*
அந்தக் காலத்தில் .... ஓரிரண்டு தமிழ்ப்பக்கங்களை இணையத்தில் பார்த்திருக்கிறேன். சரி.. தமிழில் கூட இனி கணினியில் எழுதலாம் போலும் என்று மட்டும் அறிந்திருந்தேன். வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் ஏதாவது எழுத வேண்டும் என்ற ஆவலோடு இருந்த காலம் அது. முடிந்தால் நாமும் இதைப் போல் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். தற்செயலாக் சென்னை சென்றிருக்கும் போது சென்னை மரீனாவில் பதிவர் கூட்டம் என்ற செய்தியறிந்து துணிந்து நானும் சென்றேன். நான் ஒரு பதிவனாக இல்லையே; நம்மை அனுமதிப்பார்களா என்று பயந்து போய் அந்தக் கூட்டத்தில் அனுமதி வாங்கி ‘நல்ல பிள்ளையாய்’ வகுப்பில் எப்போதும் உட்கார்வது போல் கடைசி வரிசையில் அமர்ந்து கொண்டேன். போனா போகுதுன்னு என்னையும் அந்த மக்கள் ஆட்டையில் சேர்த்துக் கொண்டார்கள். நானூத்திச் சில்லறை பதிவர்கள் இருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். ஆஹா .. முதல் ஐந்நூறு தமிழ்ப் பதிவர்களில் ஒருவனாக ஆகிவிட வேண்டுமென்று முடிவெடுத்தேன். 24.4.2005-ல் பதிவனாகவும் ஆனேன். இரண்டாண்டுகள் எழுதி, எப்படியோ ‘நாலு பேருக்கும் தெரிந்த ஒரு பதிவனாக’ ஆனேன். ஆகஸ்ட் 5ம் தேதி, 2007ல் சென்னை பதிவர் பட்டறை ஒன்று நடந்தது. மிக ஆவலாகக் கலந்து கொண்டேன். மிக நன்கிருந்தது. எத்தனை அன்பான முகங்கள். ஆவலாகப் பேசிய பதிவர்கள். மிக இனிமையான நாளாக அன்று இருந்தது. நாள் முழுமையும் பல நிகழ்ச்சிகள் மூலம் எல்லோரையும் கட்டிப் போட்டு வைத்திருந்தார்கள். மாலை வந்த போது பிரியும் கவலையும் வந்தது.
26.8.2012. ஐந்து ஆண்டுகள் கழித்து அடுத்து சென்னையில் ஒரு கூட்டம். கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுமென்ற ஆவலிருப்பினும் கலந்து கொள்ள முடியாமல் போயிற்று. ஆயினும் நடக்கப்போகும் நல்ல நிகழ்வுகளுக்குக் காத்திருக்கிறேன். ஆண்டுக்கொரு முறை இப்படி எல்லோரும் கலந்துரையாடினால் மிக நன்றாக இருக்கும் என்றும் தோன்றுகிறது.
இம்முறை பலரும் முனைந்து, முன்கூடி தேரிழுத்து, குழுமத்தைக் கூட்டியிருப்பது கண்டு மகிழ்ச்சி. அதுவும் புலவரய்யா ராமானுஜம் போன்றோரின் ஆக்கப்பணிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
தமிழ் வலைப்பதிவர் குழுமம் இனிதே கூடி, நல்லன பலவும் பேசி, வெற்றிகரமாக, இனிமையாக நடந்தேற எனது வாழ்த்து.