Wednesday, March 29, 2006

146. சோதிடம்..10: - வாஸ்து

மற்றைய பதிவுகள்:

1*,
2*,
3*,
4*,
5*,
6*,
7*,
8*,
9*,
10*,
11*,
12*.
13*.




கேட்டா கடந்த 5000 வருஷமா இது நம்மகிட்ட இருக்கு அப்டிங்கிறாங்க. ஆனா இப்ப பத்து பதினைந்து வருஷமாதான் ரொம்ப அடிபடுது. எது எப்படியோ? இதையும் விஞ்ஞானம் அப்படிங்கிறாங்க. ஏற்கெனவே விஞ்ஞானம் என்றால் என்ன என்று முன் பதிவுகளில் சொல்லியாயிற்று. ஒரு கேள்விக்கு ஒரு பதில் இருந்தாதான் அது விஞ்ஞானம். ‘தமிழ்நாட்டு வாஸ்துஅறிஞரும்’ ‘மலையாள வாஸ்து அறிஞரும்’ ஆளுக்கொண்ணு சொன்னா அது எப்படி விஞ்ஞானமாகும். ‘ரெண்டு வாத்தியாரிட்ட மூணு கேள்வி கேட்டா நாலு பதில் வரும்’ என்று ஜோக்கடிப்பாங்க. ரெண்டு வாஸ்து ஆளுககிட்ட ஒரே ஒரு கேள்வி கேளுங்க. எத்தனை பதில் வருமோ. அதெல்லாமே …. உங்க பண வச்தி, மன நிலை (அதாவது, எந்த அளவு நீங்க போவீங்க அப்டிங்கிறது பொறுத்து.), வாஸ்துக்காரருக்கும் உங்க வீடு கட்டுறவருக்கும் உள்ள தொடர்பு, வாஸ்துக்கரரின் பணத்தேவை, - இப்படிப் பல விஷயங்களைப் பொறுத்தது.



நண்பன் ஒருவன் வேலையில் செய்த - தெரிந்தே செய்த - தப்புக்காகத் தண்டிக்கப்பட்டு, வேலையிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு வீட்டில் உட்கார்ந்திருந்தான். வீட்டில் சும்மா இருக்கலாமா? ஒரு வாஸ்துக்காரர் வந்து வீட்டைத் தலைகீழாக மாற்றச்சொன்னார். மாற்றியதும் நிறைய மாற்றங்கள் வாழ்க்கையில். அதில் பெரிய மாற்றம் - வங்கிக் கணக்கு! ரொம்ப மெலிஞ்சு போச்சுது. ஆனாலும் ஆசை யாரை விட்டது. அடுத்து வந்தவர் தமிழ்நாட்டின் தலைவிதியையே நிர்ணயிப்பவரின் ஆஸ்தான வாஸ்துகாரராம். அவருக்கு விமான டிக்கெட் எல்லாம் எடுத்து, தடபுடலாக வீட்டுக்கு வரவழைத்து, பின் அவர் சொல்லிச்சென்ற மாற்றங்களைச் செய்ததும் வாழ்க்கையில் இன்னும் பெரிய முன்னேற்றம்: இப்போ வங்கிக்கணக்கு சுத்தமா தொடச்சாச்சு. வேற வழியில்லாம வீட்டை வித்துட்டுப் போயிட்டான். அதன் பிறகு சமூகத்தில அஞ்சு வருஷத்துக்கொரு முறை நடக்கும் மாற்றங்களால் மறுபடியும் பழைய நிலைக்கு வந்ததும், கொஞ்ச நாளில் புதுவீடு கட்டினான்; அதற்கும் வாஸ்து கட்டாயம் பார்த்திருப்பான். சூதாட்டத்தில ‘விட்டத பிடிக்கிறது மாதிரிதான்’!



வாஸ்து என்ற பெயரில் படுக்கை அறை கிழக்குத் திசையில் இருக்கவேண்டும். அது சரி; மாலை வெயில் விழுவதால் மேற்குப் பக்கம் உள்ள அறை இரவும்கூட உஷ்ணமாயிருக்கும். வாஸ்து என்ற பெயர் இதுக்குத் தேவையில்லை. common sense போதும். ஆனால், அடுப்பு கிழக்குத் திசை பார்த்து இருக்கணும்னு என்ன அவசியம்? அப்போதான் அடுப்பு எரியுமா? அதுகூட பரவாயில்லை; ஒரு அறை 10 x16க்கு இருக்கலாம் என்று வைத்துக்கொள்வோம். ( எனக்கு இந்த அளவுகள் எல்லாம் தெரியாது; ஒரு உதாரணத்துக்குத்தான்!) அதை 11 x 16 அல்லது 10 x17 வைத்தால் என்ன ஆகும்? இதில் என்ன விஞ்ஞானக் கணக்கு? இவ்வளவு cubic meter-க்கு இவ்வளவு ஐஸ்வர்யம் வரும்னு ஏதாவது கணக்கா என்ன?



இன்னொரு மெத்தப் படித்த நண்பன் வீட்டில் வாஸ்துபடி, படுக்கை அறை ஏதோ ஒரு திசையில் சில inches மட்டுமே உயரமாக இருக்கும்படி தரையை மாற்றினான். வீட்டைக் கழுவினால் தண்ணீர் வடிவதற்கு வேண்டுமானால் இது பயனுள்ளதாயிருக்கும்; வேறென்ன பயன் என்று கேட்ட போது, ‘இதுக்கே சண்டைக்கு வர்ரீங்களே; வாஸ்துக்காரர் அந்த அறையில் மட்டும் elelctric switch-களை மட்டும் மாற்றி வைக்கச்(american style?) சொல்லி, அப்படியே வைத்துள்ளேன்’ என்றான்! swithces மாத்திறது கூட அந்தக் காலத்துல சொன்னவங்க சொல்லிட்டு போயிட்டாங்களா, என்ன?



ஒவ்வொரு விஞ்ஞானத்திற்கென்றே அடிப்படையான நிலைப்பாடுகள் ( facts) இருக்கும்; அதன் மேல் கருத்துக்கள் (hypotheses) எழுப்பப்பட்டு, அவைகளை நிரூபணம் செய்யவேண்டி ஆராய்ச்சிகள் (research / experiments) செய்து, நிரூபணங்களிண் மேல் (evidences) புதிய நிலைப்பாடுகள் (facts) எழும். இந்த நிலைப்பாடுகள் எப்போது வேண்டுமானாலும், யாராலும், எங்கேயும் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டாலும் அவைகளுக்கு ஒரே மாதிரியான முடிவுகளே (results) வரவேண்டும்; வந்தால்தான் அது ஒரு விஞ்ஞானம். இப்படியே படிப்படியாகவே விஞ்ஞானம் வளரும்.



அப்படி ஏதுமின்றி -

- பலர் சத்தமாகக் கூறுவதாலேயோ,

- ஆண்டாண்டு காலமாய் நம்மிடம் இருந்துவரும் ஒரு விஷயம் என்பதாலேயோ,

- சொன்னவர்கள், சொல்பவர்கள் எல்லாருமே அறிவில்லாதவர்களா என்று கேட்பதாலேயோ,

- பலரும் நம்பிக்கை வைத்திருப்பதாலேயோ -

? இதை எப்படி விஞ்ஞானம் என்று சொல்வது?

சொல்பவர்கள் அதை ஏதேனும் ஒரு வகையிலாவதாவது நிரூபிக்க வேண்டாமா? அல்லது, இதுவும் கடவுள் நம்பிக்கை போல் - this is something personal; one has to ‘feel’ it and believe it….. - அப்டிங்கிறதுதான் பதிலா?



எனக்குள்ள கேள்விகள்:

* வாஸ்து பலன்களின் அடிப்படை என்ன?

* பலன்கள் இப்படி இப்படி என்று வரையறுத்தது யார்? எங்கே? எப்போது? ஏன்?

* பலன்கள் இப்படி இப்படி என்று வரையறுத்தது யார்? - கடவுளா, மனிதனா?

* வாஸ்து பலன்கள் நிரூபிக்கப் பட்டுள்ளனவா? நிரூபிக்க முடியுமா?

* நம் நாட்டில் மட்டுமே (சைனாவிலும் உள்ளது; அது வேறு வகையானது என்ற பதிலைத்தவிர..) வாஸ்து பார்த்துக் கட்டுவது ஏன்?

இன்னும் பல ஏஏஏஏஏஏஏஏஏஏன்கள்??????????



நம்பிக்கையாளர்களே, இது என் நம்பிக்கை; கடவுள் நம்பிக்கை மாதிரியேதான் இதுவும் என்று வேண்டுமானால் சொல்லிவிட்டுப் போங்கள். உங்கள் காசு…உங்கள் வீடு…உங்கள் சந்தோஷம்…உங்கள் திருப்தி. அதை சொல்ல நான் யார்?

ஆனால், அது விஞ்ஞானம் என்று சொன்னால் கொஞ்சம் புரிந்துகொள்ள உதவுங்கள்… PLEASE!







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Mar 29 2006 03:13 pm | சமூகம் | | edit this
44 Responses
muthu(tamizhini) Says:
March 29th, 2006 at 3:38 pm e
வாஸ்துக்கரரின் பணத்தேவை, - இப்படிப் பல விஷயங்களைப் பொறுத்தது.


adichi aadunga

சம்மட்டி Says:
March 29th, 2006 at 3:49 pm e
நீங்கள் சொல்றது வாஸ்த்து’ வம் தான். இதுக்கே இப்படின்னா ? விஜய ராஜெந்தர், ராஜ கண்ணப்பன், திருனாவுக்கரசர் … எஸ்.ஜே சூர்யா கூட சூர்யாக் மாத்திக்கிட்டாரமே
சம்மட்டி

premalatha Says:
March 29th, 2006 at 4:04 pm e
வாஸ்து பார்த்துக் கட்டிய மாமல்லபுரமும், அன்கோர் வாட் (Angkor Wat -ம்
அழிந்தது proves that வாஸ்து is just a belief and not a science.

Mahesh Says:
March 29th, 2006 at 4:14 pm e
ஒரு வேளை வாஸ்துவைக் கண்டுபிடித்தவர் வாஸ்தாயனராக இருப்பாரோ? just kidding )))

gilma Says:
March 29th, 2006 at 6:07 pm e
Another way to earn money for frauds … That s all the entire background.

சதயம் Says:
March 29th, 2006 at 7:38 pm e
வாஸ்துவை ஒரு Magic solution அல்லது சுகவாழ்வுக்கான தீர்வு என்று சொல்வதை விட அழகியலோடு இனனந்த ஒரு அறிவியல் தத்துவமாய் கொள்ள வேண்டுமென்பது என் கருத்து.

இந்திய வாஸ்துவுக்கு இனையாகச் சொல்லப்படும் Fengshui இந்த விடயத்தில் மிகத் தெளிவாய் சொல்லப்படுவதாய் நினைக்கிறேன்.Feng shui என்பதில் Feng காற்றையும் Shui நீரையும் குறிக்கிறது.அதாவது பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து சக்திகளிலும் காற்றும்,நீருமே நம் வாழ்க்கையை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதே அடிப்படை தத்துவம்.

மேலும் மனித வாழ்வின் விளைவுகளை அவரைச் சூழ்ந்துள்ள திட அமைப்புகளும்(கண்ணுக்குப் புலப்படும் பொருள்கள்), கண்ணுக்குப் புலப்படாத மின்காந்த சக்தி அலைகள்(Electro Magnet Waves) ஆகியவையே தீர்மானிக்கிறது என்றும், எனவே நாம் சார்ந்த சூழலை இந்த கூறுகளுக்கேற்ப சமன்படுத்துவதினால் Harmony உறுவாக்கலாம் என்கிறது.

என்னுடைய வளர்ப்பில் நான் அனுபவித்த சிலவிடயங்களும், தற்போது படித்து உணர்ந்த விடயங்களும் ஒத்துப்போவதை பல சமயங்களில் ஆச்சர்யமாய் ரசித்ததுண்டு.

1.கூரை வீட்டில் வாழ்ந்த மக்கள் தற்போதைய காங்ரீட் காடுகளில் வாழும் மக்களை விட ஆரோக்கியமாய் வாழ்ந்தனர்.காரணம் கூரை வீடுகளின் கூம்பு வடிவ கூரை அமைப்பு பிரபஞ்சத்தில் நிறைந்திருக்கும் ப்ராணா எனப்படும் உயிர் சக்தியை ஈர்த்துக்கொடுத்தது.ப்ரமிடுகளும் அதன் சக்திகளும் உங்கள் நினைவுக்கு வரலாம்.

2.தலைவாசல் முதல் பின்வாசல் ஒரே நேர்கோட்டில் அமையும் வகையிலான வீடுகள்.வீடுகளின் நடுவே அமைக்கப்பட்ட தொட்டிமுற்ற அமைப்புகள் வீடுகளுக்குள் காற்று சுழற்சியை உறுவாக்கியது.

இப்படி சொல்லிக்கொண்டே போக நிறைய இருக்கிறது….பின்னூட்டத்தின் நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன்.

செல்வன் Says:
March 29th, 2006 at 7:58 pm e
வாஸ்துன்னா என்னனு கூட சில வருஷம் முன்னாடி எனக்கு தெரியாது பார்ட்னர்.வீடு வாங்க ட்ரை பண்ணிட்டிருந்தேன்..சந்து குத்து வீடு ஒண்ணு விலைக்கு வந்துச்சு..வாங்கலாமனா வாஸ்து சரியில்லைண்ணாங்க.அதை எல்லாம் வியாபாரத்துல பாத்தா முடியுமா..விலை படியுது வாங்கறேன்னு சொன்னப்ப வேணாம் மறுபடி அதை விக்கறப்ப reseale value குறைஞ்சுடும்னு சொன்னாங்க.

வாஸ்து நம்பிக்கை இல்லாமலேயே அதுக்கப்புறம் வாஸ்து சாஸ்திரப்படி வீட்டை வாங்க வேண்டியதாப்போச்சு.

கொத்ஸ் Says:
March 29th, 2006 at 8:08 pm e
வாஸ்துவமா இது பத்தி எனக்கு தெரியாதுங்க. ஆனா சரியான சில விஷயங்கள் இருந்தாலும் அதை ஆளாளுக்கு வேணும்கிற மாதிரி இண்டர்பிரட் (interpret) பண்ணிக்கிட்டு அது மதிப்பு ஒண்ணும் இல்லாம பண்ணிட்டாங்க. இதுதான் நிஜம்.

தருமி Says:
March 29th, 2006 at 8:12 pm e
தமிழினி முத்து,
கிறித்துவக் கூட்டங்களுக்கு விளம்பரப் படுத்துவார்கள் - பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதில் பல காரணங்களில் ஒன்றாக - ‘கடன் தொல்லை தீர வாருங்கள்’- என்று விளம்பரப்படுத்தி இருப்பார்கள். அதற்கு நான் சொல்லும் பொருள் - பிரசங்கியின் கடன் தொல்ல தீர வாருங்கள் என்பதே

தருமி Says:
March 29th, 2006 at 8:28 pm e
சம்மட்டி,
நீங்க சொல்றது நம்ம அடுத்த சோதிடப் பதிவில் வருதில்லா… அங்கேயும் வந்திருங்க.

தருமி Says:
March 29th, 2006 at 10:10 pm e
பிரேமலதா,
அவைகள் எல்லாம் வாஸ்து பாத்துக் கட்டியதாகச் சொல்லுகிறீர்களா? எப்படி?

தருமி Says:
March 29th, 2006 at 10:48 pm e
மகேஷ்,
முதல் தடவையா வர்ரீங்க…வரும்போதே செம லொள்ளோடு வர்ரீங்களே. அடிக்கடி இந்த மாதிரி லொள்ளோடு வந்துகிட்டு
இருங்க…

கில்மா,
சரியான கில்பாஞ்சியா இருக்கீங்களே!

V.Subramanian Says:
March 29th, 2006 at 11:20 pm e
நான் என்னுடைய வலைத்தளத்தை (இணைய வீடு) வாஸ்து படி அமைக்கவில்லை என்று நினைக்கிறேன். அதனால் தான் அவ்வளவாக விருந்தினர் வரவில்லை.

இருக்கட்டும் ஆனால் வாஸ்து சோதிடம் என்று எந்த ஒரு கலையையும் அழிக்க வேண்டாம். இன்று நமக்கு புரியவில்லை என்பதாலோ அல்லது ஏமாற்றும் எத்தர் அதிகம் இருப்பதாலோ அதை முழுமையாய் உணரும் வரை அதை அழிக்காமல் பாதுகாப்போம்.

ஜாதகம் பற்றிய என்னுடைய கருத்துக்களையும் பாருங்கள். பின்னொரு நாள் விரிவான கட்டுரை எழுதுகிறேன்.

http://yennottam.blogspot.com/

பட்டிணத்து ராசா Says:
March 30th, 2006 at 12:20 am e
சதயம்

//கூரை வீட்டில் வாழ்ந்த மக்கள் தற்போதைய காங்ரீட் காடுகளில் வாழும் மக்களை விட ஆரோக்கியமாய் வாழ்ந்தனர்//

இது எழைகள் எல்லோரும் நல்லவர்கள் பணம் படைத்தவர்கள் எல்லோரும் வில்லன்கள் ன்னு எம்ஜியார் படத்தில வருகிற உளவியல் மாதிரி, ஆனா நிஜம் வேறு. அரோக்கியமும், சராசரி மனிதர்களோட உயிர் வாழர வருடங்களும் இரண்டுமே அன்று இருந்ததவிட இன்று அதிகரிச்ந்த்தான் இருக்கு. இன்று இருக்கிற வாகனப்புகை தொழிற்சாலைக் கழிவு இப்படி பல விடயங்கள் நம்ம காற்றை மாசுப்படித்தியும். கண்டிப்பா இந்த சுழலில் அந்த குடிசைகள் அரோக்கியத்த தராது.

வாஸ்து எழுதன காலம், சுழ்நிலை, தேவை, புரிதல்,அறிவு இப்படி பல விடயங்கள் முன்னெறியாச்சு. இன்னமும் அத அப்படியே.. வேணாங்க..

துளசி கோபால் Says:
March 30th, 2006 at 2:42 am e
கூரை வீட்டில் சந்தோஷம் நிறைய இருந்ததுக்குக் காரணம், அப்பெல்லாம் ‘தேவைகள்’ கம்மி. டி.வி கிடையாது,
அதனாலே அக்கம்பக்கத்துலெ நட்போடு இருக்க முடிஞ்சது. இப்படிச் சொல்லிக்கிட்டே போகலாம்.

அப்புறம் தருமி,

அடுப்பு மேற்கே பார்க்கணும். சமைக்கிறவங்கதான் கிழக்கே பார்க்கணும். அதிகாலையிலே எழுந்து அடுப்பங்கரைக்குப் போய்
சமைக்க போரடியா இருக்குமுல்லே. அப்ப சூரிய வெளிச்சம் பார்த்தா , தூக்கம் போய் விழிப்பு நல்லா வந்துருமில்லே?
இல்லேன்னா , தூக்கக் கலக்கத்துலே சமையலில் ஒண்ணு கிடக்க ஒண்ணு போட்டுட்டா?

சிவா Says:
March 30th, 2006 at 9:15 am e
சார்! கடைசில வந்துட்டேன். இனி தொடர்ந்து வந்துடறேன்.

//* மாற்றியதும் நிறைய மாற்றங்கள் வாழ்க்கையில். அதில் பெரிய மாற்றம் - வங்கிக் கணக்கு! ரொம்ப மெலிஞ்சு போச்சுது. **// ) சூப்பர். இன்னொரு மாற்றம் வாஸ்து சொன்னவன் வங்கி கணக்கு பெருத்து போச்சு )

சார்! வாழ்க்கைல ஜோசியம், வாஸ்து இல்லாம இருக்கிறதை வச்சி சந்தோசமா வாழ்ந்தால் தான் வாழ்க்கை. எல்லாம் இருக்குறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசை. பேராசை சார். மனுசனுக்கு நிம்மதின்னா என்ன, திருப்தின்னா என்னன்னு புரியாம போச்சு. கடவுள் மேல, தன் மேல, சுற்றத்தின் மேல நம்பிக்கை போச்சு. அதான் சார்! இப்படி அலையறானுங்க. முட்டா பசங்க )

pot"tea"kadai Says:
March 30th, 2006 at 2:36 pm e
தருமி,
எனக்கு வாஸ்து பற்றி அ,ஆ…கூடத் தெரியாது. தெரிந்து கொள்ளலாமே என்று நினைக்கையில் எவர் எழுதிய வாஸ்துவில் ஓரளவாவது செய்தி இருக்கும் என்று தெரியாததால் அதைப் படிக்கும் ஆர்வம் எழவில்லை.
ஸ்தபதியாரை சந்தித்த பொழுது கூட “என்னிடம் ஓலைகள் இருக்கிறது” என்று கூறினாரேயொழிய மருந்துக்கு கூட கண்ணில் காட்டவில்லை.

//ஃபெங் ஷுய் என்பதில் ஃபெங் காற்றையும் ஷுய் நீரையும் குறிக்கிறது.அதாவது பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து சக்திகளிலும் காற்றும்,நீருமே நம் வாழ்க்கையை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதே அடிப்படை தத்துவம்.//

காற்றும் நீரும் வாழ்க்கையை மேம்படுத்துகிறதா இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் இவை இரண்டும் உயிர் வாழ்தலுக்கு முக்கியமானது. ஆக அதை அடிப்படைத் தத்துவமாகக் கொள்வதில் தவறேதும் இல்லை. மேலும் அனைத்து மதங்களிலுமே நீர் முக்கியப் பங்காற்றுகிறது.

//மேலும் மனித வாழ்வின் விளைவுகளை அவரைச் சூழ்ந்துள்ள திட அமைப்புகளும்(கண்ணுக்குப் புலப்படும் பொருள்கள்), கண்ணுக்குப் புலப்படாத மின்காந்த சக்தி அலைகள் ஆகியவையே தீர்மானிக்கிறது என்றும், எனவே நாம் சார்ந்த சூழலை இந்த கூறுகளுக்கேற்ப சமன்படுத்துவதினால் ஹார்மொனியை உறுவாக்கலாம் என்கிறது.//

இதில் நம்பிக்கையும் இல்லை, இதில் தர்க்கம் செய்யவும் விரும்பவில்லை. ‘96 ல் சத்யபாமா பொறியியற்கல்லூரியில் VASTUTSAV நடைபெற்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாஸ்து மற்றும் கட்டிடக்கலை நிபுணர்கள் கலந்துக் கொண்டனர். அன்று மாலை மாமல்லபுரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு ஒரு வடநாட்டை சேர்ந்த வாஸ்து/கட்டிடகலை நிபுணர் ஒருவர் “Y” கவை போன்ற வடிவிலான இரும்பால் கூடிய ஒரு பொருளை இப்படியும் அப்படியும் நகர்த்தினார். ஆனால் ஒரு இடத்தில் மட்டும் அதன் செங்குத்தான பகுதி நகர்ந்து கீழே சரிந்தது. நானும் முயற்சி செய்தேன் ஆனால் ஒரு “ரியாக்க்ஷனும்” கிடையாது. “உனக்கு சரியான நிலையில் பிடிக்கத் தெரியவில்லை” என்று அதை என் கையில் இருந்து பறித்துக் கொண்டார். ஆக மின்காந்த அலைகள் வாஸ்து நிபுணர்களுக்கு மட்டுமே ஒத்து வரும்:-).

//வாஸ்து என்ற பெயரில் படுக்கை அறை கிழக்குத் திசையில் இருக்கவேண்டும். அது சரி; மாலை வெயில் விழுவதால் மேற்குப் பக்கம் உள்ள அறை இரவும்கூட உஷ்ணமாயிருக்கும். வாஸ்து என்ற பெயர் இதுக்குத் தேவையில்லை. common sense போதும்.//

அந்த “common sense” இருந்தால் இந்த வாஸ்து “nonsense” ஏன் இன்னும் இருக்கிறது?

//‘இதுக்கே சண்டைக்கு வர்ரீங்களே; வாஸ்துக்காரர் அந்த அறையில் மட்டும் electric switches-களை மட்டும் மாற்றி வைக்கச்(american style) சொல்லி, அப்படியே வைத்துள்ளேன்’ என்றான்! switches மாத்திறது கூட அந்தக் காலத்துல சொன்னவங்க சொல்லிட்டு போயிட்டாங்களா, என்ன?//

உங்க நண்பர் படிக்காமலே இருந்திருக்கலாம்!:-)

கட்டிடக்கலையின் அடிப்படை கோட்பாடுகளே symmetry, balance, proportion & aesthetics தான்.
அங்கோர்வாட் தொடங்கி எகிப்தீய பிரமீடுகள், புகழ் வாய்ந்த இஸ்லாமிய, கிறித்துவ தேவாலயங்கள் அனைத்தும் இதன் கோட்பாடுகளால் மட்டுமே அமைந்துள்ளது என்பது என் கருத்து.

பின்னாளில் கட்டிடங்கள் கட்டுவதற்கேற்ற இடங்கள் குறுகியதாலும்,கட்டுமானப் பொருள்களும் மாறியதாலும், தொழில் நுட்பத்தின் வளர்ச்சியாலும் “functional purpose” க்காக வேண்டி “symmetry”யில் சமரசம் செய்ய வேண்டியதாயிற்று.

Geetha Sambasivam Says:
March 30th, 2006 at 3:50 pm e
Thiru Sadhayam cholli iruppathuvum en karuththum oththu povathal virivaga ezhthavillai. Thiru Subramaniyam koori ullathai naan amothikkiren. Ithu oruththar oruththarukku thani thaniyaga than amaiyum. Anaal ungalai ponra murpokkuvathikal namba matteerkal. Now-a-days fashion is Do not Believe in God. Do not believe the country’s valid culture and heritage. This is the slogan for all the leftists.

Mahesh Says:
March 30th, 2006 at 5:08 pm e
என் மாமாவும், பக்கத்து வீட்டுக்காரரும் வாஸ்துக்குப் பண்ணிய சேவைகளைக் காண
http://www.mahendranmahesh.blogspot.com/



KRISHANRAJ.S Says:
March 31st, 2006 at 1:16 am e
DEAR THARUMI

I USE VAASTU BRAND JEANS.,

THE ZIPPERS ARE IN THE JALA MOOLAI
THE POCKETS IN THE DANA MOOLAI
THERE IS A HOLE IN THE VAYU MOOLAI.

THE TAILOR MISUNDERSTOOD THE LEGS SHOULD BE IN THE OPPOSITE DIRECTIONS.
MADE ONE LEG GOING UPPER SIDE TO THE CHEST AND ANOTHER LEG NORMAL.

AGAINT MADE TO ALTER ACCORDING TO VAASTU ,
BOTH THE LEG PIECES DOWN.

தருமி Says:
March 31st, 2006 at 4:51 pm e
V.Subramanian,
“… அதை அழிக்காமல் பாதுகாப்போம். : அப்படியென்றால் என்ன செய்வது?
அழிக்காமல் பாதுகாப்பது என்றால், அதனை முழுமையாய் உணரும்வரை நாம் வாஸ்துவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றுதானே பொருள்?

தருமி Says:
March 31st, 2006 at 5:02 pm e
சதயம்,
உங்களுக்கு பட்டணத்து ராசா பதில் சொல்லிட்டாரு. அவருக்கு அதற்காக நன்றி

தருமி Says:
March 31st, 2006 at 11:00 pm e
partnerசெல்வன்,
அதாவது வண்டி வாங்கும்போது 8-ம் எண் உடைய வண்டி வாங்கக்கூடாது என்பாங்களே அது மாதிரி.

தருமி Says:
March 31st, 2006 at 11:02 pm e
கொத்ஸ்,
“ஆனா சரியான சில விஷயங்கள் இருந்தாலும்…”// - அந்த நல்ல / சரியான் விஷயங்களைத்தான் நான் common sense என்ற category-ல் கொண்டு வருகிறேன். மற்றவை…?

தருமி Says:
March 31st, 2006 at 11:05 pm e
துளசி,
உங்கவிளக்கம் நல்லாத்தான் இருக்கு

அதோட “அடுப்பு மேற்கே பார்க்கணும். சமைக்கிறவங்கதான் கிழக்கே பார்க்கணும்.” - இதில அடுப்பு எங்கேயும் பாக்கிறதில்லை; சமைக்கிறவங்க கிழக்கே பார்க்கக்கூடாது; அடுப்ப பார்க்கணும்

தருமி Says:
March 31st, 2006 at 11:10 pm e
வாங்க சிவா,
வந்திட்டீங்க ஒரு வழியா. ஆனா, “இனி தொடர்ந்து வந்துடறேன்..” - பாவங்க நீங்க; இப்படி ஒரு தீர்மானத்துக்கு வந்திட்டீங்களே

“கடவுள் மேல, தன் மேல, சுற்றத்தின் மேல நம்பிக்கை போச்சு” // - நீங்க சொன்னதில நடுவில உள்ளத மட்டுமே நம்பினால் போதும் என்றுதான் நான் நினைக்கிறேன்.

தருமி Says:
March 31st, 2006 at 11:28 pm e
Geetha Sambasivam,
சதயம், சுப்ரமணியன் இருவருக்கும் கூறிய பதில்கள் அப்படியானால் உங்களுக்கும்தான்.
“ungalai ponra murpokkuvathikal namba matteerkal.” - நன்றி for the compliment அறிவுஜீவி அப்டின்னு சொல்லாம விட்டுட்டீங்க…
“Now-a-days fashion is Do not Believe in God.” - இப்படி சொல்றதுதான் இப்போ ஃபாஷனாகிப் போச்சுன்னு நினைக்கிறேன். நண்பர் ஒருவரும் இதையே கூறினார். இதெல்லாம் பார்த்தால் எனக்குக் கோபம் எதுவும் வருவதேயில்லை, தெரியுமா? கொஞ்சம் வேடிக்கையாக இருக்கும்.அவ்வளவே.
Do not believe the country’s valid culture and heritage. This is the slogan for all the leftists. இல்லீங்க ma’am; i am NOT a leftist. பாவம் அவங்க நல்ல மனுஷங்க; அவங்கள போட்டு இங்க எதுக்கு இழுத்துக்கிட்டு…இல்லீங்களா?

Manasatchi Says:
March 31st, 2006 at 11:29 pm e
தருமி. அசத்துங்க.

daya Says:
March 31st, 2006 at 11:31 pm e
வாஸ்து உண்மையிலேயே ஒரு பொது அறிவு தாங்க. இளம் வெயில் நம் உடம்பில் படுவது எவ்வளவு நல்லதுன்னு அமெரிக்க மருத்துவர்கள் சொன்னா தான் நாம ஏத்துக்கோவோம். அந்த அளவுக்கு பொது அறிவும் பகுத்தறிவும் நமக்கு.

வாஸ்துவும் காற்று சுலபமாக வரனும் போகனும்ன்னு தான் வாசல் இருந்து பார்த்தா கொல்லை வாசல் தெரியனனும்னு சொல்கிறது. இன்னைக்கு அது சாத்தியமா. காலத்துக்கு ஏத்த மாதிரி ஒரு ஜன்னலை வச்சா அது சரியாகிறது.

அந்த அறிவை ஒரு கைடு மாதிரி உபயோகப்படுத்தினா சரியா வரும்.

நம்ம மக்களுக்கு கஷ்டம் வரும்போது இல்ல இன்னும் போராசையினாலே அல்லது ஒரு பெருமைக்காக வெட்டியா செய்யும்போது எதற்கும் அர்த்தமே இல்லாம போகிறது.

அதுவே வழக்கம் போல அவலை நினைச்சு உரலை இடிக்கிற கதையாக பகுத்தறிவு பேசனும்னா எதையும் தெளிவா புரிஞ்சுக்காம முயற்சியும் செய்யாம மனம் போன போக்கில பேசறவங்களுக்கு வசதியாக போகிறது.

premalatha Says:
March 31st, 2006 at 11:45 pm e
செம ஸ்மிலீலாம் வைச்சிருக்கீங்க. evil, twisted, idea… super. (இதுக்கு ஏதும் இல்லயா? :super: னு? )

ஜீவா Says:
April 1st, 2006 at 1:31 pm e
வாஸ்து என்ற வார்த்தையில் சமீப காலங்களாக புழங்க்குறது. ஆனால் மனையடி சாத்திரம் என்ற பெயரில் பல நூறாண்டுகளாக நம்நாட்டில் இருக்கிறது என்று என் கணிப்பு. என் வீட்டில் பல நூறு ஆண்டுகட்கு முட்பட்ட ஓலைச்சுவடியும் இருந்தது.

காகபுசுண்டர், அகத்தியர் என பலரும் எழுதியதாக பல புத்தகங்களும் இருந்தது.

அன்புடன்
ஜீவா

பாரதி Says:
April 1st, 2006 at 1:33 pm e
தருமி சார்,

சிவாவைத் தொடர்ந்து நானும்.

எனக்கு மிக நெருக்கமான நண்பர் வீட்டிற்குள் ஒரு நாள் இரவு திருடன் வந்துவிட, மனம் கலங்கிப் போனவரை வாஸ்து குறை என்று சொல்லி உசுப்பி விட்டனர் அக்கம் பக்கத்தினர்.

முன் வாசல் கதவு இருக்கும் இடம் சரியில்லை அதனால் தான் இப்படியெல்லாம் நிகழ்கிறது. அதை இடமாற்றம் செய்தால் பல்கிப் பெருகி பல காலம் வாழ்வீர்கள் என்றார் வாஸ்து நிபுணர்.

நண்பரும் செலவு செய்து வாஸ்து புருஷர் மனத்தைக் குளிர வைத்தார்.

இது நடந்த அடுத்த ஒரு வருடத்துக்குள் அவருடைய மனைவி நுரையீரல் புற்று நோயினால் பரிதாபமாக இறந்து போனார்.

தருமி Says:
April 1st, 2006 at 11:50 pm e
premalatha,
இந்தாங்க உங்களுக்காகவே இந்த ஸ்பெஷல் பின்னூட்டம்:
-இது எப்படி இருக்கு? ஒரு ரகசியம் உங்க கிட்ட மட்டும் சொல்லட்டா? இந்த ஸ்மைலிகள் எல்லாமே மதி உபயம்..வேற யாருட்டயும் சொல்ல வேண்டாம்; சரியா

தருமி Says:
April 1st, 2006 at 11:53 pm e
மகேஷ்,
கல்யாணமெல்லாம் ஆகாத பிள்ளை. நீங்கள்ளாம் இப்போ மாமாமார்களைக் கிண்டல் பண்ணக்கூடாது; தெரியுதா

தருமி Says:
April 1st, 2006 at 11:56 pm e
தயா,
“அதுவே வழக்கம் போல அவலை நினைச்சு உரலை இடிக்கிற கதையாக பகுத்தறிவு பேசனும்னா எதையும் தெளிவா புரிஞ்சுக்காம முயற்சியும் செய்யாம மனம் போன போக்கில பேசறவங்களுக்கு வசதியாக போகிறது.” // - செம உள்குத்தா இருக்கு

மனசாட்சி,
மிக்க நன்றி. இப்ப என்ன சொல்றீங்க மொதல்ல நீங்க அசந்துட்டீங்களா இல்லியா

தருமி Says:
April 2nd, 2006 at 12:00 am e
கிருஷ்ணராஜ்,
“AGAINT MADE TO ALTER ACCORDING TO VAASTU ,
BOTH THE LEG PIECES DOWN..”// தப்பு பண்ணீட்டிங்களே…இதுக்குத்தான் நம்மளமாதிரி சரியான வாஸ்து எக்ஸ்பெர்ட்டிடம் முதலிலேயே வரணும் அப்டிங்கிறது. யார் சொன்னா இது சரின்னு..முதல்ல இருந்த மாதிரி மறுபடி ஆல்டர் பண்ணிட்டு நடந்து பாருங்க..அப்ப பாருங்க …எங்கேயோ போயிருவீங்க

தருமி Says:
April 2nd, 2006 at 12:11 am e
பொட்டீக்ஸ்,
உங்களுக்கு மட்டும் கடைசியா பின்னூட்டம் இடலாமா, இல்லை உங்கள் பின்னூட்டத்தை cut & paste பண்ணி பதிவின் கடைசிப் பகுதியாகச் சேர்க்கலாமா (அப்படியானால் பதிவு பெரும் முக்கியத்துவத்தை உங்கள் பின்னூட்டமும் பெருமே என்ற எண்ணம்)என்று கொஞ்சம் குழப்பம்.

தெரியாதவர்களும் தெரிந்து கொள்வததற்காக: ‘பொட்டீக்கடைக்காரர்’கட்டிடக்கலையில் முதுகலைக் கல்வியை ஆஸ்திரேலியாவில் இப்போது படித்து வருகிறவர். எதற்காக இதை இங்குக் குறிப்பிடுகிறேனென்றால் அவர் தரும் செய்திகள் - from the mouth of the horse itself என்று சொல்வது போல - ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்றுவரும் ஒருவரின் வாஸ்து பற்றிய கூற்றுக்கு முக்கியத்துவமும், சிறப்பிடமும் தரவேண்டுமென்பதற்காகவே.

ஆனாலும் பொட்டீக், நீங்கள் இங்கு வந்து உங்கள் தொழிலை ஆரம்பிக்கும்போது வாஸ்து சாஸ்திரம் உங்களுக்கு தெரிந்து, அதைப் பின்பற்றிதானே உங்கள் கட்டிடங்களை வடிவமைக்க வேண்டியிருக்கும்?

pot"tea"kadai Says:
April 2nd, 2006 at 5:55 pm e
I have started reading a book on ANCIENT CITIES, SACRED SKIES - Cosmic Geometries and City Planning in Ancient India. It’s really helpful and the book wasn’t available in Sydney University and i had borrowed it from University of Newcastle. It was really helpful to understand the architectural principles of ancient INDIA. It never explained much about the residential plans/designs as Vastu Sastra was basically dealt with City Planning. It always dealt with grids which means proportions. So present day VASTU in residential buildings are **********(add anything abusive if u want) fake theories.

Those who believe in it are people who wants to blind themselves eventhough they could see!

pot"tea"kadai Says:
April 2nd, 2006 at 6:01 pm e
BTW Tharumi,
I had already practised my own for a year and worked with few architects for 4-5 years. I reckon I had good understanding about the people’s mentality and I never tried to market my designs in the name of VASTU. I used to tell them the facts practically and thats how i work.

So, Practicing anywhere in INDIA wouldnt be a great problem for me!

For previous post i can give real examples if you want but might take time as i have to scan few drawings!

premalatha Says:
April 4th, 2006 at 12:08 am e

premalatha Says:
April 4th, 2006 at 12:09 am e
http://www.hallofmaat.com/smilie.html

தருமி Says:
April 4th, 2006 at 2:48 pm e
பொட்டீக்ஸ்,
” i can give real examples ..”// that would be greatly appreciated.

பிரேமலதா,அவைகளை எப்படி நம்ம ‘வீட்ல′ இறக்குவது என்றும் சொல்லிடுங்களேன், please!

pot"tea"kadai Says:
May 16th, 2006 at 4:24 pm e
tharumi,

Here is an article by Mano, i was happened to be his student for a year. His article published in Hindu long bck.I just came across this today…

click here

dharumi Says:
May 17th, 2006 at 3:31 pm e
potteeks,
thanks for the reference. i would like to quote one of his statements here: “Science claims neither absolute knowledge nor infallibility. Anything which does do so is not to be trusted as a basis for living.”

his question on having the kithcen according to vasthu sastra in chennai is so pointed. but i wonder whether any amount of such valid questions can wake the believers at all to reality and to eral science.

No comments:

Post a Comment