சநாதனம்னா என்னாங்க ... 2
1946ல் அம்பேத்கர் “யாரிந்த
சூத்திரர்கள்?” என்ற ஒரு கேள்வியை எழுப்பி, ஒரு புதிய பிரக்ஞ்யை சமுக வெளிக்குக் கொண்டு வந்தார். தாங்கள் யார்?;
எங்கே இருக்கிறோம்?; என்னவாக இருக்கிறோம்?
என்ற எந்த சுயமதிப்பீடும் இல்லாத “பாவப்பட்ட மக்களாக” இன்னும்
இருப்பது தான் அவர்களின் இன்றைய பரிதாப நிலை.
இதைப் பற்றி விரிவாக எழுதப்பட்ட
நூலை தமிழில் மொழி பெயர்த்துள்ளேன். விரைவில் அச்சில் வரும் என்று
எதிர்பார்க்கிறேன்.
அதிலிருந்து
சில பகுதிகளை அவ்வப்போது இங்கு தர நினைத்துள்ளேன்.
இந்து
மதத்தில் பி.ஜே.பி.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பே வர்ணாஸ்ரமுமே
மேல் தட்டில் தான் இருந்து வந்தது. இந்த வர்ணாஸ்ரமக் கட்டுகளை உடைக்க - இந்தியாவில்
பெரும் எண்ணிக்கையில் இருக்கும் - சூத்திரர்களால் ஏதும் செய்ய முடியவில்லை. வர்ணாஸ்ரமத்தின்
தலைமையில் தான் இந்துக் கலாச்சாரம் இயங்கி வந்தது. அதுவே இந்தியக் கலாச்சாரமாகவே
மாறிக் கொண்டிருந்தது. சூத்திரர்கள் கைகளில் இந்து சமய தத்துவ நிலைப்பாடும், ஆன்மீக சக்தியும், சமத்துவ நிலையும் ஏறாவிடில் அவர்கள் எந்தக் காலத்திலும் அந்த மூவர்
கூட்டணிக்கு - பிராமணர் - பனியாக்கள், சத்திரியர் - சமமாகும்
வாய்ப்பே நிச்சயமாக வராது.
No comments:
Post a Comment