Thursday, December 15, 2022

1207 FIFA '22 -- FIRST SEMIFINAL



*


செவ்வாய் இரவு முதல் அரையிறுதி ஆட்டம் வெகு சுறுசுறுப்பாக நடந்தது. அர்ஜென்டினாவின் மெஸ்ஸி ஆட்டத்தை மிக அழகிய ஒன்றாக மாற்றினார். எதிரணியினரான கொரோஷியாவின் ஆட்டதில் முந்திய ஆட்டங்களில் இல்லாத சோர்வு, அதுவும் தற்காப்பில் சிறிது பின் தங்கியிருந்தார்கள். அதனால அர்ஜென்டினா மிகவும் வேகமாக கொரோஷியா கோல் ப்குதியில் அடிக்கடி ஊடாட முடிந்தது. முதல் கோல் பெனல்ட்டியால் கிடைத்தது. சிரமுமின்றி மெஸ்ஸி அதை அடித்து வென்றார். இரண்டாவது கோல் 9 எண்ணுள்ள ஜூலியன் அல்வாரஸ் என்பவரிடம் பந்தை மெஸ்ஸி பாஸ் செய்தார். ஏறத்தாழ அர்ஜென்டினாவின் கோல் எல்லைக் கோட்டைத்தாண்டி கொடுத்தார். அங்கிகிருந்து அல்வாரஸ் தனியாகப் பந்தை வெகு வேகமாக கொரோஷியா கோலுக்கு எடுத்துச் சென்றார்.  அங்கே இரு தடுப்பாளர்களைத் தாண்டி, அதன் பின் கோல் கீப்பர் பந்தைத் தடுக்க, தடுத்தப்பட்ட பந்தை மீண்டும் கைப் பற்றி .. இல்லை .. இல்லை .. கால்பற்றி அதைக் கோலாக மாற்றினார். மரடோனா அடித்த கோல் நினைவுக்கு வந்தது. அவரும் தனியாக தன் கோல் பகுதியில் ஆரம்பித்து ஐந்தாறு ஆட்களைத் தாண்டி பந்தை எடுத்துச் சென்று கோல் அடித்தது நினைவுக்கு வந்தது.

முதல் பாதியிலேயே இரண்டு கோல் போட்டிருந்தாலும் ஆட்டம் தொடர்ந்து பதட்டத்தோடு ஆரம்பித்தது. ஏனெனில் இதே கொரோஷியா ப்ரேசிலை வென்றது அர்ஜென்டினாவை ஆதரிக்கும் மக்கள் மனதில் நிழலாட அந்த அச்சத்தோடு ஆட்டத்தைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அர்ஜென்டினா மூன்றாவது கோலையும் போட்டு ஆட்டத்தை வென்றது. வழக்கமாக கொரோஷியா இந்தப் போட்டியில் எக்ஸ்ட்றா நேரத்தில் ஆட்டத்தை இழுத்துச் சென்று வெற்றிகரமாக முடித்தது போலில்லாமல் ஆட்ட நேரத்திற்குள் போட்டி முடிவுக்கு வந்தது.

முதல் முறையாக உலகக் கோப்பை போட்டியில் ஒரு ஆப்ரிக்க-அரேபிய நாடாக அரையிறுதிக்கு க்ரோஷியா முன்னேறியுள்ளது. அடுத்த இரண்டாம் அரையிறுதியில் பிரான்ஸ் நாட்டோடு மோதுகிறது. உலகக் கால்பந்து ரசிகர்களில் பலருக்கும் பிரான்ஸ் சென்ற முறை கோப்பை வென்றது போல் இப்போதும் வெல்ல அதிக வாய்ப்பிருந்தும், இம்முறை ஒரு ஆப்ரிக்க நாடு வெல்லட்டுமே என்ற ஆசையில் உள்ளார்கள். பிரான்ஸ் நாட்டு Mbappe – இவர் பெயரை எப்படித் தமிழில் உச்சரிப்பது, எழுதுவது என்றே தெரியவில்லை!! – 5 கோல் போட்டு முன்னணியில் இருக்கிறார். அவர் தங்கக் காலணி பரிசைப் பெற வேண்டுமென ஒரு பக்கம் அவரது விசிறிகள் காத்திருக்கின்றனர். பார்ப்போம் .. இன்னும் சிறிது நேர்த்தில் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைத்து விடும்.

 








*

No comments:

Post a Comment