Carbon emission, global warming, nano effect … இப்படி அடுக்கடுக்காய் மனிதன் இயற்கையை எதிர்த்து செய்த பல செய்கைகளால் இப்படிப் பெரு மழை வந்தது. அதனால் பொங்கி வந்த வெள்ளம் ஆங்காங்கே குளம், குட்டை, கண்மாய் அப்டின்னு அங்கங்கே இருந்தவைகளில் கடலுக்குப் போகும் முன் கொஞ்சம் தஞ்சமடையும். ஆனால் அந்த நீர் நிலைகளை நிறப்பி மாற்றி விட்டோம் கான்க்ரீட் காடுகளாக. தங்குமிடம் காணாமல் போனதால் கண்போன பக்கம் வெள்ளம் ஊருக்குள் பெருக்கெடுத்து நிறப்பி விட்டது.
இப்படிதான் நம்மை நாமே குற்றஞ்சாட்டிக்
கொண்டிருக்கிறோம். உப்பைத் தின்னா தண்ணி குடிக்கணுமாமே ... அதான் வீட்டுக்குள்ளேயே
தண்ணீர் பெருக்கெடுத்து வந்து விட்டதே ...அதைக் குடிக்கணுமோ”?!
தெரியவில்லை.
அது சரி ... எனக்கு திடீர்னு ஓர் ஐயம்.
20.12. 1923
, அதாவது
(3 நாள் மட்டும் முன்னப் பின்ன ...), சரியாக
100 ஆண்டுகளுக்கு முன் தென்கடைசித் தமிழ்நாட்டில் பெரு வெள்ளம். ரயில் நிலையங்கள் வெள்ளத்தில்
மூழ்கின. இன்று நடந்த அதே நிகழ்வுகள் பெருமழையால் நூறு ஆண்டுகளுக்கும் முன்பும் நடந்ததாம். இந்து தினசரி
100 ஆண்டுகளுக்கு முந்திய அந்த வெள்ள நிகழ்வை மீண்டும் இப்போது பதிப்பித்திருக்கிறார்கள்.
ஐயம்
என்னன்னா...? 100 வருஷத்திற்கு முன் Carbon
emission, global warming, nano effect போன்ற எதுவுமில்லை. குளம்,
குட்டை, கண்மாயெல்லாம் வெள்ளத்தை வாங்க ஆங்காங்கே
இருந்தனவே. பின் ஏன் அப்போதும், இப்போதும் பெரும் மழை;
பார்த்தறியாத அளவு வானம் பிளந்த பெரும் மழை. அதனால் யாரும் காணாத அளவு
வெள்ளம். அன்றும், இன்றும் ஒரே நடப்பாக நடந்து முடிந்திருக்கிறது.
(இது போன்ற இன்னொரு பெருமழை வர இன்னும் 100 ஆண்டுகள் ஆகுமா?)
இன்றைய பிரச்சனைகளுக்குக் கொடுத்த காரணங்கள்
இல்லாத அந்தக் காலத்திலும் இதே இயற்கையின் கோபம் அன்றும் இருந்ததே.... எப்படி?
ஏன்?
சில நிகழ்வுகள் கடவுளால் வருகிறது அதை அளவீடு செய்ய முடியாது
ReplyDelete