1946ல் அம்பேத்கர் “யாரிந்த சூத்திரர்கள்?” என்ற ஒரு கேள்வியை எழுப்பி, ஒரு புதிய பிரக்ஞ்யை சமுக வெளிக்குக் கொண்டு வந்தார்.
தாங்கள் யார்?; எங்கே இருக்கிறோம்?; என்னவாக இருக்கிறோம்? என்ற எந்த சுயமதிப்பீடும் இல்லாத “பாவப்பட்ட மக்களாக” இன்னும் இருப்பது தான் அவர்களின் இன்றைய பரிதாப நிலை.
அதிலிருந்து சில பகுதிகளை அவ்வப்போது இங்கு தர நினைத்துள்ளேன்.
**************
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கும் உள்ள கால இடைவெளியில் எழுந்த ஒரு சட்ட நூலான மனுஸ்மிருதி, பிராமணியக் கடுஞ்சட்டங்களைத் தூக்கிப்பிடிக்கும் நூலாக இருந்துள்ளது. அந்நூல் தொடர்ந்து உடலுழைப்பையும், ஆக்கப்பூர்வ உற்பத்தி வேலைகளையும் மிகவும் மட்டமானவைகளாகக் கற்பித்துள்ளது.
ஆனால் ‘இருமுறை பிறப்பு’ என்ற நம்பிக்கையோடு பூணூல் அணிந்து கொண்ட ‘த்விஜாஸ்’ என்ற இருமுறை பிறவியாளர்களான பிராமணர்கள் மந்திரங்களை உச்சாடனம் செய்வதைப் பெருமையோடு வியந்தோதுகிறது.
https://www.facebook.com/sam.george.946/posts/pfbid02gfBjLctuLkJrkegGioaaL2hLAjKbRQwCt9x2P2yTPVZmbkWjhgKvc3Lkgb6LwvQMl
No comments:
Post a Comment