Friday, January 11, 2008

247. பொங்கல் கொண்டாடலாம் வாங்க ... ARGUMENT CONTINUES...

சென்ற ஆண்டில் நான் எழுதிய பதிவுகளில் 'சிறந்த(!?)' ஒன்றைத் தேர்ந்தெடுத்து தரச்சொல்லி தொடர் பதிவுக்கு அழைத்த சர்வேசனுக்கு நன்றி.

எல்லாமே நல்ல பதிவுகளாகப் போட்டாலே இப்படித்தான் எதை எடுப்பது எதை விடுப்பது என்று தகராறு வந்துவிடுகிறது. (இப்படியும் சொல்லலாம்; இல்லைன்னா ...) எல்லாமே குப்பை; இதில நல்ல குப்பை ஒண்ணு வேணும்னா என்ன செய்றது?

எனக்கு நல்ல பதிவா படுறது எல்லாத்துக்கும் அப்படியே தோன்றணும்னு இல்லை. vice versa !
ஆனாலும் நிறைய பேருக்குப் போய்ச்சேர்ந்த பதிவு ஒன்றை தேர்ந்தெடுத்திடலாம்னு ஒரு எண்ணம். அதனால், நிறைய பேருடைய பின்னூட்டம் வந்த பதிவை இந்த ஆட்டைக்குச் சேர்த்திடலாம்னு நினைக்கிறேன்.

அப்படி பார்த்தால் போன வருஷத்தை (2007)விடவும் 2006ம் வருடத்தின் கடைசிப் பதிவுதான் இதுவரை என் பதிவுகளில் 110 பின்னூட்டம் பெற்று இரண்டாம் இடத்தை - பின்னூட்ட எண்ணிக்கையில் மட்டுமே -
Let us hit the nail .. பெற்றது; பிடித்த பதிவும் கூட. ஆனாலும் 2007 வருடத்துப் பதிவுதான் வேண்டுமென்பதால் அந்த வருடப் பதிவுகளில் 84 பின்னூட்டங்கள் பெற்ற "197. பொங்கல் - ஜோவும் இன்ன பிறரும் ...." என்ற பதிவே இடம் பெறுகிறது. வேடிக்கை என்னன்னா, முதலில் சொன்ன பதிவு 2006-ன் கடைசி வாரப் பதிவு; பின்னால் சொன்னது 2007-ன் முதல் பதிவு.

இதில் என்ன சிறப்பென்றால் பொங்கல் எல்லா தமிழர்களாலும் கொண்டாடப் படவேண்டும் என்று 2006-ல் ஒரு வேண்டுகோளுடன் சில பதிவுகள் வந்தன. அதைத் தொடர்ந்து 2007-ல் ஜோ அதே கருத்துடன் ஒரு பதிவு போட அதற்கு வந்த எதிர்ப்புகளை வைத்து நான் சென்ற ஆண்டின் துவக்கத்தில் (19.01.2007) இட்ட பதிவு சரியாக அதிகப் பின்னூட்டங்கள் பெற்ற காரணத்தால் மட்டுமே இந்த வருடமும் அதே பொங்கல் சமயத்தில் மீள் பதிவு போல் மீண்டும் இப்போது சர்வேசன் புண்ணியத்தில் பதிவர்களுக்குப் பொங்கல் வாழ்த்துக்களுடன் படைக்கப் படுகிறது!

ஸ்டார்ட் ம்யுஜிக் ..!

இது ஒரு தொடர்கதை ..

இப்பதிவைத் தொடர்ந்து இன்னும் ஐந்து பேரை எழுத அழைக்கணுமாமே... ம்ம்..ம்.. யார் யாரைப் பிடிக்கலாம் இதற்கு: - ரொம்ப ஆக்டிவா இருந்து, இப்போ கொஞ்சம் தலைமறைவு வாழ்க்கை நடத்திக்கிட்டு இருக்கிற இவர்களை அழைக்கிறேன்:

1. இளவஞ்சி
2. பால பாரதி
3. பொன்ஸ்
4. வரவனையான்
5. முத்து - தமிழினி

27 comments:

  1. ரொம்ப நல்ல விஷயம் சொல்லிருக்கீங்க

    it deserves to be the best entry in 2007.But i felt it a little verbose

    சரி நம்ம சொல்றதுனால இவங்க கேட்டுரபோரங்களா அப்படின்ற எண்ணம் உங்களுக்கு வந்ததே இல்லையா

    ReplyDelete
  2. தருமிசார்,

    என்னை நீங்க கூப்பிட்டது சந்தோசமா இருந்தாலும் எனக்கு பின்னாடி இருக்கற தலைகளை கூப்பிட்டது இன்னும் குஜாலா இருக்கு! :)

    மேல முத்து என்னவோ மொனக்கறாரு பாருங்க.. விடாதீக!

    ReplyDelete
  3. தருமி சார்,

    ச்சும்மா தகவலுக்காக..

    இதுபற்றிய கல்வெட்டு பலூன் மாமாவுடைய பதிவு

    http://kalvetu.blogspot.com/2005/11/blog-post_21.html

    ReplyDelete
  4. மிக அருமை.

    பொங்கல் சாதி மதம் வித்யாசம் பாக்காம எல்லாரும் கொண்டாடினா நல்லாதான் இருக்கும்.
    ஆனா, என் கிருஸ்/இஸ்லாமிய நண்பர்கள் யாரும் கொண்டாடுவதா தெரியல. அவ்ங்கள பொறுத்தவரை, பொங்கல், ஒரு இந்து பண்டிகை மாதிரிதான் காட்சி தெரியுது.
    அவங்கள சொல்லியும் குத்தமில்ல.

    ஆமாம், கிராமங்கள்ள எப்படி? கிருஸ்/இஸ்லாமிய மக்கள் கொண்டாடுவாங்களா?

    என் புது ஆட்டையால், சில நல்ல பதிவுகள் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்து, படிக்காத ஆளுங்க படிக்க ஏதுவா இருக்கரது சந்தோஷம்.

    தன்யனானேன்!

    ReplyDelete
  5. உங்கள் பொங்கல் பற்றிய சென்ற ஆண்டுப் பதிவு மிகவும் அருமை...இன்றும் பொருந்தி வருகிறது..இந்த ஆண்டு புத்தாண்டு என்று புதுப் பெயர் வேறு..

    ReplyDelete
  6. //உங்கள் பொங்கல் பற்றிய சென்ற ஆண்டுப் பதிவு மிகவும் அருமை...இன்றும் பொருந்தி வருகிறது..//

    அதாங்க சோகம். எந்த ஆண்டுக்கும் பொருந்தி வர்ரது மாதிரி ஒரு பதிவா போச்சுது பாத்தீங்களா?

    :(

    ReplyDelete
  7. என்ன முத்து அங்க முனங்கல் .. ம்..ம்ம்.

    ஒழுங்கா வாங்க திரும்ப.

    ReplyDelete
  8. அரவிந்தன்
    verbose - எல்லோரும் வள்ளுவரா ஆக முடியுமா? அதோட இந்த வயசான ஆளுங்களைப் பாருங்க .. இழுழுழுக்குங்க எந்த விஷயத்தையும். பொறுத்துக்குங்க.

    ReplyDelete
  9. இளவஞ்சி,
    முனங்குன முத்துவை ஒரு வாங்கு வாங்கிப் புட்டோமுல்ல ..

    நீங்க அதையெல்லாம் கண்டுக்காம .. உங்க வழியில முழக்க வாங்க.

    ReplyDelete
  10. தருமியிடமிருந்து இப்படி ஒரு பதிவை எதிர்பார்க்க முடியாதென்றாலும் ஒரு நாத்திகரிடமிருந்து இப்படி ஒரு பதிவு வருவது எதிர்பார்க்கக் கூடியதுதான். பொங்கலை ஓர் இந்துக்கள் பண்டிகை அல்ல என்று சொல்ல தருமிக்கு அவசியம் இல்லை என்றாலும் ஒரு நாத்திகருக்கு அந்த அவசியம் கண்டிப்பாக இருக்கிறது.

    ஜோவின் பதிவில் அவர் அனைவரையும் பொங்கல் கொண்டாட அழைக்கிறார். அவருடைய நோக்கம் தெளிவானதும் புரிந்துகொள்ளக் கூடியதும் வரவேற்கத் தக்கதுமாகும். ஆனால் ஒரே அலைவரிசையில் எழுதப்பட்ட தருமி மற்றும் சுரேஷின் பதிவுகள் பொங்கலை ஓர் இந்துக்கள் பண்டிகை அல்ல என்று நிறுவ முயல்கின்றன.

    கிருஸ்துமஸ் கொண்டாடாத ஒரு கிருத்துவரைப் போல ரம்ஜானைக் கொண்டாடாத ஒரு முகமதியரைப் போல பொங்கலைக் கொண்டாடாத ஓர் இந்துவும் அரிதானவர். தமிழ்நாட்டு இந்துக்கள் அனைவராலும் தவறாமல் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை இந்துக்கள் பண்டிகையாக இல்லமல் எப்படி இருக்க முடியும்? வேற்றுமத அன்பர்கள் சிலராலும் நாத்திகர்கள் பலராலும் பொங்கல் கொண்டாடப்படுவதால் அது இந்துக்கள் பண்டிகை என்கிற அடையாளத்தை எப்படி இழந்து போகும்?

    ஓணம் கேரள இந்துக்களின் பண்டிகை என்பது போல, துர்கா பூஜை வங்காள இந்துக்களின் பண்டிகை என்பது போல, பொங்கல் தமிழக இந்துக்களின் பண்டிகை என்பதில் என்ன குழப்பம் இருக்க முடியும்? சூரியன் இந்துக்களின் கடவுள் என்பது அவர்கள் சூரியனுக்குக் கட்டிய கோவில்களின் எண்ணிகையிலிருந்தே புலப்படும். சூரியன் இயற்கை என்பதனால் எத்தனை கிருத்துவர்களும் முகமதியர்களும் வழிபடுகிறார்கள்? இயற்கையை தெய்வமாக வழிபடும் சிந்து சமவெளி நாகரிகத் தொடர்ச்சியை இந்திய மதங்கள் ஒருபோதும் விட்டுவிடுவதில்லை. இந்தியாவின் இருபெரும் அந்நிய மதங்களான கிருத்துவத்திலும் இஸ்லாத்திலும் இயற்கை வழிபாட்டிற்கு எந்த வழியும் இருப்பதாக்த் தெரியவில்லை.

    பொங்கலைக் கொண்டாட அது ஓர் இந்துக்கள் பண்டிகை என்கிற தயக்கம் தேவை இல்லை. இந்தியாவுக்குள் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் நுழைந்த கிருத்துவமும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நுழைந்த இஸ்லாமும் இந்நாட்டின் பூகோளத்துடன் உடன்படுகிற உணவு மற்றும் உடை வழக்கங்களை ஏற்றுக்கொள்ளத் தயங்காததைப் போலவே பொங்கலையும் அவர்கள் விரும்பும் முறையில் கொண்டாட எந்தவித தயக்கமும் தேவை இல்லை. இதற்காக பொங்கலை ஓர் இந்துக்கள் பண்டிகை இல்லை என்று உண்மைக்கு புறம்பான ஒன்றை நிறுவத் தேவை இல்லை.

    தருமிக்குள்ளிருக்கும் நாத்திகரின் இந்தப் பதிவு என் கண்டனத்துகுறியதாகிறது.

    ReplyDelete
  11. ஓகை,
    long time .. no see.

    ஒரு பழைய மாற்று மத நம்பிக்கை கொண்டவன் என்ற முறையிலும், இன்று மத நம்பிக்கையற்றவன் என்ற முறையிலும் நான் உங்கள் கருத்துக்கு எதிராய், 'இல்லை.. இல்லை.. பொங்கல் தமிழ்ச் சமுதாயத்தின் பண்டிகை நாள்தான்' என்பதையும், 'பொங்கல் இந்துக்களுக்கு மட்டுமேயுள்ள திருநாளல்ல' என்றும் அறுதியிட்டுச் சொல்வதை விடவும் மற்ற இந்து மத நண்பர்களே சொல்வது சரியாக இருக்கும்.

    இருப்பினும், இரண்டு விஷயங்களை உங்கள் முன் வைக்கிறேன்:

    1. அறுவடைத் திருநாள் என்பது ஓர் உலகளாவிய, பல்வேறு நாடுகளிலும் பல்வேறு விதத்தில் கொண்டாடப் படும் நாளாகும். அவ்விதமே நம் தமிழரால் கொண்டாடப் படும் நாள் பொங்கல். (மதம் இதில் இரண்டாம் பட்சம்தான்;வேண்டுமென்பவர்கள் சேர்த்துக் கொள்கிறார்கள் ஊறுகாய் போல்)

    2. யார் யாரெல்லம் இந்துக்கள்; இந்துக்கள் என்பவரெல்லாம் யார் யார்? என்ற அடிப்படைக் கேள்வியை, ஆங்கிலேயர் காலத்து மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கிறித்துவ, இஸ்லாமிய மதம் சாராதவர்கள் எல்லோரும் "இந்துக்கள்" என்று ஒரு விரிந்து பரந்த குடைக்குள் கொண்டு வந்தது இன்னும் அப்படியேதான் கருதப்பட வேண்டுமா என்பதோடு பொருத்துகிறேன்.

    இன்னும் இந்துக்களாய் இருக்கும் என் கிராமத்து உறவினர்கள் வீட்டில் இந்துச் சாமிகள் படங்கள் ஏதும் இருப்பதில்லை. அவர்கள் 'இந்துக்கள்'தானா?

    எது எப்படியாயினும் இப்போது பிடியுங்கள்:

    உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. தருமி,
    இன்னமும் உங்கள் பொங்கல் பதிவைப்படிக்கவில்லை,அதற்கு முன்னர் ஓகை சொல்லியிருப்பதற்கு சிறு விளக்கம்.

    கண்டிப்பாக பொங்கலை இந்து பண்டிகை எனவகைப்படுத்த தேவை இல்லை, அப்படித்தான் அது பார்க்கப்பட்டு வருகிறது என்பதும் உண்மை.

    மதம் என்பதே மனிதகலாச்சாரத்தின் முறைப்படுத்தப்பட்ட வெளிப்பாடு. எந்த மண்ணில் எந்த கலாச்சாரம் ,வாழ்க்கை முறை இருக்கிறதோ அதை உட்கொண்ட ஒரு வழிப்பாடாக தான் மதம் உருவாகும்.

    உதாரணமாக வேட்டி என்பது அனைவரும் அணியும் உடை, ஆனால் கோயில்களுக்கு என்று ஒரு யூனிபார்ம் என்றுப்பார்த்தாலும் வேட்டியை தான் சொல்வார்கள். எனவே வேட்டியை இந்துக்களின் உடை என்று சொல்லி விடமுடியுமா?

    எனவே பொங்கலும் அப்படித்தான் மதம் சார்ந்து பொதுமைப்படுத்தப்பட்டு விட்டது.சூரியனை வழிப்படாத உலக கலாச்சாரமே இல்லை.

    டாவின்சி கோட் என்ற நாவல் படித்தாலே தெரியும் கிருத்துவத்தில் சூரியனின் பங்கு எத்தகையது என்பது. அதே போல சூரியன் வழிப்பாடு யூதத்திலும், அரேபியர்களிடமும் உள்ளதே. என்ன இந்துக்கள் படையல் போடுவார்கள் அவ்வளவே.

    பொங்கல் என்பதை பொதுவாக ஆங்கிலத்தில் கூட "festival of harvest" என்றுத்தான் சொல்வார்கள். உழவர்களின் ஒரு பண்டிகை, தமிழக உழவர்கள் எல்லாம் இந்துக்களாக அக்காலத்தில் கருதப்பட்டதால் அதனை இந்துக்களின் பண்டிகை எனப்பார்க்கப்பட்டு விட்டது.

    இந்தியாவில் பிறந்தவன் ஒருவன் எந்த மதம் என்று தெரியாமல் போய்விடுகிறது என்று வைத்துக்கொள்வோம் அப்படி வரும் பட்சத்தில் அவன் இங்கு பிறந்ததாலேயே "by default" இந்துவாக கருதப்படுவான். பொங்கலையும் அப்படித்தான் default இந்து பண்டிக்கை ஆக்கப்பட்டு விட்டது.நான் ஏன் இந்து அல்ல(காஞ்சா அய்லயாக் தானே அவர்?) என்று கூட ஒரு பதிவு தருமி போட்டு இருப்பார் படித்துப்பாருங்கள் அது கிட்ட தட்ட இப்படித்தான் ஒலிக்கும்.

    திராவிடர்கள் இந்துக்கள் அல்ல என்ற கருத்தையும் நீங்கள் கேள்விப்பட்டவர் எனில் , பொங்கலை ஒரே அடியாக இந்துக்கள் பண்டிகை என சொல்வதும் தவறே.

    இதெல்லாம் காலம் காலமாக நடைப்பெற்று வரும் கருத்தேற்றம், ஏன் அதை மாற்றக்கூடாது, அனைவருக்கும் பொதுவானது என சொல்வதில் தவறில்லை.

    ReplyDelete
  13. தருமி சார். இது போன வருசம் பேசுன அதே விஷயந்தான்.

    பொங்கல் தமிழர் திருநாள்னு சொல்றோம். அப்ப தமிழர்னு சொல்ற எல்லாருக்குந்தான் திருநாள். அனைவரும் சேர்ந்து கொண்டாடுவது மிகச் சிறப்பு.

    ஓகை எளிதாக இந்துப் பண்டிகை என்று சொல்லிவிடலாம். ஆனால் இந்து என்பதே ஒரு கலப்பிதம். அப்படியிருக்கையில் ஐநூறும் ஆயிரமும் மட்டும் ஏன் கலக்காமல் இருக்க வேண்டும்.

    அவரவர் வழியில் பொங்கலைக் கொண்டாடுவதில் தவறில்லை. சூரியனை வணங்குவது என்பது ஒரு விதம். அதை இயற்கை என்ற கோணத்தில் பார்க்க விரும்புகிறவர்களும் பார்க்கலாம். மொத்தத்தில் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. நம்மை விட்டுக் கொடுக்காமலும் அதே நேரத்தில் அணைத்து வாழவும் தெரிந்திருக்க வேண்டும்.

    சுருங்கச் சொன்னால் முருங்கை உடையும். மூங்கில் இசை கொடுக்கும்.

    ReplyDelete
  14. போன வருஷம் படிச்ச பதிவிற்கு இந்த வருஷம் பின்னூட்டம் போடும் சேம்பேறிய்யா நான் :(.

    இந்த லட்சனத்தில எங்கிருந்து வரப்போகிறது, எனக்கு மதத்தின் வால பிடிச்சி தொங்கிறதுக்கு தெம்பு. எங்கோ, எல்லாரும் நிம்மதியா அடிச்சிக்காம இது போன்ற நாட்களில் விழாக்களை சிறப்பாக கொண்டாடுங்கன்னு தான் சொல்லத் தோணுது.

    ஒரு 'அருவடைத் திருநாளு'க்கு எதற்கு மதச் சாயம் தேவைப் படுகிறது? எல்லாம் தெரிந்த, படித்தவர்களே இது போன்ற பொது விழாக்களே மக்களை ஒன்றிணைத்து, இணைத்துக் கட்ட பயன் படுத்தத்தற்க ஒரு 'மனுநேசக் கயிறு' என்பதனை மறந்து பிரிவினை வாதம் பேசும் பொழுது, எனக்கு தோன்றச் செய்வது இன்னும் எவ்வளவு தொலைவு இருக்கிறது, இந்த அடிப்படை ஞானம் நமக்கு எட்ட - என்பதே அது.

    Very Sad!

    ReplyDelete
  15. விளக்கங்களுக்கு நன்றி வவ்வால்

    ReplyDelete
  16. ஜிரா,
    //இது போன வருசம் பேசுன அதே விஷயந்தான்.//

    பண்டிகையும் வருஷா வருஷம் நடக்கிறது - நமது விவாதங்களும்தான்.

    :(

    ReplyDelete
  17. தருமி,

    பொங்கல் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.

    உங்களுக்கும் தமிழ் கூறும் நல்லுலகின் அனைவருக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்.

    //பொங்கல் தமிழ்ச் சமுதாயத்தின் பண்டிகை நாள்தான்' என்பதையும், 'பொங்கல் இந்துக்களுக்கு மட்டுமேயுள்ள திருநாளல்ல' என்றும் அறுதியிட்டுச் சொல்வதை விடவும் மற்ற இந்து மத நண்பர்களே சொல்வது சரியாக இருக்கும்.//

    தமிழ்ச் சமுதாயம் என்று நீங்கள் குறிப்பது தமிழ் பேசும் அனைத்து மக்களின் தொகை எனறு எடுத்துக் கொள்கிறேன். அவர்களின் பண்டிகை பொங்கல் என்று கூறுவீர்களானால் இவர்களில் ஒரு பகுதி பொங்கல் கொண்டாடுவதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். ஏன் கொண்டாடுவதில்லை என்பதையும் அறிவீர்கள். இதற்குறிய மதத் தொடர்பான காரணங்கள் இங்கு பின்னூட்டமாகவே வந்திருக்கின்றன. மாறாக இந்துக்கள் அனைவரும் தவறாமல் பொங்கல் கொண்டாடுகிறார்கள் என்பதையும் அறிவீர்கள். இந்த இரண்டு செய்திகளும் என்னதான் சொல்லுகின்றன?

    மற்ற இந்து மத நண்பர்களைப் பதில் சொல்லச் சொல்லுகிறீர்கள். பதில் சொல்லுவதற்கு முன் அவர்கள் தாங்கள் இந்து என்பதை சொல்லிவிட்டு சொல்கின்ற கருத்துக்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாமல்லவா!

    //அறுவடைத் திருநாள் என்பது ஓர் உலகளாவிய, பல்வேறு நாடுகளிலும் பல்வேறு விதத்தில் கொண்டாடப் படும் நாளாகும்.//

    உண்மைதான். ஆனால் அறுவடைத் திருநாளை சூரியனை வழிபடும் நாளாகவும் அதையும் சூரியன் தன் பயணத்தை தெற்கு வடக்காக மாற்றும் நாளில் செய்வதும் பொங்கல் நாளில்தான். இதில் நம் மூதாதையர்களை ஈடுபடுத்தியதும் இன்றளவும் எல்லா இந்துக்களையும் வலியுறுத்துவதும் இந்துமதம்தான்.

    இத்துடன் தொடர்புடைய இராமகி அவர்களின் பொங்கலோ பொங்கல் பதிவைப் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

    //யார் யாரெல்லம் இந்துக்கள்; இந்துக்கள் என்பவரெல்லாம் யார் யார்?//

    இந்த குழப்பம் பலருக்கும் இருக்கிறது. இதற்கு ஆங்கிலேயரின் மக்கள் தொகை கணக்கெடுப்பை ஏன் இன்னும் நம்புகிறீர்கள்? நமது இந்திய அரசின் சமீபத்திய கணக்கெடுப்பைப் பாருங்கள். பள்ளிகளில், கல்லூரிகளில் மாணவர்களின் விகிதாச்சாரங்களைப் பாருங்கள். தொழிலகங்களில், அலுவலகங்களில் உள்ளவர்களின் விகிதச்சாரங்களைப் பாருங்கள்.

    இன்னொன்றும் சொல்கிறேன். பொங்லன்று மீன் கடை, கறிக்கடைகளின் குறைந்த கூட்டத்தைப் பாருங்கள். தீபாவளியன்று கறிக்கடையில் விற்பனையைப் பாருங்கள். புரடட்டாசி மாதத்தில் ஏதோவொரு கறிக்கடைக் காரரிடம் சும்மா விற்பனையைப் பற்றி பேச்சு கொடுத்துப் பாருங்கள். இந்துக்களின் ஒரு பகுதியான அசைவம் சாப்பிடுவோரில் ஒரு பகுதியின் எண்ணிக்கை மட்டுமே எவ்வளவு என்பது உங்களுக்குப் புரியும்.

    அழகர் ஆற்றில் இறங்குவதைக் காணும் ஆயிரமாயிரமாயிரக் கண்களை உங்கள் இரு கண்களால் பாருங்கள், இந்துக்கள் யார் யார் அவர்கள் எத்தனை பேர் என்பது விளங்கும்.

    //இன்னும் இந்துக்களாய் இருக்கும் என் கிராமத்து உறவினர்கள் வீட்டில் இந்துச் சாமிகள் படங்கள் ஏதும் இருப்பதில்லை. அவர்கள் 'இந்துக்கள்'தானா?//

    அவர்களிடமே கேளுங்கள். சொல்வதை ஏற்றுக் கொள்ளுங்கள், பதில் எதுவாக இருப்பினும்.

    ReplyDelete
  18. ஜீரா,

    //சுருங்கச் சொன்னால் முருங்கை உடையும். மூங்கில் இசை கொடுக்கும்// இதையும் சேர்த்து ஏராளமான அறிவுரைகளை வழங்கி இருக்கிறீர்கள். இவற்றில் எதற்கும் புறம்பாக நான் ஏதும் சொல்லிவிடவில்லை. //ஓகை எளிதாக இந்துப் பண்டிகை என்று சொல்லிவிடலாம்.// என்று சொல்லுவதை விடுத்து கொஞ்சம் ஊன்றிப் படித்துப் பாருங்கள். நான் சொல்லியதில் இருக்கும் தவறைச் சுட்டக் காட்டுங்கள். உங்களுக்கு எளிதாகத் தோன்றும் என் பின்னூட்டம் நன்றாக ஆழ்ந்து சிந்தித்த பிறகு எழுதப்பட்டதுதான்.

    ReplyDelete
  19. வவ்வால் அவர்களே,

    //மதம் என்பதே மனிதகலாச்சாரத்தின் முறைப்படுத்தப்பட்ட வெளிப்பாடு. //

    மனித கலாச்சாரமென்பது மதத்தால் முறைப்படுத்தப்பட்டு வெளிப்படுவதே.

    //எந்த மண்ணில் எந்த கலாச்சாரம் ,வாழ்க்கை முறை இருக்கிறதோ அதை உட்கொண்ட ஒரு வழிப்பாடாக தான் மதம் உருவாகும்.//

    உண்மை. அதே நேரம் அந்த மண்ணில் எந்த கலாச்சாரம் ,வாழ்க்கை முறை இருக்கிறதோ அது அங்கு உருவான மதத்தால் உருவாக்கப்பட்டதும் வழி நடத்தப்பட்டதுமாகும். இது ஒரு தொடர்வினை.

    //உதாரணமாக வேட்டி என்பது அனைவரும் அணியும் உடை, ஆனால் கோயில்களுக்கு என்று ஒரு யூனிபார்ம் என்றுப்பார்த்தாலும் வேட்டியை தான் சொல்வார்கள். எனவே வேட்டியை இந்துக்களின் உடை என்று சொல்லி விடமுடியுமா? //

    நம் வசதிக்காக இன்று நாம் அதிகமாக பயன்படுத்தும் லுங்கி என்பது முகமதியர்களின் உடை என்பதில் எனக்கு எந்தவித ஐயமும் இல்லை. இந்து மதச் சடங்குகளின் போது இந்துக்கள் கட்டாயமாக அணிய வேண்டிய உடை வேட்டி என்பது நீங்கள் அறியாததில்லை. இவ்விதமாக வேட்டி மற்றோருக்கு கட்டாயப் படுத்தப் படவில்லை.

    //எனவே பொங்கலும் அப்படித்தான் மதம் சார்ந்து பொதுமைப்படுத்தப்பட்டு விட்டது.சூரியனை வழிப்படாத உலக கலாச்சாரமே இல்லை.
    டாவின்சி கோட் என்ற நாவல் படித்தாலே தெரியும் கிருத்துவத்தில் சூரியனின் பங்கு எத்தகையது என்பது. அதே போல சூரியன் வழிப்பாடு யூதத்திலும், அரேபியர்களிடமும் உள்ளதே. என்ன இந்துக்கள் படையல் போடுவார்கள் அவ்வளவே.//

    சூரிய வழிபாட்டை ஒரு பண்டிகையாக ஆக்கி வைத்திருக்கும் தற்போதைய மதங்களையும் பண்டிகைகளையும் அறியத் தர வேண்டுகிறேன்.

    //பொங்கல் என்பதை பொதுவாக ஆங்கிலத்தில் கூட "festival of harvest" என்றுத்தான் சொல்வார்கள். //

    பொங்கல் அறுவடைத் திருநாள் என்பதில் என்ன ஐயம்?

    //உழவர்களின் ஒரு பண்டிகை, தமிழக உழவர்கள் எல்லாம் இந்துக்களாக அக்காலத்தில் கருதப்பட்டதால் அதனை இந்துக்களின் பண்டிகை எனப்பார்க்கப்பட்டு விட்டது.//

    அப்படி இல்லை. நான் உழவனில்லை. இன்றும் அன்றும் என்றும் உழவரல்லாத மற்றெல்லா தமிழ்நாட்டு இந்துக்களும் உவப்பாகக் கொண்டாடும் பண்டிகை பொங்கலாகும்.

    //இந்தியாவில் பிறந்தவன் ஒருவன் எந்த மதம் என்று தெரியாமல் போய்விடுகிறது என்று வைத்துக்கொள்வோம் அப்படி வரும் பட்சத்தில் அவன் இங்கு பிறந்ததாலேயே "by default" இந்துவாக கருதப்படுவான்.//

    உண்மை.

    //பொங்கலையும் அப்படித்தான் default இந்து பண்டிக்கை ஆக்கப்பட்டு விட்டது.//

    உண்மையில்லை.

    //திராவிடர்கள் இந்துக்கள் அல்ல என்ற கருத்தையும் நீங்கள் கேள்விப்பட்டவர் எனில் , பொங்கலை ஒரே அடியாக இந்துக்கள் பண்டிகை என சொல்வதும் தவறே.//

    தருமிக்கு நான் எழுதியிருப்பதைப் பாருங்கள்.

    // அனைவருக்கும் பொதுவானது என சொல்வதில் தவறில்லை//

    தவறில்லை. ஆனால் அதற்காக இது இந்துக்களின் பண்டிகை இல்லை என்று சொல்வது தவறுதான்.

    ReplyDelete
  20. ஓகை ,

    நீங்கள் தருமிக்கு எழுதி இருப்பதையும் பார்த்தேன், நானும் பொங்கலை பல காலமாக இந்துப்பண்டிகையாக உருவகப்படுத்திவிட்டார்கள் என்றே சொல்லி இருக்கிறேன், ஆனால் நீங்கள் அப்படியும் சொல்லாமல் இப்படியும் சொல்லாமல் , அது இந்துப்பண்டிகைத்தான் என்று அடித்து சொல்ல வருகிறீர்கள், அப்படித்தானே!

    பொங்கல் என்பது விவசாயம் , விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கான பண்டிகை, நதிக்கரை நாகரீகம் எல்லாமே விவசாயம் சார்ந்தது தான், அப்படி இருக்கும் போது நாம் மட்டும் விதி விலக்கா என்ன?

    மதச்சாயம் பூசப்பட்டது பிற்காலத்தில் தான் ஏன் ஒரு முகம்மதியருக்கு நிலம் இருக்காதா அவர் விவசாயம் செய்ய மாட்டாரா,கிருத்தவர் விவசாயம் செய்ய மாட்டாரா? நம் தமிழ் படங்கள் கூட முகம்மதியரை கறி வெட்டும் ஆளாகவும், கள்ளக்கடத்தல் செய்யும் ஆளாகவும் மட்டுமே காட்டும், காபேரே ஆடும் பெண்ணுக்கு கண்டிப்பாக ரீட்டா , ஸ்டெல்லா என்ரே பெயர்(கிருத்துவப்பெயர்)வைப்பார்கள் தமிழ் படத்தில்! நீங்கள் பேசுவதும் தமிழ்ப்பட இயக்குனர்கள் போலவே இருக்கு!

    நீங்கள் சராசரியான புரிதல் இல்லாமல் பேசுவதாக இருக்கிறது, பல கற்றும் கல்லாத மாந்தர் சொல்வாங்க அப்படித்தான் இருக்கு!

    பொங்கல் என்பது மதம் சார்ந்தது அல்ல, ஆனால் அப்படி சிலர் , சில காரணங்களுக்காக அப்படி ஆக்கிட்டாங்க அதையே தான் பிடித்து தொங்குவேன் என்றால் , உங்களைத்தான் ராம கோபாலன் தேடுறார் போய் சேர்ந்துக்கோங்க! :-))

    ReplyDelete
  21. //நீங்கள் சராசரியான புரிதல் இல்லாமல் பேசுவதாக இருக்கிறது, பல கற்றும் கல்லாத மாந்தர் சொல்வாங்க அப்படித்தான் இருக்கு!//

    வவ்வால், நான் சொல்லியிருக்கும் கருத்துகளை உங்களால் மாற்றுக் கருத்துகள் சொல்லி மறுக்க முடியவில்லை.

    இரண்டாவது முறையாக என்னைக் கடுமையாக சாடி இருக்கிறீர்கள். கருத்துகளை எதிர்க்காமல் கருத்து சொல்பவரை எதிர்ப்பது உங்கள் விவாத முறையா? நான் சொல்லுவது தவறு என்று உண்மையாக நீங்கள் நம்பினால் உங்களால் மாற்றுக் கருத்துக்கள் வைக்க முடியும் என்று நான் நிச்சயம் நம்புகிறேன்.

    விவாதத்தின் ஒரு கட்டத்தில் எதிர்கருத்து வைக்க முடியாமல் தனி மனித தாக்குதலில் இறங்கி விவாதத்தை முடக்குவதாலேயே தமிழ் இணையம் இன்று நாத்திகர்களின் சொர்க்கமாகத் திகழ்கிறது.

    தருமியின் பதிவில் தனிமனித தாக்குதலை தொடக்குகிறீர்கள். ஒரு கருத்தை விவாதம் முடியாமலேயே முடக்குகிறீர்கள்.

    ReplyDelete
  22. வவ்வால் - ஓகை,
    உங்களின் கருத்து மோதல்களால் இப்பதிவு எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் கிடைத்தால் நலமே. அதுவே என் குறிக்கோளும்கூட.

    வவ்வால், தனிமனித தாக்குதல்களின்றி தொடருங்கள்.

    இருவருக்கும்,
    Easy, please

    ReplyDelete
  23. தருமி,
    நான் கருத்துக்களை வைக்கவில்லை எனில் , ஓகை அவர்கள் வைத்தக்கருத்துக்கள் எங்கே போச்சு!
    அவராலேயே எந்த கருத்தும் வைக்க இயலாமல் "beating around the bush" செய்துக்கொண்டு இருக்கிறார்.

    நண்பர் தெகா சொல்லி இருப்பது,

    //ஒரு 'அருவடைத் திருநாளு'க்கு எதற்கு மதச் சாயம் தேவைப் படுகிறது? எல்லாம் தெரிந்த, படித்தவர்களே இது போன்ற பொது விழாக்களே மக்களை ஒன்றிணைத்து, இணைத்துக் கட்ட பயன் படுத்தத்தற்க ஒரு 'மனுநேசக் கயிறு' என்பதனை மறந்து பிரிவினை வாதம் பேசும் பொழுது, எனக்கு தோன்றச் செய்வது இன்னும் எவ்வளவு தொலைவு இருக்கிறது, இந்த அடிப்படை ஞானம் நமக்கு எட்ட - என்பதே அது.

    Very Sad!//

    நானும் இதுப்போன்ற ஒத்த கருத்தை எனது வார்த்தைகளில் சொல்லி இருக்கிறேன், ஆனால் அது தனி மனித தாக்குதல் அல்ல மூடத்தனமாக பேசுபவர்களை ஒட்டு மொத்தமாக குறிப்பது.

    உண்மையில் கருத்து ரீதியாக பேச வேண்டும் எனில் ஓகை அவர்கள் எனது பின்னூட்டங்களை பிரித்து போட்டு அவற்றின் கீழே ஒரு வார்த்தையில் உண்மை , அப்படி இல்லை , என்ற ரீதியில் சொல்லிக்கொண்டு போவதை எப்படி கருத்தாக கொள்ள முடியும், அவரால் அது ஏன் அப்படி இல்லை என மாற்றுக்கருத்து வைக்க முடியாமல் தானே அப்படி செய்கிறார்.

    உண்மையில் அவர் பதில் சொல்வதில் இருந்து எந்த தெளிவான முடிவுக்கும் ஒருவரால் வர முடியாது.

    எனவே தான் புரிதல் இல்லை என சொன்னேன்.

    உதாரணமாக ,
    ////மதம் என்பதே மனிதகலாச்சாரத்தின் முறைப்படுத்தப்பட்ட வெளிப்பாடு. //

    மனித கலாச்சாரமென்பது மதத்தால் முறைப்படுத்தப்பட்டு வெளிப்படுவதே.//

    இப்படி எனக்கு பதில் சொல்லி இருக்கிறார், அப்படிப்பார்த்தால் மனிதன் தோன்றியவுடன் மதம் தோன்றி பின்னர் கலாச்சாரம் தோன்றியதாகிவிடும்.

    எப்படி வாழ்கிறார்கள் உண்கிறார்கள், உடுக்கிறார்கள் என்பதே கலாச்சாரம் ஆகிவிடுகிறது, அப்படி இருக்க மதத்தால் உருவாக்கப்பட்டது தான் கலாச்சாரம் எனில் ஏன் ஒரு பிராம்மணர் ஒரு வாழ்க்கை முறையையும், ஒரு ஒடுக்கப்பட்டவர் ஒரு வாழ்க்கை முறையையும் பின் பற்றுகிறார்கள்.

    சிலர் தாலிக்கட்டும் முறையை கூட சொல்வார்கள் எங்க கல்ச்சரில் அப்படி தாலிக்கட்ட மாட்டோம் என்று ஆனால் அப்படி வேறுப்பட்டவர்கள் இந்து ,மதத்தால் முறைப்படுத்தப்பட்ட கலாச்சாரம் எனில் எல்லாம் ஒன்றாக இருக்க வேண்டாமா?

    இந்துவாக இருக்கும் வங்காளிக்கு ஒரு கலாச்சாரம், இந்துவாக சொல்லப்படும் தமிழனுக்கும் ஒரு கலாச்சாரம் அப்படி எனில் இதை இந்து மதம் ஒழுங்குப்படுத்தவில்லையா?

    நான் சொல்வது மனித சமுதாயம் தோன்றி கலாச்சாரம் வந்து காலப்போக்கில் அவர்கள் செயல்களை வழிப்பாட்டின் அடிப்படையில் மதமாக்கிக்கொண்டார்கள். இதில் என்னவாயிற்று வழிப்பாட்டு செயல்கள் அல்லாமல் அவர்கள் செய்வது அனைத்திற்கும் பின்னர் மத அடையாளம் கொடுக்கப்பட்டு விட்டது. அப்படித்தான் பொங்கலும் ஆச்சு.

    தீபாவளி அன்று கறிக்கடையில் கூட்டம் அலை மோதும் பொங்கலுக்கு இருக்காது என்று ஒரு அரிய கருத்தை சொல்லி பொங்கல் இந்துப்பண்டிகை என்று அடித்து சொல்ல வருகிறார்.

    காணும் பொங்கல் அன்று கறிக்கடைப்பக்கம் போய் பார்த்தது இல்லை போலும்!

    கருத்துக்களை வைக்காமல் எதிர்க்கேள்வி கேட்பது, இல்லை , ஆமாம் என்று சொல்வதை கருத்து ரீதியாக பேசுவதாக சொல்லிக்கொள்வது நகைப்பிற்குரியது.

    ReplyDelete
  24. மீளக்காண்பதில் மகிழ்ச்சி.

    போனமுறை நானும் தைப்பொங்கற் பதிவுகளில் கருத்துச்சொன்ன ஞாபகமுள்ளது. அத்தோடு இதுவே ஆண்டுத்தொடக்கமென்ற கருத்தும் கடந்த வருடங்களில் முன்வைக்கப்பட் ஞாபகமுமுள்ளது.

    ReplyDelete
  25. // உண்மையில் கருத்து ரீதியாக பேச வேண்டும் எனில் ஓகை அவர்கள் எனது பின்னூட்டங்களை பிரித்து போட்டு அவற்றின் கீழே ஒரு வார்த்தையில் உண்மை , அப்படி இல்லை , என்ற ரீதியில் சொல்லிக்கொண்டு போவதை எப்படி கருத்தாக கொள்ள முடியும், அவரால் அது ஏன் அப்படி இல்லை என மாற்றுக்கருத்து வைக்க முடியாமல் தானே அப்படி செய்கிறார். //

    வவ்வால் அவர்களே,

    உங்கள் கருத்தொன்றை நான் உண்மை என்று ஒற்றை வரியில் ஏற்றுக் கொண்டதில் உங்களுக்கு ஆட்சேபம் இருக்க முடியாது.

    ////பொங்கலையும் அப்படித்தான் default இந்து பண்டிக்கை ஆக்கப்பட்டு விட்டது.//

    உண்மையில்லை.//

    இந்தக்கருத்துக்குத் தான் ஒற்றை வரியில் உண்மையில்லை என்று ஒற்றை வரியில் பதில் சொல்லியிருந்தேன். இப்பதிவில் நான் செய்து வரும் மொத்த விவாதமும் இது தொடர்பானது என்பதாலேயே அந்த ஒற்றை வரி பதில். இதில் தவறிருப்பதாக நான் நினைக்கவில்லை.

    ReplyDelete
  26. //நானும் இதுப்போன்ற ஒத்த கருத்தை எனது வார்த்தைகளில் சொல்லி இருக்கிறேன், ஆனால் அது தனி மனித தாக்குதல் அல்ல மூடத்தனமாக பேசுபவர்களை ஒட்டு மொத்தமாக குறிப்பது//

    தருமி,

    இப்பதிவில் மேற்கொண்டு விவாதிக்க எனக்கு மனமில்லை. வேறு பதிவில் சந்திப்போம்.

    நன்றி.

    ReplyDelete