Monday, March 28, 2011

486. WHY I AM NOT A MUSLIM ...9

*



ஏனைய முந்திய பதிவுகள்:
பதிவு - 7
பதிவு - 8

இப்பதிவு: 9
*


Image and video hosting by TinyPic



CHAPTER 5

THE KORAN... 
தொடர்ச்சி .. 2

அராபிய மொழியாக்கம்:

அறிஞர் நோல்டெக் (Noldeke) குரானிலுள்ள அராபிய மொழி பற்றிச் சொல்லும் சில கருத்துக்கள்:

குரானின் மொழி நடையில் உள்ள குறைபாடுகளைப் பற்றி பலவும் சொல்லியுள்ளார் ---

* சொல்லப்படும் கருத்துக்க்களில் உள்ள தொடர்பின்மை
* சொற்றொடர்களின் அமைப்பு மொழி வளத்தை மிகக் குறைக்கின்றன.
* சொற்றொடர்கள் 'when', 'on the day when' போன்ற சொற்களோடு ஆரம்பிப்பதால், ஒவ்வொரு சொற்றொடருக்கும் ஏற்றாற்போல் சில ellipsis-களைச் சேர்க்க வேண்டியதுள்ளது.
* சொல்லாக்கம் மிகவும் குறைபாடுகளுள்ளது; ஒரே வார்த்தைகள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன. சான்றாக, xviii-யில் 'till that' என்ற சொல் 8 முறை திருப்பித் திருப்பி வந்துள்ளன.
* மொழி நடையின் சிறப்பு சுத்தமாக முகமதுவிடம் இல்லை. (Mahomet in short, is not in any sense a master of style.) (110)

Ali Dashti சொல்லும் சில இலக்கணப் பிழைகள்:
* 4 :162 - இதிலுள்ள performers;
* 49 : 9 - வினைச்சொல்லில் உள்ள ஒருமை / பன்மை தவறு
* 20 : 63- hadhane

இந்த சில சான்றுகள் மூலம் Ali Dashti குரானில் நூற்றுக்கு மேற்பட்ட மொழியியல் தவறுகள் இருப்பதாகக் காண்பித்துள்ளார். (112)


விடுபட்ட / சேர்க்கப்பட்ட வசனங்கள்:

முகமதுவின் மனைவியான ஆயிஷாவின் கூற்றுப்படி முறைகேடான பாலியல தவறுகளுக்குக் கல்லால் அடித்துக் கொல்லும் சட்டம் பற்றிய வசனம் குரானில் இருந்திருக்கிறது. ஆனால் அது நீக்கப்பட்டு விட்டது. இப்போதுள்ள குரானில் நூறு சவுக்கடிகள் என்பதே தண்டனையாகச் சொல்லப்பட்டிருந்தாலும் முதலிலிருந்த கலிபாக்களும் இந்தக் கல்லால் எறியும் தண்டனையைத் தான் அமுல் படுத்தியுள்ளார்கள். இன்றுமே சவுக்கடிகளே தண்டனை என்றாலும் கல்லால் அடித்துக் கொல்லும் முறையை இஸ்லாமியர் கைக்கொள்வது ஏனென்று தெரியவில்லை.

அரசியல் காரணங்களால் உத்மன் அலிக்குச் சாதகமான பல வசனங்களை நீக்கியதாக Shiities கூறுகின்றனர்.

நபியே சில வசனங்களை மறந்திருக்கலாம்; அவரோடு இருந்தவர்கள் அதேபோல் சிலவற்றை மறந்திருக்கலாம்; படியெடுத்தவர்கள் சிலவற்றை மறந்திருக்கலாம். ’சாத்தானின் வசனங்கள்’ முகமதுவினால் மறைக்கப்பட்ட / மாற்றப்பட்ட வசனங்கள் தானே.

மேற்கத்திய அறிஞர்கள் மட்டுமல்ல இஸ்லாமிய அறிஞர்களுமே சில வசனங்களின் உண்மைத்துவத்தைக் கேள்வி கேட்பதுண்டு. கலிபா அலியைப் பின்பற்றிய பல Kharijites குரானில் வரும் ஜோசப்பின் கதை மிகவும் விரசமாகவும், குரானில் இருக்கத் தகுதியில்லாத வசனமாகவும் இருப்பதாகக் கூறுவர்.

மற்றும் பலர் குரானில் சில வசனங்கள் பின்னாளில் சேர்க்கப்பட்டுள்ளவை என்றும் சொல்வதுண்டு. 42: 36-38 வசனங்கள் உத்மனைச் சிறப்பிக்கவும், அலியைத் தாழ்த்தவும் சேர்க்கப்பட்டதாக உள்ளது.

சில இடங்களில் இரு சின்ன வசனங்களை இணைக்கவோ, இசைக்காகவோ சேர்க்கப்பட்ட வசனங்களுமுண்டு.(112)

Bell & Watt - இவ்விருவரும் குரானின் நடையிலுள்ள வேற்றுமைகள் இந்த பிற்சேர்க்கை / பிற்கழிவுகளால் ஆனது என்கிறார்கள்.

Chrisitian al-Kindi 830-ம் ஆண்டிலேயே குரானில் இத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்கிறார். வரலாறு மாற்றப்பட்டிருப்பதுவும், முறையற்று இருப்பதையும் வைத்துப் பார்க்கையில் பலரின் இடைச்செருகல் இருப்பதாகக் கூறியுள்ளார்.

சான்றுகள்:
• 20:15. ஓசையில் முற்றிலும் மாறுபட்ட இந்த வசனம் இந்த சுராவில் உள்ள மற்ற வசனங்களிலிருந்து பெரிதும் மாறுபட்டு நிற்கின்றது.
• 78:1-5 - இந்த வசனம் நிச்சயமாக ஒரு இடைச்செருகல்; ஏனெனில் அவை மற்ற சுராவோடு ஒத்துப் போவதில்லை.
• இதே சுராவில் வசனங்கள் 33-ம் 34-ம் வசனங்கள் 32க்கும் 35க்கும் இடையில் செருகப்பட்ட வசனங்களாக இருக்க வேண்டும். 32-35-க்கும் உள்ள தொடர்பு இந்த இடைச்செருகலால் தடைபடுகிறது.
• 74வது சுராவில் உள்ள 31வது வசனம் ஒரு இடைச்செருகலாக இருக்க வேண்டும். ஏனெனில், அந்த வசனம் மற்றைய வசனங்களை விட மிக நீளமானதாகவும், நடையில் மாறுபட்டதாகவும் உள்ளது.
• சுரா 50-ல் உள்ள வசனங்கள் 24-32 ஒரு இடைச்செருகலே. அந்த வசனங்கள் தேவையில்லாத இடத்தில் அமைந்துள்ளன.

* 12 இடங்களில் சில விளக்கங்கள் வசனங்களோடு இணைந்து வந்துள்ளன. இவை பிற்காலச் சேர்க்கைகள். இவைகளில் சொல்லப்படும் விளக்கங்கள் வசனங்களில் உள்ள வார்த்தைகளின் பொருளிலிருந்து மாறுபட்டுள்ளன. (.. the 'definitions' do not correspond to the original meaning of the word or phrase.) இதற்குச் சான்றாக Bell & Watt கொடுக்கும் சான்று:
101:9-11-வில் hawiya என்ற சொல்லுக்கு ‘நரகம்’ என்ற பொருள் தரப்படுகிறது. ஆனால் அந்த சொல்லின் உண்மையான பொருள்: ‘குழந்தையற்ற நிலை’ என்பதாகும்.

இந்த மாற்றங்கள் எல்லாம் எவ்வளவு சிறிதாக இருந்தாலும் இஸ்லாமியக் கொள்கைகளுக்கு இவை மிகவும் முரணானவை. ஏனெனில் இந்த வசனங்கள் அல்லாவினால் மதினாவிலோ மக்காவிலோ முகமதுவிற்குக் கூறப்பட்டவை என்கிறார்கள் இஸ்லாமியர்கள்
. (113)

இதில் இன்னொரு interesting வரலாற்றுப் பின்னணி ஒன்றும் உண்டு.
Abd Allah b.Sa'd Abi Sarh - இவர் மதினாவில் குரானை எழுதப் பணிக்கப்பட்டவர். அவ்வாறு எழுதும்போது இவர் முகமதுவின் அனுமதியின் பேரில் வசனங்களின் கடைசிச் சொற்களை மாற்றி எழுதுவதுண்டு. உதாரணமாக, முகமது 'And God a mighty and wise' என்று சொன்னதை 'knowing and wise' என்று மாற்றி எழுதலாமா என்று கேட்டு, அதற்கு முகமது அனுமதி தரவே அவர் அவ்வாறு மாற்றி எழுதினார்.

அல்லாவின் வார்த்தைகளை தன்னைப் போன்ற ஒரு சாதாரண மனிதன் இவ்வாறு மாற்றி மாற்றி எழுதலாமா என்ற கேள்வியை எழுப்பி, அதனால் மதம் மாறி, மெக்காவிற்குச் சென்று Qorayshites- களிடம் சென்று விட்டார். இதனால் கோபம் கொண்ட முகமது மெக்காவைக் கைப்பற்றியதும் அவரைக் கொல்ல ஆணையிடுகிறார். ஆனால் உத்மனின் சிபாரிசால் அவர் அதிலிருந்து தப்பிவிட்டார்.

நீக்கப்பட்ட பகுதிகள்:
Self-Contradictions of the Bible என்ற நூலை William Henry Burr என்பவர் எழுதியுள்ளார். அந்த மாற்றங்களை விடவும் குரானில் இன்னும் பல மாற்றங்கள் உண்டு. ஆனால் இவைகளைச் சமாளிக்க அல்லாவே ஒரு வசனம் கொடுத்துள்ளார். 2: 106 - எந்த ஒரு வசனத்தையாவது நாம் அகற்றி விட்டால் அல்லது மறக்கச் செய்து விட்டால் (அல்லாவுக்கே மறந்துவிடுமா ...!!) (அதற்குப் பதிலாக) அதனினும் சிறந்த அல்லது அதே போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம். (இது அல்லா சொன்னது என்பதைவிட முகமது சொல்வது போல் எனக்குத் தெரிகிறது! ஒரு adjustment மாதிரி!)

al-Suyuti என்பவர் இதுபோன்ற எடுக்கப்பட்ட பகுதிகள் ஏறத்தாழ 500 வரை இருக்குமென்கிறார். இவர் சுரா 2-ல் 240வது வசனம் 234வது வசனத்தை supersede செய்து விடுகிறது. (234 - விதவைகள் நான்கு மாதம் 10 நாட்கள் தாமாகக் காத்திருக்க வேண்டும். 240 - விதவைகள் ஓராண்டுவரை வீட்டை விட்டு வெளியேற்றப்படாமல் இருக்க வேண்டும்.)  

குரானின் சுராக்கள் கால வாரியாக அட்டவணைப் படுத்தப்படவில்லை. நீள சுராக்கள் முதலில் வருவதாக அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.  சில மேற்கத்திய கால வரைமுறை முயற்சிக்கப்பட்டு முகமது மெக்காவில் மெதீனாவில் இருந்த போது வந்த வசனங்கள் என்று இரு கூறாகப் பிரிக்கப்பட்டுள்ளன. (114)

இஸ்லாமியர்கள் ஒரு சிக்கலில் இருந்து விடுபட நினைத்து இன்னொரு சிக்கலில் மாட்டிக் கொள்வதுண்டு. எல்லா ஆற்றலுமுள்ள, எங்குமிருக்கும், எல்லா வல்லமையும் பெற்றிருக்கும் கடவுள் அவரது கட்டளைகளையே மீண்டும் மீண்டும் மறு பரிசீலனை செய்யும்படியாகவா இருக்கும்? ஒரு கட்டளையைக் கொடுத்து விட்டு, பின் அதையே மறு பரிசீலனை செய்யவா வேண்டும்? அறிவு நிறைந்த அல்லா ஏன் முதல் தடவையே  அதைச் சரியாகச் சொல்லவில்லை? முதல் முறையே ஏன் முறையான வசனத்தைத் தரவில்லை?


Dashti சொல்கிறார்:   அந்தக் காலத்திலேயே குரானைக் கேலி செய்தவர்கள் உண்டு போலும். சிலர் இதுபோன்ற கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். அதற்குப் பதிலாக 16: 103, 104-ல்- (103)  ”ஒரு மனிதரே இதனை அவருக்குக் கற்றுக் கொடுக்கின்றனர்” என்று இவர்கள் கூறுவதைத் திண்ணமாக நாம் அறிவோம். ஆனால் உண்மையில் இவர்கள் சுட்டுக் காட்டுகின்ற மனிதருடைய மொழி வேற்று மொழி; இதுவோ தெளிவான அரபி மொழியாகும். (இந்த மொழியில் உள்ள பிழைகளையும் பலர் சுட்டிக் காண்பித்ததாகி விட்டதே!)  (104) எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை ஏற்றுக்  கொளவதில்லையோ அவர்களுக்கு நேரிய வழியை அடையும்பேற்றினை அல்லாஹ் ஒரு போதும் வழங்குவதில்லை. மேலும் அத்தகையோருக்குத் துன்புறுத்தும் வேதனைதான் இருக்கிறது. (Sounds  more like an arm-twisting! பயங்கர பயமுறுத்தலாக அல்லவா உள்ளது.) இந்த இரு வசனங்களிலும் உள்ள  முரண்பாடுகள் தெளிவாக உள்ளன.  கடவுளிடம் இருந்து வரும் வார்த்தைகளென்றால் அங்கு எப்படி மானிட அறிவுக் குறைபாடுகள் இருக்கும்?

குரான் கடவுளின் வார்த்தைகள்; ஒரு போதும் மாறாதது; அதன் மூலம் சுவனத்தில் இருக்கின்றது - இது போன்ற நம்பிக்கைகளை விடுபட்ட இந்த வசனங்கள் கேலிக்குரியதாக மாற்றுகின்றன.

Muir இதுபோன்ற நீக்கப்பட்ட பகுதிகள் 200 வரை இருக்குமென்கிறார். குரானில் மூன்று விழுக்காடு  போலியானவை என்கிறார். இதற்கான இன்னொரு சான்று:  2:219 மூலம் மது அருந்தக் கூடாது என்பது தெளிவாகிறது. ஆனால் 16:67 -ல் கூறப்படும் ‘போதைப் பொருள்’ ஒரு கேள்வியை எழுப்புகிறது. ஆனால் யூசுப் அலி இது மெக்காவில் முகமது இருந்த போது வந்த வசனம்; குடி தவறு என்பது மெதீனாவிற்கு வந்த பின்னே முடிவானது என்கிறார்.

இந்தக் கால வேறுபாடுகள் பலமுறை குரானை நம்புவர்களுக்கு உதவியாக இருந்து விடுகின்றன. மெக்காவில் சாத்வீகத்தைப் போதிக்கும் குரான், மெதீனாவிற்கு வந்த பின் மிகவும் கொடூரமாகி, கொல்லுதல், தலையை வெட்டுதல், முடமாக்குதல் போன்றவைகளைப் போதிக்கின்றன.  ’ ... இணை வைப்போரை நீங்கள் எங்கு கண்டாலும் கொன்று விடுங்கள்’  என்ற 9:5 வசனம் அதற்கு முன் சொல்லப்பட்ட சாத்வீகமான, காழ்ப்பை எதிர்க்கும், பொறுமையை கற்பிக்கும் 124 வசனங்களை ‘காலியாக்கி’ விடுகின்றன.



எனது தனிக் குறிப்பு :

23 ஆண்டுகளாக வஹி மூலம் முகமதுவிற்கு அல்லா வசனங்களை இறக்குகின்றார். அவை முகமதுவின் காலத்திற்குப் பிறகு வசனங்களின் ‘நீளங்களை’ மட்டும் வைத்து பல்வேறு பகுதிகளாக, அத்தியாயங்களாகத் தொகுக்கப்பட்டன.

அல்லா ஏன் 23 ஆண்டுகள்  எடுத்துக் கொண்டார்? 
சரியான ஒரு படிப்பாளி மூலம் அவ்வப்போது அந்த 28 ஆண்டுகளில் நேரடியாக எழுதியிருக்கும்படி வசனங்களை இறக்கியிருக்கலாமே!
சுவனத்தில் உள்ள மூல நூலின் நகலைக் கூட தந்து விட வேண்டியதுதானே. -- இப்படியும் சில கேள்விகளைக் கேட்கலாம். ஆனால், இதெல்லாம் ‘கடவுளின் திருவிளையாடல்’; இதற்கெல்லாம் பதில் இல்லை என்பதால் ...



 இதில் உள்ள ஒரு ‘தத்துவம்’ புரிபடவில்லை. கால வாரியாகவோ, பொருள் தொடர்பானவைகளையோ தனித்தனியாகப் பிரித்து அட்டவணையிட்டிருந்தால் அதில் ஒரு பொருள் உண்டு. இது எந்த முறையுமில்லாமல் வெறும் நீளத்தை மட்டும் வைத்து சுராக்களைப் பிரித்தைப் பார்க்கும்போது, 1400 வருடமாக மாறாத நூல் என்பதோ, இதெல்லாம் அல்லா கொடுத்தபடி ‘அப்படியே’ இருக்கிறது என்பதும் பொருளற்றுப் போகிறது. அல்லா கொடுத்த அதே முறையில்தானே தொகுக்கப்பட வேண்டும்?

2ம் சுராவில் 23ம் வசனம் - ’சந்தேகத்தில் நீங்கள் இருப்பீர்களானால், இதைப் போன்ற ஒரே ஓர் அத்தியாயத்தையேனும் உருவாக்கிக் கொண்டு வாருங்கள்’ என்கிறார் அல்லா.(குரானின் மொழியின் உயர்வு பற்றிப் பேசும்போது  இஸ்லாமியர்கள் இந்த வசனத்தை அடிக்கடி மேற்கோள் காட்டுவதுண்டு; ஆனால் குரானின் மொழியிலும், இலக்கணத்திலும், மொழியியலிலும் உள்ள தவறுகளையும், நீக்கங்களையும், சேர்க்கைகளையும் இந்தப் பதிவில் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளேன். ) கடவுள் தான் படைத்த மனிதர்களிடம் இப்படி ஒரு ’சவால்’ கொடுப்பதைப் பார்க்க ஆச்சரியமாக மட்டுமல்ல, ஒரு கடவுளின் வார்த்தைகளில் இப்படி வருவது நம்பிக்கைகளை அழிக்கும் ஒரு செயலாகவே இருக்கிறது. படித்துப் பட்டம் பெற்ற ஒரு முதியவன் படிக்காத ஒரு சின்ன பிள்ளையைப்  போட்டிக்கு அழைக்கும் வேடிக்கை போலுள்ளது இது!


இந்த சுராவிலேயேயும் இன்னும் மிகப் பல இடங்களிலும் வரும் வசனங்களில் அல்லா தன்னையே மிகவும் பெருமைப்படுத்தும் இடங்கள் பலவும் உண்டு. 
சான்றாக, 1.2 - ‘அவன் மாபெருங் கருணையாளனாகவும், தனிப்பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்’. இதுபோல் பல இடங்களில் தன் ‘மகத்துவத்தை’ பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் வசனங்கள் ஏராளம். நான் கோபக்காரன், வெட்கப்படுகிறேன் போன்ற வசனங்கள் கூட பரவாயில்லை. ஆனால் (நம்மூர் அரசியல்வாதிகளை விடவும் மோசமாக) தன் மீது கடவுளே தனக்குத் தானே ஏனிப்படி ‘புகழாரங்களைச் சாத்திக்கொள்ள’ வேண்டும்?

தன்னைப் பின்பற்ற வேண்டும் என்ற குறிக்கோளோடு மனிதனுக்கு தன் வேதத்தைத் தரும் இறைவன் எப்படி தன்னையே இப்படி பெருமைப்படுத்திக் கொள்வான்?

ஒவ்வொரு முறையும் கடவுள் தன்னையே இப்படிப் ‘புகழ்ந்து’ கொள்வது இயல்பான ஒன்றா? ஒரு வேளை நபி ஒருவர் கடவுளை இப்படிப் புகழ்கிறார் என்றால் அது சரியாகத் தோன்றலாம் ... ஆனால் அல்லாவே தன்னைப் பற்றி இப்படி வசனம் தருவது, அதுவும் அடிக்கடி தருவது .... வேடிக்கைதான்! இந்த வசனங்களை மட்டும் தொகுத்து அதை மட்டும் வாசித்தாலே வேதநூல் என்ற உயரெண்ணம் கூட  மாறிவிடும்.

இதுபோன்று சொல்வது எல்லாமே படர்க்கையில் உள்ளன. கொஞ்சமும் இது பொருத்தமாகத் தெரியவில்லை. முகமதுவே இப்படி அல்லாவைப் புகழ்கிறார் என்றால் அது சரி. ஆனால், இல்லை .. இல்லை .. அல்லாதான் தன்னைப் பற்றி இப்படியெல்லாம் புகழ்ந்து கொள்கிறார் என்றால் ....  அறிவுக்குப் பொருத்தமாக இல்லை.

//2.244 - (முஸ்லீம்களே!) அல்லாஹ்வின் வழியில் போர் புரியுங்கள்.// இதை வாசித்ததும் கொஞ்சம் அச்சமாக இருந்தது. அல்லாவே அழைக்கிறார் .... போருக்கு!! 
இந்த சுராவில் படைப்பு, இறுதி நாள், மோசேவிற்குக் கொடுத்த அருட்கொடைகள்,   திருமணம், தலாக், விதவை, விதவைகள் வாழ்க்கை என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும் அல்லா 244-வது வசனத்தில் திடீரென்று போருக்கு அழைக்கிறார். ஏனிந்த கொடும் வன்முறை?



45 comments:

Anonymous said...

Your title 'Why am I not a Muslim?'
and your eloborate write up on the improbabilities in the composition of Koran, has no connection.

In spite of such improbabilities, one can be a muslim.

In spite of no such improbabilities, one cant be a muslim.

What is your position? I wonder.

தருமி said...

it is neither my title nor my own ideas compiled.

//What is your position? I wonder.//

i have made it plain .. எம்மதமும் சம்மதமில்லை.

saarvaakan said...

வணக்கம்
கொஞ்ச நாளா பதிவையே காணோம்.அருமையான பதிவு.ஆன்மீக்வாதிகளுக்கு ஆதாரம் தேவையில்லை. ஆதாரம் ,அனைத்தும் சரியாக குறிப்பிடபட்டு இருப்பதாக கூறுபவர்கள் மத புத்தகத்தை சரியாக படிக்காதவர்களாகவே இருப்பார்கள்.மத கொள்கைகளின் காரணமாக மனித உரிமை மீறல்கள் நட்க்கும் போது அதன் ஆதாரங்கள் ஆராயப் பட வேண்டிய கட்டாயத்துக்குள்ளாகிறது.

வட ஆப்பிரிக்க நாடுகளில் கொஞ்சம் வித்தியாசமான இன்னொரு குரான் பயன் படுத்தப் படுகிறது.அது பற்றிய ஒரு பதிவு.

http://saarvaakan.blogspot.com/2011/01/blog-post_22.html

இந்த் புத்தகம்[Ibn-Warraq-Why-I-Am-Not-Muslim] படிக்க விரும்புவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://www.scribd.com/doc/46162625/Ibn-Warraq-Why-I-Am-Not-Muslim

தருமி said...

saaarvaakan,
வணக்கம்

//கொஞ்ச நாளா பதிவையே காணோம்.//

ஆமாங்க .. இப்போ ஒழுங்கா இந்த நூலை முடிச்சிர்ரதுன்னு வச்சிருக்கேன்.

உங்கள் பதிவினைப் பார்க்கிறேன். தரும் தகவல்களுக்கு மிக்க நன்றி

saarvaakan said...

//28 ஆண்டுகளாக வஹி மூலம்//

23 ஆண்டுகள்(610_632)
______________

சத்தியம் செய்கிறார் இறைவன்!!!!

37:1. அணிவகுத்து நிற்பவர்கள் மீது சத்தியமாக,

37:2. பலமாக விரட்டுபவர்கள் மீது சத்தியமாக,

37:3. (நினைவூட்டும்) வேதத்தை ஓதுவோர் மீது சத்தியமாக,

43:2. விளக்கமான இவ்வேதத்தின் மீது சத்தியமாக.

44:2. தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!

51:1. (புழுதியைக் எழுப்பி) நன்கு பரத்தும் (காற்றுகள்) மீது சத்தியமாக!

51:4. (பூமியிலுள்ளோருக்கு விதியானவற்றை அல்லாஹ்வின்) கட்டளைப்படி பங்கிடுவோர் மீதும் சத்தியமாக

51:7. அழகு நிரம்பிய வானத்தின் மீது சத்தியமாக!

52:1. தூர் (மலை) மீது சத்தியமாக!

52:2. எழுதப்பட்ட வேதத்தின் மீது சத்தியமாக!

52:3. விரித்து வைக்கப்பட்ட ஏட்டில்-

52:4. பைத்துல் மஃமூர் மீது சத்தியமாக!

52:5. உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக!

52:6. பொங்கும் கடலின் மீது சத்தியமாக!

53:1. விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!

saarvaakan said...

சத்தியம் தொடர்கிறது.
_______________
68:1. நூன்; எழுதுகோல் மீதும் இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக!

70:40. எனவே, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.

74:32. (ஸகர் என்னும் நரகு நிராகரிப்போர் கூறுவது போல்) அல்ல, இன்னும் சந்திரன் மீது சத்தியமாக.

74:33. இரவின் மீதும் சத்தியமாக - அது பின்னோக்கிச் செல்லும் பொழுது.

74:34. விடியற் காலையின் மீது சத்தியமாக - அது வெளிச்சமாகும் பொழுது,

77:1. தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக-

77:2. வேகமாக வீசுகிறவை (புயல் காற்றுகள்) மீது (சத்தியமாக)-
77:3. (மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக-
77:4. (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறுபடுத்தி காட்டுவோர் (வானவர்கள்) மீதும் (சத்தியமாக)-
77:5. (இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)-
____________
இறைவன் ஏன் இத்தனை சத்தியம் செய்ய வேண்டும்?.

தருமி said...

//இரவின் மீதும் சத்தியமாக - அது பின்னோக்கிச் செல்லும் பொழுது.//

அப்டின்னா என்னங்க..?

சத்தியமா சொல்றேங்க .. நீங்க பழம் தின்னு கொட்டை போட்ட ஆளுங்க ...

உங்க பதிவைப் படித்தேன். படிக்கவே ரொம்ப கஷ்டம். அதைப் படிச்சி.. புரிஞ்சி .. சத்தியமா சொல்றேன் .. பெரிய ஆளுதான்!

suvanappiriyan said...

சார்வாகன்!

//52:6. பொங்கும் கடலின் மீது சத்தியமாக!

53:1. விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!...

இறைவன் ஏன் இத்தனை சத்தியம் செய்ய வேண்டும்?.//

ஒருவர் சொல்லும் சொல்லில் நமக்கு நம்பிக்கை இல்லை என்றால், அதை நிரூபிப்பதற்காக இரண்டு தரப்பும் நம்பும் ஒன்றின் மீது சத்தியம் செய்வது உலக இயல்பு. நாத்திகர்களான சார்வாகனும், தருமியும் கண்ணால் காணும் மலைகள்,இரவு,பகல்,சந்திரன்,கடல், போன்ற இன்ன பிறவும் எந்த அளவு உண்மையோ அதே அளவு உண்மைதான் இறைவனின் இந்த வேதமும், இந்த வேதம் சொல்லக்கூடிய நிகழ்வுகளும் என்று இதன் மூலம் சொல்ல வருகிறான் இறைவன்.

தருமி!

//இரவின் மீதும் சத்தியமாக - அது பின்னோக்கிச் செல்லும் பொழுது.//

அப்டின்னா என்னங்க..?

பின்னோக்கிச் செல்லுதல் என்றால் என்ன?

ஒரு மலையின் மீது ஏறுகிறோம். குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் ஏற முடியாது என்ற நிலை வரும்போது ஏறிய வழியிலேயே பின்னோக்கி வருகிறோம். இதைத்தான் பின்னோக்கிச் செல்லுதல் என்கிறோம்.

சூரியனைச் சுற்றி நமது பூமி வருவதும் அதனால்தான் இரவு பகல் மாறி மாறி வருவதும் நமக்கு தெரியும். பூமியின் சுழற்ச்சியால் நமது இந்தியா 12 மணிநேரம் இரவால் மூடப்படுவதாக வைத்துக் கொள்வோம். அதன் பிறகு நமது நாடு சூரியன் உதிக்கும் இடத்துக்கு வருகிறது. இதன் மூலம் நமது நாட்டின் இரவு பின்னோக்கிச் சென்றதைக் காணலாம். எந்த திசையில் பூமி சுழன்று வந்ததோ அதே திசையிலேயே இந்தியா தொடர்ந்து முன்னேறிய போதும் இந்தியாவில் உள்ள இரவு பகுதி இந்தியா செல்லும் திசைக்கு நேர் எதிர் திசையில் பின் வாங்குவதைப் பார்க்கிறோம்.

இந்தியாவைப் பின் தொடர்ந்து பாகிஸ்தான் வந்து கொண்டிருப்பதால் இந்தியாவிலிருந்து பின்வாங்கிய இரவு பாகிஸ்தானுக்குச் செல்கிறது. ஆனால் சில வினாடிகளில் பாகிஸ்தானும் உதய எல்லைக்குள் நுழையத் தொடங்குகிறது. இப்பொழுது பாகிஸதானில் பின்வாங்கிய இரவு அடுத்து வரும் ஈரானைப் பின் வாங்கத் தொடங்குகிறது. இப்படியாக வரிசையாக ஒவ்வொரு நாடுகளாக சொல்லிக் கொண்டுப் போகலாம். சூரிய மையக் கோட்பாட்டை குர்ஆன் எவ்வளவு அழகாக சொல்கிறது.

இரவு என்பது பின்வாங்கும் இயல்பைக் கொண்டது என்ற இந்த உண்மை கோபர் நிகஸ், கெப்ளர், கலிலியோ போன்ற அறிவியல் அறிஞர்களின் தற்கால கண்டுபிடிப்பை உணர்ந்தவர்களால்தான் சொல்ல முடியும். முகமது நபி ஒரு விஞ்ஞானியும் அல்ல. மேலே சொன்ன் அறிவியல் அறிஞர்கள் முகமது நபியை சந்திக்கவும் இல்லை. எனவே இந்த குர்ஆனின் வார்த்தை என்னையும் சார்வாகனையும் தருமியையும் படைத்த கர்த்தர்,பிரம்மா,அல்லாஹ்வின் வார்த்தைதான் என்பது ஏக மனதாக தீர்மானிக்கப்படுகிறது.

தருமி said...

சுவனப்பிரியன்

நீங்கள் இங்கு வந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.

//சூரிய மையக் கோட்பாட்டை குர்ஆன் எவ்வளவு அழகாக சொல்கிறது. //

சத்தியமாக ...

//....என்று இதன் மூலம் சொல்ல வருகிறான் இறைவன். //

சத்தியம் பண்ணும் சாமி! அவருக்கு நம்ம மேல நம்பிக்கையில்லையா: இல்லை ... நமக்கு அவர் மேல் நம்பிக்கையில்லையா?

உங்கள் விளக்கங்களுக்கு ‘மதராஸா விளக்கங்கள்’ என்று பெயர் தரலாமென நினைக்கிறேன்.

தருமி said...

சுவனப்பிரியன்
சார்வாகனுக்குப் பதில் சொல்லிட்டீங்க ...ibn warraq-ன் கேள்விகளுக்கு ..?

saarvaakan said...

//ஒருவர் சொல்லும் சொல்லில் நமக்கு நம்பிக்கை இல்லை என்றால், அதை நிரூபிப்பதற்காக இரண்டு தரப்பும் நம்பும் ஒன்றின் மீது சத்தியம் செய்வது உலக இயல்பு//

டிஸ்கி 1 ஆதாரம் இருப்பதாக கூறுபவர்கள் மத புத்தகங்களை ஒழுங்காக படித்து இருக்க மாட்டார்கள்.

அப்போது குரான் அளித்த கடவுள் சத்தியம் செய்வது இயல்பு.

இதில் என்ன நகைசுவையான விஷயம் என்றால் மூல அரபிக் குரானில் சத்தியம் என்ற வார்த்தை இருக்காது.

தூர் மீது,அது மீது ,இது மீது என்று அர்த்தமில்லாமல் இருப்பதால் அர்த்தம் வருவதற்காக் தமிழ் மொழி பெயர்ப்பில் சேர்த்து விட்டார்கள்.


ஒரு (உ.ம்)

Yusuf Ali

037:001 By those who range themselves in ranks,
037:002 And so are strong in repelling (evil),
037:003 And thus proclaim the Message (of God)!
037:004 Verily, verily, your God is one! -

saarvaakan said...

//சூரிய மையக் கோட்பாட்டை குர்ஆன் எவ்வளவு அழகாக சொல்கிறது. //

68:1. நூன்; எழுதுகோல் மீதும் இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக!

இந்த வசனத்தில் வரும் நூன் என்ற வார்த்தைக்கு திரு முகமதுவின் சம காலத்தவரும், அவரது உறவினருமான திரு இபின் அப்பாஸ்(618_688) அவர்களின் குரான் விளக்கத்தை[த‌ஃப்சிர்] பார்ப்போம்.

http://en.wikipedia.org/wiki/%60Abd_Allah_ibn_%60Abbas
http://www.altafsir.com/Tafasir.asp?tMadhNo=2&tTafsirNo=73&tSoraNo=68&tAyahNo=1&tDisplay=yes&UserProfile=0&LanguageId=2

{ نۤ وَٱلْقَلَمِ وَمَا يَسْطُرُونَ }

And from his narration on the authority of Ibn 'Abbas that he said regarding the interpretation of Allah's saying (Nun): '(Nun) He says: Allah swears by the Nun, which is the whale that carries the earths on its back while in Water, and beneath which is the Bull and under the Bull is the Rock and under the Rock is the Dust and none knows what is under the Dust save Allah. The name of the whale is Liwash, and it is said its name is Lutiaya'; the name of the bull is Bahamut, and some say its name is Talhut or Liyona. The whale is in a sea called 'Adwad, and it is like a small bull in a huge sea. The sea is in a hollowed rock whereby there is 4,000 cracks, and from each crack water springs out to the earth. It is also said that Nun is one of the names of the Lord; it stands for the letter Nun in Allah's name al-Rahman (the Beneficent); and it is also said that a Nun is an inkwell. (By the pen) Allah swore by the pen. This pen is made of light and its height is equal to the distance between Heaven and earth. It is with this pen that the Wise Remembrance, i.e. the Guarded Tablet, was written. It is also said that the pen is one of the angels by whom Allah has sworn, (and that which they write (therewith)) and Allah also swore by what the angels write down of the works of the children of Adam,

நூன் என்பது பூமியை சுமக்கும் ஒரு திமிங்கலம் ஆகும்.திமிங்கலத்தின் கீழ் ஒரு எருது பெயர் பஹாமத்,அதன் கீழ் ஒரு பாறை,பாறைக்கு கீழ் தூசி,அதற்கு கீழ் என்னவென்று அல்லா மட்டுமே அறிவார் என்று கூறுகிறார்.
இந்த இபின் அப்பாஸ் பல ஹதிதுகளை(நபி மொழிகள்) உரைத்தவர்.இவரின் குரான் விளக்கம் இன்றும் மதிக்கப் படும் ஒன்று.

இதுதான் குரான் கூறுவதாக இபின் அப்பாஸ் கூறும் சூரியக் குடும்ப அறிவியல் ஆகும்.
டிஸ்கி 2.அறிவியலை மத புத்தகங்கள் வைத்து சரிபார்க்க கூடாது.

தருமி said...

'முதல் புத்தகத்தை’ எழுதிய அந்த ‘பேனா’வும், திமிங்கலமும் நல்ல கதைகள். ஆனால் சுவனப்பிரியன் சொல்லும் //மலைகள்,இரவு,பகல்,சந்திரன்,கடல், போன்ற இன்ன பிறவும் எந்த அளவு உண்மையோ அதே அளவு உண்மைதான் இறைவனின் இந்த வேதமும்,// இதில் ஒத்து வரவில்லையே! சுவனப்பிரியன் பதிலுக்குக் காத்திருக்கிறேன்.

தருமி said...

saaarvaakan
இந்தக் கதைகளெல்லாம் எப்படி தெரிந்து வைத்துள்ளீர்களோ?!

//மூல அரபிக் குரானில் சத்தியம் என்ற வார்த்தை இருக்காது.//

பின் எப்படி அல்லா தமிழில் மட்டும் இப்படி சத்தியம் செய்கிறார்?

இது மொழிமாற்ற விளையாட்டா?

தருமி said...

saaarvaakan

இந்த ‘நூன்’ கதை நம் இந்து மதப் புராணங்களைத் தூக்கி சாப்பிட்டு விடும்போல் தெரிகிறதே!

suvanappiriyan said...

சார்வாகன்!

//68:1. நூன்; எழுதுகோல் மீதும் இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக!

நூன் என்பது பூமியை சுமக்கும் ஒரு திமிங்கலம் ஆகும்.திமிங்கலத்தின் கீழ் ஒரு எருது பெயர் பஹாமத்,அதன் கீழ் ஒரு பாறை,பாறைக்கு கீழ் தூசி,அதற்கு கீழ் என்னவென்று அல்லா மட்டுமே அறிவார் என்று கூறுகிறார்.
இந்த இபின் அப்பாஸ் பல ஹதிதுகளை(நபி மொழிகள்) உரைத்தவர்.இவரின் குரான் விளக்கம் இன்றும் மதிக்கப் படும் ஒன்று.

இதுதான் குரான் கூறுவதாக இபின் அப்பாஸ் கூறும் சூரியக் குடும்ப அறிவியல் ஆகும்.//

நகைச்சுவையாக நிறைய எழுதுகிறீர்கள். சூரிய மையக் கோட்பாட்டை உறுதி செய்யும் குர்ஆன் வசனத்தை நான் சொன்னால் அதை மறுக்க அறிவியல் பூர்வமான விளக்கத்தை அளிக்க வேண்டும். அதை விடுத்து இப்னு அப்பாஸ் என்ற கதையை விக்கிபீடியாவிலிருந்து எடுத்து தருகிறீர்கள். விக்கிபீடியாவில் வருவதெல்லாம் இஸ்லாமாகாது. விக்கி பீடியாவில் நீங்களும் நானும் கூட கருத்துக்களை பதியலாம். உங்களிடம் பதில் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

உயர் தரமான இலக்கியத்தை படைக்கும் அன்றைய அரபுகள் தங்களின் கவிதைகளின் ஆரம்பத்தில் நுர்ன், அலீப், லாம் என்று போடுவது வழக்கம். இது போன்ற தனிச் சொற்களுக்கு அரபு அகராதியில் அர்த்தம் கிடையாது. முகமது நபியும் அப்படி ஒரு அர்த்தத்தைக் கொடுக்கவில்லை. எனவே அனைத்து அரபு இலக்கியங்களையும் விஞ்சி நிற்க்கின்ற திருக்குர்ஆன்! தன்னைப் போல் எவராலும் உருவாக்க முடியாது என்று அறை கூவல் விடும் குர்ஆன் அவர்களின் வழிமுறையைக் கையாண்டே அறைக் கூவல் விடுக்கிறது.

தருமி!

//அல்லா ஏன் 23 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார்?
சரியான ஒரு படிப்பாளி மூலம் அவ்வப்போது அந்த 28 ஆண்டுகளில் நேரடியாக எழுதியிருக்கும்படி வசனங்களை இறக்கியிருக்கலாமே!
சுவனத்தில் உள்ள மூல நூலின் நகலைக் கூட தந்து விட வேண்டியதுதானே.//

'முஹம்மதே! வானத்திலிருந்து அவர்களுக்கு வேதத்தை இறக்க வேண்டும்' என்று வேதமுடையோர் உம்மிடம் கேட்கின்றனர். இதை விடப் பெரியதை அவர்கள் மோஸேயிடம் கேட்டுள்ளனர். 'இறைவனைக் கண்முன்னே எங்களுக்குக் காட்டு' என்று அவர்கள் கேட்டனர். அவர்கள் அநீதி இழைத்ததால் இடி முழக்கம் அவர்களைத் தாக்கியது. பின்னர் தெளிவான சான்றுகள் வந்த பின்பும் காளைக் கன்றை கடவுளாக கற்பனைச் செய்தனர்'
-குர்ஆன் 4:153

'முஹம்மதே! காகிதத்தில் எழுதப்பட்ட வேதத்தை உமக்கு நாம் அருளியிருந்து அதைத் தம் கைகளால் தொட்டுப் பார்த்தாலும் 'இது வெளிப்படையான சூன்யத்தைத் தவிர வேறு இல்லை' என்று ஏக இறைவனை மறுப்போர் கூறியிருப்பார்கள்.
-குர்ஆன்: 6:7

இந்த கேள்வியை முகமது நபியிடமே அந்த மக்கள் கேட்டதற்கு இறைவன் தரும் பதிலைப் பாருங்கள். மறுப்பது என்ற முடிவுடன் இருப்பவர்களுக்கு எந்த சான்று வந்தாலும் 'அப்படி செய்திருக்கலாமே! இப்படி அனுப்பியிருக்கலாமே!' என்ற கேள்விகளை வைப்பது வழக்கமான ஒன்று. இதைத்தான் நீங்களும் வைத்திருக்கிறீர்கள்.

வால்பையன் said...

விவாதங்களை அறியும் பொருட்டு!

தருமி said...

//இந்த கேள்வியை முகமது நபியிடமே அந்த மக்கள் கேட்டதற்கு இறைவன் தரும் பதிலைப் பாருங்கள். //

loop holes-களை மூட நல்ல முயற்சிதான். great!

saarvaakan said...

நண்பர் சுவன பிரியன்

1.சத்தியம் என்கிற வார்த்தை மூலத்தில் இல்லை. குரான் வசனங்கள் அர்த்தம் இல்லாமல் போகின்றது என்பதாலேயே தமில் மொழி பெயர்ப்பில் சத்தியமாக என்ற வார்த்தையை இணைத்து உள்ளனர்.

2.இபின் அப்பாஸின் தஃப்சீரில் அவர் கூறிய கதை இருக்கிறது. குரான் என்பது 6ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படுகிறது.அதற்கு நீங்கள் அறிவியல் கூறும் வகையில் பொருள் கொள்வதும்,அதே காலத்தில் எழுதப்பட்ட ஒரு குரான் விளக்கம் நீங்கள் சொல்லும் அர்த்தம் தருகிறதா என்று பார்ப்பது அவசியமாகும்.

http://www.altafsir.com/Ibn-Abbas.asp

3.இன்னும் ஆதமில் இருந்து முகமது வரை வம்ச வரலாறு இருக்கிறது(மொத்தம் 30 தலைமுறைதான்). இபின் அப்பாஸின் தஃப்சீர் இந்த இணைப்பில் காணலாம்.இபின் அப்பாஸ் தவறு என்றால் அவர் நம்பிக்கை அற்றவர் என்றால் அவர் கூறிய ஹதிதுகள் அனைத்தையும் தறு என்று கூறிவிடலாம்.

4.குரானை எழுதியவருக்கும் ,இந்த இரவு பகல்,மலைகள்,சூரியன்,சந்திரன்,நட்சத்திரங்கள் போன்றவை மிகுந்த ஆச்சரியம் ஏற்படுத்தும் விஷயங்களாக இருந்துள்ளன. நீங்கள் கூறிய வசனத்தை ஆய்வோம்.
__________
2:164. நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.

10:6. நிச்சயமாக இரவும், பகலும் (ஒன்றன் பின் ஒன்றாக) மாறி வருவதிலும், வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ் படைத்துள்ள (அனைத்)திலும் பயபக்தியுள்ள மக்களுக்கு (நிரம்ப) அத்தாட்சிகள் இருக்கின்றன.

36:37. இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும்; அதிலிருந்து பகலை கழற்றி விடுகிறோம்; அதனால் இவர்கள் ஆழ்ந்த இருளிலாகிவிடுகிறார்கள்.
_______________

saarvaakan said...

74.33. wa-al-layli idh adbara=Andthe night when it departs,


wa-al-layli=And the night

idh=when

adbara=it departs,retreat,withdraw,gone

_____________

இந்த அறிவியலாக கூறப்படுவது இந்த அட்பாரா என்‍னும் வார்த்தையின் அர்த்தமாகும்.

அட்பாரா=திரும்பி செல்லுதல்,இந்த அட்பாரா இன்னொரு விதமாக உச்சரிக்கப்படும்போது.சென்று விட்டது என்று பொருள் படுகின்றது.

இரவு வ்ந்து விட்டு போகின்றது எனபதில் அறிவியல் இருப்பதாக கூற முடியும்?.பூமி தன்னைத்தானே சுற்றுவதால்தான் இரவு பகல் உண்டாகிறதே தவிற இரவு,பகல் வருவது இல்லை, உண்டாகிறது.பூமி தன்னைத்தானே சுற்றுவதால் இடரவு பகல் உண்டாகிறது என்றால் அது அறிவியல்.பூமியின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைவதும் அறிந்ததே.

குரானின் வசங்களுக்கு பல பொருள் கூற முடியும்.அதில் ஒன்று இரவு பின் வாங்குகின்றது(திரும்பி செல்கிறது).இது அந்தக் கால அறிவியல் என்றால் 6ஆம் நூற்றாண்டில் அவ்வளவுதான் சொல்ல முடியும்

saarvaakan said...

//உயர் தரமான இலக்கியத்தை படைக்கும் அன்றைய அரபுகள் தங்களின் கவிதைகளின் ஆரம்பத்தில் நுர்ன், அலீப், லாம் என்று போடுவது வழக்கம். //
ஒரு எடுத்துக்காட்டு தரவும்.

74:33
­­­­­­­­­­­­­­­­­­­­­____________________

anwîr al-Miqbâs min Tafsîr Ibn ‘Abbâs

(And the night when it withdraweth:இரவு திரும்பி செல்லும் போது

Tafsir al-Jalalayn

And by the night when it returns! (if read as idhā dabara), when it comes back after day

(1)இரவு திரும்பி வரும்போது.

a variant reading has idh adbara, meaning ‘when it has receded’).

(2)இரவு பின் செல்லும் போது
___________
ஆகவே இந்த அட்பாரா என்ற வார்த்தை விளையாட்டே இந்த அறிவியல்.இது மட்டுமல்ல குரானின் வசனங்களுக்கு பல பொருள்கள் உள்ளதால் ஏதாவது ஒன்று கொஞ்சம் சூரியன்,சந்திரன்,இரவு பகல் என்று வந்தால் அன்றே கூறப்பட்டது அறிவியல் என்ற மதவாதிகளின் கூற்று இயல்பானதே.

suvanappiriyan said...

தருமி!

//101:9-11-வில் hawiya என்ற சொல்லுக்கு ‘நரகம்’ என்ற பொருள் தரப்படுகிறது. ஆனால் அந்த சொல்லின் உண்மையான பொருள்: ‘குழந்தையற்ற நிலை’ என்பதாகும்.//

'ஃப உம்முஹூ ஹாவியா! வமா அத்ராகா மாஹியா! நாருன் ஹாமியா'


'ஃப உம்முஹூ ஹாவியா' என்ற வார்த்தை இங்கு பயன்படுத்தப்படுகிறது. தாங்க முடியாத வேதனையை அனுபவிக்கும் ஒருவன் 'என் தாய் என்னைப் பெற்றெடுக்காமல் இருந்திருக்கலாமே!' என்று கூறுவது அன்றைய அரபுகளின் பழக்கம். நரகத்தில் ஒருவன் அனுபவிக்கும் வேதனையின் கொடுமையை இறைவன் வழக்கு மொழியில் சுட்டிக் காட்டுகிறான்.

'நாருன் ஹாமியா' - இதன் அர்த்தம் 'சுட்டெரிக்கும் நெருப்பு' நரகில் உள்ள நெருப்பின் அளவு மிக அதிகமானது. நாம் இந்த உலகில் இதுவரை கண்டிராத வெப்பம். இதுவரை நாம் அனுபவிக்காத வெப்பம்.

எனவேதான் 'இந்த நெருப்பின் கொடூரத்தைப் பற்றி முஹம்மதே! உனக்கு என்ன தெரியும்?' என்று இறைவன் முஹம்மது நபியைப் பார்த்து கேட்பதாக இதன் அடுத்த வசனம் வருகிறது.

நம் மொழியில் கூட எத்தனையோ கவிதைகளை படித்திருக்கிறோம். கவிதையில் அழகு இருந்தால் பொருளில் கோட்டை விட்டு விடுவார்கள். பொருள் சரியாக வந்தால் மற்ற நாடுகளுக்கு பொருந்தாதவையாக இருக்கும். சில கவிதைகள் 500 வருடங்களுக்கு பிறகு உலகோடு ஒத்துப் போகாதவையாக இருக்கும். சில கவிதைகள் கொச்சைத் தமிழில் இருக்கும். உயர்ந்த நடையில் இருக்கும் கவிதைகளோ பாமரனுக்கு விளங்காது.

ஆனால் மேலே சொன்ன அனைத்து விபரங்களையும் தன்னகத்தே கொண்ட ஒரே நுர்ல் குரஆனாகத்தான் இருக்க முடியும்.

ஹாவியா, மாஹியா, ஹாமியா என்ற மூன்று வார்த்தைகளும் கவிதை நடையில் தொடர்ந்து வருவதால் கட்டுரையாளர் குழம்பி உங்களையும் குழப்பி விட்டார். அரபு மொழியின் இந்த சாதாரண விபரத்தையே அரைகுறையாக விளங்கிய ஒருவரின் கட்டுரைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து மொழி பெயர்த்துக் கொண்டிருப்பது வீண் வேலை என்றே எனக்குப் படுகிறது. இந்த நேரத்தில் கொ.ப.சே வோடு சேர்ந்து ஒரு சில உலக சினிமாக்களாவது பார்த்திருக்கலாம் :-)

saarvaakan said...
This comment has been removed by the author.
saarvaakan said...

//இது போன்ற தனிச் சொற்களுக்கு அரபு அகராதியில் அர்த்தம் கிடையாது. //
அதாவது நூன் என்ற தனி வார்த்தைக்கு அர்த்தம் கிடையாது என்பது தவறு.நூன் என்றால் மீன் என்று அர்த்தம்.கீழக்கண்ட புஹாரி ஹதிதை படித்தால் தெரியும்

குரானின் ஒவ்வொரு சொல்லுக்கும் பல அர்த்தங்கள் உண்டு.குரானின் ஒவ்வொரு விளக்கத்திற்கும் நேர் எதிரான விளக்கம் குரானிலோ அல்லது ஹதிதிலோ இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

6520. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் 'மறுமை நாளில் இந்த பூமி (அடுப்பில் இருக்கும்) ஒரு ரொட்டியைப் போன்று (சமதளமாக) மாறிவிடும். பயணத்திலுள்ள உங்களில் ஒருவர் தம் ரொட்டியை (அடுப்பிலிருந்து எடுத்துக் கையில் வைத்து)ப் புரட்டுவதைப் போன்று, சர்வ வல்லமை படைத்த (இறை)வன் பூமியைத் தன்னுடைய கரத்தால் புரட்டிப்போடுவான். (அதையே) சொர்க்கவாசிகளுக்கு விருந்தாக்குவான்' என்று கூறினார்கள். 106
அப்போது யூதர்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'அபுல் காசிமே! அளவற்ற அருளாளன் உங்களுக்கு சுபிட்சம் அளிக்கட்டும். மறுமை நாளில் சொர்க்கவாசிகளின் விருந்துணவு என்னவென்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'சரி' என்றார்கள். அவர் நபி(ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே 'மறுமை நாளில் இந்த பூமி ஒரேயொரு ரொட்டியைப் போன்று இருக்கும்' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களைக் கூர்ந்து பார்த்துவிட்டு, தம் கடைவாய்ப் பற்கள் தெரிய சிரித்தார்கள். பிறகு 'உங்களுக்கு சொர்க்கவாசிகளின் குழம்பு எது எனத் தெரிவிக்கட்டுமா?' என்று அந்த யூதர் கேட்டுவிட்டு அவர்களின் குழம்பு 'பாலாம்' மற்றும் 'நூன்' என்றார். மக்கள் 'இது என்ன?' என்று கேட்டார்கள். அந்த யூதர் '(அவை) காளைமாடும் மீனும் ஆகும். அந்த இரண்டின் ஈரல்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தனித் துண்டை (மட்டுமே சொர்க்கவாசிகளில்) எழுபதாயிரம் பேர் புசிப்பார்கள்' என்று கூறினார்.
Volume :7 Book :82
http://www.youtube.com/watch?v=LnFQ6ywHNTg
_______________
குரானில் புரியாத வாக்கியங்களும் உள்ளன என்று குரானே கூறுகிறது..

3:7. அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.

suvanappiriyan said...

சார்வாகன்!
//1.சத்தியம் என்கிற வார்த்தை மூலத்தில் இல்லை. குரான் வசனங்கள் அர்த்தம் இல்லாமல் போகின்றது என்பதாலேயே தமில் மொழி பெயர்ப்பில் சத்தியமாக என்ற வார்த்தையை இணைத்து உள்ளனர்.//

மொழிக்கு மொழி வார்த்தைகளை கையாளும் விதத்தில் பல வித்தியாசங்களை நாம் பார்க்க முடியும். ஒரு வாக்கியம் தொடங்கும் போது நாம் காணும் பொருட்களின் மீது சத்தியம் இடுவது அன்றைய அரபுகளின் வழக்கம். வானம், அல்லது சூரியன் என்று தனியாக போட்டாலே அங்கு அதன் மீது சத்தியம் செய்து சொல்வதாக அரபுகள் புரிந்து கொள்வர். ஆனால் அதே போன்று தமிழிலும் மொழி பெயர்த்தால் படிப்பவர்களுக்கு புரியாது. எனவேதான் மொழி பெயர்ப்பாளர்கள் சத்தியமாக என்ற வார்த்தையை சேர்ப்பார்கள்.

அரபு நாடுகளில் வேலை செய்து வரும் நம் நாட்டவர்கள் 'வல்லாஹி' என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்படுவர். இதை நேரிடையாக நாம் மொழி பெயர்த்தால் 'இறைவன் மீது' என்று மட்டுமே தமிழ்ப்படுத்த முடியும். அரபு மொழி தெரிந்தவர்கள் 'இறைவன் மீது சத்தியமாக' என்றே பொருள் கொள்வர். இங்கு சத்தியமாக என்ற வார்த்தை மறைந்துள்ளது. யாரும் அரபு நாடுகளில் நண்பர்கள் இருந்தால் கேட்டு தெளிவு பெறுங்கள்.

//2.இபின் அப்பாஸின் தஃப்சீரில் அவர் கூறிய கதை இருக்கிறது. குரான் என்பது 6ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படுகிறது.அதற்கு நீங்கள் அறிவியல் கூறும் வகையில் பொருள் கொள்வதும்,அதே காலத்தில் எழுதப்பட்ட ஒரு குரான் விளக்கம் நீங்கள் சொல்லும் அர்த்தம் தருகிறதா என்று பார்ப்பது அவசியமாகும்.//

குர்ஆனுக்கு விளக்கம் யார் கொடுத்தாலும் அதற்கு முகமது நபியின் ஆதாரபூர்வமான விளக்கமும் சேர்ந்து வர வேண்டும். நபித் தோழர்களின் பெயரில் பல கட்டுக் கதைகள் இஸ்லாமிய விரோதிகளால் கட்டப்பட்டு அது தோல்வியிலும் முடிந்தது. முகமது நபி இவ்வாறு அர்த்தப் படுத்தியுள்ளார் என்று ஆதாரத்துடன் தாருங்கள் பரிசீலிப்போம்.

குர்ஆனுக்கு மாற்றமாக ஜனாதிபதி உமர் மஹர் விஷயமாக ஒரு கட்டளை பிறப்பித்த போது ஒரு மூதாட்டி அதை சுட்டிக் காட்டி உமரை திருத்துகிறார். எனவே மனிதர் என்ற வகையில் இப்னு அப்பாஸ் அவர்கள் தவறாக விளங்கியிருக்கலாம். அல்லது அவர் பெயரில் இட்டுக்கட்டப் பட்டிருக்கலாம். இறைவனே அறிந்தவன்.

//3.இன்னும் ஆதமில் இருந்து முகமது வரை வம்ச வரலாறு இருக்கிறது(மொத்தம் 30 தலைமுறைதான்). இபின் அப்பாஸின் தஃப்சீர் இந்த இணைப்பில் காணலாம்.இபின் அப்பாஸ் தவறு என்றால் அவர் நம்பிக்கை அற்றவர் என்றால் அவர் கூறிய ஹதிதுகள் அனைத்தையும் தறு என்று கூறிவிடலாம்.//

குர்ஆனுக்கு மாற்றமாக முகமது நபி சொல்லாத ஒன்றை சொன்னதாக யார் சொன்னாலும் அது இஸ்லாமிய வட்டத்துக்குள் வராது. அது அவர்களின் சொந்த கருத்தாகவே கொள்ள முடியும்.

///உயர் தரமான இலக்கியத்தை படைக்கும் அன்றைய அரபுகள் தங்களின் கவிதைகளின் ஆரம்பத்தில் நுர்ன், அலீப், லாம் என்று போடுவது வழக்கம். //
ஒரு எடுத்துக்காட்டு தரவும்.//
குர்ஆன் இறங்கிய காலங்களில் உடனே நபித் தோழர்கள் 'அந்த வசனம் ஏன் இறங்கியது. இந்த வசனத்திற்கு என்ன பொருள்' என்று ஒன்று விடாமல் கேட்டு அவை எல்லாம் வரலாறாக பதியப்பட்டுள்ளது. குர்ஆனில் நூன், அலீஃப, லாம் என்று பல இடங்களில் வந்தாலும் அதைப்பற்றி எந்த நபித் தோழரும் முகமது நபியிடம் சந்தேகம் கேட்கவில்லை. ஏனெனில் அது அன்றைய அரபுகளின் வழக்கமாக இருந்தது. எனவெ அது பற்றி அவர்களுக்கு சந்தேகமும் வரவில்லை.

//குரானின் வசங்களுக்கு பல பொருள் கூற முடியும்.அதில் ஒன்று இரவு பின் வாங்குகின்றது(திரும்பி செல்கிறது).இது அந்தக் கால அறிவியல் என்றால் 6ஆம் நூற்றாண்டில் அவ்வளவுதான் சொல்ல முடியும்//
இந்து மத வேதங்களைப் போல் குர்ஆன் மொழி பெயர்க்காமல் ஒளித்து வைக்கவில்லை. எல்லோரிடமும் இருப்பதும் ஒரே வசன எண்கள்தான். இந்த கருத்து இந்த அறிவியல் கண்டு பிடிப்போடு மோதுகிறது என்று எடுத்துக் காட்ட வேண்டியதுதானே!

குடுகுடுப்பை said...

பின்னூட்டம் பெற.

saarvaakan said...

//நாம் காணும் பொருட்களின் மீது சத்தியம் இடுவது அன்றைய அரபுகளின் வழக்கம்//
அல்லா ஒரு அரபியரா?
//குர்ஆனுக்கு மாற்றமாக முகமது நபி சொல்லாத ஒன்றை சொன்னதாக யார் சொன்னாலும் அது இஸ்லாமிய வட்டத்துக்குள் வராது. அது அவர்களின் சொந்த கருத்தாகவே கொள்ள முடியும்.//
இந்த இரவு பின் வாங்கியதிற்கு நீங்கள் அளித்த விள்க்கமும் முகமது அளித்ததாக ஆதாரதுடன் காட்ட முடிந்தால் சொல்லுங்கள்.

//உயர் தரமான இலக்கியத்தை படைக்கும் அன்றைய அரபுகள் தங்களின் கவிதைகளின் ஆரம்பத்தில் நுர்ன், அலீப், லாம் என்று போடுவது வழக்கம். //

ஒரு எடுத்துக்காட்டு தரவும்.தர முடியாது என்றே எண்ணுகிறேன். குரானின் (எழுத்து) நடையிலேயே ,குரானுக்கு முந்திய இப்போதும் உள்ள ஒரு அரபி இலக்கியத்தை காட்டுங்கள். குரானின் சொல்லப்படும் வார்த்தைகள் அந்த இலக்கியத்திலும் அதே விதமாக பயன் படுத்தப்பட்டு இருந்தால் நல்லது.

அரபி இலக்கணம் எப்போது தோன்றியது? அத்னை வரையறுத்தவர் யார்?

ஏனெனில் அரபி இல‌க்கண‌ அடிப்படையிலேயே குரான் விளக்கம் சொல்ல்ப் படுகிறது.

saarvaakan said...

மதத்தில் அறிவியல என்ற பரப்புரையை எதிர்கொள்வது எப்படி?.
http://saarvaakan.blogspot.com/2011/03/blog-post_29.html

saarvaakan said...

//நாருன் ஹாமியா' - இதன் அர்த்தம் 'சுட்டெரிக்கும் நெருப்பு' நரகில் உள்ள நெருப்பின் அளவு மிக அதிகமானது. நாம் இந்த உலகில் இதுவரை கண்டிராத வெப்பம். இதுவரை நாம் அனுபவிக்காத வெப்பம்.//

நல்லா 70 மடங்குன்னு அழுத்தி சொல்லுங்கள் தோழர்.

3265. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்" என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமான தாயிற்றே" என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், '(அப்படியல்ல.) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்" என்றார்கள்.
Volume :3 Book :59
__________
பாவம் திரு முகமதின் வளர்ப்புத்தந்தை அபு தாலிப்,நரகத்தில் இருக்கிறார்.மறுமை நாளில் முகமதுவின் சிபாரிசு எடுபடும் போல் தெரிகிறது.
_____________
6564. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் அவர்களின் பெரிய தந்தை அபூ தாலிப் அவர்களைப் பற்றிக் கூறப்பட்டது. அப்போது அவர்கள், 'அவருக்கு என் பரிந்துரை மறுமை நாளில் பயனளிக்கக் கூடும்; (அதனால்) நரக நெருப்பு அவரின் (முழு உடலையும் தீண்டாமல்) கணுக்கால்கள் வரை மட்டுமே தீண்டும்படி ஆக்கப்படலாம். (ஆனால்) அதனால் அவரின் மூளையின் மூலப்பகுதி (தகித்துக்) கொதிக்கும்' என்று சொல்ல கேட்டேன். 138
Volume :7 Book :83

suvanappiriyan said...

சார்வாகன்!

//நூன் என்றால் மீன் என்று அர்த்தம்.கீழக்கண்ட புஹாரி ஹதிதை படித்தால் தெரியும்//

//குரானில் புரியாத வாக்கியங்களும் உள்ளன என்று குரானே கூறுகிறது..

3:7. அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர்.//

எல்லா மொழிகளிலும் எல்லா மனிதர்களின் சொற்களிலும் இரு பொருள் தரும் வார்த்தைகளும் வாக்கியங்களும் உள்ளன. நேரிடையான பொருளில் கூறப்ட்டவை எவை? உவமையாக இலக்கிய நயத்துடன் கூறப்பட்டவை எவை? என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

'நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ!' என்று கவிஞர் பாடினால் ஒரு நிலவு பெண்ணாக உருமாறியதாக நாம் அர்த்தம் எடுப்பது இல்லை. இது இலக்கிய நயத்தில் சொல்லப்பட்டது என்று விளங்கிக் கொள்வோம். மனிதர்களின் பேச்சு வழக்கிலேயே குர்ஆன் அருளப்பட்டதால் இது போன்ற உவமைகளும், நேரடி அர்த்தங்களும் நிறைய நாம் பார்க்க முடியும்.

ஒரு இடத்தில் முகமது நபியை 'ஒளி' என்று இறைவன் கூறுகிறான். 'முகமது நபி அறியாமை என்ற இருளைப் போக்க வந்த ஒளி(வெளிச்சம்) என்றுதான் அறிவுடையோர் புரிந்து கொள்வார்கள்.

முஸ்லிம்களிலேயே சிலர் 'முகமது நபி இருட்டில் நடந்தால் அவர்களிடமிருந்து வெளிச்சம் வரும். முகமது நபி மனிதர் இல்லை. அவர் கடவுள் அம்சம் பொருந்தியவர்' என்று நினைப்பவர்களும் உள்ளனர்.

'முஹம்மதே! அவனே இவ்வேதத்தை உமக்கு அருளினான். அதில் உறுதி செய்யப்பட்ட வசனங்களும் உள்ளன. அவையே இவ்வேதத்தின் தாய். இரு கருத்தைத் தருகிற மற்றும் சில வசனங்களும் உள்ளன. உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும் அதற்கேற்ப விளக்கத்தைத் தேடியும் அதில் இரு கருத்துடையவற்றைப் பின்பற்றுகின்றனர். இறைவனையும் கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர அதன் விளக்கத்தை மற்றவர்கள் அறிய மாட்டார்கள்.' -குர்ஆன் 5:7

இதில் இறைவனும் கல்வியில் தேர்ந்தவர்களும் அது போன்ற வசனங்களை விளங்கிக் கொள்வார்கள் என்று விளக்கப்பட்டள்ளது. மனிதனுக்கு புரியாத வசனங்களை குர்ஆனில் இறைவன் கூற வேண்டிய அவசியமே இல்லை. இஸ்லாமிய வரலாற்றுப் பின்னணி தெரிந்த யாருமே யாருடைய உதவியும் இல்லாமல் எளிதில் புரிந்து கொள்ளலாம். சார்வாகனாகிய நீங்களே எவ்வளவு அழகாக குர்ஆனைப' புரிந்துணர்ந்து அதற்கு விளக்கமும் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

'இக் குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?' - குர்ஆன் 54:17

என்று இறைவன் பல இடங்களில் கேட்பதிலிருந்து குர்ஆனில் புரியாத விளங்காத வார்த்தைகளே இல்லை. அப்படி உங்களுக்கு தெரிந்து ஏதும் இருந்தால் வசன எண்ணைக் குறிப்பிடுங்கள். பரிசீலிப்போம்.

saarvaakan said...

இக் குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?' - குர்ஆன் 54:17

3:7. அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர்./

இந்த வசனங்கள் முரண்படுகின்றதா இல்லையா?


இந்த் 3.7க்கு இனனொரு மொழிபெயர்ப்பும் தருகிறேன்.

Yusuf Ali: He it is Who has sent down to thee the Book: In it are verses basic or fundamental (of established meaning); they are the foundation of the Book: others are allegorical. But those in whose hearts is perversity follow the part thereof that is allegorical, seeking discord, and searching for its hidden meanings, but no one knows its hidden meanings except Allah. And those who are firmly grounded in knowledge say: "We believe in the Book; the whole of it is from our Lord:" and none will grasp the Message except men of understanding.

___________
இந்த இரண்டு வசனங்களும் முரண்படவில்லை. குரானில் உள்ள எல்லா வசனக்ங்களுக்கும் சுவனப் பிரியனால் பொருள் கொள்ள முடியும்.குரான் 3.7 சரியாக விளங்கி இருக்கிறிர்கள்.அல்லா சொல்வது அது எனக்கு மட்டும்தான் புரியும் [but no one knows its hidden meanings except Allah]என்று .இதெல்லாம் அரசியலில் சகஜம்தானே.


நல்லா பொழுது போகுது கிரிக்கெட் பாத்துகிட்டே குரான் கதை

உங்க திற்மையில் குரான் 2.258_260 (அல் ஃபக்ரா) வரை யார்,எப்போது ,யாரிடம்,யாரைப் பற்றி என்ன கூறுகின்றார் என்று கொஞ்சம் விளக்குங்களேன்.

அரபி இலக்கணம் எப்போது தோன்றியது? அத்னை வரையறுத்தவர் யார்?

suvanappiriyan said...

சார்வாகன்!

//நாம் காணும் பொருட்களின் மீது சத்தியம் இடுவது அன்றைய அரபுகளின் வழக்கம்//
அல்லா ஒரு அரபியரா?//

இறங்கிய இறை வசனத்தை மறுத்தவர்கள் அரபியர்கள் அல்லவா!

//இந்த இரவு பின் வாங்கியதிற்கு நீங்கள் அளித்த விள்க்கமும் முகமது அளித்ததாக ஆதாரதுடன் காட்ட முடிந்தால் சொல்லுங்கள்.//

இத்தனை அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்ட காலத்திலேயே வானியலைப் பற்றிய அறிவு மனிதனுக்கு முழுமையாக கிட்டவில்லை. அந்த கால கட்டத்தில் இறைவன் உதவியால் முகமது நபி விளக்கியிருந்தால் அந்த மக்களுக்கு புரிய வேண்டுமே! மக்கள் நேர் வழி பெற வேண்டும் என்பதற்க்காகத்தானே இந்த வேதமே அருளப்பட்டது! புரியாத உபதேசத்தால் என்ன பயன்?

மேலும் 'பின் வாங்கும் இரவு' என்ற வாக்கியத்தை மொழி பெயர்ப்பதில் எந்த சிக்கலும் இல்லை. முகமது நபி காலத்திலிருந்து இன்று வரை உள்ள குர்ஆனும் எந்த மாறுதலுக்கும் உள்ளாகவில்லை. சந்தேகம் இருந்தால் தாஷ்கண்டிலும், இஸ்தான்புல்லிலும் உள்ள அன்றைய குர்ஆனை எவரும் பார்வையிடலாம்.

முகமது நபி ஒன்றை அறிவித்து அதற்கு மாற்றமாக வேறொருவர் குர்ஆனிலிருந்து விளக்கமளிக்க முடியாது. முகமது நபி சொல்லாத ஒரு செய்தியை நம் அறிவுக்கு ஏற்ப விளக்கம் பெறுவதில் தவறில்லை. ஏனெனில் குர்ஆனைப் பற்றி இறைவன் சிந்திக்கச் சொல்கிறான்.

நான் சொல்வதை நீங்கள் மறுக்கலாம். நீங்கள் சொல்வதை நான் மறுக்கலாம். இப்னு அப்பாஸ் சொல்வதை நாம் மறுக்கலாம். ஆனால் குர்ஆன் சொல்வதையும் மார்க்க விஷயமாக முகமது நபி சொன்ன ஆதாரபூர்வமான சொற்களையும் இஸ்லாமியர் எவரும் மறுக்க முடியாது. மறுக்க கூடாது இதுதான் இஸ்லாத்தின் நிலை.

'அவர்கள் சிந்திப்பதற்க்காக இந்த குர்ஆனில் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளோம். அது அவர்களுக்கு வெறுப்பையே அதிகப்படுத்துகிறது.' - குர்ஆன் 17:41

//பாவம் திரு முகமதின் வளர்ப்புத்தந்தை அபு தாலிப்,நரகத்தில் இருக்கிறார்.மறுமை நாளில் முகமதுவின் சிபாரிசு எடுபடும் போல் தெரிகிறது.//

அபுதாலிபுக்கும் இறைவனுக்கும் இடையில் உள்ள பிரச்னையில் நாம் ஏன் தலையிட வேண்டும். உங்களையும் என்னையும் தருமியையும் பற்றி கவலைப் படுவோம் தோழரே!.

suvanappiriyan said...

சார்வாகன்!

//உங்க திற்மையில் குரான் 2.258_260 (அல் ஃபக்ரா) வரை யார்,எப்போது ,யாரிடம்,யாரைப் பற்றி என்ன கூறுகின்றார் என்று கொஞ்சம் விளக்குங்களேன்.//

வசனம் 2:258 இறைத்தூதர் ஆப்ரஹாமின் காலத்தில் வாழ்ந்த அந்நாட்டு அரசனைப் பற்றி பேசுகிறது. அந்த அரசனுக்கும் ஆப்ரஹாமுக்கும் இடையே நடந்த உரையாடலைத்தான் இவ்வசனம் சுட்டிக் காட்டுகிறது.

வசனம் 2:259 ல் வரும் நல்லடியார் யார் என்ற விபரம் குர்ஆனில் குறிப்பிடப்படவில்லை. இவர் நபியாகவும் இருந்திருக்கலாம். அல்லது அந்த சமூகத்தில் வாழ்ந்த சிறந்த மனிதராகவும் இருந்திருக்கலாம்.

வசனம் 2:260 இந்த வசனம் இறைவனுக்கும் இறைத்தூதர் ஆப்ரஹாமுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் குறிப்பிடுகிறது.

இதில் என்ன குழப்பத்தைக் கண்டீர்கள்?

//அரபி இலக்கணம் எப்போது தோன்றியது? அத்னை வரையறுத்தவர் யார்?//


பழைய செமிட்டிக் குடும்பத்தைச் சார்ந்த இந்த தொன்மையான மொழியின் வரலாறை அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கும் எண்கள் அரேபிய எழுத்துருவை அடிப்படையாக கொண்டது. இதன் மூலம் கூட இதன் தொன்மையை அறிந்து கொள்ளலாம்.

நமது தமிழ்மொழி போல் செம்மொழிகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. கி.மு 500 ல் தொடங்கி கி.பி 300ல் இந்த மொழி செம்மைப் படுத்தப்பட்டதாக அறியப்படுகிறது.

அரபி மொழியை செம்மைப் படுத்தியவர்களில் கலீல் இப்னுஅஹமத் அல் பராஹூதி, ஹஸன் மசூதி போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

இப்னு அபு இஸ்ஹாக் என்பவர் அரபு மொழியின் இலக்கணத்தை வகுத்தவராக நம்பப்படுகிறார். உலக மொழிகள் எல்லாம் சமமே! ஏனெனில் உலக மொழிகள் அனைத்தும் இறைவனால் மனிதர்களின் வசதிக்காக உருவாக்கப்பட்டதாக குர்ஆன் கூறுகிறது. எனவே ஒரு மொழியை உயர்த்தி மற்றொரு மொழியை தாழ்த்துவது இஸ்லாமிய கொள்கைக்கு மாற்றமாகும்.

saarvaakan said...

தோழர் சுவனப் பிரியன்,
நீங்கள் காட்டிய குரான் 3.7 திரு பி.ஜேவின் மொழிபெயர்ப்பு அதனை அரபி மூலத்தில் இருந்து சரி பார்க்குமாறு வேண்டுகிறேன்.ஏனெனில் அது பிற மொழி பெயர்ப்புகளில் இருந்து எதிமறையான பொருள் தருகிறது.

இந்த கேள்விகளுக்கு மட்டும் விடையளித்துவிட்டால் அவ்வளவுதான்.

அரபி இலக்கணம் எப்போது தோன்றியது?குரானுக்கு முன்பா,பின்பா?
அத்னை வரையறுத்தவர் யார்?

மிக்க நன்றி

saarvaakan said...
This comment has been removed by the author.
saarvaakan said...

//வசனம் 2:258 இறைத்தூதர் ஆப்ரஹாமின் காலத்தில் வாழ்ந்த அந்நாட்டு அரசனைப் பற்றி பேசுகிறது. அந்த அரசனுக்கும் ஆப்ரஹாமுக்கும் இடையே நடந்த உரையாடலைத்தான் இவ்வசனம் சுட்டிக் காட்டுகிறது.

வசனம் 2:259 ல் வரும் நல்லடியார் யார் என்ற விபரம் குர்ஆனில் குறிப்பிடப்படவில்லை. இவர் நபியாகவும் இருந்திருக்கலாம். அல்லது அந்த சமூகத்தில் வாழ்ந்த சிறந்த மனிதராகவும் இருந்திருக்கலாம்.//
விளக்கம் அளிக்க வேண்டிய விஷயங்களை மேம்போக்காக சொல்கிறீர்கள்.ஒரு வார்த்தைக்கு அறிவியல் தத்துவ்ங்களை மழையாக பொழிகின்றீர்கள்.

நான் சொல்கிறேன்
1.குரான் 2:258: இப்ராஹிம்(ஆப்ரஹாம்)ஒரு மன்னனிடம் இறைவனின் உயிப்பிக்கும் ஆற்றல் பற்றி விவாதிக்கிறார்.இம்மன்னன் நூஹின்(நோவா) கொள்ளுப் பேரன் நிம்ரோத் என்று கூறப்படுகிறது.

2. குரான் 2.259 :இப்ராஹிம் அந்த அரசனிடம் ஒரு கதை சொல்வதாக கூறப்படுகின்றது. ஒரு மனிதர் அழிந்த கிராமத்தின் வழி சென்றதாகவும், இறைவன் அவரை மரணிக்க செய்து 100 வருடம் கழித்து எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இப்ராஹிம் இந்த கதையை கூறுகிறார் என்றால் அவருக்கு முன்பு நடந்த சம்பவமாக இருக்க வேண்டும்.ஆனால் அந்த மனித உஜைர்(எஸ்ரா) என்று இபின் கதிர் உட்பட்ட பல குரான் விளக்கங்கள் கூறுகின்றன.இவ்விணைப்பில் உள்ள குரானில் கூட உஜைர் என்றே குறிப்பிட பட்டு உள்ளது
http://sites.google.com/site/tamilquraan2/chapter002ver201-286

http://www.scribd.com/doc/49636174/Stories-of-the-Prophets-by-Ibn-Kathir

உஜைர் என்பது தவறு என்றால் அக்கால உரையாசிரியர்களுக்கு கூட குரான் புரியவில்லை என்றே அர்த்தம்.பெரும்பாலும் இந்த மத புத்தகங்கள் வரலாற்றுக்கு ஒத்துப் போகாது.ஆகவே இது ஒரு இயல்பான விஷ்யம்தான். ஆகவே மத புத்தகத்தில் வரலாறு வர‌வே வராது.அறிவியல் வார்த்தை விளையாட்டு செய்தால் வரும் ஆனால் வராது..
______________
அரபி இலக்கணம் தொடர்பான பதிலுக்கு ஏதாவது சுட்டி இணைப்பு கொடுக்கவும்.நான் ஏதவது கூறினால் இல்லை என்று சொல்வீர்கள்.

இன்னொரு கேள்வி வஹி(இறை செய்தி) என்பது இறைத் தூதர்களுக்கு மட்டும்தான் வருமா?

saarvaakan said...

இப்னு அபு இஸ்ஹா: இவர் ந்ம்ம அண்ணாச்சி இபின் இஷாக்(முதலில் திரு முகமதுவின் வாழ்க்க வரலாறு எழுதியவர்) இல்லையா? இவர் தருமி அய்யாவுக்கு ரொம்ப வேண்டப்பட்டவர்.


குரானை பொருள் கொள்ளும் அரபி இலக்கணம் குரானுக்கு பிறகே தோன்றியது.இத்னை படிப்பவர்கள் விளங்கி கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்.

http://en.wikipedia.org/wiki/Arabic_grammar

http://corpus.quran.com/documentation/grammar.jsp

தருமி said...

சுவனப் பிரியன்,

//அரபு மொழியின் இந்த சாதாரண விபரத்தையே அரைகுறையாக விளங்கிய ஒருவரின் கட்டுரைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து மொழி பெயர்த்துக் கொண்டிருப்பது வீண் வேலை என்றே எனக்குப் படுகிறது. //

எதோ அந்த ஆசிரியரின் கேள்விகளுக்கெல்லாம் முழுதாகப் பதில் தந்து விட்டதுபோல் நினைத்து இதை ‘வீண் வேலை’ என்கிறீர்களே!


//இந்த நேரத்தில் கொ.ப.சே வோடு சேர்ந்து ஒரு சில உலக சினிமாக்களாவது பார்த்திருக்கலாம் :-)//

உங்கள் மதம் சொல்லும் சுவனத்தின் மீது எனக்கும் ரொம்ப பிரியமா போச்சு! இருக்காதே பின்ன ..?

ஆனாலும் உங்களை மாதிரி ’அதற்கு’ மட்டுமே பிரியனாக இருப்பதை விடவும் இன்னும் கொஞ்சம் அதிகமாக நீங்கள் வெறுக்கும் சினிமா, பாட்டு, இசை, ஓவியம், இலக்கியம், நூல்கள், போன்ற பல விஷயங்களும் அதோடு மத அறிவும் எனக்குப் பிரியமான விஷயங்களாக இருக்கின்றவே .. என்ன செய்யலாம்?

suvanappiriyan said...

தருமி!

//உங்கள் மதம் சொல்லும் சுவனத்தின் மீது எனக்கும் ரொம்ப பிரியமா போச்சு! இருக்காதே பின்ன ..?//

அப்போ என்ன பிரச்னை சார்! நம் அனைவரையும் படைத்தவர் கர்த்தர் ஒருவர்தான் என்று உளமாற நம்புங்கள். ஏசு நாதர் அந்த கர்த்தரால் அனுப்பப்பட்ட தூதர்: இந்த தூதர்களில் கடைசியாக அனுப்பப்பட்டவர் முகமது நபி. அவ்வளவுதான். எப்படியோ பாதி கிணறு தாண்டி விட்ட மாதிரி தெரிகிறது. சந்தோஷம்.

//ஆனாலும் உங்களை மாதிரி ’அதற்கு’ மட்டுமே பிரியனாக இருப்பதை விடவும் இன்னும் கொஞ்சம் அதிகமாக நீங்கள் வெறுக்கும் சினிமா, பாட்டு, இசை, ஓவியம், இலக்கியம், நூல்கள், போன்ற பல விஷயங்களும் அதோடு மத அறிவும் எனக்குப் பிரியமான விஷயங்களாக இருக்கின்றவே .//

ஓவியம், இலக்கியம், நூல்களை நான் வெறுக்கவில்லையே! ஏனெனில் இவற்றை இஸ்லாமும் வெறுக்கவில்லை.

தருமி said...

//ஏனெனில் இவற்றை இஸ்லாமும் வெறுக்கவில்லை.//

இன்னுமா இந்தக் கதை!

தருமி said...

//உங்கள் மதம் சொல்லும் சுவனத்தின் மீது எனக்கும் ரொம்ப பிரியமா போச்சு! இருக்காதே பின்ன ..?//

யாருக்குத்தான் ”உங்கள்” சுவனத்தின் மீது பிரியமில்லாமல் போகும் .. சொல்லுங்க!

Anonymous said...

கொஞ்சம் இளைப்பாற,

நண்பர் ஈமெயிலில் அனுப்பியது,

சிரிக்க (மதம் பிடிக்காத மனிதர்களுக்கு) சிந்திக்க (முஸ்லிம்களுக்கு)

A young Arab asks his father:

What is this weird hat that we are wearing?

Why, it's a "chechia" because in the desert it protects our heads from the Sun

And what is this type of clothing that we are wearing?

It's a "djbellah" because in the desert it is very hot and it protects
your
body!



And what are these ugly shoes that we have on our feet?
These are "babouches", which keep us from burning our feet when in the
desert!

Tell me Abba?
Yes my son?

Why are we living in Melbourne and still wearing all this shit?

suvanappiriyan said...

சார்வாகன்!

//குரானை பொருள் கொள்ளும் அரபி இலக்கணம் குரானுக்கு பிறகே தோன்றியது.இத்னை படிப்பவர்கள் விளங்கி கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்.//

அரபு இலக்கணம் என்பது குர்ஆன் இறங்குவதற்கு முன்பே புழக்கத்தில் இருந்தது. எனவேதான் அன்றைய அரபுகள் இதன் உயர்ந்த தரத்தில் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை ஏற்றனர். ஆனால் அரபு முறையாக தொகுக்கப்பட்டு ஆவணங்களாக ஆக்கப்படாமல் இருந்தது. ஏனெனில் படிப்பறிவு இல்லாத சமூகமாக அன்றைய அரபுகள் இருந்ததே அதற்கு காரணம். இஸ்லாமிய வரவுக்குப் பிறகு உலக நாடுகளில் இஸ்லாம் பரவியவுடன் அரபு மொழியின் இலக்கணத்தை ஆவணமாக்கும் முயற்சியில் இப்னு அபு இஸ்ஹாக் ஈடுபட்டார். இவரது காலம் கி.பி 735.

yasir said...

சுவனப்பிரியன்
//குர் ஆனுக்கு விளக்கம் யார் கொடுத்தாலும் அதற்கு முகமது நபியின் ஆதாரப்பூர்வமான விளக்கமும் சேர்ந்து வர வேண்டும்.//
பூமி உருண்டை என்பதற்கு முகமது நபியின் ஆதாரப்பூர்வமான விளக்கம் என்ன?
//முகம்மது நபி இவ்வாறு அர்த்தப்படுத்தியுள்ளார் என்று ஆதாரத்துடன் தாருங்கள் பரிசீலிப்போம்//

அதைத் தான் நாங்களும் கேட்கிறோம் இன்று அறிவியல் என்கிற போர்வையில் ஆளாளுக்கு விஞ்ஞான விளக்கங்களை அள்ளி வீசிக்கொண்டிருக்கும் விஞ்ஞானக் கருத்துக்கள் அனைத்தும் முகமது நபி இவ்வாறுதான் அர்த்தப்ப்டுத்திக் கூறினார்கள் என்று ஆதாரத்துடன் ஹதீத் தாருங்கள்.

yasir said...

கடவுள் தன்னிடமுள்ள மூலப்பதிவிலிருந்து காப்பி எடுத்து அனுப்பவே 23 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. ஆனால் மனிதன் அதே பதிவை மீண்டும் காப்பி எடுக்க 23 நொடிகள் இன்று போதுமானதாக இருக்கின்றது. 'ஆகு' என்ற வார்த்தைக்கு இத்தனை ஆண்டுகள் தேவைப்படுகிறதோ? என்னே ஒரு அற்புத சக்தி!

Post a Comment