Tuesday, September 26, 2023

1251. சநாதனம்னா என்னாங்க ...5

சநாதனம்னா என்னாங்க ...5


1946ல் அம்பேத்கர் “யாரிந்த சூத்திரர்கள்?” என்ற ஒரு கேள்வியை எழுப்பி, ஒரு புதிய பிரக்ஞ்யை சமுக வெளிக்குக் கொண்டு வந்தார். தாங்கள் யார்?; எங்கே இருக்கிறோம்?; என்னவாக இருக்கிறோம்? என்ற எந்த சுயமதிப்பீடும் இல்லாத “பாவப்பட்ட மக்களாக” இன்னும் இருப்பது தான் அவர்களின் இன்றைய பரிதாப நிலை.

இதைப் பற்றி விரிவாக எழுதப்பட்ட நூலை தமிழில் மொழி பெயர்த்துள்ளேன். விரைவில் அச்சில் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

அதிலிருந்து சில பகுதிகளை அவ்வப்போது இங்கு தர நினைத்துள்ளேன்.

 

 

பிராமணியத்தின் ஆன்மிக, அறிவியல் கொள்கைகள் எல்லாமே ஒரு முனைப்பாக, சூத்திரர்களுக்கு உடலுழைப்பைக் கட்டாயமாக்கி, வர்ண தர்மத்தை உயர்த்திப் பிடிப்பதாகவே உள்ளன. இந்தத் தத்துவம் சமயத்தின் புராணக் கதைகள் மூலம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டே வந்துள்ளன. எண்ணிக்கையில்லா ஸ்மிருதிகளும், சூத்திரங்களும், சாத்திரங்களும் மகாபாரதம், இராமாயணம் போன்ற சமயப் புராணங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வர்ண தர்மங்களின் அடிப்படைக் கோட்பாடுகளை வலிந்து நிலை நிறுத்துகின்றன. இந்தக் கோட்பாடுகள் த்விஜாக்களின் ஆளுமையையும், அதிகாரத்தையும் உயர்த்திப் பிடித்துக் கொண்டு, அதே சமயத்தில் பூணூல் அணிய முடியாத சூத்திர மக்களின் தலை மீது உழைப்பையும், தண்டனைகளையும் அடுக்கடுக்காய் ஏற்றி வைக்கின்றன.

தங்களது வேதமும், வட மொழியும்தான் உயர்ந்தவை என்று பறை சாற்றிக் கொண்டிருக்கும் த்விஜாக்கள், அதோடு நில்லாது ஆங்கில மொழி மூலமும் தங்கள் கொள்கை விளக்கங்களைபரப்பிக் கொண்டுள்ளனர். அதிலும், ‘ஆதிக்க சாதியினர்என்று இன்று அழைக்கப்படும் சாதியினர் - ஜட்கள், குஜ்ஜார்கள், பட்டேல்கள், யாதவர்கள், மராத்தியினர், நாயர்கள்,  ரெட்டிகள், கம்மாவினர், கௌனம்பிகள், லிங்காயத்துகள் - தங்கள் முன்னே பிளந்து கிடக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகளையும் பிரித்தாளும் இரட்டை முனைக் கத்தி போலிருப்பதையும் முழுமையாகப் புரிந்து கொள்ளாதவர்களாகவே உள்ளனர். 2

பூலே பிராமணர்கள் எந்த அளவு சூத்திரர் மீது தங்கள் சுரண்டலைத் தொடர்கிறார்கள் என்பதையும், பிராமணர்கள் சமயக் கதைகள் மூலம் ஏனையோரை அடக்கி ஆள்கிறார் என்பதையும் தன் சுய சிந்தனையின் வெளிப்பாடாகக் கொண்டுவந்தார். புரட்சிகளும் சீர் திருத்தங்களும் நடக்காவிட்டால் எதிர்காலம் முழுமையாகப் பிராமணர் வசப்பட்டு விடும் என்று கூறினார். அப்படி ஒரு போராட்டம் இன்றுவரையும் தேவையாகவே இருந்து வருகிறது. காலம் இன்னும் அதற்குக் கனியவில்லை.

தெற்கே மதராஸ் மாகாணத்தில் அயோத்திதாசர் (1845 - 1914) என்ற பறையர் இனத்து அறிஞர், அந்தப் பத்தொன்பதாவது நூற்றாண்டிலேயே சாதியற்ற தமிழன்என்றொரு சமூக, அரசியல் நிலைப்பாட்டிற்கான முதல் முயற்சியை எடுத்தார். மேலும் அவர் அப்போது நிலவி வந்த பிராமணியத் தேசியவாதத்திற்குஎதிராகத் திராவிடக் கருத்தியலைக் கொண்டு வந்தார். அயோத்திதாசர் ஏற்றிய தீபத்தை மேலும் எடுத்துச் சென்றவர் பெரியார் ஈ.வே. ராமசாமி நாயக்கர். அப்போதிருந்த காலனிய அரசமைப்பில் பிராமணர் அல்லாதவர்களுக்கும் வியத்தகு பெருமை தரும் முறையில் தன் சிந்தனைகளைப் பரப்பினார். ஒரு பெரிய பகுத்தறிவுவாதியாகவும் இறை மறுப்பாளராகவும் இருந்து சமயப் புராணக் கதைகளைத் தோலுரித்து தன் கருத்துகளைப் பரப்பினார். பழைய மூடநம்பிக்கைகளைக் களைந்து ஒரு புதிய சாதியற்ற, பகுத்தறிவுள்ள சமூக அமைப்பு வர பெரும் முயற்சி மேற்கொண்டார்.

திராவிடக் கருத்துகள் சாதிய மறுப்புக் கொள்கைகளாக இருந்தாலும் தலித் மேம்பாட்டிற்கான பங்களிப்புகள் அதில் ஏதுமில்லை. அதிலும் இன்னும் சூத்திரர் சமூகம் இன்றளவிலும் அடிமைப்பட்டே இருக்கின்றது. சாதியச் சமூக அழுத்தங்கள் அவர்களைத் தலைதூக்க விடாமல் வைத்துள்ளது. சமத்துவம் இல்லாமல் த்விஜாக்களின் அழுத்தத்தில் இருந்து விடுபடாமல் இருக்கிறார்கள்.

தெற்கே சில தலைவர்கள் தோன்றினார்கள். முன்னெடுப்புகளும் நடந்தேறின. தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றமும் பிராமணர்களின் ஆதிக்கத்தின் அளவுகோலைச் சுருக்குவதும் ஓரளவாவது நடந்தேறின. ஆனால் வடக்கிலும் கிழக்கிலும் நடந்த சில சீர்திருத்த முயற்சிகளும் பிராமணச் சாதியக் கட்டுப்பாட்டிற்குள் மட்டுமே நடந்தது.

 

 

Wednesday, September 20, 2023

1250. சநாதனம்னா என்னாங்க ...4




சநாதனம்னா என்னாங்க ...4

1946ல் அம்பேத்கர் “யாரிந்த சூத்திரர்கள்?” என்ற ஒரு கேள்வியை எழுப்பி, ஒரு புதிய பிரக்ஞ்யை சமுக வெளிக்குக் கொண்டு வந்தார். தாங்கள் யார்?; எங்கே இருக்கிறோம்?; என்னவாக இருக்கிறோம்? என்ற எந்த சுயமதிப்பீடும் இல்லாத “பாவப்பட்ட மக்களாக” இன்னும் இருப்பது தான் அவர்களின் இன்றைய பரிதாப நிலை.

இதைப் பற்றி விரிவாக எழுதப்பட்ட நூலை தமிழில் மொழி பெயர்த்துள்ளேன். விரைவில் அச்சில் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

அதிலிருந்து சில பகுதிகளை அவ்வப்போது இங்கு தர நினைத்துள்ளேன்.

***********

முதல் வேத நூலான ரிக் வேதத்தில் உள்ள புருஷா சுக்தா (Purusha Sukta) என்ற பக்திப் பாடலில் மனிதகுலம் எவ்வாறாக முதல் மனிதனின் பலியினால் ஆரம்பித்தது என்று கூறப்படுகிறது. அம்முதல் மனிதனின் வாயிலிருந்து வந்தவர்கள் பிராமணர்கள்; அவனது கைகளிலிருந்து வந்தவர்கள் சத்திரியர்களும், கால்களிலிருந்து வைசியர்களும், பாதங்களிலிருந்து சூத்திரர்களும் வந்தனர். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற 4 படிநிலைகள் இந்து தர்மத்தின் நான்கு அடுக்கு வர்ணாஸ்ரமமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதிப்பிரிவுகள் மீண்டும், அதன்பின் எழுந்த பிராமண நூல்களான மனு ஸ்மிருதி, அர்த்த சாஸ்திரம், பகவத் கீதா என்ற நூல்களில் மீண்டும் அடையாளங் காட்டப்படுகின்றன. OBC மக்கள் அனைவரும் சூத்திரர்கள். இந்தக் கோட்பாடு அல்லது வரையறை பிராமண இந்து மதத்தின் ஆரம்ப காலத்தில் இருந்து வந்துள்ளது. அதுமட்டுமின்றி, அந்தக் காலத்தில் இருந்தே சூத்திரர்கள் சமூக, ஆன்மீக அடிமைகளாகவே கருதப்பட்டு வந்துள்ளனர்.

*****

பிராமணிய வகைப்படுத்துவதன் மூலம் அனைத்துச் சூத்திரர்களும் - இதில் தீண்டத்தகாதவர்கள்என்று ஒதுக்கப்பட்ட மக்களும் உள்ளடக்கம் - உழைத்து, உற்பத்தி வேலைகளைச் செய்வதற்காகவே உண்டாக்கப்பட்டவர்கள். நம் முன்னோர்களும் அவர்தம் வாழ்வும் இந்த உழைப்பினால்தான் காப்பாற்றப்பட்டன. ஆனால் இந்த உழைப்பின் பயன்கள் என்னவோ மந்திரங்கள் ஓதும் இனத்தவருக்கே சென்றன. இந்த உழைப்பில் வைசியர்களும் பங்களித்ததாக - விவசாயப் பணிகளில் மேலாளர்களாக - ஒரு கருத்தும் உண்டு. ஆனால் சத்திரியர்களோ பிராமணர்களோ இவ்வுழைப்பில் சிறிதும் பங்கெடுத்ததாக வரலாற்று ஏடுகளில் எங்கும் காணப்படவில்லை

 கௌடில்யரின் படைப்பான அர்த்தசாஸ்திரம்என்ற நூலிலும் மேற்சொன்ன அடிமைத்தனமும், வேலைப்பளுவும் வெவ்வேறு சாதியினருக்கான பணிகளாக வகுக்கப்பட்டுள்ளன. சுரண்டல் ஒரு சட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அதோடு இல்லாது, அர்த்தசாஸ்திரம் ஓர் அடிப்படைச் சட்ட அமைப்பை வலியுறுத்துகிறது. இருமுறைப் பிறப்பெடுத்த பிராமணர்கள் - த்விஜஸ் - இதுபோன்ற உடல் உழைப்புகளிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அரசமைப்புகள் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, அதன் பயனைப் பிராமணர்களின் நல்வாழ்க்கைக்காகத் தர வேண்டும். சூத்திரர்களின் உழைப்பில் அப்பிரிவு சுகம் காண வேண்டும் என்றுள்ளது.

*****

சூத்திரர்களுக்கு பாதஜா (padaja) என்ற பெயர் கொடுக்கப்பட்டிருந்தது. அதன் பொருள் அவர்கள் பிரம்மாவின் காலிலிருந்து பிறந்தவர்கள். இதன்மூலம் கடவுள் அவர்களை அடிமைகளாகவே இருக்க படைத்துள்ளார்.




1249. சநாதனம்னா என்னாங்க ...3



சநாதனம்னா என்னாங்க ...3




1946ல் அம்பேத்கர் “யாரிந்த சூத்திரர்கள்?” என்ற ஒரு கேள்வியை எழுப்பி, ஒரு புதிய பிரக்ஞ்யை சமுக வெளிக்குக் கொண்டு வந்தார். தாங்கள் யார்?; எங்கே இருக்கிறோம்?; என்னவாக இருக்கிறோம்? என்ற எந்த சுயமதிப்பீடும் இல்லாத “பாவப்பட்ட மக்களாக” இன்னும் இருப்பது தான் அவர்களின் இன்றைய பரிதாப நிலை.
இதைப் பற்றி விரிவாக எழுதப்பட்ட நூலை தமிழில் மொழி பெயர்த்துள்ளேன். விரைவில் அச்சில் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
அதிலிருந்து சில பகுதிகளை அவ்வப்போது இங்கு தர நினைத்துள்ளேன்.
***********
இந்திய அரசியல் சட்டமைப்பும் சூத்திரர்களுக்குப் பல புதிய உரிமைகளைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஆனால் ரிக் வேதமும், மனு தர்மமும் அவர்களை இன்னமும் காலங்காலமாய் இருந்து வரும் அடக்குமுறைகளிலேயே அடக்கி வைத்துள்ளது. அந்த இடைக்கால முறைகளே இன்னும் நீடிக்கின்றது. ஆனால் ஹரப்பா நாகரிகத்தில் இவர்கள் பல உரிமையோடு இருந்த மக்கள்தான். அவர்கள் சமூக, அரசியல், மதத் தலைவர்களாக இருந்தவர்கள்தான். பொருளாதாரத்திலும் மேம்பட்டு இருந்த மக்கள்தான். புதிய கிராமங்களையும் நகரங்களையும் உருவாக்கிய பண்பட்ட மக்கள்தான். தங்களுக்குப் பிடித்த தங்கள் கடவுள்களை நேரடியாகப் பூசித்த மக்கள்தான். கடலோடி திரவியம் தேடிய பெரும் மக்கள் கூட்டம்தான். தங்களைத் தாங்களே முறையாக, குடியாட்சித் தத்துவங்களோடு தங்களையே ஆண்டு கொண்ட மக்கள்தான். ஆனால் இத்தனை உரிமைகளையும் அவர்கள் இழந்துவிட்டனர்... அவர்களிடமிருந்து அவை வன்மையாய் பிரித்தெடுக்கப்பட்டு, பிய்த்தெடுக்கப்பட்டு விட்டன. உரிமைகளை இழந்தனர்; சுதந்தரம் இழந்தனர்; சமத்துவம் பறிக்கப்பட்டு விட்டது; சமய உரிமைகள் பறிபோயின. ரிக் வேத காலத்து கால்நடைப் பொருளாதாரத்தோடு ஆரிய பிராமணர்கள் நாட்டிற்குள் நுழைந்ததும் இவை அனைத்தும் நடந்தேறின. வர்ணாஸ்ரமம் தலையெடுத்து ஆண்டான் அடிமை உறவுகள் கட்டமைக்கப்பட்டன; கட்டியெழுப்பப்பட்டன.
அந்தக் காலகட்டத்திலேயே சூத்திரர்கள் போர்க்கொடி தூக்கியிருந்தால் அவர்களது மத உரிமை நிலைநாட்டப்பட்டு இருந்திருக்கலாம். சனாதன தர்மம் கிறித்துவ மதம்போல் வேறு உருவெடுத்திருக்கலாம். சூத்திரர்கள் அரசியல் அதிகாரங்கள் நிலைநாட்டப்பட்டு தேசிய அளவில் அவர்கள் வேறுவித மக்கள் கூட்டமாக வெற்றிகரமாக மாறியிருந்திருக்கலாம்.

Tuesday, September 19, 2023

1248. சநாதனம்னா என்னாங்க ... 2


சநாதனம்னா என்னாங்க ... 2

1946ல் அம்பேத்கர் “யாரிந்த சூத்திரர்கள்?” என்ற ஒரு கேள்வியை எழுப்பி, ஒரு புதிய பிரக்ஞ்யை சமுக வெளிக்குக் கொண்டு வந்தார். தாங்கள் யார்?; எங்கே இருக்கிறோம்?; என்னவாக இருக்கிறோம்? என்ற எந்த சுயமதிப்பீடும் இல்லாத “பாவப்பட்ட மக்களாக” இன்னும் இருப்பது தான் அவர்களின் இன்றைய பரிதாப நிலை.

இதைப் பற்றி விரிவாக எழுதப்பட்ட நூலை தமிழில் மொழி பெயர்த்துள்ளேன். விரைவில் அச்சில் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

அதிலிருந்து சில பகுதிகளை அவ்வப்போது இங்கு தர நினைத்துள்ளேன்.

இந்து மதத்தில் பி.ஜே.பி.  ஆட்சிக்கு வருவதற்கு முன்பே வர்ணாஸ்ரமுமே மேல் தட்டில் தான் இருந்து வந்தது. இந்த வர்ணாஸ்ரமக் கட்டுகளை உடைக்க - இந்தியாவில் பெரும் எண்ணிக்கையில் இருக்கும் - சூத்திரர்களால் ஏதும் செய்ய முடியவில்லை. வர்ணாஸ்ரமத்தின் தலைமையில் தான் இந்துக் கலாச்சாரம் இயங்கி வந்தது. அதுவே இந்தியக் கலாச்சாரமாகவே மாறிக் கொண்டிருந்தது. சூத்திரர்கள் கைகளில் இந்து சமய தத்துவ நிலைப்பாடும், ஆன்மீக சக்தியும், சமத்துவ நிலையும் ஏறாவிடில் அவர்கள் எந்தக் காலத்திலும் அந்த மூவர் கூட்டணிக்கு - பிராமணர் - பனியாக்கள், சத்திரியர் - சமமாகும் வாய்ப்பே நிச்சயமாக வராது.


Monday, September 18, 2023

1247. சநாதனம் என்றால் என்னதுங்க ...?



சநாதனமா ... அப்டின்னா என்ன???




1946ல் அம்பேத்கர் “யாரிந்த சூத்திரர்கள்?” என்ற ஒரு கேள்வியை எழுப்பி, ஒரு புதிய பிரக்ஞ்யை சமுக வெளிக்குக் கொண்டு வந்தார்.
தாங்கள் யார்?; எங்கே இருக்கிறோம்?; என்னவாக இருக்கிறோம்? என்ற எந்த சுயமதிப்பீடும் இல்லாத “பாவப்பட்ட மக்களாக” இன்னும் இருப்பது தான் அவர்களின் இன்றைய பரிதாப நிலை.
இதைப் பற்றி விரிவாக எழுதப்பட்ட நூலை தமிழில் மொழி பெயர்த்துள்ளேன். விரைவில் அச்சில் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
அதிலிருந்து சில பகுதிகளை அவ்வப்போது இங்கு தர நினைத்துள்ளேன்.
**************
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கும் உள்ள கால இடைவெளியில் எழுந்த ஒரு சட்ட நூலான மனுஸ்மிருதி, பிராமணியக் கடுஞ்சட்டங்களைத் தூக்கிப்பிடிக்கும் நூலாக இருந்துள்ளது. அந்நூல் தொடர்ந்து உடலுழைப்பையும், ஆக்கப்பூர்வ உற்பத்தி வேலைகளையும் மிகவும் மட்டமானவைகளாகக் கற்பித்துள்ளது.
ஆனால் ‘இருமுறை பிறப்பு’ என்ற நம்பிக்கையோடு பூணூல் அணிந்து கொண்ட ‘த்விஜாஸ்’ என்ற இருமுறை பிறவியாளர்களான பிராமணர்கள் மந்திரங்களை உச்சாடனம் செய்வதைப் பெருமையோடு வியந்தோதுகிறது.


https://www.facebook.com/sam.george.946/posts/pfbid02gfBjLctuLkJrkegGioaaL2hLAjKbRQwCt9x2P2yTPVZmbkWjhgKvc3Lkgb6LwvQMl