Friday, June 10, 2011

505. WHY I AM NOT A MUSLIM ... 16

*



ஏனைய முந்திய பதிவுகள்:
பதிவு - 7
பதிவு - 8
பதிவு - 9
பதிவு - 10
பதிவு - 11
பதிவு - 12
 பதிவு: 13
பதிவு:  14
பதிவு: 15 

இப்பதிவு: 16



Image and video hosting by TinyPic




CHAPTER: 10

HERETICS AND HETERODOXY, ATHEISM AND FREETHOUGHT, REASON AND REVELATION

பல இஸ்லாமிய வேதாந்தங்களும், பிரிவுகளும், வேறுபட்ட கோட்பாடுகளும் இந்த பகுதியில் பேசப்படுகின்றன. (241 - 260)

CHAPTER 11: 

GREEK PHILOSOPHY AND SCIENCE AND THEIR INFLUENCE ON ISLAM
 பல காலக்கட்டங்களில் இருந்த ஸ்லாமிய வேதாந்தக் கோட்பாடுகளும், கிரேக்க வேதாந்தங்களும், அறிவியலும் இஸ்லாமிற்கு அளித்த தாக்கங்களும் பேசப்படுகின்றன. (261 - 275)

இவ்விரண்டு பகுதிகளும் நான் தொடர்ந்து எழுதி வரும் பகுதிகளுக்கு அத்தனை அவசியமானதில்லை என்று கருதுவதால் அவைகளைப் பற்றிய குறிப்புகளை இங்கே தராமல் அடுத்த பகுதிக்கு சென்றுள்ளேன்.

CHAPTER 12:

SUFISM OR ISLAMIC MYSTICISM

அன்றைய சூபிக்கள்,  ‘தான்’ என்ற நினைவையறுத்தவர்களாகவும், சந்நியாச நிலையில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருந்தார்கள். தெய்வீகத் தன்மைகளை விடவும் மேற்சொன்ன இரு பண்புகளையே போற்றி வந்தவர்கள்.  (277)

சூபிக்கள் இறையச்சத்தை விடவும் கடவுளின் மீதான அன்பு, ஞானம், தன்னிலை மறுத்தல், வெறும் கொள்கைப் பிடிப்போடு இல்லாது கடவுளுக்கான சேவையே சிறப்பானது என்ற கொள்கையோடும் இருப்பவர்கள். (278)

நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு நிற்பதை இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறதா?
 புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றி ஒரு தத்துவத்தை இஸ்லாம் முத்லில் இருந்தே வளர்த்து வந்துள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்புகள் bida - பிடா -  என்று அழைக்கப்படுகின்றன.

ஹடித்துகளின் படி ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புமே  நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட ஒன்று; ஆகவே இது  தவறு; இத்தைகைய தவறுகள் மனிதர்களை நரகத்திற்கே இட்டுச் செல்லும். ஒவ்வொரு கண்டுபிடிப்புமே சுன்னாவிற்கு எதிரான ஒன்று. முன்னாள் இறை வல்லுனர்கள்  புதிய கண்டுபிடிப்பாளர்கள் ஒவ்வொருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற கொள்கையைக் 
கொண்டிருந்தனர் ! ஆனால் வளர்ந்து வரும் அறிவியலோடு போட்டி போட முடியாததால், இந்த ‘பிடா’ இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டன. 

al-Shfi'i என்பவரால்,  குரானையோ, சுன்னாவையோ, ijmaவையோ மறுக்கும் எந்த ஒரு கண்டுபிடிப்பும் தவரான பிடா என்றும் (heretical bida),  இவைகளை மறுக்காத மற்ற கண்டுபிடிப்புகள் சரியான பிடா என்றும் (praiseworthy bida)  என்றும் கருதப்பட்டன. (278)
இஸ்லாம் மறுப்புகளை ஏற்றுக் கொள்வதுண்டா? ‘இல்லை’ என்பதே  இதற்கான பதில். Goldziher மறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பண்பு இஸ்லாமியரின் தோற்றக் காலத்தில் இருந்தது என்கிறார். (280)


CHAPTER 13

AL-MA'ARRI

சுய சிந்தனையாளர்கள், கடவுள் மறுப்பாளர்கள், மத நம்பிக்கைகளிலிருந்து மாறுபட்டு நிற்பவர்களை இஸ்லாமியத்தில் zindiqs என்றழைக்கிறார்கள். அப்படிப்பட்ட மிகச் சிறப்பான மூன்றாம் நிலையில் உள்ள ஒருவர்  Abu 'L-ala Ahmad al-Ma' rri (973 - 1057). இவரது பாடல்கள் எழுப்பும் சமயத்தொடர்பான, அதுவும் இஸ்லாமியத்திற்குத் தொடர்பான கேள்விகள் எந்த ’உண்மையான’ இஸ்லாமியரையும் நிலைகுலையச் செய்யும். 

அவரது சில பாடல்கள் மேற்கோள்களாக இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. சில பாடல்கள்;

                    Hanifs (= Muslims) are stumbling; Chrsitians all astray
                    Jews wildered, Magians far on error's way
                    We mortals are composed of two great schools
                    Enlightened knaves or else religious fools.

இஸ்லாமியத்தை மற்ற மதங்களோடு பிரித்துப் பார்க்கவில்லை. எல்லா சமயங்களுமே அவருக்கு ஒன்றுதான். சமயங்கள் எல்லாமே ‘முட்டாள்களின் தனிச்சொத்து’ என்கிறார்.

                  Mohammed or Messiah! Here thou me, 
                  The truth entire nor here not there can be;
                  How should our God who made the sun and the moon
                 Give all his light to One, I cannot see.

முகமதுவோ, ஏசுவோ முழுமையான உண்மைகள்  அங்குமில்லை; இங்குமில்லை.
எல்லாம் வல்ல, எல்லாவற்றையும் படைத்த ஒரு கடவுள் யாரோ ஒரே ஒரு மனிதருக்கு அவரின் முழுமையான அறிவைக் கொடுத்திருப்பாரா?
(285)

 இப்படியெல்லாம் கவிஞர்கள் எழுதிவிடுவார்கள் என்பதால்தான் இஸ்லாம் கவிதைகளுக்கு, பாடல்களுக்குத் தடை விதித்துள்ளது 
போலும் !!!



9 comments:

  1. அய்யா வணக்கம்,
    //இப்படியெல்லாம் கவிஞர்கள் எழுதிவிடுவார்கள் என்பதால்தான் இஸ்லாம் கவிதைகளுக்கு, பாடல்களுக்குத் தடை விதித்துள்ளது
    போலும் !!!//
    யார் சொன்னது இஸ்லாமில் கவிதை இல்லையென்று.அவர்களும் கவிதை பாடுவார்கள்.என்ன கொஞ்சம் சூழ்நிலைதான் வித்தியாசமாக் இருக்கும்.
    1.
    ___________
    2326. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
    நபி(ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களைத் தீயிலிட்டுக் கொளுத்தியும் (இன்னும் பல மரங்களை) வெட்டியும்விட்டார்கள். இந்தப் பேரீச்சந் தோப்புகளுக்குத்தான் 'அல் புவைரா' என்று கூறுவர். இதைக் குறிப்பிட்டுத்தான் ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி), 'புவைராவின் நெருப்பு பரவிக் கொண்டிருக்க, அதை (அணைத்திட) எதுவும் செய்ய முடியாமல் (இயலாமையுடன்) பார்த்துக் கொண்டிருப்பது 'பனூ லுஅய்' குலத்து (குறைஷித்) தலைவர்களுக்கு எளிதாகிவிட்டது" என்று (பரிகாசம் செய்து) கவிதை பாடுகிறார்கள்.
    Volume :2 Book :41
    ____________
    2,
    ____________
    3213. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
    நபி(ஸல்) அவர்கள் ஹஸ்ஸான்(ரலி) அவர்களிடம், 'எதிரிகளுக்கு (பதிலடியாக) வசைக் கவிதை பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (துணையாக) இருப்பார்" என்று கூறினார்கள்.
    Volume :3 Book :59
    ____________
    3
    _________
    3926. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தபோது அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கும் பிலால்(ரலி) அவர்களுக்கும் காய்ச்சல் கண்டிருந்தது. அவ்விருவரிடமும் நான் சென்று, 'என் தந்தையே! எப்படியிருக்கிறீர்கள்? பிலால் அவர்களே! எப்படியிருக்கிறீர்கள்" என்று கேட்டேன். அபூ பக்ர் அவர்களுக்கு காய்ச்சல் ஏற்படும்போது அவர்கள் பின் வரும் கவிதையைக் கூறுவார்கள்:
    காலை
    வாழ்த்துக் கூறப்பெற்ற
    நிலையில்
    ஒவ்வொரு மனிதனும்
    தம் குடும்பத்தாரோடு
    காலைப் பொழுதை அடைகிறான்....
    (ஆனால்,)
    மரணம் - அவன் செருப்பு வாரை விட
    மிக அருகில் இருக்கிறது
    (என்பது -
    அவனுக்குத் தெரிவதில்லை)
    பிலால்(ரலி) காய்ச்சல் நீங்கியதும் வேதனைக்குரல் எழுப்பி,
    'இத்கிர்' (நறுமணப்) புல்லும்
    'ஜலீல்' (கூரைப்) புல்லும்
    என்னைச் சூழ்ந்திருக்க..
    (மக்காவின்) பள்ளத்தாக்கில்
    ஓர் இராப் பொழுதையேனும்
    நான் கழிப்பேனா?...
    'மஜின்னா' எனும்
    (மக்காவின் இனிப்புச்சுனை) நீரை
    ஒரு நாள் ஒரு பொழுதாவது
    நான் பருகுவேனா...?
    (மக்கா நகரின்)
    ஷாமா, தஃபீல் மலைகள்
    (இனி எப்போதாவது)
    எனக்குத் தென்படுமா?...
    என்ற கவிதையைக் கூறுவார்கள்.
    உடனே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, (அவர்களின் நிலையைத்) தெரிவித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! நாங்கள் மக்காவை நேசித்தது போல் அல்லது அதை விட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்கு! மேலும் இவ்வூரை ஆரோக்கியமானதாகவும் ஆக்கு! எங்களுடைய (அளவைகளான) 'ஸாவு', 'முத்து' முதலியவற்றில் (எங்கள் உணவில்) எங்களுக்கு நீ அருள் வளத்தை வழங்கு! இங்குள்ள காய்ச்சலை இடம் பெயரச் செய்து அதை 'ஜுஹ்ஃபா' என்னுமிடத்தில் (குடி) அமர்த்திவிடு" என்று பிரார்த்திதார்கள்.
    Volume :4 Book :63
    _____________________
    இஸ்லாம் கவிதைகள்,வசை பாடல்கள்(எசை பாட்டு) போன்ற‌வற்றை அனுமதிக்கிறது.

    ReplyDelete
  2. 3039. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

    நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் பத்ருப் போரின்போது இணைவைப்பவர்களில் (மொத்தம்) நூற்றி நாற்பது பேரை பாதிப்புக்குள்ளாக்கி விட்டிருந்தார்கள். எழுபது பேரைக் கைதிகளாகப் பிடித்திருந்தார்கள்; எழுபது பேரைக் கொன்று விட்டிருந்தார்கள். எனவே, (அப்போது எதிரிகளின் அணியிலிருந்த) அபூ சுஃப்யான் (களத்தில் இறங்கி), '(உங்கள்) கூட்டத்தில் முஹம்மது இருக்கிறாரா?' என்று மூன்று முறை கேட்டார். அவருக்கு பதிலளிக்க வேண்டாமென்று நபி(ஸல்) அவர்கள் மக்களைத் தடுத்துவிட்டார்கள். மீண்டும் '(உங்கள்) கூட்டத்தில் அபூ குஹாஃபாவின் மகன் (அபூ பக்ர்) இருக்கிறாரா?' என்று மூன்று முறை கேட்டார். பிறகு, 'கூட்டத்தில் கத்தாபின் மகன் (உமர்) இருக்கிறாரா?' என்று மூன்று முறை கேட்டார். பிறகு தம் தோழர்களின் பக்கம் திரும்பி, 'இவர்களெல்லாம் கொல்லப்பட்டுவிட்டனர்" என்றார். (இதைக் கேட்டு) உமர்(ரலி), தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், 'பொய் சொன்னாய், அல்லாஹ்வின் பகைவனே! நீ எண்ணியவர்கள் எல்லாருமே உயிரோடு தான் இருக்கிறார்கள். உனக்கு மனத் துன்பமளிக்கும் ஒரு விஷயம் (மக்கா வெற்றி) தான் இப்போது எஞ்சியுள்ளது?' என்றார்கள். (உடனே) அபூ சுஃப்யான், 'இந்நாள், பத்ருப் போர் (நடந்த) நாளுக்குப் பதிலாகும். (நமக்கிடையிலான) போரில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருகிறது. (உங்கள்) கூட்டத்தாரில் நீங்கள் அங்கங்கள் சிதைக்கப்பட்டவர்களைக் காண்பீர்கள். அப்படிச் செய்யும்படி நான் கட்டளையிடவுமில்லை. அது எனக்கு மனத் துன்பத்தையளிக்கவும் செய்யாது" என்று சொல்லிவிட்டு பிறகு, 'ஹுபலே! உன் கட்சி மேலோங்கிவிட்டது, என்று கவிதை பாடலானார். நபி(ஸல்) அவர்கள் (தோழர்களை நோக்கி), 'இவருக்கு நீங்கள் பதிலளிக்க மாட்டீர்களா?' என்று கேட்டார்கள். தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! நாம் என்ன(பதில்) சொல்வது?' என்று வினவ, நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; மிக மேலானவன்' என்று சொல்லுங்கள்" என்று கூறினார்கள். அபூ சுஃப்யான், 'எங்களுக்கு 'உஸ்ஸா' (எனும் தெய்வம்) இருக்கிறது; உங்களிடம் உஸ்ஸா இல்லையே" என்று கவிதை பாடினார். உடனே நபி(ஸல்) அவர்கள், 'இவருக்கு நீங்கள் பதிலளிக்க மாட்டீர்களா?' என்று கேட்டார்கள். தோழர்கள், 'நாங்கள் என்ன (பதில்) சொல்வது? இறைத்தூதர் அவர்களே!" என்று வினவ, நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வே எங்கள் உதவியாளன்; உங்களுக்கு உதவியாளனே இல்லையே!' என்று சொல்லுங்கள்" என்று பதிலளித்தார்கள்.
    Volume :3 Book :56

    3841. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    (கவிஞர்) லபீத் அவர்கள் சொன்ன 'அறிக! அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருள்கள் அனைத்துமே அழியக் கூடியவையே" என்றும் சொல்தான், கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல்லாகும். (கவிஞர்) உமய்யா இப்னு அபிஸ் ஸல்த் (தன் கவிதையின் கருத்துகளால்) இஸ்லாத்தை ஏற்கும் அளவிற்கு வந்துவிட்டார்.
    என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
    Volume :4 Book :63

    ReplyDelete
  3. சுவனப்பிரியன்
    என்ன சொல்ல வருகிறீர்கள் என்று தெரியவில்லை.

    ReplyDelete
  4. சார்வாகன்
    ஓவியமும், கவிதையும், பாட்டும் நமக்கு வேண்டாமென்பது இஸ்லாமியக் கொள்கைதானே?

    ReplyDelete
  5. //சார்வாகன்
    ஓவியமும், கவிதையும், பாட்டும் நமக்கு வேண்டாமென்பது இஸ்லாமியக் கொள்கைதானே?//
    வணக்கம்
    இஸ்லாமில் ஒரு விஷயத்தை பற்றி இப்படித்தான் என்று அறுதியிட்டு கூற முடியாத விஷயங்களில் இதுவும் ஒன்று.கவித பற்றி மட்டும் முதலில் பார்ப்போம்.
    1
    _____________
    குரான் ஓதுவதே ஒரு இசை வடிவான கவிதை போன்றே உள்ளது.ஆகவே திரு முகமது குரானை ஓதி காட்டியது அக்கால வழக்கப்படி ஏதோ கவிதை பாடுகிறார் என்று நினைத்து விட்டார்கள்.

    குரானில் சொல்லப் படுவது

    36:69. (நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல; இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை.

    52:30. அல்லது அவர்கள் (உம்மைப் பற்றி, “அவர்) புலவர்; அவருக்குக் காலத்தின் துன்பத்தைக் கொண்டு நாங்கள் வழி பார்த்துக் இருக்கிறோம்” என்று கூறுகிறார்களா?

    69:40. நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்.
    69:41. இது ஒரு கவிஞனின் சொல்லன்று; (எனினும்) நீங்கள் மிகவும் சொற்பமாகவே நம்புகிறீர்கள்.

    அகவே குரானை ஒரு கவிதை என்றும் கூற இயலும்.
    ______________

    2.
    ______
    இந்த குரான் போல சில அத்தியாயங்களை கொண்டு வர முடியுமா? என்று சவால் விடுக்கிறது.அப்போது எதிர் கவிதை எழுத சொல்கிறது என்றுதானே அர்த்தம்..
    11:13. அல்லது ”இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்” என்று அவர்கள் கூறுகிறார்கள்? “(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் - நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
    _________________

    இந்த வசனம் எதிர் கவிதை பாடிய கவிஞர்களை வழி கேடர்கள் என்கிறது.


    26:223. தாங்கள் கேள்விப்பட்டதையெல்லாம் (ஷைத்தான்கள் அவர்களின் காதுகளில்) போடுகிறார்கள்; இன்னும் அவர்களில் பெரும் பாலோர் பொய்யர்களே.
    26:224. இன்னும் புலவர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்கள் தாம் பின்பற்றுகிறார்கள்.
    ____________
    இஸ்லாமுக்கு விரோதமான கவிதைகள் தவறு என்று குரான் கூறுவதாக கூறலாம்.
    ****

    2.மேலே நான்,நண்பர் சுவப் பிரியன் கூறிய ஹதிதுகளிலும் கவிதை ,எதிர்கவிதை திரு முகமது ஆள் அம்ர்த்தியாவது பாடியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.எதிர் கவிதை பாடியவர்களை குறை கூறும் ஹதிதுகள் உண்டு.
    ___________
    ஆக மத விரோதமில்லாத கவிதை அனுமதிக்கப்பட்டது.ஆனால் நடைமுறையில் வரலாற்று ரீதியாக இருந்ததை,இருப்பதை இபின் வாராக் கூறியுள்ளார்.
    ந்ன்றி

    ReplyDelete
  6. //இப்படியெல்லாம் கவிஞர்கள் எழுதிவிடுவார்கள் என்பதால்தான் இஸ்லாம் கவிதைகளுக்கு, பாடல்களுக்குத் தடை விதித்துள்ளது
    போலும் !!!//

    இதற்கு பதில்தான் நான் கொடுத்திருக்கும் ஹதீதுகள். குர்ஆனே கவிதை நடையில்தானே அருளப்பட்டது. பொய்யான கவிதைகளும், அளவுக்கு மிஞ்சின வர்ணனைகள் உடைய கவிதைகளையே இஸ்லாம் தடை செய்கிறது.

    ReplyDelete
  7. //வர்ணனைகள் உடைய கவிதைகளையே இஸ்லாம் தடை செய்கிறது. //

    வர்ணனை இருந்தால்தானே அது கவிதை; இல்லாவிட்டால் அது உரைநடை தானே!

    ReplyDelete
  8. வணக்கம்
    இஸ்லாமின் நடைமுறையில் குரான் ,ஹதிதில் சொல்லாத பல விஷயம் வரலாற்று ரீதியாக இருந்து வந்திருக்கிறது என்பது அறிந்ததுதானே.ஒன்றை மத புத்தகம் கூறினால் அதன் மிகைபடுத்திய செயலை அதாவது எள் என்றால் எண்ணெய் ஆ(க்)க முற்படும் (சொர்க்கத்திற்கு முந்து) மதவாதிகள் இம்மாதிரி காரியங்களை செய்வார்கள்.பின் வரும் மத வாதிகள் அவர்கள் செய்தது மதத்தில் இல்லை,அதற்கும் எங்களுக்கும் சபந்தம் இல்லையென்பதும் சக்ஜம்தான்.
    *****
    உங்களுக்காக ஒரு பதிவு இட்டிருந்தேன் பார்த்தீர்களா?
    ___________
    கடல் நீர் எரிபொருள் ஆகுமா? கடல் தீப்பற்றி எரியுமா?
    http://saarvaakan.blogspot.com/2011/05/blog-post_13.html

    ReplyDelete