Friday, February 23, 2007

202. பஸ் எரித்த பகத்சிங்குகள் - 2.
நான் அன்றே சொன்னேன்.
இன்று அதுவே நடந்தது.


*


$செல்வனின் பஸ் எரித்த பகத்சிங்குகள் வாசித்ததும் அவரது 'தவறான' கண்ணோட்டம் பார்த்தேன். அவரைப் போல் இந்த வழக்கு முடிந்து மூவருக்கு தூக்குத் தண்டனை என்றதும் நம் பதிவர்களில் பலருக்கு ரொம்ப சந்தொஷம். அந்த மூன்று பேருக்கு தூக்குத்தண்டனை என்றதும், 'ஆஹா! சட்டம் தன் கடமையைச் செய்து விட்டது' என்று சந்தோஷப்பட்டோர்களையும், செல்வனையும் பார்த்து 'அடப் பாவி மக்கா, இப்படி பச்சைப் புள்ளைகளா இருக்கீங்களேன்னு' அவங்களைப் பார்த்து எனக்குத் தோணிச்சி.

ஏன்னா, நான் இப்போ சமீபத்தில தான் வெண்மணியைப் பற்றிய குறும் படம் "ராமையாவின் குடிசை"யைப் பார்த்து வயிறெரிந்திருந்தேன். எனக்கு என்ன நினைப்பு வந்ததென்றால், இன்னும் பதினைந்து இருவது வருஷம் கழிச்சி ஒரு செய்திப் படமோ, குறும்படமோ எடுக்கப் படலாம். 'தர்மபுரி பஸ் எரிப்பு - நடந்தது என்ன?' என்ற தலைப்பிலோ, பார்ட்னர் செல்வன் சொன்னது போல் 'பஸ் எரித்த பகத்சிங்குகள்' என்றோ தலைப்பு இருக்கலாம். அதில வயசாயிப் போனாலும், முறுக்கு விடாத 3 ஆட்கள் அவங்க அரண்மனை மாதிரி வீட்ல உக்காந்து கிட்டு படம் எடுக்கிறவரிடம் ஒரு நேர்காணல் கொடுத்திட்டு இருப்பங்களாயிருக்கும். இன்னும் இந்த கால இடைவெளிக்குள் ஒரே ஒருதடவை 'ஜெ' ஆட்சி வந்திருந்தாலும் போதும்; பெயர் தெரியாத இந்த மூன்று பேருமே பதினைந்து வருஷத்தில் பெரிய 'பிஸ்தா' ஆயிருப்பார்கள். ஏன்னா, ஜெ இவர்களின் 'விசுவாசத்தை' மெச்சி இவர்களுக்கு அமைச்சர் பதவி, இல்ல at least வட்ட, மாவட்ட தலைவர்களாக ஆக்கி விட்டுருப்பார். அது போதாதா? அப்போ ரொம்ப தெனாவட்டாகவே அவர்களின் பேச்சு அந்த குறும்படத்தில் இருக்கும். எப்படி தாங்கள் தங்கள் தங்கத் தலைவியிடம் விசுவாசத்தோடு இருந்தார்கள் என்பதைப் பற்றி விலாவாரியாகவும், இந்தக் கல்லூரி மாணவர்கள் கொஞ்சம் கூட வருத்தமில்லாமல் தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க் கொண்டிருந்ததாலேயே தங்களுக்கு மிகவும் வருத்தம் வந்ததாகவும், அதனால் அந்த வருத்தத்தில்தான் பஸ்ஸுக்குத் தீவைத்தோம்; அதில் என்ன தவறு? என்றும் பேட்டியளிப்பார்கள்

ஆகவே மக்களே 'சட்டம் தன் கடமையைச் செய்து விட்டது என்று ரொம்பவும் சந்தோஷப்பட்டுக் கிட்டு இருக்காதீங்க... ஏனென்றால், எப்போதுமே தெரியுமே நம்ம ஊர்ல என்ன நடக்கும்னு. இன்னும்இந்த தீர்ப்போடு எல்லாம் முடியவில்லை. இனி இந்த 'பகத்சிங்குகள்' மேல் முறையீடு செய்வார்கள். சட்டம் அடிக்கடி சட்டையை மாத்த வேண்டியதிருக்கும். இந்த கேஸ் விஷயத்தில் - ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்ற கருத்தினாலும், இது rarest of rare case என்று கொள்ள முடியாததாலும் நம் நீதியரசர்கள் இந்தக் கேஸை ஒட்டுமொத்தமாக மேல் முறையீட்டில் தள்ளிவிடும் வாய்ப்பு நிறையவே உள்ளது.


அப்படியெல்லாம் நடந்து விடாது என்று சொல்லி விடாதீர்கள். வெண்மணி வெண்மணின்னு ஒரு பயங்கர சம்பவம் நினைவில் இருக்கிறதா? மூணு பேர் இல்லை முப்பது பேர். என்ன ஆச்சு அந்தக் கேஸ்? இப்பவும் அதில் சம்பந்தப் பட்டவர்கள் அந்த நிகழ்வை மய்யமாக வைத்து எடுத்த செய்திப் படத்திற்கு கம்பீரமாக உட்கார்ந்து நேர்காணல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் முதல் பாதியை மட்டுமாவது நம் நீதி மன்றங்கள் முழுமையாகக் கடைப் பிடித்து வருகின்றன என்பது நமக்குத் தெரியாதா என்ன?

சில பல ஆண்டுகள் நடந்து -அதற்குள் தண்டிக்கப் பட வேண்டியவர்களின் ஆயுட்காலமே கூட முடிஞ்சிரலாம் - அதன் பின் தண்டனை வெகுவாகக் குறைக்கப் பட்டு, சில ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று தீர்ப்பிடப்பட்டு, ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக 'பாவம், இந்தக் குழந்தைகள் ஏற்கெனவே சில காலம் சிறையில் இருந்து விட்டதால் அவர்கள் தண்டனை முடிந்ததாக'க் கருதப் படுகிறது; ஆதலால் அவர்களுக்குத் தண்டனை ஏதும் இல்லை எனவும் மேல் கோர்ட் முடிவு செய்துவிடலாம்.

அன்னைகளும், அய்யாக்களும் அப்சலின் தூக்குத்தண்டனை பற்றி பக்கம் பக்கமாக எழுதியவர்கள், பேசியவர்கள் இந்த தூக்குத் தண்டனை பற்றிய கருத்து ஏதும் சொல்லாமல் இருக்கிறார்களே என்று செல்வன் கேட்கிறார். எப்படியும் அவர்கள் விடுதலையாகி வரப் போகிறார்களே என்பதைப் புரிந்து கொண்ட காரணத்தால் அன்னைகளும், அய்யாக்களும் ஏதும் எழுதாமலோ, பேசாமலோ இருக்கலாமல்லவா ..?

====================== 888888888888888888888 ===================


இன்னொரு விஷயத்தில் எனக்குத் தெளிவில்லை; தெரிந்தவர்கள் பதில் கூறினால் நன்றாக இருக்கும்.

இந்த வழக்கின் ஆரம்பமே ப்ள்சண்ட் டே ஹோட்டல் விதி முறைகளை மீறி இரண்டு அடுக்கு மாடிகள் கட்டப்பட்டு விட்டன; அதனால் ஜெ ஒரு குற்றவாளி என்பதோடு, இரண்டு மாடிகளில் ஒன்றை இடித்து விட வேண்டுமென்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து வேடிக்கையான ஒரு வழக்கு குற்றவாளிகள் பக்கத்திலிருந்து போடப்பட்டதாம். எந்த மாடியை இடிக்க வேண்டுமென்று அந்த நீதி மன்றம் குறிக்காததால், அது எந்த மாடியை இடிக்கவேண்டுமெனக் கேட்டு இன்னொரு வழக்கு போடப்பட்டதாக அறிந்தேன். (நான் நீதிபதியாக இருந்திருந்தால் ரொம்ப சிம்பிள் தீர்ப்பு கொடுத்திருப்பேன்; கீழ்த்தளத்தை மட்டும் இடித்தால் போதும் என்று! திமிர்த்தனமாக வழக்குப் போட்டால், நீதிபதிக்குக் கோபம் வரவேண்டுமென்பது என் எதிர்பார்ப்பு.)

அப்படி போடப்பட்ட வழக்கு பின் என்னாயிற்று? விதிமீறலோடு கட்டப்பட்ட இரண்டு தளங்களோடுதான் இன்னும் இருக்கிறது என்று கேள்விப் படுகிறேன். அப்படியானால், அந்த வழக்கு, தீர்ப்பை நிறைவேற்றாததால் நடந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு, இதை இன்னும் கண்டு கொள்ளாத அடுத்த கட்சியின் அரசு, அப்படி கண்டு கொள்ளாமைக்குரிய காரணங்கள் - இவைகள் எல்லாம் என் போன்ற சாதாரண குடிமகனுக்குப் புரியவே இல்லையே!
*

24 comments:

பொன்ஸ்~~Poorna said...

//கீழ்த்தளத்தை மட்டும் இடித்தால் போதும் என்று!//

:)))

பகத்சிங்குகள் விஷயத்தில் நீங்கள் சொல்வதென்னவோ உண்மை தான்..:(((

thiru said...

மரணதண்டனையை எதிர்க்கிறேன். 3 மாணவிகளை கொலை செய்த அ.தி.மு.க தொண்டர்கள், அப்சல்...இன்னும் அறியப்படாத அனைத்து நபர்களையும் கொல்வது தடுக்கப்படவேண்டியது. உயிர்கொலையால் இறந்த உயிர்களை திரும்ப வரவைக்க முடியாது. இது பழிக்கு பழி என்னும் விதமான அணுகுமுறையே தவிர, குற்றவாளியை திருத்தும் நோக்கமோ, இன்னும் இப்படியான குற்றங்களை தடுக்கும் தன்மையோ மரணதண்டனைக்கு இல்லை. பலரை மரணதண்டனையில் கொன்றும் ஏன் இன்னும் குற்றங்கள் நடந்துகொண்டே இருக்கிறது என்பதை கவனிக்கவேண்டும்.

மற்றபடி நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உதாரணம் கீழவெண்மணி வழக்கு, ஜெயலலிதாவின் டான்சி நில வழக்கு தீர்ப்பு...என நீண்ட பட்டியல் இருக்கிறது :) நீதீ....

வஜ்ரா said...

அப்சலுக்கு தூக்குப் போடக்கூடாது என்று வாதிட்ட திம்மிக்கள், இதற்கு பதில் ஏதும் சொல்லாதது ஒன்றும் வியப்பளிப்பதாக இல்லை. (atleast for me it is not surprising)

அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் திம்மித்தனம் மட்டுமே. A classic example of dhimmitude.

..

வேண்டுமென்றால் கொள்கைக்கு விரோதம் வரக்கூடாது நாளை எவனும் பேசக்கூடாது என்பதற்காக, பத்ரி போல் தூக்கை எதிர்க்கிறேன். அது அப்சல் ஆனாலும் சரி, இந்த ஆதி.மு.க ஆனாலும் சரி என்று ஒன்று போட்டு விடுவார்கள்.

Geetha Sambasivam said...

உள்ளேன் ஐயா.

தாணு said...

தீர்ப்புகள் திருத்தப்படும், திரும்பப் பெறப்படும், ஆனால் விலை மதிப்பற்ற உயிர்கள் போனது போனதுதான். இந்த தீர்ர்ப்பின் மீது எனக்கும் நம்பிக்கையில்லை.

தருமி said...

நன்றி பொன்ஸ்.
வர வர நீங்கள் வர்ரது அட்டண்டென்ஸ் குடுக்க மட்டும் வர்ரீங்களோன்னு தோணுதே! :(

தருமி said...

திரு,
நான் உங்களுக்கு எதிர் கருத்துக்காரன்.//பலரை மரணதண்டனையில் கொன்றும் ஏன் இன்னும் குற்றங்கள் நடந்துகொண்டே இருக்கிறது // என்கிறீர்கள். என் எதிர்க் கேள்வி: இப்படி மரணதண்டனை கொடுத்தும்கூட குற்றங்கள் குறையவில்லை என்றால் அதுவும் இல்லாமல் எவ்வளவு பெரிய குற்றமானாலும் ஆயுள் தண்டனை என்ற பெயரில் ஏழு எட்டு ஆண்டுகள் மட்டும் வைத்திருந்து விட்டு விட்டால் என்ன ஆகும்?

என்னைப் பொறுத்தவரை உப்பு தின்னவனை தண்ணீர் குடிக்க வைக்கணும்.

தருமி said...

அப்பாடா! இந்த ஒரு விஷயத்தில் நாம் இருவரும் ஒத்த கருத்தினராக இருக்கிறோம்!!

dhimmitude - நல்லா இருக்கு. இந்த திம்மிக்குத்தான் அர்த்தம் சொன்ன பதிவைத் திரும்ப வாசிக்கணும். லின்க் இருக்கா?

தருமி said...

தாணு,
//உயிர்கள் போனது போனதுதான்..// அது சரி. ஆனால் தவறு செய்தவர்கள் அதுவும் இது போல் அரசியல்வாதிகளின் தவறுகள் தண்டிக்கப்படாமல் போவது மிகுந்த வயிற்றெரிச்சல்தான். யாரை நோவது?

தருமி said...

கீதா சாம்பசிவம்,
long time ... no see ..!

வெறும் attendance தானா ..?

Unknown said...

பார்ட்னர்

புதிய கோணத்தை சொல்லியிருக்கிறீர்கள்.உண்மைதான்.இந்திய சட்டமன்றங்கள் கிரிமினல்களால் நிரம்பி வழியும்போது இவர்கள் வருங்கால மந்திரிகளாக ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு ஒரே முறைவந்தால் இவர்கள் உடனடியாக 'நெஞ்சுவலி' என்று தனியார் மருத்துவமனையில் சேர்ந்து, சாட்சிகள் மிரட்டப்பட்டு எளிதில் வெளியே வந்துவிடுவார்கள்.அதன்பின் இவர்களுக்கு பதவி வர தடை ஏது?அல்லது இவர்களின் மனைவி, மகனுக்கு மந்திரி பதவி கொடுத்து அழகு பார்க்கவும் அம்மா தயங்கமாட்டார்.

இந்த 3 மாணவிகளின் தந்தையரும் உயிரை கொடுத்து, மிரட்டல்களுக்கு அஞ்சாமல், பல கஷ்டங்களுக்கு நடுவே நீதி காக்க போர் புரிந்து இந்த தண்டனை கிடைத்துள்ளது.ஒரு மாணவியின் தாயார் மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளார்.3 குடும்பங்கள் சிதைந்து, தமிழ்நாடு வேளான்கல்லூரி மாணவர்கள் பலரும் மனதளவில் பாதிக்கப்பட்டு நிற்க இந்த சம்பவம் வழிவகுத்துள்ளது.

இந்த வழக்கு நடந்தபோது திமுக அரசு பதவியில் இருந்தபோதும், மத்தியில் காங்கிரஸ் இருந்தபோதும் அரசு வக்கிலுக்கு கொலைமிரட்டல் விடப்பட்டுள்ளது என்றால் ஆட்சி மாறினால் எந்த லட்சணத்தில் விசாரனை நடக்கும் என்பதை சொல்லவா வேண்டும்?

இந்த மாதிரி வழக்குகளில் குற்ற்வாளிகளுடன் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள சிலரால் முடிவது எதனால் என்று யோசித்து பார்த்தால் விடை எளிதில் கிடைப்பதில்லை.

Geetha Sambasivam said...

hihihi, படிக்கிறேன், பின்னூட்டம் கொடுக்க முடியலை, ரொம்பவே பிசி, :D, நீங்க தான் வரதே இல்லையே, நானும் வரலைன்னு நினைக்க வேண்டாம்.

தருமி said...

கீதா சாம்பசிவம்,
//நீங்க தான் வரதே இல்லையே//

யாரு சொன்னா? நீங்க பாட்டுக்கு உசரமான இடத்துக்கு எல்லாம் போறீங்க. டாக்டர் என்னை உசரமான இடத்துக்கெல்லாம் ஏறக்கூடாதுன்னு சொல்லிருக்காருல்ல .. :)

தருமி said...

பார்ட்னர்,
//....எந்த லட்சணத்தில் விசாரனை நடக்கும் என்பதை சொல்லவா வேண்டும்?//

இனியும் இந்த வழக்கில் நாம் பார்க்க நிறைய "காட்சிகள்" இருக்கும் என்பதுவே நான் சொல்ல வந்தது.

ஓகை said...

// அன்னைகளும், அய்யாக்களும் அப்சலின் தூக்குத்தண்டனை பற்றி பக்கம் பக்கமாக எழுதியவர்கள், பேசியவர்கள் இந்த தூக்குத் தண்டனை பற்றிய கருத்து ஏதும் சொல்லாமல் இருக்கிறார்களே என்று செல்வன் கேட்கிறார். எப்படியும் அவர்கள் விடுதலையாகி வரப் போகிறார்களே என்பதைப் புரிந்து கொண்ட காரணத்தால் அன்னைகளும், அய்யாக்களும் ஏதும் எழுதாமலோ, பேசாமலோ இருக்கலாமல்லவா ..?//

இருக்கலாம். இருக்கலாம்.

தருமி said...

நன்றி, ஓகை

ஓகை said...

// நன்றி, ஓகை //

ஏனோ சுக்ராச்சாரியார் நினைவு வருகிறது.

தருமி said...

ஓகை,
//ஏனோ சுக்ராச்சாரியார் நினைவு வருகிறது. //

கொஞ்சூண்டு 'நோட்ஸ்; போட்ருங்களேன்...

அசுரன் said...

I have different opinion on Capital punishment. My reservation on $elvan's Half baked opinion is what I would like to share here.

The below one I published as a comment in Asuran Blog.

****************
http://poar-parai.blogspot.com/2006/10/blog-post_19.html

வழக்கம் போல அறிவு ஜீவி செல்வன் தனது அரைகுறை உண்மைகளின் அடிப்படையிலான ஜல்லிகளை தமிழ்மணத்தில் அடிக்கத் துவங்கி விட்டார். அப்சலும் தர்மபுரி மச்சான்களும் ஒன்று என்று பார்ப்பதே படு கேவலமான அவருடைய புத்தியை காட்டுவது என்பதிருக்க, அவரது வாதம் எந்தளவுக்கு உண்மைகளை புறக்கணித்துவிட்டு வெறும் சேறு வாரியிறைக்கும் நோக்கத்துடன் உள்ளது என்பதை இந்த பதிவின் பின்னூட்டங்களில் படித்து தெரிந்து கொள்ளலாம்(http://poar-parai.blogspot.com/2006/10/blog-post_19.html).


வினை விதைத்தவன் வினை அறுப்பான்.


விளைவுகளை மட்டும் விமர்சிக்கும் $சல்வன் மூல காரணத்தில் உள்ள அரசியலையும் அதில் பின்னி பிணைந்துள்ள பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையும் பற்றி கவலைப்பட வேண்டிய நிர்பந்தம் அவருக்கில்லை. அதைப் பற்றிய கேள்விகளுக்கும் இவரைப் போன்ற ஆன்மாவை அமெரிக்கனிடம் அடகு வைத்தவருகள்(-Edited-) இன்று வரை பதில் சொன்னதில்லை.


ஆயினும் தொடர்ந்து சேறு வாரியிறைக்கும் வேலையை மட்டும் செவ்வெனே செய்து வருகிறார்கள்.


அப்சலையும், தர்மபுரியையும் வெகு வசதியாக ஒப்பிட்டு எழுதியுள்ள டாலர்,
அதே கையோடு, காஷ்மீரையும் ஜெயலலிதா ஊழலையும் ஒப்பிட்டால் அவரது வாதம் எந்தளவுக்கு சாக்கடையின்(-Edited-) தரத்திற்க்கு கேவலமானது என்பது அம்பலமாகியிருக்கும்.

செய்வாரா? செய்யும் நேர்மை அவருக்குண்டா? இது வரை அப்படியொரு நேர்மையான அறச் சீற்றத்தை என்னுடம் நடந்த எந்தவொரு விவாதத்திலும் அவர் காட்டியதில்லை. எனவே அப்படியொரு வினையை அவரிடம் இந்த முறையும் எதிர்ப்பார்ப்பதற்க்கு எந்த மூகாந்திரமும் இல்லை.


இதையும் படிக்கவும்,
மறைக்கப்பட்ட செக்குலர் காஸ்மீரின் வரலாறு,
http://kaipulla.blogspot.com/2007/02/secular-kashmir-hiden-history.html

அசுரன்
***********************

Hope $elvan will engage a discussion with me in this blog, with right spirit and genuine intentions.

அசுரன் said...

And I would like to invite The great Elite Vajra as well for the discussion, If he has enoguh guts Please come forward.. And proove your Genuiness of Anti Timmitude
:-))(it seems yu become a Thimmy by deed :-)))

Will you come Vajra? I don't think So...

Asuran

balar said...

/*இவர்களின் 'விசுவாசத்தை' மெச்சி இவர்களுக்கு அமைச்சர் பதவி, இல்ல at least வட்ட, மாவட்ட தலைவர்களாக ஆக்கி விட்டுருப்பார்*/

நன்றாக சொன்னீர்...ஆனால் ஒரு வித்தியாசம், சில அரசியல்வாதிகள் அமைச்சர்கள் ஆன் பின் இந்த மாதிரி் செய்கிறார்கள்,இவர்கள் அந்த பதவிகளுக்கு வருமுன்னே செய்து விட்டார்கள்..

/*நான் நீதிபதியாக இருந்திருந்தால் ரொம்ப சிம்பிள் தீர்ப்பு கொடுத்திருப்பேன்; கீழ்த்தளத்தை மட்டும் இடித்தால் போதும் என்று*/
LOL :) :)

Anonymous said...

You'be been tagged..come down to my blog to check it out :)

Priya said...

Deep Thoughts...

Priya said...

From your posts...I can surely guess that you must be person with gr8 writing ability..and some what like a Professor..Well, Sir I am a student I would be pleasured if u visit my blog..

About your posts: They are very informative and interesting to read..

Post a Comment