்; சரியா?!) இப்படி ஒரே ஷாட்டில் ஓகே வாங்கி விட்டோமே .. ஒரு வேளை நாமிருவரும் one-take-wonder தான் என்று பேசிக்கொண்டு திருப்தியடைந்தோம்.



THE CREW 



ஆனால் இன்னொரு character.  அவர் பெயர் - அக்பர். நான் தான் புனைப்பெயர் வைத்துக் கொள்ள வேண்டுமா? அவரும் வைத்துக் கொள்ளலாம் இல்லையா? அவர் அவருக்கு வைத்துக் கொண்ட இன்னொரு பெயர் குரு. பொதுவாக படம் எடுக்கும் போது எங்களைப் போன்ற சிறு நடிகர்களை மானிட்டர் பக்கம் விடுவார்களோ என்னவோ. விடமாட்டார்கள் என்று யாரோ சொன்னார்கள். ஆனால் நான் மானிட்டர் முன்னால் ஒரு சீனுக்கு உட்கார்ந்திருந்தேன். இயக்குநருக்குப் பின்னால் ... வசதி செய்து கொடுக்கப்பட்ட நாற்காலியில் அருகில் அமர்ந்து பார்த்தேன்.

அரையிருட்டில் குரு தன் முதுகை காமிராவிற்குக் காட்டிக் கொண்டு அமர்ந்திருப்பார். action சொன்னதும் அவர் மெல்ல திரும்பி காமிரைவைப் பார்க்க வேண்டும். இது தான் அந்த ஷாட். ஏறத்தாழ அது ஒரு silhouette ஷாட். action சொல்லியாச்சு. குரு மெல்ல திரும்புகிறார். பாதி திரும்பும் போது அவரது profile silhouetteல் தெரிகிறது. அவரது நீண்ட  கூர்மையான பெர்ஷிய மூக்கு தெரிகிறது. ... இன்னும் மெல்ல திரும்புகிறார் ... கூரிய கண்கள் .. வெறித்து / முறைத்து காமிராவைப் பார்க்கிறார். அரை இருட்டுதான் .. அதுவும் silhouette ஷாட் தான். இருந்தும் அந்த அரை இருட்டிலும் அவரது கண்ணின் பார்வை மிகத் தெளிவாக, மிகக் கூர்மையாகத் தெரிந்தது.

அசந்து விட்டேன். அத்தனை அழகாக அவர் மூக்கும் கண்களும் பேசின. அந்த அரை இருட்டிலும் அத்தனை அழகாக DOP அருண் பத்மநாபன் கண்விழி தெரிய அழகாகப் படம் பிடித்திருந்தார். ஷாட் முடிந்ததும் கிருஷ்ணகுமாரிடம் அந்த ஷாட் பற்றி உயர்வாகப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் உடனே குருவை எங்களருகே கூப்பிட்டார். நெடிய ஒல்லி உருவம். அதற்குள் யாரோ இந்த ஒரு சீன் அவருக்கு ஒரு பெரிய ப்ரேக் கொடுக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதுவும் குருவின் காதிற்குள் போய் விட்டது. அத்தனை மகிழ்ச்சியாக என் பாராட்டுகளைப் பெற்றுக் கொண்டார். அதைவிட என்னோடுஒரு படம் எடுக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டார்.

அவருக்கு இன்னொரு சோகம், அவர் நீள முடி வைத்திருந்தாராம், இந்த சீனிற்காக அது குறைக்கப்பட்டது. வீட்டிற்குப் போனதும் என்ன சொல்லி சமாளிப்பது என்ற கவலையில் இருந்தார்.

வீட்டுக் கவலை அனைவருக்கும் பொது தானே...!



*



1 comment: