ஆங்கில அறிவு நமக்கு கொஞ்சம் குறைச்சலா .. அதனால் விளையாட்டுகளில்
வரும் நேர்முக வர்ணனைகள் ஆங்கிலத்தில் வரும்போது அரைகுறையாக மட்டுமே கேட்பதுண்டு. ஆனால்
உலகக் கால்பந்தாட்டத்தில் தமிழிலும் வர்ணனை என்றதும் ஆசையாகக் கேட்க ஆரம்பித்தேன்.
முதல் இரு நாட்களில் – அதாவது pre QF – கேட்டது சுத்தமாகப் பிடிக்கவில்லை.
யாரோ இரு க்ரிக்கெட் ஆட்களை உட்கார வைத்தது போலிருந்தது. ஏனெனில் அடிக்கடி அந்த விளையாட்டை
இந்த விளையாட்டில் பேசிக் கொண்டிருந்தனர்!!! நல்ல வேளையாக QF ஆட்டங்களில் வேறு இருவர் வந்தனர். அவர்களது வர்ணனை மிக நன்றாக இருந்த்து.
ஆட்டக்காரர்கள் எந்த க்ளப்பிற்காக ஆடியவர்கள், அவர்களின் திறமை என்ன என்பது போன்ற
செய்திகளோடு விறுவிறுப்பாகப் பேசினார்கள். பொருத்தமான நேரத்தில் பொருத்தமான செய்திகளோடு
பேசினார்கள்.
அந்த வர்ணனையாளர்களைப் “பிடிக்க” கூகுள் ஆண்டவரிடம்
கேட்டேன். அவர் சொன்னது இது தான்: Tamil viewers will be able to enjoy the voices of
former India player and notable commentator Raman Vijayan along with Nallapan
Mohanraj, Dharmaraj Ravanan, and Vijayakarthikeyan.
இவர்களில் யார் அந்த இருவர் என்பது நிச்சயமாகத் தெரியவில்லை.
அவர்கள் ஒரே ஒரு முறை தங்கள் பெயர் சொல்லும் போது நல்லப்பன் மோகன்ராஜ் என்ற பெயர்
நன்றாகக் காதில் விழுந்தது. இன்னொருவர் பெயர் சீனிவாசன் என்று கேட்டது போலிருந்தது.
ஆண்டவர் கொடுத்த பட்டியலில் அந்தப் பெயரைக் காணோம். ஆக,
இரண்டாவது ஆள் யாரென்று தெரியவில்லை. .(அது ஒருவேளை ராமன் விஜயனாக
இருக்குமோ?)
தெரிந்தவர்கள் உதவுங்களேன்... என்னைப் போன்ற ஆங்கில
அறிவிலிகளுக்கு அது மிகவும் உதவும் ....
No comments:
Post a Comment