ஒரு
வழியாக இரு போட்டிகளும் ஒரே நாளில் நேற்று முடிந்தன. இரண்டும் நினைத்தது போல் நடந்து
முடிந்தன.
EURO,’24
ஏறத்தாழ
எப்போதும் அனைத்திலும் நான் இங்கிலாந்திற்கு எதிரானவன். சாகா - Saka - விளையாட்டு பிடித்தது. இருந்தாலும் முதலிலிருந்தே
ஸ்பெயின் நாட்டின் வில்லியம் பிடித்தது. பின்னால் அவரோடு யமால் என்பவரும் பிடித்துப்
போனது. இந்தக் கடைசிப் போட்டியில் யமால் நான்கைந்து
தடவை பந்தை கோல் நோக்கி அடித்த பந்துகள் கோலாகாமல்
தப்பித்து விட்டன. ஆயினும் இருவரின் ஆட்டமும்
நன்றாக இருந்தது.
சோகமென்னவென்றால்
அரையிறுதி ஆட்டத்திற்குள் நுழைய பெனல்டி கோல் வரை சில ஆட்டங்கள் சென்றன. அந்த ஆட்டங்கள்
எனக்குப் பொதுவாகவே பிடிக்காது. அதைவிட sudden death இருப்பது நன்றாக இருந்தது. அதைவிட பெனல்ட்டியில் வெற்றி தோல்வி நிர்ணயிப்பது
காசை சுண்டிப்போட்டு பார்ப்பது போல் ஆகிவிடுகிறது. One shooter / one goal keeper என்ற இருவர் மேல் பாரம் விழுகிறது. அட
போங்க ... இது அழுவாச்சி ஆட்டம் அப்டின்னு தோணுது.
ஸ்பெயின்
வென்றது; மகிழ்ச்சி
WIMBLEDON
‘24
அல்காரஸ்
– சின்னர் இருவரும் அநேகமாக மோதுவார்கள்; இல்லையேல் அல்காரஸ் – ஜோக்கோவிச் என்று எதிர்பார்த்தேன்.
வேறொன்றுமில்லை.
The period of the
triumvirate – Fedd-rafa-nova – is almost over. ஜோக்கோ இன்னும் சிறிது முயல்வார்.
இப்போடியில்
ஜோக்கோ முயன்றார். 2:0 என்ற நிலையிலிருந்தும் மீண்டு வந்துள்ளார். அப்படியேதும் நடக்குமா
என்று எண்ணிக்கொண்டிருந்த போது மூன்றாவது செட்டில் 0:2 என்ற நிலை வந்த போது சரி கதை
முடிந்தது என்றே நினைக்கத் தோன்றியது. ஒரு
காலத்தில் ஜோக்கோவின் athletic
actions ஆட்டத்தையும், உடம்பு
அதற்கு ஒத்துழைத்ததும் பார்த்து மகிழ்ந்தேன். என்ன செய்வது?
காலம் அனைத்தையும் மாற்றிப் போட்டு விட்டது. அல்காரஸ் ஆட்டம் ஜோக்கோவின்
பழைய ஆட்டம் போல் ஆடினார்; வென்றார்; மகிழ்ச்சி.
ஜோக்கோ வென்றிருந்தால் பல புதிய records
உருவாகியிருக்கும்.
No comments:
Post a Comment