Saturday, July 30, 2011

519. TASTE OF ISLAM --- ஜனநாயகம் பற்றிய விளக்கம்

*








Friday, July 29, 2011

518. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்

*
WHY I AM NOT A MUSLIM என்ற நூலின் தொகுப்பு வெகு நாட்களாக எழுதிக் கொண்டிருந்த ஒரு கட்டுரைத் தொகுப்பு. அதை முடிக்க வேண்டும் என்பதால் எழுத வேண்டும் என்று நினைத்த பல ‘சின்ன’ விஷயங்களை எழுத முடியாமல் விட்டுப் போனது. நினைத்ததை தொகுத்தாவது வைத்திருந்தக்கலாம்!

***

ஆரண்ய காண்டம்.........
படம் பார்த்ததும் கட்டாயம் அது பற்றி எழுத நினைத்தேன். முடியாது போயிற்று. இப்போது ஒரே சொற்றொடரில் நினைத்ததைச் சொல்லி விடலாமென நினைக்கிறேன். “தமிழ்ப்படங்களில் உலகத்தரம் எல்லாம் வந்தாச்சு”!

நாளாகிப் போனதால் இந்த ஒன்று மட்டும் போதும் என்று நினைக்கிறேன்.

***
தங்கர்பச்சானின் ஆதங்கம் பற்றி எழுத நினைத்திருந்தேன். அவருக்கு நடிகர்களில் பலரும் தங்கள் சாதிப் பெயரை தங்கள் பெயரோடு இணைத்திருப்பதை எதிர்த்திருந்தார், அர்த்தமுள்ள எதிர்ப்பு.

இந்த நூற்றாண்டிலும் இன்னும் ஏன் சாதிப்பெயர்கள் வால்களாக முளைக்கின்றன? தாங்கள் உயர்ந்த சாதிக்காரர்கள் என்று காண்பித்துக் கொள்ளும் ‘சாதித் திமிர்த்தனம்’ தவிர இதில் வேறெந்த பொருளுமுண்டோ?

தங்கர்பச்சான் தன் படத்தில் வேலை பார்த்த நடிகர்களின் பெயர்களில் இருந்த அந்த வாலை ‘வெட்டி’ வெறும் பெயரை மட்டும் திரையில் காண்பித்ததாகக் கூறியிருந்தார். ஒரு வேளை அப்படிப் பெயர் வைத்த நடிகர்களை அவர் தேர்ந்தெடுக்காமலே இருந்திருக்கலாம் என்று தோன்றியது.

***

சாதிப் பெயர் போல் கார்களின் கண்ணாடிகளில் தங்கள் ‘பக்தியைப்’ பறைசாற்றும் வாக்கியங்கள் எதற்கு என்பது எனது பல நாள் கேள்வி. இதுவரை பதிலேதும் கிடைக்கவில்லை. பாதுகாப்பிற்காக சாமி பெயரைப் போடுவதாகத் தெரியவில்லை. அதுவும் காருக்கு வெளியே அந்த பெயரைப் போடுவதில் ‘விளம்பரம்’ தவிர வேறு எதுவும் பொருளில்லை என்று நினைக்கிறேன்.

***

S.V. சேகரின் நிறைய ஜோக்குகள் பிடிக்கும். ஆனால் இப்போது மிகவும் பிடித்த ஜோக்: அவர் பையனைக் கதாநாயகனாக வைத்து படம் எடுப்பது.

இதுதான் இப்படின்னா அப்போ விஜயகாந்தின் ஆசைக்கு என்ன பெயர் சொல்ல?

***

Sam Anderson பற்றி ஒரு நேர்காணல் ஆ.வி.யில் வந்தது. சும்மா சொல்லக்கூடாது மனுஷனை. ஐந்து பேர் அவர் கம்பெனியில் வேலை பார்க்கிறார்களாம். இத்தனை பெரிய கம்பெனி நடத்துபவருக்கு எப்படி ஒரு படம் எடுக்க வழி கிடைத்தது? யாரு அவருக்குப் படம் எடுக்க காசு கொடுத்திருப்பாங்க? அந்தப் படத்தின் டைரடக்கரு யாரு? Sam Anderson தலைமை ரசிகர் மன்றம் பதில் சொல்லுமா?

***

28ம் தேதி தினசரியில் (T.O.I.) டீ-ஷர்ட்களில் எழுதக் கூடிய வசனம் ஒன்று போட்டிருந்தது: The only good thing over to come out of religion was the music.
வேணாம்னு நினச்சாலும் ‘மதம்’ மறுபடி வந்திருதே! அதாவது இதை வாசித்ததும் இஸ்லாம் இசையை வெறுக்குது; வேண்டாங்குது அப்டின்னு நினைவுக்கு வந்திச்சி!!

***
.
மதம்னதும் அடுத்து இன்னொண்ணு நினைவுக்கு வருது. என்னைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்ட மக்களே கிறித்துவர்களின் மன மாற்றத்திற்கு முதல் குறி - அன்றும் இன்றும். காரணம் தெரியும். அதற்கு அடுத்து ஒரு சில ‘மேல்” சாதியினரும் கிறித்துவத்திற்குள் வந்தார்கள். ஒரு நல்ல காரணம் கல்வி மூலம். ஆனாலும், எனக்குத் தெரிந்த வரை பிராமணர்கள் யாரும் கிறித்துவத்திற்குள் மனம்மாறி வந்தது தெரியவில்லை. எனக்குத் தெரிந்து Rev.Fr. சுந்தரம் என்று ஆங்கிலத்துறையில் St. Joseph's College-ல் ஒருவர் இருந்தார்; அவரை  மனம் மாறிய பிராமணரென்று கேள்விப்பட்டுள்ளேன். வேறு யாரும் எனக்குத் தெரியாது.

ஆனால் இஸ்லாமிற்குள் எல்லா சாதியினரும் வந்ததாகச் சமீபத்தில் சில பதிவுகள் படித்தேன். எல்லா சாதியினரென்றால் அதிலும் பிராமணர்களும் இருந்ததாகச் சொன்னது எனக்கு ஒரு ஆச்சரியம். பொதுவாகவே என்னைப் பொறுத்தவரை மதம் மாறுபவர்களுக்கு ‘தங்கள் மதமும் தெரியாது; புகும் மதமும் அவர்களுக்குப் புரியாது’ என்பது தான். ‘மதங்களைப் புரிந்தவனுக்கு ஏது மத மாற்றம்!”

இச்செய்தி எனக்கு மிகுந்த ஆச்சரியமளித்தது. அதுவும் பிராமணரும் இஸ்லாமிற்குள் ஐக்கியமானார்கள் என்பது. பற்றி, காரணங்கள், காரணிகள், இது எப்படி, ஏன் --- இப்படி பல கேள்விகள். பதில் தெரிந்தோர் விளக்கேற்றுங்களேன்!

***

Tuesday, July 26, 2011

517. WHY I AM NOT A MUSLIM ... 22 (முடிந்தது ...)

*

*

ஏனைய முந்திய பதிவுகள்:
பதிவு - 7
பதிவு - 8
பதிவு - 9
பதிவு - 10
பதிவு - 11
பதிவு - 12
பதிவு - 13
பதிவு - 14
பதிவு - 15
பதிவு - 16
பதிவு - 17
பதிவு - 18
பதிவு - 19

........................... இப்பதிவு - 22

Image and video hosting by TinyPic





CHAPTER  17

ISLAM IN THE WEST 

சல்மான் ரஷ்டியின் நிகழ்வுக்குப் பிறகே ஐரோப்பியர்கள் நமக்கு நடுவில் சமய நல்லிணக்கத்திற்கு எதிரான மக்கள் வாழ்கிறார்கள் என்ற உணர்வைப் பெற்றார்கள். 

1989க்குப் பிறகு இங்கிலாந்தும், பிரான்சும் தங்களது சமய மாச்சரியம் இல்லாத நிலைப்பாடுகளின் நடுவே, இஸ்லாமியர் தங்கள் சமயப் பழக்க வழக்கங்களைக் கைக்கொள்ள முழு உரிமை வேண்டும் என்ற உச்சக்கட்ட நிலைப்பாடுகளுக்கும் போராட்டங்களுக்கும் வெவ்வேறு நிலைகளை மேற்கொண்டனர்.  

ரஷ்டியைக் கொல்ல வேண்டும் என்ற தங்கள் பத்வாவைப் பற்றிப் பேசும் எந்த இஸ்லாமியரையும் இங்கிலாந்து காவல் துறை கைது கூட செய்யவில்லை. 
இஸ்லாமிய அமைப்பைச் சார்ந்த Dr. Siddiqui இங்கிலாந்தின் சட்ட திட்டங்களை நாம் மதிக்க வேண்டியதில்லை; இஸ்லாமிய ஷாரியத் சட்டங்களே நமக்குத் தேவை என்று கூட்டத்தில் உரையாற்றிய போதும் அவரைக் காவல் துறை ஏதும் செய்யவில்லை.  ஆனால் பிரான்சில் ஒரு துருக்கி இஸ்லாமியக் குரு ஷரியத் சட்டங்களே பிரஞ்சு சட்டங்களை விட இஸ்லாமியருக்கு முக்கியமானது என்று கூறிய 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு அனுப்பப் பட்டார். 

பிரிட்டனில் அரபு நாடுகளின் வழக்கமான் பெண்களின் பாலியல் உறுப்புகளில் மேற்கொள்ளப்படும் பயங்கர அறுவை சிகிச்சைகளைப் பற்றி அதிகம் கண்டு கொள்வதில்லை. அதில் தலையிட்டால் ‘இனவெறி’ என்ற அவலத்திற்கு ஆளாகலாம். ஆனால் பிரான்சில் இவைகளுக்கு எதிரான வழக்குகள் உண்டு. (351)

பிரிட்ட்னில் இஸ்லாமியரும் அவர்களின் விழைவும்:
கடந்த 15 ஆண்டுகளில் இஸ்லாமியர் தாங்கள் வசிக்கும் பிரிட்டனின் சமூகத்தோடு ஒருங்கிணையத் தயாராக இல்லை. 
இஸ்லாமியப் பண்பாட்டுக் கழக முன்னாள் தலைவர் Dr. Zaki Badawi, ‘தங்கள் மதத்தைப் பரப்ப வேண்டும் என்பவர்கள் அமைதியாக இருக்க முடியாது. ...  இஸ்லாம் பிரிட்டனில் வளரவேண்டிய மதம். இஸ்லாமே உலகத்திற்குமான மதம்.  ... ஒரு காலத்தில் இந்த மதமே முழு மானிட சமுதாயத்திற்கும் உரியதாக வளர்ந்து, முழு மனிதச் சமுதாயம் ’உம்மா’ வாக மாறும்’, என்றார். (352)

ஒரு இமாம், ’உண்மையான ஒரே கடவுள் அல்லா; கிறித்துவர்களின் திரித்துவக் கொள்கை மனிதனின் ஊடுறுவலே. பிரிட்டன் பல்வேறு பிரிவினைகளோடு நிற்கிறது. ஆனால் இஸ்லாம் இங்கு முழுமையாக நிறுவப்பட்டாலே இந்த நாட்டுக்கு விமோசனம்’, என்றார். 

கிறித்துவத்தை இஸ்லாமியர் இழிப்பது உண்டு; ஆனால் இஸ்லாமியத்தை யாராவது இழிவு செய்ய முனைந்தால் பெருத்த சினத்தோடு கொதித்தெழுகிறார்கள். இஸ்லாமியரல்லாதவரும் குரான் கடவுளிடமிருந்து வந்ததை அப்படியே நம்ப வேண்டுமென  எதிர்பார்க்கிறார்கள். 

கேம்ப்ரிட்ஜ் பல்கலையின் இஸ்லாமிய அமைப்பு இங்கிலாந்தின் கல்வி முறை பற்றிய ஒரு கருத்துக் கணிப்பில், அந்த நாட்டின் சமயச் சார்பற்ற கல்வி முறை மகிழ்ச்சியளிப்பதாகவில்லை என்று கூறப்பட்டுள்ளது.  இங்கிலாந்தின் அரசியல் சட்டத்தை எதிர்த்தும், தங்களது அடிப்படையான கருத்துக்களைத் தான் இஸ்லாமியர் பின்பற்ற வேண்டும் என்றனர். (353)

இஸ்லாமியரின் தேவைகளும், முரண்களும்:
இஸ்லாமியரின் தேவைகள் மிக அதிகம். அவைகளை நிறைவேற்ற முயன்றால் இங்கிலாந்து சமுதாயத்தின் பல நல்ல பண்புகள் மறைந்தொழிந்து விடும். (353)

Peter Singer தான் எழுதிய Animal Liberation நூலில் ஒரு சான்று தருகிறார். இஸ்லாமியரும், யூத பழமைவாதிகளும் உணவுக்காகக் கொல்லப்படும் உயிரினங்கள் முழு உயிர்ப்போடு இருக்க வேண்டுமென்பார்கள். இங்கிலாந்தில் உயிரினங்கள் கொல்லப்படும் முன் மயக்கமாக்கப்பட்டு அதன் பின்னே கொல்லப்படும். இது கொல்லப்படுபவைகள் வலியோடு சாக வேண்டாமென்பதற்காகச் செய்யப்படுவது. ஆனால் யூத, இஸ்லாமியக் கோட்பாட்டின் படி அவைகள் முழு நினைவோடு இருக்கும்போது கொல்லப்பட வேண்டும். இன்றைய நிலையில் இது மிகவும் கொடுமையானது. ஆனால்  மதத்தின் பெயரால் செய்யப்படும் இந்தக் ‘கொலை’ அவர்களுக்கு நியாயமாகத்தான் இருக்கிறது. (354)

இஸ்லாமியப் பெண்களுக்கான கட்டாயக் கல்யாணம், honour killing, படிப்பறிவு தராதது, ஆண்களின் மேலாதிக்கம் .. இவைகளுக்கெதிராக காவல் துறை இருப்பதில்லை. கண்டும் காணாது போய் விடுகிறார்கள். இங்கிலாந்தில் வாழ்ந்தாலும் அந்த நாட்டின் சட்டங்கள் இந்தப் பெண்களுக்கு உதவாமல் போய்விடுகிறது.

இஸ்லாமிய நாட்டிற்காகத் தீவிரமாகக் குரல் கொடுக்கும் லண்டனின் இஸ்லாமிய அமைப்பின் இயக்குனர் Dr. Kalim Siddiqui பிரிட்டனின் இஸ்லாமிய நாடாளுமன்றம் அமைத்து, அது இங்கிலாந்து இஸ்லாமியரின் நன்மைக்காகப் போராட வேண்டுமென்கிறார். அவர் எழுதிய பல நூல்களில், இஸ்லாம் உலகமயமாகுதல், அயத்துல்லா கோமேனி பற்றிய புகழாரங்கள், கத்தியால்  இஸ்லாம் பரப்புதல், மேலை நாட்டு தத்துவம், சமுதாயம், அரசியல், பொருளாதாரம் பண்பாடு ... அனைத்தையும் சிதைத்து அல்லாவின் ராஜ்யத்தை இவ்வுலகில் பரப்ப வேண்டுமென்கிறார். அரசியலும் மதமும் பிரிக்க முடியாதவை என்கிறார். 

அவரின் எழுத்துக்களில் ஜனநாயகம், விஞ்ஞானம், தத்துவம், நாட்டுப் பற்று, தானே முடிவெடுத்தல் போன்ற அனைத்தும் அவரின் கோபத்துக்குள்ளாகின்றன. (355)

பல பண்பாட்டுக் குவியல்:
Mervyn Hiskett, ’சமய நம்பிக்கைகளைப் பொறுத்துக் கொள்ளலாம்; ஆனால் சமய பழக்க வழக்கங்களும், அமைப்புகளும் ஒரு நாட்டின் சட்ட திட்டங்களுக்குப் புறம்பாக நின்றால் அவைகளைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது’ என்கிறார். . ஆனால் இது பெரும்பான்மையான இஸ்லாமியருக்குப் பொருந்தாத கொள்கை. இதனாலேயே இங்கிலாந்திலேயே பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணை அவளின் விருப்பத்திற்கு மாறான திருமணத்திற்குள் தள்ளுவது, மற்றவர்களுக்கு மிக கொடூரமாகத் தோன்றும் விதத்தில் உயிரினங்களைக் கொல்வது, பள்ளியில் பரிமாணத்தைப் பாடமாக வைப்பதை எதிர்ப்பது, பள்ளியாண்டு தங்கள் சமய பழக்க வழக்கங்களுக்கு ஏற்றாற்போல் மாற்றி வைக்கப் போராடுவது ... இப்படி ஒரு பெரிய பட்டியலே உண்டு. (356)

அரசியல்வாதிகளின் ஏமாற்றல்:
11, டிசம்பர், 1990-ல் The Daily Telegraph -ல் வந்த தலையங்கத்திலிருந்து சில பகுதிகளை  Hiskett சுட்டுகிறார்: 
 இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு விட்டுக் கொடுக்கும் அளவு நிச்சயமாக வேறு எந்த மதத்திற்கும் நாம் கொடுப்பதில்லை. ஏனிப்படி? அரசும் லேபர் கட்சியுமே இதற்கான காரணங்கள். 
லேபர் கட்சி பதவிக்கு வந்தால் அமெரிக்காவில் யூதர்களின் தாக்கம் அரசியலில் அதிகம் இருப்பது போல் இங்கும் இஸ்லாமியரின் ஆதிக்கம் காலூன்றும்.
கன்சர்வேடிவ் கட்சியும் தன் பங்கிற்கு பொருளாதார நன்மைக்காக செளதி அரேபியாவின் மக்கள் நன்மைக்கெதிராக செய்பவைகளைக் கண்டுகொள்வதில்லை. BBC-யின் நிகழ்ச்சிகள் செளதிக்கு எதிராக இல்லாதவாறு தடை செய்கிறது. செளதியில் வாழும் கிறித்துவர்கள் அந்த அரசுக்குப் பயந்து, இங்கிலாந்தில் இஸ்லாமியருக்கு இருக்கும் சுதந்திரம் போல் அல்லாமல்,  தங்கள் மதங்களை மிக ரகசியமாகப் பின்பற்ற வேண்டியதுள்ளது.

கல்வியாளர்களின் ஏமாற்றல்:
பிரிட்டனில் கல்வியும் அரசியலும் முழுவதுமாகப் பிரிக்கப்படவில்லை. இதனாலேயே பள்ளிகளில் கூட்டுப் பிரார்த்தனை நடந்து வருகிறது. இதை வைத்து  இஸ்லாமியர் பள்ளிகளில் தங்கள் பிரச்சாரத்தைத் தொடங்கி விடுகிறார்கள். கல்வியிலிருந்து சமயத்தைப் பிரிப்பதே மிகச் சிறந்தது.

பொதுப் பள்ளிகள் இஸ்லாமிற்கு மட்டுமின்றி எந்த சமயத்திற்கும் எவ்வித சலுகையையும் கொடுக்கக் கூடாது. எல்லாப் பள்ளிகளிலும் கலை, இசை, நாடகம் எல்லாம் சொல்லிக் கொடுக்கப் படவேண்டும். பெற்றோர்களுக்கு இவையெல்லாம் கட்டாயப் பாடம் என்றும், எந்த மதத்து மாணவரும் இவைகளைப் பயில் வேண்டுமென்றும் சொல்லிவிடல் வேண்டும். (358)

அறிவாளிகளின் ஏமாற்றல்:
 Pluralism -- இது பல சமூகங்கள் இணைந்த ஒட்டு மொத்த சமூகம். நானாவித குமுகங்கள் குவிந்து இணைந்திருக்கும் - தங்களின் வேறுபாடுகளோடு.
Multiculturalism  --பல சமூகங்கள் தங்கள் வேற்றுமைகளைக் காண்பித்துக் கொண்டு கூடியிருத்தல். (இடியாப்பச் சிக்கல்)

ஜனநாயகத்தில் பல குளறுபடிகள் இருக்கலாம். ஆனாலும் மேற்கத்திய ஜனநாயகம் வெகு நிச்சயமாக அதிகாரமும், மனதை வெருட்டும் இஸ்லாமிய சமய அரசியலை விட மிக நல்லது.

போராட்டம் இஸ்லாமிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் நடுவேயில்லை; அது சுதந்திரத்தை விரும்புவோருக்கும் அதனை எதிர்ப்போருக்கும் நடுவே!


======================
இத்துடன் WHY I AM NOT A MUSLIM என்ற நூலின் முக்கியக் குறிப்புகள் முடிந்து விட்டன. நீ..... ண் ... ட ...   கட்டுரையாகி விட்டது. இக்கட்டுரையை எழுதிப் பதிப்பித்த போது எனக்கு சில ஊன்றுகோல்கள் கிடைத்தன; சில தூண்டுகோல்கள் கிடைத்தன.

ஊன்றுகோல்கள்:
சார்வாகன்
Cortext
கல்வெட்டு
The Analyst
கும்மி
சீனு
வால்பையன்
No
நரேன்
குஜால்
கணேசன்
செங்கொடி
 குடுகுடுப்பை
Yasir

தூண்டுகோல்கள்:
சுவனப்பிரியன்
இறையடியான்
Zia
ராபின்
கார்பன் கூட்டாளி
மு. மாலிக்

விடை பெறும் முன் இன்னொன்று சொல்ல ஆசை. இப்பதிவுகளில் கலந்து கொண்டோர் சிலர் என்னை வியக்க வைத்துள்ளனர். அவர்களுக்கு என் பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

முதலில் ஒரு தூண்டுகோல் - சுவனப்பிரியன். இவரது மத அறிவு என்னை ஆச்சரியப்பட வைத்தது. (வயதும் சின்ன வயது என்றே நினைக்கிறேன்.) என்னை ஆச்சரியப்பட வைக்கும் இன்னொன்று எப்படி இஸ்லாமியரில் மிகப் பலர் மதத்திற்காக இத்தனை  வலுவாக இருக்கிறார்கள் என்பது. (எங்கள் மதம் உண்மை; அதனால்தான் இப்படி என்ற விவாதம் வேண்டாமே. ஏனெனில் கிறித்துவ மக்களுக்கும் அவர்கள் மதமே சரியென்ற எண்ணம் உண்டு.)  இந்த இரு மதங்களிலுமே சிறு வயதிலிருந்தே “மதப்பாடம்” அழுத்தமாகச் சொல்லித் தருவதுண்டு. இஸ்லாமில் மதராஸா ஒரு extra விசயம். அது மட்டுமே இவ்வாறு ஒரு அழுத்தத்தைக் கொடுக்கிறதா என்று தெரியவில்லை. சுவனப்பிரியனின் மத அறிவுக்கு என் பாராட்டு.

IbnWarraq நிறைய நூல்களைத் தொகுத்து இந்நூல் எழுதியுள்ளார். சொன்ன செய்திகள் ஏராளம். ஆனால் அவரையும் விட இன்னும் நம் மக்கள் சிலர் மிக ஆழமாக இஸ்லாமைப் பற்றித் தெரிந்து வைத்துள்ளார்கள். இவர்களே இப்படி ஒரு நூல் எழுதினால் நிச்சயமாக அது மிக மிக நன்றாக - இந்த நூலைவிட நன்றாக - இருக்கும் என நம்புகிறேன். சார்வாகன், கும்மி, செங்கொடி - இவர்களின் மத அறிவு என்னை மிக வியப்படைய வைக்கிறது. மத நம்பிக்கையுள்ளவர்கள் மத நூல்களை பக்தியோடு வாசிப்பது வேறு; அது எளிதும் கூட. நம்பிக்கையோடு வாசிப்பது கண்ணை மூடிக்கொண்டு வாசிப்பது என்பதற்கு ஒப்பு. ஆனால் நம்பிக்கையில்லாமல் ஒரு தீவிர ஆய்வு மனப்பான்மையோடு வாசிப்பது மிகவும் கடினம். அப்படி வாசித்து தெளிவாக இருப்பது வியப்பு. இம்மூவருக்கும் என் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

ஊன்றுகோல்களுக்கும்
தூண்டுகோல்களுக்கும்
மிக்க நன்றி






516. WHY I AM NOT A MUSLIM ... 21

*



*

ஏனைய முந்திய பதிவுகள்:
பதிவு - 7
பதிவு - 8
பதிவு - 9
பதிவு - 10
பதிவு - 11
பதிவு - 12
பதிவு - 13
பதிவு - 14
பதிவு - 15
பதிவு - 16
பதிவு - 17
பதிவு - 18
பதிவு - 19


Image and video hosting by TinyPic





CHAPTER  16

FINAL ASSESSMENT OF MUHAMMAD


முகமதுவிற்குத் தன்னுடைய குறைகள் என்னவென்று தெரியும்; அவரால் தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொள்ள முடியும்....... Tor Andrae(343)

முகமதுவிற்கு நல்ல ‘முகராசி’ உண்டு. அவரது சிரித்த முகத்தைப் பற்றியும், மக்களிடையே இருந்த நல்ல பெயரைப் பற்றியும், இதனால் அவர் பின்னே மக்கள் கூட்டம் திரண்டதற்கும் பல சாட்சியங்கள் உண்டு. போரிடுவதிலும் நல்ல கெட்டிக்காரர். Montgomery Watt என்ற மேற்கத்திய அறிஞருக்கு முகமதுவின் மேல் மிகுந்த மரியாதை. அவர், ‘முகமதுவிற்கு ஒரு ஞானியின் பார்வை இருந்தது. மெக்காவிலுள்ள மக்களிடம் சமயங்களை அடிப்படையாக வைத்து வளர்ந்து வந்த சமுதாயப் போராட்டங்கள் பற்றியும் நன்கு தெரிந்து வைத்துள்ளார். இந்தப் போராட்டங்களை அவரால் ஓரளவாவது தீர்க்க முடிந்தது’ என்கிறார். மேலும், ‘இந்த புரிந்துணர்வுகள் அவரை ஒரு நல்ல தலைவராக்கியது. இந்தத் தலைமை சமுதாயக் குழுத் தலைமையாக இல்லாமல் ஒரு சமயத் தலைமையாக இருந்தது’ என்கிறார்.

Goldziher என்ற வரலாற்றறிஞர், முகமதுதான் முதன் முதல் மெக்காவாசிகளிடமும், அரேபிய பாலைவனத்தின் முரட்டு மனிதர்களிடமும் மன்னிப்பதே மிக நல்ல பண்பு என்பதையும், அதைவிட நமக்குத் தீங்கு செய்தவர்களிடமும் இப்பண்பினைக் காண்பிப்பது அவர்களுடைய ('muruwwa' ) பண்புக்கு எதிரானதல்ல; அதுவே அல்லாவின் பாதையில் நடப்பதற்கான ஒப்பற்ற வழியாகும் என்ற தத்துவங்களைச் சொன்னார்.

மன்னிக்கும் மாண்பு பற்றியெல்லாம் சொல்லி, சமுதாயப் போராட்டங்களல்ல,  இஸ்லாமே நம்மையெல்லோரையும் இணைக்கும் உயர்ந்த வழி என்றுணர்த்தினார். அல்லாவின் முன்னால் நாமெல்லோரும் ஒன்று என்றும் கற்றுக் கொடுத்தார். 

ஆனாலும் முகமதுவே இந்த உயர்ந்த குணங்கள் ஏதுமின்றிதான் முதலில் இருந்தார். யூதர்கள், மெக்காவினர், மற்றைய எதிரிகள் எல்லோரிடமும் மிகவும் கொடூரமாக இருந்தார். புக்காரி சொல்லும் ஒரு நிகழ்வு:  Ukl என்ற குழுவினர் முகமதுவிடம் வந்து தாங்கள் இஸ்லாமிற்கு மாறிவிட்டதாகச் சொன்னார்கள். அவர்களுக்கு மதீனா பிடிக்காமல் போய், உடல் நலம் குறைந்தார்கள். முகமதுவும் அவர்களுக்கு ஒட்டகப்பால் கொடுத்து உடல் நலம் பெறச் செய்தார்.

இதன் பின் அவர்கள் மறுபடியும் மனம் மாறி இஸ்லாமிற்கு எதிரானவர்களாக ஆனார்கள். அவர்களை மீண்டும் மதீனாவிற்குப் பிடித்திழுத்து வருமாறு ஆணை பிறப்பித்து, அவர்கள் பிடிபட்டதும் அவர்கள் கை, கால்களையும் திருட்டுக் குற்றத்திற்காக வெட்டி, கண்களையும் பிடுங்கி எறியச் சொன்னார். அவர்கள் அனைவரும் குருதியிழந்து இறந்தார்கள். (345)

இதே போல் William Muir என்பவர், Badr போரில் வீழ்த்தப்பட்ட குவாரிஷ் இன மக்களை மிகக் கொடூரமாகக் கொன்றதைக் குறிப்பிடுகிறார். கைபார் இளவரசன் தன் குழுவின் புதையலைக் காண்பிக்க வேண்டுமென்பதற்காக மனிதத் தன்மையின்றி  கொலை செய்யப்பட்டு, பின் அவனது மனைவி முகமதுவின் கூடாரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாள். (346)

முகமதுவின் உண்மைத்தனம்:
அவர் ‘தெரிந்தே’ பொய்யுரைத்தாரா, இல்லை, உண்மையிலேயே அவர்  கடவுளிடமிருந்து வஹி அருளப்பெற்றாரா? 
அவர் பல நல்ல பண்புகளைப் பெற்ற மனிதர் என்னும்போது அவர் இந்த அருள் வரும் விஷயத்தில் தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருப்பாரா?
ஆனாலும், அவருடைய பிந்திய வாழ்க்கையில் அவர் தன் சுய நன்மைக்காக, தன் குடும்ப சிக்கலை நீக்க சில  வஹிகளைப் பெற்றதாகச் சொல்லியுள்ளார்.
ஆனால் மெக்காவில் இருக்கும்போது அவர் வெகு நிச்சயமாக தான் கடவுளிடம் பேசுவதாக உறுதியாக நம்பியுள்ளார். ஆனால் மதீனாவில் அவரது பழைய பண்புகள், வஹி எல்லாமே மாறியுள்ளன. 
Muir, ‘சுவனத்திலிருந்து வஹி மிகத் தாராளமாக அவரது அரசியல் தேவைகளுக்காகவும், மதத்திற்காகவும் இறக்கப்பட்டன. அது மட்டுமின்றி, அவரது அதீத சுய விருப்பு வெறுப்புகளுக்காகவும் இறக்கப்பட்டன. பல மனைவியர், காப்டிக் மேரியுடன் (Mary, the Coptic bondmaid)  கொண்ட தொடர்பு - இவைகளையெல்லாம் சரியென்று சொல்ல  சுராக்கள்  இறங்குகின்றன. இன்னும், வளர்ப்புப் பையனின் மனைவி மேல் ஆசை என்பதற்கு முதலில்  கடவுளின் சினமும், பின் வளர்ப்பு மகனின் திருமண முறிவும், இவரது திருமணமும் நடைபெறுகின்றன - கடவுளின் கோபத்துடனே.  இந்த வஹிகள் எல்லாம் கடவுளிடமிருந்துதான் வந்தன என்பது முகமதுவின் நம்பிக்கை என்றால் அந்த  தீர்ப்பு கேள்விக்குரியதே.

முகமதுவிற்கும் உமருக்கும் நடந்த சில நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது வஹி இறங்குவது மிகச் சாதாரண நிகழ்வாகப் போய்விடுகிறது. முகமது அவரது எதிரியான Abdallah Ibn Ubbay -விற்காக தொழுகிறார். அதனைப் பற்றிய கேள்வியை உமர் எழுப்பியதும் உடனே அதற்கான வஹி இறங்குகிறது. (347)

அடுத்தும் இன்னும் மூன்று முறைகள் உமர் முகமதுவிடம் கேள்விகள் எழுப்பும்போது உடனடியாக வஹி வந்து விடுகின்றன - முகமதுவின் எண்ணங்களே வஹியிலும் உள்ளது. 

குரானில் யார் சொல்லும் வசனம் சரி என்ற கேள்வி எழுவதால் நம்பிக்கையாளர்களுக்குள்  சில சச்சரவுகள் எழுவதுண்டு. ஆனால் அச்சமயத்தில் முகமது குரான் தனக்கு ஏழு விதமாகச் சொல்லப்பட்டது என்று கூறுவதுண்டு. (Koran had been revealed in no fewer than seven textss.)


நல்வழிக்கான மாற்றங்கள்:
பிறந்த பெண்பிள்ளைகளை உடனே புதைக்கும் பழக்கத்தை முகமது மாற்றினார். ஆனால் இஸ்லாமிற்குப் பிறகே பெண்களின் நிலை மிக மோசமானது. அவர்கள் ஏற்கெனவே கொண்டிருந்த மேன்மையான, அறிவு பூர்வமான நிலையை அவர்கள் இழந்தார்கள். Perron என்பவர் தானெழுதிய Femmes Arabes Avant et Depuis L'Islamisme - நூலில் இதையே கூறுகிறார். (348)


முகமது ஆயிஷாவைத் திருமணம் செய்தது ஒரு தவறான முன்னுதாரணம். கருத்து மாறுபாடுகளுக்கு மாறுதல் செய்தல் என்பது இன்னொரு தவறான முன்னுதாரணம். 
16 : 93-ல் கருத்து மாறுபாடு சரியென்று சொல்கிறார்.
5  : 91-ல் கருத்து மாறுபாட்டிற்கு ஈடு செய்தல் வருகிறது.

முகமதுவின்  வாழ்க்கையே பல மாறுபாடுகளோடு உள்ளது. அரசியல் வெற்றிக்காகவும், அதிகாரத்திற்காகவும் தன்னுடைய கொள்கைகளை விட்டுக்கொடுக்கவும் தயாராக இருந்திருக்கிறார். சான்றாக, ”கடவுளின் தூதன்” (Apostle of God) என்ற தனது தகுதியை ஒரு போரின் ஒப்பந்த சாசனம் எழுதும்போது தவிர்த்தார். விக்கிரக ஆராதனையை ஒழித்தார். ஆனாலும் பழைய அராபிய பழக்க வழக்கங்களையும், ‘கறுப்புக் கல்லை’ முத்தமிடுதலையும் தொடந்துள்ளார். சூதாட்டங்கள் வேண்டாமென்றார்; ஆனால், கெட்ட சகுனங்கள், கண்ணேறுபடுதல் இவைகளை ஒப்புக் கொள்கிறார். முதலில் வரும் சுராக்களில் பெற்றோரை மிக உயர்ந்த பதவியில் வைத்துள்ளார்; ஆனால் பின் வரும் பகுதிகளில் இளைஞர்கள் தங்கள் பெற்றோருக்காகத் தொழ தேவையில்லை என்கிறார். 


குரானின் ஆரம்ப சுராக்களில் அமைதியாக இருக்கும் நிலை மாறி, பின் வரும் பகுதிகளில் பொறுமையற்றதனம் தெரிகிறது. 


Margoliouth, ‘முகமதுவின் வாழ்க்கையில் நடக்கும் தொடர்ந்து சிந்திய குருதியைப் பார்த்து, இன்றைய நம்பிக்கையாளர்களுக்கும் சிந்தும் குருதி சுவனத்தின் வாசல் கதவுகளைத் திறக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள்’ என்கிறார். (349)


குரானின் வசனங்கள் யாவும் கடவுளிடமிருந்து வந்தவை என்பது முகமதுவின் மிகவும் மோசமான ஒரு கோட்பாடு. ஏனெனில் இதனால் புது அறிவு சார்ந்தவைகளோ, சுதந்திரத் தன்மைகளோ ஏதும் கிளைத்தெழ முடியாது போகிறது. (350)
 


Monday, July 25, 2011

515. வருங்கால டாக்டருக்கு அவசர உதவி தேவை!

*

அதிரைக்காரனின் பதிவினை கீழே கொடுத்துள்ளேன்.

::


எத்தனையோ தினச்செய்திகள் பரபரப்பாக வந்துசென்றாலும் அவற்றில் ஒருசில செய்திகளே நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கடந்தவாரம் நிகழ்த்தப்பட்ட மும்பை குண்டுவெடிப்பு செய்திகளைக் கேட்டு பதைபதைத்தவர்கள் நேற்றுமுன் தினம் நார்வேயில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்பு குறித்து கவலைப்பட்டனரா என்று தெரியவில்லை! மனித உயிர்கள்மீதான மதிப்புகூட நாட்டுக்குநாடு வேறுபடுமா என்ன?

இப்படித்தான், நேற்று வலைப்பூவில் ராஜ் தொலைக்காட்சி செய்தி குறித்த ஓர் பதிவை வாசித்தபிறகு அன்றிரவு தூக்கம் தொலைந்தது! செய்தியொன்றும் பரபரப்பானது அல்ல. ஆனால் ஏனோ தெரியவில்லை அதை வாசித்த பிறகு எப்படியாவது உதவமுடியுமா?என்ற எண்ண ஓட்டம் மனதை அலைக்கழித்தது. செய்தி என்னவென்றால்,

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல்(50). இவரது மனைவி லெட்சுமி(45). விவசாய கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு, ராஜவேல்(17), என்ற மகனும், சுபாஷினி என்ற மகளும் உள்ளனர்.

ராஜவேல் சிறுகடம்பூர் கிராமத்திலுள்ள அரசு உயர்நிலை பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில், 470 மதிப்பெண் பெற்று, பள்ளியில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். கூலித் தொழிலாளியின் மகனான ராஜவேல், அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து, வேறுபள்ளியில் படிக்க வைத்தால், +2வில் அதிக மதிப்பெண்கள் பெறுவார் என பள்ளி ஆசிரியர்களும், மாணவனின் உறவினர்களும் கூறியதையடுத்து தங்கவேல், சிறுகடம்பூரில் இருந்த தனது வீட்டை விற்று, சேலம் மாவட்டம் வீரகனூரில் உள்ள ராகவேந்திரா பள்ளியில் மகனைச் சேர்த்து படிக்க வைத்தார். தற்போது செந்துறையில் உள்ள நமச்சிவாயம் என்பவரது வயலில், ஒரு கொட்டகையில் குடியிருந்து, விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

ராகவேந்திரா பள்ளியில், +2 படித்த ராஜவேல் 1200க்கு 1,171 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடமும், மாவட்ட அளவில் மூன்றாமிடமும் பெற்றார். கூலித்தொழிலாளியின் மகனான ராஜவேலின் ஏழ்மை நிலையை அறிந்த ராகவேந்திரா பள்ளி நிர்வாகம், அவரது மருத்துவ பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்களைப் பெற்று, சொந்த செலவில் மருத்துவ கவுன்சிலிங்குக்கு அனுப்பி வைத்தனர். கவுன்சிலிங்கில் 198.5 'கட் ஆப்' மதிப்பெண்கள் பெற்ற அவருக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.

ஆனால் அவரின் ஏழ்மை மருத்துவக்கல்லூரியில் சேரவிடாமல் அவரைத் துரத்துகிறது. மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் செலுத்த முடியாமல், ராஜவேலுவின் தந்தை தங்கவேலு தவித்து வருகிறார். மகனுடைய +2 படிப்புக்காக, வீட்டை விற்று விட்டு, விவசாய நிலத்தில் குடியிருந்து வரும் தங்கவேலு, மகனின் டாக்டர் பட்டப் படிப்புக்குப் பணம் கட்ட வழியின்றி திணறி வருகிறார். அதனால், தற்போது தங்கவேலுக்கு உதவியாக, ராஜவேலுவும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இதுகுறித்த செய்தி ராஜ் தொலைக்காட்சியில் வெளியாகி, அதை எங்களூர் வலைத்தளப் பதிவொன்றில் வெளியிட்டுள்ளார்கள்.

தேசியளவில் 16 வயதுடைய அனைவருக்கும் கல்வி என்ற மத்திய அரசின் கட்டாயக் கல்வி திட்டம் ஒருபக்கம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்திலும் கல்விக்காக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. எனினும், இவை எல்லாம் தொடக்க நிலையிலிருந்து குறிப்பிட்ட வகுப்புகள்வரை மட்டுமே கண்காணிக்கப்பட்டு வருகின்றன.கல்விக்கண் திறந்து கொண்டு எதிர்காலத்தில் பொறியாளராகவோ மருத்துவராகவோ வழக்கறிஞராகவோ ஆக வேண்டும் என்ற பலரது கனவுகள் SSLC, +2 தேர்வுகளுக்குப்பிறகு கானல்நீராக கலைவதற்குப் பின்னணியில் ஏழ்மையும் குடும்பச்சுமையும் உள்ளன!

மகனின் படிப்பாக வசித்த வீட்டை விற்றபின்னரும் மேல்படிப்புக்குச் செலவளிக்க வழியற்ற ஏழைகள் இருக்கும் நாட்டில்தான் நாமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும் போது யார்மீதோ கோபம் வந்தாலும், அது யாரென்று குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை. டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று அலப்பரை செய்யும் அரசியல்வாதிகள், பல உயிர்களைக் காப்பாற்றும் சாத்தியமுள்ள ராஜவேலு போன்ற ஏழை பாரத ரத்னாக்களை அடையாளம் கண்டு உதவினால் புண்ணியமாகப் போகுமே!

இந்த மாணவனின் மேற்படிப்புக்கு உதவக்கோரி அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லும் முயற்சியாக இந்தச் செய்தியை உங்கள் தளத்தில் வெளியிட்டு, பாரத தேசத்திற்கு மேலும் ஒரு மருத்துவர் கிடைக்க உதவலாமே!

நன்றி: இந்நேரம்.காம்

Sunday, July 24, 2011

514. WHY I AM NOT A MUSLIM ... 20

*

*

ஏனைய முந்திய பதிவுகள்:
பதிவு - 7
பதிவு - 8
பதிவு - 9
பதிவு - 10
பதிவு - 11
பதிவு - 12
பதிவு - 13
பதிவு - 14
பதிவு - 15
பதிவு - 16
பதிவு - 17
பதிவு - 18
பதிவு: 19


Image and video hosting by TinyPic





CHAPTER  15

TABOOS:
WINE, PIGS, AND HOMOSEXUALITY


”பாகிஸ்தானில் விஸ்கி ஒன்றும் கிடைக்காத பொருளில்லை. விஸ்கி ஒரு வேளை உலோகத் தம்ளர்களிலோ, அல்லது தேநீர் குவளையிலிருந்து தேநீர் கப்புக்கோ ஊற்றப்படலாம்.  விலையும் இரு மடங்கு இருக்கும். ஆனாலும் அங்கே சாப்பிடுவது பாவம் என்பதால் சுவையும் இரட்டிப்பாகவே இருக்கிறது.”
 .....குஷ்வந்த் சிங்.

குஷ்வந்த் சிங்கின் பாகிஸ்தான் பயணத்தின் போது முதல் நாள் தொலைக்காட்சியில் ஒரு அமைச்சர் மூன்று முல்லாக்களோடு விவாதித்ததைப் பார்த்தார்.  அடுத்த நாள் அதே அமைச்சர் குஷ்வந்தை ஒரு கூட்டத்தில் வரவேற்றுப் பேசினார்; அடுத்து பேசிய குஷ்வந்த் தான் நேற்று பார்த்த தொலைக்காட்சியைப் பற்றிக் கூறிவிட்டு, அந்த அமைச்சரிடம் அடுத்த முறை முல்லாக்களோடு விவாதம் செய்யும் போது இந்தக் கவிதையை வாசியுங்கள் என்றிருக்கிறார். 

                     முல்லா, உங்கள் தொழுகைக்கு சக்தி உண்டென்றால்
                     அந்த மசூதியை சிறிது அசையுங்கள் பார்ப்போம்.
                     முடியாவிட்டால், இரண்டு ’லார்ஜ்’ எடுத்துக் கொள்ளுங்கள்;
                     இப்போது மசூதியே ஆடுவதைப் பார்ப்பீர்கள்!


கூட்டத்தினரின் பலத்த சிரிப்புக்கிடையே அமைச்சர் குஷ்வந்த் சிங்கின் காதில் மெல்ல,  'இந்த முல்லாக்களை கொஞ்சம் விட்டால் போதும்; பெண்களுக்கு முழு பர்க்கா போட்டு ஹாக்கி விளையாட வைத்து விடுவார்கள்’, என்றாராம்.

முகமது  முதலில் மதுவைப் பற்றி கடும் எதிர்ப்பு இல்லாதிருந்திருக்கிறார்.  ஆனால் அவரைத் தொடர்ந்தவர்கள் பலரிடமும் மதுவின் வேட்கை இருந்ததால் தன்னுடைய எதிர்ப்பை முதலில் சாதாரணமாகவும் (2 : 216;  4 : 46;) அதன் பிறகு உறுதியாகவும் (5 : 90) வெளிப்படுத்தினார்.

KHAMRIYYA - WINE POEMS :இஸ்லாமின் வரவிற்கு முன்பே அராபிய மொழிக் கவிஞர்கள் பல ‘நீராடும்’ கவிதைகள் பாடியுள்ளனர். இக்கவிதைகள் அரபு மொழியில் KHAMRIYYA என்றழைக்கப்படுகின்றன. இஸ்லாம் வேரூன்றிய பின்னும் இவ்வகைக் கவிதைகள் வருவதை அரசியலாளர்களால் - உம்மயாதுகளால் - தவிர்க்க முடியாது போயிற்று. அபு நுவாஸ் (Abu Nuwas - 762-814) என்ற கவிஞரின் கவிதைகள் குரானை எதிர்ப்பதுபோன்ற தொனியுடனேயே எழுதப்பட்டன. 

அவரின் கவிதை ஒன்று: 

                         எவ்வளவு பாவம் செய்ய முடியுமோ அவைகளைச் செய்து விடு.
                         கடவுள் நிச்சயம் உன்னை மன்னித்து விடுவார்.
                         அந்தி நாள் வரும்போது மன்னிப்பு நிச்சயம் கிடைக்கும்
                         இல்லையெனில் நரகத்தின் பயத்தில் நீ செய்யாமல் 
                        விட்டுப் போன ’பாவங்களுக்காக’  மிகவும் வருந்துவாய்.
------------------------


பன்றி இஸ்லாமில் மிகவும் ’அருவருக்கதக்க’ விலங்கு என்று கருதப்படுகிறது. காரணம் ஏதும் இதற்காகக் கொடுக்கப்படவில்லை. இஸ்லாமியரிடம் கேட்டால் ’குரானில் சொல்லப்பட்டு விட்டது; அது போதும்’ என்ற பதிலே வரும். உடலுக்குத் தீங்கு தரும் ஒட்டுண்ணிகள் விலக்கப்பட்ட பன்றிகளில் மட்டுமல்ல, பயன்படுத்தப்படும் ஆடு, மாடு, கோழிகளிலும் உண்டு. இஸ்லாமிற்கு முன் பன்றிகள் அராபிய நாட்டில் இருந்ததில்லை. இருப்பினும் ஏன் முகமது அவைகளை விலக்கினார். யூதர்கள், சமாரியர்களின் வழக்கத்தைக் கடைப்பிடித்தல் ஒரு காரணமாக இருக்கலாம். (335) 

சைனாவில் உள்ள இஸ்லாமியர் பன்றிக் கறி உண்ணுவதுண்டு. அவர்கள் pork என்று அதனைச் சொல்லாமல் mutton என்று சொல்வது வழக்கம்.
 --------------------------------



ஓரினச் சேர்ககைக்கு இஸ்லாம் பெருந்தடை ஏதும் விதிப்பதில்லை. பாபர் (1483-1530) ஒரு பையன் மீது கொண்ட காதலைத் தன் வாழ்க்கைக் குறிப்பில் எழுதியுள்ளார். (340) 

குரானிலும் 52:24, 56:17, 76:19 - சுவனத்தில் பையன்களால் நீங்கள் கவனிக்கப் படுவீர்கள் என்பதற்கான பொருள், அவர்கள் உங்களுக்கு ஏவல் செய்ய என்பதுவா, பாலின இன்பத்திற்காகவா என்பது ஒரு கேள்வியே. ((342)





 

Friday, July 22, 2011

513. இஸ்லாமும் பெண்களும் ... 3 / WHY I AM NOT A MUSLIM

*

ஏனைய முந்திய பதிவுகள்:
பதிவு - 7
பதிவு - 8
பதிவு - 9
பதிவு - 10
பதிவு - 11
பதிவு - 12
பதிவு - 13
பதிவு - 14
பதிவு - 15
பதிவு - 16

பதிவு - 17
பதிவு - 18

............. இப்பதிவு: 19

Image and video hosting by TinyPic





CHAPTER  14


WOMEN AND ISLAM - 3




பாகிஸ்தானில் பெண்களின் நிலை:
தமிழில் எதற்கு ... இதை மட்டும் ஆங்கிலத்திலேயே தந்து விடுகிறேன்:
I tell you, this country is being sodomized by religion. ........ a Pakistani businessman, ex-air force officer


இன்று பாகிஸ்தானில் பெண்களுக்கான மரியாதை முற்றிலும் இல்லை. அவர்களுக்கெதிரான குற்றங்கள் பலுகிப் பெருகுகின்றன. எங்களை ‘இஸ்லாமிய மயமாக்கியுள்ளார்கள் (islamized).’ ஆனால் ஏற்கெனவே இஸ்லாமியராக இருக்கும் எங்களை மீண்டும் எப்படி இஸ்லாமிய மயமாக்குவது? ஜியா (Zia) முல்லாக்களுக்கு அதிகாரம் கொடுத்த பிறகு, அவர்களுக்கெல்லாம் எந்தப் பெண்ணையும் கிழித்து எறியும் அதிகாரம் இருப்பதாக எண்ணுகிறார்கள்.    ..........Mrs, Farkander Iqbal, D.S.P., Lahore, Pakistan


பாகிஸ்தானின் தந்தை என்றழைக்கப்படும் முகமது ஜின்னா சமயவாதியல்ல. ஒரு வேளை இப்போது அவர் உயிரோடு இருந்தால் பாகிஸ்தானில்  ஒரு தெரு முக்கில் கசையடி வாங்கிக் கொண்டிருப்பார்! இங்கிலாந்தில் இருந்த போது அவர் விஸ்கியும், பன்றிக் கறியும் சாப்பிட்டுப் பழகினார். 

அவரது சுதந்திர நாள் பேச்சு::

உங்களுக்குச் சுதந்திரம் கிடைத்து விட்டது; எந்தக் கோவிலுக்கும் போகவும், எந்த மசூதிக்குப் போகவும், மற்றும் எந்த கடவுளை வழிபடவும்  உங்களுக்குச் சுதந்திரம் கிடைத்து விட்டது.  ... நீங்கள் எந்த சமயத்திலோ, ஜாதியிலோ, இனத்திலோ இருக்கலாம். இதற்கும் பாகிஸ்தானின் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  ... நாமனைவரும் இந்த நாட்டின் சம நிலை குடிமக்களாகிறோம். ... நமக்கு முன்னால் ஒரே ஒரு இலட்சியம் இருக்க வேண்டும். இதனால் நாளடைவில் நாம் இந்துக்கள் இந்துக்களாக இல்லாமலும், இஸ்லாமியர் இஸ்லாமியராக இல்லாமலும் இந்த நாட்டின் பொதுக் குடிமக்களாவோம்.  நான் இதை சமய நோக்கோடு சொல்லவில்லை; ஏனெனில், சமய  உணர்வுகள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட நம்பிக்கை.”

(இதைக் கேட்கவே ஆச்சரியமாக உள்ளது. ஜின்னாவின் கனவு நனவாகாமலேயே  கலைந்து விட்டதே !) 


1947 ஜூலையில் ஒரு நிருபர் பாகிஸ்தான்  சமயச்சார்புள்ள நாடாக இருக்குமா என்று கேட்க, ஜின்னா, ‘என்ன முட்டாள்தனமான கேள்வி; சமயச் சார்புள்ள நாடு என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது’, என்றார். 


எம்.ஜே. அக்பர்:   பாகிஸ்தான் இஸ்லாமிய மக்களால் நிறுவப்படவில்லை. முல்லாக்களும், பெரும் நிலச்சுவான்தாரர்களும் இணைந்து உருவாக்கியது பாகிஸ்தான். முல்லாக்கள்  தங்கள் ஆளுகையை நிலச்சுவான்தாரர்கள் உருவாக்கிக் கொள்ளவும். நிலச்சுவான்தாரர்கள் முல்லாக்கள் ஒரு இஸ்லாமிய நாடாக பாகிஸ்தானை மாற்றிக் கொள்ளவும் வழி வகுத்ததே பாகிஸ்தானும் பங்களா தேசமும் உருவாகக் காரணமாயிருந்தன. 


1948ல் ஜின்னா மரணமடைந்ததும்  லியாகத் அலிகான் பொறுப்பெடுத்ததும் மதச் சார்பற்ற அரசியல் சட்டம் கொண்டு வர முனைந்தார். முல்லாக்கள் கோபத்தில் நுரை தள்ளி நிற்க, அச்சட்டம் தூக்கி எறியப்பட்டது. 1951-ல் லியாகத் சுட்டுக் கொல்லப்பட்டார். முல்லாக்களின் கூலிப்படையினரே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது. 


1971-ல் வந்த பூட்டோ சமயச் சார்பில்லாதவர். ஆனாலும் அவரும் மக்களாட்சியை வெறுத்தவர். அவரும் முல்லாக்களுக்கு வளைந்து கொடுத்தார். 1977ல் ஜெனரல் ஜியா ராணுவப் புரட்சியால் பதவிக்கு வந்தார்.முல்லாக்களின் பேச்சைக் கேட்கும் ஜியாவினால் முழுமையான இஸ்லாமிய ஆட்சி வந்தது.(322)


முழுவதுமாக ராணுவ ஆட்சியைக் கொண்டு வந்த ஜியா துப்பாக்கி முனையில் ராமதான் நோம்பை எல்லோரும் கடைப்பிடிக்க வைத்தார். பெண்கள் எந்தவித விளையாட்டுகளிலும் பங்கெடுக்கத் தடை வந்தது. இஸ்லாமிற்கும் குடியரசிற்கும் எந்த வித  தொடர்பும் இல்லையென வெளிப்படையாகத் தெரிவித்தார். பெண்களுக்கெதிரான சட்டங்கள் உருவெடுத்தன. அதில் இரு முக்கிய சட்டங்கள்: ஜினா, ஹுதுத்.  


(ஹுதுத் சட்டங்கள் பற்றிய குறிப்பு முன் பதிவில் உள்ளது). ஜினா என்பது கள்ள உறவுகள், கற்பழிப்பு, விபச்சாரம் போன்ற குற்றங்களுக்கெதிரான சட்டம். கல்லெறிதல், கசையடி போன்ற இஸ்லாமியச் சட்டங்கள் வந்தன. 


இச்சட்டங்கள் கற்பழிப்பில் கற்பழித்தவனை விடவும் கெடுக்கப்பட்ட பெண்ணே
அதிகம் சிரமப்படுவதாக ஆனது. ஏனெனில் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் மீது கள்ள உறவு, திருட்டுக் காமம் போன்ற குற்றங்களும் சாட்டப்படும். ஆண்களின் சாட்சியமே எடுக்கப்படும்.(323)

பாகிஸ்தானின் மனித உரிமைக் கமிஷன் ஒவ்வொரு மூன்று மணிக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள் என்கிறது. அதில் பாதி மிகவும் சிறு வயது பெண்கள். (எல்லோருக்கும் பர்தா போட்டு விடுகிறார்கள். ஆனால் கற்பழிப்பும் குறைவில்லை; மனித ஒழுக்கமும் அவர்கள் சொல்வது போல் மேம்படவும் இல்லை. பர்தாவை ஆதரிப்போர் இத்தகைய கற்பழிப்புகளுக்கு என்ன காரணம் சொல்வார்களோ!) சிறையில் இருப்போரில் 75 விழுக்காடு ஜினா என்ற சட்டத்தினால் அடைக்கப்பட்டவர்கள்.  வேண்டாத மனைவியை ஜினா சட்டத்தின் மூலம் சிறையில் அடைப்பது எளிது. 

(Mukhtaran Bibi என்பவரின் சமீபத்திய உலகை உலுக்கிய உண்மைச் சம்பவம் பற்றி இங்கு வாசித்துக் கொள்ளுங்கள்.)

ஜியாவின் இஸ்லாமிய மாற்றம் பெண்களின் மீது நடந்து வந்த வன்முறைகளை அதிகமாக ஆக்கி விட்டது. 1991ல் வந்த ஷாரியா சட்டங்கள் நிலைமையை இன்னும் கொடுமையாக்கி விட்டது. 

பெனாசிர் பூட்டோ வந்ததும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது அரசியல் போட்டியாளர் நவாஸ் ஷரிப் முல்லாக்களைத் தூண்டி விட்டதில் பூட்டோவின் ஆட்சி 20 மாதங்களில் முடிவுக்கு வந்தது. பூட்டோவின் பெண்களுக்காக ஏதும் செய்யாது முல்லாக்களை மகிழ்ச்சிப் படுத்த முனைந்தார். ஆனாலும் முல்லாக்கள் ஒரு பெண் பிரதமராக இருப்பதை விரும்பவில்லை. (324)

ஆண்களை விட சராசரி பெண்களின் ஆயுள் குறைவாக இருக்கும் நான்கு நாடுகளில் பாகிஸ்தான் ஒன்று. குழந்தைப் பேற்றில் இறக்கும் பெண்களும் அதிகம். 1000ல் 6 பேர் இறக்கிறார்கள். குடும்பக் கட்டுப்பாட்டை  முல்லாக்கள் எதிர்ப்பதால் குழந்தை பிறப்பும் அதிகமாக,  6.9 வரை  உயர்ந்துள்ளது. 1994ல் பெண்களின் கல்வியறிவு வெறும் 2 விழுக்காடு. பெண் குழந்தைகள் கைவிடப்படுகின்றன. கராச்சியில் மட்டும் ஒரே ஆண்டில் 500 குழந்தைகள் கண்டெடுக்கப் பட்டன. அவைகளில் 99 விழுக்காடு பெண் குழந்தைகள். 

வரதட்சணைக் கொடுமை மிக அதிகம். 1991ல் 2000 வரதட்சணை மரணங்கள். இவைகள் பெரும்பாலும் சமையலறை விபத்துகளாக உரு மாறுகின்றன. (325)
Brides of Koran என்றொரு துன்புறுத்தல் பெண்களுக்கு உண்டு. வரதட்சணைக் கொடுமையால் பெண்களை குரானுக்குத் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். இவர்கள் வீட்டுக்குள்ளேயே சிறை வைக்கப்படுகிறார்கள். தொலைக்காட்சிகள் கூட இவர்களுக்கு மறுக்கப்படுகின்றன. சிந்து மாகாணத்தில் மட்டும் 3000 குரானிய மணப்பெண்கள் இருப்பதாகக் கணக்கெடுக்கப்பட்டன. (இந்துக்களிடையே இருக்கும் வரதட்சணைக் கொடுமைகள் எங்கள் மதத்தவரிடம் இல்லையென்று அடிக்கடி நம் இஸ்லாமிய நண்பர்கள்  சொல்வதுண்டு. ஆனால் ... நிலைமை ...?)


ஜின்னா தன் 1944 வருடப் பேச்சில் கூறியவைகள் மிகவும் உண்மைகளாகி விட்டன. “தங்கள் நாட்டுப் பெண்களையும் ஆண்களோடு சமமாக வளர்க்காத எந்த நாடும் உயர்ந்ததாக வரலாறு இல்லை. நம்மிடையே பல முட்டாள்தனமான பழக்க வழக்கங்கள் உண்டு. நம் பெண்களை வீட்டின் நான்கு சுவர்களுக்குள் அடைத்து மூடி வைப்பது சட்டப்படியும், மனித நேயத்தின்படியும் மிகவும் பெரிய தவறு.”

பாகிஸ்தானிய அரசியல்வாதிகள் அடிப்படைவாதிகளிடம் அச்சத்தோடு இருக்கிறார்கள். இந்த அச்சமே அடிப்படைவாதிகளின் எண்ணிக்கையை  மேலும் அதிகமாக ஆக்குகின்றன. 

Women's Action Forum  (WAF) and War Against Rape - என்ற அமைப்பு 1981ல் பாகிஸ்தானில் நிறுவப்பட்டது. பெண்கள் ஹுதுதிற்கும், ஜினாவிற்கும் எதிராக வீதியில் வந்து போராடினார்கள். 1983ல் ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் பெண்களின் போராட்டம் நடந்தது.


==================================


எனது சில வார்த்தைகள்:
நடந்து வரும் தீவிரவாதங்களால் இஸ்லாமியச் சமூகத்தின் பேரில் மற்றைய மதத்தினருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது உண்மையே. அதில் எத்தனை விழுக்காடு சரி, தவறு என்று கணக்கிடலாம். ஆனால் நான் பேச வந்தது அதுவல்ல. இந்த வேறுபாடுகளைக் களைய இஸ்லாமியர்கள் தயாராக வேண்டும். ஆனால் இந்த வேறுபாடுகளை அவர்கள் தீவிரமாக்குவது போலவே எனக்குத் தோன்றுகிறது. 
சின்ன வயதில் மதுரை தெற்கு வாசலில் இஸ்லாமிய நண்பர்களே அதிகமாக இருந்த காலம் உண்டு. ஆனால் அப்போது இஸ்லாமியரிடம் “வெளி அடையாளங்கள்’ அதிகமாக இருக்காது. கைலியைத் தவிர, தாடி, தொப்பி, நெற்றியில் தொழுகையில் ஏற்பட வைத்துக் கொள்ளும் கருப்பு காய்ப்பு  - இப்படி எதையும் அந்த வயதில் என் கண்களில் அதிகமாகப் பட்டதில்லை. அவர்கள் வீட்டுக்குள் மற்ற நண்பர்களின் வீடுகளைப் போல் போய்வர முடியாது என்பது மட்டும் ஒரே வித்தியாசம். நண்பர்கள் நெருக்கமாக இருந்தார்கள். அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டதில்லை. ஆனால் இப்போது தங்கள் உடை நடை பாவனை என்று எதிலும் அவர்கள் தனிமைப் படுத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். பர்கா போடும் பெண்கள் அதிகமாகக் கண்ணில் படுவது இரு காரணங்களால் இருக்கலாம்: அதிகமான பெண்கள் பர்தா அணிகிறார்கள். அல்லது. பெரும்பான்மை இஸ்லாமியப் பெண்கள் வீட்டிலிருந்து வெளி வந்திருக்கிறார்கள். 

இப்படி தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதால் நம் பதிவர் ஒருவர் அவர் பதிவில் எழுதிய வார்த்தைகளை இங்கு தருகிறேன்.

//மாற்று மத/சமுதாய மக்களிடையே கலந்து வாழும் வாய்ப்புகள் அற்று, அவர்கள் நம்மை விநோதமாகப் பார்க்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அது அவர்களிடம் நம்மை அநியாயமாக ஒதுக்க எண்ணங்களைத் தூண்டுகிறது.  ஏனெனில் அவர்களைப் பொருத்தவரை நாம் ஒருவிதமான "புதியவர்கள்" (strangers). நம்மைப் பற்றி அவர்கள் கொண்டுள்ள தவறான அபிப்ராயங்கள் அவர்களது மனதிலிருந்து அகலாமல் அப்படியே இருக்கக் காரணமாகின்றோம்.

மற்ற சமுதாயத்தினரோடு கலந்து பழக வேண்டும்.
மக்கள் வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு நாம் விநோதகர்களாக இருக்கமாட்டோம்.//

நமது பதிவுகளையே எடுத்துக் கொள்ளுங்களேன். வெறும் மதப்பிரச்சாரத்தைச் செய்வது  இந்து, கிறித்துவ பதிவர்கள் அதிகமாகப் போனால் ஒவ்வொன்றிலும் நாலைந்து பேர் இருப்பார்கள். ஆனால் இஸ்லாமியப் பதிவர்களில் நாலைந்து பேர் மட்டுமே மதங்களைத் தாண்டி எழுதுகிறார்கள். மற்றவர்கள் அனைவரும் tag line-லிருந்து அனைத்தும் மதம் பற்றி மட்டுமே. அவைகளுக்கு வரும் பின்னூட்டங்கள் (என்னைப் போன்ற ஒரு சிலர் தவிர) அனைவரும் இஸ்லாமியர்களே. அவ்வளவு எதுக்குங்க! தொப்பை குறைக்க ஒரு நல்ல பதிவு; எழுதியது . அதில் வந்த ஒரு பின்னூட்டம் அந்தப் பதிவு ’இஸ்லாமியத் தொப்பைகளுக்கு’ மட்டும் என்பது போல் தோன்றியது! இப்படிப் ‘பிரச்சாரம்’ செய்வது ஏன்? இப்படிப் பிரச்சாரம் செய்வதால் எத்தனை மனங்களில் நல்ல வித்துக்களை அவர்கள் போட்டிருக்கிறார்கள் என்று அவர்கள் ஒரு உரைகல் சோதனை செய்தால் நலம். பதிவுலகிலேயே இப்படி ஒரு தனிப்போக்கை ஏன் வைத்துக் கொள்ள வேண்டும்?

சகோ. என்று அழைக்கும் வழக்கமான பாணியை நடப்பிலும், நட்பிலும் கொண்டுவரவேண்டும். உங்கள் மதம் உங்களுக்கு; என் மதம் எனக்கு. பிரிவினையை மதம் ஊட்டுவது கடவுளுக்கே(??) அவமரியாதை! மதத் தீவிரம் குறைந்து, மனிதனுக்கு மனிதன் என்ற உறவை வலுப்படுத்துவதே நமது தேவை என நான் மிக உறுதியாக நம்புகிறேன்.

ஆனாலும் தெரியும் ...
போக வேண்டிய தூரம் இன்னும் மிக அதிகம்.

Two roads diverged in a yellow wood,
And sorry I could not travel both

...
The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep. 


.............FROST








512. இஸ்லாமும் பெண்களும் ...2 / WHY I AM NOT A MUSLIM ... 17

*






ஏனைய முந்திய பதிவுகள்:
பதிவு - 7
பதிவு - 8
பதிவு - 9
பதிவு - 10
பதிவு - 11
பதிவு - 12
பதிவு - 13
பதிவு - 14
பதிவு - 15
பதிவு - 16

பதிவு - 17


                 இப்பதிவு - 18






Image and video hosting by TinyPic






CHAPTER  14




WOMEN AND ISLAM - 2






( //நீங்கள் பெண்கள் சம்பந்தமாக இட்டுக்கட்டப்பட்ட ஹதீதுகளைத்தான் காட்ட முடியும்.//  - முந்திய பதிவின் பின்னூட்டத்தில் இப்படி ஒரு போடு போடுகிறார் ஒரு இஸ்லாமியப் பதிவாளர். முந்திய பதிவில் ஹதீதுகளை இரண்டாம் பட்சமாக மட்டும் காட்டி, ஆனால், முதலாவதாகக் குரானிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களையே கொடுத்துள்ளேன். 
கண்ணிருப்போர் காணட்டும்!


ஹதீதுகள் (சில சமயங்களில்) வேண்டாமென்கிறீர்கள். அவைகள் பொய்யென்றால் பின் ஏன் அதை இன்னும் தூக்கிப் பிடித்துள்ளீர்கள்; அதெல்லாம் எங்களுக்குப் புறம்பானது என்று ஒதுக்கி வைக்க .. இல்லை ...இல்லை... எறிந்து விட வேண்டியதுதானே. அதை விட்டு விட்டு, சிலவற்றை strong ஹதீதுகள், சிலவற்றில் weak ஹதீதுகள் என்று காலத்திற்கேற்றாற்போல், வசதிக்கு ஏற்றாற்போல் நீங்களே கூறிக்கொள்வதா? ஹ்தீதுகளை நீங்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் அதில் வரும் கேள்விகளை எப்படி நீங்கள் புறந்தள்ள முடியும்? 


கட்டுரை தொடர்கிறது .....)






குரானில் ‘சுத்தம்’ பற்றிய கோட்பாடுகள் மிகத் தீவிரமானவை. உடம்பிலிருந்து வெளியேறும் எல்லாமே ஏதோ ஒரு தீய பொருளாகும். குரான் இவைகளைப் பற்றியவைகளில் மிக வெறுப்பான ஒரு பார்வையை மட்டுமே மனதைக் குழப்பும் வகைகளில் வைக்கின்றன. உதாரணமாக ஒரு பெண்ணோடு அல்லது ஆணோடு செய்த பாலின சேர்க்கை ஒருவரின் நோன்பை முறித்து விடுமா என்ற கேள்விக்கு, அவர் தன் விந்துவை வெளிக்கொணராவிட்டால் நோன்பு முறியாது என்கிறார். (இங்கு ‘செயல்’ முக்கியமல்ல; வெளிவரும் பொருளே முக்கியம்.)


பெண்கள் தங்கள் விலக்கு நாட்களில் அசுத்தமாகி விடுகிறார்கள்; அப்போது அவர்கள் நோன்பு இருக்கவோ, தொழுகை நடத்தவோ, காபாவைச் சுற்றி வரவோ, குரானைத் தொடவோ, வாசிக்கவோ, பள்ளிக்குள் நுழையவோ, கணவனோடு பாலின சேர்க்கை கொள்ளவோ தடுக்கப்படுகிறாள்.  அவளது இயலாமை என்ற பார்வை இதில் இல்லை; ஆனால் அவள் அப்போது அசுத்தப்படுத்தப் பட்டவள் என்ற பார்வை மட்டுமே உண்டு.(308) ( இவர்கள் மதத்திலேயே பெண் அசுத்தப்பட்டவள் என்ற பார்வை இருக்கும்போது இந்து மதத்தில் உள்ள சில கட்டுப்பாடுகளை இவர்கள் எப்படி எதிர்க்கிறார்கள்?)


சில தற்காலத்திய இஸ்லாமியர்கள் முகமதுவின் மனைவிமார்களின் ப்ங்களிப்பைப் பற்றி மிகையாக எழுதுவது உண்டு. ஆனால் உண்மையில் அவர்களுக்கு இஸ்லாமிய மதத்தைப் பொறுத்தவரை எந்த வித ஆளுமையோ, ஈடுபாடோ ஏதுமில்லை. அவர்கள் முகமதுவின் வீட்டினுள் ‘அடைத்து வைக்கப்பட்டவர்களே!’ 


33.:32, 33 &  33 : 53 -- மற்றவர்களோடு பேசுவதற்குக்கூட  அவர்களுக்குத் தடையிருந்தது.


இஸ்லாமிய மதக் கோட்பாடுகளில் எந்த விதப் பங்கும் பெண்களுக்குக் கிடையாது.


2 : 282 --.. உங்களில் இரு ஆண்களைச் சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். இரு ஆண்கள் இல்லையென்றால், ஓர் ஆணையும் இரு பெண்களையும் சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். (ஏனெனில்) அவ்விருவரில் ஒருத்தி மறந்து விட்டால், மற்றொருத்தி அவளுக்கு அதை நினைவூட்டுவாள் என்பதற்காக! (இந்த ஆச்சரியக்குறி குரானிலேயே உள்ளது. அவர்களுக்கே இது ஒரு ‘ஜோக்’ மாதிரி உள்ளது போலும் !!!)


 ஃ ஒரு ஆண் = இரு பெண்கள். இந்த ”விநோதமான  இஸ்லாமியக் கணக்கு” ஏனென்று இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தான் பதில் சொல்ல வேண்டும் !!! (309)


இதிலும், திருமணம்,  விவாக ரத்து, hudud - ஹுதுத் என்று கூறப்படும் குற்றப்பட்டியலில் பெண்களின் சாட்சியை முகமது ஒத்துக் கொள்ளவில்லை.

Hudud - முகமது குரானிலும் ஹதீதுகளிலும் சில தண்டனைப் பட்டியல்களைக் கொடுத்துள்ளார்.
1. கள்ளத் திருமண உறவுக்கு  - கல்லாலெறிந்து கொல்லுதல்;
2. கள்ள உறவுக்கு - 100 கசையடி;
3. கள்ளத் திருமண உறவு என்று பொய்சொல்லிய தவறுக்கு - 80 கசையடி;
4. மதத்தை விட்டு வெளியேறுதல் - மரண தண்டனை;(மதத்திற்குள் வந்து விட்டால் அதன் பின் ‘கொத்தடிமை’ தானா? இப்படி ஒரு தண்டனை இந்து மதத்தில் இருந்தால் ஏ.ஆர். ரஹ்மானும், பெரியார் தாசனும் எப்படி உங்கள் மதத்திற்குள் வந்திருக்க முடியும்? எம்மதத்திலும் இல்லாத கொத்தடிமை ஏன் உங்கள் மதத்தில் மட்டும்? ’சரியான’ மதம் என்றால் இந்த ‘உள்கட்டு’ எதற்கு? பயமா? இஸ்லாமில் மத மறுப்பாளர்களே இல்லை என்று சுய புராணம் வேறு பாடுகிறீர்கள்! )
5. போதைப் பொருள் அருந்துதல் - 80 கசையடி;
6. திருட்டு - வலது கையை வெட்டி விடுதல்;
7. சாலைகளில் நடத்தும் சிறு திருட்டு - கை, கால் வாங்குதல்;
8. திருடி, கொலை செய்தல் - மரண தண்டனை.


24 :4 வசனத்தினை ஒட்டி, இஸ்லாமிய குருமார்கள் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டாலும் நான்கு ஆண்கள் தாங்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தாக சாட்சி சொன்னால் மட்டுமே அந்தக் கற்பழிப்பை ஒத்துக் கொள்வார்கள். குற்றம் சாட்டும் பெண் இதுபோல் சாட்சிகளைக் கொடுக்காவிடில் குற்றம் சாட்டுபவருக்கே தண்டனை கிடைக்கக் கூடிய சூழலுண்டு. கல்லெறிந்து கொல்லுவதிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறிது வேற்றுமையான கொடூர முறைகள் உண்டு. (310)


சொத்தின் உரிமையில் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுக்கு இரு மடங்கு சொத்து அதிகம்.
4 : 11,12 -- உங்களுடைய பிள்ளைகள் குறித்து அல்லாஹ் உங்களுக்கு இவ்வாறு ஏவுகின்றான்; ஒரு ஆணின் பங்கு இரு பெண்களின் பங்கிற்குச் சமமானது.(இன்னும் பங்கு பிரிப்பு மிக நீளமாகக் கொடுக்கப் பட்டுள்ளது. பெண்ணுக்குச் சமத்துவம், சொத்தில் நியாயமான பங்கு எங்கள் மதம் தருகிறது என்பார்கள்; ஆனால் பெண்ணுக்கு ஆணுக்குக் கிடைப்பதில் பாதி சொத்து. பின்னும் எப்படி இவ்வாறு பெருமை கொள்கிறார்கள்?)


ஆண் குழந்தைகள் இல்லாவிட்டால் இருக்கும் ஒரு மகளுக்குச்  சொத்தில் பாதி மட்டும் வருகிறது. மீதி அப்பாவின் ஆண் உறவினர்களுக்குப் போய்விடும். இந்தக் காரணத்தால் இன்றும் இஸ்லாமியப் பெற்றோர்கள் பெண் குழந்தைகள் பெறுவதை வெறுக்கிறார்கள். பல மனைவியுள்ளவர் இறந்தால் அவரின் சொத்தில் நான்கில் அல்லது எட்டில் ஒரு பங்கு மட்டுமே மனைவியருக்குக் கிடைக்கும்.


2 : 228 -- ....ஆயினும், ஆண்களுக்குப் பெண்களை விட ஒரு படி உயர்வு உண்டு. அல்லாஹ் பேராற்றலுடையோனும், நுண்ணறிவுடையோனுமாய் இருக்கின்றான்.


4 : 34 -- ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர். இதற்குக் காரணம் அல்லாஹ் அவர்களில் சிலருக்குச் சிலரைவிட உயர்வை அளித்திருக்கிறான் ... எனவே ஒழுக்கமான பெண்கள் கீழ்ப்படிந்தே நடப்பார்கள்.


முஸ்லீம் பெண்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே செல்வது கடவுளின் விருப்பத்திற்கும், இஸ்லாமியக் கட்டளைகளுக்கும் எதிரானது.(312)


ஒரு ஹதீத் ’உன் மனைவியின் கண்ணில் படும்படி ஒரு சாட்டையைத் தொங்க விடு’ என்கிறது. ஆனாலும் சில ஹதீத்துகளில் முகமது மனைவியர்களை அடிப்பதை எதிர்க்கிறார். ஆனால் குரானில் மனைவியை எப்படி எப்படியெல்லாம் அடிக்கலாம் என்று கூறியுள்ளது. அப்படியாயின் குரானில் கடவுள் சொன்ன கட்டளையை முகமது மீறுகிறார். (அதெல்லாம் week ஹதீத்; அவையெல்லாம் செல்லாது  என்று சொல்லிவிடுவார்களோ?) (314)


(முகத்)திரை -- முகத்திரை அணிவது அடிமைத்தனத்தின் அடையாளம் என்று இஸ்லாமியப் பெண்கள் அவ்வப்போது போரிடுவதுண்டு. (நம்மூரில் முளையிலேயே “கிள்ளி எறிந்து விட்டார்கள்”!  ”நீயா, நானா” நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. நம்மூர் பெண்களின் ஒரு பக்கக் குரலை மதத்தின் பெயரால் அன்றே அமைதியாக்கிவிட்டார்கள்; பாவம்!) 
1923-ல் எகிப்திய பெண்ணியத் தலைவி - Ms. Houda Cha'araoui தன் தோழியரோடு இணைந்து தங்கள் முகத்திரையைக் கடலுக்குள் வீசி எறிந்தார்கள்.
1927-ல் டர்கெஸ்தான் என்ற கம்யூனிச நாட்டில் 'de-hijabization' என்ற ஒருபோராட்டம் நடந்தது.  
உஸ்பெக்கில் 87,000 பெண்கள் தங்கள் ‘கறுப்புத் துணிகளை’ வீசியெறிந்ததும் நடந்தது. அப்போராட்டத்தில் 300 பெண்கள் கொல்லப்பட்டதும் நடந்தது.
1928-ல் ஆப்ஹானிஸ்தான ஷா சுதந்திரத் திருநாளில் இனி பெண்கள் திரை அணியத் தேவையில்லை என்ற சட்டம் கொண்டு வந்து, தன் மனைவியின் திரையையேக் கழட்டச் செய்தார். ஆனால் தொடர்ந்த ’மக்கள் போராட்டத்தால்’ அந்த ஆணையைத் திரும்ப பெற்றுக் கொண்டார்.
1936-ல் ஈரானின் ஷா திரை தேவையில்லை என்று சொல்லி ஆணை பிறப்பித்தார். ஆனால் தொடர்ந்த போராட்டத்தால் 1941-ல் அந்த ஆணையை எடுத்து விட்டார்.


குரானின் 33 : 53; 33 : 59; 33;  32, 33; 24 : 30,31  -- இந்த சுராக்களில் திரை வற்புறுத்தப் படுகிறது.


குரான் பெர்ஷ்யிய மக்களிடமிருந்து அரேபியாவிற்கு வந்தது. பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பது பைசாந்தியர்களிடமிருந்து பெறப்பட்ட வழக்கம்.  ஆனால் இஸ்லாமிய அறிஞர்கள் வேறொரு காரணம் சொல்வார்கள்.  ஒரே ஒரு மனிதனை  - Omar al-Khallab - மகிழ்ச்சிப் படுத்த கடவுள் கொண்டு வந்த சட்டம் இது என்பர். (315)
ஓமார் ஒரு நாள் முகமதுவிடம் கேட்டார்: “நல்லவர்களும் கெட்டவர்களும் உம் வீட்டிற்கு வந்து போகும் பழக்கமுண்டு. ஏன் நீங்கள் உங்கள் மனைவியர் அனைவரையும் தங்கள் முகத்தை மூடிக்கொள்ளச் சொல்லக்கூடாது’ என்றார். வழக்கம்போல் இதற்கும் வஹி வந்தது.
இன்னொரு நிகழ்வும் சொல்லப்படுவதுண்டு: தற்செயலாக ஓமரின் கரம் ஆயிஷா மேல் பட்டு விட்டது. அவர் மன்னிப்புக் கேட்கிறார்.
al-Tabari என்ற வரலாற்றாசிரியர் இன்னொரு நிகழ்வைக் கூறுகிறார். ஆண்கள்  இடுப்பிலிருந்து முழங்கால் வரை தங்களை மறைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பகுதிக்கு awra என்று பெயர். ஆனால் பெண்களுக்கான awra எது என்பதில் பலவேறு கோணங்கள் உண்டு. Hanafites முகம், கைகளை மூடத்தேவையில்லை என்கிறது. ஆனால் மூவகை சுன்னியினரும் முழுவதுமாக மூடிக்கொள்ள வேண்டும். மிக அவசியமான நேரங்களில் மட்டுமே முகம், கை இவைகளைக் காட்டலாம் என்கிறது.


பர்தாவைப் பற்றிய விவாதங்கள் இன்னும்நடந்து கொண்டே இருக்கின்றன. 1992-ல் ஈரானில் நடந்தவைகள் பற்றி New York Times தினசரியில் குறிப்பிடப்படும் செய்தி: பெண்களின் நிலை பற்றிய விவாதங்களில் அவர்கள் அணியும் துணிமணிகளே அதிக இடம் பெறுகின்றன. ஈரானின் 13 ஆண்டுகால போராட்டத்தில் இதற்கே அதிக இடம் கிடைத்தது. எது சிறந்த பர்தா என்பதே முக்கிய கேள்வி.போராட்டத்தின் ஆரம்பத்தில் தலைமையேற்ற Abod-Hassan Banisadr  என்பவர் ஆராய்ச்சியின் முடிவில் பெண்களின் தலைமுடியில் இருக்கும் பிரகாசம் ஆண்களை மயக்கக் கூடியது என்றார். ( பெண்களின் கூந்தலுக்குத் தனி வாசனையிருக்கிறதா என்ற நம் சண்பகமாறன் என்னும்  பாண்டிய மன்னனின் கேள்விக்கு இவரிடம் பதில் கேட்டிருக்கலாம்! ) இப்போராட்ட்த்தில் பல பெண்களுக்கு அவர்களின் ‘ஹிஜாபை’ வைத்து  பலவித தண்டனைகள் கொடுக்கப்பட்டன.


33 : 33 வசனத்தில் ‘முகமதுவின் மனைவியர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்’ என்று சொல்லப்படுகிறது. அடிப்படைவாதிகள் இது எல்லா இஸ்லாமியப் பெண்களுக்கும் சொல்லப்பட்டது என்றும், மித வாதிகள் அந்த வசனம் முகமதுவின் மனைவியருக்கு மட்டும் சொல்லப்பட்டது என்றும் வாதிப்பதுண்டு. இதன் போக்கிலேயே, Ghawji என்ற அடிப்படைவாதி எப்போதெல்லாம் பெண்கள் வீட்டை விட்டு வரலாமென வரையறை கொடுத்துள்ளார்.  முகமதுவின் வசனம் ஒன்றில், ‘ஆணும் பெண்ணும் பேசும்போது ஷைத்தான் இருவருக்கும் நடுவில் தீயவற்றை வைத்து விடுவான்’ என்கிறார். (ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவில் sex தவிர வேறு ஒன்றுமேயில்லை போலும்!)


பெண்களுக்குக் கல்வி மறுப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. முகமது ‘பெண்களுக்கு எழுத்தறிவு வேண்டாம்;  அவர்களுக்குத் துணி தைக்க சொல்லித் தரலாம்’, என்கிறார். ஆனாலும் இன்று சிலர் பெண்களுக்குக் கல்வியறிவு கொடுக்கலாம் என்கிறார்கள். ஆனாலும் இதிலும் அவர்கள் பெண்களுக்கு என்றே சில வேலைகளைக் காண்பிக்கிறார்கள். அதிலும் ‘புத்திசாலித்தனமான’ வேலைகளை அவர்களுக்குக் கொடுப்பதில்லை. அவள் ஒரு இமாமாகவோ, நீதிபதியாகவோ ஆக முடியாது என்பது அவர்கள் முடிவு. மேலும், ஒரு பெண் தன் கணவனின் வீட்டை விட்டு வெளியில் சென்றாலே அவள் பாவத்தில் வீழ்ந்து விடுவாள் என்று நினைக்கிறார்கள். 1952-ல் எகிப்திய பெண்கள் ஓட்டுப் போடவும், நாடாளுமன்றத்தில் நுழையவும் போராட ஆரம்பித்தார்கள். பல குரான், ஹதீத் வசனங்கள் மூலம் குருமார்கள் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றார்கள். ஆயினும் 1956-ல் அவர்களுக்கு அந்த உரிமைகள் அளிக்கப்பட்டன.


திருமணங்கள் போலவே திருமண விலக்குகளும் அதிகம். ஆயினும் இதற்கான வரையறைகள் பெண்களுக்குச் சாதகமானதாக இல்லை.(320)


ஏவாள் செய்த தீவினையால் இன்றைய பெண்ணுக்கு மறுக்கப்படுபவை என்று ஒரு பட்டியலை ஆசிரியர் தருகிறார்:
அவளால் செய்ய முடியாத / செய்யக் கூடாதவைகளின் பட்டியல் இங்கே:
1.  நாட்டின் தலைமைப் பதவி
2.  நீதியரசரின் பதவி
3. இமாம் ஆவது
4.  guardian -பாதுகாப்பாளராக ஆவது
5.  கணவனது அல்லது பாதுகாப்பாளரின் உத்திரவின்றி வீட்டை விட்டு வெளியேறுவது
6.  தெரியாத ஆண்களிடம் பேசுவது
7.  ஆணோடு கை குலுக்குவது
8.  வாசனைப் பொருட்கள் போட்டுக் கொள்வது; அழகு படுத்திக் கொள்வது.
9.  அவர்கள் ‘சோதனைக்கு” உள்ளாகாதபடி இருக்க முகத்திரை அணிவது
10. தனியாகப் பயணம் செய்வது
11. ஆணைப் போல் சொத்தில் பங்கு பெறுவது
12. ஹதுதிற்கு சாட்சி சொல்வது; தனது சாட்சிக்கு அரை ஆள் மரியாதை என்பது
13. மாதவிலக்காகும் காலங்களில் மத வழக்கங்களில் ஈடுபடுவது
14. வயதான காலத்தில் எங்கு வாழ்வது என்பதைத் தீர்மானிப்பது
15. திருமணத்திற்குத் தானே முடிவெடுப்பது
16. இஸ்லாமியரல்லாதவரை மணக்க முடியாதது
17. மண விலக்குப் பெறுவது




(பர்தா பற்றி ஒரு கேள்வி:
பர்தா போடுவதற்கு இஸ்லாமியர் சொல்லும் அடிப்படையே தவறு. 
//33 : 33 வசனத்தில் ‘முகமதுவின் மனைவியர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்’ என்று சொல்லப்படுகிறது. ... எப்போதெல்லாம் பெண்கள் வீட்டை விட்டு வரலாமென வரையறை கொடுத்துள்ளார்.// 

மேலேயுள்ள  மேற்கோள்களை வாசித்தால், பர்தா ஆண்களிடமிருந்து பெண்களைக் காப்பாற்றுவதற்காக இல்லை; ஆனால் பெண்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்குத்தான் என்பது புரியும். பெண்ணை அப்படித்தான் இஸ்லாமும், குரானும் பார்க்கிறது.

இன்னொரு கேள்வி: பெண்ணின் முகத்தை மட்டும் பார்த்தாலே காதலோ காமமோ ஆண்களுக்கு வராதா? )







 --