Thursday, February 16, 2006
129. ஜோஸ்யம்..4: தேடி வந்த ஜோஸ்யர்.
மற்றைய பதிவுகள்:
1*,
2*,
3*,
4*,
5*,
6*,
7*,
8*,
9*,
10*,
11*,
12*.
13*.
2001-02-ஆக இருக்கலாம். கல்லூரியில் எனது அறையில் இருந்தேன். அப்போது ஒருவர் என் நண்பரும், உடன் வேலைபார்க்கும் முனைவர் சைலஸைப் பார்க்க வந்தார். நண்பர் அப்போது Studetns Services Committee-ன் convenor. ஒரு டி.வி. ஷோவுக்கு மாணவர்கள் தேவைப்படுவதாக கல்லூரி அலுவலகத்தில் சொன்னதின் பேரில் அவரை அது போன்ற விஷயங்களுக்கு in charge ஆக இருந்த என் நண்பரிடம் அனுப்பியதாகக் கூறினார். சிறிது காத்திருக்கும்படி சொல்லி அவரை அமரச் செய்தேன். உட்கார்ந்திருந்த அவரது தலை எனக்கு மிகவும் பிடித்தது. அதைப்பார்த்து எனக்குக் கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. அவ்வளவு பள பளன்னு, வழு வழுன்னு இருந்திச்சு.
அவர் காத்திருக்க, நான் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் தன் பையிலிருந்து சின்னப் பசங்க ஜியோமெட்ரி பாக்ஸில் இருக்குமே டிவைடர் அது மாதிரி, ஆனால் கொஞ்சம் பெரிய சைஸில் ஒன்றை எடுத்தார். அதைக் கையில் வைத்துக் கொண்டு கொஞ்சம் 'ஜுஜா' வேலை காண்பித்தார். எனக்கு ஒரு curiosity வர வைக்கவே அவர் அப்படி செய்தார் என்று நன்றாகவே தெரிந்தது. எனக்கும் வந்தே விட்டது. ஆகவே அவரைப் பார்த்து 'என்னங்க பண்றீங்க'ன்னு கேட்டுட்டேன். மனுஷன் ஆரம்பிச்சிட்டார். மனுஷ உடம்பைச் சுத்தி எனெர்ஜி இருக்கு; அத நான் இதால அளந்து அதை வச்சி நோயக் குணப்படுத்தி விடுவேன்...அது இதுன்னு ஒரே உதார்! இப்போ எதுக்கு வந்திருக்கிறார் என்றும் கூறினார். பெயர் ராசி பற்றி ஒரு டி.வி.ஷோ நடத்துவதாகவும், அதற்கு audience-ஆக மாணவர்கள் வேண்டும் என்றும் கூறினார். அப்போது தற்செயலாக அறைக்கு ஒரு மாணவன் வந்தான். அவன் சமீபத்தில்தான் சுரேஷ் என்ற தன் பெயரை பெயர் ராசி பார்த்து மாற்றி இருந்தான்; அதோடு ஒரு புதிய கல் மோதிரம் ஒன்றும் அணிந்திருந்தான். ஓரிரு நாட்களுக்கு முன்புதான் அவனிடம் இந்த நம்பிக்கைகள் பற்றிப் பேசியிருந்தேன் - (உண்மையில அவனை அதற்காகத் திட்டியிருந்தேன்). அவரிடம் உங்களுக்கு ஏற்ற ஆள் இவன்தான்; பேசிக்கொள்ளுங்கள் என்று அவனை அவரிடம் மாட்டி விட்டேன். அவன் மோதிரத்தை வாங்கி அதையும் தன் 'கருவி'மூலம் பரிசோதித்து, அவன் எனெர்ஜியையும் 'அளந்து' மோதிரத்தில் நிறைய எனர்ஜி இருக்கு என்றார். எனக்கு வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. நீங்கள் அளக்கும் எனெர்ஜியின் unit - அளவுகோல் - என்ன என்றேன். முதலில் சரியாகப் பதில் சொல்லாதவர், நான் கேள்வியை விளக்கிய பிறகு ஏதோ சொன்னார். யாரும் கேள்விப்பட்டிருக்க முடியாத பெயர். மாணவனிடம் microgram அளவுக்கு நிறுக்கப் பயன்படும் monobalance எவ்வளவு நுண்ணியதாக, sophisticated and intricate ஆக இருக்கிறது; ஆனால் இந்த மிக மிக நுண்ணிய அளவில் இருப்பதாக இவர் கூறும் அந்த எனெர்ஜியை இந்த ordinary looking (நானே கையில் வாங்கிப் பார்த்தேன். It was not at all any instrument, worth its name)கருவியால் அளக்கிறேன் என்கிறார் என்றேன். மனுஷனுக்கு கோபம் வந்து கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சம் தூபம் போட்டேன்.
இதற்கும் எங்கள் கல்லூரி மாண்வர்களுக்கும் என்ன தொடர்பு என்றேன். என்ன ஷோ? மாணவர்கள் என்ன செய்யவேண்டும் என்றேன். மாணவர்கள் ஆடியன்ஸாக இருந்து கேள்விகள் கேட்கலாம்; அவர்களுக்கு பெயர் மாற்ற இலவச ஆலோசனைகள் கூறுவோம் என்றார். ஸ்வரூப்பா என்று நினைக்கிறேன். வெற்றிகரமாக இன்னும் டி.வி.யில் ஷோ நடத்தும் அந்த அழகான பெண்மணியின் ஷோவுக்குத்தான் இவர் ஆள் பிடிப்பதாகக் கூறினார்.live show என்றால் நான்கூட வந்து கேள்வி கேட்கலாம் என்றேன். ஏற்கெனவே கோபத்தில் இருந்த மனிதர் உங்கள மாதிரி ஆளையெல்லாம் அனுமதிக்க மாட்டோம் என்றார்.
அதற்குள் நண்பர் வரவே, அவரிடம் தன் வேண்டுகோளை வைத்தார். நண்பர் பாவம்..டி.வி. எல்லாம் பார்க்காத மனுஷர். இவர் வேறு சரியென்று சொல்லிவிடக் கூடாதே என்று நானே, 'இந்த மாதிரி மூட நம்பிக்கைக்கு ஏத்த மாதிரி ரோட்டில் போகும் ஆட்களை வைத்து நடத்திக் கொள்ளுங்கள்; ஏன் மாணவர்களைக் கெடுக்கிறீர்கள்' என்றேன். மனுஷனுக்கு ரொம்ப கோபம் ஆகிப் போச்சு. 'உங்கள் மாதிரி ஆட்களெல்லாம்.....என்று ஏதோ சொல்லி அர்ச்சனை பண்ணிவிட்டுப் போனார். இந்த மனிதர்தான் இப்போது அதே டி.வி.யில் எனெர்ஜி மருத்துவம் என்று ஒரு ஷோ நடத்துகிறார். பெயரென்ன...Dr. (?!)சத்திய மூர்த்தியோ என்னவோ...?
உலகத்தில் ஏமாற்றிச் சம்பாதிக்க எத்தனையோ வழிகள். சில வழிகள் பாதுகாப்பானவை, எ-கா. அரசியல், சோதிடம் போன்றவை. என்ன செய்வது கடமை உணர்வுடன் அவற்றைச் செய்பவர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள்.
ReplyDeleteவிஜய் டிவியில் இவங்க நிகழ்ச்சியை தான் வடிவேலு காமெடிய விட ரசித்து பார்ப்போம்.
ReplyDeleteஉங்கள மாதிரி கொஞ்ச பேருக்கு மட்டும்தான் இது காமெடி என்பதுதான் பெரிய ட்ராஜெடி :(
ReplyDeleteஇவர் புரோகிராம், மற்ற காமெடிகள் ஏதுவும் இல்லாமல் இருக்கும் போது பார்த்தால் நல்லா சிரிக்கலாம் சார்.
ReplyDeleteநாம் எல்லாம் அதை ஜோக்குன்னு நினச்சி பார்க்க, அது அவங்க நிகழ்ச்சியோட viewers' rating-யை அதிகமாக்கி வெற்றியடைய வச்சிரப் போகுது..!
ReplyDeleteநன்றி வினையூக்கி