ஏனைய முந்திய பதிவுகள்:
பதிவு - 7
பதிவு - 8
பதிவு - 9
பதிவு - 10
இப்பதிவு: 11
*
CHAPTER 6
THE TOTALITARIAN NATURE OF ISLAM
இஸ்லாமின் முழு ஆளுமை
கிறித்துவமும் புத்தமும் அன்பைப் போதிக்கும், தனிமனித உணர்வுகளோடு தொடர்புள்ள மதங்கள். முகமதியமும், (ரஷ்ய) பொதுவுடைமைத் தத்துவமும் நடைமுறைப்படுத்தப்பட்ட, சமுதாய நோக்குள்ள, ஆன்மீகமற்ற, உலகை அடிமைப்படுத்தும் நோக்குள்ளவை. -- Bertrand Russell
Bousquet என்ற இஸ்லாமியச் சட்ட நிபுணர்,இஸ்லாமிய முழு ஆளுமைக்கு காரணங்களாக இரண்டைக் கூறுகிறார். அவை: 1. இஸ்லாமியச் சட்டம், 2. ஜிகாதின் மூலமாக உலகைத் தன்மயமாக்கலுக்கு முனையும் இஸ்லாமிய நோக்கம். முதலில் இஸ்லாமியச் சட்டத்தைப் பார்த்து விட்டு அதன்பின் ஜிகாதைப் பற்றிப் பார்க்கலாம். (163)
கிறித்துவத்தில் சீசரும், கடவுளும், அரசும் கடவுளும் தனித்தனியே பார்க்கப்படுகின்றன. (மத் 22:17) ஆனால் இந்த வேறுபாடு இஸ்லாமில் இல்லை; இரண்டும் தனித்தனியே பார்க்கப் படுவதில்லை. முகமது ஒரு சேனைத் தலைவர்; சண்டையுமிட்டார்; சமாதானமும் செய்வித்தார்; சட்டங்களை இயற்றினார்; தண்டனைகளை அளித்தார். அவர் காலத்திலிருந்தே இஸ்லாமியர் ஒரு குழுவாக, சமூகத்தையும் சமயத்தையும் ஒன்றாக இணைத்திருந்தவர்களாக இருந்தனர்.
இஸ்லாமியச் சட்டங்கள் ஷாரியா என்றழைக்கப்படுகின்றன. இவை நான்கு வகைகள்: 1. குரான்; 2. முகமதுவின் சுன்னா; 3. ijima - ஆய்வாளர்களின் தீர்ப்புகள்; 4. kiyas / qiyas - ஒப்புவமைகள் (164)
1. குரான் - கடவுளின் வார்த்தைகள். பல விஷய்ங்கள் குழப்பமான நிலையிலோ, வரலாற்றை மட்டும் தழுவியோ இருக்கும்.
2. சுன்னா : குரானை முழுமையாகப் புரிந்து கொள்ள இது ஏதுவாக இருக்கிறது. இதனை விளக்க வந்தவர்கள் - faqih - நான்கு பேர். அனைவருமே ஒத்துக் கொள்ளப் படுகிறார்கள்.
Malik ibn Abbas (795) - இவரது கோட்பாடுகளை ’முவாட்டா’ என்றழைக்கின்றனர்.
Abu Hanifa (767) - இந்திய, துருக்கிய இஸ்லாமியர் இவரைப் பின்பற்றுகின்றனர்.
Al-Shifi'i (820) - மிதவாதியாகக் கருதப்படுகிறார். இந்தோனேஷியா, எகிப்து, மலேசியா,. யேமன் - இங்கெல்லாம் இவரைப் பின்பற்றுகிறார்கள்.
Ahmad ibn Hanbal (85) - தென் அரேபியாவின் வஹாபிக்கள் இவரைப் பின்பற்றுகிறார்கள்.
IJMA : Schacht சொல்வது போல் A.D.900-க்குப் பின் இஸ்லாமியச் சட்ட திட்டங்கள் திட்டவட்டமாக்கப்பட்டன. இஸ்லாமியச் சட்டங்கள் அப்பாஸிட் காலத்தின் சமுதாய, பொருளாதார நிலைகளுக்கேற்ப அமைக்கப்பட்டன. ஆனால் பிற்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கேற்ப அவை மாறாது தனித்து நிற்கின்றன.
KIYAS : மற்ற மூன்று கொள்கைகளோடு ஒப்பிடும்போது மிகக் குறைவான முக்கியத்துவம் வாய்ந்தது.
இஸ்லாமியச் சட்டங்கள் - அவைகள் இறைவனால் கொடுக்கப்பட்டவை என்று நம்பப்படுபவை; ஆதலால் அவை மாறிவரும், பரிணாமம் காணும் சமூக மாற்றங்களுக்கேற்ப மாறாது.
குரானும் சுன்னாவும் இஸ்லாமைக் கட்டுப் படுத்தும் சட்டங்கள். இதில் குரான் என்பது கடவுளின் வார்த்தை இல்லை என்பதை இதுவரை விளக்கியுள்ளோம்.
7 -9 வது நூற்றாண்டுகளில், யூதம், கிறித்துவம், சமாரித்துவம், ஜோராஸ்டிரியனிஸ்ம், முகமதுவிற்கு முந்திய அரேபியம் - இவை எல்லாவற்றிலிருந்தும் கடன் பெறப்பட்டவைகளே அவை. பல பொருந்தாதவைகள், முரண்பாடுகள், தவறுகள், இலக்கணப்பிழைகள் - இவையெல்லாம் நிறைந்தவைகள். அடுத்ததாக, குரானில் கொடுக்கப்படும் கட்டளைகள் இரக்கம் மிகுந்த ஒரு கடவுளிடமிருந்து வரக்கூடிய தரம் உள்ளதாக இல்லை.(169)
உலாமாக்கள் (குருமார்கள்) தங்கள் இரும்புப் பிடியிலேயே வைத்திருப்பதால்தான் இஸ்லாமிய சமூகங்களில் எவ்வித அறிவியல் வளர்ச்சிகளும் இல்லாமல் போயின. புதிய சிந்தனைகளுக்கு இடமில்லாமல் போய்விட்டது.
இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியம் மட்டுமே இருக்கும்; அங்கு தனிமனித உரிமைகள் இருக்காது.
குரானில் சொல்லப்படும் இஸ்லாமியக் கோட்பாடுகள் மனிதர்களின் நன்முறைகளுக்கு உடன்பாடான ஒன்றல்ல. (171)
இஸ்லாமியச் சட்டங்கள் - அவைகள் இறைவனால் கொடுக்கப்பட்டவை என்று நம்பப்படுபவை; ஆதலால் அவை மாறிவரும், பரிணாமம் காணும் சமூக மாற்றங்களுக்கேற்ப மாறாது.
குரானும் சுன்னாவும் இஸ்லாமைக் கட்டுப் படுத்தும் சட்டங்கள். இதில் குரான் என்பது கடவுளின் வார்த்தை இல்லை என்பதை இதுவரை விளக்கியுள்ளோம்.
7 -9 வது நூற்றாண்டுகளில், யூதம், கிறித்துவம், சமாரித்துவம், ஜோராஸ்டிரியனிஸ்ம், முகமதுவிற்கு முந்திய அரேபியம் - இவை எல்லாவற்றிலிருந்தும் கடன் பெறப்பட்டவைகளே அவை. பல பொருந்தாதவைகள், முரண்பாடுகள், தவறுகள், இலக்கணப்பிழைகள் - இவையெல்லாம் நிறைந்தவைகள். அடுத்ததாக, குரானில் கொடுக்கப்படும் கட்டளைகள் இரக்கம் மிகுந்த ஒரு கடவுளிடமிருந்து வரக்கூடிய தரம் உள்ளதாக இல்லை.(169)
உலாமாக்கள் (குருமார்கள்) தங்கள் இரும்புப் பிடியிலேயே வைத்திருப்பதால்தான் இஸ்லாமிய சமூகங்களில் எவ்வித அறிவியல் வளர்ச்சிகளும் இல்லாமல் போயின. புதிய சிந்தனைகளுக்கு இடமில்லாமல் போய்விட்டது.
இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியம் மட்டுமே இருக்கும்; அங்கு தனிமனித உரிமைகள் இருக்காது.
குரானில் சொல்லப்படும் இஸ்லாமியக் கோட்பாடுகள் மனிதர்களின் நன்முறைகளுக்கு உடன்பாடான ஒன்றல்ல. (171)
31 comments:
தருமி!
//7 -9 வது நூற்றாண்டுகளில், யூதம், கிறித்துவம், சமாரித்துவம், ஜோராஸ்டிரியனிஸ்ம், முகமதுவிற்கு முந்திய அரேபியம் - இவை எல்லாவற்றிலிருந்தும் கடன் பெறப்பட்டவைகளே அவை.//
அதாவது கட்டுரை ஆசிரியர் சொல்ல வருவது முகமது நபி குர்ஆனை இறைவனிடமிருந்து பெறவில்லை. பைபிள், தோரா போன்ற வேதங்களிலிருந்து காப்பி அடித்து குர்ஆனை தந்து விட்டார் என்கிறார். சரி... அடுத்த இரண்டு பாராக்களில் அவர் சொல்வதை அவரே மறுக்கும் விந்தையையும் பார்ப்போம்.
//கிறித்துவத்தில் சீசரும், கடவுளும், அரசும் கடவுளும் தனித்தனியே பார்க்கப்படுகின்றன. (மத் 22:17) ஆனால் இந்த வேறுபாடு இஸ்லாமில் இல்லை; இரண்டும் தனித்தனியே பார்க்கப் படுவதில்லை. முகமது ஒரு சேனைத் தலைவர்; சண்டையுமிட்டார்; சமாதானமும் செய்வித்தார்; சட்டங்களை இயற்றினார்; தண்டனைகளை அளித்தார். அவர் காலத்திலிருந்தே இஸ்லாமியர் ஒரு குழுவாக, சமூகத்தையும் சமயத்தையும் ஒன்றாக இணைத்திருந்தவர்களாக இருந்தனர்.//
மேலே சொன்ன கருத்திலிருந்து இங்கு முற்றிலும் மாறுபடுகிறார் ஆசிரியர். எதை நீங்கள் நம்பப் போகிறீர்கள். ஒரு மனிதரிடமிருந்து ஒரே புத்தகத்தில் ஒரே பக்கத்தில் இரு வேறுபட்ட கருத்துக்கள். எந்த அளவு குழம்பியிருக்கிறார் என்பது தெரியவில்லையா?
எசக்கியேல் 23 ஆம் அதிகாரத்தில் நான் எழுதவே கூசக் கூடிய சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது. இதை குடும்பத்தவர் மத்தியில் நம்மால் அமர்ந்து படிக்க முடியுமா? அதே போல் உதாரணத்திற்கு மீன்கள் கிடைத்த அற்புதத்தை ஏசுநாதரின் வாழ்நாளிலேயே நடந்ததாக லூக்கா சொல்கிறார்.ஆனால் இந்த அற்புதமோ ஏசு உயிர்த் தெழுந்த பின்னரே நடந்தது என்று யோவான் கூறுகிறார். இதில் யார் சொல்வதை நம்புவது. இது போன்று எண்ணற்ற உதாரணங்களை என்னால் பைபிளிலிருந்து எடுக்க முடியும். முகமது நபி இதே பைபிளை வைத்து குர்ஆனை காப்பி அடித்திருந்தால் இதில் உள்ள தவறுகள், ஆபாச கதைகள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும். ஆனால் பைபிளில் சொல்லப்படும் சம்பவங்களும், குர்ஆனில் சொல்லப்படும் சம்பவங்களும் முற்றிலுமாக மாறுபடுகிறது. சொல்லப்படும் நபர்கள் ஒன்றாக இருந்தாலும் அவர்களின் வரலாறு முற்றிலும் மாறுபடுகிறது. இந்த இடத்தில்தான் கட்டுரை ஆசிரியர் குழம்பிப் போய் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்.
மேலும் விளக்கமறிய
எனது பழைய பதிவை பார்வையிடுங்கள்.
1.கட்டுரை ஆசிரியர் கூறுவது குரானை எழுதியவர் கிறித்த,ஜொரஸ்ட்ரிய,யூத மதங்களின் கதைகளை கொஞ்சம் மாற்றி ,சில சம்யபங்களில் அப்படியெ கூறி இருக்கிறார்ர் என்பது.
2.நடைமுறை இஸ்லாமில் இஸ்லாம் ஒரு ஆன்மீக வழியாக இல்லாமல் நாடு விரிவாக்க அர்சியல் சித்தாந்ந்தமாகவே பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இரண்டுக்கும் என்ன முரரண்பாடு இருக்கிறது?
உங்கள் பதிவிற்கே வருகிறேன்.கதிஜாவின் உறவினர் நவ்ஃபல் என்பவரின் மகன் கிறித்தவரான 'வராக'மூலமாக்வே த்ன்னை அழைத்தவர் ஜிப்ரில்(கேப்ரியேல்) என்று உனர்ந்து கொண்டார்.(புஹாரி 3)
இன்னும் பார்த்தால் அக்காலத்திலெயே முகமதுவிற்கு யாரோ சொல்லிக் கொடுப்பதாக் அக்காகல மெக்காவாசிகள் கூஅரியுள்ல்னர்.
_____________
16:103. “நிச்சயமாக அவருக்கு கற்றுக் கொடுப்பவன் ஒரு மனிதனே, (இறைவனல்லன்)” என்று அவர்கள் கூறுவதை திடமாக நாம் அறிவோம்; எவனைச் சார்ந்து அவர்கள் கூறுகிறார்களோ, அவனுடைய மொழி (அரபியல்லாது) அன்னிய மொழியாகும்; ஆனால், இதுவோ தெளிவான அரபி மொழியாகும்.
_________________
இப்படி குறிப்பிடப்படும் மெக்காவாசிகள் பார்த்த மனிதர் யார்? அவரின் மொழி எது?
முகமதுவின் காலத்தில் அரபி மொழி எழுத்து வழக்கில் இருந்தற்கான ஒரு வரலார்று சான்று காட்ட முடியுமா?
(தொடரும்)
கடன் பெறப்பட்ட கதைகள், சமூகமும் சமுதாயமும் ஒன்றாக இணைத்திருப்பது இரண்டும் வெவ்வேறு points. தெளிவாகவே சொல்லியுள்ளேன். இதில் என்ன முரண்பாடு கண்டீர்களோ?
தோரா,பைபிள் போலவே குரானும் கட்டுக் கதை என்றே கூறுகிறோம்.
ஆதம்,நோவாஆபிரஹாம்,மோஸஸ்.இயேசு இந்த கதைகள் அனைத்துமே மரபுவழிக்கதைகள் இந்த்
ஒரு விஷயம் சொல்கிறேன்.யூதர்கள் இஸ்ரேலை பெற்று விட்டார்கள் தவிர வராறு பூர்வமாக அவர்கள் அங்கே காலம் காலமாக வசித்தற்கு ஆதாரம் இதுவரை இல்லை.இத்ற்காக பல அக்ழ்வாரய்சிகளில்ல் ஈடுபட்டனர்.
இஸ்ரேலின் அல் அக்ஸா மசுதியின் அருகே யூதர்கள் அகழ்வாராய்சிக்காக தோண்டினர். நோக்கமானது.சுலமான்(சாலமன்) ஆலயம் இடித்து இம்மசூதி கட்டப் பட்டது என்பதற்கு ஏதாவது ஆதாரம் கிடைக்குமா என்று.ஆனால் கிடைத்ததோ சில கல்வெட்டுகள்,அவை பண்டைய எகிப்திய மொழியில் இருந்தன.
அதாவது பாலஸ்தீனமும் மூஸாவின்(கி.மு 600) காலத்தில் எகிப்து நாட்டின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது.
அதாவது எகிப்து நாட்டின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு செல்வதற்கு ஆண்டவன் வழி காட்டினார் என்றால் அக்கடவுளுக்கு வரலறு மட்டுமல்ல ,புவியியலும் தெரியவில்லை.இதனால் நல்ல வேளையாக அல் அக்ஸா மசூதி தப்பித்தது .
எனக்கு ஒரு சந்தேகம் இதுவரை எந்த முஸ்லிம் ஆராய்சியாளரும் எந்த அகழ்வாராய்சியும் செய்தாகவோ,குரானுக்கு வரலாற்று ஆதாரங்கள் தேடியதாகவோ செய்தி இல்லை ஏன்? எல்லாம் வார்த்தை விளையாட்டு மட்டுமே.
(தொடரும்)
சுவனப்பிரியன்,
//மேலே சொன்ன கருத்திலிருந்து இங்கு முற்றிலும் மாறுபடுகிறார் ஆசிரியர். எதை நீங்கள் நம்பப் போகிறீர்கள். ஒரு மனிதரிடமிருந்து ஒரே புத்தகத்தில் ஒரே பக்கத்தில் இரு வேறுபட்ட கருத்துக்கள். எந்த அளவு குழம்பியிருக்கிறார் என்பது தெரியவில்லையா?//
எனக்கும் இரு வேறு கருத்துக்கள் தெரியவில்லை. யாராவது தமிழ் தெரிந்தவர்கள் இருந்தால் எனக்கும் விளக்குங்கள்.
சார்வாகன்!
////16:103. “நிச்சயமாக அவருக்கு கற்றுக் கொடுப்பவன் ஒரு மனிதனே, (இறைவனல்லன்)” என்று அவர்கள் கூறுவதை திடமாக நாம் அறிவோம்; எவனைச் சார்ந்து அவர்கள் கூறுகிறார்களோ, அவனுடைய மொழி (அரபியல்லாது) அன்னிய மொழியாகும்; ஆனால், இதுவோ தெளிவான அரபி மொழியாகும்.//
_________________
இப்படி குறிப்பிடப்படும் மெக்காவாசிகள் பார்த்த மனிதர் யார்? அவரின் மொழி எது?//
நீங்கள் குறிப்பிடும் அந்த நபர் வரக்கா பின் நவ்பல். இவர் கிறித்தவ மதத்தை தழுவியவர். கதீஜா அவர்களுக்கு நெருங்கிய உறவினர். இவர் ஹூப்ரு மொழியில் சிறந்த வல்லுனர். பைபிளை ஓரளவு எழுதியும் தன்னுடன் வைத்திருந்தார். முகமது நபி ஜிப்ரீலைப் பார்த்து முதன் முதல் பயந்தவுடன் அவரது மனைவி கதீஜா வரக்காவிடம் விபரங்களைச் சொல்கிறார். இதைக் கேட்ட வரக்கா 'முகமது நபியிடம் வந்தது ஜிப்ரீல்' என்று விளக்குகிறார். ஏனெனில் முகமது நபியைப் பற்றிய முன்னறிவிப்பு பைபிளில் இருந்தது. இது நடந்து சில நாட்களிலேயே மரணித்தும் விடுகிறார். அவர் இறந்த பிறகும் பல வருடங்கள் முகமது நபிக்கு குர்ஆன் சிறிது சிறிதாக இறங்கியது. வரக்காவுக்கு தெரிந்த மொழியோ ஹூப்ரு: முகமது நபிக்கு அருளப்பட்ட வேதமோ அரபி மொழி: மேலும் தனது மொழியையே எழுதவும் படிக்கவும் தெரியாதவர் முகமது நபி. அன்றை இஸ்லாமிய எதிரிகள் 'முகமது வரகாவிடம் பாடம் பயின்றுதான் குர்ஆனை சொல்கிறார்' என்று பரவலாக பேச ஆரம்பித்தனர். அதை மறுக்கும் விதமாகத்தான் மேற்கண்ட வசனம் இறங்கியது.
//முகமதுவின் காலத்தில் அரபி மொழி எழுத்து வழக்கில் இருந்தற்கான ஒரு வரலார்று சான்று காட்ட முடியுமா?//
பல சான்றுகள் காட்ட முடியும். மக்காவில் உள்ள சிலை வணங்கிகளோடு 'ஹூதைபிய்யா உடன்படிக்கை' ஏற்பட்டது. முகமது நபி தனது மோதிரத்தால் அந்த உடன்படிக்கையில் கைநாட்டு இடுகிறார். இது பல ஹதீதுகளில் பதியப்பட்டுள்ளது.
இஸ்லாத்தை விளக்கி முகமது நபி காலத்திலேயே பல மன்னர்களுக்கும் எழுதப்பட்ட கடிதங்கள் இன்றும் பாதுகாக்கப்படுகிறது.
உஸ்மான் காலத்தில் தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட குர்ஆன் பிரதிகள் ஒன்று இஸ்தான்புல்லிலும், மற்றொன்று தாஸ்கண்டிலும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இலக்கண இலக்கியம் கற்ற பல கவிஞர்கள் முகமது நபி காலத்திலும் அதற்கு முன்னும் வாழ்ந்திருக்கிறார்கள். இம்ரவுல்கைஸ், முதனப்பீ போன்ற அறிஞர்களும், ஹஸ்ஸான்,கஃபு போன்ற நபித்தோழர்களும் அறிஞர்களாகவும் கவிஞர்களாகவும் இருந்திருக்கிறார்கள். குர்ஆனுக்கு போட்டியாக 'அல் பீலு மல் பீலு' என்ற கவிதைகளை இயற்றிய கவிஞர்களும் முகமது நபி காலத்திலேயே இருந்துள்ளனர். அந்த முயற்சியில் பிறகு தோல்வியும் அடைந்தனர்.
பிலிப் கே. ஹிட்டி, ரேனல்ட் நிக்கல்ஸன், புரோக்கல் மேன் போன்ற அறிஞர்களின் அரபு இலக்கியங்கள், அரபு வரலாறு பற்றிய புத்தகங்களை ஆங்கிலத்திலேயே படிக்கலாம்.
//எனக்கு ஒரு சந்தேகம் இதுவரை எந்த முஸ்லிம் ஆராய்சியாளரும் எந்த அகழ்வாராய்சியும் செய்தாகவோ,குரானுக்கு வரலாற்று ஆதாரங்கள் தேடியதாகவோ செய்தி இல்லை ஏன்? எல்லாம் வார்த்தை விளையாட்டு மட்டுமே.//
எனது பதிவின் வலது பக்கத்தில் ஸ்லைட் ஷோ வாக ஓடும் படங்கள் என்னவென்று நினைக்கிறீர்கள்? அனைத்தும் குர்ஆன் கூறும் வரலாற்று ஆதாரங்கள். பைபிளில் கூறப்படாத சாலிஹ் நபியை பின்பற்றியோர் மலைகளை குடைந்து வீடுகளை அமைத்ததை 4000 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வை இன்றும் நாம் பார்க்கலாம். நானும் எனது நண்பர்களும் சென்று பார்த்தோம். அந்த ஊர் இன்றும் சவுதி அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நீங்கள் சவுதி வந்தால் அந்த இடங்களை எல்லாம் நான் அழைத்து சென்று காண்பிக்கிறேன். மிகவும் வசதியாகவும் நாகரிகமாகவும் அந்த மக்கள் வாழ்ந்ததை பார்த்து நான் ஆச்சியப்பட்டேன். சமையல் கட்டில் பாத்திரங்களை வைக்கும் இடங்களைக் கூட மிக நேர்த்தியாக மலைகளை குடைந்து அமைத்திருந்தது பரவசப்படுத்தியது எங்களை. அதே போல் பாரோ மன்னனின் உடல், முகமது நபிக்கு முதன்முதல் குர்ஆன் வசனம் இறங்கிய ஹுரா குகை, பத்ர்,உஹது போன்ற இடங்களெல்லாம் சவுதி அரசால் இன்றும் பாதுகாக்ப்பட்டு வருகிறது. இதற்காக ஒர தனி அமைச்சகமே செயல்படுகிறது.
தருமி!
//கடன் பெறப்பட்ட கதைகள், சமூகமும் சமுதாயமும் ஒன்றாக இணைத்திருப்பது இரண்டும் வெவ்வேறு points. தெளிவாகவே சொல்லியுள்ளேன். இதில் என்ன முரண்பாடு கண்டீர்களோ?//
//கிறித்துவத்தில் சீசரும், கடவுளும், அரசும் கடவுளும் தனித்தனியே பார்க்கப்படுகின்றன. (மத் 22:17) ஆனால் இந்த வேறுபாடு இஸ்லாமில் இல்லை;//
கடன் பெறப்பட்ட கதைகள் என்று சொல்வனவற்றில் பெயர்கள் மாத்திரம் தான் ஒன்றாக வருகிறது. ஆனால் சம்பவங்கள் அனைத்தும் முற்றாக மாறுபடுகிறது. ஏற்கெனவே அதற்கான ஆதாரங்களை கொடுத்திருக்கிறேன். அந்த கதைகளை ஒட்டியே முகமது நபி கொண்டு வந்த இஸ்லாமின் சமூக அமைப்பும் அமைய வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக அரசியலும் மதமும் ஒன்றாக கலக்கப்படுகிறது. நாட்டின் அரசராகவும், ஆன்மீக தலைவராகவும் சிறந்து விளங்கியது முகமது நபியின் தனித் தன்மையை காட்டுகிறது. இதை கட்டுரை ஆசிரியரும் ஒத்துக் கொள்கிறார். முதலில் பைபிளைப் பார்த்துதான் குர்ஆன் எழுதப்பட்டது என்று சொல்லிவிட்டு, ஏசுவுக்கு மாற்றமாக ஆட்சி அதிகாரத்தை முகமது நபி கையிலெடுத்தார் என்பது முரணல்லவா! ஏதாவது ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். ஏனெனில் ஆன்மீகத் தலைமையும் ஆட்சி தலைமையும் குர்ஆனின் அடிப்படையிலேயே அமைந்தது.
மேலும் நீங்கள் அனுப்பிய ஒரு பின்னூட்டம் மட்டுறுத்தும் போது பிளாக்கர் பண்ணிய சொதப்பலினால் காணாமல் போய் விட்டது. அதை திரும்பவும் அனுப்புங்கள்.
சீனு!
//எனக்கும் இரு வேறு கருத்துக்கள் தெரியவில்லை. யாராவது தமிழ் தெரிந்தவர்கள் இருந்தால் எனக்கும் விளக்குங்கள்.//
இப்பொழுது விளங்கியிருக்கும் என்று நினைக்கிறேன்.
//இப்பொழுது விளங்கியிருக்கும் என்று நினைக்கிறேன்.//
எனக்கு விளங்கவில்லை.
/////
//இப்பொழுது விளங்கியிருக்கும் என்று நினைக்கிறேன்.//
எனக்கு விளங்கவில்லை.
/////
Me 2
சார்வாகன்!
////16:103. “நிச்சயமாக அவருக்கு கற்றுக் கொடுப்பவன் ஒரு மனிதனே, (இறைவனல்லன்)” என்று அவர்கள் கூறுவதை திடமாக நாம் அறிவோம்; எவனைச் சார்ந்து அவர்கள் கூறுகிறார்களோ, அவனுடைய மொழி (அரபியல்லாது) அன்னிய மொழியாகும்; ஆனால், இதுவோ தெளிவான அரபி மொழியாகும்.//
_________________
இப்படி குறிப்பிடப்படும் மெக்காவாசிகள் பார்த்த மனிதர் யார்? அவரின் மொழி எது?//
ஒரு சிறிய திருத்தம். வரகா பின் நவ்பல் என்றுதான் நானும் இதுநாள் வரை நினைத்திருந்தேன். ஆதாரத்தைப் பார்க்காமல் என் மனதில் இருந்ததை எழுதி விட்டேன். ஆனால் இப்னு கஸீர், பாகம் 4ல், பக்கம் 63ல் அந்த நபர் பனூ முகீரா கோத்திரத்தை சேர்ந்த ஒரு இளைஞர். சஃபா மலைக்குப் பக்கத்தில் வியாபாரம் செய்து வந்த கிறித்தவர். இவரைப் பார்த்து பல முறை இஸ்லாமிய போதனை செய்து வந்தார் முகமது நபி. இந்த நேரத்தில் இவரிடமிருந்து தான் சிலவற்றைக் கற்றுக் கொண்டு குர்ஆனாக நமக்குத் தருகிறார் என்று சிலர் பேச ஆரம்பித்தனர். அந்த நபரோ சிரிய நாட்டைச் சேர்ந்தவர். முகமது நபி காலத்தில் சிரிய மக்கள் அரபு மொழியை பேசவில்லை. அந்த நபருக்கும் அரபி மொழி தெரியாது. இதைத்தான் இறைவன் இங்கு மேற்கோளாக காட்டுகிறான்.
ஆதாரம்:
இப்னு கஸீர், பாகம் 4ல், பக்கம் 63
தருமி,சீனு!
//எனக்கு விளங்கவில்லை.//
எனக்கு அதனால் நஷ்டம் ஒன்றும் இல்லை :- )
எனக்கு அதனால் நஷ்டம் ஒன்றும் இல்லை :- )//
தருமிக்கும், சீனுவுக்கும் கொஞ்சம் நரகத்தில சூடு அதிகமா கிடைக்குமா?நமக்கு என்னத்தெரியும் எல்லாம் அறிந்தவன் இறைவன் ஒருவனே?
1.குரான் 15.103க்கு இபின் அப்பாஸ்,அல் வாஹிதி,அல் சுயுட்டி ஆகியோர் வெவ்வேறு ஆட்களை குறிப்பிடுகின்றனர்.
___________
2.முகமது நபி எழுதப்படிக்கத் தெரியாதவர் போல் தெரியவில்லை.
* * *
96:4. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
25:5. இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்: “இன்னும் அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே; அவற்றை இவரே எழுதுவித்துக் கொண்டிருக்கிறார் - ஆகவே அவை அவர் முன்னே காலையிலும் மாலையிலும் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன.”
Pickthall: And they say: Fables of the men of old which he hath had written down so that they are dictated to him morn and evening.
Yusuf Ali: And they say: "Tales of the ancients, which he has caused to be written: and they are dictated before him morning and evening."
Arberry: They say, 'Fairy-tales of the ancients that he has had written down, so that they are recited to him at the dawn and in the evening.'
_____________
3.மறக்கும் ஆனால்!!!!!!!
2:106. ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?
மற்க்காது:!!!!!!
87:6. (நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-
_________________
4.வல்லமை மிக்கவர் யார்?
இறைவனா?
2:129. “எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து; அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து; அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.”
3:126. உங்கள் இருதயங்கள் (அவ்வுதவியில் நின்றும்) நிம்மதியடையவும், ஒரு நல்ல செய்தியாகவுமே தவிர (வேறெதற்குமாக) அல்லாஹ் அதைச் செய்யவில்லை; அல்லாஹ் விடத்திலல்லாமல் வேறு உதவியில்லை; அவன் மிக்க வல்லமையுடையவன்; மிகுந்த ஞானமுடையவன்.
ஜிப்ரீலா?
53:5. மிக்க வல்லமையுடைவர் (ஜிப்ரீல்) அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.
_____________
5.வஹீ என்பது என்ன?யாருக்கு மட்டும் அளிக்கப் படும்?
(தொடரும்)
வஹி வந்ததாக சொன்னது ஜிப்'ரீல்'
குர் ஆன் என்பது இதற்கு முன் எழுதப்பட்ட வேத புத்தகங்களின் தொகுப்பு முக்கியமாக பைபிளின் பழைய ஏற்பாட்டை ஜெயலலிதா தேர்தல் அறிக்கையைப் போன்று மாற்றி எழுதப்பட்டது. வானவர் வந்து வழங்கிவிட்டு சென்றார் என்பதை அனிமேசன் படமாக எடுத்தால் ஓடக்கூடியது தான்,ஆனால் வாழ்க்கையில் நிரூபிக்கவே முடியாத ஓர் கற்பனை.
சார்வாகன்!
//2:106. ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?//
சட்டங்களை போட்டவன் அந்த சட்டங்களை மாற்றவும் மறக்கடிக்கவும் அதிகாரம் பெற்றவனாகிறான். ஒரு வயது குழந்தைக்கு பாலூட்டும் தாய் குழந்தை பெரிதானவுடன் உணவு முறைகளிலே மாற்றத்தை கொண்டு வருகிறாள். குழந்தையின் உடல் வளர்ச்சியைப் பொறுத்து உணவு மாறுகிறது. இதனால் தாயின் அறிவை குறைத்து மதிப்பிட மாட்டோம்.
அதுபோல் மக்காவில் உயிர் வாழவே சிரமப்படும்போது 'திருடினால் கையை வெட்டுங்கள்' என்று கூற முடியாது. கூறினால் அதற்கு அர்த்தமும் இருக்காது. முஸ்லிம்கள் கையில் ஆட்சி வந்தவுடன்தான் இந்த சட்டத்தை போட முடியும். மாறும் சூழலுக்கேற்ப சட்டங்களை வகுப்பதுதான் அறிவுடைமை.
//87:6. (நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-//
மனிதன் மறதி என்ற பலஹீனத்தோடு படைக்கப்பட்டிருக்கிறான். இந்த மறதியினால் வேதத்தில் ஏதும் குறைவு வந்து விடக் கூடாது என்பதால் அதைப் பாதுகாக்கும் பொறுப்பை இறைவனே ஏற்றுக் கொள்கிறான். ஜிப்ரீல் கொண்டு வந்த வசனங்களில் எதையும் மறதியால் முகமது நபி விட வில்லை என்பது இவ்வசனத்தின் மூலம் தெளிவாகிறது.
//2.முகமது நபி எழுதப்படிக்கத் தெரியாதவர் போல் தெரியவில்லை.
* * *
96:4. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.//
ஒரு வசனத்தை மட்டும் தனியாக பிரித்து பார்க்கிறீர்கள். அதன் தொடர்ச்சியாக வரும் அடுத்த வசனம்
'அறியாதவற்றை மனிதனுக்கு கற்றுத் தந்தான்'-குர்ஆன் 96:5
மனித குலம் அனைவருக்கும் சொல்லப்பட்ட வசனம் இவை.
ஹூதைபிய்யா உடன் படிக்கையின் போது 'இறைவனின் தூதர் முஹமது நபி' என்றிருந்தது. இதை எதிரிகள் ஒத்துக் கொள்ளவில்லை. 'இதை ஒத்துக் கொண்டு நாங்களும் கையெழுத்திட்டால் முகமதை இறைத் தூதராக ஒத்துக் கொண்டவர்கள் ஆகிவிடுவோம். எனவே இறைத் தூதர் என்ற வாசகத்தை அழிக்க வேண்டும்' என்றனர் எதிரிகள். முகமது நபி 'பரவாயில்லை. நாங்கள் அழித்து விடுகிறோம்' என்று தோழர்களை பார்த்து “அந்த வாசகத்தை நீக்கி விடுங்கள்' என்று சொன்னபோது 'எங்கள் கையால் அழிக்க மாட்டோம் நீங்கள் இறைவனின் தூதர் என்பதை நாங்கள் நம்புகிறோம்.' என்று தோழர்கள் மறுக்கின்றனர். உடனே முகமது நபி 'எங்கே அந்த வாசகம்?' என்று கேட்கிறார். தோழர்கள் காண்பித்தவுடன் 'இறைத் தூதர்' என்று எழுதப்பட்டிருக்கும் வாசகத்தை தமது கையால் அழிக்கிறார். தனது பெயர் அரபியில் எவ்வாறு எழுதுவது என்பதே முகமது நபிக்கு தெரியாமல் இருந்திருக்கிறது என்பதை இதிலிருந்து அறிகிறோம்.
மேலும் பல மன்னர்களுக்கு அவர் சொல்ல எழுதப்பட்ட கடிதங்கள் அனைத்திலும் அவரது மோதிரத்தின் அடையாளமே இடப்பட்டிருக்கும். எந்த ஒரு மனிதரும் தனக்கு தெரிந்த ஒரு மொழி அறிவை மறைக்க மாட்டார். அது அவசியமும் இல்லை. அதிலும் அரபி அவரது தாய் மொழி.
சார்வாகன்!
//4.வல்லமை மிக்கவர் யார்?
“நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.”- 2:129
இறைவனா?
53:5. மிக்க வல்லமையுடைவர் (ஜிப்ரீல்) அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.
ஜிப்ரீலா?//
'வானவர்கள் இறைவனை முந்திப் பேசமாட்டார்கள். இறைவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்'-குர்ஆன் 21:27
இது போன்ற பல வசனங்கள் வானவர்கள் அனைவரும் இறைவின் கட்டளைக்கு மாறு செய்ய மாட்டார்கள் என்று சொல்கிறது.
நீங்கள் குறிப்பிடும் வசனத்தில் தனது படைப்பான வானவர் ஜிப்ரீல் மிக்க வலிமையுடையவர் என்று தனது படைப்பை சிறப்பித்து கூறுகிறான் இறைவன்.
'நமது கணிணிக்கு புதிதாக இறங்கியிருக்கும் விண்டோஸ் எக்ஸ்பி வலிமை சேர்க்க வல்லது' என்று பில்கேட்ஸ் சொல்வதாக வைத்துக் கொள்வோம். உடனே பில்கேட்ஸ் வலிமையுடையவரா? அல்லது விண்டோஸ் எக்ஸ்பி வலிமையுடையதா? என்று கேள்வி எழுப்ப மாட்டோம்.
//5.வஹீ என்பது என்ன?யாருக்கு மட்டும் அளிக்கப் படும்?
(தொடரும்)//
'வஹி' என்பது இறைச் செய்தி. இது இறைவன் மனிதர்களிடம் பேசுவது. மூன்று வழிகளில் இது நடை பெறும். ஒன்று வானவர் மூலமாக. மற்றது மனிதர்களின் உள்ளத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவது. மூன்றாவது கனவுகள் மூலமாக மனிதர்களுக்கு இறைச் செய்தியை சொல்வது.
'உங்கள் தோழர் முகம்மது பாதை மாறவில்லை.வழி கெடவுமில்லை. அவர் மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அவர் பேசுவது அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.'
-குர்ஆன் 53:2,3,4
----------------------------------
குடுகுடுப்பை!
//தருமிக்கும், சீனுவுக்கும் கொஞ்சம் நரகத்தில சூடு அதிகமா கிடைக்குமா?நமக்கு என்னத்தெரியும் எல்லாம் அறிந்தவன் இறைவன் ஒருவனே?//
நீங்கள் இதுவரை இட்ட பின்னூட்டங்களிலேயே உண்மையை உள்ளபடி உரைக்கும் ஒரே பின்னூட்டம் இதுதான். வாழ்த்துக்கள்.
1
__________
//'வானவர்கள் இறைவனை முந்திப் பேசமாட்டார்கள். இறைவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்'-குர்ஆன் 21:27
இது போன்ற பல வசனங்கள் வானவர்கள் அனைவரும் இறைவின் கட்டளைக்கு மாறு செய்ய மாட்டார்கள் என்று சொல்கிறது.
நீங்கள் குறிப்பிடும் வசனத்தில் தனது படைப்பான வானவர் ஜிப்ரீல் மிக்க வலிமையுடையவர் என்று தனது படைப்பை சிறப்பித்து கூறுகிறான் இறைவன்.//
அதாவ்து இறைவனும் மிக்க வ்ல்லமை உடையவர்.ஜிப்ரீலும் மிக்க வல்லமை உடையவர்.
கொங்சம் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஜிப்ரீலின் பெயர் அடைப்புக் குறிக்குள் வருகிறது.மூல அரபியில் பெயர் இல்லை.
53:5. மிக்க வல்லமையுடைவர் (ஜிப்ரீல்) அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.
பிறகு ஜிப்ரீல் என்று ஏன் கூறுகின்றார்கள் எனில் அடுத்த வசனத்தில் அவரை பார்த்தார் என்று வருவதால்.
பாருங்கள்.
___________
53:5. மிக்க வல்லமையுடைவர் (ஜிப்ரீல்) அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.
53:6. (அவர்) மிக்க உறுதியானவர்; பின்னர் அவர் (தம் இயற்கை உருவில்) நம் தூதர் முன் தோன்றினார்.
53:7. அவர் உன்னதமான அடி வானத்தில் இருக்கும் நிலையில்-
53:8. பின்னர், அவர் நெருங்கி, இன்னும், அருகே வந்தார்.
53:9. (வளைந்த) வில்லின் இரு முனைகளைப் போல், அல்லது அதினும் நெருக்கமாக வந்தார்.
________________
இறைவனை பார்த்தக கூற முடியாது ஆகவே அது வேறு யாராவதாக் சொல்ல வேண்டும் .ஒரே அள் ஜிப்ரீல்தான்.இந்த இடம் ஜிப்ரீலை வேறு சவழியில்லாமல் கூறிகிறார்கள். ஹதிதில் இருந்து வில்லின் முனை அளவு வந்தவர் அல்லா என்று என்னால் காட்ட முடியும்
_______________________
இப்படியேதான் அடைப்புக் குறி போட்டே 1400 வருடங்களை ஓட்டி விட்டார்கள்.
_____________________________
* * *
2
* * *
96:4. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.//
ஒரு வசனத்தை மட்டும் தனியாக பிரித்து பார்க்கிறீர்கள். அதன் தொடர்ச்சியாக வரும் அடுத்த வசனம்
'அறியாதவற்றை மனிதனுக்கு கற்றுத் தந்தான்'-குர்ஆன் 96:5
மனித குலம் அனைவருக்கும் சொல்லப்பட்ட வசனம் இவை.
_________
இதுவும் ஒரு சமாளிப்பு வசனமே.
ஒரு திற்மையான வியாபாரி, 23 வருடங்களாக இறைவனிடம் இருந்து வெளிபாடுகளை பெற்று ,வசியம் இருந்தும்,எழுதப்படிக்க 23 வருடங்களாக கற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் எப்படி?.முயற்சி எடுத்தாரா?,எடுத்தும் முடியவில்லையா?
ஒரு சாதாரண அறிவுள்ள மனிதன் எழுத கற்று கொள்ள எவ்வளவு நாட்களாகும்?.
அவர் சாகும் வரை எழுதப் ப்டிக்க கற்றுக் கொள்லவில்லையென்றால் இஸ்லாமியர்கள் கூட நம்புவார்களா என்பது கூட சந்தேகமே..
அவர் படித்தவர் என்றால் பிறர வேதங்களை கற்றறிந்தவர் என்று கூற வாய்ய்ப்பு வந்துவிடும் என்ப்தால் இந்த சமாளிப்பு.
______________
//'வஹி' என்பது இறைச் செய்தி. இது இறைவன் மனிதர்களிடம் பேசுவது. மூன்று வழிகளில் இது நடை பெறும். ஒன்று வானவர் மூலமாக. மற்றது மனிதர்களின் உள்ளத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவது. மூன்றாவது கனவுகள் மூலமாக மனிதர்களுக்கு இறைச் செய்தியை சொல்வது.//
இந்த மூன்று விதங்களில் குரானில் எ.கா உண்டென்று அறிவேன்.
சொல்பவர்,சொல்லும் விதம் பற்றியல்ல நான் வினவிய்து
இந்த இறைசெய்தி பற்றி தெளிவாக கூறுங்கள்.
1.இது இறைதூதர்களுக்கு மட்டும்தான் வருமா?
2.மற்றவர்களுக்கும் வரும் என்றால் இப்போது யாருக்காவது வரலாமா?
3.இறைச் செய்தி வந்தரெல்லாம் நபியா?
குரானில் இருந்தே பதில் கூற வேன்டும்
குரானை முகமது முழுமை பெறாமல் ஓதலாமா?
ஓதலாம்!!!!!
18:27. இன்னும் (நபியே!) உம்முடைய இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு வஹீ மூலம் அருளப்பட்டதை நீர் ஓதி வருவீராக - அவனுடைய வார்த்தைகளை மாற்றக் கூடியவர் எவருமில்லை; இன்னும் அவனையன்றி புகலிடம் எதையும் நீர் காணமாட்டீர்.
ஆனால் ஓதக் கூடாது!!!!
20:114. ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; இன்னும் (நபியே!) உமக்கு (குர்ஆனின்) வஹீ அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; “இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக!.
கல்வி ஞானம் எதற்கு எழுதப் படிக்க தெரியாதவருக்கு? அதிகப் படுத்துவது என்றால் ஏற்கெனவே ஏதாவது இருக்கிறதா?.எனக்கு எழுதப் படிக்கவே தெரியவில்லை.கற்றுக் கொள்ள பல வருடங்களாக முயற்சி செய்தாலும் முடியவில்லை,ஆகவே எழுதப் படிக்க கற்றுக் கொடு என்றுதானே கேட்க வேண்டும்.
_________________
குரான் முகமதுவை மிரட்டுகிறது. என்ன செய்தாரென்று தெரியவில்லை.முகமதுவை நரகத்தில் எறிவேன் என்கிறது.குரானை மறக்க வைத்து விடுவேன் என்கிறது.
17:39. இவையெல்லாம் உம்முடைய இறைவன் உமக்கு வஹீ (மூலம்) அறிவித்துள்ள ஞான உபதேசங்களாகும். ஆகவே அல்லாஹ்வுடன் வேறு நாயனை (இணையாக) ஏற்படுத்தாதீர்; (அப்படிச் செய்தால்) நீர் நிந்திக்கப்பட்டவராகவும் துரத்தப்பட்டவராகவும் நரகத்தில் எறியப்படுவீர்.
17:86. (நபியே!) நாம் நாடினால் உமக்கு நாம் வஹீயாக நாம் அறிவித்ததை (குர்ஆனை) போக்கிவிடுவோம்; பின்னர், நமக்கெதிராக உமக்குப் பொறுப்பேற்கக் கூடிய எவரையும் நீர் காணமாட்டீர்.
13:37. (நபியே!) இவ்வாறே அரபி (மொழி)யில் சட்ட திட்டங்களைக் கொண்டதாக, இ(வ் வேதத்)தை நாம் இறக்கி வைத்திருக்கின்றோம்; எனவே உமக்கு ஞானம் வந்த பின்னரும் அவர்களுடைய (வீணான) இச்சைகளை நீர் பின்பற்றினால் அல்லாஹ்விடமிருந்து (உம்மை இரட்சிக்கும் உற்ற) உதவியாளரோ, பாதுகாவலரோ (எவரும்) உமக்குக் கிடைக்க மாட்டார்.
_______________
குரான் கதைகள் எங்கிருந்து வந்தது?
http://saarvaakan.blogspot.com/2011/04/blog-post_09.html
//அவர் படித்தவர் என்றால் பிறர வேதங்களை கற்றறிந்தவர் என்று கூற வாய்ய்ப்பு வந்துவிடும் என்ப்தால் இந்த சமாளிப்பு.//
இது போன்ற “சமாளிப்புகள்” நிறைய இருக்கும் போலிருக்கிறதே!
சார்வகன், பின்னுகிறீர்கள் சார். எங்கே இருந்து தான் மத புத்தககங்களை அலுப்பு தட்டாமல் பொறுமையாக படித்து கேள்வி எழுப்புகிரீர்களோ? அருமையாக இறை மறுப்பை செய்கிறீர்கள் வாழ்த்துக்கள்.
//இறைவனை பார்த்தக கூற முடியாது ஆகவே அது வேறு யாராவதாக் சொல்ல வேண்டும்
மேலே சுட்டி உள்ள கருத்தில், ஒரு கேள்வி. இறைவனை பார்த்ததாக கூறுவதில் என்ன சிக்கல்? சற்று தெளிவு படுத்துங்களேன்.
//நமக்கெதிராக உமக்குப் பொறுப்பேற்கக் கூடிய எவரையும் நீர் காணமாட்டீர்.//
புரியவில்லை.
சார்வாகன்!
//அவர் சாகும் வரை எழுதப் ப்டிக்க கற்றுக் கொள்லவில்லையென்றால் இஸ்லாமியர்கள் கூட நம்புவார்களா என்பது கூட சந்தேகமே..
அவர் படித்தவர் என்றால் பிறர வேதங்களை கற்றறிந்தவர் என்று கூற வாய்ய்ப்பு வந்துவிடும் என்ப்தால் இந்த சமாளிப்பு.//
20 ஆம் நூற்றாண்டில் அறிவியல் யுகத்தில் வாழ்வதாக கூறப்படும் நம் நாட்டில் நூறுசதவீத எழுத்தறிவு பெற்ற மக்களாக அனைவரும் மாறி விட்டோமா? இல்லையே!
'முஹம்மதே! இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்ததில்லை. இனியும் உமது வலது கையால் எழுதவும் மாட்டீர். அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்'- குர்ஆன் 29:48
இறைவனே அத்தகைய ஏற்பாட்டை செய்து விட்டான். இறக்கும் வரையில் அவருக்கு எழுதப்படிக்க தெரியாமல் இருந்ததும் இது ஒரு இறை வேதம் என்பதைக் கூறிக் கொண்டிருக்கிறது. முகமது நபியின் ஒவ்வொரு அசைவையும், அவரது தலைமுடியில் எத்தனை நரை முடிகள் இருந்தது என்பதையும் அவரது தோழர்கள் குறித்து வைத்துள்ளனர். இஸ்லாத்தின் எதிரிகள் இவரிடம் ஏதாவது குறையை கண்டுபிடித்து (உங்களையும் தருமியையும் போல்) குர்ஆன் இறைவேதம் இல்லை என்பதை நிரூபிக்க மிகவும் முயற்சி எடுத்து வந்தனர். இவருக்கு எழுதப்படிக்க தெரிந்திருந்தால் இதை ஒன்றை வைத்தே குர்ஆன் இறை வேதம் அல்ல எதிரிகள் நிரூபித்திருப்பார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை. முடிந்தால் நீங்களும் முயற்ச்சித்துப் பாருங்களேன்.
அடுத்து முந்தய வேதங்களில் உள்ள இறைத் தூதர்களின் பெயர்களும் ஊர்களும் தான் குர்ஆனில் ஒன்றாக வருகிறது. சம்பவங்கள் அனைத்தும் தோரா பைபிளில் இருந்து குர்ஆன் முற்றிலும் மாறுபடுகிறது. இதைப் பற்றி நான் முன்பே குறிப்பிட்டும் வழக்கம் போல் வேறு கேள்விக்கு தாவி விட்டீர்கள். ஏசுவின் இறப்பு, சிலுவையில் அறையப்பட்டது என்று பல இடங்களில் பைபிளிலும் குர்ஆனிலும் பெருத்த வேறுபாடு உண்டு.
//இந்த இறைசெய்தி பற்றி தெளிவாக கூறுங்கள்.
1.இது இறைதூதர்களுக்கு மட்டும்தான் வருமா?
2.மற்றவர்களுக்கும் வரும் என்றால் இப்போது யாருக்காவது வரலாமா?
3.இறைச் செய்தி வந்தரெல்லாம் நபியா?//
1.மற்றவர்களுக்கும் வரும். ஏசுவின் தாயார் மேரியுடன் இறைவன் பேசியிருக்கிறான்.
'இறைவா! எந்த ஆணும் என்னைத் தொடாத நிலையில் எனக்கு எவ்வாறு குழந்தை பிறக்கும்?' என்று அவர் கேட்டார். 'தான் நாடியதை இறைவன் இவ்வாறே படைக்கிறான். ஏதேனும் ஒரு காரியம் பற்றி அவன் முடிவு செய்து விட்டால் 'ஆகு' என்பான். உடனே அது ஆகி விடும்' என்று இறைவன் கூறினான்.-குர்ஆன் 3:47
2.வருவதற்கு அவசியம் இல்லை. ஏனெனில் குர்ஆனானது உங்களுக்கும் தருமிக்கும் எனக்கும் ஆக உலக மக்கள் அனைவருக்குமாக உலக முடிவு நாள் வரைக்கும் அனுப்பப்பட்டது.
3.இல்லை. இதற்கு முந்தய குர்ஆன் வசனமே ஆதாரம்.
சார்வாகன்!
//கல்வி ஞானம் எதற்கு எழுதப் படிக்க தெரியாதவருக்கு?- 20:114.//
எழுதப்படிக்க தெரிந்தவர்தான் அறிவாளி என்று உங்களின் தவறான புரிதலே இப்படி ஒரு கேள்வி. மனிதனின் பகுத்தறிவை வெளிப்படுத்தும் பல காரணிகளில் ஒன்றுதான் எழுதுவதும் படிப்பதும். 'படித்த முட்டாள்' என்ற வார்த்தையை நாம் அடிக்கடி உபயோகப்படுத்துவோம். 'படிக்காத மேதை' என்ற வார்த்தையையும் நாம் அடிக்கடி பயன்படுத்துவோம். உலகின் பல அறிஞர்கள் எழுதப்படிக்கத் தெரியாமலேயே இருந்திருக்கின்றனர். எனவே மனிதனின் அறிவை அவனது எழுத்தாற்றலும், படிப்பாற்றலும், பேச்சாற்றலும், கேள்வி ஞானமும், பார்த்தறிதலும் மேலும் மெருகுற செய்யும். உங்கள் வாதப்படி பார்த்தால் ஊமையும் செவிடனும் அறிவில் குறைந்தவர்களே! ஆனால் கண் இல்லாமலேயே உங்களை விட நேர்த்தியாக தனது இருப்பிடத்திற்கு வந்து சேரும் குருடர்களை பார்த்து மேற்கண்ட கேள்விக்கு தெளிவு பெறுங்கள்.
//வஹீ அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; “இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக!.//
ஒரு வசனம் முடிவடைவதற்குள் 'மறந்து விடுவோமோ' என்ற அச்சத்தில் நாவை அவசரப்பட்டு அசைப்பது கூடாது. ஏனெனில் உம் இதயத்தில் அந்த வசனங்களை மனனம் செய்விப்பது எனது வேலை' என்று முகமது நபிக்கு இறைவன் அறிவுறுத்துகிறான். தெளிவான வசனம். இதில் குழப்பத்திற்கு இடமில்லையே!
//குரான் முகமதுவை மிரட்டுகிறது. என்ன செய்தாரென்று தெரியவில்லை.முகமதுவை நரகத்தில் எறிவேன் என்கிறது.குரானை மறக்க வைத்து விடுவேன் என்கிறது. 17:39, 17:86., 13:37//
எந்த ஒரு மனிதரும் தன்னை தாழ்த்திக் கொள்ள மாட்டார். அதுவும் ஆன்மீகத் தலைவர் 'நீ நரகுக்கு செல்வாய்' என்ற ரீதியில் கடுமையான வசனங்கள் வருவதை விரும்ப மாட்டார். இதனால் பக்தர்கள் மத்தியில் சம்பந்தப்பட்டவரின் பெருமை குறையும். குர்ஆனை முகமது நபியே தனது சொந்த கற்பனையில் சொல்லியிருந்தால் தனது அந்தஸ்து குறையும் என்று எண்ணி மேற்சொன்ன வார்த்தைகளை சொல்லாமல் மறைத்திருக்கலாம். இது போன்ற வசனங்களையும் ஒளிவு மறைமின்றி மனித சமுதாயத்துக்கு கொடுத்து விட்டார் முகமது நபி. ஏனெனில் இது இறை வேதம்.
எந்த வசனங்களெல்லாம் குர்ஆன் இறை வேதம் அல்ல என்று நீங்கள் எடுத்து வைக்கிறீர்களோ, அந்த வசனங்களே அது இறை வேதம்தான் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறது. அதுதான் குர்ஆனின் சிறப்பு.
//2.வருவதற்கு அவசியம் இல்லை. ஏனெனில் குர்ஆனானது உங்களுக்கும் தருமிக்கும் எனக்கும் ஆக உலக மக்கள் அனைவருக்குமாக உலக முடிவு நாள் வரைக்கும் அனுப்பப்பட்டது.//
அவசியம இல்லையா என்பதை நாம் கூற முடியாது.நபி அல்லாதவரிடமும் இறைவன் பேச முடியும் என்றால் நபித்துவம் முடிவுக்கு வ்வந்ததாக வைத்துக் கொண்டாலும் அவசியம் இருந்தால் வஹீ யாருக்கு வேண்டுமானலும் வரலாம்.
குரான் வந்து விட்டதால் வஹீ யாருக்கும் வரவே என்று குரானிலோ,ஹதிதில் கூட ஆதாரம் காட்ட முடியாது என்றெ நினைக்கிறேன்.
___________
//ஒரு வசனம் முடிவடைவதற்குள் 'மறந்து விடுவோமோ' என்ற அச்சத்தில் நாவை அவசரப்பட்டு அசைப்பது கூடாது. ஏனெனில் உம் இதயத்தில் அந்த வசனங்களை மனனம் செய்விப்பது எனது வேலை' என்று முகமது நபிக்கு இறைவன் அறிவுறுத்துகிறான். தெளிவான வசனம். இதில் குழப்பத்திற்கு இடமில்லையே!//
அதாவது முகமதுக்கு வஹீ காதில் கேட்கும் குரல்.அந்த ஒலி முடிவதற்குள் திருப்பி சொல்லாதே என்கிறது. அவ்ரை மனன்ம் செய்யவிக்க பட்ட சிரமத்தையே கூறுகிறது.இத்னால்தான் மறக்கவும் சில சமய்ம் நேரிடுகிறது போலும். ஒவ்வொரு வசனமுமே குரான் என்றே பொருள் கொள்ள வேண்டி யிருக்கிறது.குரான் என்றால் உரை(lecture)
______________
//எந்த வசனங்களெல்லாம் குர்ஆன் இறை வேதம் அல்ல என்று நீங்கள் எடுத்து வைக்கிறீர்களோ, அந்த வசனங்களே அது இறை வேதம்தான் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறது. அதுதான் குர்ஆனின் சிறப்பு.//
என்ன்னுடைய தேடலின் படி குரான் என்பது பலரால் எழுதப்ப் பட்டு இருக்க வேன்டும்.குரானில் உள்ள பல மொழி சொற்கள் இத்னை வலுப் படுத்துகின்றன.
உம்ம்மையாதுக்களின் காலத்தில் முகமதுக்கு எதிரிகளான அபு சுஃபியானின் வம்சம் ஆட்சிக்கு வந்ததும் கூட இந்த முகமதுக்கு எதிரான வசனம்,ஹதிதுகள் நுழைய காரணம் ஆக இருக்கலாம்.குரானின் அர்த்தம் பற்றி பல ஆய்வுகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன.குரானை பொருள் கொள்ளும் விதம் மதவாதிகளால்,அரசியல் காரணத்திற்காகவே பயன் படுத்தப் பட்டது.இப்போதைய உபயோகத்தில் இருக்கும் குரான் 1924ல் எகிப்தில் வழிவழியாக மனம் செயதவர்களிடம் இருந்து
வடிவமைக்கப் பட்டது.ஹஃப் முறையிலான உச்சரிப்பின் படியே எழுதப் பட்டது.இத்ற்கும் உத்மானின் குரானாக் நீங்கள் கருதும் சாமர்கண்ட் குரானுக்கும் பல வித்தியாசங்கள் உண்டு.
http://www.danielpipes.org/comments/125538
http://www.barry-baker.com/Articles/documents/Preserving%20and%20protecting%20the%20Quran.pdf
http://www.youtube.com/watch?v=EMRbV3B15jI
_____________
ஜிப்ரீல் மர்மம் நீடிக்கிறது. இத்னை பற்றி பிறகு பார்ப்போம்
_____________
விவாதித்தற்கு நன்றி நண்பர் சுவன்ப் பிரியன்
//மேலே சுட்டி உள்ள கருத்தில், ஒரு கேள்வி. இறைவனை பார்த்ததாக கூறுவதில் என்ன சிக்கல்? சற்று தெளிவு படுத்துங்களேன்.//
நண்பர் கணேசன்
இஸ்லாமிய மத கொள்கையாகக்த்தின் படி இறைவன் கற்ப்னைகெட்டாத சக்தியுடையவன்.அவரை இணை வைப்பது என்றால் இறைவ்னை உருவகப் படுத்துவது கூட அதில் அடங்கும்.இந்த கொள்கையாக்கம் படியே குரான் மொழியாக்கம்,இவ்விளக்கங்கள் அளிக்கப் படுகிறது.இந்த வசனத்தின் (
53:5.) பெயர் குறிப்பிடப்டாததால் பெயர் சொல்ல வேண்டும்.இறைவனை பார்த்தாக கூறினால் கொள்கையில் குழப்பம்.ஆகவே அதனை ஜிப்ரீல் என்று கூறுகிறார்கள்.
இது போல் பல இடங்களில் பெயர் குறிப்பிட படாத போது கொள்கைக்கு விரோதம் வராமல் அடைப்புக் குறி போட்டு விளக்கம் அளிப்பார்கள்.
கொஞ்ச நாட்களுக்கு முன் கூட ஒரு பிரச்சாரகர் இறைவனுக்கு உருவம் உண்டு என்று கூறி பிரச்சினை ஆனதும் அவர் ஓ(ஆ)ய்வுக்கு சென்றதும் அனைவரும் அறிந்த விஷயமே.
எ.கா
2:115. கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்); நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; எல்லாம் அறிந்தவன்.
இதற்கு இறைவன் எங்கும் நிறைந்த பரம் பொருள் என்றே தத்துவார்த்தமாக்வே விளக்கம் அளிபார்களே தவிர,இறவனுக்கு முகம் உண்டு என பொருள் கொள்ள மாட்டார்கள்.
சார்வாகன்!
//இப்போதைய உபயோகத்தில் இருக்கும் குரான் 1924ல் எகிப்தில் வழிவழியாக மனம் செயதவர்களிடம் இருந்து
வடிவமைக்கப் பட்டது//
மீண்டும் தவறான தகவல்கள். உலகில் உள்ள குர்ஆன்களில் எழுதும் முறைகளில் பல மாற்றங்கள் வந்திருக்கும். அது மொழியின் வளர்ச்சி. இதற்கு உதாரணமாக முன்பு திருக்குறளையே எடுத்துக்காட்டினேன். திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கும், நாம் இப்பொழுது படிக்கும் குறளுக்கும் எழுதும் முறையில் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா? பொருளில் எந்த மாற்றமும் இல்லை. வசனங்களிலும் எந்த மாற்றமும் இல்லை. குர்ஆனில் வசனங்களில் மாற்றம் இருந்தால் உஸ்மானின் மூலப்பிரதியை வைத்து கண்டுபிடித்து விடலாம்.
அதே போல் தற்போதுள்ள குர்ஆன் 1924 ஆம் வருடத்திலிருந்து எகிப்திலிருந்து பிரதி எடுக்கப்பட்டது என்ற செய்தியை பார்த்து எனக்கு சிரிப்புதான் வந்தது. பல ஆண்டுகளுக்குமுன்பு இதற்காக அமெரிக்க கிறித்தவ சபை உலக குர்ஆன்களை எல்லாம் ஒன்று திரட்டி ஒப்பிட்டு பார்த்து 'குர்ஆன்களில் எந்த வசன மாற்றமும் இல்லை' என்று அறிவித்தது. நான் முன்பே கேட்டிருக்கிறேன். மூலப்பிரதியிலிருந்து எந்த வசனம் மாற்றப்பட்டது? அதற்கு ஆதாரத்தையும் முன்பே கேட்டிருக்கிறேன்.
//உம்ம்மையாதுக்களின் காலத்தில் முகமதுக்கு எதிரிகளான அபு சுஃபியானின் வம்சம் ஆட்சிக்கு வந்ததும் கூட இந்த முகமதுக்கு எதிரான வசனம்,ஹதிதுகள் நுழைய காரணம் ஆக இருக்கலாம்.//
எத்தனையோ நபித் தோழர்கள் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்திருக்க, உலகம் முழுவதும் உஸ்மான் காலத்திலேயே பல பிரதிகள் எடுக்கப்பட்டிருக்க, அதில் இரண்டு பிரதி இன்றும் நம் முன் இருக்க நெஞ்சறிந்து பொய் சொல்லலாமா சார்வாகன். முன்பு குர்ஆனை முகமது நபியே இட்டுக்கட்டியதாக சொன்னீர்கள். நான் விளக்கம் கொடுத்தவுடன் வேறுவழியின்றி இப்பொழுது உமையாக்கள் சில வசனங்களை சேர்த்திருக்கலாம் என்கிறீர்கள். உங்கள் மனசாட்சியிடமே கேட்டுப்பாருங்கள். உங்களின் பல கேள்விகளை உங்கள் மனமே ஒத்துக் கொள்ளாது.
//இதற்கு இறைவன் எங்கும் நிறைந்த பரம் பொருள் என்றே தத்துவார்த்தமாக்வே விளக்கம் அளிபார்களே தவிர,இறவனுக்கு முகம் உண்டு என பொருள் கொள்ள மாட்டார்கள்.//
இது மிகவும் வரிவாக விளக்க வேண்டிய கேள்வி. குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இறைவனுக்கு உருவம் உண்டு. ஆனால் நம்மால் அதைக் கற்பனை செய்திட முடியாது.
1./நான் முன்பே கேட்டிருக்கிறேன். மூலப்பிரதியிலிருந்து எந்த வசனம் மாற்றப்பட்டது? அதற்கு ஆதாரத்தையும் முன்பே கேட்டிருக்கிறேன். /
நண்பர் சுவனப் பிரியன்,
இந்தியாவில் பயன் படுத்தப்படும் குரான் ஹாஃப்ஸ் வகை குரான்.கொஞ்சம் வித்தியாச்மான வார்ஸ் குரான் வட ஆப்பிரிக்காவில பயன் படுத்தப் பட்டு வருகிறது. அதன் பிரதியும் தருகிறேன்.
http://www.scribd.com/doc/47347302/Warsh-Quran
உலகில் பயன்படுத்தப் படும் பலவித குரான் பற்றிய ஒரு முனைவர் பட்ட ஆய்வு கட்டுரை.
http://www.scribd.com/doc/21972348/Studies-in-Two-Transmissions-of-the-Qur-an-by-Adrian-Alan-Brockett
.ஹஃப் முறையிலான உச்சரிப்பின் படியே எழுதப் பட்டது.இத்ற்கும் உத்மானின் குரானாக் நீங்கள் கருதும் சாமர்கண்ட் குரானுக்கும் பல வித்தியாசங்கள் உண்டு.
http://www.youtube.com/watch?v=EMRbV3B15jI
__________
2.குரானில் உள்ள வார்த்தைகளுக்கு பொருள் கொள்ளும் முறை பற்றி பலவித ஆராய்ய்சிகள் நடைபெறுகின்றன. அதில் ஒன்று ல்க்ஸன்பர்க் என்றபவரின் கொள்கைப்படி குரானின் மொழி அரபி அல்ல.சிரிய அராமைக்.இது இன்னும் விவாதத்ஹ்டில் இருக்கிறது, இந்த புத்தகம் உங்களுக்கு தருகிறேன்..இதில் ஒரு நகைச்சுவையான விஷயம் உண்டு.குரான் நித்திய கன்னிகைகள் 72 பேர் உங்களைப்போல் சுவனம் செல்பவர்களுக்கு கிடப்பார்கள் என்று கூறுகிறது.குரனின் ஹுர் என்னும் வார்த்தையை என்பதை நித்தியக்கன்னிகை என்றே மொழி பெயர்த்து வந்தனர்.
லக்ஸன்பர்க்ன் ஆய்வில் இந்த ஹூர் என்னும் வார்த்தைக்கு சிரிய அராமைக்கில் திராட்சைப் பழம் என்று பொருள் என்கிறார்
http://www.scribd.com/doc/14659850/SyroAramaic-Reading-of-the-Quran-Christoph-Luxenberg
ஒருவேளை ஹூர் என்பது திராட்சப் பழம் என்றால் சுவனத்திற்கு செல்ல பலர் விரும்புவார்களா என்பது சந்தேகமே!!!!!!
_______________
3.தருமி அய்யாவிற்கு சில புத்தகங்கள்
இஸ்லாமிய அரசு என்பது கானல் நீரே.எனக்கு மிகவும் பிடித்த புத்தகம்,
http://criticalppp.com/wp-content/uploads/2010/04/Fatah-2008-Chasing-a-Mirage-The-book.pdf
வரலாறு மீதான குரான்[படித்து கொண்டு இருக்கிறேன்]
http://www.scribd.com/doc/52576239/Reynolds-Quran-in-Its-Historical-Context
______________
சார்வாகன்
//அவர் படித்தவர் என்றால் பிறர் வேதங்களை கற்றறிந்தவர் என்று கூற வாய்ப்பு வந்துவிடும் என்பதால் இந்த சமாளிப்பு//
உண்மை நண்பரே,உண்மையில் பேராற்றல் படைத்தவன் இறைவன் எனில் எழுதப்படிக்கத் தெரியாத,தேர்ந்தெடுத்த தனது தூதருக்கு எழுதவும் படிக்கவும் அந்த நொடிப்பொழுதில் வழங்கி சாதித்திருந்தால் தான் அற்புத சக்தி வல்லமை படைத்தவன் என்று பொருளாகும்.ஓர் ஒலியின் மூலமாக உலகத்திற்கே வேதம் தர முயற்சி எடுத்தவன்,ஒருவருக்கு மட்டும் அந்த ஒலி கேட்டிருக்கின்றது இது ஒர் கற்பனை,மாறாக உலக மக்களின் காதுகளுக்கும் எட்டியிருக்க வேண்டும்,அல்லது அரபுநாட்டு மக்களுக்காவது எட்டியிருக்க வேண்டும்,மேலும் வேதம் வழங்கப்பட்ட காலத்திலும் சரி இன்றும் சரி கடவுளை யாரும் பார்க்க முடியாது அவனுடன் பேசமுடியாது என்பதிலிருந்தே இது ஒரு நிரூபிக்கவே முடியாத கற்பனை என்பது தெளிவாகிறது.அது போல் குர் ஆன் எழுதப்பட்டது என்பது உண்மை, ஆனால் அது ஒரு கடவுளால் வழங்கப்பட்டது என்பது ஆதாரமற்ற கற்பனை கலந்த மெகா பொய்.
குரானில் இறுதித் தூதர் முகமது நபி என்று சொல்லாமல் விட்டிருந்தால் அரபிகள் இஸ்லாமை பாதுகாக்காமல் விட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
Post a Comment