Sunday, August 23, 2009

330. கடவுள் என்றொரு மாயை ... 8

தொடர்புடைய ஏனைய பதிவுகள்:


298. கடவுள் என்றொரு மாயை ... 1
300. கடவுள் என்றொரு மாயை ... 2
303. கடவுள் என்றொரு மாயை ... 3
305. கடவுள் என்றொரு மாயை ... 4
306. கடவுள் என்றொரு மாயை ... 5
309. கடவுள் என்றொரு மாயை ... 6
317. கடவுள் என்றொரு மாயை ... 7
330. கடவுள் என்றொரு மாயை ... 8
339. கடவுள் என்றொரு மாயை ... 9
344. கடவுள் என்றொரு மாயை ... 10
346. கடவுள் என்றொரு மாயை ... 11
347. கடவுள் என்றொரு மாயை ... 12

*




கடவுள் என்றொரு மாயை


THE GOD DELUSION


RICHARD DAWKINS
First Mariner Books edition 2008


==========================================

அப்புத்தகத்தில் நான் கண்டெடுத்த முத்துக்கள்:

=========================================

Chapter: 6
THE ROOTS OF MORALITY:
WHY ARE WE GOOD?



ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்:

இந்த பூமியில் நம் வாழ்க்கை வித்தியாசமான ஒரு விஷயம்தான். ஏதோ ஒரு சில காலத்திற்காக இங்கே வருகிறோம்; எதற்கென்று தெரியாது; சில சமய்ங்களில் ஏதோ ஒரு (Perceive intuitively or through some inexplicable perceptive powers)உள்ளார்ந்த காரணமாகக் கூட இருக்கலாம். ஆனாலும் தினசரி வாழ்க்கையில் நமக்குத் தெளிவாகத் தெரிவது ஒன்றுதான்: மனிதன் இருப்பது இன்னொரு மனிதனுக்காக - அதுவும் யாருடைய சிரிப்பிலும் நலத்திலும் நம் மகிழ்ச்சி அடங்கியுள்ளதோ அவர்களுக்காகவே.

*

பல நம்பிக்கையாளர்களுக்கு மதங்கள் இல்லாமல் எப்படி ஒருவன் நல்லவனாக இருக்கவோ, அல்லது இருக்கவேண்டுமென்ற நினைவோடு இருக்க முடியுமென நம்புவது மிகவும் கஷ்டம்.

*

சில மத நம்பிக்கையாளர்களுக்கு தங்கள் நம்பிக்கையோடு தொடர்பில்லாதவர்கள் மீது வெறுப்பு இருப்பதும் கண்கூடு.

*

பசி, பயம், பாலியல் ஈர்ப்புகள் - இவை எல்லாமே நாம் வாழவும், வாழ்க்கைப் பாதையில் தொடரவும் தோதுவான விஷயங்கள். ஆனால், ஒரு அனாதைக் குழந்தை அழுவதைக் கேட்கும்போதும், தனித்து விடப்பட்டு அல்லல்படும் ஒரு ஏழை விதவையைக் காணும்போதும், வலியில் அல்லல்படும் ஒரு விலங்கினைக் காணும்போதும் நம் மனத்துள் ஏற்படும் வேதனைக்குக் காரணம் என்ன? எங்கோ, நம் கண்ணில் நிச்சயம் படக்கூடாத, நாம் செய்யும் உதவிக்கு நன்றி சொல்லக்கூட முடியாத, சுனாமியால் பாதிக்கப்பட்ட யாரோ ஒருவருக்கு உதவட்டும் என்று பணமும், உடையும் அனுப்புகிறோமே அது எதற்கு?
நல்ல சமாரித்தனாக இருக்க வேண்டும் என்ற நினைவு எப்படி நம்மிடம் வருகிறது?

*
வரலாற்றுக்கு முந்திய நம் முன்னோர்கள் தன் குழுவினரைப் பாதுகாத்து, அதே சமயத்தில் அடுத்த குழுவினரைப் பகைமையோடு பார்த்து, பொருது தங்கள் குழுவினரைக் காத்தார்கள். ஆனால் இப்போது நாமோ பெரும் நகரங்களில் வசிக்கும் பலரும் உறவற்ற, ஏனைய மக்களோடு இணைந்திருந்தும், இனி இவர்களைப் பார்க்க வாய்ப்பு ஏதுமில்லை என்று தெரிந்த மக்களிடமும் இணைந்த நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்கிறோமே – எப்படி இந்த நல்ல குணம் வந்தது?

*
இதுபோன்ற நல்ல பண்புகள் இந்த மதத்தினருக்கு மட்டுமே என்பது போலன்றி எந்த மத நம்பிக்கையாளர்களுக்கும், மத நம்பிக்கையற்றோர்களுக்கும் நடுவில் பொதுவாக எங்கும் விரவி இருக்கிறது.
(இவ்விடத்தில் Marc Hauser, a Harvard Biologist கேள்வித்தாள் மூலம் செய்த ஒரு திறனாய்வு இப்புத்தகத்தில் மேற்கோளிடப்படுகிறது.)

*
Hauser-ன் திறனாய்வு மூலம், மத நம்பிக்கையாளர்கள் அவர்கள் மதக் கோட்பாட்டின் படி மத நம்பிக்கையற்றோரை விடவும் தங்களது நன்முறைக் கொள்கைகளில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதும் இருப்பது இல்லை.

அதோடு அவரது திறனாய்வின் வாக்கெடுப்பின் புள்ளிவிவரத்தில் மத மறுப்பாளர்கள், நம்பிக்கையாளர்கள் இருவருக்கும் எந்த வேறுபாடுமின்றி தங்கள் விடைகளைத் தந்துள்ளார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனால், நம்மை நல்லவர்களாக வைத்திருக்கக் கடவுள் தேவையில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

*
ஐன்ஸ்டீன்: மக்கள் எல்லோருமே தண்டனைக்குப் பயந்தோ, அல்லது வெகுமதிக்கு ஆசைப்பட்டோ மட்டும் நல்லவர்களாக இருக்க முயற்சித்தால், அது மிகவும் வருத்தத்திற்குரியதாகும்.

*
தனிமனிதக் குற்றங்களை முன்னிறுத்தும் மதங்களை (ஆப்ரஹாமிய மதங்கள்?) நம்புபவர்கள் எப்போதும் தங்கள் மத நம்பிக்கைகள் மட்டுமே தங்களை மனிதநேயத்தில் முன்னிலைப் படுத்துகின்றது என்று நம்புகிறார்கள்.

*
நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ள, சுய விழைவோடு தவறான காரியங்களில் இறங்காமலிருக்க கடவுளாலேயோ அல்லது வேறொன்றாலோ நமக்கொரு காவல்துறை – policing – தேவையா?

*
Steven Pinker கனடாவின் மோன்ரியாலில் 1960-ல் காவல்துறை ஒரு வேலை மறியல் நடத்திய போது நடந்தவைகளை விவரிக்கிறார்: காவல்துறை 10 மணிக்குத் தங்கள் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்ததும், 11.20க்கு முதல் வங்கிக்கொள்ளை; மதியத்திற்குள் எல்லா கடைகளும் மூடப்பட்டன; இரு கார்கள் தீவைப்பு; ஒரு காவல்துறையாளர் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொலை; நாள் முடிவதற்குள் 6 வங்கிகளில் கொள்ளை; 12 தீவைப்புகள் --- இன்னும் பல.

கேள்விகள்: காவல் துறையினர் இல்லாமல் இருக்கட்டுமே .. ஏன் அவர்கள் இல்லையென்றதும் இத்தனை கட்டுப்பாடற்ற கலகங்கள்; ஏன் கடவுளின் பயம் அவர்களைக் கட்டுப் படுத்தவில்லை?

கடவுளின் மேலுள்ள பயம் மட்டுமே நம்மைக் கட்டுப்படுத்துமா என்ற கேள்விக்கான ஒரு பதிலை இந்த நிகழ்வு பதில் கொடுக்கவில்லையா?

மதங்கள் வேண்டும் மனிதனை நல்வழிப்படுத்த என்று பலர் சொல்லும்போது அவர்கள் நிஜமாகச் சொல்வது – எங்களுக்குக் காவல்துறை மிகவும் தேவை!

*
சிறைகளின் உள்ளே இருப்பவரில் கடவுள் மறுப்பாளர்கள் மிகக் குறைவே.

*
கடவுள் மறுப்பு மட்டுமே அவர்களை நல்லவர்களாக்குகிறது என்பதற்குப் பதிலாக நான் கூறுவது: மனித நேயம் எப்போதும் கடவுள் மறுப்பாளர்களோடு சேர்ந்து செல்கிறது.

அதோடு,
கடவுள் மறுப்பு இன்னொரு முக்கியமான விஷயங்களோடு ஒன்றிப் போகிறது; உயர் படிப்பு, புத்திக் கூர்மை, reflectiveness இவைகளோடு கடவுள் மறுப்பு ஒன்றிப் போவதால், குற்றம்புரியும் தன்மைகள் குறைகின்றன்.

*
Sam Harris என்பவர் Letter to a Christian Nation-ல் அமெரிக்க மக்களைப் பற்றி எழுதியது:
ரிபப்ளிக்கன் கட்சி பெரும்பானமையான அமெரிக்க மாநிலங்கள் சிகப்பு மாநிலங்கள் – red states – என்றும், குடியரசுக் கட்சி பெரும்பான்மையான மாநிலங்கள் நீல மாநிலங்கள் – blue states – என்று அழைக்கப்படும். இதில் ரிபப்ளிக்கன் கட்சி ஆட்கள் பெரும்பாலும் அடிப்படைக் கிறித்துவர்கள் (conservative Christians).

• குற்றங்கள் குறைவாக நடக்கும் 26 நகரங்களில் 62 விழுக்காடு நகரங்கள் ‘நீலம்’.
• குற்றங்கள் அதிகமாக நடக்கும் 25 நகரங்களில் 76 விழுக்காடு நகரங்கள் ‘சிகப்பு’.
• அதிலும் அங்கே மிகவும் மோசமான குற்றங்கள் நடக்கும் என்று கருதப்படும் 5 நகரங்கள் ‘பக்திப் பிரவாகம்’ மிகுந்த டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ளன.
• மிகவும் அதிகமான பூட்டுடைப்புக் குற்றங்கள் நடக்கும் 12 மாநிலங்களுமே ‘சிகப்பு’தான்.
• 29 மாநிலங்களில் நடக்கும் திருட்டுக் குற்றங்களில் 24 மாநிலங்கள் ‘சிகப்பு’.
• கொலைக்குற்றங்கள் அதிகமாக நடக்கும் 22 மாநிலங்களில் 17 மாநிலங்கள் ‘சிகப்பு’.


*

இது மட்டுமல்ல. மேலெழுந்தவாரியாக இல்லாமல், முழுவதுமாக ஆராய்ச்சி செய்து மேலே சொன்னவைகளுக்கு முழு ஆதாரம் கிடைக்கும் வகையில் Gregory S. Paul என்பவர் Journal of Religion and Society (2005)-ல் 17 வளர்ந்த நாடுகளைப் பற்றிய ஆராய்ச்சி ஒன்று செய்து வெளியிட்டுள்ள அறிக்கை:

அதிகமான மத நம்பிக்கையும் கடவுளை முழுவதுமாக நம்பும் நாடுகளில் அதிக அளவிலான மனிதக் கொலைகள், இளமையில் இறப்பு, பாலின வியாதிகள், இளம்வயதில் கர்ப்பமாகுதல், கருக்கலைத்தல் (homicide, juvenile and early mortality, STD infection rates, teen pregnancy, and abortion in the prosperous democracies) மிக அதிகமாக உள்ளன.

இந்த ஆராய்ச்சி பற்றி Dan Dennett என்பவர் Breaking the Spell என்ற நூலில் சொல்வதில் முக்கியமான ஒன்று: கடவுள் நம்பிக்கைக்கும், மனிதர்களின் நேர்மைக்கும் ஏதும் ஒரு நல்ல தொடர்பு இருக்குமாயின் அது மிக எளிதில் கண்டுபிடிக்கப்பட்டு விடும். ஏனெனில் பல மதக் குழுக்கள் தாங்கள் காலங்காலமாய் நம்புவது போல் அதுபோன்ற ஒரு நிலைகண்டால் அதை அறிவியல் மூலம் உலகுக்கே அறிவித்து விட மாட்டார்களா?

20 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

மனித நேயம் என்பது ஒரு குணம், கடவுள் மறுப்பாளன், அல்லது கடவுளை நேசிப்பவன் என்ற லேபிளில் வருவது இல்லை. எந்த ஒரு தரப்பிலும், மனித நேயமும் அல்லது அதற்கெதிரான தன்மையும் இருக்கும்.

டாகின்ஸ்,இப்படிப்பொதுமைப் படுத்திச் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை என்பது வெள்ளிடை மலை. மதப் பிரச்சாரகர்கள் செய்த வாதத்திற்கு எதிர் வாதம் என்கிற அளவிலேயே குறுகி நிற்கிறது.

Sundararajan P said...

எப்படி எழுத வேண்டும் என்று ஓரளவு கற்றுக்கொண்டேன். நன்றி.

தேவன் மாயம் said...

ஆகா படித்துவிட்டு வருகிறேன்!!

தருமி said...

//மதப் பிரச்சாரகர்கள் செய்த வாதத்திற்கு எதிர் வாதம் ...//

மதங்களே மனிதனை மனிதனாக வைத்திருக்கிறது என்ற வாதங்களுக்கு எதிர்ப்பு வாதம்தான் இது.

தருமி said...

சுந்தரராஜன்,
ஓ! டாக்கின்ஸைப் பற்றிச் சொல்கிறீர்களா? நானும் என்னமோன்னு பயந்துட்டேன் ...

தருமி said...

வாங்க டாக்டர் .. முதல் முறையோ. வாங்க .. படிச்சிட்டு வாங்க

Thekkikattan|தெகா said...

ரொம்ப ஆர்வமூட்டும் பகுதி இது...

அதிலும் குறிப்பாக அந்த பச்சை நிறத்தில் சிவப்பு மற்றும் நீலத்திற்குமிடையேயான மேற்கோள் ஆச்சர்யமூட்டுகிறதுதானே :-) அங்கு சிவப்பு ஆட்களுக்கு (கன்செர்வேடிவ்) எங்கே போனது தனி மனித ஒழுக்கமும், கடவுள் துதிபாடலும்? சொர்க்கம், நரகம் கான்செப்ட்டும்? என்னமோ போங்க...

தருமி said...

தெக்ஸ்,
நீங்க நீலமா? சிகப்பா?

Thekkikattan|தெகா said...

நான் சிகப்புதான்... அதே மேற்கோள் காட்டிய கதைதான் இங்கும் - க்ரைம் சார்ந்து, ஆனா தெருவிற்கு நாலு சர்ச் இங்கே ;-)

Sundararajan P said...

// தருமி said...
சுந்தரராஜன்,
ஓ! டாக்கின்ஸைப் பற்றிச் சொல்கிறீர்களா? நானும் என்னமோன்னு பயந்துட்டேன் ...//

டாக்கின்ஸைப் பற்றி மட்டும் சொல்லவில்லை. அவரது எழுத்துகளை தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்த உங்கள் திறனையும் சேர்த்துத்தான் சொன்னேன்.

ஏன் அவ்வாறு சொன்னேன் என தெரிந்துகொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பை படித்துப்பாருங்கள்: http://sundararajan123.blogspot.com/2009/08/blog-post_19.html

Sundararajan P said...

ஓ! இந்த பஞ்சாயத்து 4-5 மாதமா நடக்குதா?

இதை முழுசா படிக்க ஒரு வாரம் ஆகும் போல இருக்கே!

நேரம் கிடைக்கும்போது படிச்சுட்டு நாமும் கோதாவில் இறங்கிட வேண்டியதுதான்! :)

கோவி.கண்ணன் said...

:)

மற்றொரு மாஸ்டர் பீஸ் இடுகை.

ஒருவன் நல்லவனாக இருப்பதும் கெட்டவனாக இருப்பதும் சூழல் தான் காரணம். சூழலையே கடவுள் தான் ஏற்படுத்துகிறார் என்று நம்பும் மதவாதிகள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.

கடவுளை நம்பு என்கிற பேரில் கட்டமைப்புகளைத்தான் கடவுள் நம்பிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

நம்புகிறவர்களுக்கு கூரையைப் பிய்துக் கொட்டுவதும் இல்லை, நம்பாதவர்களின் வாசல் கதவை சாத்தி செல்லும் சக்தியும் இல்லை.


/நம்மை நல்லவர்களாக வைத்திருக்கக் கடவுள் தேவையில்லை //

வெரி குட் !

கெட்ட நடவெடிக்கையாக குண்டுவெடிப்புகளும், ரயில் எரிப்புகளுக்கும் யாரைக் காரணம் சொல்லுவது என்று கடவுள் ரசிகர் மன்றத்தினரிடம் தான் கேட்கவேண்டும்.

இன்றைய கடவுள் நம்பிக்கைகள் அனைத்துமே கட்சி நம்பிக்கைபோல் தலைமையை துதி பாடும் அமைபினர் தான் மிகுதியாக இருக்கின்றனர்.

நானும் ஒரு நல்ல ஆத்திகரைத் தேடுகிறேன் கிடைத்தபாடில்லை.
:)

தருமி said...

//இன்றைய கடவுள் நம்பிக்கைகள் அனைத்துமே கட்சி நம்பிக்கைபோல் தலைமையை துதி பாடும் அமைபினர் தான் மிகுதியாக இருக்கின்றனர்.
//

அதிலேயும் 'எங்க தலைக்கு ஈடு உண்டா?' ன்னு கேக்கிறதிலதான் எம்புட்டு போட்டி!

கிருஷ்ண மூர்த்தி S said...

கோவி கண்ணன் சொன்னது:
/நானும் ஒரு நல்ல ஆத்திகரைத் தேடுகிறேன் கிடைத்தபாடில்லை.
:)/

பிரச்சினையே அது தான்!!
அடுத்தவன் எப்படியிருக்க வேண்டும் என்ற நம் விருப்பத்தை மட்டும் தொடர்ந்து சொல்லுவோம்-ஆனால், நாமே அப்படியிருக்க முயற்சி செய்தால்என்ன என்று மட்டும் நினைக்க மாட்டோம்!!

கிருஷ்ண மூர்த்தி S said...

தருமி ஐயா சொன்னது:
/மதங்களே மனிதனை மனிதனாக வைத்திருக்கிறது என்ற வாதங்களுக்கு எதிர்ப்பு வாதம்தான் இது./

சரிதான், வாதத்திற்குப் பதில் பிடி! வாதம்!

கிருஷ்ண மூர்த்தி S said...

தெக்கிட்டான் ரொம்ப ஆர்வமூட்டும் பகுதியா இதைக் கலருக்கு நடுவே பாத்துவிட்டுக் கடைசியாச் சொன்னது:

"என்னவோ போங்க"

சொல்லிப்புட்டு நீங்க எங்க போறீங்க? அதைச் சொல்லவே இல்லியே!

தருமி said...

கிருஷ்ணமூர்த்தி ஐயாவுக்கு,
பின்னூட்ட எண்ணிக்கைகளை கூட்டுவதற்கு நன்றிகள் பல.

கோவி.கண்ணன் said...

//கிருஷ்ணமூர்த்தி said...

கோவி கண்ணன் சொன்னது:
/நானும் ஒரு நல்ல ஆத்திகரைத் தேடுகிறேன் கிடைத்தபாடில்லை.
/

பிரச்சினையே அது தான்!!
அடுத்தவன் எப்படியிருக்க வேண்டும் என்ற நம் விருப்பத்தை மட்டும் தொடர்ந்து சொல்லுவோம்-ஆனால், நாமே அப்படியிருக்க முயற்சி செய்தால்என்ன என்று மட்டும் நினைக்க மாட்டோம்!!
//

நல்ல ஆத்திகர் யாருன்னு இலக்கணம் தெரியாமல் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறீர்களா ? அது தெரிந்ததால் தான் சொன்னேன்.

நான் இருக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியவில்லை தானே !
:)

வால்பையன் said...

உரையாடலில் கலந்து கொள்ளும் பொருட்டு!

கிருஷ்ண மூர்த்தி S said...

கோவிகண்ணன் சொன்னது:
/நல்ல ஆத்திகர் யாருன்னு இலக்கணம் தெரியாமல் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறீர்களா ? அது தெரிந்ததால் தான் சொன்னேன்./

இலக்கணம் படிச்சதில்லே, இலக்கியமும் படைச்சதில்லே!
பாடறியேன், படிப்பறியேன்
இலக்கணப் பள்ளிக்கூடம் தானறியேன்!

Post a Comment