Saturday, September 22, 2012

592. THE GNOSTIC GOSPELS ... 6

*
*

*

THE GNOSTIC GOSPELS



மற்ற  பதிவுகள்: 

.....................   முதல் பதிவு
.....................   இரண்டாம் பதிவு 
.....................   மூன்றாம் பதிவு  
 ...................     நான்காம் பதிவு 
....................    ஐந்தாம் பதிவு 
....................   ஆறாம் பதிவு
....................    இறுதிப் பதிவு 


 VI

GNOSIS:   SELF = KNOWLEDGE

AS KNOWLEDGE  OF  GOD



யோவான் 14: 5 - 7
தோமா அவரிடம் , ‘ஆண்டவரே!நீர் எங்கே போகிறீர் என்று எங்களுக்குத் தெரியாது.  அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?’ என்றார்.
இயேசு அவரிடம், ‘வழியும் உண்மையும் வாழ்வும் நானே’,  என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை’ என்றார்.

யோவானின் புதிய ஏற்பாடு gnostic கிறித்துவர்களிடமும் சிறப்புத் தன்மையோடு இருந்து வந்துள்ளது. அதே போல் பழமைக் கிறித்துவர்களுக்கும், சிறு மறுப்பு வந்திருந்தாலும், இந்நூல் ஏற்புடையதாயுள்ளது. Gospel of Thomas, Dialogue of the Savior போன்ற நூல்களைப் புறக்கணித்தவர்கள் யோவானை எப்படி ஏற்றுக் கொண்டனர்?  கடவுளை ஏசுவின் மூலமாகவே பார்க்க முடியும் என்று சொல்லும்  கொள்கையே காரணம்.(119)

Gospel of Thomas-ல் ஏசு இதே போன்ற ஒரு கேள்வியை ஏசுவின் சீடர்கள் கேட்ட போது , ‘ஒளிபடைத்த ஒருவனிடம் ஒளி இருக்கிறது; அதுவே இந்த உலகை ஒளிமயமாக்குகிறது.அவனிடம் ஒளியில்லையேல் அவன் இன்னும் இருளில் இருக்கிறான்’ என்கிறார்.

வாலண்டியன் வழியினருக்கு யோவானில் வரும் வார்த்தைகள் மிகப் பயனுள்ளதாக இருக்கும்.

மூன்றாம் நான்காம் நூற்றாண்டுகளில் பல கிறித்துவர்கள் துறவு நிலைக்கான தனிமை, உருவெளித் தோற்றம், ஆன்மீக நிலை போன்றவைகளை மேற்கொண்டனர். ஆனால் நான்காம நூற்றாண்டிற்குப் பிறகு துறவிகளும் கூட நடைமுறைக் கிறித்துவர்களோடு ஒன்றி, மதக் குருக்களுக்குக் கீழ் வரவேண்டும் என்பதை உறுதிப் படுத்தினர்.  (120)

இந்த விதக் கட்டுப்பாடுகளினாலேயே, நாக் ஹமாதி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் அருகில் உள்ள St. Pachomius  என்ற இடத்திலிருந்த குருமடங்களில் நாக் ஹமாதி நகல்கள் பத்திரமாக வைக்கப்பட்டிருந்திருக்கலாமென Frederik Wisse என்பவர் தன் ஆய்வுக் கருத்தைக் கூறியுள்ளார்.  ஆனால் 367-ம் ஆண்டில் மிகவும் அதிகாரம் பெற்றிருந்த Archbishop of Alexandria, Athanasius என்பவர் இது போன்ற நூல்களை- ஐயத்துக்கிடமான தேவப் புரட்டு நூல்களை - எரித்துப் போட உத்தரவிட்டார். அதை மீறி பாதுகாக்கப்பட்ட நூல்களே 1600 ஆண்டுகள் கழித்துக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

140 - 400 ஆண்டுகளில் கிறித்துவம் ஒரு அரசியல் அமைப்பாகவே உருவெடுத்தது. இரேனியஸ் gnostic கிறித்துவர்களைப் பகைமையோடு தான் பார்த்தார். (121)


gnostic கிறித்துவர்கள் கடவுள் மனிதனைப் படைத்தார். மனிதன் கடவுளைப் உருவாக்கினான் . ஆகவே கடவுள் மனிதனை வணங்க வேண்டும் என்றொரு வாக்கியம் Gospel of Philip-ல் உள்ளது.  (122)

gnostic கிறித்துவர்கள் இதனாலேயே 19-ம் நூற்றாண்டின் மனோதத்துவ அறிஞர் Ludwig Feuerbach என்பவர் சொன்ன ‘theology is really anthropology' (இறையியல் என்பதே மனித இன இயலாகும்.) தத்துவத்தை ஒப்புக்கொள்கிறார்கள். (123)

மனித இயலை பழமைக் கிறித்துவர்களும்,  gnostic கிறித்துவர்களும் இரு வேறு விதமாகக் காண்கிறார்கள். பழமைக் கிறித்துவர்கள்  யூதர்களைப் போலவே, கடவுளும் மனிதனும் மனிதன் செய்யும் பாவங்களால் பிரிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று சொல்கிறது. ஆனால் gnostic கிறித்துவர்களின் கருத்து வேறுபட்டு நிற்கிறது. 'அறிவு’ அதுவும் ‘தன்னறிவு’ மட்டுமே ’தன்னையே தன்னுள் பார்க்கும்’ திறனைத் தருகிறது.

Valentinus என்பவரின் கருத்துப் படி எல்லாவற்றிற்கும் தாயான ‘அறிவு’ (wisdom)  தன் துயரங்களின் ஊடே நான்கு ‘பூதங்களை’க் கொண்டு வந்தது. அந்த நான்கு பூதங்கள்: மண், காற்று, நெருப்பு, நீர்.  (124)

சுய அறிவற்று இருப்பதே சுய அழிப்பின் முதல் படி. (Self-ignorance is also a form of self-destruction.) Dialogue of Savior என்ற நூலின்படி பிரபஞ்சத்தின் இந்த நான்கு பூதங்களை உணராதோர் அழிவை நோக்கிச் செல்கிறார்கள். (125)

Gospel of Thomas   சுய அறிவு மனக்குழப்பத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறது. அந்த நூலில், ஏசு சொல்கிறார்: “தேடுபவன் தொடர்ந்து தான் தேடுவது கிடைக்கும் வரை தேடட்டும்.  தேடுவது கிடைத்தவுடன் அவன் குழம்பி நிற்பான்.  அந்தக் குழப்பத்தில் அவன் ஆச்சரியத்தின் விளிம்பிற்குப் போவான். அதன் பின் அவன் எல்லாவற்றையும் ஆளும் திறன் பெறுவான்.”

உள்ளேயிருப்பதாக உணரும் அந்த “ஒளி” எங்கிருந்து வருகிறது? ப்ராய்ட் சொன்னது போல் gnostic கிறித்துவம் ‘உடம்பின் விளக்காக இருப்பது மனமே ’ என்கிறது.

“மனமே நம் வழிநடத்தி;  காரணங்களே நமது ஆசிரியர்”.(127)

Kingdom of God - கடவுளின் ராஜ்ஜியம் என்பதை ஏசு Gospel of Thomas-ல் நன்றாகவே கிண்டலடிக்கிறார்:  “உங்களை வழி நடத்துபவர்கள் கடவுளின் ராஜ்ஜியம்  வானத்தில் உள்ளது என்றால், அங்கு நீங்கள் போகும் முன் பறவைகள் முதலில் போய்விடும்.  இல்லை, கடவுளின் ராஜ்ஜியம் கடலில் இருக்கிறது என்றால் முதலில் மீன்கள் அங்கே உங்களுக்கு முன் போய் விடும்.  ஆனால் கடவுளின் ராஜ்ஜியம் என்பது சுய தரிசனத்தில் தான் (It is a state of self-discovery.) இருக்கிறது”. (128)

gnostic கிறித்துவர்கள் ஏசுவின் மேற்கூறிய விளக்கங்களால் மனிதனின் முழு விடுவிப்பு என்பது வரலாற்றின் வடுக்களாக இருக்காது; ஆனால் அவை மனித மனங்களின் மாறுதல்களால் மட்டுமே இருக்கும் என்று கருதுகிறார்கள்.  (129)

Gospel of Thomas-ல் ஏசுவின் சீடர்கள் ஏசு எங்கே இருக்கிறார் என்பதைக் கேட்க, - அப்போதுதானே அவர்கள் அவரை அடைய முடியும் என்பதால் கேட்க - ஏசு அவர்களுக்கு நேரடி பதில் கொடுக்காது, உங்களிடமே ஒளிந்திருக்கும் பதிலைக் காணுங்கள் என்கிறார்.

அவரது மூன்று முக்கிய சீடர்களில் ஒருவரான மத்தேயு - "place of life" - வாழ்வின் இருப்பிடம் எது என்று கேட்க, ஏசு ‘உங்களில் யார் தன்னையே அறிந்திருக்கிறீர்களோ அவர் அதைக் கண்டு கொண்டு விட்டார்’ என்கிறார். (131)

ஒவ்வொரு gnostic கிறித்துவரும்  தன் மனதிற்கு தானே ஒரு சீடனாக இருப்பார் என்றும், தன் மனதே உண்மையின் பிறப்பிடம் என்றும் கருதுவார்கள் என்றும்  Testimony of Truth கூறுகிறது. ( இதைத்தான் “ஞானோதயம்” என்கிறோமோ?) (132)

சமயங்களின் மொழியில் உள்மனத்து மாற்றங்களே மொழியாகின்றன; இறையுணர்வை அடைந்தவர்கள் தாங்கள் காண்பது எதுவோ அதுவாகவே மாறிவிடுகிறார்கள்.

“நீ ஆன்மைவைப் பார்த்தாய்; நீயே ஆன்மாவாக மாறிவிட்டாய்.  நீ கிறிஸ்துவைப் பார்த்தாய்;  நீயே கிறிஸ்துவாக மாறி விட்டாய்.  நீ பரமபிதாவைப் பார்த்தாய்;  நீயே பரமபிதாவாக மாறி விட்டாய்.  நீ உன்னையே 
பார்த்தாய்; நீ பார்த்ததும் நீயே”


”Gnosis  என்ற இந்த நிலையை அடைந்தவன் இப்போது ஒரு கிறித்துவனல்ல; ஆனால் அவனே இப்போது ஒரு கிறிஸ்து”
(அகம் பிரம்மாஸ்மி என்பதுதான் இதுவோ?)

பல gnostic கிறித்துவர்கள் தன்னையே புரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு உள்ளார்கள். அவர்களைப் பொறுத்தவரை இந்த ஆழ் மனத்து ஆர்வமே பல பேருண்மைகளைத் திறந்து காட்டும் ஒரு சாவியாக மாறி விடுகிறது. “நாம் யார்? எங்கிருந்து நாம் வந்தோம்? எங்கே இங்கிருந்து போகிறோம்?”  Book of Contender என்ற நூலின் படி “தன்னைத் தெரிந்து கொள்ளாதவன் எதையுமே தெரிந்து கொள்ளாதவனாக இருக்கிறான்.  ஆனால் தன்னைப் பற்றித் தெரிந்து கொண்டவன் தன்னைப் பற்றியுமல்லாமல், எல்லாவற்றின் அடிப்படை உண்மைகளை உணர்ந்தவனாகிறான்”. 
(”நான்” என்ற கொள்கையை வைத்து இந்து மதத்தில் உள்ள தர்க்கங்கள் போலவே இவையுமுள்ளன.) (134)

ப்ளோட்டினஸ் - Plotinus - என்ற தத்துவாசிரியர் “கடவுளைப் பார் என்கிறார்கள்; ஆனால் கடவுளை எங்கே எப்படி பார்ப்பது என்று gnostic கிறித்துவர்கள் ஏதும் சொல்வதில்லை” என்கிறார். 

நாக் ஹமாதி ஆன்மீக ஒழுக்கம் பற்றி பலவற்றைக் கூறுகிறது. நாக் ஹமாதியின் மிக நீள நூலான Zostrianos ஞானம் பிறப்பதற்கான வழிமுறைகளை எடுத்துரைக்கிறது.  ‘ஒவ்வொருவனும் தனது உடலிச்சைகளை கடும் தவம் மூலம் ஒதுக்கி வைக்க வேண்டும்.  இரண்டாவதாக, தியானத்தின் மூலமாக தன் மனதை முழுமையாக ஆளுமைப் படுத்த வேண்டும். இந்த நிலைக்கு வரும்போது அவன் கடவுளை முழுமையாக உணர முடியும். 
(ஆசைகளை ஒழி என்ற புத்த தத்துவம் போலவே இக்கருத்துக்கள் உள்ளன.) (135)

gnostic  ஆசிரியர்கள் தங்களது ரகசியமான வழிகாட்டுதல்களை வெறும் வார்த்தையாடல்கள் மூலமாக செய்து வந்துள்ளனர். அவை அந்தந்த சீடர்களின் மனோநிலையை ஒத்ததாக இருக்கவே இம்முறையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். 
(இது Zen குரு - சிஷ்ய உறவு போல் உள்ளதாகத் தெரிகிறது.)






*

 







































*










7 comments:

சார்வாகன் said...

வணக்கம் அய்யா,
அருமையான விளக்கம். ஞானாஸ்டிக் மதம் தத்துவம்,கேள்வி கேட்கும் ,சிந்திக்கும் தனமை சார்ந்து இருப்பதாலேயே பழமைக் கிறித்தவத்தால் எதிர்க்கப்பட்டதில் வியப்பில்லை.

//1.பிரபஞ்சத்தின் இந்த நான்கு பூதங்களை உணராதோர் அழிவை நோக்கிச் செல்கிறார்கள். //
//2.'அறிவு’ அதுவும் ‘தன்னறிவு’ மட்டுமே ’தன்னையே தன்னுள் பார்க்கும்’ திறனைத் தருகிறது.//


பல்வித 1.இயற்கையை போற்றுதல்,2.தன்னை அறியும் தேடல், நல்ல விடயங்கள்தான்!.

இப்படி தேடல் உள்ள மதங்கள் அழிக்கப்படும் அல்லது திரிக்கப்படும் என்பதே வரலாறு சொல்லும் செய்தி . அருமையான தமிழாக்கம் தொடருங்கள்!!

நன்றி!!!

தருமி said...

சார்ஸ்

புத்தகத்தின் இப்பகுதி நம் புத்த, இந்து / இந்திய தத்துவங்களோடு இணைந்திருப்பதாகத் தோன்றுகிறது.

குட்டிபிசாசு said...

தருமி ஐயா,

//தேடுபவன் தொடர்ந்து தான் தேடுவது கிடைக்கும் வரை தேடட்டும். தேடுவது கிடைத்தவுடன் அவன் குழம்பி நிற்பான். அந்தக் குழப்பத்தில் அவன் ஆச்சரியத்தின் விளிம்பிற்குப் போவான். அதன் பின் அவன் எல்லாவற்றையும் ஆளும் திறன் பெறுவான்//

இதுவும் இந்திய தத்துவம் போலத்தான் உள்ளது.

? said...

//கடவுள் மனிதனைப் படைத்தார். மனிதன் கடவுளைப் உருவாக்கினான் .//\\

அற்புதம், ஞானாஸ்டிக் கிருத்துவம், பெளத்தம், அத்வைதம் இவைகட்கு நெருக்கமான சிந்தனையாக தோன்றுகிறது. ஆனால் மதங்கள் இந்த ஞானத்தேடல் போய் இப்போழுது புராணகதைகளும் சடங்குகளும் புத்தகங்களுமாய் சுருங்கிவிட்டன...So sad!

Nanjil said...

//புத்தகத்தின் இப்பகுதி நம் புத்த, இந்து / இந்திய தத்துவங்களோடு இணைந்திருப்பதாகத் தோன்றுகிறது.//

தருமி ஐயா!நான் இந்தக் கட்டுரையை படித்ததும் இதைத்தான் இங்கு சொல்ல வந்தேன். நீங்கள் சொல்லி விட்டீர்கள்.

Unknown said...

ஆசைகளை ஒழி என்ற புத்த தத்துவம் போலவே இக்கருத்துக்கள் உள்ளன.) (135) புத்தரை புரிந்து கொள்ளாதவர் சொல்வது

தருமி said...

selvaraj sermathi ,
//புத்தரை புரிந்து கொள்ளாதவர் சொல்வது//

புரிந்து கொண்டவர் சொன்னால் புரிந்து கொள்கிறேன்.
உதவுங்கள்

Post a Comment