Friday, July 11, 2008

264 (132).. ஜோஸ்யம்….6

நாலு பேத்துக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை.

மோகன் கந்தசாமியின் சும்மா ட்டமாஸு பதிவிலும். வாத்தியாரின் க்ளாஸ்ரூம் பதிவிலும் நிழல்கள் ரவி .. ச்சீ .. செந்தழல் ரவி கொழுத்திப் போட்ட ஒத்தைவெடி சரவெடியா வெடிக்கிற இந்த நேரத்தில் என் பழைய பதிவைத் தூசிதட்டி மீள்பதிவா போட்டால் மேலும் கொஞ்சம் கேள்விகளும் பதில்களும் நாலா பக்கமும் எழும்; நாலு விஷயங்களும் புரியும் என்ற நினைப்பில் இதை மீண்டுமிடுகிறேன். மொத்தம் 13 பதிவுகள் தனித்தனியாக நான் போட்டிருந்தாலும் இப்பதிவு இந்த நம்பிக்கை சார்ந்த விஷயங்களை ஒட்டு மொத்தமாகக் கேள்வி கேட்பதால் இப்பதிவு மட்டும் இப்போது மீள்பதிவாகிறது.


originally posted on 20th feb '06





இதையெல்லாம் கூட வாஸ்து பார்த்துதான் கட்டியிருப்பாங்களோ……..?”

ஜோதிடம் தொடர் -


மற்றைய பதிவுகள்:


1*நான் ஜோஸ்யம் பார்க்கப் போனேன்.
2* ,,,
3* ,,,
4*தேடி வந்த ஜோஸ்யர்.
5*நாடி ஜோதிடம்.
6*ஜோஸ்யம்
7*சாஸ்திரம்.
8*நேரம் .. நாள் ..
9*ராசி பலன்
10*வாஸ்து
11*எண் கணிதம்.
12* ஜாதகம்.
13*முடிவுரை.



முதலிலேயே ஓர் ஒப்புதல் வாக்குமூலத்துடன் இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன். இதுவரை எழுதிய ஐந்து ஜோஸ்யப் பதிவுகளில் எனக்கு அந்த விஷயத்தில் உள்ள தொடர்பை எழுதியுள்ளேன். ஜோஸ்யம், ஜாதகம், எண் கணிதம், வாஸ்து, இது போன்ற விஷயங்களில் எனக்கு சிறிது கூட நம்பிக்கை கிடையாது. ஆயினும் ஒன்றை எதிர்ப்பதற்கு முன்பு அவைகளைப் பற்றிய விஷய ஞானம் தேவை என்பதை ஒப்புக்கொள்கிறேன். மதங்களை எதிர்ப்பதற்கு முன் அவைகளைப் பற்றிக் கொஞ்சமாவது என் அறிவை வளர்த்துக் கொண்டேன். ஆனால் இந்த விஷயங்களில் நம்பிக்கை இல்லை; அவைகளைப் பற்றிய அறிவும் கிடையாது. ஆனால் ஒன்று தெரியும். இதில் இதுதான் என்று அறுதியிட்டு ஏதும் கிடையாது; எல்லாமே கையாள்வோரின் வசதிக்கும், அறிவுக்கும் அல்லது அறிவற்றமைக்கும் ஒத்திருக்கும் என்பது என் முடிவாதலால் - சுற்றி நடப்பதை வைத்து இந்தப் புள்ளிக்கு வரவேண்டியதாயுள்ளது - இந்த அறிவை வளர்த்துக்கொள்ள முயலுவதாகவுமில்லை. ஆகவே இப்பதிவுகளில் நான் செய்யக்கூடிய factual mistakes ஏதாவது இருப்பின், அவைகளைப் பற்றிய அறிவுறுத்தலை திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

ஜோஸ்யமும், ஜாதகமும் பல ஆண்டுகளாக நம் வாழ்க்கையோடு இணைந்தே இருந்தாலும், கடந்த 20 ஆண்டுகளில் அவைகளின் வேகமும், தாக்கமும் மிக அதிகமாகத் தென்படுகின்றன. அதுவும் வேதனைக்குரிய விஷயமாக எனக்குப் படுவது: என் போன்ற வயசான ‘கேஸ்’கள் இந்த விஷயங்களில் ஆர்வம் காண்பித்தாலாவது பரவாயில்லை எனக் கொள்ளலாம்; ஏதோ போற காலத்திலயாவது, தன்னால் இனி ஏதும் பிரமாதமாக சாதிக்க முடியாது என்ற சுய நம்பிக்கை இழந்த காலத்தில், ஒரு பற்றுக்கோடு போல் இவைகள் மேல் நம்பிக்கை வைக்கிறார்கள் எனலாம். அதோடு வாழ்க்கையின் இப்பகுதியில் பிரச்சனைகளும் அதிகமாக இருக்கக்கூடிய நேரம்; ஏதாவது ஒரு கொழுகொம்பு கிடைக்காதா என்ற நப்பாசைகள் இருக்கும். அந்த கிரகம் சரியான ‘வீட்டுக்குள்’ வந்து உட்கார்ந்து விடாதா, இந்தக் ‘கல்’ என் பாரத்தை நீக்கி விடாதா, பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டின் முன்பக்கத்தையே இடித்து மாற்றினாலாவது பிள்ளைகள் வாழ்வு சிறக்காதா என்பது போன்ற ஆதங்கங்கள் இருக்கலாம். ஆனால், இப்போதெல்லாம் மிக அதிகமான இளைஞர்களே இந்த ‘நோயில்’ விழுந்து, கவலைக்குரிய நிலையில் நம் சமுதாயத்தையே நிறுத்திவிட்டார்கள். தன்னம்பிக்கை இல்லாத போது குறி, நல்ல நாள், நல்ல பெயர், ராசிக்கல் என்று மனிதமனம் போகும். வாழ்க்கைக்குள் நுழையும் முன்பே இளைஞர்கள் இதில் காலை விட்டால், அவர்கள் தன்னம்பிக்கை எங்கே போயிற்று? இப்போதே இப்படி என்றால் நாடி நரம்பு தளரும் வயதில் இவர்கள் எதையெல்லாம் நம்பி எதனெதன் பின்னே போவார்கள்?

பொதுவாகவே இந்த விஷயங்கள் ‘மதங்கள்’ மாதிரிதான்; ஊட்டப்பட்டு, செரிமானம்கூட இல்லாமல் ‘கட்டி’யாக மனசுக்குள் தங்கிவிடும். நீங்கள் என்ன கரைத்தாலும், எவ்வளவு காரண காரியங்கள், சான்றுகள் என்று என்ன கொடுத்தாலும் அவைகள் எளிதில் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. இந்த விஷங்களும் அப்படித்தான் இருக்கும். ‘நம்பிக்கை’ சார்ந்த இது போன்றவைகளில் simple logic, rationality, scientific approach எனபவை எல்லாமே வெட்டியாகக் கொடுக்கப்படும் பலியாடுகள் என்று தெரியும். இருப்பினும்…ஒரு முயற்சி…அவ்வளவே.

What is science என்ற கேள்விக்கு collection of facts based on provability and reproducibilityஎன்பதே பதில் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. ஒரு குறிப்பிட்ட அளவு வேதியப் பொருள் (A)இன்னொரு குறிப்பிட்ட அளவுள்ள வேதியப் பொருள் (B) இரண்டும் சேர்ந்து புதிய பொருள் ஒன்று (C) உண்டாகிறதென்றால் அது வட துருவத்திலும், தென் துருவத்திலும், ராமசாமிக்கும் ராகுலுக்கும் ஒரே மாதிரிதான் இருக்கும். அதில் இரண்டாவது கருத்துக்கு இடமேயில்லை. அதுதான் விஞ்ஞானம்..science.. எப்போது ஒரே விஷயத்தில் இரண்டாவது கருத்துக்கும் இடமிருக்கிறதோ அங்கே அது hypothesis-ஆக - ஒரு கருத்தாக மட்டுமே - மாறி விடுகிறது. அது சரியாகவும் இருக்கலாம்; தவறாகவும் இருக்கலாம - every coin has got two sides என்பது போல.


நான் சின்னவனாக இருந்தபோது எல்லா கிறித்துவ மாணவர்கள் போல நானும் catechism - மறைக் கல்வி - வகுப்புகளுக்குத் தவறாமல் போயிருக்கிறேன். அந்த வகுப்புகளில் Creation Vs Evolution போதிக்கப்படும். படைத்தலைப் பற்றிய சார்புள்ள கருத்துக்களே சொல்லிக் கொடுக்கப்படும். சரி..மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்றே வைத்துக் கொண்டால், அந்த குரங்கு எங்கிருந்து வந்தது..சரி..அப்படியே போய் கடைசியில் அமீபாவிலிருந்து வந்தது என்று வைத்துக் கொள்வோம்..அப்போ, அந்த அமீபா எங்கிருந்து வந்தது.. தெரியாதல்லவா… அங்கேதான் இருக்கிறது ‘கடவுள்’…இப்படித்தான் போகும் அந்த வகுப்புகளில் வாதங்கள். நன்றாக இருந்தன இந்த விவாதங்கள் - அந்த வயதில்!

பின்னாளில் முதுகலை வகுப்புகளில் இதே Creation Vs Evolution பற்றிப் பேச வேண்டியிருந்தது. முதலில் படைப்பு பற்றிச் சொல்லியாகிவிட்டது. பின்பு, பரிணாமம் பற்றிப் பேச வேண்டும். நானோ உயிரினங்களில் உள்ள ‘நம்ப முடியாத, பதில்கள் தெரியாத விஷயங்கள் பலவற்றைப் பற்றி பேசினேன். ஒரு mitochondria-வின் மிக மிக நுண்ணிய அமைப்பு, செயல் திறன் , ஒரு மலரின் அழகு, அதன் அல்லி-புல்லிவட்ட அமைப்பின் நேர்த்தி, எண்ணிக்கையிலடங்கா கோள்கள், அவைகளின் ஒழுங்கு முறையான சுற்றுக்கள் - ஆச்சரியப் பட வைக்கும் இந்த நேர்த்தியானவை எல்லாம் தானாக, ‘கடவுள்’ என்ற எவ்வித supreme power இல்லாமல் வருவதற்குச் சாத்தியக் கூறுகள் ஏதும் இருக்க முடியுமா என்ற என்னை நானே கேட்டுக் கொண்டேன் என்று சொல்லி ஒரு pause கொடுத்தேன். அந்த வகுப்பில் கடவுள் மேல் மிக நம்பிக்கைகொண்ட மாணவர்கள் ( முக்கியமாக மாணவிகள்) அதிகம். அவர்களுக்கு என் ‘மன மாற்றம்’ மிகவும் திருப்தியாயிருந்தது அவர்கள் முகங்களில் நன்கு தெரிந்தது. ‘மனுஷன் திருந்திட்டான்’ என்று அவர்கள் நினைக்க ஆரம்பிக்கும்போது, எனக்கு பிரமிப்பையூட்டும் இன்னொரு விஷயத்தைச் சொன்னேன்.

அது உங்களில் பலருக்கும் ஒரு ‘ஜுஜுபி’யான காரியமாக இருக்கும். எனக்கு அன்று மட்டுமல்ல, இன்றுவரை வியப்பான விஷயங்களில் இதுவும் ஒன்று. 100 பக்கம் தட்டச்சி உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு விஷயம் இருக்குதென்று வைத்துக் கொள்வோம். அதை ஒரு floppy-ல் (CD எல்லாம் அப்போ எனக்குப் பரிச்சயமில்லா பெரிய விஷயம்) ஒரு icon-ஐ ‘இழுத்துப்’ போடுவதன் மூலம் வந்துவிடுகிறது. நான் அதை எடுத்து என் கணினியில் போட்டு மறுபடி ஒரு தடவை ஒரு icon-ஐ ‘இழுத்துப்’ போடுவதன் மூலம் என் கணினிக்கு வந்துவிடுகிறது. இது எனக்கு (இன்றுவரையும்) மிக ஆச்சரியமாக இருக்கிறது. நம்பவே முடியாத அளவு பிரமிப்பாக இருக்கிறது. ஆனால் இந்த பிரமிப்புக்குப் பின்னால் சரியான ஒரு விளக்கம் உண்டு. பிரச்சனை என்னவென்றால், விளக்கம் எனக்குத் தெரியாது; புரிந்துகொள்ளக் கூட அடிப்படை விவரம் தெரியாது. நாம் எப்படி இது முடியும் என்று பிரமிப்போடு கேட்கும் கேள்விகளுக்கு விடை நமக்குத் தெரியாமல் இருக்கலாம்; ஆனால் பதிலே இருக்க முடியாது என்று நினைப்பது அறிவுடைமையாகாது. நாம் அதிசயப்படும் அளவுக்குச் சில விஷயங்கள் இருப்பதாலேயே அவைகள் கட்டாயம் ஓர் அதிசய அதிசக்தியால் தான் வழிநடத்தப் படவேண்டும் என்பதில்லை என்றேன்.

இந்த ஜோதிட சமாச்சாரங்களை நம்புவோர்கள் பலரும் ஒரே கருத்தைச் சொல்லுவதுண்டு: ஜோதிடம் ஒரு விஞ்ஞானம் தான்; அது ஒரு கணித முறையில் கணக்கிடப்படும் துறை. பிரச்சனை என்னவென்றால், சிலர் அதைத் தவறாகக் கணக்கிடுவதாலேயே தவறுகள் நடந்து விடுகின்றன என்பதே அது. அவை ‘கணக்கு’ என்றால் அதில் தவறேதும் நடக்க முடியாது; விதி முறைகள், வழி முறைகள் எல்லாம் ஒரு ஒழுங்கில் இருந்தால்தானே அது ஒரு கணக்காகும்; விஞ்ஞானமாகும்? எனக்கு ஒரு வகைக் கணக்கு; உனக்கு ஒரு வகைக்கணக்கு என்றால் அது கணக்கே அல்லவே.

இன்னொன்று: விஞ்ஞான சோதனைகளில் ‘control’ என்று ஒன்று இருக்கும். ஒரு guninea pig வைத்து சோதனை நடக்கிறதென்றால் இரு வகை சோதனைப் பிராணிகளை வைத்து சோதனை செய்வதே வழக்கம். ஒரு மருந்தை ஊசிமூலம் ஏற்றி சோதனை நடக்கிறதென்று கொள்வோம். சோதனைப் பிராணிகளுக்கு - experimental group - ஊசிமூலம் அந்த மருந்து ஏற்றப்படும்; இன்னும் சில பிராணிகளுக்கு - control group - மருந்தில்லாமல் வெறும் ஊசி (placebo or sham injection) போடுவார்கள். இந்த இரண்டாவது பிராணிகள் control group ஆக இருக்கும். இது எல்லா விஞ்ஞான சோதனைகளில் மேற்கொள்ளப்படும் முறை.

வாஸ்து, ராசிக்கல், ஜாதகம் இந்த விஷயங்களிலும் (ஏன், மதநம்பிக்கைகளில் கூட) இது போல கண்ட்ரோல் வைத்து சில சோதனைகள் செய்ய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இது செயல்முறைக்கு ஒத்துவராது; முடியாது என்பதாலேயே இதை வைத்து ‘வியாபாரம்’ செய்பவர்களுக்கு நல்லதாகப் போய்விட்டது; நம்புவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. வாஸ்து ‘விற்பன்னர்கள்’ இருவரிடம் ஒரே வீட்டைப் பற்றிக் கேளுங்கள். Put two questions to three teachers and they will come with four answers என்பார்கள். அதிகம் வேண்டாம் ; ஒரே ஒரு கேள்வியை ‘’வாஸ்தர்கள்’ இரண்டு பேரிடம் மூன்று முறை கேளுங்கள்…எத்தனை பதில்கள் வருமோ?

ஆனால் ஒன்று செய்யலாம். ஒரே ஜாதகத்தை சில சோதிட மேதைகளிடம் கொடுத்துக் கணிக்கச் சொல்லலாம். சோதிடம் விஞ்ஞானமாக இருந்தால் கணிப்புகள் எல்லாமே ஒரேமாதிரி இருந்தாக வேண்டும். நடைமுறையில் நான் கேள்விப்பட்ட, பார்த்த வரையில் இப்படி இருப்பதேயில்லா. ஆளாளுக்கு ஒரு பலன் என்பதே நடப்பு.

ஜாதகங்களை எடுத்துக் கொண்டால், கணிசமான இந்துக்கள் ஜாதகம் பார்த்துக் கல்யாணங்கள் நடத்த, கிறித்துவர்கள், இஸ்லாமியர்களிடம் இந்த வழக்கம் கிடையாது. நடந்து முடிந்த திருமணங்களில் நல்லது கெட்டது எல்லாமே இந்த இருவகைத் திருமண வாழ்க்கைகளிலும் இருக்கின்றன. ஜாதகம் பார்த்து திருமணம் பண்ணிக்கொண்ட தம்பதிகளின் வாழ்க்கை ‘ஒன்பதாவது மேகத்திலும்’, மற்றவர்கள் வாழ்க்கை ‘ஏழாவது நரகத்திலுமா’ இருக்கிறது. நல்லது கெட்டது என்பது வாழ்க்கையோடு இயல்பாய் இருக்கும் காரியங்கள். இதற்கு நாளென்ன செய்யும்; கோளென்ன செய்யும்; பாவம், அவைகளை விட்டு விடுவோமே!

அடுத்து: ஒவ்வொரு வித நம்பிக்கைகளின் மேல் எனக்குள்ள சந்தேகங்கள், கேள்விகள்….இவைகளைத் தனித்தனிப் பதிவுகளாக - சின்னச் சின்னப் பதிவுகளாக இருப்பினும் - பதிவேற்ற ஆசை…..







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Feb 20 2006 02:04 pm | சமூகம் | | edit this
14 Responses
suresh - penathal Says:
February 20th, 2006 at 2:24 pm e
தருமி சார், உங்க ஜாதகத்தைப் பார்த்தேன்.

ஏழாம் வீட்டுலே சுக்கிரனும், 23ஆம் வீட்டுலே செவ்வாயும் உக்ரப்பார்வை பார்க்கறதாலே இந்த ஜாதகம் ஜோசியம்லே எல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இருக்காதுன்னு கணக்கு சொல்லுது.

நீங்க உங்க டெம்பிளேட்டுலெ பேக்க்ரவுண்டா வெளிர் பச்சை குடுத்தா இந்த நிலைமை மாறும்.

Geetha Sambasivam Says:
February 20th, 2006 at 3:59 pm e
tamil panjangathil ulla surya grahanam and chandra grahanam patriya kurippukal kalam kalamaga kuripidapattu varukirathu.Atharku ungal vignanan ennaa pathil solkirathu?:???:

கோபி Says:
February 20th, 2006 at 4:08 pm e
//இந்த விஷயங்களில் நம்பிக்கை இல்லை; அவைகளைப் பற்றிய அறிவும் கிடையாது.//

சோதிடம் குறித்து மேற்கொண்டு அறிய வராஹமிஹிரர் எழுதிய “ப்ருஹத் சம்ஹிதா” படிக்கலாம். இதன் மூல பதிப்பு கிடைப்பது அரிது. சிலர் எழுதிய விளக்க உரையுடன் கூடிய ஆங்கிலப் பதிப்புகள் பெங்களூரிலும் சென்னையிலும் பெரிய புத்தகக் கடைகளில் கிடைக்கும்.

//அவை ‘கணக்கு’ என்றால் அதில் தவறேதும் நடக்க முடியாது; விதி முறைகள், வழி முறைகள் எல்லாம் ஒரு ஒழுங்கில் இருந்தால்தானே அது ஒரு கணக்காகும்;//

ஜாதகம் கணிக்கப்படுவது கணக்கின் அடிப்படையில்தான். பிறந்த தேதி, நேரம் இடம் ஆகியவற்றை எத்தனை சோதிடர்களிடம் கொடுத்தாலும் ஜாதகம் ஒன்றாகத்தான் கணித்துத் தருவர்.(கணிக்கப் பயன்படுத்திய பஞ்சாங்கம் திருக்கணிதப் பஞ்சாங்கமா அல்லது சுத்தவாக்கியப் பஞ்சாங்கமா என்பதைப் பொறுத்து சிறிய அளவிலான மாற்றங்கள் இருக்கும்)

ஜாதகத்தின் அடிப்படையிலான பலன்கள், சொல்லுகின்ற சோதிடர்களின் தரத்தையும் தேவையையும், கேட்கின்றவர்களின் நிலையையும் பொறுத்து அமைகிறது.

எனது புரிதலில்:
ஜாதகம் - கணக்கு
பலன்கள் - நிகழ்தகவு (Probability)

கோபி Says:
February 21st, 2006 at 11:29 am e
//ஏழாம் வீட்டுலே சுக்கிரனும், 23ஆம் வீட்டுலே செவ்வாயும் உக்ரப்பார்வை பார்க்கறதாலே //

:-)

உண்மையில் ஏழாமிடம் களத்திர ஸ்தானம் எனப்படும். திருமணம், வாழ்க்கைத் துணையைப் பற்றி அறிய உதவும்.

பக்கத்துல இருக்கிற எட்டாமிடம் எதிரி, மரணம், இவை பற்றி அறிய உதவும் (அஷ்டம ஸ்தானம் அல்லது சத்ரு ஸ்தானம் எனவும் சொல்வர்)

:-)

23ஆம் வீடு என்ற ஒன்று கிடையாது(12 வீடுகள்தான்).

உக்ரம் (அல்லது வக்ரம்) அடைவது என்பது ஒரு கிரகம் தன் வழக்கமான சுற்றும் திசைக்கு எதிராக சுழல்வது. வானவியலில் ஒரு கிரகம் சுற்றும் கால அளவிற்கும் சோதிடத்தில் அந்த கிரகம் சுற்றும் கால அளவிற்கும் உள்ள வேறுபாடு இந்த வக்ரகதி காலத்துக்கு ஏற குறைய சமமாய் இருக்கும்.

தருமி Says:
February 21st, 2006 at 4:26 pm e
சுரேஷ்,
எதுக்கும் இன்னும் இரண்டு சோதிடர்களைப் பாத்து கேட்டுட்டு (முக்கா முக்கா மூணு தடவை ) அதுக்குப் பிறகு கலர் மாத்தலாமா, இல்ல வேற ஏதாவது பரிகாரம் இருக்கான்னு பார்க்கணும்..

தருமி Says:
February 21st, 2006 at 4:32 pm e
Geetha Sambasivam,
aren’t you confusing astronomy with astrology?

Atharku ungal vignanan ennaa pathil solkirathu?:???: i thought it is ‘OUR vignanam’

கோபி,
“இந்த விஷயங்களில் நம்பிக்கை இல்லை; அவைகளைப் பற்றிய அறிவும் கிடையாது”// இதோடு ‘அந்த அறிவுத் தேடலிலும் ஆர்வமில்லை’ என்று சொன்னதாக வைத்துக்கொள்ளுங்களேன்.
உங்களைப் போன்றோர் -அந்த நூல்களை வாசித்தவர்கள் - சொன்னால் கேட்டுக் கொண்டால் போயிற்று.

தருமி Says:
February 22nd, 2006 at 1:46 pm e
கோபி,
அம்மாடியோவ்! பயங்கர ஆளா இருப்பீங்க போல…எல்லாமே finger tip-ல இருக்கும்போல..

சுரேஷ் ஜோக்கைக் கூட ‘பிரிச்சி மேஞ்சிட்டீங்க’

சிமுலேஷன் Says:
February 22nd, 2006 at 2:16 pm e
எனக்குத் தெரிந்த ஒருவர் தனது பெயரை மாற்றிக் கொண்டது மட்டுமல்லாது, தனது அபார்ட்மென்ட் எண்ணைக் கூட மாற்றிக் கொண்டார். (G என்ற அபார்ட்மென்டை GA என்று). சமையல் மேடையை வாஸ்து நிபுணர் அறிவுரையின் பேரில் மாற்றிவிட்டு, பிறகு சமையல் மேடைக்கு நேரே சூரிய வெளிச்சம் அடிப்பதனால், தினமும், கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டுதான் சமைக்கிறார்.

Geetha Sambasivam Says:
February 22nd, 2006 at 3:16 pm e
The astrologers calculated with the help of astronomy only. The astronomy helps the astrologers the correct position of the planets during one’s birthtime and aftereffects are also calculated in this type only. If the astrologer is a good calculater and if he knows the exact position of the grahas he can absolutely tell one’s future. It is true and it is happening.

சதயம் Says:
February 23rd, 2006 at 10:25 am e
DHARUMI=4+5+1+2+6+4+1=23

23 க்கு கபாலேரியன்(சரிதானா!) முறையில் பலன்கள் இவ்வாறாக உள்ளது….”குருசந்திர யோகம் உண்டு.எண்ணத்தை செயலாக்கும் திறன்.அதிர்ஷ்டத்தின் வாசல் கதவு.செயற்கரிய செயல், சரித்திர சாதனை,அரசியலில் புரட்சி,கலைகளில் வெற்றி.ராஜ கம்பீரம் உண்டு.சுகவாழ்வு,உலக அறிவு,ஜெயசக்தி.”

ஹீப்ரு பிரமிட் முறையில் 33ம் எண் வருகிறது, மிகவும் மங்களகரமான எண், அஷ்டலக்ஷ்மி வசியம் உடைய எண், தன தான்யத்திற்கு குறைவிருக்காது

தருமி சார்,கன்சல்டேஷன் பீஸாக ஒரு டன் அன்பை உடனே அனுப்பி வைக்கவும்.

தருமி Says:
February 23rd, 2006 at 2:43 pm e
சிமுலேஷன்,
நல்ல வேளை “தினமும், கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டுதான்” தூங்க வேண்டிய நிலை அவருக்கு வரலையே, அதுவரை சந்தோஷம்தான்.

geetha sambasivan,
“It is true and it is happening. ” - sorry, ma’am. i dodnt buy that. if it is true this world would be changed in a jiffy to ‘garden of Eden”

தருமி Says:
February 23rd, 2006 at 2:49 pm e
சதயம்,
என்னங்க இது, இப்படிப் பண்ணீட்டீங்க..பயங்கரமான ஆளா மாறிட்டது மாதிரி இப்போதே தோணுதுங்க..நீங்க வேற ‘அரசியலில் புரட்சி’ அப்டின்னு சொல்லிட்டீங்க…தேர்தல் நேரம் வேற.. ‘எங்க’ கட்சியில மதுரைக்கு டிக்கெட் கொடுக்கிறது மாதிரி வேற கேள்விப்பட்டேன். ஒத்துக்க வேண்டியதுதான்.
அப்புறம் இதுவேற - ‘அஷ்டலக்ஷ்மி வசியம் உடைய எண்’ சொல்லியிரிக்கீங்க.
என்ன பண்றதுன்னே தெரியலை…சொக்கா,(சதயம்) இப்படி மண்டபத்தில பொலம்ப வச்சுட்டியே..

சதயம் Says:
February 23rd, 2006 at 4:02 pm e
:தருமின்னு பேர் சூடிய பின் இந்த பலனெல்லாம் உங்களுக்கு வாய்க்கனும்னு இருக்கு போல

ஐயா, எந்த தொகுதி மேல கண்ணு வச்சிருக்கீக!, கிழக்கா, மேற்கா, மத்திய தொகுதியா?…இல்லை எங்க சமயநல்லூர் தொகுதியா?

sam Says:
February 25th, 2006 at 8:20 am e
அன்புள்ள தருமி

வெள்ளை மாளிகையில் ஒரு ஆஸ்தான சோதிடர்

சாம்

15 comments:

SurveySan said...

அந்த ஃபிளாப்பி டிஸ்க் மேட்டர் பிரமாதம்.

அமீபா எங்கேயிருந்து வந்ததுன்னு மனுஷனுக்கு தெரியாதவரைக்கும், அந்த 'அதிசய' ஆரம்பம் கொடுத்தது கடவுள்னு வச்சுக்கிரதுல தப்பில்லைன்னே தோணுது.

ஆனா, இந்த ஜாதகம், ஜோசியம் எல்லாம் சும்மா.
எனக்கும் நம்பிக்கை லேது.

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

SurveySan

//அமீபா எங்கேயிருந்து வந்ததுன்னு மனுஷனுக்கு தெரியாதவரைக்கும்,..//

நேத்தைக்கு தெரியாது; ஆனா இன்னைக்கி தெரியுமே! ஏன்னா, நம்பிக்கை எப்போதுமே முற்றுப் புள்ளியோடு முடியும். ஆனா விஞ்ஞானம் எப்போதுமே கேள்விக்குறியோடு தொடரும் ...

கையேடு said...

//ஆனா விஞ்ஞானம் எப்போதுமே கேள்விக்குறியோடு தொடரும் ...
//

இரசித்த வரிகள்.

Thekkikattan|தெகா said...

தருமி,

அருமையான வேலை பண்ணியிருக்கீங்க. கடந்த முறை அதிகப் படியான பார்வையிலருந்து விலகிப் போன உங்களுடைய அவசியப் பதிவுகள் இந்தச் சமயத்தில மீளாகிறது பொருத்தமா கண்டிப்பா அமையுமின்னு 'நம்பு'றேன் :-).

நன்றி!

கோவை சிபி said...

ஜாதக நம்பிக்கையில்லாதோர் கூட திருமணத்திற்காக அதை கட்டிக்கொண்டு அழ வேண்டியிருக்கிறது.இதை மறுத்தால் திருமணமே கேள்விக்குறியாகிவிடும் நிலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.இதுதான் அதன்பிடி இறுகிக்கொண்டே வருவதற்கான முக்கிய காரணம்.

தருமி said...

தெக்ஸ்,
கையேடு,

நன்றி

தருமி said...

கோவை சிபி,
நீங்கள் சொல்லும் பிரச்சனையை நானும் பார்த்ததுண்டு. சில நாட்கள் முன்பு நண்பர் வீட்டுக்கு சென்றபோது பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடுவது பற்றிச் சொன்னார். ஜாதகம் பற்றி பேசினார். இன்னுமா'ய்யா அதெல்லாம் என்றேன். 'நான் வேண்டாமென்றுதான் நினைத்தேன். மூத்த பெண்ணுக்குக்கூட ஜாதகம் பார்க்கவில்லை. ஆனால் இளைய மகள் கட்டாயம் ஜாதகம் பார்க்கச் சொல்கிறாள்' என்றார்.:(

பெண் இப்போது இருப்பது -மென்பொருள் துறையில். இப்போது 9வது தடவையாக ஜப்பான் சென்றுள்ளாளாம்.

அதனால்தான் இளைஞர்களைக் குற்றம் சாட்டுகிறேன்.

Thekkikattan|தெகா said...

//பெண் இப்போது இருப்பது -மென்பொருள் துறையில். இப்போது 9வது தடவையாக ஜப்பான் சென்றுள்ளாளாம்.//

தருமி, இந்தக் கூற்றிலிருந்து ஒண்ணே ஒண்ணுதான் எனக்கு விளங்குது. அது என்னான்னா, நாடுகள் சுற்றி வருவதற்கும், பல பட்டக் கல்விகள் பயிலுவதற்கும், ஊரிலிருந்து புலம் பெயர்ந்து பல பத்து வருடங்கள் முன்னேறிய நாடுகளில் வாழ்ந்தாலும் தனிப்பட்ட மனித சுய முயற்சியும், தேடலும் இல்லையென்றால்... எனக்கு அந்த பழ'மொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது - நாக்கால் தடவிக் குடிக்கும் பிராணியை நடுக்கடலிலே கொண்டு விட்டாலும் அதன் போக்கிலேதான் போகுமென்பார்களே அதேதான் :-(.

அண்மையில் அட்லாண்டாவில் ஒரு 65வயது மதிக்கத்தக்க இந்தியரை வாழ்விற்கும் களி திங்கும் படி கொலை வழக்கொன்றில் சிக்கியதால் அவருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆள் அமர்த்தி தனது சொந்த மருமகளையே கொலை செய்ய பணிந்திருக்கிறார். எதுக்காக இந்த கொலை வெறியா? தனது மகன் ஒரு கறுப்பினத்தவ பெண்ணை திருமணம் செய்து கொண்டான் என்பதற்காகத்தான், அந்த தம்பதியருக்கு ஒரு குழந்தையும் இருக்காம்.

இப்பச் சொல்லுங்க, அந்த 65+ ஆளுக்கு எது உந்து சக்தியாக இருந்திருக்கும் கொலை செய்யும் அளவிற்கு மனதை இட்டுச் செல்ல? சோ, எங்கோ இருக்கும் நம்மூர் கிராமத்தில் வாழும் ஒரு பொற்றோருக்கு இருக்கும் வாழ்க்கை ப்ரக்ஞை கூட, இப்படி புலம் பெயர்ந்து பல இன மக்களின் வாழ்க்கையை கண்ணுரும் பட்சத்தில் கூட அந்த "குலோஸ்ட் மெண்டாலிடி""யிலயே தனது வாழ்க்கை நகர்த்தியிருந்திருக்கார் பாருங்கள், இப்ப முடிவு பண்ணிக்கங்க முதல் பத்தியில் சொன்னதிற்கும் இதற்கும் நெறுங்கிய தொடர்பு இருக்குதுன்னு.

அய்யயோ, பெருசா போச்சே பின்னூட்டம் நிப்பாட்டிக்கிறேன், போதும்.

தருமி said...

தெக்ஸ்,

நீங்க சொல்றது நூத்துக்கு நூறு சரி. இந்த விசயத்தில படிப்பு, வயசு, அனுபவம் எதுவும் முக்கியமில்லை. அவர்களது கொலைவெறிதான் முக்கியம்.

Thekkikattan|தெகா said...

அவர்களது கொலைவெறிதான் முக்கியம்.

எது போன்ற கொலை வெறிகள், அது எப்படி எப்படியெல்லாம் எந்தந்தச் சூழலிலெல்லாம் விதைக்கப்பட்டு ஆழமா மனதினுள் சென்று உட்கார்ந்து கொண்டு தான் மண்டை போடும் வயதில் கூட பெருகிப் பிரவாகமெடுத்து களி திங்கும் நிலைக்கும் எடுத்துச் சென்றிருக்கிறது.

இந்தச் சூழலில் நான் முன்பொருமுறை கிறுக்கிய இந்தப் பதிவு படிச்சா பொருத்தமா இருக்குமோ, தொடர்பு இருக்கிறதாலே இந்தத் தட்டி இங்கே :-)...

குழந்தைகளும் தனித்துவத்தன்மை பேணலும்...

கோவி.கண்ணன் said...

ஹிந்துக்களின் நம்பிக்கைப் படி,

1. நடப்பது எல்லாம் அவன் செயல் ( ஏன் அவன் அவளாக இருக்கக் கூடாதா ? கேள்வி எழுப்பப்படாது)

2. விதி - தீர்மாணிக்கப்பட்ட ஒன்று கடவுளுக்கே கூட அது பொருந்தும். அப்படித்தான் விதியில் இருந்து தப்பிக்க முடியாமல் அசுரர்களிடம் அவதி பட்டு அசுரர்களையெல்லாம் அழித்தார்கள். :) விதிப்படி அவதாரம் எடுத்து வந்தார்கள் (இராமர் கதையெல்லாம் இப்படித்தான்)

3. விதியை படைப்பவன் ப்ரம்மா. அதுவும் முன் ஜென்ம பலனுக்கு ஏற்ப பிறப்பெடுக்க வைப்பான். :). முதல் பிறவி (எந்த விதியினால் அமைந்தது என்று தெரியவில்லை )

4. நடப்பது எல்லாமே முன்பே தீர்மாணிக்கப்பட்டது என்பதே விதியாகும். இதைத்தான் ஜோதிடமும் சொல்லுகிறது.

****

நடப்பது விதி அதைத்தான் தடுக்க முடியாது...என்ற முத்தாய்ப்பில்,
எனக்கு ஒன்றே ஒன்று தான் கேட்கத் தோன்றும். நடப்பது தீர்மாணிக்கப்பட்டது என்றால் மாற்ற முடியாத ஒன்றை தெரிந்து என்ன ஆகப்போகுது ? .

பரிகாரம் என்கிற கான்சப்ட் தான தர்மம் செய்வதற்கு மறைமுகமாக உள்ளே நுழைக்கப்பட்டு இருக்க வேண்டும். பிற்காலத்தில் பரிகாரத்தின் பலன் ஒரு சிலரின் வயிற்றுப்பிழைப்பிற்காக கண்டபடி திரித்துக் கூறப்பட்டது. அதாவது ஏழை பார்பனுக்கு பசுமாட்டை அளித்தால் ஏழேழு ஜென்மத்துக்கு புண்ணியமாம். இது போல் பல பல திரித்தல்கள்.

ம் என்ன செய்வது ஏமாற்றுபவர்கள் இருப்பதால் ஒரிஜினல் பார்டிகள் (ஒரிஜினில் சோசியர்) தொழிலை கொஞ்ச நாளைக்கு நிறுத்தி வைத்து வேடிக்கைப்பார்பது தான் நல்லது. இல்லை என்றால் போலி சோசியர்களை திருத்துவதற்கு வாய்ப்பே இல்லை.

தருமி said...

//பரிகாரம் என்கிற கான்சப்ட் தான தர்மம் செய்வதற்கு மறைமுகமாக உள்ளே நுழைக்கப்பட்டு இருக்க வேண்டும்//

கோவி,
நானும் இதுபோல் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு சாதியினர் மத்தியில் அதுபோன்ற பரிகாரங்களை ஊருக்கு நடுவில் கிணறு வெட்டுவது, வெளியே குளம் வெட்டுவது, சுமைதாங்கிக் கற்கள் வைப்பது என்பது போன்ற பரிகாரங்களைச் செய்வார்களாம். அதன் பிறகு நீங்கள் சொன்ன பரிணாமங்கள் வளர்ந்துவிட்டது போலும்.

manikandan said...

நான் உங்களிடம் எனது கேள்வியை மோகனின் பதிவில் கேட்டுள்ளேன். எதற்காக ஜோதிடம் உண்மையா, பொய்யா என்று ஆராய வேண்டும்? ஜோதிடத்தின் பலன் சமூகத்திற்கு தீங்கு இழைப்பதாகவே இருக்கும் பட்சத்தில், அதை எதிர்ப்பது தவறாகாது.

குரங்கு said...

நல்ல பதிவு...

ஆமாம், சிவனென்னுதனே நான் இருக்ககேன், என்ன எதுக்கு இதுல இழுத்தீங்க???

எங்களை பொருத்தவரை...
கடவுள் இருக்கு.
மத்தபடி மதம், ஜாதி, ஜாதகம், ஜோசியம் இதல்லம் மனிதன் தன்னுடைய சுயலபத்திற்க கண்டுபிடிக்க பட்டவை...


கோவி கண்ணனுக்கு என்னுடைய பதில்கள்.

1. நடப்பது எல்லாம் அவன் செயல் ( ஏன் அவன் அவளாக இருக்கக் கூடாதா ? கேள்வி எழுப்பப்படாது)

அவள் என்று கூறினாலும், நீங்கள் ஏன் அவனாக இருக்கக் கூடாதா என்று கேட்பிர்கள், மனித மனதே இப்படிதான். ஒன்னு இருந்தால் ஏன் அப்படி இல்லை என்று நினைக்கும்.

2. விதி - தீர்மாணிக்கப்பட்ட ஒன்று கடவுளுக்கே கூட அது பொருந்தும். அப்படித்தான் விதியில் இருந்து தப்பிக்க முடியாமல் அசுரர்களிடம் அவதி பட்டு அசுரர்களையெல்லாம் அழித்தார்கள். :) விதிப்படி அவதாரம் எடுத்து வந்தார்கள் (இராமர் கதையெல்லாம் இப்படித்தான்)

இராமர் ஒரு கற்பனை கதாபாத்திரம்தான்... யாருக்கு தெரியும் வாழ்ந்தும் இருக்கலாம், மனிதனாக பிறந்து, மனிதனாக
இறந்து இருப்பார். பிறகுதான் மனிதர்கள் அவரை கடவுளாக மாற்றி இருப்பர்கள் (ஷிரிடி சாய்பாபா போல்)


3. விதியை படைப்பவன் ப்ரம்மா. அதுவும் முன் ஜென்ம பலனுக்கு ஏற்ப பிறப்பெடுக்க வைப்பான். :). முதல் பிறவி (எந்த விதியினால் அமைந்தது என்று தெரியவில்லை)

மனிதனால் உண்டக்கப்பட்டவை இவையெல்லம்...

4. நடப்பது எல்லாமே முன்பே தீர்மாணிக்கப்பட்டது என்பதே விதியாகும். இதைத்தான் ஜோதிடமும் சொல்லுகிறது.

நடப்பது எல்லாமே முன்பே தீர்மாணிக்கப்பட்டது என்றால், நிங்கள் இந்த கேள்வியை கேட்டதும், அதற்கு நான் பதில் கூறுவதும் எல்லாம் தீர்மானிக்கப்பட்டு இருக்கும்... இது எல்லாம் மனிதனால் உருவாக்க பட்டவை. மனிதனின்
பிழைப்பிற்க்க கண்டுபிடிக்க பட்டவை. மனிதனிக்கு எப்பவும் அடுத்தது என்ன நடக்கும் என்ற என்னம் இருக்கும், இதை அனைவரும் பயன் படுத்தி கொள்கின்றனர்.



நான் யாரையும் காயபடுத்த வேண்டும் என்று எழுத வில்லை... யாரும் காய பட்டு இருந்தால் மன்னித்து விடவும்.

நான் விரைவில் கடவுள் நம்பிக்கை பற்றி பதிவு போடுகிறேன்.

Post a Comment