தொடர்புடைய ஏனைய பதிவுகள்:
298. கடவுள் என்றொரு மாயை ... 1
300. கடவுள் என்றொரு மாயை ... 2
303. கடவுள் என்றொரு மாயை ... 3
305. கடவுள் என்றொரு மாயை ... 4
306. கடவுள் என்றொரு மாயை ... 5
309. கடவுள் என்றொரு மாயை ... 6
317. கடவுள் என்றொரு மாயை ... 7
330. கடவுள் என்றொரு மாயை ... 8
339. கடவுள் என்றொரு மாயை ... 9
344. கடவுள் என்றொரு மாயை ... 10
346. கடவுள் என்றொரு மாயை ... 11
347. கடவுள் என்றொரு மாயை ... 12
*
கடவுள் என்றொரு மாயை
THE GOD DELUSION
RICHARD DAWKINS
First Mariner Books edition 2008
==========================================
அப்புத்தகத்தில் நான் கண்டெடுத்த முத்துக்கள்:
=========================================
Chapter 3: ARGUMENTS FOR GOD'S EXISTENCE (pp100 - 136)
Can omniscient God, who
Knows the future, find
The omnipotence to
Change His future mind?
(என் முந்தைய பதிவொன்றில் இதை ஒட்டிய என் கேள்விகளை வைத்திருந்தேன்.)
*
எனது கல்லூரி இளங்கலை நண்பன் ஒருவன் மிகவும் கடவுள் நம்பிக்கையாளன். அவன் ஒரு முறை தன் தோழியோடு ஸ்காட் தீவு ஒன்றில் தங்கியிருக்கும்போது நள்ளிரவில் சாத்தானின் குரல் கேட்டு விழித்தார்களாம். அந்தக் குரல் எழுப்பிய பய்ங்கரத்தைத் தன் வாழ்நாளில் மறக்க முடியாதெனக் கூறினான்.
பின்பு ஒரு முறை விலங்கியல் நிபுணர்கள் சிலரோடு இருக்கும்போது நான் இந்த நிகழ்வைப் பற்றிக் கூறிய போது அவர்கள் அதிரடியாகச் சிரித்து 'Manx shearwater' என்றார்கள். இந்தப் பெயருடைய பறவை ஒன்று இதுபோல் நாராசமான குரலெழுப்பக் கூடியது என்றும், அதனாலேயே அது 'Devil Bird' (பேய்ப் பறவை) என்று அழைக்கப் படுவதாகச் சொன்னார்கள்.
*
இதைப் போலவே நம்பிக்கையாளர்கள் பலரும் தங்களுக்குக் கடவுளின் 'தரிசனம்' கிடைத்ததாகக் கூறுவதுண்டு. எனக்கும் கூட அப்படி ஒரு "தரிசன அனுபவம்" என் இளவயதில் கிடைத்ததுண்டு. இன்னும் பசுமையாக அது மனதில் இருக்கிறது.
*
பீட்டர் (Peter Sutcliffe) என்ற ஒரு கொலைகாரன் தன் காதில் பெண்களைக் கொலை செய்யச் சொல்லி ஏசுவின் குரல் ஒலித்ததாலேயே தான் பெண்களைக் கொன்றதாகக் கூறினான். George Bush கடவுள் ஈராக் மீது படையெடுக்க தான் கடவுளால் ஏவப்பட்டதாகக் கூறித்தான் அப்போரைத் தொடங்கினார்.(pp112)
*
Sam Harris என்பவர் தன் 'The End of Faith' என்ற தன் நூலில் இவ்வாறு கூறியுள்ளார்: மிகுந்த நம்பிக்கையாளர்களை நாம் ('religious') மத நம்பிக்கையாளர்கள் என்கிறோம். அனால், அவர்களை mad, psychotic ,or delusional என்றே அழைக்க வேண்டும் ....
மத நம்பிக்கையாளர்கள் பொதுவாக புத்தி பிசகியவர்கள் அல்ல; ஆனல் அவர்களது அடிப்படை நம்பிக்கைகள் அறிவற்றவையே. (pp113)
*
மத்தேயுவும் லூக்காவும் தங்களது விவிலியங்களில் ஏசுவின் பிறப்பைப் பற்றிப் பேசுகையில் ஆளுக்கொரு விதமாக சொல்லியிருக்கிறார்கள். .. தாவீதின் குலத் தோன்றல் என்று எழுதப்பட்டிருப்பதை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில், லூக்கா ஏசுவும் மரியாளும் பெத்லேகம் சென்றதாக எழுதியுள்ளார். உண்மையிலேயே தாவீது இருந்திருந்தாலும் அவர் ஏசுவின் காலத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பானவர். அவரது பிறப்பிடத்திற்குத்தான் அவரது வாரிசுகள் மக்கள் கணக்கெடுப்பிற்காக செல்ல வேண்டும் என்று எப்படி ரோமர்களால் நிர்ப்பந்திக்கப் பட்டிருப்பார்கள்? இதனாலேயே, Lane Fox தனது நூலான The Unauthorised Version-ல் லூக்காவின் கதை வரலாற்றுப்படி நடந்திருக்க முடியாததாக உள்ளது என்கிறார். (pp119)
*
Robert Gillooly ஏசு கதையில் வரும் - அவரது பிறப்பில் கீழ்த்திசையில் உதித்த விண்மீன், குழந்தை ஏசுவை ஆராதிக்க வந்த மூன்று அரசர்கள், அவர் வாழ்வில் ஏசு நடத்திய அதிசயங்கள், கொல்லப் பட்டது, உயிர்த்தெழுந்தது, பரலோகத்திற்கு எழுந்தருளியது - இவை எல்லாமே ஏற்கெனவே Mediterranean and New East regions-களில் இருந்துவந்த மதங்களில் இருந்துவந்த கதைகளே.
மத்தேயு், ஏசு தாவீதின் குடும்பத்தில் அவதரித்தவர், பெத்லேகமில் பிறந்தார் என்று சொல்லவேண்டிய கட்டாயத்திற்கும், லூக்கா, ஏசுவை மற்ற சாதியினருக்கும் பொதுவாக்க நினைத்ததால் கன்னிப்பிறப்பும், ஆராதிக்க வந்த மூன்று அரசர்கள் கதையையும் இணைக்க வேண்டிய கட்டாயத்திற்கும் நடுவில் எழுந்த பிரச்சனைகளே இந்த இருவரின் விவிலியங்களில் உள்ள வேற்றுமைகளுக்கான காரணம். ஆனாலும் இந்த வேற்றுமைகள் மிகத்தெளிவாக இருந்தாலும் அவைகளை நம்பிக்கையாளர்கள் கண்டு கொள்வதில்லை.
எப்படி இவைகள் வேத வார்த்தைகள் என்று நம்பும் மக்கள் இது போன்ற வித்தியாசங்களைக் கண்டு கொள்வதில்லை? மத்தேயு ஏசுவிற்கும் தாவீதுக்கும் நடுவே 28 பரம்பரைகள் இருந்ததாகச் சொல்கிறார். லூக்காவோ 41 பரம்பரைகள் நடுவில் இருந்ததாகச் சொல்கிறார். இரண்டிலும் வரும் பெயர்கள் ஒத்திருக்கவுமில்லை. அதோடு ஏசு உண்மையிலேயே கன்னித்தாயின் மூலமாகப் பிறந்திருந்தால் அவரது தந்த ஜோசப்பின் பரம்பரை தேவையற்றதாகி விடுகிறதே! (pp120)
*
புதிய ஏற்பாட்டின் 4 விவிலியங்களும் ஏற்கெனவே இருந்த பன்னிரண்டு விவிலியங்களுக்கும் மேலானவைகளிலிருந்து (தாம்ஸ், பீட்டர், நிக்கோடீமஸ், பிலிப். பார்த்தலோமியோ, மரிய மக்தலேனாள் போன்றோரின் விவிலியங்களிலிருந்து..)குத்து மதிப்பாக (arbitrarily) தெரிந்தெடுக்கப்பட்டவையே.(pp121)
*
மொழிபெயர்ப்புகளினால் ஏற்படும் பல மாற்றங்களுக்கு சில உதாரணங்களைத் தருகிறார்:
ஜோசப் தச்சு வேலை செய்தவர் என்று சொல்லப்படிகிறது. tekton என்ற க்ரீக் சொல்லுக்கு அந்தப் பொருளுண்டு.இந்த சொல்அராமிக் மொழியின் naggar என்ற சொல்லின் மொழியாக்கம். ஆனால் இந்த அராமிக் சொல்லுக்கு தச்சன் என்ற பொருளோடு, படித்தவன் என்ற பொருளும் உண்டு.
அடுத்து, ஹீப்ரு மொழியில் almah - இளம்பெண் - என்ற சொல்லே க்ரீக்கில் parthenos கன்னிப்பெண் என்று மொழி பெயர்க்கப்பட்டு ஏசுவின் பிறப்பு ஒரு கன்னித்தாயிடம் என்பதாக மாறியுள்ளது.
விவிலியங்களில் உள்ள இந்த மொழிபெயர்ப்பு வினோதங்களுக்குப் போட்டியாக குரானில் ஒரு வேடிக்கையான மொழி பெயர்ப்பு நடந்துள்ளது. Why I am not a muslim? என்ற நூலை எழுதிய Ibn Warraq தன் கட்டுரை ஒன்றில் கூறியுள்ளது: மார்க்கத்திற்காக தன் உயிரைக் கொடுக்கும் மதத் தியாகிகளுக்கு 72 "கன்னியர்கள்" சுவனத்தில் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருப்பது தவறு. ஏனெனில், கன்னியர்கள் என்பது ஒரிஜினல் சொல்லின் தவறான மொழியாக்கம்; உண்மையில் அது - white raisins of crystal clarity - அதாவது 72 நல்ல உலர்ந்த திராட்சைப் பழங்கள் கிடைக்கும் என்பதாகும்! இந்த உண்மை மட்டும் எல்லாருக்கும் தெரிந்திருந்தால் எத்தனை எத்தனை மனித வெடி குண்டுகள் வெடிப்பு தடுக்கப்பட்டு, எத்தனை எத்தனை மனித உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்க முடியும்? (pp123)
*
BERTRAND RUSSEL: பெரும் விஞ்ஞானிகள் பலரும் கிறித்துவ மதத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள்தான். ஆனால் தங்கள் வருமானம் தடைபட்டுப் போய்விடுமே என்பதால் பலரும் அந்த உண்மையை மறைத்துவிடுகிறார்கள். (pp123)
*
Nobel prize-winning Scientific Christians பற்றியான ஒரே ஒரு வலை மனையில் (web site) ஆறே ஆறு விஞ்ஞானிகளின் பெயர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. அதிலும் நால்வர் நோபல் பரிசு பெற்றவர்களில்லை! மீதி இரு்வரில் ஒருவர் சமூகக்காரணங்களுக்காக மட்டும் கோவிலுக்குச் செல்பவர் என்பது எனக்குத் தெரியும். (pp126)
அமெரிக்க மக்களை விடவும் அமெரிக்க விஞ்ஞானிகள் பலரும் மத நம்பிக்கையற்றவர்களே. .. and the most distinguished scientists are the least religious of all. (pp127)
*
Results of Paul Bell's meta-analysis in Mensa Magazine in 2002: படிப்பறிவோ புத்திசாலித்தனமோ அதிகமாக இருப்பவர்கள் மதங்களில் ஆழமான நம்பிக்கையில்லாதவர்களாக இருக்கிறார்கள்.
அட! இந்தக் கண்டுபிடிப்பு நல்லா இருக்கே! (pp129)
*
=====================================
இப்போது வாசித்துக் கொண்டிருக்கும் நூல்: JESUS PAPERS
வாசிக்கக் காத்திருக்கும் நூல்: Ibn Warraq's WHY I AM NOT A MUSLIM?
====================================
next chapter: 4. WHY THERE ALMOST CERTAINLY IS NO GOD

very nice and interesting post.
ReplyDeleteடாக்கின்ஸின் அந்த புத்தகம் அருமையான புத்தகம்.
நீங்கள் படித்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது. இது போன்ற புத்தகங்கள் தமிழில் வருவது சிறந்தது. அது இல்லாத போதில் அதற்கான அறிமுக கட்டுரைகள் இன்றைய தேவை.
தொடருங்கள்
மதங்களில் கொள்கைகளில் மிகவும் முட்டாள் தனமானது 'சுவர்க்கம்' பற்றிய கோட்பாடுகளும், நம்பிக்கைகளும் தான். ஆய்ந்தால் அவற்றில் ஒரு விழுக்காடு கூட தேறாது.
ReplyDeleteபடிச்சு முடிச்சாச்சா, அதுக்குள்ளும். அடுத்தடுத்த புத்தகங்களும் வெவகாரமானதாத்தான் லைன் கட்டி நிக்குதுங்க :-)).
ReplyDeleteதருமி, அனுபவித்ததை பகிர்ந்துகொள்வதற்கு நன்றிங்க!
//மிகுந்த நம்பிக்கையாளர்களை நாம் ('religious') மத நம்பிக்கையாளர்கள் என்கிறோம். அனால், அவர்களை mad, psychotic ,or delusional என்றே அழைக்க வேண்டும் ...//
ReplyDeleteஆனா வேடிக்கைய பார்த்திங்களா!
நம்மளை அவர்களை இந்த பேரில் தான் அழைக்கிறார்கள்!
//ஏசு உண்மையிலேயே கன்னித்தாயின் மூலமாகப் பிறந்திருந்தால் அவரது தந்த ஜோசப்பின் பரம்பரை தேவையற்றதாகி விடுகிறதே!//
ReplyDeleteதல! மதுரை ஆரப்பாளையத்திலேயே ஜோசப்புக்கும் ஒரு தேவாலயம் இருக்கு!
ஜெயலலிதா சில காரணங்களுக்காக இன்னொருவரை முதலமைச்சர் ஆக்கவில்லையா!
அதுபோல மத நம்பிக்கையாளர்கள் தேவைகேற்ப வரலாற்றையும் மாற்றுவார்கள்!
//மார்க்கத்திற்காக தன் உயிரைக் கொடுக்கும் மதத் தியாகிகளுக்கு 72 "கன்னியர்கள்" சுவனத்தில் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருப்பது தவறு. ஏனெனில், கன்னியர்கள் என்பது ஒரிஜினல் சொல்லின் தவறான மொழியாக்கம்; உண்மையில் அது - white raisins of crystal clarity - அதாவது 72 நல்ல உலர்ந்த திராட்சைப் பழங்கள் கிடைக்கும் என்பதாகும்!//
ReplyDeleteஅடப்பாவிகளா
இத்தனை நாளா இவனுக 72 கன்னிகளுக்காக தான் தானும் செத்து மத்தவங்களையும் கொல்றானுங்களா!
இங்கே ”இவனுக” என்பது அப்பட்டமான தீவிரவாதிகளை குறிக்கும்!
தன்னை ”தீவிரவாதி இல்லை” என்று நம்புபவர்கள் தயவுசெய்து டென்ஷன் ஆக வேண்டாம்!
//படிப்பறிவோ புத்திசாலித்தனமோ அதிகமாக இருப்பவர்கள் மதங்களில் ஆழமான நம்பிக்கையில்லாதவர்களாக இருக்கிறார்கள்.
ReplyDeleteஅட! இந்தக் கண்டுபிடிப்பு நல்லா இருக்கே! //
ஆமாங்க நல்லாருக்கு
எனக்கு படிப்பறிவு இல்லாட்டியும், புத்திசாலின்னு சொல்லிகலாம்மில்லையா!
மற்றவர்களும் தன்னை புத்திசாலி என காட்டி கொள்ள மத மறுப்புக்கு வர போகிறார்கள்!
//இது போன்ற புத்தகங்கள் தமிழில் வருவது சிறந்தது//
ReplyDeleteதமிழில் வந்தால் என்னை போல் தமிழ் மட்டும் அறிந்தவர்கள் மிகவும் பயனடைவார்கள்!
எழில் அண்னே உங்க புரோபைல் படம் :)
நன்றி எழில்.
ReplyDeleteகோவி,
ReplyDeleteஎல்லாம் அந்த தெரியாத, புரியாத, கண்டவர் விண்டிராத, விண்டவர் கண்டிராத 'விஷயத்து'க்காகத்தானே ...
தொல்ஸ்,
ReplyDelete//''வெவகாரமானதாத்தான் ...//
என்ன இப்படி சொல்லீட்டீங்க .. இதுல எல்லாம் என்ன வெவகாரம் இருக்குங்க?
அதுக்கு அடுத்து சொல்லியிருக்கிற புத்தகம் (it is on the way) என்னன்னு கேக்கலையே ...!
வால்ஸ்,
ReplyDelete//மதுரை ஆரப்பாளையத்திலேயே ஜோசப்புக்கும் ஒரு தேவாலயம் இருக்கு!//
அட ... அதுதானே நம்ம ஊட்டுக்கு பக்கத்தில இருந்த கோவில். st. mary's க்கு அடுத்து போனது, இருந்தது, அழுததுஎல்லாமே அங்கனதான ..
//
ReplyDeleteIslam deserves criticism on account of the logical consequences of its dogma, namely, that the murder of fellow human beings is to be rewarded with sensual pleasure in a hedonistic “Paradise”—a concept born in the fantasies of an Arab rebel some fourteen centuries ago. The religion of Mohammed is a dangerous system when the teachings and example of the “prophet” are believed and followed.
//
இது யார் சொன்னது தெரியுமா ?
ரிச்சர்ட் டாகின் தான்!!
இன்று இந்தியாவில் இவர் இப்படி சொல்லியிருந்தால்...இவரை ஹிந்துத்வா வெறியன் என்று கூறியிருப்பார்கள்!
Hi
ReplyDeleteI need your views on this.
Writers like Charu Niveditha who were claiming themselves as strong athiests earlier, have comprehensively made an U turn and now have become staunch followers of Nithyanandha. He also writes rubishes like Nithyananda is performing wonders like healing with hands, visible even away from his physical presence blah.. blah.. Is Charu's present condition is physicatric related?
gops
ReplyDeletei thought you were going to ask me whether i would ever change like charu!!
No Dharumi. After going through your detailed analysis and excerpts from "The God Delusion" Book, I know there is no question of you changing. Things are getting more clear now. My question is what could be the reason behind for people like Charu and(earlier Kannadasan)have to reverse their beliefs. Is that due to no clarity in understanding (either of the beliefs), fear for life or could there be vested interests forcing them?
ReplyDelete(Please tip me on how to write using Tamil fonts)
for writing in tamil: download a free software: ekaalappai (google.com). install this and then u can type on english phonetic
ReplyDeletechanging minds - dont you think it is all personal. could be things that happen around a person ...
people convert to some religion, say, when one of their troubles is solved by some 'divine power'!
Yes I accept it is Personal and we do not have any right to comment. I appologise for my comment. My point is, when people of such repute write such superstitious incidents as fact, in public forums, will this not mislead people who are greatly influenced by them? It's just my opinion and please throw clarity if I'm wrong.
ReplyDelete